Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. கிருபனுக்கு வேணும். நான் முன்னமே கதைக்களத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஜெயமோகனால் வந்த வினை.
  3. திமுக வை திருமா எங்கும் போகமாட்டார். திருமா முரண்டுக பிடித்தால் திமுக விசிகவை உடைக்கும்.குறைந்த தொகுதிகளைப் பெற்றால் புதியவர்களுக்கு வாய்ப்புக்கிடைக்காது அதிருப்தி அடைவார்கள்.பழையவர்களை மாற்றி புதியவர்களுக்கு இடம் கொடுத்தாலும் பழையவர்கள் திமுகவில் ஐக்கியமாகி விடுவார்கள்.டைசிவரை தீமுகவுக்கு கொத்தடிமையாக இருந்து 6சீற்றைப் பெற்றுக்கொண்டு இருக்க வேுண்டியதுதான். உண்மையில் திமுககூட்டணியில் திமுகவுக்கு அடுத்தபடியாக வாக்கு சதவீதம் உள்ள கட்சி விசிகதான். காங்கிரசுக்கு கூட சிசிகவை விட வாக்குச்சதவீதம் குறைவுதான்.கட4;த தேர்தலில் 0.4வீதம் எடுத்த தேதிமுகவுக்கு 1 ராஜ்யசபா +10 தொகுதிகள்வரை பகாடுக்கத்தயராக இருக்கும் திமுக சிசிக கம்னியூஸ்ட்டுகளை இடைக்கையால் டீல் பண்ணுகிறது. தெலுங்கர்களுக்கு கொடுக்கும்மரியாதையை தமிழர்களுக்கு கொடுக்கவில்லை.தவாக வேல்முருகன் .திருமா போன்றவர்களை விரும்பினால் இருங்கள் இல்லாவிட்டால் வெளியேறுங்கள் என்ற மாதிரி டீல்பண்ணுகிறார்கள். கமலுக்கும் அதே நிலை. ஏனென்றால் அவர்கள் பாஜக கூட்டணிக்குப் போகமாட்டார்கள் டஎன்று தெரியும். ஆனால் தேதிமுக நேற்றுவரை பாஜககூட்டணியில் இருந்து விட்டு ஒரு எம்பி பதவிக்கும் பணத்திற்குமாக திமுகவிடம் வந்துள்ளார்கள்.
  4. காரணம் தெரியாதபடியால்தான் “படையெடுக்க என்ன காரணம்?” என்று உங்களைக் கேட்கிறார். அதுக்கு நீங்கள், “சொல்லுங்கள் கேட்போம்”என்பது நியாயமாகுமா?
  5. ஏற்கனவே ரஷ்யாதான் அமெரிக்காவின் தளங்களை ஈரானுக்குக் காட்டிக் கொடுக்கிறது என்று ரம்பின் காதுக்குள் கூறப்பட்டதாகப் பேசப்பட்டது. ஆனால் இவர்தான் கேளாத மாதிரி இருந்தவர்.
  6. பைடன் எந்த நாட்டின் மீது போர் தொடுத்தார் ? ட்றம்புக்கு முன்பு இரண்டாவது ஆட்சிக்காலத்தில் ஒபாமா எந்த நாட்டின்மீது போர் தொடுத்தார் ? அதற்குமுன் முதலாவது ஆட்சிக் காலத்தில் ஒபாமா எந்த நாட்டின் மீது போர் தொடுத்தார் ? ட்றம்பு முதலாவது ஆட்சிக் காலத்தில் உக்ரெய்னுக்கு ஆயுதம் கொடுத்தார். சிரியா மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடத்தினார். காசிம் சுலைமானியைக் கொலை செய்தார். பைடன் உக்ரெய்னுக்கு ஆயுதம் கொடுத்தார். ஒபாமா லிபியாவில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் நடத்தினார்.
  7. எதிரிகளை தவிர அனைவருக்கும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு ; புதிய தடைகளை விதித்துள்ளது ஈரான் Published By: Vishnu 22 Mar, 2026 | 07:00 PM ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சில கப்பல்களிடமிருந்து ஈரான் 2 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிப்பதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டி தெரிவித்துள்ளார். ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஹோர்முஸ் ஜலசந்திக்கு ஒரு "புதிய ஆட்சி முறை" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். "போருக்கு ஒரு விலை உண்டு" என்பதை வலியுறுத்திய அந்த நாடாளுமன்ற உறுப்பினர், இந்த நடவடிக்கை ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வலிமையையும் இறையாண்மையையும் உலகிற்கு வெளிப்படுத்தும் என்றும் கூறினார். தற்போதைய போர்ச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களைக் கடுமையாகச் சோதித்து வருகிறது. மேலும், இஸ்ரேல் அல்லது அமெரிக்காவுடன் எந்தத் தொடர்பும் இல்லை என உறுதிசெய்யப்பட்ட கப்பல்கள் மட்டுமே பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. https://www.virakesari.lk/article/241678
  8. இதுவரைக்கும் எல்லாம் நல்ல படிதான் போய்கொண்டிருந்தது… செத்த கிளி வாய தொறந்துட்டுது.. இனித்தான் இருக்கு ஈரானுக்கு ஏழரை இவ்வண், மதுரோ, அசாத், சதாம், கடாபி உண்மையில் ஈரானின் உற்ற நண்பனாக நிற்பது சீனா. தருணம் பார்த்து எண்ணை விற்கும் செத்த கிளி பச்சை கள்ளன். செத்த கிளி எண்ணை விற்க மறுத்தால் தம்பர் மீதான நெருக்கடி இன்னும் கூடும்.
  9. Today
  10. சசி, ராம்தாஸ், வேல்முருகன் - தவெக பக்கம் போவார்களோ? மிச்ச சொச்சமும், சொச்ச மிச்சமும்😂
  11. ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு 20 இலட்சம் அமெரிக்க டொலர் அறவிடப்படும் - ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் Published By: Digital Desk 3 22 Mar, 2026 | 05:23 PM மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான கடல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை கடக்கும் சில கப்பல்களுக்கு ஈரான் 20 இலட்சம் அமெரிக்க டொலர்களை கட்டணமாக அறவிட தீர்மானித்துள்ளதாக ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அலாவுதீன் புருஜெர்தி தெரிவித்துள்ளார். ஈரான் அரச தொலைக்காட்சியில் இன்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹோர்முஸ் நீரிணையில் தற்போது ஒரு "புதிய நிர்வாக முறை" அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த புருஜெர்தி, "போர் என்றால் அதற்கு ஒரு செலவு உண்டு. எனவே, இங்கிருந்து செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பது ஈரானின் அதிகாரம் மற்றும் உரிமையைக் காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241669
  12. யாழ்நகரில் சண். சுந்தரம் அவர்களின் முயற்சியால் ஓட்டப் பயிற்சிக் குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஓடுவதையும் உடல்நலத்தையும் விரும்பும் அனைவருகாகவும் உருவாக்கப்பட்ட இக் குழுமத்துடன் இணைந்து பயன்பெற விரும்புபவர்கள் தாராளமாகப் பங்குகொள்ளலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6:00 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் சந்தித்து ஒன்றாக ஓடலாம். நீங்கள் என்றுமே ஓடாத புதியவராக இருந்தாலும் தொடர்ந்து ஓடுபவராக இருந்தாலும் இக் குழுவில் சேரலாம். சண். சுந்தரம் அவர்களைப்பற்றிச் சுருக்கமாகக் கூறுவதானால், யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் ஒரு சமூக ஆர்வலர், மனித உரிமை செயற்பாட்டாளர், ஓவியர், ... இரண்டு வாரங்களுக்கு முன் தனது 73 ஆவது வயதில் டோக்கியோவில் தனது ஆறாவது சர்வதேச மரதன் ஓட்டத்தை நிறைவு செய்தவர். வயதோ, உடல் பருமனோ அல்லது வேறு காரணிகளோ ஓட்டப் பயிற்சிக்குத் தடையில்லை. ஆகவே விரும்புபவர்கள் ஒவ்வொரு ஞாயிறும் காலை 6 மணிக்குத் துரையப்பா விளையாட்டரங்கிற்குச் சென்று இக் குழுமத்தில் இணைந்து கொள்ளலாம். நன்றி.
  13. யாழ்.இரத்த வங்கிக்கு குருதி கொடை வழங்கிய 185 இராணுவத்தினர் 22 Mar, 2026 | 02:52 PM யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவிய இரத்தத்திற்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக யாழ். மாவட்ட இராணுவத்தினரால் இரத்த தானம் செய்யப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் டி.சில்வாவின் தலைமையில் , பலாலி இராணுவ வைத்தியசாலை வைத்தியர் பி.எல்.ஏ.ஏ. லெகாம்கேயின் ஒழுங்கமைப்பில் இராணுவத்தினர் இரத்த தானம் செய்தனர். இரத்த தானம் செய்வதற்காக 191 இராணுவத்தினர் பதிவு செய்த நிலையில் , 185 பேர் இரத்த தானம் வழங்கினர். https://www.virakesari.lk/article/241654
  14. திமுக கூட்டணியில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி - தேர்தலுக்கான திட்டம் என்ன? பட மூலாதாரம்,Velmurugan.T/Facebook கட்டுரை தகவல் சிவசங்கர், பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் 'அரசியல் செயல்பாடுகளிலும் அதிகாரிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது' என திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஆனால் 'கூட்டணியில் இருந்து போக வேண்டும் என முடிவு செய்த பின் காரணங்களை தேடி பிடித்து சொல்லியிருக்கிறார்' என திமுகவின் ஆர்.எஸ் பாரதி விளக்கமளித்துள்ளார். அதேநேரத்தில் "வேல்முருகன் அரசியல் எதார்த்தங்களை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்" என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டுவது என்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெற்று தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுகள் இறுதி வடிவத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் திமுகவுடன் 2019 ஆண்டு முதல் பயணித்து 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். "அதிகாரிகள் முதலமைச்சரை சுயமாக சிந்திக்க விடுவதில்லை" கூட்டணி விலகலுக்கு அவர் தெரிவித்த காரணங்கள் அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வேல்முருகன், "திமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் 5 இடங்கள் கேட்டோம் 1 தொகுதி தருவதாக சொன்னார்கள். இடங்கள் கூட பிரச்னை இல்லை எங்களின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினோம் ஆனால் அலட்சியமாக நடத்தப்பட்டோம்" என்று குற்றம் சாட்டினார். "கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளே கோரிக்கைகளின்றி கூட்டணியில் இணையும்போது நீங்கள் மட்டும் கோரிக்கைகள் வைப்பதா? என்ற தொனியில் எங்களை அணுகினார்கள்" என்றார் அவர். "அதிகாரிகள் செய்யும் தவறுகளை சட்டமன்றத்தில் எடுத்து சொல்வதால், திமுக கூட்டணியில் இருப்பது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, இதனால் தேர்தல் அரசியல் வரை அவர்களின் பங்கு நீடிக்கிறது, அவர்கள் முதலமைச்சரவை சுயமாக சிந்திக்க விடுவதில்லை" என்று அவர் கூறினார். "வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு முதல் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை என்பது வரை நான் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, அதனை நிறைவேற்ற விடாமல் அதிகாரிகள் தடுக்கிறார்கள்" என்றார் அவர். இதன் காரணமாக "திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன் " என்று அறிவித்தார் வேல்முருகன். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நிலைபாடு குறித்து தெரிவித்த அவர் "அனைத்து தரப்பு மக்களுக்காக தயாரிக்கப்பட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து ஒத்தக்கருத்துடைய அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து," அறிவிப்பதாகக் கூறினார். "திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை" காணொளிக் குறிப்பு,திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் - துரைமுருகன் கருத்து என்ன? " கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என முடிவு செய்த பிறகு காரணங்களை தேடி பிடித்து சொல்லியிருக்கிறார் வேல்முருகன்" என திமுகவின் அமைப்பு செயலாளரும் தொகுதி பங்கீட்டு குழு உறுப்பினருமான ஆர்.