Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. கடந்த கால அரசாங்கத்திற்கு விளையாட்டு காட்டியது போல எமக்கு காட்ட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை 29 Mar, 2026 | 09:27 AM வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள், சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டாம். அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களை பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 06 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளது. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை கூட காவு வாங்கியுள்ளனர். இது ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்ச கதையாக பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மணல் விநியோகத்தை ஒழுங்கு படுத்தி அனுமதி பத்திரங்கள் வழங்குவதன் ஊடாக ஒரு கியூப் மண் 7500 ரூபாய்க்கு வழங்க முடியும். அதனால் ஒரு டிப்பர் மண் 23 ஆயிரத்திற்கு பெற முடியும். யாழ்ப்பாணத்திற்கு அதனை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட செலவுகளை கணித்தால், சுமார் 55 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரத்திற்கும் மண்ணை விநியோகிக்க முடியும். சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மணல் மாஃபியாக்கள் ஒரு டிப்பர் மண்ணை ஒரு இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். அவ்வாறான மண் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள் சில பொலிஸார் உள்ளனர் என்பதும் எமக்கும் தெரியும் கடந்த கால அரசாங்கங்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் விளையாட்டு கட்டலாம் என நினைக்க வேண்டாம் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். சட்டவிரோத மணலுடன் முதல் தடவை கைப்பற்றப்படும் வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். இரண்டாவது தடவையும் அதே தவறை செய்தால் 20 இலட்ச ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். மூன்றாவது தடவையும் அதே தவறை செய்தால் வாகனம் அரசுடைமையாக்கப்படும். இது தொடர்பான சட்டங்கள் மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் நீதி அமைச்சு உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம். அத்துடன் பொலிசாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாக இருக்காது , மாஃபியாக்கள் மீதான கடுமையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளோம். மாஃபியாக்களுக்கு மக்கள் பயப்படுகின்றார்கள். அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க பயப்படுகிறார்கள். அதனால் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க மிக விரைவில் தொலைபேசி இலக்கங்களை அறிவிப்போம். அதனூடாக அவர்கள் தகவல்களை தெரியப்படுத்த முடியும். இவ்வாறான செயற்பாடுகளை தனியே பொலிஸாரோ , அரசாங்கமோ கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களின் பங்களிப்பு கட்டாயம் தேவை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/242184
  3. இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல் Mar 29, 2026 - 10:51 AM இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காகிதப் பயன்பாடற்ற மின்-முறைமை அடிப்படையிலான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 26ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்றது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் கலாநிதி சோபித ராஜகருணா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது. 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்புக்கமைய, அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய 3 மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்கத் தவறியமைக்காக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு குறித்த வழக்கினூடாக இந்த டிஜிட்டல் முறைமை பரிசீலிக்கப்பட்டது. திறந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கமான காகிதக் கோப்புகளுக்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் கோப்புகளை நீதியரசர்கள் கணினி மூலம் பரிசீலித்தனர். பிரதிவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற பதிவாளர் மனோதி ஹேவாவசம் தெளிவுபடுத்தியதுடன், அதன் மீது டிஜிட்டல் கையொப்பமிட்டு மின்-முறைமையில் பதிவேற்றியதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினர் அக்குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2026 மே 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் "E-court" திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உயர் நீதிமன்றத்தாலேயே இந்தச் செயலி முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். இந்த E-filing முறைமை மூலம் வினைத்திறனான மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் சாத்தியமாவதுடன், காகிதங்களுக்காகச் செலவிடப்படும் பெருமளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2026 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் சட்டத்தரணிகள் மின்-முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnbb5ai4000d356p2oaomw8t
