stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images
குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி இது பொறி மற்றும் நடுப்பகுதி என்று எண்ணுகிறேன்.
- 68 replies
-
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
-
Tagged with:
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
- eelam kamikaze pilots
- ltte photos
- வான்புலிகள் தாக்குதல்
- tamil tigers airforce
- வான்படை வானூர்திகள்
- ltte air control room
- ltte images
- இலங்கை வான்படை
- zlin 143 ltte
- ltte skyforce
- sri lanka airforce
- வான்புலி தாக்குதல்
- வான்புலிகள்
- வான்படை
- தமிழரின் வான்படை
- tamil eelam air force
- tamil rebel airforce
- ltte airforce
- air tigers
- புலிகளின் வான்படை
- kamizkaze pilots
- srilankan airforce
- ltte gyroplane
- வான்கரும்புலிகள்
- சிங்கள வான்படை
- taf
- ltte airwing
- eelam airforce
- tamil eelam airforce
- சிறீலங்கா வான்படை
- தமிழீழ வான்படை
- tamileelam airforce
- tamil airforce
- புலிகளின் வான்பிரிவு
- வான்பிரிவு
- eelam air force
- tamil air force
- tamil tigers
- liberation tigers of tamil eelam
- ltte
- eelam
- tamil eelam
- tamil pilots
- tamil eelam de-facto
- tamil tigers images
- liberation tigers of tamil eelam images
- tigers sri lanka
- tamil guerillas
- eelam guerillas
- sri lankan guerillas
- tamil eelam guerillas
- tigers images
- tamil eelam images
- guerilla airforce
- rebel airforce
- tamil eelam rebel airforce
- taf ltte
- ltte aircrafts
- tamils planes
- tamils air force
- tamil aircraft
- tamil tigers aircrafts
- tamils aircraft
- tamil eelam aircrafts
- airforce
- tamil forces
-
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
ஐயையோ டக்ளஸ் தேவானந்தா கைதா?? இவருக்காக தீக்குளிக்கப் போவது யார்???🧐
-
வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images
குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி இது வால் என்று நினைக்கிறேன். மற்றது இது முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை.
- 68 replies
-
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
-
Tagged with:
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
- eelam kamikaze pilots
- ltte photos
- வான்புலிகள் தாக்குதல்
- tamil tigers airforce
- வான்படை வானூர்திகள்
- ltte air control room
- ltte images
- இலங்கை வான்படை
- zlin 143 ltte
- ltte skyforce
- sri lanka airforce
- வான்புலி தாக்குதல்
- வான்புலிகள்
- வான்படை
- தமிழரின் வான்படை
- tamil eelam air force
- tamil rebel airforce
- ltte airforce
- air tigers
- புலிகளின் வான்படை
- kamizkaze pilots
- srilankan airforce
- ltte gyroplane
- வான்கரும்புலிகள்
- சிங்கள வான்படை
- taf
- ltte airwing
- eelam airforce
- tamil eelam airforce
- சிறீலங்கா வான்படை
- தமிழீழ வான்படை
- tamileelam airforce
- tamil airforce
- புலிகளின் வான்பிரிவு
- வான்பிரிவு
- eelam air force
- tamil air force
- tamil tigers
- liberation tigers of tamil eelam
- ltte
- eelam
- tamil eelam
- tamil pilots
- tamil eelam de-facto
- tamil tigers images
- liberation tigers of tamil eelam images
- tigers sri lanka
- tamil guerillas
- eelam guerillas
- sri lankan guerillas
- tamil eelam guerillas
- tigers images
- tamil eelam images
- guerilla airforce
- rebel airforce
- tamil eelam rebel airforce
- taf ltte
- ltte aircrafts
- tamils planes
- tamils air force
- tamil aircraft
- tamil tigers aircrafts
- tamils aircraft
- tamil eelam aircrafts
- airforce
- tamil forces
-
வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images
குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி வான்புலிகளின் நிலை-இறக்கை வானூர்தியானது பாதி கட்டப்பட்ட குறையியிலேயே புலிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது என்பது கிடைக்கப்பெற்றுள்ள படிமங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. சிங்களவரின் கைகளிற்கு தமது தொழில்நுட்பம் கிடைக்கக்கூடாது என்ற நோக்கிலேயே புலிகள் இவ்வாறு செய்துள்ளனர் என்பதை ஊகித்தறியலாம். இது வானூர்தி முகப்பு என்று எண்ணுகிறேன். எனினும் வானூர்தி தொடர்பில் அறிந்தவர்கள் இவற்றை கண்டுபிடிக்கவும்.
