Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. Today
  3. சங்கீதா. தேர்தலில். விசய். எதிர்த்து. போட்டி. இட்டால். ? யார். வெல்லுவார்கள். ? விசாய். விவாரத்துக்கு. மறுத்தால். முடிவு. என்ன. மாதிரி. ?
  4. அப்போ நீங்கள் நாதக அதே இடத்தில் வளராமல் நிக்கும் எண்டுறியள்?
  5. Yesterday
  6. நான் நினைக்கிறன், இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் பிழையான தகவல்களை பரப்பி எச்சரிக்கிறார்கள். சைவப்பாடசாலைகளில் கல்வி கற்கும் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு பரிசுத்த பைபிளை வழங்கி வைத்து அவர்களின் சமய அறிவை வளர்க்க உத்தேசித்திருக்கலாம், இவர்கள் பதறியடிக்கிறார்கள். நான் படித்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்தை சேர்ந்த பாடசாலையில் வேறு சமயத்தை சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்றார்கள், அருகில் அவர்களின் சமயம் சார்ந்த பாடசாலை இருந்தபோதும் அவர்களின் பெற்றோர் இந்தப்பாடசாலையை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு சமயம் பாடம் இல்லை, அவர்கள் சமய பாட நேரத்தில் வெளியே சென்று விடுவார்கள் அல்லது வகுப்பின் பின் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். அந்த பாடசாலை அதிபர் அவர்களுக்கான சமய ஆசிரியருக்காக கல்வி பணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தும் பயனில்லை, இருந்தபோதும் அந்த பாடசாலையில் விவசாயம் கற்பித்த ஆசிரியரை அதற்காக ஒழுங்கு செய்தார். ஆனாலும் அந்த மாணவரோ பெற்றோரோ ஆர்வம் காட்டவில்லை பின் வரிசையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் அந்த சமயத்தை சேர்ந்த மாணவர்களைவிட அதிக மதிப்பெண்ணை பெற்றனர் சமய பரீட்ச்சையில். வேறு மதங்களை பற்றி அறிவதில் தப்பில்லை, பின்பற்றுவது அவரவர்களின் சுதந்திரம். எங்கள் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் தங்கள் சமய வழிபாடுகள், விழாக்கள் செய்வதற்கு கூட சுதந்திரம், உரிமை, வசதி வழங்கப்பட்டிருந்தது. யாரும் மாணவர் சமயம் மாறி விடுவார் என அச்சப்பட்டதில்லை, அதே சமயத்தை சேர்ந்தவர்கள் கூட ஏனைய மதத்தை கற்று அந்த மாணவர்களுக்கு கற்பித்ததும் எனக்கு நினைவுண்டு. இவர்கள் எந்த நன்மையையும் செய்வதில்லை, மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதும் தவறான கருத்துக்களை பரப்பி சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துகிறார்கள். மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இவர்களுக்கு இவர்களது பிரச்சனை.
  7. பைபிள் ஒரு சமய நூல். பாடசாலைகளில் பிற சமயத்து மாணவர்களிற்கு இதை இலவசமாக விநியோகம் செய்வது எதை குறிக்கின்றது? வேறு சமயத்து நூல்களும் பாடசாலைகளில் இலவசமாக விநியோகம் செய்யப்பட முடியுமா? இதற்கான அனுமதி கிடைக்குமா? சமய நம்பிக்கை சாராத நாத்திகர்களின் நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றால் அதற்கான அனுமதி கிடைக்குமா?