  4. 3 விக்கெட், 3 கேட்ச், 3 அதிரடி இன்னிங்ஸ்: ஆர்சிபியின் சாதனை வெற்றிக்கு காரணமான 3 விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது. பெங்களூரு சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த சீசனின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தற்காலிக கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் 200+ இலக்கை ஒரு அணி செய்த அதிவிரைவான சேஸ் இதுதான். இந்தப் போட்டியில் ஆர்சிபி பௌலர் ஜேக்கப் டஃபியின் பவர்பிளே ஸ்பெல், ஃபில் சால்ட்டின் சிறப்பான ஃபீல்டிங் மற்றும் அந்த அணி பேட்டர்களின் அதிரடி பேட்டிங் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக விளங்கின. டஃபி 3 விக்கெட் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுவதற்குத் தயாராக இருந்தார் டஃபி. அப்போது வர்ணனையில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டஃபி பற்றி "டி20 உலகக் கோப்பையில் டஃபியைப் போன்ற எண்கள் கொண்டிருந்தால், மறுபடியும் இங்கு வந்து பந்துவீசுவது எளிதாக இருக்காது. அவர் இங்கு தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் யாருக்கு எதிராகப் பந்துவீசப் போகிறார் என்று பாருங்கள்… இது அவருக்கு மிகமிகக் கடினமாக இருக்கப்போகிறது." என்று கூறினார்: பட மூலாதாரம்,Getty Images பீட்டர்சன் அப்படிச் சொன்னதுக்குக் காரணம் இருந்தது... சுமார் 20 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஜேக்கப் டஃபிக்கும் நியூசிலாந்தின் பிற பௌலர்களுக்கும் எதிர்பார்த்துபோல் செல்லவில்லை. அன்று ஆமதாபாத்தில் 3 ஓவர்கள் பந்துவீசி 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார் டஃபி. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் டஃபியின் பந்துவீச்சை பதம்பார்த்தார்கள். அந்த செயல்பாட்டுக்குப் பின் ஜேக்கப் டஃபி விளையாடிய போட்டி இது. மறுபடியும் இந்தியாவில்… மறுபடியும் அபிஷேக்கிற்கு எதிராக. ஆனால், இவை மட்டுமே அவர் மீதான நெருக்கடியாக இருக்கவில்லை. சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியில் டஃபி அறிமுகம் ஆனதற்கான காரணம், ஜாஷ் ஹேசில்வுட் முழு உடல் தகுதியோடு இல்லாதது. 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி கோப்பை வென்றதற்கான மிகமுக்கியக் காரணமாக விளங்கியவர் ஹேசில்வுட். அந்த சீசனில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியின் டாப் விக்கெட் டேக்கராக விளங்கினார். அப்படியொரு தாக்கம் ஏற்படுத்திய வீரரின் இடத்தில் விளையாடியதால், ஹேசில்வுட் கொடுத்தது போன்ற செயல்பாடு எதிர்பார்க்கப்படும் என்ற நெருக்கடியும் டஃபி மீது இருந்தது. ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அனைவருமே பீட்டர்சன் சொன்னது போலத்தான் நினைத்திருந்தார்கள். ஆனால், அப்படியொரு நிலையில் தான் டஃபியிடமிருந்து பெங்களூருவில் 'ஆட்ட நாயகன்' செயல்பாடு வந்தது. பவுன்ஸ் அதிகமாக இருந்த அந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டிகளில் வீசுவதைப்போல் ஷார்ட் மற்றும் குட் லென்த்களுக்கு இடைப்பட்ட லென்த்திலேயே அதிகம் பந்துவீசினார் டஃபி. அவருடைய உயரத்தின் காரணமாக அவரது பந்துகள் கூடுதல் பவுன்சாக காரணமாக அமைந்தன. அதனால் அவர் பந்துவீச்சில் அடித்து ஆடுவது பேட்டர்களுக்குக் கடினமாக இருந்தது. பட மூலாதாரம்,Getty Images முதல் ஓவரிலேயே அபிஷேக்குக்கு எதிராக ஒரு வாய்ப்பை உருவாக்கியிருந்தார் டஃபி. ஆட்டத்தின் மூன்றாவது பந்தில், பந்து பேட்டை விட்டு சற்று தள்ளிச் சென்றதால் அவுட் ஆகாமல் தப்பித்தார் அபிஷேக் ஷர்மா. ஆனால், டஃபி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இம்முறை டஃபி வீசிய ஷார்ட் பாலை அவர் பலமாக அடிக்க நினைக்க, பந்து டாப் எட்ஜாகி கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா கைகளில் விழுந்தது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டஃபிக்கு எதிராக 9 பந்துகளை சந்தித்த அபிஷேக் அதில் 29 ரன்கள் விளாசினார். அந்த அளவுக்கு டஃபிக்கு எதிராக அதிரடி காட்டினார் இந்திய ஓப்பனர் அபிஷேக். ஆனால், இந்த ஐபிஎல் போட்டியில் அபிஷேக்குக்கு எதிராக 5 பந்துகள் வீசி, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அவர் விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார் டஃபி. அதே ஓவரின் கடைசிப் பந்தில் அவர் டிராவிஸ் ஹெட் விக்கெட்டையும் வீழ்த்தினார். 