எஸ் பாரதி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், " 5 ஆண்டுகால தூக்கத்தில் இருந்து வேல்முருகன் இப்போதுதான் விழித்திருக்கிறார்" என்று தெரிவித்தார். "அவர் கூட்டணியில் இருந்து விலகியதால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை, ஏற்கனவே திமுக சின்னத்தில் போட்டியிட்டதால்தான் வெற்றி பெற்றார் அதுபோல திமுக வெற்றி பெறும்" என்றார் அவர். மேலும் பேசிய அவர், " கோரிக்கைகள் ஏற்கபடவில்லை அலட்சியமாக நடத்தப்பட்டதாக சொல்வது தவறு, ஆட்சி அமைந்த பிறகுதான் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியும்" என்று விளக்கமளித்தார். வேல்முருகனின் விலகல் குறித்து கருத்து தெரிவித்த அவர் "5 ஆண்டுகாலம் உடன் இருந்ததற்கு நன்றி, தற்போது கூட்டணியில் இருந்து விலகியதால் எங்கிருந்தாலும் வாழ்க" என்று தெரிவித்தார். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை மையமாக வைத்து 2021 தேர்தலில் வெற்றி பெற்ற வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து விலகியது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "தேர்தல் முடிந்த பிறகு வேல்முருகன் வருந்தக்கூடும்" என்று தெரிவித்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், " திமுக மெகா கூட்டணி அமைத்திருந்தாலும் நீண்ட நாட்களாக உடன் பயணித்த வேல்முருகனை திமுக அரவணைத்து செல்வதுதான் நல்லது" என்று கூறினார். "அதே சமயம் அதிகாரிகளின் பிடியில் ஆட்சி இருப்பதாக எதை வைத்து வேல்முருகன் சொல்கிறார் என தெரியவில்லை, அவ்வாறு இருந்தால் அது தவறுதான்" என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், " அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அறிவித்தற்கு பிறகு வட மாவட்டங்களில் அதிமுக செல்வாக்கு கூடியிருப்பதையும், வன்னியர் வாக்குகள் அல்லாத இடங்களில்தான் திமுக வெற்றி பெற்றுள்ளது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். ஆனால் இதனை மறுத்த ஆர். எஸ் பாரதி "வன்னியர் வாக்குகள் அதிகமுள்ள விக்கிரவாண்டி இடைதேர்தலில் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது," என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,Velmurugan.T/Facebook " வேல்முருகன் களத்தில் சிறப்பாக பணியாற்றக்கூடியவர், கடலூர் மாவட்டத்தில் அவர் மூலம் திமுகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கக்கூடும் " என்று ப்ரியன் கூறினார். "திமுக குறித்து வேல்முருகன் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நமக்கு தெரியாது ஆனால் அரசியலில் யதார்த்த நிலையை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்" என்றார் அவர். "வேல்முருகன் எம் எல் ஏவாக இருந்தால்தான் அவரை சந்திக்க வருபவர்களின் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் பேச முடியும் கட்சியையும் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர் இழக்கிறாரோ என்று தோன்றுகிறது" என்று அவர் தெரிவித்தார். "பாஜக இருப்பதால் அதிமுக கூட்டணிக்கு செல்ல விரும்பாத வேல்முருகன் விஜய், ராமதாஸ், சசிகலா ஆகியோருடன் கூட்டணி சேர்ந்தால் கடலூர் மாவட்டத்தில் திமுக அதிமுக என இரண்டு கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், அவர் யாருடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்தே இவை அமையும்" என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c15d3jz4vgxo
  15. ஒப்பிலாமணி 1991 ஆண்டளவிலேயே இயக்கத்தில் இணைந்து இருக்கலாம் என அறிந்தேன். இவர் விசேட வேவு அணியை சேர்ந்தவராம். தொண்டமானாறு, பலாலி, மயிலிட்டி, காங்கேசந்துறை, மாதகல் என கரையோரமாக காரைநகர் வரை மிகப்பெரும் பாரிய தாக்குதலை நடாத்த இயக்கம் திட்டமிட்டதாகவும் அந்த தாக்குதலுக்கான உள்ளக புலனாய்வு, வரைபட ங்கள் வரை அனைத்தையும் கையாளும் பெரிய பொறுப்பு நிலையில் ஒப்பிலாமணி செயற்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்த தாக்குதலை நடாத்தும் முன்பே ஒப்பிலாமணி ஆவணங்களை கொண்டு (வசாவிளான் பகுதியாக அமையலாம்) இராணுவத்திடம் தப்பி ஓடிவிட்டார். ஒப்பிலாமணி ஓடியதால் இயக்கத்தினால் மிக நீண்டகாலமாக திட்டமிட்ட மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போனதாம். தாக்குதல் நடாத்தப்பட்டால் தான் மரணம் அடையவேண்டி வரும் எனும் காரணமும் ஒப்பிலாமணி ஓடக்காரணமாக அமையலாம். ஒப்பிலாமணி இராணுவத்துடன் இணைந்தது சூரியகதிர் நடவடிக்கை மூலம் இராணுவம் யாழை கைப்பற்றுவதற்கு அனுகூலமாக அமைந்ததாம். அப்போது பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் பிரதான விசாரணையாளராக நியமனம் பெற்ற ஒப்பிலாமணி இலங்கை அரசாங்கம் மூலம் பின்னர் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. தன்னை இயக்கம் சிறுவர் போராளியாக பலாத்காரமாக இணைத்தது என்பது புருடா என்பதே நான் அறியக்கூடியது.
  16. அரபிக்கடலில் பிரித்தானியாவின் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தம்! 22 Mar, 2026 | 04:38 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் அரபிக்கடலை வந்தடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு பிரித்தானிய இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரித்தானியப் பிரதமர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இந்த நகர்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய அரச கடற்படைக்குச் சொந்தமான 'HMS ஆன்சன்' என்ற இந்த நீர்மூழ்கிக் கப்பல், கடந்த மார்ச் 06 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரிலிருந்து புறப்பட்டுள்ளது. இது தற்போது ஹோமுஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வடக்கு அரபிக்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. சுமார் 1,600 கிலோமீற்றர் தூரம் வரை பாய்ந்து செல்லக்கூடிய டொமாஹாக் ஏவுகணைகள் மற்றும் டொர்பிடோ ரக ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக அமெரிக்காவிற்குப் பிரித்தானியா தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ள பின்னணியில் இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/241666
  17. Chengdu Honpho Technology Co., Ltd.15km Detection Distance Electro Optic Drone System ISR Pa...【TS120B】High quality 15km Detection Distance Electro Optic Drone System ISR Payload UAV Zoom Camera from China, China's leading product market electro optic drone system ISR Payload product, with stri 15 கி.மி உணர்வெல்லை கொண்ட எலெக்ரோ ஒப்டிகல் இன்பிராரெட் பற்றிய செய்தி. இணையத்தில் தேடிய போது கிடைத்த செய்தி.
  18. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: 180 பேர் காயம் Published By: Digital Desk 3 22 Mar, 2026 | 03:53 PM (இணையத்தள செய்திப் பிரிவு) அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலின் முக்கிய அணுசக்தி நிலையம் அமைந்துள்ள டிமோனா மற்றும் அராட் நகரங்களை இலக்காகக் கொண்டு ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் சுமார் 180 பேர் காயமடைந்துள்ளனர். அராட் நகரில் 88 பேர் காயமடைந்ததுடன், அவர்களில் 10 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அதேவேளை, டிமோனாவில் 39 பேர் காயமடைந்துள்ளதுடன், 10 வயது சிறுவன் ஒருவன் பலத்த சிதறல் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேலுக்கு இது ஒரு கடினமான மாலை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெப்ரவரி 28 முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இந்த தாக்குதல்களில், 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 1500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலில், இதுவரை இஸ்ரேலுக்கு அறிமுகமில்லாத புதிய வகை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றை இடைமறிக்கத் தவறியதாகவும் இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241663
  19. கட்டாரில் ஹெலிகொப்டர் விபத்து: அறுவர் பலி - ஒருவர் மாயம்! Published By: Digital Desk 1 22 Mar, 2026 | 03:17 PM (இணையத்தள செய்திப் பிரிவு) கட்டாரின் கடல் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தொன்றில் சிக்கி ஆறுபேர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஹெலிகொப்டரில் ஏழு பேர் பயணித்துள்ளதாக கட்டார் உள்நாட்டு அமைச்சு தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் போது, உயிரிழந்த அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஹெலிகொப்டரில் பயணித்த மற்றைய நபரைத் தேடி விசேட குழுக்களினால் கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்து குறித்த விரிவான விசாரணைகளை அந்தநாட்டு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/241655
  20. தமிழ் மிரர் இலங்கை பேப்பர் அல்லவா? இதை எழுதியவர் பெயர் ஏன் போடப்படவில்லை? இந்த பத்திரிகைகக்கு தமிழ் நாட்டில் எத்தனை நிருபர்கள் உளர்? விகடனின் பாணியில், ஏலவே தமிழக பத்திரிகைகளில் வந்த செய்தியை கலந்து, கற்பனையாக எழுதபட்ட ஆக்கம் போல தெரிகிறது.