  8. இந்தவாட்டி சுவனத்தில ரம்ஜான் பெருநாள் நல்ல களைகட்டும். எனக்கும் 72 கன்னிகைகள் கிடத்தால் நல்லது என்றோரு எண்ணமுள்ளது. இந்த 72 பேரில் 36 கன்னிகைகளும் 36 ஆன்டிகளும் இன்குளூடட் என்று அல்லா ஒரு சிலைட் சேஞ்ச் ஒன்றை அறிவிப்பானாயின் கொன்ஸிடர் பண்ணலாம்!😁
  9. குயஸ்யன் 1 இந்து மாணவர்களுக்கு ஏன் பய்பிள் கொடுக்கின்றார்கள்? மாறாக கிருஷ்ண பரமாத்மா அருளிச்செய்த பகவத் கீதையையல்லவா வழங்கவேண்டும்? குயஸ்யன் 2 சரி அப்படி பய்பிள் வழங்கப்பட்டு இந்து மாணவர்கள் அதைப் படிப்பதால் சிவத்தொண்டர்களுக்கு ஏன் கடுப்பு வருகின்றது? பதிலாக கிறிஸ்தவ மாணவர்களுக்கு பகவத் கீதையை வழங்கி வைக்கலாமே? பய்பிள் இந்து மாணவர்களை மாற்றிவிடும் என சிவத்தொண்டர்கள் அஞ்சுகின்றார்களா? மற்றவர்களின் புனித நூல்களை வாசிப்பதன் மூலம் பரந்துபட்ட அறிவை வளர்த்துக்கொள்ளலாம் அல்லவா? குயஸ்யன் 3 படத்தில் உள்ள சிவத்தொண்டர்களில் யார் சிறீந்திரன் மாஸ்டர் யார் மாதவன் அம்மான்?
  10. இப்படியான அறிக்கைகளுக்கு என் கண்டனங்கள். இருந்தாலும்.... ஏன் ....பிற சமய சமூகத்தினரிடம்... எதற்காக பைபிளை கொண்டு சேர்க்க முயற்சிக்கின்றார்கள் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.😎 தனகுபவர்களை விடுத்து தனகுபவர்களுக்கு பதில் சொல்வதை குற்றமாக கருதி தண்டனைகளும் தடைகளும் கொடுக்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உதாரணத்திற்கு ஈரான் போர்.
  11. https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-says-offer-of-90-seats-and-cm-post-for-2-5-years-rejected-claims-political-pressure-f-782195.html ”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா Read more at: https://tamil.oneindia.com/news/chennai/aadhav-arjuna-says-offer-of-90-seats-and-cm-post-for-2-5-years-rejected-claims-political-pressure-f-782195.html ஒருவாரத்துக்குமேலாக செய்திகள் வந்த நிலையில் கொள்கை எதிரீயடன் கூட்டணி இல்லை என்று ஏன் ஒரு மறுப்பு அறிக்கையை விடவில்லை?பாஜக எவ்வளவு பேரம் பேசினாலும் கடைசியில் எடப்பாடிதான் முடிவெடுப்பார். இது சட்ட மன்றத் தேர்தல்.பாஜக அளவுக்கு மீறி அழுத்தம் கொடுத்தால் போங்கடா வெளியே என்று சொல்லி விடுவார். இந்தத் தேர்தலில் எடப்பாடிதான் கூட்டணித்தலைவர் வெற்றியோ தோல்வியோ அவர் எடுக்கிறதுதான் முடிவு. விஜை தனித்து நின்றால் விஜை வெல்லலாம். ஆனால் நாதகவின் வாக்கு வீதம் விஜையால்பாதிக்கப்படாது.
  12. நான் விஜை 9-11% எடுப்பார் என நினைக்கும் போது, நான் ஏன் அவர் 15% எடுப்பார் என பந்தயம் கட்ட வேண்டும்😂.