'பேக் ஆஃப் லென்த்' பந்தை ஹெட் தூக்கி அடிக்க, டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் இருந்த ஃபில் சால்ட் அதை கேட்ச் பிடித்தார். டஃபி வீசிய மூன்றாவது ஓவரில், இன்னொரு ஷார்ட் லென்த் பாலுக்கு இன்னொரு விக்கெட் கிடைத்தது - அவருடைய மூன்றாவது விக்கெட். மணிக்கு சுமார் 134 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்தில் நித்திஷ் குமார் பெரிய ஷாட் அடிக்க முயற்சிக்க பந்து டாப் எட்ஜாகி மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த அபிநந்தன் சிங் கைகளில் தஞ்சமடைந்தது. தொடர்ந்து கடினமான அந்த டெஸ்ட் போட்டி லென்த்களில் வீசி பேட்டர்களுக்குக் கடுமையான சவால் கொடுத்தார் டஃபி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரிடமிருந்து எதிர்பார்த்தது இதைத்தான்: ஹேசில்வுட் செய்யும் அதே வேலை. பட மூலாதாரம்,Getty Images சில தினங்களுக்கு முன்பு, மினி ஏலத்துக்கு தாங்கள் தயாரானது பற்றிய வீடியோக்களை ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியிட்டது. அதில் ஜேக்கப் டஃபியை வாங்கும் முடிவுக்கு வந்த விவாதங்கள் பற்றியும் பார்க்க முடிந்தது. அதில், ஹேசில்வுட்டுக்கு மாற்றாக அவர்கள் வாங்க நினைத்த முதல் வீரர் ஜேக்கப் டஃபி. ஹேசில்வுட் போல் உயரமான வீரர் என்பதால், அவரைப் போலவே உயரத்திலிருந்து பந்தை ரிலீஸ் செய்வார் என்பதாலும், சமீபமாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பதாலும், அவரையே முதல் இலக்காக வைத்திருந்தார்கள். அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கும் வாங்கினார்கள். அறிமுக போட்டியில், ஹேசில்வுட் போன்ற தாக்கத்தையே டஃபி ஏற்படுத்திவிட்டார். டஃபியின் செயல்பாடு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் வேகப்பந்துவீச்சாளருமான யோமஹேஷ், "ஹேசில்வுட் இந்தப் போட்டியை ஆடியிருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதையே டஃபி செய்தார். ஆனால், இது எளிதான விஷயம் இல்லை. ஆர்சிபி போன்ற ஒரு நடப்பு சாம்பியன் அணிக்கு வந்து, ஹேசில்வுட் போன்ற ஒரு உலகத்தர வீரரின் இடத்தை நிரப்பும்போது பெரும் நெருக்கடி ஏற்படும். அதை சமாளித்து டஃபி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்" என்றார். மேலும் பேசிய அவர், "அவர் தெளிவான ஒரு திட்டத்தோடு வந்திருந்தார். சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் பந்துவீசும்போது பவுன்ஸ் சற்று கூடுதலாகக் கிடைக்கும். சீம் மூவ்மென்ட் இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். மேலும், அபிஷேக் & ஹெட் இருவருக்கும் எதிராக அவர் ஒரேயொரு தவறான பந்தை மட்டுமே வீசினார். மற்றபடி பேட் (pad) லைனில் வீசி அவர்களுக்கு சவால் கொடுத்தார். ஒரு சரியான திட்டத்தைத் தீட்டி அதை சரியாக அரங்கேற்றவும் செய்தார்" என்றும் யோமஹேஷ் கூறினார். சால்ட் பிடித்த 3 கேட்ச்கள் பட மூலாதாரம்,Getty Images ஒரு விக்கெட் கீப்பர் ஃபீல்டிங்கில் ஜொலிப்பது அதிகம் பார்த்திட முடியாத விஷயம். அரிதாகவே நடப்பது. கீப்பிங் கடினம் என்றாலும், அதற்கென்று ஒரு எல்லை இருக்கிறது. கிளவுஸ் போட்டுக்கொண்டு, அதிகம் நகராமல் களத்தில் செயல்படும் கீப்பர்கள், அந்த கிளவுஸ் இல்லாமல் மைதானத்தின் முழு பரப்பிலும் செயல்படுவது முற்றிலும் வேறுபட்டது. ஆனால், விக்கெட் கீப்பர் ஃபில் சால்ட் ஃபீல்டிங் செய்வது கடினமே இல்லாத ஒரு விஷயம் என்பதைப் போல் காட்டியிருக்கிறார். சன்ரைசர்ஸுக்கு எதிராக அவர் பிடித்த 3 கேட்ச்கள் ஆட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. டிராவிஸ் ஹெட் அடித்த பந்து அவர் இடுப்பு உயரத்துக்கு வந்தது. விரைந்து வந்த பந்தின் வேகத்தை சரியாகக் கணித்து, தன் உயரத்தைக் குறைத்து 'ரிவர்ஸ் கப்' முறையில் சிறப்பாக அந்தப் பந்தைப் பிடித்தார் அவர். கிளாசன் கேட்சை சால்ட் பிடித்தது விவாதத்துக்கு உட்படக்கூடியதுதான். சிலர் அவர் பவுண்டரி எல்லையைத் தொடவில்லை என்றும், சிலர் அவர் தொட்டுவிட்டார் என்றும் கருதுகிறார்கள். அது எப்படியாக இருந்தாலும், சால்ட் அதைப் பிடித்த விதம் அசாத்தியமானது. அவர் முதலில் நின்றிருந்த இடத்துக்கும் பவுண்டரி எல்லைக்கும் பெரிய இடைவெளி இல்லை. அப்படியொரு நிலையில் அவர் பின்னால் தன் உடல் பாரத்தைத் தள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது அவரையும் பின்னுக்குத் தள்ளியது. பவுண்டரி எல்லையுடனான இடைவெளி