- 68 replies
-
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
-
Tagged with:
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
- eelam kamikaze pilots
- ltte photos
- வான்புலிகள் தாக்குதல்
- tamil tigers airforce
- வான்படை வானூர்திகள்
- ltte air control room
- ltte images
- இலங்கை வான்படை
- zlin 143 ltte
- ltte skyforce
- sri lanka airforce
- வான்புலி தாக்குதல்
- வான்புலிகள்
- வான்படை
- தமிழரின் வான்படை
- tamil eelam air force
- tamil rebel airforce
- ltte airforce
- air tigers
- புலிகளின் வான்படை
- kamizkaze pilots
- srilankan airforce
- ltte gyroplane
- வான்கரும்புலிகள்
- சிங்கள வான்படை
- taf
- ltte airwing
- eelam airforce
- tamil eelam airforce
- சிறீலங்கா வான்படை
- தமிழீழ வான்படை
- tamileelam airforce
- tamil airforce
- புலிகளின் வான்பிரிவு
- வான்பிரிவு
- eelam air force
- tamil air force
- tamil tigers
- liberation tigers of tamil eelam
- ltte
- eelam
- tamil eelam
- tamil pilots
- tamil eelam de-facto
- tamil tigers images
- liberation tigers of tamil eelam images
- tigers sri lanka
- tamil guerillas
- eelam guerillas
- sri lankan guerillas
- tamil eelam guerillas
- tigers images
- tamil eelam images
- guerilla airforce
- rebel airforce
- tamil eelam rebel airforce
- taf ltte
- ltte aircrafts
- tamils planes
- tamils air force
- tamil aircraft
- tamil tigers aircrafts
- tamils aircraft
- tamil eelam aircrafts
- airforce
- tamil forces
-
வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images
தமிழீழ வான்படையால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த வானூர்திக்கான வரைபட மாதிரி கீழே நீங்கள் காண்பது மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி (Conventional fixed wing aircraft) ஆகும்.
- 68 replies
-
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
-
Tagged with:
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
- eelam kamikaze pilots
- ltte photos
- வான்புலிகள் தாக்குதல்
- tamil tigers airforce
- வான்படை வானூர்திகள்
- ltte air control room
- ltte images
- இலங்கை வான்படை
- zlin 143 ltte
- ltte skyforce
- sri lanka airforce
- வான்புலி தாக்குதல்
- வான்புலிகள்
- வான்படை
- தமிழரின் வான்படை
- tamil eelam air force
- tamil rebel airforce
- ltte airforce
- air tigers
- புலிகளின் வான்படை
- kamizkaze pilots
- srilankan airforce
- ltte gyroplane
- வான்கரும்புலிகள்
- சிங்கள வான்படை
- taf
- ltte airwing
- eelam airforce
- tamil eelam airforce
- சிறீலங்கா வான்படை
- தமிழீழ வான்படை
- tamileelam airforce
- tamil airforce
- புலிகளின் வான்பிரிவு
- வான்பிரிவு
- eelam air force
- tamil air force
- tamil tigers
- liberation tigers of tamil eelam
- ltte
- eelam
- tamil eelam
- tamil pilots
- tamil eelam de-facto
- tamil tigers images
- liberation tigers of tamil eelam images
- tigers sri lanka
- tamil guerillas
- eelam guerillas
- sri lankan guerillas
- tamil eelam guerillas
- tigers images
- tamil eelam images
- guerilla airforce
- rebel airforce
- tamil eelam rebel airforce
- taf ltte
- ltte aircrafts
- tamils planes
- tamils air force
- tamil aircraft
- tamil tigers aircrafts
- tamils aircraft