  21. போரில் ஈரானின் மஜித் ஏவுகணை அமெரிக்க F-35 விமானத்தைச் சேதப்படுத்தியது — மத்திய கிழக்கு போரில் மறைமுகப் போர் விமானங்களின் பாதிப்புத்தன்மை குறித்து வெப்பம் கண்டறியும் வான் பாதுகாப்பு ஏவுகணை உலகளாவிய கவலையை எழுப்பியுள்ளது. மார்ச் 2026 போர்களின் போது ஈரான் பயன்படுத்திய செயலற்ற அகச்சிவப்பு வான் பாதுகாப்பு அமைப்புகள், ஒரு அமெரிக்க F-35A விமானத்தைச் சேதப்படுத்தியிருக்கக்கூடும். இது, சர்ச்சைக்குரிய வான்வெளியில் உள்ள குறுகிய தூர நகரும் வான் பாதுகாப்பு ஏவுகணை வலையமைப்புகளுக்கு எதிராக, மறைந்து தாக்கும் அமைப்புகளின் தாக்குப்பிடிக்கும் திறன் குறித்த மூலோபாயக் கவலைகளை எழுப்பியுள்ளது. ஆங்கிலம்சர்வதேசசெய்திகள் நிர்வாகியால் மார்ச் 21, 2026 அன்று மஜித் வான் பாதுகாப்பு அமைப்பு பகிர் (டிஃபென்ஸ் செக்யூரிட்டி ஏசியா) — மார்ச் 2026-ல், தீவிர போர் நடவடிக்கைகளின் போது, அமெரிக்க விமானப்படையின் F-35A ஸ்டெல்த் போர் விமானம் ஒன்று ஈரானிய வான் பாதுகாப்புத் தாக்குதலால் சேதமடைந்த ஒரு சண்டைச் சம்பவம், தாழ்வான உயரத்தில் இருந்து தரை-வான் ஏவுகணை அச்சுறுத்தல்கள் மீதான உலகளாவிய ஆய்வைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், மஜித் வெப்பம் கண்டறியும் அமைப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது, சர்ச்சைக்குரிய வான்வெளியில் ஐந்தாம் தலைமுறை விமானப்படையின் செயல்பாட்டுத் திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய ஈரான் மீதான மோதலின் போது, தரை-வான் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளான விமானம், மத்திய கிழக்கில் உள்ள ஒரு அமெரிக்கத் தளத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. அதேவேளையில், அந்த விமானம் ஈரானியத் தாக்குதலால் தாக்கப்பட்டதாக நம்பப்படுவதாகவும், இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாகவும் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையால் வெளியிடப்பட்ட ஈரானியக் காணொளியில், ஒரு F-35 விமானம் எனத் தோன்றும் ஒன்றின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவது காட்டப்பட்டுள்ளது. இத்துடன், இந்தத் தாக்குதலுக்கு மஜித் என்ற குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்பே காரணம் எனப் பல ஆய்வாளர்களின் மதிப்பீடுகளும் இணைந்திருப்பதால், இது ஒரு மூலோபாய அவசரத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில், தரையிலிருந்து வான் நோக்கிச் சுடும் ஏவுகணையால் ஒரு F-35 விமானத்திற்கு ஏற்பட்ட முதல் அறியப்பட்ட போர்க்களச் சேதம் இதுவே ஆகும். மஜித் வான் பாதுகாப்பு அமைப்பு விமானம் முற்றிலுமாக அழிக்கப்படாமலும், விமானி பாதுகாப்பாக இருந்தபோதிலும், செயலற்ற அகச்சிவப்பு வழிகாட்டு அமைப்புகளுக்கு எதிராக மறைமுகத் தாக்குதல் விமானங்களின் தாக்குப்பிடிக்கும் திறன் குறித்த உலகளாவிய விவாதத்தை இந்த நிகழ்வு தூண்டியுள்ளது. மேலும், F-35 விமானத்தின் குறைந்த ரேடார் குறுக்குவெட்டுப் பரப்பு, குறுகிய தாக்குதல் தூரங்களில் வெப்பத்தைத் தேடும் ஏவுகணைகளால் ஏற்படும் பாதிப்பை முற்றிலுமாக நீக்கிவிடாது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த மோதலின் போது ஒரே ஒரு ஏவுகணை மட்டுமே ஏவப்பட்டதை அந்தக் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன. இதை, குறைந்த அளவிலான ஏவுகணை இருப்பு அல்லது முந்தைய வான் பாதுகாப்பு நடவடிக்கைக்கான சான்றாகச் சில பார்வையாளர்கள் கருதுகின்றனர். அதே சமயம், மஜித் அல்லது அதுபோன்ற செயலற்ற அகச்சிவப்பு அமைப்பு மீதான ஒருமித்த கருத்து உருவாவதற்கு முன்பு, ஈரானின் முந்தைய அறிக்கைகள் வெவ்வேறு ஏவுகணை வகைகளைக் குறிப்பிட்டதால், பயன்படுத்தப்பட்ட சரியான அமைப்பு குறித்து நிச்சயமற்ற தன்மை நீடிப்பதாக மற்றவர்களோ எச்சரிக்கின்றனர். படிக்கவும்: உறுதிசெய்யப்பட்டது: ஈரானின் வான்பரப்பில் பறந்த அமெரிக்க F-35 ரக விமானத்தை ஈரானிய வான் பாதுகாப்புப் படைகள் தாக்கின — இந்த மறைமுகத் தாக்குதல், மத்திய கிழக்கு போரில் வான்சக்தியின் அபாயத்தை உணர்த்துகிறது. மஜித் அமைப்பு மற்றும் ஸ்டெல்த் விமானங்களுக்கு செயலற்ற அகச்சிவப்பு அச்சுறுத்தல் அதிகாரப்பூர்வமாக AD-08 எனப் பெயரிடப்பட்டுள்ள மஜித் வான் பாதுகாப்பு அமைப்பானது, ஈரானால் உருவாக்கப்பட்ட ஒரு குறுகிய தூரம் மற்றும் குறைந்த உயரத்தில் இருந்து தரை-வான் ஏவுகணைத் தளமாகும். இது, ஒரு குறுகிய தாக்குதல் எல்லைக்குள் இயங்கும் தாழ்வாகப் பறக்கும் விமானங்கள், குரூஸ் ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா அமைப்புகளுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட புள்ளியைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகளுக்கான ஆதரவு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்புத் தொழில்கள் அமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்த அமைப்பு, ரேடார் அடிப்படையிலான கண்டறிதல் வலையமைப்புகளைச் சாராமல் தன்னிச்சையாக இயங்கக்கூடிய நகரும் வான் பாதுகாப்பு அடுக்குகளை வலுப்படுத்தும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, 2021-ல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த ஏவுகணையானது 156 மில்லிமீட்டர் விட்டம், 2,670 மில்லிமீட்டர் நீளம் மற்றும் சுமார் 75 கிலோகிராம் எடை கொண்டது. மேலும், இது ஒரு அருகாமை வெடிபொருளுடன் இணைக்கப்பட்ட செயலற்ற பிம்ப அகச்சிவப்பு வழிகாட்டுத் தேடுவானைக் கொண்டுள்ளது. இது, இலக்கு வைக்கப்பட்ட விமானங்களை எச்சரிக்கக்கூடிய ரேடார் சமிக்ஞைகளை வெளியிடாமல் தாக்குதலைத் தொடுக்க அனுமதிக்கிறது. இதன் தாக்குதல் வரம்பு, தூரத்தில் சுமார் 700 மீட்டர் முதல் 8 கிலோமீட்டர் வரையிலும், உயரத்தில் 20 மீட்டர் முதல் 6 கிலோமீட்டர் வரையிலும் உள்ளது. இந்த அளவுருக்கள் இதனை குறுகிய தூர வான் பாதுகாப்பு வகையின் கீழ் வைத்தாலும், தாழ் மட்டத் தாக்குதல் அல்லது ஊடுருவல் பணிகளின் போது விமானங்களுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கு இது மிகவும் பொருத்தமானதாக அமைகிறது. 15 கிலோமீட்டர் வரையிலான வரம்பைக் கொண்ட மின்-ஒளியியல் மற்றும் அகச்சிவப்பு உணர்விகள் மூலம் கண்டறிதல் மேற்கொள்ளப்படுகிறது, அதே நேரத்தில் காஷெஃப்-99 கட்ட-வரிசை அமைப்பு போன்ற வெளிப்புற ரேடாருடன் ஒருங்கிணைப்பது, கண்காணிக்கும் திறனை 12 முதல் 30 கிலோமீட்டர் வரை நீட்டித்து, பல இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கவும் அனுமதிக்கிறது. இந்த ஏவுகணை செலுத்தியானது, அரஸ்-2 எனப்படும் நகரும் 4×4 தந்திரோபாய வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இது சுமார் 200 குதிரைத்திறன், மணிக்கு சுமார் 100 கிலோமீட்டர் உச்ச வேகம் மற்றும் ஏறத்தாழ 500 கிலோமீட்டர் செயல்பாட்டு வரம்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு இலகுரக பயன்பாட்டு சேசிஸில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது விரைவான இடமாற்றத்திற்கும் பரவலான நிலைநிறுத்தத்திற்கும் வழிவகுக்கிறது. 360-டிகிரி கோணத்தில் சுழலும் ஒரு ஆயுத நிலையம், அதன் மையத்தில் மின்-ஒளி உணரிகளையும், ஒவ்வொன்றிலும் நான்கு ஏவுகணைக் கலன்களைக் கொண்ட இரண்டு பொதிகளையும் கொண்டுள்ளது. இது, ஒரே நேரத்தில் பல இலக்குகளை விரைவாகத் தாக்கும் திறனைத் தக்கவைத்துக் கொண்டே, சுடுவதற்குத் தயாரான எட்டு ஏவுகணைகள் வரை இந்த அமைப்பால் சுமந்து செல்ல அனுமதிக்கிறது. ஏவுகணையானது செயல்திறன் மிக்க ரேடார் ஒளியூட்டலுக்குப் பதிலாக செயலற்ற வழிகாட்டுதலைப் பயன்படுத்துவதால், விமான எச்சரிக்கை பெறுவான்களால் ஏவுதலைக் கண்டறிவது மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாகவே, பகை வான்வெளியில் இயங்கும் ஒரு மறைமுகத் தாக்குதல் விமானம், முன் மின்னணு எச்சரிக்கை இன்றி எவ்வாறு தாக்கப்பட முடிந்தது என்பதை ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பெரிய நிலையான ரேடார் அமைப்புகளைச் சார்ந்திருப்பதை விட, தப்பிப்பிழைப்பதற்கும் மறைந்திருப்பதற்கும் முன்னுரிமை அளிக்கும் ஒரு கோட்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த அமைப்பு அனைத்து வானிலை நிலைகளிலும் செயல்படவும், நவீன விமானங்கள் மற்றும் ட்ரோன்களுக்கு எதிராகத் தாழ்வான உயரத்தில் பாதுகாப்பு வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஈரானிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அமைப்பின் தன்மைகள், அதனை மார்ச் 2026 சம்பவத்துடன் தொடர்புபடுத்த ஆய்வாளர்களைத் தூண்டியுள்ளது. ஏனெனில், தாக்குதல் எல்லைக்குள் வந்தவுடன், குறுகிய தூர செயலற்ற அகச்சிவப்பு ஆயுதங்களைக் கண்டறிவதும் முறியடிப்பதும் மறைமுக விமானங்களுக்கு மிகவும் கடினமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அமெரிக்க விமானப்படையின் F-35 மார்ச் 2026 F-35 சம்பவம் மற்றும் செயல்பாட்டு தாக்கங்கள் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கி, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்து வந்த காலகட்டத்தில், மார்ச் 2026-ல் இந்த மோதல் நிகழ்ந்தது. இதனால், கூட்டணி விமானங்கள், பல்வேறு தொலைவுகளில் ஈரானின் அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட, அதிக போட்டி நிறைந்த வான்வெளியில் நிலைநிறுத்தப்பட்டன. மத்திய ஈரான் மீதான பணியின் போது, F-35A விமானம் குறுகிய தூர தரை-வான் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதைக் குறிக்கும் வான் பாதுகாப்புத் தாக்குதலை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு, அந்த விமானம் திசைமாறி அப்பகுதியில் உள்ள ஒரு அமெரிக்கத் தளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. இதனால், ஏற்பட்ட சேதம் பேரழிவை ஏற்படுத்தக்கூடியதாக இல்லை என்றாலும், செயல்பாட்டு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. விமானம் ஈரானியத் தாக்குதலால் தாக்கப்பட்டதாக நம்பப்படுவதை அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு ஒப்புக்கொண்டது, ஆனால் துல்லியமான தாக்குதல் முறையைக் குறிப்பிடவில்லை. மேலும், இந்தச் சம்பவம் விசாரணையில் இருப்பதாகவும், மேலதிக பகுப்பாய்வு மோதலின் தொழில்நுட்ப விவரங்களைத் தீர்மானிக்கும் என்றும் அது கூறியது. ஈரானிய ஊடகங்களும் ஐ.ஆர்.ஜி.