குறைவாக இருக்கும்போது அதைத் தாண்டாமல் இருப்பது சாத்தியமில்லை. ஆனால், பின்னால் அப்படியே கரணம் அடித்து எல்லையைத் தாண்டாமல் மைதானத்துக்குள்ளேயே இருந்தார் சால்ட். பட மூலாதாரம்,Getty Images அவர் பிடித்த மூன்றாவது கேட்ச் அதையெல்லாம் விடக் கடினமானது. இஷான் கிஷன் அடித்த பந்தை டீப் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் நின்றிருந்த அவர் வலது புறம் ஓடி ஒற்றைக் கையை நீட்டி டைவ் அடித்துப் பிடித்தார் அவர். யாருமே அப்படியொரு கேட்ச் பிடிக்கப்படும் என்று நினைத்திருக்கவில்லை. ரசிகர்கள் மட்டுமல்லாதும் ஆர்சிபி வீரர்களுமே கூட அதை ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனுமே பார்த்தார்கள். ஹெட், கிளாசன், கிஷன் என மூன்றுமே மிகப் பெரிய விக்கெட்டுகள். அதிலும் கிளாசன் மற்றும் கிஷன் இருவரும் நன்கு ஆடிக்கொண்டிருந்த வீரர்கள். அந்தத் தருணங்களில் அப்படியான கடினமான கேட்ச்கள் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் சன்ரைசர்ஸின் ஸ்கோர் இன்னும் உயர்ந்திருக்கும். அதிரடியான 3 இன்னிங்ஸ்கள் 202 ரன்களை சேஸ் செய்த ஆர்சிபி அதை 15.4 ஓவர்களிலேயே எட்டி ஐபிஎல் சாதனை படைத்திருக்கிறது. அந்த அணியின் ரன்ரேட்டும் பெருமளவு (+ 2.907) அதிகமாகியிருக்கிறது. இந்தப் பெரும் வெற்றிக் காரணம் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் மற்றும் ரஜத் பட்டிதார் ஆடிய அதிரடி ஆட்டம். மூன்றாவது வீரராகக் களமிறங்கிய படிக்கல் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துத்தான் இன்னிங்ஸைத் தொடங்கினார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த அவர் டேவிட் பெய்ன், ஹர்ஷல் பட்டேல், நித்திஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட் என அனைவரின் பந்துவீச்சையும் அடித்து ஆடினார். அவருடைய 'டைமிங்' மிகச் சிறப்பாக இருந்தது. 21 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் ஒருவகையில் படிக்கலை விடவும் வேகமாக ஆடினார். அவர் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வழக்கமாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அதீத அதிரடி காட்டும் பட்டிதார், இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதே மாதிரியான அதிரடியைக் காட்டினார். அவர் அடித்த 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே ஸ்பின்னுக்கு எதிராக வந்தது. பட மூலாதாரம்,Getty Images படிக்கல் 234.61 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிச் சென்றிருக்க, பட்டிதாரோ 258.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருந்தார். அவர் அவுட்டானபோதே தேவைப்படும் ரன்ரேட் 6 ரன்களுக்கும் குறைவாகிவிட்டிருந்தது. கடைசி கட்டத்தில் விராட் கோலியுமே அதே அதிரடியைக் கையில் எடுத்து வழக்கம்போல் போட்டியை ஆர்சிபி-க்கு முடித்துக் கொடுத்தார். ஆரம்ப கட்டத்தில் சற்று நிதானமாக விளையாடியவர் மெல்ல ரன் ஸ்கோரிங் ரேட்டைக் கூட்டி ஐபிஎல் அரங்கில் தன்னுடைய 64வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த 3 அதிரடி இன்னிங்ஸ்கள் ஆர்சிபி அணி இந்த அதிரடி சேஸை அரங்கேற்றி சிறந்த ரன்ரேட்டும் பெற உதவியது. தங்கள் அணியின் அதிரடி பேட்டிங் பற்றிப் பேசிய கேப்டன் பட்டிதார், "சரியான திட்டமிடல் என்று எதுவும் இல்லை. ஆடுகளத்தை கணித்தோம், அது நன்றாக இருந்தது, அதற்கேற்ப ஆடினோம். படிக்கல் மற்றும் கோலியின் இன்னிங்ஸ் தான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது." என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c145jvz16ndo
  5. அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம் Mar 29, 2026 - 11:30 AM அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இது முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. ஈரானுடனான போர், கூட்டாட்சி குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கொள்கைகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது போராட்டக்காரர்கள், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தி, அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறும் கைது செய்யுமாறும் கோஷங்களை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmnbcna85000f356puzf7zq5a
