Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. வவுனியாவில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் - பிரதேசமக்கள் விசனம் 27 Dec, 2025 | 03:14 PM வவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வந்த தொல்பொருள் திணைக்களம் சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு அங்கு உள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது. அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் இடைநிறுத்தி இருந்ததோடு எவ்வித புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள விடாது தடை செய்திருந்தது. எனினும் ஊர்வலங்கள் கடும் பிரயத்தனத்தின் மூலம் கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சின் அனுமதிய பெற்று பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பித்தன. இந் நிலையை சாதகமாக பயன்படுத்திய தொல்பொருள் திணைக்களம் அங்கிருந்த எண்கோண மண்டபத்தின் தாம் புனரமைத்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்பதனை அறிந்து ஐங்கோண மண்டபத்தில் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றது. இதேவேளை, குறித்த எண்கோண மண்டபம் இருந்த பகுதியில் இருந்து கடந்த காலத்தில் எண்கோண வடிவிலான சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டு அது எல்லப்பமருதன்குளம் குளக்கட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டு தற்போது எல்லப்பமருதங்குளம் பகுதியில் அது கோவில் கொண்டு எழுந்தருளி இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த மண்டபம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. குறித்த எண்கோண வடிவிலான சிவலிங்கம் கிளிநொச்சி, குறுந்தூர்மலை மற்றும் இந்தியாவின் கும்பகோணம் பகுதிகளிலும் ஆய்வுகளகன் போது காணப்பட்டதாகவும் தொல்பொருளாளர்கள் தெரிவிப்பதோடு அதேபோன்றதான சிவலிங்கமே குறிப்பிட்ட சமணங்குளம் பகுதியில் காணப்பட்டதாகவும் அந்த எண்கோண வடிவிலான சிவலிங்கமே குறித்த எண் கோண மண்டபத்தில் வைத்து புராதன காலங்களில் வழிபட்டு இருக்கலாம் என்கின்ற வரலாறுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந் நிலையிலையே குறித்த இடத்தில் விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234534
  3. @புலவர் ஐயா, மஞ்சள் பெட்டிக்குள் உங்கள் தெரிவுகளை சுருக்கிய வடிவில் தரவேண்டும். கேள்விகளையும், பதில்களையும் மாத்திரம் கொப்பி பேஸ்ட் செய்தால் போதும். முழு ஷீற்றும் தேவையில்லை!😱😱😱 எனது வேண்டுகோளின்படித்தான் @ஏராளன் மாற்றியுள்ளார்😀 இந்தியா மாத்திரம்தான் விளையாடுபவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டுள்ளது. மற்றைய அணிகள் இன்னமும் அறிவிக்கவில்லை
  4. # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN WI WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN ITA BAN 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NED 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP NEP 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA NED 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA NZ 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM IRE 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு A: Team Pld W L IND Select IND IND IND 4 4 0 PAK Select PAK PAK PAK 4 3 1 USA Select USA USA USA 4 0 4 NED Select NED NED NED 4 2 2 NAM Select NAM NAM NAM 4 1 3 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group A - First <- Choose IND or enter your preferred Team Group A - First IND குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group A - Second <- Choose PAK or enter your preferred Team Group A - Second PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NAM முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு B: Team Pld W L AUS Select AUS AUS AUS 4 4 0 SL Select SL SL SL 4 3 1 IRE Select IRE IRE IRE 4 2 2 ZIM Select ZIM ZIM ZIM 4 1 3 OMA Select OMA OMA OMA 4 0 4 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group B - First <- Choose AUS or enter your preferred Team Group B - First AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group B - Second <- Choose SL or enter your preferred Team Group B - Second SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு C : Team Pld W L ENG Select ENG ENG ENG 4 3 1 WI Select WI WI WI 4 3 1 BAN Select BAN BAN BAN 4 2 2 NEP Select NEP NEP NEP 4 1 3 ITA Select ITA ITA ITA 4 0 4 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group C - First <- Choose ENG or enter your preferred Team Group C - First ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group C - Second <- Choose WI or enter your preferred Team Group C - Second WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ITA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு D : Team Pld W L NZ Select NZ NZ NZ 4 4 0 SA Select SA SA SA 4 3 1 AFG Select AFG AFG AFG 4 2 2 CAN Select CAN CAN CAN 4 0 4 UAE Select UAE UAE UAE 4 1 3 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) Group D - First <- Choose NZ or enter your preferred Team Group D - First NZ குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) Group D - Second <- Choose SA or enter your preferred Team Group D - Second SA 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 Y2 Y3 Y3 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 Y1 Y4 Y1 X1 IND இந்தியா X1 IND USA NED NAM 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 X1 X4 X1 X2 AUS அவுஸ்திரேலியா X2 AUS IRE ZIM OMA 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 X2 X3 X2 X3 WI மேற்கிந்தியத் தீவுகள் X3 WI BAN NEP ITA 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 Y1 Y3 Y1 X4 SA தென்னாபிரிக்கா X4 SA AFG CAN UAE 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 Y2 Y4 Y4 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 X3 X4 X4 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 X1 X2 X2 Y1 ENG இங்கிலாந்து Y1 ENG BAN NEP ITA 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 Y1 Y2 Y2 Y2 NZ நியூஸிலாந்து Y2 NZ AFG CAN UAE 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 Y3 Y4 Y4 Y3 PAK பாகிஸ்தான் Y3 PAK USA NED NAM 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 X2 X4 X2 Y4 SL சிறிலங்கா Y4 SL IRE ZIM OMA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 X1 X3 X1 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8 சுற்று குழு 1: Team Pld W L X1 Select X1 X1 X1 3 2 1 X2 Select X2 X2 X2 3 3 0 X3 Select X3 Select X3 3 0 3 X4 Select X4 Select X4 3 1 2 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) Super 8: Group 1 - First <- Choose X2 or enter your preferred Team Super 8: Group 1 - First X2 சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) Super 8: Group 1 - Second <- Choose X1 or enter your preferred Team Super 8: Group 1 - Second X1 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! WI சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8 சுற்று குழு 2: Team Pld W L Y1 Select Y1 Y1 Y1 3 2 1 Y2 Select Y2 Select Y2 3 1 2 Y3 Select Y3 Select Y3 3 1 2 Y4 Select Y4 Y4 Y4 3 2 1 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) Super 8: Group 2 - First <- Choose Y1 or enter your preferred Team Super 8: Group 2 - First Y1 சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) Super 8: Group 2 - Second <- Choose Y4 or enter your preferred Team Super 8: Group 2 - Second Y4 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), Super 8: Group 1 - First Super 8: Group 2 - Second AUS Semi Final 1 Super 8: Group 1 - First vs Super 8: Group 2 - Second 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, Super 8: Group 2 - First Super 8: Group 1 - Second IND Semi Final 2 Super 8: Group 2 - First vs Super 8: Group 1 - Second இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS IND AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AUS 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ITA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) VIRAT KOHLI 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JASPRIT BUMPRA 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) ABISEK SHARMA 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KANE WILLIAMSON 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JASPRIT BUMPRA 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ABISEK SHARMA 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
  5. Today
  6. மாற்றம்செய்யப்பட்டால்போட்டியில் இருந்து விலக்கப்படுவார். விளையாட்டு வீரர்களின் பெயர்களை எங்கே எப்படி பார்ப்பது?