சி-யும் வெளியிட்ட காணொளிக் காட்சிகளில், எஃப்-35 ரக விமானம் போல் தோற்றமளிக்கும் ஒன்றின் மீது ஏவுகணை ஏவுதல் ஒன்று தாக்குவது பதிவாகியிருந்தது. இக்காட்சியைத் தொடர்ந்து, பல ஆய்வாளர்கள் அந்த ஆயுதத்தை மஜித் அமைப்பு என அடையாளம் கண்டனர். இருப்பினும், அந்தக் காணொளியில் காணப்படும் ஏவுகணையானது, அறியப்பட்ட ஏடி-08 இடைமறிப்பு ஏவுகணையின் சரியான அளவோடு பொருந்துகிறதா என்பது குறித்து சில இணைய விவாதங்கள் கேள்வி எழுப்பின. முன்னதாக ஈரானிய அறிக்கைகள், சையத் போன்ற பிற வான் பாதுகாப்பு அமைப்புகளைக் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டதால், பயன்படுத்தப்பட்ட துல்லியமான ஆயுதம் குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு அது வழிவகுத்தது. ஆனால், பின்னர் பல பாதுகாப்பு பார்வையாளர்களின் அறிக்கைகள், இந்த மோதலில் மஜித் அல்லது அதுபோன்ற செயலற்ற அகச்சிவப்பு குறுகிய தூர ஏவுகணை ஈடுபட்டது என்ற முடிவை நோக்கி நகர்ந்தன. இது உறுதி செய்யப்பட்டால், தரை-வான் ஏவுகணையால் F-35 ரக விமானத்திற்கு ஏற்பட்ட போர்க்கால சேதத்தின் முதல் பதிவு செய்யப்பட்ட நிகழ்வாக இது அமையும். மேலும், மறைமுகத் தாக்குதல் விமானங்கள் குறைந்த உயரத்தில் அல்லது பாதுகாக்கப்பட்ட இலக்குகளுக்கு அருகில் இயங்க வேண்டிய பிராந்தியங்களில், செயல்பாட்டுத் திட்டமிடலுக்கு இந்த முன்னேற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மறைமுக வடிவமைப்பு ரேடார் கண்டறிதலைக் குறைத்தாலும், ஜெட் என்ஜின்களால் உருவாக்கப்படும் அகச்சிவப்புக் கதிர் சமிக்ஞைகளை அது முற்றிலுமாக நீக்குவதில்லை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் பொருள், ரேடார் வழிகாட்டும் அமைப்புகள் ஒடுக்கப்பட்டாலோ அல்லது தவிர்க்கப்பட்டாலோ கூட, குறுகிய தூர ஏவுகணை வரம்புகளுக்குள் இயங்கும் விமானங்கள் பாதிப்புக்குள்ளாகலாம் என்பதாகும். ரேடார் வழிகாட்டும் ஏவுகணைகளை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட மின்னணுப் போர் அமைப்புகள், மின்காந்த உமிழ்வுகளுக்குப் பதிலாக வெப்பத்தைக் கண்காணிப்பதை நம்பியிருக்கும் செயலற்ற அகச்சிவப்புக் கதிர் தேடுவான்களுக்கு எதிராகக் குறைந்த செயல்திறனையே கொண்டுள்ளன. இதனால், ஒரு ஏவுகணை ஏவப்பட்டவுடன் விமானிகளுக்குக் கிடைக்கும் எச்சரிக்கை நேரம் குறைகிறது. இந்த மோதலின் போது ஒரே ஒரு ஏவுகணை மட்டுமே ஏவப்பட்டதாகக் கூறப்படுவது, பல்வேறு விதங்களில் விளக்கப்படுகிறது; சிலர் கையிருப்பு குறைவாக இருந்திருக்கலாம் எனக் கூற, மற்றவர்களோ, ஏவுதளத்திற்குள் சிறிது நேரம் தென்பட்ட ஒரு இலக்கைக் குறிவைத்து, கிடைத்த குறுகிய வாய்ப்பின் போது ஏவுகணை ஏவப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூற்றைக் கருதுகின்றனர். விமானம் பாதுகாப்பாகத் திரும்பியதால், இந்த நிகழ்வு ஒரு இழப்பாகக் கருதப்படாமல், அடர்த்தியான மற்றும் மறைவான பாதுகாப்பு வலைப்பின்னல்களில் பயன்படுத்தப்படும்போது, குறுகிய தூர நகரும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மேம்பட்ட விமானங்களுக்கு இன்னமும் அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதற்கான ஒரு செயல்பாட்டு சமிக்ஞையாகப் பரிசீலிக்கப்படுகிறது. ஈரானின் அடுக்கு தாழ்வான வான் பாதுகாப்பு உத்தி மஜித் அமைப்பானது, நீண்ட தூர ரேடார்கள், நடுத்தர தூர ஏவுகணை அமைப்புகள் மற்றும் பெரிய உணரிகளில் பாதிப்பு ஏற்பட்டால் தன்னிச்சையாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட நகரும் குறுகிய தூர தளங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கும் ஈரானின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். "வேலாயத் 1400 வானத்தின் பாதுகாவலர்கள்" போன்ற ஈரானியப் பயிற்சிகள், ட்ரோன்கள் மற்றும் தாழ்வான உயர இலக்குகளுக்கு எதிராக இந்த அமைப்பின் பயன்பாட்டை நிரூபித்தன. இதன் மூலம், நீண்ட தூர அமைப்புகளின் தாக்குதல் வரம்பிற்குக் கீழே ஊடுருவும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காகவே இந்தத் தளம் முதன்மையாக உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. இந்த அமைப்பு, ஏப்ரல் 2021-ல் நடைபெற்ற ஒரு இராணுவ அணிவகுப்பின் போது பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், நிலையான தளங்கள் மற்றும் நகரும் படைப்பிரிவுகள் ஆகிய இரண்டிற்கும் ஆதரவளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட, ஈரானின் விரிவடைந்து வரும் குறுகிய தூர வான் பாதுகாப்பு ஆயுதக் களஞ்சியத்தின் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒரு அங்கமாக இது சேவையில் நுழைந்தது. பிற்காலப் பயிற்சிகளிலிருந்து கிடைத்த அறிக்கைகள், இந்த அமைப்பை மற்ற உணர்விகள் மற்றும் ஆயுதங்களுடன் சேர்த்துப் பயன்படுத்துவதன் மூலம், ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தும் தாக்குதல் மண்டலங்களை உருவாக்க முடியும் என்றும், இது எதிரி விமானங்கள் குறைந்தபட்சம் ஒரு ஏவுகணைப் பகுதிக்குள் நுழையாமல் பாதுகாக்கப்பட்ட இலக்குகளை அணுகும் முயற்சிகளைச் சிக்கலாக்கும் என்றும் குறிப்பிட்டன. குறைந்த உயரப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, ஈரான் கூடுதல் குறுகிய தூர மற்றும் மனிதனால் எடுத்துச் செல்லக்கூடிய வான் பாதுகாப்பு ஆயுதங்களிலும் முதலீடு செய்துள்ளது. இது, அதிக மதிப்புள்ள, ரேடாரைச் சார்ந்த குறைந்த எண்ணிக்கையிலான ஆயுதத் தொகுப்புகளை நம்புவதற்குப் பதிலாக, பரவலாக அமைந்துள்ள ஏராளமான ஏவுகணை ஏவுதளங்களைச் சார்ந்திருக்கும் ஒரு அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது. மறைமுக விமானங்கள் முன்கூட்டியே கண்டறியப்படாமல் இலக்குகளை அணுக முயற்சிக்கும் துல்லியத் தாக்குதல் பணிகளின்போது அடிக்கடி பயன்படுத்தப்படும் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், குரூஸ் ஏவுகணைகள் மற்றும் தாழ்வான உயரத்தில் இயங்கும் விமானங்கள் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு இத்தகைய அமைப்புகள் குறிப்பாகப் பொருத்தமானவை. இலகுரக தந்திரோபாய வாகனங்களில் பொருத்தப்பட்ட நகரும் ஏவுகணை செலுத்திகள், சுட்ட பிறகு விரைவாக இடமாற்றம் செய்ய அனுமதித்து, எதிர்த்தாக்குதலுக்கான பாதிப்பைக் குறைப்பதோடு, மலைப்பாங்கான அல்லது நகர்ப்புற நிலப்பரப்புகளில் உள்ள மறைவான அல்லது தற்காலிக நிலைகளில் இருந்து வான் பாதுகாப்புப் பிரிவுகள் செயல்படவும் உதவுகின்றன. செயலற்ற அகச்சிவப்பு வழிகாட்டுதல், இந்த அமைப்புகள் தொடர்ச்சியான ரேடார் உமிழ்வுகள் இல்லாமலேயே செயல்பட அனுமதிக்கிறது. இதனால், மின்னணு உளவு மூலம் அவற்றின் இருப்பிடத்தைக் கண்டறிவது கடினமாகிறது, மேலும் வழக்கமான கதிர்வீச்சு எதிர்ப்புத் தாக்குதல்கள் மூலம் அவற்றை அடக்குவதும் சிரமமாகிறது. மஜித் ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்கக்கூடியதாகவும், அனைத்து வானிலை நிலைகளிலும் செயல்படக்கூடியதாகவும் இருப்பதால், வான் பாதுகாப்பு வலையமைப்பின் மற்ற பகுதிகள் பலவீனமடைந்தாலோ அல்லது தாக்குதலுக்கு உள்ளானாலோ கூட இது திறம்படச் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அடுக்கு மற்றும் நகரும் தன்மையுள்ள அணுகுமுறையானது, உயர்தர இடைமறிப்பு விமானங்களை மட்டுமே சார்ந்திருப்பதை விடுத்து, ஒட்டுமொத்த அபாயத்தின் மூலம் வான்வெளியை மறுப்பதில் கவனம் செலுத்தும் ஒரு கோட்பாட்டைப் பிரதிபலிக்கிறது. இது, ரேடார் சமிக்ஞை எதுவும் கண்டறியப்படாதபோதும், குறுகிய தூர அச்சுறுத்தல்கள் இருக்கக்கூடும் என்று எதிரி விமானங்களைக் கருதுமாறு கட்டாயப்படுத்துகிறது. வெப்பம் தேடும் ஏவுகணைகளுக்கு எதிரான மறைமுக விமானங்களின் பாதிப்புத்தன்மை F-35 போன்ற மறைந்து தாக்கும் விமானங்கள் முதன்மையாக ரேடார் கண்டறிதலைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் என்ஜின்கள் கணிசமான வெப்ப அடையாளங்களை உருவாக்குகின்றன, குறிப்பாக அவை குறைந்த உயரத்தில் அல்லது அதிக சக்தி அமைப்புகளில் இயங்கும்போது, இந்த வெப்ப அடையாளங்களை படமெடுக்கும் அகச்சிவப்பு தேடுபொறிகளால் கண்காணிக்க முடியும். செயலற்ற அகச்சிவப்பு ஏவுகணைகளுக்கு ரேடார் ஒளியூட்டம் தேவையில்லை, எனவே அவை ரேடார் எச்சரிக்கை பெறுவான்களைத் தூண்டுவதில்லை. இதன் பொருள், ஏவுகணை இலக்கைத் தாக்கும் இடத்திற்கு மிக அருகில் வரும் வரை, வரவிருக்கும் அச்சுறுத்தல் குறித்த அறிகுறியை விமானிகள் சிறிதளவோ அல்லது எதுவுமே பெறாமல் போகலாம். அகச்சிவப்பு வழிகாட்டுதலுக்கு எதிராக மின்னணு நெரிசல் குறைவான செயல்திறனையே கொண்டுள்ளது, ஏனெனில் அதன் தேடுகருவி வானொலி அதிர்வெண் உமிழ்வுகளுக்குப் பதிலாக வெப்பத்தின் மீது கவனம் செலுத்துகிறது. இதனால், ஒரு ஏவுகணை அதன் எல்லைக்குள் ஏவப்பட்டவுடன், கிடைக்கக்கூடிய தற்காப்பு வழிமுறைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, தாக்குதல் பணிகளின் போது ஸ்டெல்த் விமானங்களுக்கு ஏற்படும் மிகவும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களில் ஒன்றாகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள் கருதப்படுகின்றன; குறிப்பாக, உயரம் மற்றும் சூழ்ச்சித் திறன்கள் கட்டுப்படுத்தப்படக்கூடிய பாதுகாக்கப்பட்ட இலக்குகளுக்கு அருகில் செயல்படும்போது இந்த அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மஜித் அமைப்பின் தாக்குதல் வரம்பு, நீண்ட தூர ரேடார் வழிகாட்டு அமைப்புகள் தவிர்க்கப்பட்டிருந்தாலும் அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தாலும் கூட, அருகாமையில் செயல்படும் விமானங்கள் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடிய எல்லைக்குள் அதனை வைக்கிறது. மறைமுகத் தாக்குதல் விமானங்கள், கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதை விட, எளிதில் கண்டறிய முடியாத தன்மை, மின்னணுப் போர் மற்றும் தந்திரோபாயத் திட்டமிடல் ஆகியவற்றின் கலவையையே சார்ந்துள்ளன என்றும், இதன் பொருள், குறுகிய தூர ஏவுகணைகள் இலக்கைக் குறிவைக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தவிர்ப்பதில்தான் அவற்றின் தப்பிப்பிழைக்கும் திறன் தங்கியுள்ளது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏவுகணையின் தேடு கருவி செயலற்றதாக இருப்பதால், அச்சுறுத்தலைக் கண்டறிய விமானங்கள் ரேடார் கதிர்வீச்சுகளைக் கண்டறிவதை நம்பியிருக்க முடியாது. இதனால், ஏவுகணை ஏவப்பட்டது கண்டறியப்பட்டவுடன், விமானிகள் அகச்சிவப்பு எச்சரிக்கை அமைப்புகளையும் தப்பிக்கும் சூழ்ச்சிகளையும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே, மார்ச் 2026 சம்பவமானது, குறிப்பாக அதிக எண்ணிக்கையில் நகரும் குறுகிய தூர அமைப்புகள் பயன்படுத்தப்படக்கூடிய சூழல்களில், ஐந்தாம் தலைமுறை விமானங்களுக்குக் கூட அடுக்கு பாதுகாப்பு உத்திகளின் அவசியத்தின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த மோதலில் விமானம் தப்பிப் பிழைத்தது, தற்காப்பு நடவடிக்கைகளும் விமானியின் துரிதச் செயல்பாடும் திறம்பட இருந்தன என்பதைக் காட்டுகிறது; ஆனால், ஏற்பட்ட சேதமே, நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து முழுமையான பாதுகாப்பை மறைமுகத் தொழில்நுட்பத்தால் மட்டும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் விளைவாக, செயலற்ற முறையில் கண்டறிதலுக்கும் நகரும் ஏவுதளங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் எதிரிகளை எதிர்கொள்ளும்போது, மேம்பட்ட விமானங்கள் வான் பாதுகாப்பு வடிவவியலின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இயங்க வேண்டும் என்பதை நினைவூட்டும் விதமாக இந்த நிகழ்வு பகுப்பாய்வு செய்யப்படுகிறது. எதிர்கால விமான நடவடிக்கைகளுக்கான மூலோபாய விளைவுகள் அமெரிக்காவின் F-35 ரக விமானத்திற்கு எதிராக