  6. ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயார் Mar 29, 2026 - 08:02 AM ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக 'வொஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது பல வாரங்களாக நீடிக்கக்கூடிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக அமையுமென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான போர்த் திட்டங்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்தினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது அனுமதியை வழங்குவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, சுமார் 4,000 மெரைன் படைவீரர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், அமெரிக்காவின் 82ஆவது வான்வழிப் படையின் பாரசூட் படைவீரர்களும் இந்த இராணுவ நடவடிக்கைக்குத் தயாராக உள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnb4kgfl0007356pb4v79e4v
  7. Today
  8. மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது. ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28) கைது செய்யப்பட்டதாக ஹட்டன் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மோதலே இதற்குக் காரணமாகும். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்த மோதலில் அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இருப்பினும், இச்சம்பவம் பாடசாலையிலேயே சமரசம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான தாக்குதல் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாயார் நேற்று (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அம்முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். காயமடைந்த மாணவன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் இன்று (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அதன் பின்னர் நீதவான் ஊடாக அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1470306
  9. கனிய வளங்களை கொண்டு செல்லும் வாகனங்களை GPSஊடாக கண்காணிக்க நடவடிக்கை. வடக்கில் கனிய வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தடயறி ((GPS)) ஊடாக கண்காணிக்கும் பொறிமுறையை விரைவில் அமுல் படுத்தவுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் , மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கபிலன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் சட்டரீதியற்ற முறையில் வள சுரண்டல்கள் இடம்பெற்று வருகிறது. அதனால் பல உயிர்கள் கூட காவு வாங்கப்பட்டுள்ளது. கனிய வள கடத்தல்களால் பல விபத்துக்கள் கூட சம்பவித்துள்ளன. இவ்வாறான உயிர்களை காவு வாங்கும் செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. கனிய வள திருட்டுக்கள் , சுரண்டல்களை கட்டுப்படுத்த முடியும். சட்டவிரோதமாக கனிய வளங்களை கொண்டு செல்வோர் தொடர்பில் மக்கள் அறிந்து அறிவிக்க முடியும் மக்களின் பங்களிப்பு தான் இந்த விடயத்தில் மிக முக்கியம். எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் எண்ணிய நடைமுறைகள் ஊடாகவே கனிய வள விநியோகம் ஒழுங்குபடுத்தப்படும். அதனூடாக சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1470309
  10. மணல் மாஃபியாக்களுக்கு எச்சரிக்கை. வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். வட மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: ‘மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 6 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரைக் கூட அவர்கள் பறித்துள்ளனர். இது ‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த’ கதையாக, பொலிஸாரின் உயிரையே பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மணல் விநியோகத்தை முறைப்படுத்தி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதன் ஊடாக, ஒரு கியூப் மணலை 7, 500 ரூபாவுக்கு வழங்க முடியும். அதன்படி ஒரு டிப்பர் மணலை 23, 000 ரூபாவுக்குப் பெறலாம். யாழ்ப்பாணத்திற்கு அதனைக் கொண்டு வருவதற்கான போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய செலவுகளைக் கணித்தால், சுமார் 55, 000 முதல் 65, 000 ரூபாவுக்குள் மணலை விநியோகிக்க முடியும். ஆனால் சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மாஃபியாக்கள், ஒரு டிப்பர் மணலை ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வரை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். இவ்வாறான மாஃபியாக்களின் பின்னால் அரசியல்வாதிகளும் பொலிஸாரும் இருப்பதை நாம் அறிவோம். எமது அரசாங்கத்திடம் இத்தகைய விளையாட்டுகள் செல்லுபடியாகாது. அத்துடன், பொலிஸாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிப்பதாக இருக்கக் கூடாது; அது மாஃபியாக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாக அமைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2026/1470297
  11. நான் பார்க்கும் போட்டி முடிவடைந்தால், மசகு எண்ணெய்தட்டுப்பாடே நீங்கி விடும் போலுள்ளது.