  7. கறுப்பன் குசும்பன். இப்பவே டெபாசிட் இழப்புக்கு காரணம் செட்டப் பண்ணுகிறார்😂
  8. உறுப்பினர் குடிகாரர் எண்டால் அது சுமன் குரூப்… ஊரையே குடிகாரார் ஆக்கினால் அது பார் சிறி குரூப்….. #தள்ளாடும் தமிழ் தேசியம்
  9. அப்பாடா….ஒரு வழியாக போய் தொலைந்தது. புலிகள் வாவியை கடப்பதை தடுக்க இதை கொணர்ந்து விட்டதாக பேசிகொள்வார்கள்.
  10. இந்த தங்கன் வலிகாமம் எங்கும் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. இவரின் குடும்பத்தில் எவரையோ புலிகள் போட்டதால் கடும் ஆத்திரத்தில் இருந்தார் என்பார்கள். சுதுமலையை சேர்ந்தவர் என நினைக்கிறேன். கழுத்தில் பெரிய சங்கிலி தொங்கும். இந்தியன் ஆமி விலகிய பின் இந்தியாவுக்கு தப்பி ஓடும் போது படகு மூழ்கி இறந்ததாயும், அப்படி இல்லை என்றும் பேசி கொண்டார்கள். இப்போதும் இருக்கிறாரா? எங்கே எப்படி என அறிய ஆவல். முரண்நகை இங்கே மாணவரை வெளியே எடுக்க முன்னுக்கு நின்ற ரஜினி, சிறிதரனுக்கு பின்னாளில் இந்த சமூகம் கொடுத்த பட்டங்கள். குறிப்பு 87-90 இல் டக்கிளஸ் ஈபியில் இல்லை. பிரிந்து போய் ஈபிடிபி யை ஆரம்பித்துவிட்டார். மாகாண அரசிலும் இவர் பங்கில்லை. அப்போ ஈபியை வழிநடத்தியவர் பின்னாளில் புலிகளால் எம்பி ஆக்கப்பட்ட சுரேஷ் பிரேமசந்திரன். 1990 யூனில் இல் புலிகள்-ஆமி சண்டை மீள ஆரம்பித்த பின்னர், பிரேமதாசாவுசடன் உடன்படிக்கைக்கு போய், ஒரு தொகுதி உறுப்பினர்களுடன் கொழும்பு வந்தார்.முதல் முகாம் தெகிவளையில் என நியாபகம். அதே போல் பார்க் ரோட் வீடும். பின்னர் தீவு பகுதிக்கு அனுப்பபட்டனர்.
  11. சென்னை: “எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக் குழு கூட்டத்தில் உரையாற்றிய சீமான், “நாம் தமிழர் கட்சியின் வெற்றிதான் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும். மக்களாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிற மண்ணில் ஆட்சி அதிகாரம்தான் எல்லா மாற்றத்துக்கும் அடிப்படையாக இருக்கும். இங்கே நம்முடைய மொழியை பேசி, நம் வாழ்க்கையை வாழ்ந்து, நம்மால் ஆட்சிக்கு வந்து, நம் மொழியை, வரலாற்றை, இனத்தை அழிக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். தமிழினத்தில் அவ்வப்போது எழும் எழுச்சியை திராவிடர்கள் தன் ஆட்சி அதிகாரத்தால் அடக்கிவிட்டார்கள். மக்களிடம் உள்ள வறுமையின் காரணமாக ஏற்பட்ட அறியாமை, மறதியை பயன்படுத்தி அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். தேர்தலில் இந்தக் கட்சிகள் பெறுவது எல்லாம் வெற்றியா? நான் இந்த மக்களை முழுமையாக நம்பி களத்தில் நிற்கிறேன். எனவே வெற்றியோ, தோல்வியோ அது அவர்கள் தரும் பரிசு. எங்களைப்போல தனித்து நின்று, தத்துவம் பேசி வெற்றி பெற்று காட்டுங்கள் பார்ப்போம். பெரிய கட்சி என்கிறார்கள்... ஆனால், மாநாட்டுக்கு, கூட்டத்துக்கு சாப்பாடு, சாராயம், காசு கொடுத்துதான் ஆள் சேர்க்கிறார்கள். நாங்கள் வெற்றிபெற்று விடுவோம் என எதிரிகள் பயப்படுகிறார்கள். இங்கே இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே. எல்லாமே பெரியார்தான் காரணம் என்கிறது ஒரு கூட்டம். உண்மையில்தான் இந்த நாட்டை திருடர்கள் நாடாக மாற்றியதற்கும், எங்கள் மொழி, கலை, இலக்கிய, பண்பாடு, வழிபாடு, நிலம், வளம், ஆட்சி, அதிகாரம் எல்லாம் சிதைந்து அழிந்து போனதற்கு காரணம் பெரியார்தான். அந்த திராவிட திருட்டு சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்தியலுக்கும் இடையேதான் இங்கே போட்டியே. இங்கே இந்திய திராவிடர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையேதான் போட்டி. தனித்து நின்று, தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு சின்னம் பெற்று, எளிய பிள்ளைகளை வேட்பாளர்களாக நிறுத்தி அங்கீகாரம் பெற்ற கட்சி, நாட்டில் எங்களைத் தவிர வேறேதும் உண்டா? வாக்குக்கு காசு கொடுப்போம் என்ற கூட்டத்தை ஆதரிப்பீர்களா அல்லது மக்களுக்கு வாழ்க்கையை கொடுப்போம் என்பவர்களை ஆதரிப்பீர்களா? இலவசம் என்பது வளர்ச்சித் திட்டம் அல்ல... அது வீழ்ச்சித் திட்டம். இலவசம் பெறும் ஏழ்மை நிலை இல்லாது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். நல்ல கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கினால் மக்களே தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வார்கள். நிலமும் வளமும் சார்ந்த தற்சார்பு தாய்மை பொருளாதாரத்தை உருவாக்குவோம். சாராயப் பொருளாதாரம் மூலம் வருவாய் ரூ.50 ஆயிரம் கோடி, கால்நடை வளர்ப்பு மூலம் பொருளாதாரம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி. எது வேண்டும் மக்களே? பின்லாந்தை விஞ்சிய கல்வியை தமிழகத்து பிள்ளைகளுக்கு கொடுப்போம். இதனை நிச்சயம் சாத்தியப்படுத்திக் காட்டுவேன். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள் ஒருபக்கம், நாங்கள் தமிழர்கள் என்பவர்கள் ஒருபக்கம். எல்லாமே பெரியார் என்பவர்கள் எங்களுக்கு ஓட்டு போடவேண்டாம். எங்கள் இனத்தில் எண்ணற்ற பெரியார்கள் உள்ளனர். திராவிடர்கள் என்பவர்கள் எவரும் எனக்கு ஓட்டு போடவேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும். சாதி, மதத்தை பார்ப்பவர்கள் ஒருபக்கம் நிற்கட்டும். மனிதமே புனிதம் என்பவர்கள் என்பக்கம் நிற்கட்டும். ஏற்காட்டில் சாலைக்கு தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சி என்ற தமிழின வள்ளல் பெயரை அழித்து பெரியார் பெயரை வைத்தது ஏன்? தமிழுக்காக, தமிழருக்காக பாடியதால்தான் திராவிடர்கள் பாரதியையும், பாரதிதாசனையும் போற்ற மறுக்கிறார்கள். மக்கள் சரியில்லை என நாம் சொல்லக் கூடாது. சரியில்லை என்பதை சரி செய்ய வேண்டியதே நம் வேலை. பிழை யாருடையதாக இருந்தாலும் நாம் திருத்துபவனாக இருக்க வேண்டும். நாட்டில் எல்லோருக்கும் சமமான தரமான கல்வி, தரமான மருத்துவம். அரசுப் பள்ளி, கல்லூரியில் படித்தவர்களுக்கே அரசு வேலை என சட்டம் போடுவோம். அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும். அவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என சட்டம் போடுவோம். திருப்பரங்குன்றம் பிரச்சினையை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். வாக்குக்காக அந்த பிரச்சினையை மாற்றுகிறார்கள். சாதி, மதம் முக்கியம் என்பார்கள் அவர்கள். நாங்கள் மனிதம் பெரிது என்கிறோம். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பதாக சொல்கிறார்கள். உடைத்து சூறையாடப்படும் குன்றுகளுக்காக அவர்கள் குரல் கொடுக்க மாட்டார்கள்” என்று சீமான் பேசினார். “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
  12. 27 Dec, 2025 | 11:48 AM மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று, உயிரிழந்த நிலையில் காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் சனிக்கிழமை (28) கரையோதுங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 15 அடி நீளமுடைய இந்த ராட்சத முதலை, மட்டக்களப்பு வாவிக்கரை அண்மித்த பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியுள்ள முதலையை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்தில் அதிகளவில் பொதுமக்கள் கூடியுள்ளமை குறிப்பிடப்படுகிறது. மட்டக்களப்பு வாவியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலை உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியது! | Virakesari.lk
  13. 27 Dec, 2025 | 02:12 PM பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியான ஷானிகா லக்ஷானி பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த' , 'பாணந்துறை நிலங்க' மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்lதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணை மற்றும் 150,000 ரூபா பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம ஒக்டோபர் 31 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து “பெக்கோ சமனின்” மனைவி நேற்று வெள்ளிக்கிழமை (26) தனது பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்தார் “பெக்கோ சமனின்” மனைவி! | Virakesari.lk
  14. 27 Dec, 2025 | 11:16 AM புதிய நீர் தேக்கங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதை விடுத்து, வேலணை - மண்கும்பானில் ஏற்கனவே இருக்கின்ற, சீரமைக்கப்படாத குளங்களை சீர் செய்து தீவகத்தின் நன்னீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் பிரதேச சபையின் உறுப்பினருமான சுவாமினாதன் பிரகலாதன் வலியுறுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை (26) வேலணை சபையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மண்கும்பானில் ஏற்கனவே பிரதேச சபைக்குரிய 5 குளங்கள் இருக்கின்றன. இவற்றில் இரு குளங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனையவையும் கடுமையான பாதிப்புக்களுடனேயே இருக்கின்றன. இவற்றை சீரமைத்தால் மண்கும்பானின் மழை காலங்களில் ஏற்படும் பிரச்சினைக்கும் ஓரளவு தீர்வு காணமுடியும். அதுமட்டுமல்லாது இது விவசாய தேவைகளுக்கும் சாதகமாக அமையும். வேலணைக்கே நன்னீர் கொடுக்கும் நன்நீர் வளம் மிக்க எமது மண்கும்பானில் மழை நீரை அதிகளவில் சேகரித்தால் மேலும் நன்னீர் இருப்பை மேம்படுத்திக் கொள்ளலாம். அந்த குளங்களுக்கு நிதியை செலவு செய்வது வீண் விரையமற்ற ஆரோக்கியமான ஒரு விடயம். இதை விடுத்து புதிய இருக்கின்ற நீர் நிலைகளை கைவிட்டு புதியவற்றை உருவாக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரம் சாட்டிப் பகுதியின் பாதுகாப்பு அவசியமானது. அதற்கான முயற்சி எடுக்கப்படுமானால் அதை வரவேற்போம் என்றார். நன்னீரை பாதுகாக்க மண்கும்பானில் இருக்கும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும் - பிரகலாதன் வலியுறுத்து | Virakesari.lk
  15. முன்னாள் யாழ்பல்கலைக் கழக மாணவர் ஒருவரின் பதிவிலிருந்து….. THUGS’ LIFE EPRLF இயக்கம் இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கோடு வடக்கில் நிலைகொண்ட இந்திய இராணுவத்தோடு(IPKF) மீளவும் பிரசன்மாகியிருந்தது. ஒவ்வொரு பிரதான சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. EPRLF இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீளவும் வந்திறங்கினர். புலிகளை அழித்து இந்தியாவின் உதவியோடு ஈழத்தைக் கைப்பற்றுவோம் என EPRLF இன் தலைவர்களில் ஒருவரான வரதராஜப் பெருமாள் அறிக்கைவிடுக்கிறார். யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து EPRLF இராணுவம் செயற்பட்டது. EPRLF குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக்க் கும்பலாகவே EPRLF தன்னை அறிமுகப்படுத்தியது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்ற அனைத்தும் இலங்கை இராணுவத்திற்கு ஒப்பான வகையில் நிறைவேற்றப்பட்டன. தேசியப் போராட்டம், வர்க்கப் புரட்சி, மக்கள் இயக்கம் என்ற அழகான வார்த்தைகளை உச்சரித்த EPRLF இயக்கம் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்க ஆரம்பித்தது. 