  13. பௌத்த ரவுடிகளுக்கு சளைத்தவர்களல்லர் இவர்கள். நாட்டை கொழுத்துவதென்றே சன்னதமாடுகிறார்கள்! இவருக்கு புத்தி பேதலித்து விட்டதா, நாட்டில் வன்முறையை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கும் கூட்டத்துடன் ஏதும் டீல் போட்டுவிட்டார்களா? உதயன் கம்மன்பில கூறுகிறார், சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்ட தாக்குதலாளிகள் முந்நூறுபேர் இன்னும் இருக்கிறார்களாம், இதனடிப்படையில் முஸ்லிம்களை வைத்து இன்னொரு தாக்குதலை நடத்தி மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும் என்கிறாரா? கம்மன்பில நடுங்குவதும், கூறும் ஆரூடத்தை வைத்து பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளைவேர் இவர்போல்தான் தோன்றுகிறது. இல்லையேல் இவர் ஏன் பதறுகிறார்? குற்றவாளிகளுக்குப்பின்னால் ஓடுகிறார், கதைகளை கூறுகிறார், அடுத்த கைதின் இலக்கு யாரென துல்லியமாக கூறுகிறார், விசாரணை செய்வோரை குற்றம் சுமத்துகிறார், உண்மையான குற்றவாளிகளை வெளிப்படுத்துவேன் என்கிறார். அதை வெளிப்படுத்த ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தார்? இவரும் கைது செய்து விசாரிக்கப்பட வேண்டியவர். தன வாயாலேயே மாட்டிக்கொள்கிறார் என்பது அவருக்கு புரியவில்லை. "முட்டாள்கள் தங்கள் வாயாலேயே மாட்டிக்கொள்வர்."
  14. நீங்கள் இதை படித்தது எங்கே? நீங்கள் வழமையா திமுக சொம்பு என திட்டும் ஊடகங்களில்தானே? அவை ஏன் இப்படி ஒரு புரளியை கிளப்பி இருக்க கூடாது? அது அப்படித்தான்😂 ஏன்னு தெரில…ஆனா அடிக்கணும் மட்டும் தெரிது😂 (கேள்விக்கான விளக்கம் உங்களுகே பலதடவை பத்தி பத்கியாக எழுதியாயிற்று). விழுந்து விழுந்து ஆதரிக்கவில்லை. திமுக, அதிமுக, பிஜேபி நயினார் அணி, பிஜேபி சீமான் அணி இவற்றிற்கு மாற்று என்பதால் ஆதரித்தேன். ஆனால் கரூரில் தலைதெறிக்க ஓடியதோடு அதை விட்டு விட்டேன். ஏன் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறீர்கள். இதே கேள்விக்கு இதே விளக்கத்தை போன கிழமையும் கொடுத்தேனே😂
  15. விஜை கட்சி துவங்கிய நேரம் விழுந்து விழுந்து ஆதரிச்சவராச்சே! இப்ப எதுக்கு நோட்டா?நிங்க தைரியசாலிஆச்சே விஜைக்குத்தான் கபாடுவேன் என்று துணிந்து சொல்ல வேண்டியதுதானே. விஜை தனித்து 15 வீதம் எடுப்பார் என்று பந்தயம் கட்டுங்கள் நானும் பந்தயம் கட்டுகிறேன்.
  16. தாமரையைத் தொட்டால் குலநாசம் என்றால் தாமரையுடன் எதற்குப் பேச்சுவார்ததை நடத்தினார்?மாவட்டச்செயலாளர்களிடம் கூட்ணிக்குப் போலாமா? என்று கருத்துக்கேட்டது யாரோடு கூட்டணிக்குப் போவதற்காகாக? திமுகவுடனா? பேரம்படியவில்லை என்றதும் விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்று தனித்து விடப';பட்டிருக்கிறார். அவர்தனித்து நிற்கவில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணிவைக்க முதலே விஜை அதிமுகவுடன் பேச்சுவார்ததை நடத்தினார்.