  12. இவரின் வாயால் ஒருநாள் மாட்டுவார் என எதிர்பார்த்திருந்தேன். ஒரு வைத்தியராகவும் சரியாக பணியாற்ற முடியவில்லை, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களுக்காக செயற்பட முடியவில்லை, மொத்தத்தில் ஒரு பண்பாளனாக பேசவும் தெரியவில்லை. அவர் மக்களுக்காக பாராளுமன்றம் போகவில்லை, வைத்தியர் சத்தியமூர்த்தியை பாழிவாங்கப்போய் தன்னை தாழ்த்திக்கொள்கிறார். எத்தனை தடவை போலீஸ் நிலையம் அழைக்கப்பட்டிருக்கிறார், நீதிமன்றம் சென்றிருக்கிறார்? அத்தனையும் அவரது பிழையான தனி நடத்தைக்காகவே. இவர் அடுத்த சிலோன் ட்ரம்ப். ஒருநாளைக்கு நாமலை புகழ்ந்து அடுத்த ஜனாதிபதி என்பார், இன்னொருநாள் சஜித்துக்கு பின்னால் ஓடுவார், சுயமாக தன் இருப்பை தக்க வைக்க முடியாத கோமாளி, இவருக்கு வாக்கு போட்ட மக்கள் வெட்க்கித் தலை குனிய வேண்டும். இதில, நடிகர் விஜய்க்கு வக்காலத்து வேறு.
  13. சினிமாவுக்கு கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல்
  14. “நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது
  15. ஓரிடம் உன்னிடம் ( அந்த கால கிளுகிளுப்பு பாடல்) படம் : வீட்டுக்கு வந்த மருமகள் (1973) இசை: சங்கர் கணேஷ் பாடியோர்: TMS & வாணி ஜெயராம் வரிகள்: கண்ணதாசன்
  16. உங்களில் யாரெல்லாம் பரீட்சை அட்டையில் சிரிக்கர் ஒட்டினவை ரெல் மீ?
  17. இந்தத் தாக்குதலில்… பல அமெரிக்க போர் விமானங்களும் சேதமடைந்ததாக சில செய்திகள் வருகின்றன. அது என்ன…. ஈரான் தாக்கினால் 10 அமெரிக்க படையினர் காயம், மூன்று இஸ்ரேலியருக்கு மூக்கால் இரத்தம் வடிந்தது என்று செய்திகளை போடுகின்றார்கள். 😂 ஒரு வேளை இவர்கள்…‘‘சாகாத வரம்‘‘ பெற்றவர்களோ… 🤣
  18. பல்முனை தாக்குதல், எந்தப் பெரிய பலசாலியையும் நிலை குலைய செய்யச் கூடிய நிலையை உருவாக்கலாம். அத்துடன்… உறுதிப் படுத்தப் படாத தகவல் ஒன்றின்படி, இஸ்ரேலின் “அயன் டோம்” ஈரானின் ஏவுகணைகளுக்கு முன்பு போல் அல்லாமல் மிகக் குறைந்த அளவிலான எதிர் நடவடிக்கைகளை செய்வதாக கூறுகின்றார்கள். இது… அதன் ஆயுதங்களின் பற்றாக் குறையாக இருக்கலாம் என கூறுகின்றார்கள். உண்மைத் தன்மை தெரியவில்லை.
  19. இவர்களினால் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.