1988 ஆம் நடுப்பகுதில் EPRLF மக்கள் மீதான பல முனைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. குறிப்பாகப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கைதுகள் உச்சத்தைத் தொட்டிருந்தன. பல்கலைக் கழகத்திற்குக் கல்விகற்கச் செல்வதென்பதே பாதுகாபற்றதாக இருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புச் சார்பாக ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டோம். 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் தலைமையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் நான் தங்கியிருந்தேன். விடுதிக்கு நேர் எதிராக அமைந்திருந்த தொழில் நுட்பக் கல்லூரி தேர்தல் சாவடியாகப் பயன்படுத்தப்பட்டது. விடுதிக்குப் பின்புறமிருந்து தேர்தல் சாவடியை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனையடுத்து இந்திய இராணுவத்தினர் விடுதியைச் சுற்றிவளைத்தனர். தெருவில் நடமாடிய ஒவ்வொருவரையும் எழுந்தமானமாகத் தாக்கினர். விடுதியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வரவில்லை என்பதை விடுதியைச் சுற்றிவளைத்திருந்த இந்திய இராணுவத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு என்னை அவர்களிடம் சென்று பேசுமாறு மாணவர்கள் முடிவெடுத்தனர். அவர்களிடம் பேசச் சென்ற போது நான் தேர்தல் சாவடியிலிருந்த இராணுவத் தளபதியிடம் பேசுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன். பஞ்சாபிக் காரரான அவரது முன்னால் சென்ற போது எனது மேலங்கியில் எண்ணைப் படிவு காணப்படுவதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது நானாக இருக்க வேண்டுமென முடிவெடுக்கிறார். என்னை தீர விசாரிக்குமாறு சில இராணுவத்தினரிடம் அனுப்பி வைக்கிறார். அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு இராணுவத்தினர் ஒரு மேசையுடன் இணைத்து என்னைக் கட்டிவைத்துவிட்டு மிருகத் தனமாக அடிக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக எனக்கு அடி விழுகிறது. இறுதியில் நான் மயக்கமடைந்து விட்டேன். மயக்கம் தெளிந்த போது எனக்கு சிறிதளவு நீர் அருந்த அனுமதித்தார்கள். தேர்தல் முடிவடைந்திருந்தது. இராணுவத்தினர் முகாமிற்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். எனது கைகளை இறுகக்கட்டி இராணுவ வாகனத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். சேகர் என்ற தமிழ் அதிகாரி அங்கு வருகிறார். என்னைப் புலியா எனக் கேட்கிறார். இல்லை என்றதும் தனது சப்பாத்துக் கால்களால் எனது முதுகில் உதைகிறார். சில நிமிடங்கள் நினைவிழந்த நிலையில் மருதானாமடம் பிரிவைச் சேர்ந்தா இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றப்படுகிறேன். அங்கு என்னை ஒப்ப்டைத்தவர் சேகர். அந்த அணியின் பொறுப்பதிகாரிக்கு நான் புலிகள் சார்ந்தவன் என்று கூறியே ஒப்படைக்கப்படுகிறேன். மருதனாமடம் முகாமிற்கு அவர்கள் என்னைக் கொண்டு செல்லும் வரைக்கும் ஏறத்தாழ 10 நிமிட நேரமாக பலர் அங்கும் இங்குமாகத் தாக்குதல் நடத்தினர். சிகரட் புகைத்துக்கொண்டிருந்த இராணுவதினர் ஒருவர் என் மீதே அதனை அணைக்கிறார். பல தடவைகள் உரத்து அலறியும் எந்தப் பயனும் இல்லை. எல்லாமே மரத்துப் போனது போன்ற உணர்வு. இறுதியாக முகாமை அடைந்ததும் அங்கு இராணுவ வண்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்த எனது கால்களைப் பிடித்து இழுத்ததில் எனது தலை அடிபட விழுந்ததில் மற்றொரு தடவை நினைவிழக்கிறேன். நான் விழித்துக்கொண்ட போது என்னைச் சுற்றிப் பலர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் EPRLF உறுப்பினர்கள். எனக்குத் தெரிந்த ஒருவரையும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு சிலர் குடி போதையில் இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எல்லோருமே என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர். அங்கிருந்த EPRLF உறுப்பினர் ஒருவர் நான் இந்திய இராணுவத்திற்கு எதிராகச் செயற்படுவது தனக்குத் தெரியும் என்கிறார். உடனடியாகவே கேள்விகள் நிறுத்தப்பட்டு சாரமாரியாகத் தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றனர். தமக்குத் தெரிந்த சித்திரவதை முறைமகள் அனைத்தையும் கையாள்கின்றனர். ஒரு புலி உறுப்பினரையாவது காட்டிக்கொடுக்காவிட்டல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகின்றனர். எனக்கு முன்னமே தெரிந்த EPRLF உறுப்பினர் அங்கிருந்து செல்லும் போது எனது முதுகில் வில்லுக் கத்தியால் கீறிவிட்டு மறு நாள் வரைக்கு இது இரத்தம் சொட்டப் போதுமானது எனக் கூறிவிட்டு அகன்று செல்கின்றார். மருதனாமடம் முகாம் வழமையாகக் கைதிகளைத் தடுத்துவைப்பதற்கான முகாம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை. முகாமில் என்னைத் தவிர வேறு கைதிகளைக் காணமுடியவில்லை. இரவு நெடு நேரமாக கிணற்றிற்கு அருகிலிருந்த மரத்தோடு என்னைக் கட்டிவைத்திருந்தனர். நள்ளிரவு இருக்கலாம் ஒரு இந்திய இராணுவத்தினர் எனக்கு அருக்கில் வந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவந்து தந்த பின்னர் முகாமின் பின்புறதில் இருந்த மலசல கூடத்திற்குப் பின்புறம் காணப்பட்ட அறையில் அடைத்துவிட்டனர். இரவு உறங்கியதாக நினைவில்லை. அதிகாலையில் உறங்க முற்பட்ட வேளையில் சற்று உணவோடு அறைக்குள் எனைத் தள்ளிய இராணுவ சிப்பாய் வருகின்றார். சற்றுப் பின்னதாக இரண்டு EPRLF பிரதான உறுப்பினர்கள் வருகின்றனர். ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தங்கன் என்ற மானிப்பாயைச் சேர்ந்தவர். மற்றவர் பிரதீப் என்பவர். நீ எப்போது புலியில் சேர்ந்தாய் என்று கேட்டவாறே தங்கன் என்னைச் சாரமாரியாகத் தாக்குகிறார். கிணற்றிற்கு அருகில் அழைத்துச்சென்ற அவர்கள் நீர் நிரம்பிய ஒரு வாளிக்குள் எனது தலையை அமிழ்த்துகின்றனர். நான் மூச்சுத்திணறும் வரைக்கும் நீருக்குள் எனது தலையை வைத்திருக்கின்றனர். என்னிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாமையால் அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்குதல்களைத் தொடர்கின்றனர். அப்போது தமிழ்ப் பேசும் இந்திய இராணுவ அதிகாரி சேகர் அங்கு வருகின்றார். தனது பங்கிற்கு அறையின் மூலையில் உட்காரவைக்கப்பட்டிருந்த என்னை கால்களால் உதைக்கிறார். என்னை இங்கு வைத்து விசாரணை செய்தால் உண்மை சொல்லப்போவதில்லை என்றும் மானிப்பாயில் உள்ள விசேட சித்திரவதை முகாமிற்கு என்னை அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறுகின்றனர். அங்கே மின்சாரம் பாய்ச்சும் உபகரணங்கள் உட்பட பல சித்திரவதைக் கருவிகள் இருப்பதாகவும் நான் எப்படியும் உண்மை சொல்வேன் என்றும் பேசிக்கொள்கின்றனர். அதன் பின்னர் வெளியே வாசலுக்குச் சென்று அங்கு சித்திரவதைச் செய்யப்படும் போது இறந்துபோன ஒருவரைப்பற்றியும் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த உப நிலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை நாகரீகமாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ராஜஸ்தானைச் சேந்தவர் என்கிறார். நான் உண்மையில் புலி இயக்கத்தைச் சார்ந்தவனா என்று கேட்கிறார். நான் நடந்தவற்றை விபரிக்கிறேன். அவர் சித்திரவதை முகாமில் நடப்பவற்றை விபரிக்கிறார். கைகளில் நகங்களைப் பிடுங்குவார்கள், கண்களில் ஊசி ஏற்றுவார்கள் என்று மனித நாகரீகங்கள் கேட்டிராத பல சித்திரவதைகளைப் பற்றிக் கூறுகின்றார். அவர் கூறும் போதே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முதல் நாள் இரவு EPRLF உறுப்பினர் கீறிய கத்திக்காயம் மேலும் வலித்தது. யாராவது எனக்குத் தெரிந்த பல்கலைகழகப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்களை மட்டும் கூறினால் என்னை இங்கிருந்து விடுதலை செய்துவிடுவதாகக் கூறினார். வெள்ளிக்கிளமை விடுமுறை நாளொன்றில் கைது செய்யப்படிருந்தேன். அன்று சனி. இன்னும் ஒரு ஞாயிறு கழிந்தால் திங்கள் பல்கலைக் கழகத்தில் போராட ஆரம்பித்துவிடுவார்கள். போராட்டம் ஆரம்பித்தபின்னர் அடிகாயங்களோடு என்னை விடுதலை செய்ய மாட்டார்கள். ஒன்றில் கொலை செய்துவிடுவார்கள் அல்லது சித்திரவதை முகாமில் நீண்டகாலம் வைத்திருப்பார்கள் என்கிறார். பல்கலைக் கழகதிலிருந்து சிலர் அணுகியதாகவும் இராணுவ அதிகாரிகள் நான் கைதானதை மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். கைதானதை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாத காரணத்தால் கொலை செய்து அழித்துவிடுவது இலகுவானது என்கிறார். அவரோடு ஒத்துழைத்தால் விடுதலைக்காக ஆவன செய்வதாகக் கூறுகிறார். எனக்குத் யாரையும் தெரியாது என்று மீண்டும் கூறியதும் எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார். மதிய உணவு தரப்பட்டதாக நினைவு. மாலை வேளையில் தங்கன் மீண்டும் என்னை வந்து மிரட்டிவிட்டுச் சென்றார். ஞாயிறு மாலை சித்திரவதை முகாமில் சந்திப்பதாகக் கூறினார். சில மணி நேரங்களின் பின்னர் அதே உப நிலை இராணுவ அதிகாரி வருகின்றார். புலிகளின் ஒரு உறுப்பினரை காட்டிக்கொடுத்த பின்னர் விடுதலையாகி வெளியில் சென்று தமக்குத் தகவல் தருமாறு செயற்பட்டால் உடனடியாகவே விடுதலை செய்வதாகக் கூறுகிறார். தவிர, நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருப்பதால் ஏனைய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அனுப்பத் தயாரில்லை என்றும் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்த அடிப்படையில் விடுதலை செய்யலாம் அல்லது சித்திரவதை முகாமிற்கு அனுப்ப வேண்டியதாக இருக்கும் என்கிறார். நான் இப்போது பேச ஆரம்பிக்கிறேன், “உங்களுடைய நாட்டில் வெள்ளையர்களை வெளியேற்றுவதற்கான போராட்டம் நடைபெற்றபோது மக்கள் ஆதரவு இருந்ததைப் போன்றே இப்போதும் புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் புலிகள் தலைமறைவு அமைப்பு. மக்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் இப்போது அங்கே இப்போது தலைமறைவாகிவிட்டார்கள். காட்டிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஆனால் நீங்கள் அப்பாவிகளைத் தாக்கினால் அவர்கள் புலிகளோடு இணைவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிடும்” என்பன போன்ற விடயங்களைக் கூறுகிறேன். ஆமோதிப்பது போன்று தலையசைத்துவிட்டுச் செல்கிறார். அவரை மீண்டும் நான் காணவில்லை. அன்று இரவு சித்திரவதைகள் குறைந்திருந்தன. மறு நாள் ஞாயிறு, மதியம் அளவில் முகாமின் முன்னரங்கில் காவலுக்கு நின்றிருந்த இராணுவத்தோடு என்னை நிறுத்தி வைத்தனர். தெருவால் புலி உறுப்பினர்கள் சென்றால் காட்டிக்கொடுக்குமாறு பணிக்கப்பட்டேன். துப்பாக்கியோடு ஒரு இராணுவச் சிப்பாய் தெருவில் போகிறவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட என்னைத் தாக்குவார். பொழுது சாய்ந்ததும் மறுபடி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். EPRLF உறுப்பினர்கள் வந்தார்கள். மானிப்பாய் முகாமிலிருந்து பிரதீப்பும் வந்திருந்தார். “*நல்ல தமிழ்” *மட்டும் தான் “தோழர்” பேசினார். வெளியே ஒடிச்சென்று பெரிய தடி ஒன்றைக் கொண்டுவந்து தாக்கியது