தனக்கு முதலமைச்சர் பதவி வேண்டும் என்றார். அவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க எடப்பாடி ஒன்றும் தெரியாத பாப்பாவா? ஒருத்தர் கட்சியைத் தொடங்குவாராம். பத்திரிகையாளரைச் சந்திக்க மாட்டாராம். 2 வருடத்தில் 4 கூட்டம் போடுவாராம். 7 மணிக்கூட்டத்திற்கு 7 மணிக்குத்தான் சென்னையில் இருந்து வெளிக்கிடுவாராம்.மக்கள் அவருக்காக சாப்பாடு தண்ணி இல்லாமல் காத்துக்கிடந்து சாகவேணுமாம்.மாஸ் காட்டிறம் என்று சொல்லி மக்களைச் சாகடிப்பாராம்.போராட்டம் எதுவும் செய்ய மாட்டராம்.மக்கனள பனையூருக்கு வந்து சந்திக்கச் சொல்லுவாராம்.முதல் தேர்தலிலேயே முதல்வர்பதவியைத் தூக்கிக் கொடுக்க வேணுமாம்.தமிழ்நாட்டு மக்களை இவர் என்ன மாதிரி நினைத்துக்கொண்டு இருக்கிறார்? இன்னும்ஒருத்தன் அகன்த்து னைத்து மக்கள் போராட்டத்திலும் கலந்து கொள்வானாம்>மழை வெயில் பாராமல் தொண்டைத்தண்ணிவத்த மணிக்கணக்காகப் பேசுவானாம். எந்த ஊடகவியலாளர் எந்த விடயம் பற்றிக் கேள்விகேட்டாலும் பதில்சொல்லுவானாம்.மக்கள் போராட்டத்தில் சிறை செல்லுவானாம்.மக்களோடு மக்களாக இருந்து உணவுண்ணுவானாம். அனால் அரசியலில் வெற்றி பெறக்கூடாதாம் இது என்ன மாதிரியான சிந்தனை?
  17. மக்கள்தான் அரசை தேர்கிறார்கள் இல்லையா? 2010 களில் இங்கே பூர்வாக செயில் வாயு அகழ்வு கூட நடந்தது. Fracking என்பார்கள். ஆனால் மக்கள் பெருமெடுப்பில் எதிர்க்க, அரசியல் கட்சிகளுக் எதிர்க - வழக்கு, வம்பு என ஆகி. அப்படியே திட்டம் கைவிடப்பட்டது. யூகேயில் இது ஒரு பிரச்சபை எதுக்கு கோர்ட்டுக்கு போவார்கள். ஹீத்துறோவில் 3 வதாக ஒரு ரன் வே கட்ட 35 வருடமாக அரசு முக்குது, அதை சுத்தி உள்ள சில பத்தாயிரம் மக்கள் சேர்ந்து தடுக்கிறார்கள். இங்கிலாந்தில் உற்பத்தி துறை படுத்து பலகாலம்😂. 1980 களில் இருந்து சேவை பொருளாதாரம்தான். அதீத எரிபொருள்விலை உள்ளதையிம் கெடுக்கும் என நினைக்கிறேன். அவுஸ் - சின்ன மக்கள் தொகை ஆனால் வளம் பெரிது. கனிமம், கால்நடை இப்படி பல. அன்றும் இன்றும் யூகேயின் ஒரே பெரிய வளம் மனிதவளம்தான். 130 போனால் 10x இல் short பணனலாமா என யோசிக்கிறேன்.
  18. கையிருப்பு பிரச்சினை பற்றி பேசுகிறார்களா தெரியவில்லை, ஆனால் பெட்ரோல் $3 வரை செல்லும் என எதிர்பார்க்கிறார்கள், மசகு எண்ணெய் $ 130 ஒரு பீப்பாய். ஆனால் உற்பத்தித்துறையில் இங்கிலாந்து 9% சரிவு ஏற்பட்டுள்ளது என கூறுகிறார்கள் அதே நேரம் அவுஸ்ரேலியா 5% சரிவு மட்டுமே ஏற்பட்டுள்ளதென கூறுகிறார்கள், உற்பத்தித்துறை இங்கிலாந்து போல பெரிதாக அவுஸ்ரேலியாவில் இல்லை என நினைக்கிறேன்.
  19. இரஸ்சிய எரிபொருள் தடை விலக்கல், ஈரான் எரிபொருள் அனுமதி எரிபொருள் விலையினை குறைப்பதற்காக, எரிபொருள் விலை அதிகரிப்பால் உள்ளூரில் ட்ரம்பிற்கு நெருக்கடி ஏற்படலாம் என்பதால் இருக்கும்.