மஜித் அமைப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில், தற்போது சேவையில் உள்ள மிகவும் மேம்பட்ட சில விமானங்களின் செயல்பாட்டுச் சூழலில், ஒப்பீட்டளவில் குறைந்த தூரம் செல்லக்கூடிய மற்றும் விலை மலிவான ஆயுதங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை இது நிரூபிக்கிறது. விமானம் இழக்கப்படவில்லை என்றாலும், அடுக்கு மற்றும் நகரும் வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட சர்ச்சைக்குரிய வான்வெளியானது, குறிப்பாக நீடித்த போர் நடவடிக்கைகளின் போது, மறைமுகத் தாக்குதல் தளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு ரேடார் கதிர்வீச்சுகள் இல்லாமல் செயல்படுவதால், ஒரு மோதலின் இறுதிக் கட்டம் வரை கண்டறிய முடியாத அச்சுறுத்தல்களைத் தாக்கும் விமானங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம், எதிரி வான் பாதுகாப்பு அமைப்புகளை ஒடுக்குவதை சிக்கலாக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ஒரு உத்திக்கு இது பொருத்தமாக அமைகிறது. குறிப்பாக, செயல்பாட்டு நோக்கங்களை அடைவதற்காக விமானங்கள் பாதுகாக்கப்பட்ட இலக்குகளுக்கு அருகில் இயங்க வேண்டிய பிராந்தியங்களில், இதுபோன்ற அமைப்புகளின் இருப்பு பணித் திட்டமிடல், உயரத் தேர்வு மற்றும் தாக்குதல் செயல்முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பெரிய நிரந்தரத் தளங்கள் இல்லாமலேயே, குறுகிய தூர அமைப்புகளைப் பரவலாகவும் விரைவாகவும் நிலைநிறுத்தி ஒரு அடர்த்தியான பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க முடியும் என்பதால், இந்த நிகழ்வு தளவாடங்கள் மற்றும் படை நிலைப்பாட்டின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. மார்ச் 2026 சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துல்லியமான ஆயுதம் குறித்து நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது, மேலும் கூடுதல் உறுதிப்படுத்தலோ அல்லது கூடுதல் காணொளிக் காட்சிகளோ அந்த மோதல் குறித்த மதிப்பீட்டை மாற்றக்கூடும் என்பதால், ஆய்வாளர்கள் தற்போதைய முடிவுகளைத் தற்காலிகமானவையாகவே தொடர்ந்து கருதுகின்றனர். எதிர்கால விசாரணைகள் மஜித் அமைப்பின் பயன்பாட்டை உறுதிப்படுத்தினால், அதிகத் தீவிரம் கொண்ட மோதல் சூழல்களில் இயங்கும் ஐந்தாம் தலைமுறை விமானங்களுக்கு எதிராகவும் செயலற்ற அகச்சிவப்பு வான் பாதுகாப்பு ஆயுதங்கள் பொருத்தமானவையாகவே இருக்கின்றன என்பதைக் காட்டும் ஒரு நிகழ்வாக இந்தச் சம்பவம் ஆராயப்பட வாய்ப்புள்ளது. நவீன வான்வழிப் போரில் தப்பிப்பிழைப்பது என்பது விமானத் தொழில்நுட்பத்தை மட்டுமல்லாமல், எதிரெதிர் வான் பாதுகாப்பு வலையமைப்புகளின் அடர்த்தி, இயங்குதன்மை மற்றும் ஒருங்கிணைப்பையும் சார்ந்துள்ளது என்பதை இந்த அத்தியாயம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. போர் நடவடிக்கைகள் தொடர்ந்து மாறிவரும் நிலையில், இரு தரப்பினரும் இந்த மோதலைக் கவனமாகப் பகுப்பாய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஒரு மறைமுகத் தாக்குதல் விமானத்திற்கு ஏற்படும் சிறிய சேதம்கூட, போர்க் கோட்பாடுகள், இடர் மதிப்பீடுகள் மற்றும் எதிர்காலப் படையணி நிலைநிறுத்தல் முறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். உலகெங்கிலும் உள்ள இராணுவத் திட்டமிடுபவர்களுக்கும் பாதுகாப்பு ஆய்வாளர்களுக்கும், மறைமுகத் தாக்குதலுக்கும் வான் பாதுகாப்புக்கும் இடையிலான சமநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்பதையும், குறிப்பிட்ட இடப் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்ட குறுகிய தூர அமைப்புகள், போட்டி நிறைந்த வான்வெளியில் நடைபெறும் நடவடிக்கைகளின் முடிவை இன்னமும் தீர்மானிக்க முடியும் என்பதையும் இந்தச் சம்பவம் ஒரு நினைவூட்டலாக அமைகிறது. Defence Security AsiaIran’s Majid Missile Damages U.S. F-35 in Combat — Heat-S...Iran’s Majid heat-seeking missile may have damaged a U.S. F-35 during March 2026 combat operations, marking the first known SAM hit on a stealth fighter and raising global concerns over passive infrarமன்னிக்கவும், கூகிள் மொழி மாற்றியில் ஒரு கட்டுறையினை பதிவதற்கு. இனிமேல் கூகிள் மொழிமாற்றியில் கட்டுரை இணைப்பதில்லை என முடிவெடுத்திருந்தேன், ஆனால் இந்த கட்டுரையில் விமானம் தாக்கப்பட்டதற்கான காரன காரியங்கள் அலசப்பட்டுள்ளது, வேறு எந்த கட்டுரையும் இவ்வாறான விளக்கத்துடன் இணைக்கப்படாமையால் இக்கட்டுரையினை இணைத்துள்ளேன் (தொந்தரவிற்கு மன்னிக்கவும்). ஆங்கில இணைப்பினை விரும்பியவர்கள் அதன் இணைப்பில் சென்று பார்க்கலாம். F-35 விமானம் கண்ணுக்கு புலப்படாதல்ல, அது ரடாரிற்கு மட்டும் புலப்படாது, ஈரான் பாவித்த இந்த குறுந்தூர ஏவுகணை விமானத்திலிருந்து வெளியேறும் வெப்பத்தினை (இன்பிராரெட்) மட்டும் உணர்ந்து செயற்படுவதால் F - 35 விமானத்திற்கு ஏவுகணை எதிர்ப்பு எச்சரிக்கை விடப்படவில்லை (ரடார் சமிஞ்சைகளை உணருவதன் மூலம் ஏவுகணை செலுத்தியினை அடையாளம் காணும்). இந்த குறுந்தூர ஏவுகணை 15 கி மி வரை உணரும் சக்தியினுடனும் தாக்குதல் எல்லை 0.7 - 8 கி . மி வரையும் தாக்குதல் எல்லை கொண்டுள்ளது. விமானத்தில் கூட வெப்ப உணர் செயற்பாடு (இன்பிராரெட்) மூலம் தாக்க வரும் ஏவுகனையினை அடித்து விழுத்தும் செயற்பாடு உள்ளது, ஆனால் விமானிக்கு மிக குறுகிய நேரமே எதிர்வினையாற்ற இருக்கும், இது ஒரு எதிர்பாராத நிலைமையாக இருந்திருக்கும் அதனால் விமானி எதிர்வினையாற்ற முன்னரே ஏவுகணை தாக்கியுள்ளது. ஆனாலும் விமனத்தினை விமானி தாக்குதலுக்கு பின்னரும் பத்திரமாக தரை இறக்கியுள்ளார். இந்த கட்டுரையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது, காணொளி தொடர்பிலும், ஈரானின் அறிக்கைகள் தொடர்பிலும், இந்த கட்டுரையினை வாசித்ததின் பின்னர், நிச்சயமாக ஈரான் தரப்பு செய்திகளில் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரம் உள்ளது போல உணருகிறேன், ஆனாலும் இந்த தாக்குதல் F - 35 ஒரு புதிய சவாலை உருவாக்கிவிட்டுள்ளது, எதிர்காலத்தில் F -35 உயரனமான பறப்புக்களில் ஈடுபடலாம் ஆனாலும் 15 கிலோ மீற்றர் வெப்ப உஅணரும் தன்மை என்பது (ஈரானின் ஏவுகணை) கொஞ்சம் நம்புவதற்கு கடினமாகவுள்ளதாக கருதுகிறேன் (எனது கருத்து மட்டுமே).
  22. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறித்த நீதியமைச்சரின் அறிவிப்பின் அடிப்படை என்ன? - சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கேள்வி 22 Mar, 2026 | 02:47 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் விசாரணைகளை இன்னமும் முடிவுறுத்தவில்லை. அவ்வாறிருக்கையில் நீதியமைச்சரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட எண்ணிக்கை எதனடிப்படையில் மதிப்பிடப்பட்டது? என சட்டத்தரணி ஐங்கரன் குகதாசன் கேள்வி எழுப்பியுள்ளார். வலிந்து காணாமலாக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பில் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (20) எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து உரையாற்றிய நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, 'இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல்போனோர் குறித்த மதிப்பீடுகளில் இன்னமும் கணிசமானளவு நபர்கள் கணக்கில் வராமல் உள்ளனர் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது. இந்த எண்ணிக்கைகள் ஒவ்வொரு காலப்பகுதிகளிலும் மாறுபடுகின்றன. எவ்வாறிருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அண்மைய மதிப்பீடுகளின்படி அந்த எண்ணிக்கை 2,764 ஆகும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அமைச்சர் வெளியிட்ட இந்தத் தகவலை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கும் சட்டத்தரணியும் சிவில் செயற்பாட்டாளருமான ஐங்கரன் குகதாசன், அமைச்சரால் வெளியிடப்பட்ட இந்தத் தரவுகள் எவ்வாறு பெறப்பட்டன என்பதை அறிய விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். 'வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் பரணகம ஆணைக்குழுவிடம் 22,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் (சுமார் 5000 முப்படை உறுப்பினர்கள் உட்பட) அளிக்கப்பட்டன. அதேவேளை காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் விசாரணைகளை இன்னமும் முடிவுறுத்தவில்லை. அவ்வாறிருக்கையில் அமைச்சரால் எந்த அடிப்படையில் இந்த எண்ணிக்கை முன்வைக்கப்பட்டது?' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேவேளை இது மிகமுக்கியமான கேள்வி எனக் குறிப்பிட்டிருக்கும் சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் தெற்காசியப்பிராந்திய ஆய்வாளர் அலன் கீனன், காணாமல்போனோரின் எண்ணிக்கை நீதியமைச்சரால் முன்வைக்கப்பட்ட எண்ணிக்கையை விடப் பல மடங்கு அதிகம் என்பது சகல ஆய்வாளர்களுக்கும் சுயாதீன அவதானிகளுக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/241652
  23. “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்: ஒரே நாளில் 903 பேர் போதைப்பொருட்களுடன் கைது! Published By: Digital Desk 1 22 Mar, 2026 | 12:55 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று சனிக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 903 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 913 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், ஓருவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளார். குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதற்கமைய, சந்தேக நபர்களிடமிருந்து 409 கிராம் ஹெரோயின், 02 கிலோகிராம் 28 கிராம் ஐஸ், 450 கிராம் கஞ்சா, 64,209 கஞ்சா செடிகள், 32 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 01 கிலோகிராம் 46 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 108 போதை மாத்திரைகள், 227 கிராம் மதனமோதகம் மற்றும் 01 கிலோகிராம் 666 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241634