நினைவிருக்கிறது. ஒரு கட்டத்தில் நான் நினைவிழந்துவிட்டேன். கண்விழித்த் போது யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் வந்து ஏதோ ஹிந்தியில் கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. திட்டியபடி பல தடவை முகத்தில் அறைந்தார். அவர்கள் கூறியபடி சித்திரவதை முகாமிற்கு நான் கூட்டிச் செல்லப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. மறு நாள் அதிகாலை அடி உதை எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது. சித்திரவதை முகாமிற்குக் கொண்டு செல்லப்போவதாகவும் என்னை இராணுவ உடுப்பை அணிந்து கொள்ளுமாறும் ஒரு அதிகாரி உடை, தொப்பி ஆகியவற்றுடன் வந்தார். மதியத்திற்குச் சற்றுப்பின்னர், இராணுவ உடையுடன், பின்பக்கம் திறந்த இராணுவ வண்டியில் ஏற்றப்படுகிறேன். சித்திரவதை முகாமிற்குச் செல்லும் வழியில் எனது மானிப்பாய் வீட்டைச் சோதனையிடப் போவதாகச் சொல்கிறார்கள். வீட்டிற்குச் செல்லும் வழியில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக உளவாளிகள் மூலம் தகவல்கள் கிடைத்திருப்பதாகச் பொறுப்பதிகாரி சொல்கிறார். எனது வீட்டிற்குச் செல்லும் வழியில் கடை ஒன்றின் அருகில் சற்று மறைவான இடமொன்றில் என்னையும் இன்னொரு இராணுவ அதிகாரியை காவலுக்கும் நிறுத்திவிட்டு வீட்டைச் சோதனையிடச் செல்கிறார்கள். அவ்வேளையில் எனது வீட்டில் எனது ஆசிரியராகவிருந்த கலாநிதி சிறீதரன், பேராசிரியை ரஜனி திரணகம உட்பட உறவினர்கள், நண்பர்கள் பலர் “காணாமல்போன” என்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததை பின்னதாக அறியக் கூடியதாக இருந்தது. அங்கு சென்ற இந்திய இராணுவத்தினர் தாங்கள் என்னைக் கைது செய்யவில்லை என்றும், வீட்டில் ஒளிந்திருக்கிறேனா எனச் சோதனையிட வந்ததாகவும் கூறியிருந்தனர். எனக்குக் காவலுக்கு நின்றிருந்த இராணுவச் சிப்பாய் அருகிலிருந்த கடைக்கு பீடி வாங்குவதற்காகச் செல்கிறார். அவ்வேளையில் எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெருவால் நடந்து செல்கிறார். அவரை நான் சைகை காட்டி அழைத்ததும் என்னை நோக்கி வருகிறார். அடி விழுந்ததில் முகம் முழுவதும் வீக்கமடைந்திருந்ததால், கூர்க்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அழைப்பதாகக் கருதியே அவர் என்னை அணுகியதாக பின்னதாக அவர் என்னிடம் கூறியிருந்தார். அருகில் வந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் என்னுடன் ஏதும் பேசாமல் உடனடியாகவே மறுபக்கம் திரும்பிச் சென்று எனது வீட்டில் விடயத்தைத் தெரிவித்திருக்கிறார். வீட்டில் இருந்த அனைவரும் கடையை நோக்கி ஓடிச் செல்ல, நிலமையைப் புரிந்துகொண்ட இந்திய இராணுவத்தினர் அவசர அவசரமாக வாகனத்தை நோக்கி விரைந்து அதனைச் செலுத்த ஆரம்பித்தனர். வாகனத்தின் பின்னால் எனது குடும்பத்தினர் ,மற்றும் அவர்களுடனிருந்த பேராசியர்கள் ஓடிவருவதைக் காணக்கூடியதாக இருந்தது. இப்போது நான் முகாமில் உயிரோடு வைக்கப்பட்டிருப்பதைப் பலர் சாட்சியாகக் கண்டிருக்கிறார்கள். இராணுவ வாகனம் இடையில் நிறுத்தப்பட்டு யாரையோ தொடர்பு கொள்கிறார்கள். இப்போது அவர்களது திட்டம் மாறியிருக்க வேண்டும். மருதனாமடம் முகாமிற்கு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறேன். அன்று மாலைவரை எனக்கு யாரும் அடிக்கவில்லை. அன்று இரவிற்குள் எனது வீட்டார், ரஜனி திரணகம போன்றோர் பல அதிகாரிகளைச் சந்தித்து EPRLF செயலாளர் பத்மனாபாவையும் சந்திக்கின்றனர். அன்று இரவே விடுதலை செய்யப்படுகிறேன். காயங்கள் குணமாகும் வரை வெளியே வரக்கூடாது, பத்திரிகைகளில் படம் வரக்கூடாது, என்ற எச்சரிக்கையின் பின்னர் எனதுகுடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறேன். * வைமன் வீதி முகாமில் நான் சந்தித்த வாசு இப்போது கே.பி இன் தன்னார்வ நிறுவனத்தின் பிரித்தானிய முகவர்…பிரித்தானியாவில் வசிக்கும் புலி எதிர்ப்பாளர். கலாநிதி சிறீ மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர், ஜெரோம் சில காலங்களின் பின்னர் மாரடைப்பால் மரணித்துவிட்டார், கிருபன் பிரான்சில் வசிக்கிறார், பிரதீப் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் வசிப்பதாகக் கூறுகிறார்கள். நான் மீண்டும் எழுத்துக்களோடு பிரித்தானியத் தெருக்களில். Naveen Nava, Rahulan Nadarajah @ரஞ்சித் , @நன்னிச் சோழன்
  16. டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு இருக்கின்றார் சர்வதேச போதை கடத்தல் மன்னன் மாகந்துர மதுஷ்வுடன் ஆயுத பரிமாற்றங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியாளர்களால் கொ*ல்லப்பட்ட ஜேவிபியின் மூத்த உறுப்பினர் திருமதி மாலினி சமரசிங்கே என்பவரின் மகனான சமரசிங்க ஆராச்சிகே மதுஷ் லக்சித (மாகந்துர மதுஷ்) இலங்கையில் சர்வ வல்லமை பொருந்திய நபராகவிருந்த பாதாள உலக பேர்வழியாவர் திரு மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாகவிருந்த போது 2019 ஆம் ஆண்டு பெப்ரவர் மாதம் 4 ஆம் திகதி டுபாயில் நடைபெற்ற அவரின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கைது செயயப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார் பின்னர் கோத்தபாயா ராஜபக்சே ஜனாதிபதியாகவிருந்த போது Encounter முறையில் சிறையிலிருந்து அழைத்து செல்லப்பட்டு பொலிஸ் அதிகாரிகளால் சு*ட்டு கொ*ல்லப்பட்டிருந்தார் இலங்கையின் தென்னிலங்கையின் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்த அமரவீர உட்பட 80 ற்கு மேற்பட்ட அரசியல் வாதிகள், வர்த்தகர்கள் உட்பட