- tamil eelam aircrafts
- airforce
- tamil forces
- Today
-
வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images
வானூர்தி தொடர்பான கட்டுமான கல்விக்கு புலிகள் பாவித்த ஆங்கில நூல்கள்: இந்தப் படிமங்கள் யாவும் புதுக்குடியிருப்பு மேற்கிலிருந்த புலிகளின் வானூர்தி கட்டுமான தொழிற்சாலையிலிருந்து எடுக்கப்பட்டன. வானூர்தி தொடர்பான கல்வியை புலிகள் ஆங்கிலத்தில் மேற்கொண்டுள்ளனராக்கும்:
- 68 replies
-
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
-
Tagged with:
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
- eelam kamikaze pilots
- ltte photos
- வான்புலிகள் தாக்குதல்
- tamil tigers airforce
- வான்படை வானூர்திகள்
- ltte air control room
- ltte images
- இலங்கை வான்படை
- zlin 143 ltte
- ltte skyforce
- sri lanka airforce
- வான்புலி தாக்குதல்
- வான்புலிகள்
- வான்படை
- தமிழரின் வான்படை
- tamil eelam air force
- tamil rebel airforce
- ltte airforce
- air tigers
- புலிகளின் வான்படை
- kamizkaze pilots
- srilankan airforce
- ltte gyroplane
- வான்கரும்புலிகள்
- சிங்கள வான்படை
- taf
- ltte airwing
- eelam airforce
- tamil eelam airforce
- சிறீலங்கா வான்படை
- தமிழீழ வான்படை
- tamileelam airforce
- tamil airforce
- புலிகளின் வான்பிரிவு
- வான்பிரிவு
- eelam air force
- tamil air force
- tamil tigers
- liberation tigers of tamil eelam
- ltte
- eelam
- tamil eelam
- tamil pilots
- tamil eelam de-facto
- tamil tigers images
- liberation tigers of tamil eelam images
- tigers sri lanka
- tamil guerillas
- eelam guerillas
- sri lankan guerillas
- tamil eelam guerillas
- tigers images
- tamil eelam images
- guerilla airforce
- rebel airforce
- tamil eelam rebel airforce
- taf ltte
- ltte aircrafts
- tamils planes
- tamils air force
- tamil aircraft
- tamil tigers aircrafts
- tamils aircraft
- tamil eelam aircrafts
- airforce
- tamil forces
-
1998ம் ஆண்டு செக். குடியரசில் கடத்தப்பட்ட 4 வானூர்திகளும் குற்றம்சாட்டப்பட்ட புலிகளும்
இது 1998ம் ஆண்டு யாழிலிருந்து வெளியாகும் நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தி. முழு விரிப்பு எனக்குத் தெரியாது. இருப்பினும் அறிந்தவற்றை இங்கே வரலாறாக எழுதி வைத்துச் செல்கிறேன். செக் குடியரசிலிருந்த (அப்படித்தான் நினைவு) ஓர் வானூர்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏறத்தாழ 10இற்கும் மேற்பட்ட தெற்காசியர்கள் வேலைசெய்து வந்ததாகவும் ஒருநாள் பின்னேரம் அவர்கள் அங்கிருந்த 4 வானூர்திகளை களவாடிச் சென்றுவிட்டனர் என்பதுதான் முக்கிய செய்தியே. அந்த வானூர்தி களவாடல் நிகழ்விற்குப் பிறகு ஒரு கிழமை கழித்து நான்கு வானூர்திகளுக்குமான உரிய பணம் காசோலையில் அனுப்பி வைக்கப்பட்டதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிகழ்விற்கும் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக அக்காலத்திய சிங்கள அரசாங்கம் குற்றம் சுமத்தியதை அந்நிறுவனம் மறுத்தது. ஆருக்கேனும் நேரமிருந்தால் அக்காலத்திய யாழ் செய்தித்தாள்களை புரட்டி இச்செய்தியை கண்டுபிடியுங்கள். நன்றி
-
அமரசிறி : கருணாகரன்
பரவாயில்லையே AIயும் என்னைப் போலவே சிந்தனையை கொண்டிருக்கிறதே.😇 நீண்ட கதையானாலும் முடிவுவரை கட்டிப்போட்டிருந்தது உண்மை. ஆனாலும் AIயின் முடிவுரை உண்மைதான். இப்படியான நிகழ்வுகளின் வலிகள் வாழ்நாள் முழுதும் தொடரும் என்பது உண்மையே.