  24. முஸ்லிம் நாடுகளுக்கு நடுவே யூத தேசமான இஸ்ரேல் உருவான சிக்கலான வரலாறு பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அனகா பதக் பிபிசி மராத்தி 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 11 நிமிடங்கள் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் பல நகரங்கள் மீது தாக்குதல் நடத்தின. அமெரிக்கா, இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார். இரான், இஸ்ரேல் இடையிலான மோதல், இஸ்ரேலின் வரலாற்றை மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளது. ஒரு முஸ்லிம் மண்ணில், இந்த யூத தேசம் உருவானது எப்படி? இஸ்ரேல் உருவான வரலாறு மிகவும் சிக்கலானது. அந்தச் சிக்கலான வரலாற்றை எளிய சொற்களில் விளக்குவதற்கு இந்தக் கட்டுரை முயல்கிறது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனும் அதன் நேச நாடுகளும் வெற்றி பெற்றிருந்தாலும், பிரிட்டன் பெரும் இழப்புகளைச் சந்தித்தது. தனது காலனி நாடுகளை நிர்வகிப்பது அதற்குச் சிரமமாக மாறியது. எனவே படிப்படியாக தனது காலனி நாடுகளில் இருந்து விலகத் தொடங்கியது. கடந்த 1948ஆம் ஆண்டு மே மாதம், பாலத்தீன பகுதிகளில் இருந்து பிரிட்டன் விலகிக்கொண்டது. அதைத் தொடர்ந்து, தங்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கப் பல ஆண்டுகளாகப் போராடி வந்த அரபு மக்களுக்கும் யூத மக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. அந்த நிலப்பகுதி யாருக்குச் சொந்தமாகும் என்பதே அதில் எழுந்த முக்கியக் கேள்வியாக இருந்தது. அந்தப் போர் இரு தரப்பினருக்கும் சமமானதாக அமையவில்லை. அரபு மக்களுடன் ஒப்பிடுகையில் யூதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இருப்பினும், இஸ்ரேல் என்னும் கனவை நனவாக்குவதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வந்த ஒவ்வொரு யூதரும், இத்தகைய ஒரு நாளுக்காகத்தான் பல வருடங்களாகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டே வந்திருந்தனர். கடந்த 1948ஆம் ஆண்டு மே மாதம் 14 அன்று, இஸ்ரேல் தனது சுதந்திரத்தை அறிவித்தது. கடந்த 2000 ஆண்டுகளில் முதன்முறையாக, ஒரு யூத தேசம் உருவானது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பிராந்தியத்தின் நடுவில், ஒரு யூத நாடு உருவாக்கப்பட்டது. ஜெருசலேம் இஸ்ரேலின் கதை ஜெருசலேமில் தொடங்குகிறது. அது 1095ஆம் ஆண்டு. ஒரு குளிர் நிறைந்த நவம்பர் காலைப் பொழுதில், பிரான்சின் கிளெர்மான்ட் நகரில் போப் இரண்டாம் அர்பன் ஆற்றிய ஒரு பிரசங்கம், ஐரோப்பாவின் முகத்தையே மாற்றியது. அந்தப் பிரசங்கம் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே 200 ஆண்டுகால போரைத் தூண்டிவிட்டது. இந்தப் போர்கள் பின்னர் கிறிஸ்தவர்களால் சிலுவைப் போர்கள் என்றும், முஸ்லிம்களால் ஜிஹாத் என்றும் அழைக்கப்பட்டன. லத்தீன் திருச்சபை, முஸ்லிம் ஆட்சியிடம் இருந்து புனித பூமி மற்றும் புனித நகரின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்காக 1095 முதல் 1271 வரை போர் புரிந்தது. புனித பூமி என்பதில் இன்றைய இஸ்ரேல், பாலத்தீனம், ஜோர்டான், சிரியா, லெபனானின் சில பகுதிகள் ஆகியவை அடங்கும். புனித நகரம் என்பது ஜெருசலேம். பட மூலாதாரம்,Getty Images திருச்சபைக்கும் முடியாட்சிக்கும் இடையிலான மோதல்கள் மற்றும் திருச்சபையின் பிளவு காரணமாக மத அதிகாரத்தின் மையம் தள்ளாடத் தொடங்கியதும் இதே காலகட்டத்தில்தான். போப் இரண்டாம் அர்பன் இதிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வழியைக் கண்டார். அது, அந்நிய, பாவமான, மத நம்பிக்கையற்ற எதிரியின் மீது போர் தொடுத்து கிறிஸ்தவர்களை ஒன்றிணைப்பதாகும். ஒரு லட்சம் கிறிஸ்தவ ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், படைவீரர்களாகி, 4,500 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செல்வதற்கான ஜெருசலேமை நோக்கிய தங்கள் பயணத்தைத் தொடங்கினர். அனைவரும் ஒரே நேரத்தில் செல்லாமல், சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து சென்றனர். 'புனித பூமி' என்ற பிபிசி ஆவணப்படத்தில், இடைக்கால வரலாற்று ஆசிரியர் முனைவர் தாமஸ் ஆஸ்பிரிட்ஜ், "அவர்கள் ஐரோப்பாவை கடந்து சென்றபோது, இந்தக் குழுக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் யூத மக்களைத் தாக்கிப் படுகொலை செய்தன" என்று கூறியுள்ளார். அதற்குள், ஜெருசலேம் முஸ்லிம் ஆட்சியாளர்களின் கைகளில் வீழ்ந்து 400 ஆண்டுகள் கடந்திருந்தன. அந்தப் பகுதியில் யூதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தபோதிலும் அவர்களின் இருப்பு தொடர்ந்தது. முதல் சிலுவைப் போரில், புறப்பட்டுச் சென்று சரியாக நான்கு ஆண்டுகள் கழித்து வீரர்கள் ஜெருசலேமை கைப்பற்றினர். ஜெருசலேமையும் அதன் சுற்றுப்புறப் பகுதியையும் சுமார் 100 ஆண்டுகள் (1099 முதல் 1187 வரை) ஆட்சி புரிந்தனர். சலாடினின் முஸ்லிம் வீரர்கள் அவர்களைத் தோற்கடித்தனர். அதன் பிறகு, புனித பூமி மீண்டும் முஸ்லிம்களின் கைகளுக்கு வந்தது. ஜெருசலேம் உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. நாம் வரலாற்றுப் பக்கங்களைப் பார்த்தால், ஜெருசலேம் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். கி.மு.1700களில், கானானியர்கள் அதை ஆட்சி செய்தனர். பின்னர் எகிப்தின் பார்வோன்கள் கைகளில் இருந்தது. அதைத் தொடர்ந்து இஸ்ரவேலர்கள் ஆட்சி செய்தனர். இன்றைய யூதர்கள் இவர்களிடம் இருந்துதான் தோன்றியதாக நம்பப்படுகிறது. கி.மு.1000களின் முதல் பாதியில், தற்போதைய இஸ்ரேல், பாலத்தீனம், ஜோர்டான், லெபனான், சிரியாவின் ஒரு பகுதியாக ஜெருசலேம், இஸ்ரேலிய மக்களின் இரண்டு ராஜ்ஜியங்களின் தாயகமாக இருந்தது. அந்த ராஜ்ஜியங்கள், பண்டைய இஸ்ரேல் மற்றும் யூதா ராஜ்ஜியம். ஜெருசலேம் யூதா ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்தது. பண்டைய இஸ்ரேல் ராஜ்ஜியம் எபிரேய வேதாகமத்திலும் சில மத நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான வரலாற்றுச் சான்றுகள் குறைவாகவே உள்ளன. காலப்போக்கில், இந்தப் பகுதி பாபிலோனிய, பாரசீக, கிரேக்க (அலெக்சாண்டர் படையெடுத்தபோது), ரோமானிய, பைசாந்திய ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கடைசியாக முஸ்லிம் ஆட்சியாளர்களின் கைகளுக்கு வந்தது. அதன் பிறகும்கூட, தொடர்ச்சியான அதிகார மாற்றங்கள் நிகழ்ந்தன. இங்கு கடைசியாக ஆட்சி செய்தவர்கள் ஓட்டோமான்கள். முதல் உலகப் போரின்போது, 1918இல் பிரிட்டிஷாரால் இந்தப் பேரரசு அழிக்கப்பட்டது. மேலே விவரிக்கப்பட்ட பகுதி, இஸ்ரேல் தேசம் அல்லது புனித பூமி என்றும் அழைக்கப்படுகிறது. இது முறையே எபிரேய வேதாகமத்திலும், விவிலியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. யூத மதம் இங்குதான் தோன்றியதாகவும், அந்த மதத்தின் சட்டங்கள் இங்குதான் உருவாக்கப்பட்டதாகவும், கடவுள் யூதர்களுக்கு மரபுரிமையாகக் கொடுத்த நிலம் இதுதான் எனவும் யூதர்களால் நம்பப்படுகிறது. அவர்களின் மத நம்பிக்கை, எபிரேய வேதாகமத்தில் உள்ள ஆதியாகமம், யாத்திராகமம் ஆகிய அத்தியாயங்களை அடிப்படையாகக் கொண்டது. யூத மக்கள் ஒரு நாள் தங்கள் நிலத்திற்கு (இஸ்ரேல் தேசத்திற்கு) திரும்புவார்கள் என்று விவிலியம் தீர்க்கதரிசனம் கூறுகிறது. யூத அரசின் அரசியல் கருத்தும் இந்த தீர்க்கதரிசனத்தை அடிப்படையாகக் கொண்டது. யூத மக்கள் ஏன் தங்கள் சொந்த நாட்டை உருவாக்க இந்த நிலத்தை விரும்பினார்கள் என்பதை நினைவுகூர்வதற்காகவே இந்தக் கதைகள் அனைத்தும் கூறப்படுகின்றன. இந்தப் பகுதியில் வசிக்கும் அரபு முஸ்லிம்கள் இன்று பாலத்தீனர்கள் என்று உலகளவில் அறியப்பட்டாலும், இந்த நிலம் ஆரம்ப காலத்திலேயே பண்டைய கிரேக்க எழுத்தாளர்களாலும், பின்னர் ரோமானிய ஆட்சியாளர்களாலும் பாலத்தீனம் என்றே அழைக்கப்பட்டது. இந்தப் பெயர் ஓட்டோமான் பேரரசு காலம் வரை நீடித்தது. பட மூலாதாரம்,Getty Images முதல் உலகப் போரும் மாறிய உலக வரைபடமும் நவீன உலக உறவுகளின் வரலாற்றில் பாலத்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வியத்தகு மாற்றம் முதல் உலகப் போருக்குப் பிறகு நிகழ்ந்தது. இங்கு ஓட்டோமான் பேரரசு ஆட்சியில் இருந்தது. அண்டை நாடுகளான எகிப்து, சிரியாவில் இருந்து அடிக்கடி தாக்குதல்கள் நடந்தன. கடந்த 1840இல் இந்தத் தாக்குதல்களை நிறுத்த மத்தியஸ்தம் செய்யுமாறு ஓட்டோமான் பேரரசர்கள் பிரிட்டிஷாரை கேட்டுக்கொண்டனர். சில ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகளுக்கு ஈடாக பிரிட்டிஷார் இதற்கு ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு, அப்பகுதியில் ஓரளவு அமைதி ஏற்பட்டது. மேலும் பாலத்தீனம் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செழிக்கத் தொடங்கியது. ஓட்டோமான் பேரரசு ஏற்கெனவே ஐரோப்பாவுடன் வர்த்தகம் செய்துகொண்டிருந்தது. ஐரோப்பியர்களுடனான தொடர்பு அதிகரித்ததால், அங்கும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அதுவரை அங்கு யூதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. இந்தக் காலகட்டத்தில், ஐரோப்பாவில் சியோனிச இயக்கம் தோன்றியது. அது யூத அரசை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கமாகும். எபிரேய வேதாகமத்தில் 'சியோன்' என்ற சொல் ஜெருசலேமுக்கு பயன்படுத்தப்படுகிறது. முதல் உலகப் போர் இப்பகுதியில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அப்போது உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பேரரசாக இருந்த ஓட்டோமான்கள், போரில் நுழைந்து, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டனுக்கு எதிராக 'ராணுவ ஜிஹாத்' ஒன்றை அறிவித்தனர். ஜெர்மனியர்களுடன் கூட்டணி அமைத்து, சூயஸ் கால்வாயைக் கைப்பற்றுவதற்காக ஓட்டோமான்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த எகிப்தை தாக்கினர். ஆனால், ஓட்டோமான்கள் தோற்கடிக்கப்பட்டனர். ஜெர்மனி தோற்கடிக்கப்பட்டது. ஓட்டோமான் பேரரசு துண்டாடப்பட்டது. பாலத்தீனம் ஒரு பிரிட்டிஷ் காலனியாகவும் சிரியாவும் லெபனானும் பிரெஞ்சு காலனிகளாகவும் மாறின. பாலத்தீனப் பகுதி நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் வந்ததால், அப்பகுதியில் ஒரு சுதந்திர யூத அரசை உருவாக்கக் கோரி ஐரோப்பாவில் குரல்கள் வலுக்கத் தொடங்கின. பட மூலாதாரம்,Getty Images பால்ஃபோர் பிரகடனம் முதல் உலகப் போரில் ஓட்டோமான் பேரரசு தோற்கடிக்கப்பட்டபோது, பிரிட்டன் பால்ஃபோர் பிரகடனத்தை வெளியிட்டது. இது ஐரோப்பாவில் சியோனிச இயக்கத்தின் விளைவாக உருவானது. ஒரு யூத அரசுக்கான கோரிக்கைக்கு இதுவே முதல் அதிகாரப்பூர்வ அங்கீகாரமாக இருந்தது. பால்ஃபோர் பிரகடனம் சரியாகக் கூறியது என்ன? "பிரிட்டிஷ் முடியாட்சி, பாலத்தீனத்தில் யூத மக்களுக்கென ஒரு தேசத்தை நிறுவுவதை ஆதரிக்கிறது. யூத மக்கள் தங்களுக்கான ஒரு தேசத்தைப் பெறுவதற்கு உதவுவதற்குத் தனது சிறந்த முயற்சிகளை எடுக்கும். ஆனால் இது பாலத்தீனத்தில் வசிக்கும் யூதரல்லாத மக்களின் குடியுரிமைக்கோ மத உரிமைகளுக்கோ அல்லது பிற நாடுகளில் வசிக்கும் யூதர்களின் உரிமைகள் மற்றும் அரசியல் அந்தஸ்துக்கோ பாதிப்பை ஏற்படுத்தாது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்." இந்தப் பிரகடனத்தைத் தொடர்ந்து, இந்தப் பிராந்தியத்தில் யூத மக்களுக்கான ஒரு தாயகத்தை உருவாக்கும் பொறுப்பையும், அதன் விளைவாக, பிராந்தியத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் சர்வதேச சங்கம் பிரிட்டனிடம் ஒப்படைத்தது. அங்கு வரும் யூதர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. 