பலரோடு நெருங்கிய தொடர்புகளை பேணிய மாகந்துர மதுஷ் திரு மைத்திரிபால சிறிசேனா அவர்களை கொ*ல்ல முயற்சித்ததாகவும் சொல்லப்படுகின்றது இந்த கொ*லை மூலம் மாகந்துர மதுஷ் வசமிருந்த இலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் போதை வர்த்தக வலையமைப்பு தொடர்பான பல்வேறு தகவல்கள் மறைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது அந்தவகையில் இராணுவ ஒட்டுக்குழுவாக இயங்கிய டக்ளஸ் தேவானந்தா பாதாள உலகத்தை சேர்ந்த மாகந்துர மதுஷ்வுடன் இணைந்து இயங்கியமை புதிய விடயமல்ல தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் முஸ்லிம் ஆயுத ஒட்டுக்குழுக்களையும் பாதாள உலக குழுக்களையும் இணைத்தே இயக்கி வந்தார்கள் குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு கைமாற்றப்பட்டு இருக்கின்றது அதே போல கருணா பிளவின் போது இராணுவம் வசம் வந்த ஆயுதங்களும் பாதாள உலக குழுக்களுக்கு கைமாற்றப்பட்டு இருக்கின்றது கிழக்கு மாகாணத்தில் வாழைசேனையில் கருணா பிள்ளையான் குழுக்கள் மூலம் முஸ்லிம் மற்றும் பாதாள உலக குழுக்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு இருந்தது கடந்த காலங்களில் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களில் கூட பாதாள உலக குழுக்களுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டு இருக்கின்றன குறிப்பாக முஸ்லிம் அமைச்சராகவிருந்த தற்போதைய மாநகர சபை முதல்வர் ஒருவரின் வாகனத்தில் கூட பாதாள உலக குழுக்களுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டு இருக்கின்றது இந்த அட்டூழியங்களை அரச இராணுவ புலனாய்வு கட்டமைப்புகளே ஒருங்கிணைத்தன . அதாவது ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தோடு அரச இராணுவ புலனாய்வு கட்டமைப்புகளே இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்வதற்கு இவர்களை பயன்படுத்தினார்கள் அதன் அடிப்படையில் தான் மாமனிதர் ரவிராஜ் படுகொலை முதல் மாமனிதர் குமார் பொன்னம்பலம் வரையான பல்வேறு கொ*லைகளில் இராணுவம், ஒட்டுக்குழுக்கள் மட்டுமின்றி பாதாள உலக குழுக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட்டன ஆனால் தற்போது தமிழ் முஸ்லிம் ஆயுத ஒட்டுக்குழுக்களின் தேவைகள் பொதுவில் முடிவடைந்த நிலையில் இராணுவத்தால் இயக்கப்பட்ட தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளான டக்ளஸ் தேவானந்தா முதல் பிள்ளையான் வரையான இராணுவ ஒட்டு குழு கூலிகளுக்கு கணக்கு தீர்க்கப்படுகின்றது ஆனால் இவர்களை இயக்கிய தரப்புகள் தொடர்ந்தும் மிக தெளிவாக பாதுகாப்பக வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் அவர்கள் புதிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களை பயன்படுத்தி சமூக நிர்வாக மட்ட குழப்பங்களில் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார்கள். இனமொன்றின் குரல்
  17. மகிந்தரின் திட்டப்படி, சம்பந்தர்மூலம் திருவளர் சுமந்திரன் அவர்களை தமிழரசுக் கட்சிக்குள் கொண்டுவந்ததே கட்சியைக் காலிபண்ணுவதற்கு என்ற ஐயம் உள்ளது. இது ஐயமில்லை உண்மையே என்பதுபோல், சுமந்திரனும் தான் உள்ளேவந்த காரியத்தைக் கனகட்சிதமாக நிறைவேற்றி வருவது கண்கூடு. என் கதை முடியும் நேரம் இது என்பதை சொல்லும் தமிழரசுக் கட்சி
  18. ஜப்பானில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பாரிய தீ விபத்து ; ஒருவர் பலி ; 26 பேர் காயம்! 27 Dec, 2025 | 04:21 PM ஜப்பானின் கன்மா மாகாணத்தில் உள்ள மினகாமி பகுதியில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் 50 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 26 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜப்பானில் புத்தாண்டு விடுமுறைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுமார் 50 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் டோக்கியோவைச் சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த 26 பேரில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தினால் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/234544
  19. உலக பொருளாதார நிபுணர்களின் கருத்திற்கு அரசு செவி சாய்க்க வேண்டும் Dec 27, 2025 - 02:54 PM 'டித்வா' புயலால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அரசாங்கம் நேரடியான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது. புயல் அனர்த்தத்தைக் கருத்திற்கொண்டு இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து, உலகின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் குழுவொன்று விடுத்துள்ள அறிவிப்பை அரசாங்கம் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 'டித்வா' புயலின் அழிவுகளைக் கருத்திற்கொண்டு, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் கொடுப்பனவுகளைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (Joseph Stiglitz) உட்பட உலகின் முன்னணி 121 பொருளாதார நிபுணர்கள் அண்மையில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இலங்கை எதிர்நோக்கியுள்ள தற்போதைய அவசரத் தேவைகள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஏற்கனவே மேலதிகக் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இன்னும் அதிகக் கடன்களைப் பெற வேண்டியிருக்கும் என்றும் அந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக, இலங்கையின் வெளிநாட்டு இறையாண்மைக் கடன் கொடுப்பனவுகளை