  20. இப்போதைக்கு எவருக்கும் export ban போடும் தேவையில்லை. ஆனால் ஒரு விடயத்தை கவனிக்கவும். அவுஸ் தன் நாட்டின் அவசரகால எண்ணை இருப்பில் கொஞ்சத்தை நேற்று வெளிவிட்டது. உள்ளூர் மார்கெட்டுக்கு. இலங்கை ஒருநாள் லீவு விடுகிறது. ஆனால் நோர்வே? யூகே? விலை கூடுகிறது ஆனால் பற்றாகுஐ இல்லை. ஏன் என்றால் ஐரோப்பாவின் எண்ணையை சந்தை விலை ஒன்றே என்றாலும் கூட யாரும் அவுசுக்கு காவ மாட்டார்கள். அதுவும் ராட்சத டாங்கர்கள் மத்திய தரைகடல், சுயஸ் கால்வாயை தாண்ட முடியாது. ஆபிரிக்காவின் நன்நம்பிக்கை முனையை சுத்தி வரவேண்டும். ஐரோப்பா அமெரிக்காவில் விலை கூடினாலும் கையிருப்பு பிரச்ச்னை வராமைக்கும், ஆசியா, அவுசில் கையிருப்பு பிரச்சனை வரவும் இதுவே காரணம்.
  21. நாம், நம் கனவுகள்! jeyamohanMarch 18, 2026 வைரமுத்து ஞானபீட விருது பெற்றதற்கு எதிராக கடுமையான எதிர்வினையை நான் முன்வைத்தேன். அது ஒரு முகநூல் பூசலாக முடிந்துவிடக்கூடாது, அது இந்திய அளவில் கவனிக்கப்பட வேண்டும் என எண்ணினேன். என் நூல்கள் உருவாக்கிய இந்திய அறிமுகம் அதை கொண்டுசெல்ல உதவியது.எனக்கு வைரமுத்து மேல் எந்த விரோதமும் இல்லை. அவரை வைத்து நம் கவிதையை இந்தியா மதிப்பிட்டுவிடக்கூடாது என்பது மட்டுமே என் கவலை. இந்திய மொழிகளிலேயே நவீனக் கவிதை அழகியல்செறிவு கொண்டிருக்கும் மொழி தமிழ்தான். அடுத்தபடியாகத்தான் மணிப்புரி மொழியைச் சொல்வேன். மலையாளம், கன்னடம் எல்லாம் கூட பிறகுதான். அபி, தேவதேவன், தேவதச்சன், விக்ரமாதித்யன் என நம்மிடம் இன்று வாழும் பெருங்கவிஞர்கள் இழிவாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. நம் இலக்கியம் இவ்விருதை வைத்து மதிப்பிடக்கூடாதென்றால் பிறமொழிகளுக்கு நம் எதிர்ப்பு சென்றடையவேண்டும். அது நிகழ்ந்துள்ளது. இந்தியா முழுக்க எங்கள் எதிர்ப்பு சென்றடைந்துள்ளது. ஞானபீடத்தின் ஐம்பதாண்டுக்கால வரலாற்றில் இப்படி இதற்குமுன் நிகழ்ந்ததில்லை. இன்று முழுக்க நேற்றைய காணொலிக்கான வசைகள். எண்ணிக்கையை மட்டுமே பார்த்தேன். நண்பர்கள் அழித்துக்கொண்டே இருந்தனர். வசைகள் ஆயிரம் தாண்டியிருக்கும். ஆனால் அவை நம்மை எதிர்மனநிலை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடாது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்களில் எதையேனும் எப்போதேனும் வாசிப்பவர்கள் ஒரு சதவீதம்கூட இல்லை என நாமறிவோம். ஆனால் அத்தனைபேருக்கும் தரப்புகள் உள்ளன. காழ்ப்புகளும் கசப்புகளும் உள்ளன. சாதி,மத, அரசியல் பற்றுகள் உள்ளன. இலக்கியம் அல்லது அறிவுச்செயல்பாடு பற்றி மிகமிக அடிப்படையான விஷயங்களே இங்கே எவருக்கும் தெரிவதில்லை. எந்த வகை அறிவுச்செயல்பாட்டில் இருப்பவர்களும் இங்கே ஒருவகை அன்னியர், ஒருவகை தலைமறைவு மனிதர்தான். இந்த விவாதத்திலேயே முக்கால்பங்கு வசையாளர்கள் திகைப்புடன் ‘யார் நீ?’ என்று என்னைக் கேட்கிறார்கள். என் பெயர்கூட அவர்களுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை. ஆனால் எது சரி, என்ன செய்யப்படவேண்டும் என்று முடிவுசெய்து பேசுகிறார்கள். இதுதான் நம் சூழல். இதனுடன் மோதுவது வீண்வேலை. இவர்கள் மேல் கசப்பை உருவாக்கிக்கொள்வதிலும் பொருளில்லை- எல்லாச் சூழலிலும் எல்லா படைப்பாளிகளும் எதிர்கொள்வது இந்த பொதுவான மூர்க்கத்தையே. ஆனால் நாம் அவர்களுக்காகவும்தான் எழுதுகிறோம். ஆகவே எதிர்ப்பு கசப்பாக ஆகிவிடாமலிருக்கவேண்டும் என நாமே நம்மிடம் சொல்லிக்கொள்ளவேண்டும். இந்த வைரமுத்து இன்னும் மூன்றுமாதகாலம் அதிகபட்சம் பேசப்படுவார். அதன் பின் அவருடைய சினிமாப்பாடல் ரசிகர்களின் உலகுக்குள் செல்வார். அவர் நமக்கொரு பேசுபொருளே அல்ல. அவர் பெற்ற இந்த விருதும்கூட. எதிர்ப்பை முடிந்த அளவு தீவிரமாக முன்வைத்துவிட்டேன். ஆனால் எதிர்ப்பு என் வழி அல்ல. எதிர்க்கவேண்டிய இடத்தில் கடுமையாக, கறாராக, அச்சமில்லாமல், தயக்கமில்லாமல் எதிர்ப்பை தெரிவிப்பேன். ஆனால் அந்த எதிர்ப்பு மனநிலையை அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு மேல் நீட்டிப்பதில்லை. அது என் ஆற்றலைக் குறைத்துவிடும். என் ஆற்றல் என் கனவுகளிலேயே. ஆகவே இந்த எதிர்ப்பு முடிந்தது. முன்னரும் இப்படியே. தமிழின் மூத்த பெரும்படைப்பாளிகள் பெரும்பாலானவர்கள் எந்த ஏற்புமின்றி இருக்கும் நிலை பற்றிய என் தொடர் ஆதங்கம் இயல் விருது உருவாவதற்கு ஒரு காரணம். ஆனால் அந்த விருது பல்கலையுடன் இணைக்கப்பட்டு, நடுவர்களாக பேராசிரியர்கள் அழைக்கப்பட்டபோது அவர்கள் அதை தங்களுக்கே மாறிமாறிக்கொடுத்துக்கொண்டார்கள். அந்த நிலைக்கு எதிராக என் கடும் எதிர்ப்பை நான் பதிவுசெய்தேன்- அவ்விருதை நிறுவிய அ.முத்துலிங்கம் என் பெருமதிப்புக்குரிய பெரும்படைப்பாளி என்ற போதிலும். அதையொட்டி உருவான கனவே விஷ்ணுபுரம் விருது. இன்று அது எந்த இடத்தில் உள்ளது என எவரும் அறிவார்கள். தமிழ் விக்கிபீடியாவில் இருந்த நசிவுக்கும்பலுடன் போராடி, தோற்றபின், என் எதிர்ப்பை வெளிப்படுத்தினேன். உருவானதே தமிழ் விக்கி. இன்று தமிழ்விக்கியின் பங்களிப்பென்ன என்று