-
🚨 கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை ! 🇨🇦
🚨 கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை ! 🇨🇦 written by admin December 26, 2025 கனடாவின் டொராண்டோ(Toronto) பல்கலைக்கழகத்தின் (University of Toronto) ஸ்கார்பரோ (Scarborough) வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 📝 முக்கிய விபரங்கள்: சம்பவம்: ஸ்கார்பரோ பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்: உயிரிழந்தவர் 20 வயதுடைய இந்திய மாணவர் என்பதை டொராண்டோ காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். (அவரது விபரங்கள் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் முழுமையாக வெளியிடப்படும்). காவல்துறை நடவடிக்கை: துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது தற்செயலானதா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி: கனடாவில் அண்மைக் காலங்களில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. Tag Words: #TorontoShooting #IndianStudent #CanadaNews #Scarborough #UniversityOfToronto #SafetyAlert #StudentDeath #InternationalStudents #TamilNews https://globaltamilnews.net/2025/225028/
-
அமரசிறி : கருணாகரன்
நீண்ட கதை என்பதால் படிக்க மிகவும் நேரம் எடுத்தது. எனினும் எமது போராட்டத்தினுள் வாழ்ந்தவர்களுக்கு முக்கியமான கருப்பொருள். நானும் எனது கண்முன்னே இயக்கம் ஒரு பெண்ணை சரியாகச் சுடாமல் அந்தப் பெண் தவழ்ந்தவாறே “தண்ணீர்” கேட்டதையும், ஒரு முதியபெண் இரங்கிக் கொடுத்த தண்ணீரைக் குடிக்கும்போது இயக்கம் மீண்டும் வந்து நெஞ்சில் இரத்தம் கொப்பளிக்க “சரியாகச்” சுட்டதையும் நேரில் பார்த்திருந்தேன். சுட்டவர் சுடப்பட்டவரை நேரே கண்ணைப் பார்க்காமல் தலையைத் திருப்பிச் சுட்டதுதான் எப்போதாவது நினைவில் வரும். மற்றும்படி ஒபரேசன் லிபரேசன் காலத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட பலரின் உடல்களை “புதினம்” பார்த்திருந்தேன். ஆனால் அவைகள் தொந்தரவு செய்யும் அளவுக்கு நினைவுகளில் வருவதில்லை. Google AI tool Gemini ஐ கீழே உள்ளவாறு கேட்டேன்.. நான்: பின்வரும் இணைப்பில் உள்ள நீண்ட சிறுகதையை கதைகள் படிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் சுருக்கி, இக்கதையின் நிறை குறைகளை ஒரு தேர்ந்த இலக்கிய விமர்சகர் போன்று விமர்சிக்கமுடியுமா? https://akazhonline.com/?p=11045 Gemini: கருணாகரன் எழுதிய "அமரசிறி" என்னும் சிறுகதையின் சுருக்கமும், ஒரு இலக்கிய விமர்சகர் பார்வையில் அக்கதைக்கான விமர்சனமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் இலங்கையின் போர்க்காலச் சூழலையும், போருக்குப் பிந்தைய மனவடுக்களையும் மையமாகக் கொண்டு இக்கதை நகர்கிறது. உளநல மருத்துவரான மேகதாஸ், தனது நண்பரான ஒரு எழுத்தாளரை (கதையின் சொல்லியை) சந்தித்து ஒரு விசித்திரமான வேண்டுகோளை விடுக்கிறார். தனது நோயாளி ஒருவரின் கதையைச் சிறுகதையாகவோ அல்லது கட்டுரையாகவோ எழுதி வெளியிட வேண்டும் என்றும், அதன் மூலம் சிங்கள மொழியில் யாரேனும் அதை மொழிபெயர்த்து அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட நபர்களைச் சென்றடைய வேண்டும் எனவும் கேட்கிறார். அந்த நோயாளியின் பெயர் ஞானச்செல்வன். முன்னாள் போராளியான இவர், போர்க்காலத்தில் 'அமரசிறி' என்ற சிங்களச் சிப்பாயைச் சிறைபிடித்த நினைவுகளால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். போர்க்களத்தில் எதிரியாகச் சந்தித்தாலும், அமரசிறியிடம் ஏற்பட்ட மனிதாபிமான உரையாடல்களும், அவர் காட்டிய குடும்பப் புகைப்படமும் ஞானச்செல்வனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. ஆனால், போரின் இறுக்கமான சூழல் காரணமாக