உடனடியாக நிறுத்தி, புதிய சூழ்நிலைகளின் கீழ் கடன் மறுசீரமைப்பை மேற்கொண்டு கடன் நிலைத்தன்மையை (Debt Sustainability) மீள நிலைநிறுத்துமாறு அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் துமிந்த நாகமுவ, அரசாங்கம் இந்த அறிக்கையை மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். "இன்று உலகின் முன்னணி 121 பொருளாதார நிபுணர்கள் இலங்கை தொடர்பாக பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், எதிர்வரும் காலத்தில் இலங்கையினால் கடன் செலுத்த முடியாமல் போகும் என்பதை அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர். எனவே, கடன் செலுத்துவதை நிறுத்தி வைக்குமாறு (Debt Moratorium) அவர்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிந்துள்ளனர். நாட்டுக்குள் இருந்து கொண்டு நாம் கூறும் விடயங்களை அரசாங்கத்தால் ஏற்க முடியாவிட்டால், உலகின் பலம் வாய்ந்த பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளதையாவது பரிசீலிக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்." என்றார். https://adaderanatamil.lk/news/cmjo3fzll036ko29n9c8p0bi3
  20. 2026 வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல் Dec 27, 2025 - 12:15 PM 2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் இம்முறை ஒவ்வொரு வீட்டிற்கும் வருகை தரமாட்டார்கள் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட 'A' மற்றும் 'Aa' பட்டியல்களைப் (Lists) புதுப்பிப்பது தொடர்பான வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் வருகை தருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே உத்தியோகத்தர்கள் செல்வார்கள் என பெப்ரல் அமைப்பு கூறுகிறது. பெப்ரல் அமைப்பின்படி, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் முறையை அவதானிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அத்துடன், தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியானவரா இல்லையா என்பது குறித்த உத்தியோகத்தர்களின் பரிந்துரைகளையும் அவர்கள் கண்காணிக்க முடியும். ஏதேனும் முறைகேடுகள் அவதானிக்கப்பட்டால், பிரதிநிதிகள் அது குறித்து கணக்கெடுப்பு உத்தியோகத்தருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்றும், அத்தகைய அறிவிப்பின் பிரதியொன்றை சம்பந்தப்பட்ட மாவட்ட பிரதி அல்லது உதவித் தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அனுப்ப முடியும் என்றும் பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmjnxslof036eo29nm7a76nq4
  21. அமெரிக்காவில் ‘டெவின்’ குளிர்கால புயல் ; ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து 27 Dec, 2025 | 10:56 AM அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ‘டெவின்’ (Devin) குளிர்கால புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (26) அமெரிக்காவிலிருந்து மற்றும் அமெரிக்கா வழியாக இயக்கப்பட வேண்டிய 1,581 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 6,883 விமானங்கள் தாமதம் ஆகியுள்ளன. இதனிடையே, அமெரிக்காவில் ‘டெவின்’ குளிர்கால புயல் காரணமாக “ பயண நிலைமைகள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான நிலையங்கள் தாமதம் மற்றும் ரத்து குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, கலிபோர்னியாவில் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் புயல் அபாயம் நிலவுவதுடன், 30 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவாகும் அதிகபட்ச பனிப்பொழிவாக இது பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/234518
  22. இங்குதான் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அவை நாகரிகம் தெரியாமல் ஒருவருக்கொருவர் மரியாதை பாடம் எடுத்தார்கள். ஒருவரையும் பேசவிடுவதில்லை, நேரத்தை வீணடித்து, கலகம் செய்கிறார்கள். இவர்கள் தங்களுக்குள் அடிபடவே நேரம் காணாது இதற்குள் எப்படி மக்களுக்கு சேவை செய்வார்கள்? ஒருவரை சஜித் தேர்தலில் கொழும்புத் தொகுதியில் போட்டியிட அழைத்துள்ளாராம். ம்... அவருக்குரிய வைத்தியசாலை அருகில் இருப்பதால் சுலபமாக அனுப்பிவிடலாமென நினைத்து அழைத்தாரோ என்னவோ? ஒரு நாள் பாத்தால் நாமலை புகழ்வார், மறுநாள் சஜித், இன்னொருநாள் அனுரா. நாளும் பொழுதும் ஒவ்வொரு வம்பில மாட்டுப்படுவதும், அநாகரிக வார்த்தை பிரயோகம், ரவுடிசம். இதில மற்றவர்களுக்கு பாடம் நடத்துகிறார். அவர் தொழிலிலும் கரை சேரவில்லை, பாராளுமன்ற உறுப்பினராகவும் எதுவும் சாதிக்கவில்லை. நேரம் ஒரு கதை, எல்லோரையும் கிண்டல். ஆனால் அந்த மக்களின் வாக்கினாலேயே பாராளுமன்றம் போனார் அவர். கல்வித்திறமையினாலோ, தொழிற்திறமையினாலோ அல்ல. நன்கு கற்று தேர்ந்தவர் மற்றவரை ஏளனம் செய்ய மாட்டார்.
  23. காணொளி: 👉 https://www.facebook.com/100061934684688/videos/pcb.1185497690191376/2678679292485326 👈 சுமந்திரனின் தமிழரசு கட்சி பிரதேச சபை தவிசாளர் சோமபானத்தால் அசந்து வீதியில்… விழுந்து கிடக்கும் கண்கொள்ளா காட்சி. Vathsangan Pirabakaran சுத்துமாத்து சுமந்திரனின் அரசியல் வாரிசுக்கு.... சாராயத்தை ஊத்திக் கொடுத்து, காரியத்தை கச்சிதமாக ஆளும் கட்சி முடித்து விட்டது. 😂 இன்னும்... களை எடுக்க வேண்டிய, "அல்லக்கைகள்" நிறைய உள்ளது. எல்லாம் எடுத்து முடிய... தமிழரசு கட்சியின் கூடாரம் காலியாக விடும். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.