1920களுக்கும் 1940களுக்கும் இடையில், யூதர்கள் பெருமளவில் அங்கு வரத் தொடங்கினர். குறிப்பாக இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் லட்சக்கணக்கான யூதர்களைப் படுகொலை செய்யத் தொடங்கிய பிறகு, ஐரோப்பாவில் இருந்து ஆயிரக்கணக்கான யூதர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தப் பகுதிக்குத் தப்பி வந்தனர். பால்ஃபோர் பிரகடனம், யூதர்களுக்கென இங்கு ஒரு தனி 'தேசம்' நிறுவப்படும் என்று கூறியது. இந்தப் பகுதி அப்போதும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தததால், இங்கு வந்த யூதர்கள் ஒரு நாள் இஸ்ரேல் உருவாக்கப்படும் என்று கருதினர். அதேபோல நடக்கவும் செய்தது. பிரிட்டிஷார் பால்ஃபோர் பிரகடனத்தை முன்வைத்து, யூத மக்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தது ஏன்? "யார்தான் அவர்களிடம் சொல்லாமல் இருந்திருப்பார்கள்? அவர்கள் மீது அவ்வளவு அழுத்தம் இருந்தது" என்று எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நிலு தம்லே கூறினார். அவர் இஸ்ரேல்-அரபு மோதலை உன்னிப்பாக ஆய்வு செய்துள்ளார். அதுகுறித்து ஜெருசலேம் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். "சியோனிச இயக்கம் 1890ஆம் ஆண்டு வாக்கில் பிரிட்டனில் உருவானது. யூதர்கள் பிரிட்டிஷாரின் கடன் வழங்குபவர்களாக இருந்தனர். அந்த இயக்கத்தின் தலைவரான ரோத்ஸ்சைல்ட், மிகுந்த செல்வந்தராக இருந்தார். ஐரோப்பாவின் பல செல்வந்த குடும்பங்கள் இதில் ஈடுபட்டிருந்தன. எனவே, பிரிட்டிஷாரால் அவர்களைப் பகைத்துக்கொள்ள முடியவில்லை. குறிப்பாகப் போர்க் காலத்தில் அரசுக்குப் பணம் தேவைப்பட்டபோது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,இஸ்ரேல் நிறுவப்பட்டதாக மே 14, 1948 அன்று அறிவிக்கப்பட்டது இஸ்ரேல் உதயமும் அரபு நாடுகளின் தாக்குதலும் அதிகரித்து வந்த நாஜி கொடுமைகளின் விளைவாக ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் தப்பி ஓடினர். ஆனால் பல நாடுகள் அவர்களை வரவேற்கவில்லை, கதவுகளை மூடிக்கொண்டன. அதிகரித்து வந்த யூத குடியேற்றம் பாலத்தீன பகுதிகளில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே பிரிட்டிஷாரும் யூதர்களின் வருகையைத் தடுக்க முடிவு செய்தனர். யூதர்கள் இப்போது சட்டவிரோதமாக அந்தப் பகுதிக்குள் நுழையத் தொடங்கினர். கடந்த 1920 மற்றும் 1940க்கு இடைப்பட்ட காலத்தில், இப்பகுதியில் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் ஏற்பட்டன. அவை அடிக்கடி கலவரங்களில் முடிந்தன. இரண்டாம் உலகப் போர் வெடித்தபோது, பாலத்தீனத்தால் தனித்து இருக்க முடியவில்லை. அப்போதைய பிரதமர் சர்ச்சில், பிரிட்டிஷாருக்காக போராடுவதற்கு ஒரு யூத படையை உருவாக்க முன்மொழிந்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கமும் ராணுவமும் அதை நிராகரித்தன. ராணுவத்தில் யூதர்கள் மற்றும் அரேபியர்களின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினர். ஆனால் அரேபியர்கள் பிரிட்டிஷாருக்காக போராடுவதில் ஆர்வம் காட்டவில்லை. அவர்களின் தலைவரான ஜெருசலேமின் முஃப்தி, நாஜி ஜெர்மனியுடன் சேர்ந்துகொண்டார். இந்த நேரத்தில், ஹகானா (பாதுகாப்புப் படை) என்று அழைக்கப்படும் ஓர் உள்ளூர் யூத ராணுவம் உருவாக்கப்பட்டது. அரேபியர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். ஜாஃபாவில் தாக்குதல்கள் தொடங்கின. பிரிட்டிஷார் ராணுவத்தை வரவழைத்தனர். இந்தப் போரில் 5,000க்கும் மேற்பட்ட அரேபியர்கள் உயிரிழந்தனர். ஜெருசலேமின் முஃப்தி அல்-ஹுசைனி, பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் இருந்த சிரியாவுக்கு தப்பிச் சென்றார். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பிறகு, 1947இல் பிரிட்டன் பாலத்தீன பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைத்தது. ஒரு சுதந்திர யூத அரசு, ஒரு சுதந்திர அரபு அரசு, ஜெருசலேமின் மீது சர்வதேச கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தீர்வை ஐ.நா சபை முன்மொழிந்தது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்ததுடன், யூதர்கள் பாலத்தீனத்திற்குள் நுழைவதைத் தடுக்க முடியாது என்றும் கூறியது. பட மூலாதாரம்,Getty Images இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டிஷ் பொருளாதாரம் சீர்குலைந்த நிலையில் இருந்தது. 1948இல் பாலத்தீனத்தில் இருந்த யூத மக்கள் சுதந்திரத்தை அறிவித்தனர். இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு யூத மக்களுக்குத் தங்களுக்கென ஒரு நாடு கிடைத்தது. இஸ்ரேல் நிறுவப்பட்டவுடன், அது அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் ஆகிய இரு சக்திவாய்ந்த நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டது. பிரிட்டன் பாலத்தீனத்தில் இருந்து வெளியேறியது. யூத மற்றும் அரபுப் படைகள் நாட்டிற்குள் மோதிக்கொண்டன. பாலத்தீன அரேபியர்களுக்கு ஜோர்டான், சிரியா, இராக், லெபனான், எகிப்து ஆகிய நாடுகளின் படைகள் உதவின. இந்த ஐந்து நாடுகளும் இணைந்து இஸ்ரேலை தாக்கின. இஸ்ரேல் நிறுவப்பட்டு ஒரு நாள்கூட ஆகியிருக்கவில்லை. அந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் எட்டு லட்சமாக இருந்தது. அரபு நாடுகளின் படைகள் இஸ்ரேலிய படையைவிடப் பல மடங்கு பெரிதாக இருந்தன. ஆனால், இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் பக்கம் நின்று, சில முக்கிய போர்களில் வியூகம் வகுப்பதில் பங்கு வகித்த ராணுவ அதிகாரிகள் யூதர்களாக இருந்தனர். இப்போது அவர்கள் இஸ்ரேலுக்காக போரிட்டுக் கொண்டிருந்தனர். ஜூன் மாதம், ஐ.நா சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இஸ்ரேலும் அரபு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன. இஸ்ரேலுக்கு தனது விநியோகங்களை மீண்டும் நிரப்பிக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. சோவியத் ஒன்றியம் போன்ற ஒரு பெரிய நாடும், பின்வாசல் வழியாக அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தது. அரபுப் படைகள் சரியாக ஒருங்கிணைக்கப்படவில்லை. ஐந்து நாடுகளின் ஒருங்கிணைந்த படைகளைக் கொண்டுகூட, அவர்களால் இஸ்ரேலை வரைபடத்தில் இருந்து அகற்ற முடியவில்லை. ஆனால், அவர்கள் இஸ்ரேலின் சில பகுதிகளைக் கைப்பற்றினர். ஜோர்டான் மேற்குக் கரையையும், எகிப்து காஸா பகுதியையும் கைப்பற்றின. கிழக்கு ஜெருசலேமும் இஸ்ரேலின் கைகளில் இருந்து நழுவியது. இஸ்ரேல் மேற்கு ஜெருசலேமையும் பாலத்தீனத்தின் பிற பகுதிகளையும் தக்க வைத்துக்கொண்டது. இதுவே முதல் அரபு-இஸ்ரேலிய போர். கடந்த 1949இல் ஜோர்டான், எகிப்து, லெபனான், சிரியாவுடன் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தங்களின் எளிய பொருள், யார் தங்கள் விருப்பப்படி செயல்படுகிறார்களோ, அவர்களுக்கு அந்த நிலம் கிடைக்கும் என்பதுதான். ஆனால், இந்தப் போருக்காக அவர்கள் ஒரு பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. பெரியளவிலான உயிரிழப்புகள் இந்தப் போரில் ஏற்பட்டன. பட மூலாதாரம்,Getty Images நக்பா காஸா பகுதியில் நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, மே 14, 1948 உங்களுக்கு மகிழ்ச்சி அல்லது துயரம் நிறைந்த நாளாக இருந்திருக்கும். பாலத்தீனர்கள் இந்த நாளை நக்பா என்று அழைக்கிறார்கள். அவர்கள் மே 14க்கு பதிலாக மே 15ஐ அனுசரிக்கிறார்கள். இதை பாலத்தீன வரலாற்றின் இருண்ட நாளாகக் கருதுகிறார்கள். வரலாற்றாசிரியர் பென்னி மோரிஸ் தனது 'திருத்தப்பட்ட பாலத்தீன அகதிகள் பிரச்னையின் பிறப்பு' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "மே 14, 1948க்கு அடுத்த நாள், இஸ்ரேலிய ராணுவத்திற்கு அஞ்சி ஏழரை மில்லியன் பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அவர்களில் பலர் கடத்தப்பட்டனர். பலர் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளுடன் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டுத் தப்பி ஓடினர். அவர்களால் அந்த வீடுகளின் பூட்டுகளைத் திறக்க ஒருபோதும் திரும்பி வர முடியவில்லை. அவர்களின் சாவிகள் இந்த நாளின் நினைவாக வைக்கப்பட்டன." ஆனால் இஸ்ரேல் இதை ஏற்கவில்லை. பாலத்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் அல்ல, மாறாக அரபு நாடுகளின் படையெடுப்பால் தப்பி ஓடியதாகவே அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, இஸ்ரேல் இந்த மக்களைத் திரும்ப அனுமதிக்கவில்லை. அவர்களின் வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பாலத்தீன அகதிகளுக்காக அண்டை நாடுகளில் முகாம்கள் அமைக்கப்பட்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த 1948ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி, மக்கள் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு தப்பி ஓடினர் இஸ்ரேலிய - அரபுப் படைகள் அரேபியர்களை இஸ்ரேல் தோற்கடித்தது அரசியல் களத்தில் ஒரு சுனாமியை போல் இருந்தது. இன்றுவரை, இந்தப் பிராந்தியம் அந்த சுனாமியின் பின்விளைவுகளால் இன்னும் பாதிக்கப்பட்டு வருகிறது. அரபு நாடுகள் இந்தத் தோல்வியில் இருந்து ஒருபோதும் முழுமையாக மீளவில்லை. அண்டை நாடுகள் தன்னை வரைபடத்தில் இருந்து துடைத்தெறிய முயன்றதை இஸ்ரேல் ஒருபோதும் மறக்கவில்லை. மற்றொரு போர் தவிர்க்க முடியாதது என்பதை இரு தரப்பினரும் அறிந்திருந்தனர். இஸ்ரேல் தோற்கடித்த நாடுகளின் படைகள் தங்கள் சொந்த அரசுகளைக் கவிழ்க்கத் தொடங்கின. சிரியா தொடர்ந்து அரசாங்கங்களை மாற்றத் தொடங்கியது. இஸ்ரேலுக்கு எதிரான போரில் போரிட்ட ஓர் அதிகாரி, மற்ற இளம் அதிகாரிகளுடன் எகிப்தில் ஒரு கிளர்ச்சியை வழிநடத்தி சுல்தானை கவிழ்த்தார். அந்த அதிகாரியின் பெயர் கமால் அப்துல் நாசர். நாசர் 1956இல் எகிப்தின் அதிபரானார். அதே ஆண்டில், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி, அவர் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கினார். இந்தச் செயல் அவரை அரபு உலகில் ஒரு நாயகனாக்கியது. சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, பிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டாக எகிப்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. ஆனால் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எகிப்து ராஜதந்திர ரீதியிலான ஒரு வெற்றியைப் பெற்றிருந்தது. பட மூலாதாரம்,Alamy புகைந்த நெருப்பு கடந்த 1948 போரை எந்தவொரு பெரிய ஆயுதங்களும் இன்றி எதிர்கொண்ட இஸ்ரேல், தனது ராணுவத்தை வலுப்படுத்தத் தொடங்கியிருந்தது. 