எவருக்கும் தெரியும். விக்கிபீடியாவே இன்று மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளமைக்கு தமிழ்விக்கியே காரணம். அதைப்போன்ற ஒரு சூழல் இது. நம்மை இழிவுசெய்த ஞானபீடத்திடம் இனி நமக்கு பூசல் இல்லை. நமக்கான விருதை நாம் உருவாக்குவோம். தமிழகத்தில் இருந்து அந்த விருதுக்காக உலகமே இங்கு வரட்டும். மிகப்பெரும் கனவு. கனவுகள் மலைப்பூட்டுபவைதான். ஆனால் ஒவ்வொரு சிறுபடியாக ஒவ்வொரு நாளும் காலெடுத்து வைத்தால் எய்திவிடமுடியும். இணைந்து செல்வோம். https://www.jeyamohan.in/230261/
  22. மக்களுக்கு அதனை தடுக்கும் உரிமை இல்லை, நில உரிமையாளர்களால் கூட எதுவும் செய்ய முடியாது, அவ்வாறான சட்டங்களை மாற்ற ஒரு அரசியல் தலைவர் முயன்றால் MI6, CIA போன்ற வேறுநாட்டு தலையீடுகளால் ஆட்சி பறிபோகும் நிலை உருவாகும். இங்கிலாந்து செய்யலாம் ஆனால் அவுஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் செய்யும் அளவிற்கு தைரியமானவர்கள் அல்ல.
  23. தேசியமயமாகல் என்றால் தனியார் நிறுவனத்தை அரசு எடுப்பது. இது அது அல்ல. தனியாருக்கு சந்தை விலையை கொடுத்தபடி வழங்கலை உள்நாட்டில் மட்டும் செய்ய உத்தரவிடுவது. நீங்கள் export ban என கேள்விபட்டதில்லையா?
  24. மசகு எண்ணெயினை குறிப்பிடவில்லை, எரிவாயுவை கூட உள்நாட்டு தேவைக்கேற்ப விற்பார்களா என்பது சந்தேகமே. தேசிய வளங்கலை தேசிய மயப்படுத்துவது ஒரு கடுமையான பிரச்சினை 70 களில் விட்லமின் ஆட்சியினை MI6 மற்றும் CIA முடிவிற்கு கொண்டுவந்தார்கள், 2007 இல் ஆட்சிக்கு வந்த ராட்டின் ஆட்சியினை முடிவிற்கு கொண்டுவருவதற்கு சுரங்க நிறுவனங்களின் மீதான அதிகரித்த வரி காரணமாக இருந்த்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் எதிர்காலத்தில் இங்கிலாந்து தனது நலனிற்காக தேசிய வளங்கலில் கட்டுப்பாடினை செலுத்த முடியுமா என தெரியவில்லை. இப்போதுள்ள நிலையில் யாரும் இந்த பிரச்சினையிலிருந்து தப்ப முடியாது.
  25. அந்த நாடுகள் பதில் சொல்லமுதல் ஆளை 72 கன்னிகளிடம் அனுப்பி விட்டோம் என்கிறது இஸ்ரேல். ஏன்னா நீங்க பாகிஸ்தானே காறி துப்பும் அளவுக்கு மோசமான ஆட்கள் 😂. தாக்குதலை கண்டித்த துருக்கிக்கும், முதல்நாள் காமேனி படத்துக்கு ஜனாதிபதி தூதரகம் போய் அஞ்சலி செலுத்த அடுத்த நாள் அசர்பைஜானுக்கும் மிசைல் அனுப்பும் போதே… அரபுநாடுகளுக்கு தெரியும் … அமெரிக்கா இல்லை எண்டால் தம்மை எல்லாம் ஈரான் விழுங்கி ஏப்பம் விடும் என்பது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.