1965ஆம் ஆண்டுக்குள், அதன் ராணுவம் வலிமை மிக்கதாக மாறியிருந்ததுடன், பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கியிருந்தது. அது அயராது உழைத்திருந்தது. பத்து லட்சத்துக்கும் அதிகமான யூத குடியேறிகளுக்கு இடம் கொடுக்கப்பட்டதால், மனித வளம் அதிகரித்திருந்தது. இஸ்ரேலுக்கு வரும் குடியேறிகளுக்கு ராணுவத்தில் சேவை செய்வது கட்டயமாக்கப்பட்டிருந்தது. இப்போது மத்திய கிழக்கில் ஒரு போர் மூண்டால், யார் பிழைப்பார்கள் என்பதை மேற்கத்திய நாடுகள் உணர்ந்திருந்தன. இஸ்ரேலால் குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கேனும் அரபு நாடுகளின் கூட்டுப் படைகளை தனியாகவே எதிர்த்துப் போராட முடியும் என்று அமெரிக்க தலைமைத் தளபதி கூறியிருந்தார். கடந்த 1967இல் டெல் அவிவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் அதிகாரி, இஸ்ரேலிய ராணுவம் தலைமைத்துவம், பயிற்சி, பாதுகாப்பு உபகரணங்கள், தளவாடங்கள் என அனைத்துத் துறைகளிலும் முன்னெப்போதையும்விட சிறப்பாகத் தயாராகியிருப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். பிபிசி மத்திய கிழக்கு ஆசிரியர் ஜெரிமி போவன், "எகிப்தில், நாசர் இஸ்ரேலை பழிவாங்க விரும்பினார். ஆனால் அவர் மற்றும் அவரது கூட்டாளியான சிரியாவின் படைகள் அந்த அளவுக்கு நன்கு பயிற்சி பெற்றிருக்கவில்லை. அவர்கள் வெறுமனே பெரிய வாக்குறுதிகளை மட்டும் அளித்துக் கொண்டிருந்தனர். நாசர் அரபு உலகை வழிநடத்த விரும்பினார். ஆனால் இந்த நாடுகளிடையே ஒற்றுமை இல்லை. அரேபியர்கள் தேசியம் மற்றும் ஒற்றுமை குறித்துப் பேசினார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் பிளவுபட்டிருந்தனர். ஜோர்டானும் சௌதி அரேபியாவும் தங்களுக்கு எதிராக சரி செய்வதாக சிரிய மற்றும் எகிப்திய தலைமைகள் புகார் கூறின," என்று எழுதினார். பட மூலாதாரம்,Getty Images ஆறு நாட்களில் மாறிய மத்திய கிழக்கின் அரசியல் இஸ்ரேல், சிரியா இடையிலான எல்லைப் பிரச்னைதான் கனன்று கொண்டிருந்த நெருப்புக்குக் காரணம். பிபிசி மத்திய கிழக்கு ஆசிரியர் ஜெரிமி போவன் இதுகுறித்துக் குறிப்பிட்டபோது, "சிரியா பாலத்தீன கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது. இந்தக் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை தொடர்ந்து தாக்கி வந்தனர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்களை நிரந்தரமாகத் தடுக்க இஸ்ரேல் நினைத்தது. இந்தக் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்தனர். இஸ்ரேல் இதை 'பயங்கரவாத தாக்குதல்' என்று கூறி பலவந்தமாக பதிலடி கொடுத்தது," என்று எழுதியுள்ளார். ஜோர்டானிய தலைவர் ஷா ஹுசைன் இஸ்ரேலுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இஸ்ரேல் தனக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அவர் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், 1966 நவம்பரில், ஜோர்டான் ஆக்கிரமிப்பில் இருந்த மேற்குக் கரையில் உள்ள சமுவா கிராமத்திற்குள் இஸ்ரேலிய படைகள் நுழைந்தன. ஷா ஹுசைன் அதிர்ச்சியடைந்தார். மூன்று ஆண்டுகளாக இஸ்ரேலுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் அமெரிக்க உளவுத்துறையிடம் கூறினார். இஸ்ரேலிய நடவடிக்கைக்கு முந்தைய நாள் காலையில், மேற்குக் கரையில் எந்தப் பதிலடி நடவடிக்கையும் இருக்காது என்று இஸ்ரேல் தரப்பில் இருந்து தன்னிடம் கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஷா ஹுசைன் மேற்குக் கரையில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். மேற்குக் கரையின் பாலத்தீன மக்கள், தங்கள் துக்கத்திலும் கோபத்திலும் தன்னைக் கவிழ்த்துவிடுவார்கள் என்று அவர் ஏறக்குறைய உறுதியாக நம்பினார். தங்கள் ராணுவத்தில் உள்ள நாசரின் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள் என்றும், அதன் விளைவாக இஸ்ரேல் மேற்குக் கரையைக் கைப்பற்றிவிடும் என்றும் அவர்கள் அஞ்சினர். இஸ்ரேல், சர்ச்சைக்குரிய பகுதிகளுக்குள் ஆக்ரோஷமாக முன்னேறி, படைகள் இல்லாத இடங்களில் கவச வாகனங்களை ஓட்டி வந்தது. மறுபுறம், சிரியா-இஸ்ரேல் போருக்கான மேகங்கள் திரளத் தொடங்கின. சிரியா, இஸ்ரேல் இடையிலான போர் ஏப்ரல் 7, 1967 அன்று தொடங்கியது. "இஸ்ரேலிய ராணுவத்திற்கு முன்பாக அரபுப் படைகள் சரிந்து கொண்டிருப்பதாக ஒரு பிரிட்டிஷ் தூதர் கூறினார். இந்த அவநம்பிக்கையால் அதிர்ச்சியடைந்த பாலத்தீன இளைஞர்கள், 'எகிப்திய படைகள் எங்கே?' என்று கேட்டுக் கொண்டிருந்தனர்" என்று ஜெரிமி போவன் எழுதுகிறார். நாசர் நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வந்தது. பட மூலாதாரம்,Getty Images எகிப்திய ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் அமீர், தனது படைகளைத்க் தயாராக இருக்குமாறு உத்தரவிட்டார். ஆனால் எகிப்திய ராணுவத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே ஏமனில் போரிட்டுக் கொண்டிருந்தனர். ராணுவத்தின் செயல் தலைவர் அன்வர் அல்-காதி, இதை அமீரிடம் தெரிவித்தார். அதற்கு, ஜெனரல் அன்வர், தாம் போருக்குச் செல்ல விரும்பவில்லை என்றும், இது வெறும் படைபலத்தைக் காட்டும் செயல் மட்டுமே என்றும் கூறினார். எகிப்திய அதிபர் நாசர், யூத அரசுக்கு எதிராகத் துணிந்து நிற்கும் ஓர் அரபுத் தலைவராக உலகம் முழுவதும் அறியப்பட விரும்பினார். அவர் சினாய் எல்லைக்கு படைகளை அனுப்பி, டிரான் நீரிணை வழியாக இஸ்ரேல் செல்வதைத் தடுத்தார். நவீன போர் விமானங்களை இயக்கும் விமானிகளுக்கு மத்தியில் நாசர் நிற்கும் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது. அது, தான் எவ்வளவு வலிமையானவர் என்பதைக் காட்ட அவர் மேற்கொண்ட ஒரு முயற்சி. ஜோர்டானின் ஷா ஒரு மத நெருக்கடியில் இருந்தார். தன்னைச் சுற்றி நடப்பனவற்றைக் கண்ட அவர், தனது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது என்ற ஒரேயொரு குறிக்கோளை மட்டுமே மனதில் கொண்டிருந்தார். ஆகையால், அவர் தயக்கத்தோடு நாசருடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார். இரு தரப்பினரும் பலவந்தமாக அச்சுறுத்தப்பட்டதால், ஒரு போர்ச் சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. அரபு வானொலி நிலையங்களும் இஸ்ரேலிய நாளிதழ்களும் தினமும் ஒன்றையொன்று அச்சுறுத்திக் கொண்டிருந்தன. இதற்கிடையில், இஸ்ரேல் விரக்தியின் ஆழத்திற்குத் தள்ளப்பட்டது. பிரதமர் லெவி எஷ்கோலும் கவலைப்பட்டார். மே 28 அன்று அவர் ஆற்றிய உரையால் மக்கள் மேலும் அஞ்சினர். அவர் தனது உரையின்போது தடுமாறினார், அவரால் சரியாகப் பேசக்கூட முடியவில்லை. உரையாற்றிய பிறகு நடந்த ஒரு கூட்டத்தில், இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் பிரதமரை கடுமையாகச் சாடினர். "இன்று உங்கள் மிகப்பெரிய ஆயுதத்தை நீங்கள் இழந்துவிட்டீர்கள். அந்த ஆயுதம் மற்றவர்களின் பயம்" என்று பிரிகேடியர் ஜெனரல் ஏரியல் ஷரோன் கூச்சலிட்டார். போருக்குச் செல்லும் முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இராக் ராணுவம் ஜோர்டான் பள்ளத்தாக்கையும் இஸ்ரேலையும் நோக்கி முன்னேறியிருந்தது. எனவே ஜூன் 4 அல்லது 5ஆம் தேதி இஸ்ரேல் தாக்கும் என்று நாசர் கணித்தார். போர் தொடங்கிவிட்டது. ஜூன் 5ஆம் தேதி காலை 7:45 மணிக்கு, எகிப்து, ஜோர்டான், சிரியா முழுவதும் உள்ள விமான நிலையங்களை அழிப்பதற்காக இஸ்ரேலிய போர் விமானங்கள் விரைந்து சென்றபோது, டெல் அவிவின் சக்திவாய்ந்த தலைவர்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தனர். இஸ்ரேலிய விமானப் படை பல ஆண்டுகளாக இதற்கெனத் தயாராகி வந்தது. அவர்களின் ஆராய்ச்சி மிகவும் விரிவானதாக இருந்ததால், அரபு ராணுவ அதிகாரிகளின் குரல்களை அடையாளம் காணக்கூடிய ஒரு தனி அமைப்பைக்கூட அவர்கள் உருவாக்கியிருந்தனர். அரபு நாடுகளின் ராணுவக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, வானத்தில் இருந்து குண்டுகள் விழத் தொடங்கின. வெறும் ஐந்து நாட்களில், இஸ்ரேல் எகிப்து, ஜோர்டான், சிரியாவின் படைகளை வேருடன் பிடுங்கியது. அது எகிப்திடம் இருந்து காஸா முனை, சினாய் பகுதி ஆகியவற்றையும், சிரியாவிடம் இருந்து கோலன் குன்றுகளையும், ஜோர்டானிடம் இருந்து மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமையும் கைப்பற்றியது. இரண்டாயிரம் ஆண்டுகளில் முதன்முறையாக, யூத மக்களின் புனிதமான இடமாகக் கருதப்படும் ஜெருசலேம் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இந்த முறையும் பாலத்தீனர்கள் அங்கிருந்து இடம்பெயர வேண்டியிருந்தது. அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் நிலைமை 1948இல் இருந்ததைப் போல மோசமாக இருக்கவில்லை. நாசர் ராஜினாமா செய்தார். ஆனால் மக்களின் எதிர்ப்புக்குப் பிறகு அதைத் திரும்பப் பெற்றார். அவர் இறக்கும் வரை பதவியில் நீடித்தார். அடுத்த அதிபரான அன்வர் சதாத், இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதன் விளைவாக, அவரது சொந்த மெய்க்காப்பாளர்களே அவரைச் சுட்டுக் கொன்றனர். எகிப்தின் ராணுவ தளபதி அமீர் மர்மமான சூழ்நிலையில் உயிரிழந்தார். அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ஜோர்டானின் மன்னர் ஹுசைன் கிழக்கு ஜெருசலேமை இழந்தார். ஆனால் அவரது ஆட்சி அப்படியே நீடித்தது. இரு நாடுகளும் 1994இல் ஓர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. சிரியாவின் விமானப்படை தளபதி ஹபீஸ் அல்-அசத் 1970இல் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 2000ஆம் ஆண்டில் அவர் காலமான பிறகு, அவரது மகன் பஷர் அல்-அசத் பொறுப்பேற்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3ex94v1dxjo
  25. யுவானோ சுவானோ... என்னங்கடா இதான் சாக்கு என்டு இப்படி இறங்கிட்டியள்..?
  26. கொஞ்சநாள் நிம்மதியாக இருப்போம் என்று அத்தார் தனியே அனுப்பினாலும் போனுக்கு மேல போன் போட்டு ஒரே குடைச்சல் தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.