அமரசிறியைக் கொல்லவேண்டிய கட்டாயம் ஞானச்செல்வனுக்கு ஏற்படுகிறது. ஆண்டுகள் கடந்தும், அந்தக் கொலைக்குரிய குற்றவுணர்ச்சி (Guilt) ஞானச்செல்வனைத் தூங்கவிடாமல் வதைக்கிறது. அமரசிறியின் முகம் நினைவிலிருந்து மங்கிக்கொண்டே போவது அவருக்கு மேலும் பதற்றத்தைத் தருகிறது. ஓவியர் ஒருவரைக்கொண்டு அமரசிறியின் முகத்தை வரைய முயல்கிறார். மருத்துவரிடம் தனது நினைவுகளை அழிக்குமாறு கெஞ்சுகிறார். ஆனால் மருத்துவர் மேகதாஸ், "உங்களை மட்டும் குணப்படுத்த முடியாது, அமரசிறியின் குடும்பமும் இந்தக் காயத்தின் ஒரு பகுதி" என்று கூறி, அமரசிறியின் குடும்பத்தைக் கண்டறிந்து அவர்களிடம் மன்னிப்புக் கோருவதே அல்லது உண்மையைச் சொல்வதே முழுமையான நிவாரணம் என்று வழிகாட்டுகிறார். அமரசிறியின் குடும்பத்தைத் தேடும் ஒரு முயற்சியாகவே இக்கதை எழுதப்படுகிறது. இலக்கிய விமர்சனம் நிறைகள் (Strengths): 1. ஆழமான உளவியல் பார்வை: வழக்கமான போர்க்காலக் கதைகளைப் போல வெறும் வன்முறையையோ அல்லது இழப்பையோ மட்டும் பேசாமல், இக்கதை 'குற்றவுணர்ச்சி' (Survivor’s Guilt) என்ற உளவியல் சிக்கலை மிக நுட்பமாகக் கையாளுகிறது. எதிரியைக் கொல்வது வீரமாகக் கருதப்படும் போர்க்களத்தில், அந்த எதிரியை ஒரு சக மனிதனாகப் பார்த்த பிறகு ஏற்படும் மனப்போராட்டத்தை ஆசிரியர் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். 2. கதாபாத்திர வார்ப்பு: ஞானச்செல்வனின் பாத்திரம் மிக அழுத்தமாகப் படைக்கப்பட்டுள்ளது. அவன் ஒரு கொலையாளி என்பதைத் தாண்டி, அவனுக்குள் இருக்கும் மென்மையான மனிதன் படும் வேதனை வாசகனைக் கலங்கடிக்கிறது. அதேபோல் மருத்துவர் மேகதாஸ், வெறும் மருத்துவராக மட்டுமல்லாமல், சமூகத்தின் காயங்களை ஆற்ற நினைக்கும் ஒரு தத்துவவாதியாகவும் மிளிர்கிறார். "வலி என்பது ஒரு விளக்கு. அது உங்களை மட்டும் ஒளி வீசிப் பார்க்கச் சொல்வதில்லை; அது பாதிக்கப்பட்டவர்களின் இருளையும் ஒளி வீசிப் பார்க்கச் சொல்கிறது" போன்ற வசனங்கள் கதையின் தரத்தை உயர்த்துகின்றன. 3. மனிதம் பேசும் களம்: இனம், மொழி, தேசம் ஆகியவற்றைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்துவது இக்கதையின் மிகப்பெரிய பலம். சிங்களச் சிப்பாயான அமரசிறியை ஒரு எதிரியாகச் சித்தரிக்காமல், அவனும் ஒரு குடும்பத் தலைவன், அவனுக்கும் கனவுகள் இருந்தன என்பதை ஞானச்செல்வனின் நினைவுகள் வழியே கடத்திய விதம் சிறப்பு. 4. கதை சொல்லும் முறை: கதைக்குள் கதை (Story within a story) என்ற உத்தியை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். இது கதைக்கு ஒரு ஆவணத் தன்மையையும் (Documentary feel), நம்பகத்தன்மையையும் கொடுக்கிறது. ஒரு தேடுதலுக்கான கருவியாக இக்கதை படைக்கப்பட்டிருப்பது வாசிப்பனுபவத்தை மேன்மைப்படுத்துகிறது. குறைகள் (Weaknesses): 1. நீளமான முன்னுரை: கதையின் ஆரம்பத்தில் வரும் மருத்துவக் கல்லூரி விரிவுரைக்காட்சிகள் மற்றும் சூழல் விவரிப்புகள் கதைக்குத் தேவையான பின்புலத்தை அமைத்தாலும், அவை சற்று நீளமாக இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. வாசகன் நேரடியாக மையக்கருவிற்குள் நுழைய இது சற்று தாமதப்படுத்துகிறது. 2. நாடகத்தன்மை: சில இடங்களில் மருத்துவர் பேசும் வசனங்கள் இயல்பான உரையாடலாக இல்லாமல், வாசகனுக்குப் போதிப்பது போன்ற தொனியில் (Didactic tone) அமைகின்றன. குறிப்பாக, ஓவியம் வரையும் காட்சிகள் மற்றும் அதைச் சார்ந்த விவரிப்புகள் இன்னும் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கலாம். முடிவுரை: "அமரசிறி" ஒரு சாதாரண சிறுகதை அல்ல; அது போருக்குப் பிந்தைய மனசாட்சியின் குரல். போர் முடிந்துவிட்டாலும், அது மனித மனங்களில் ஏற்படுத்தும் வடுக்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்பதை இக்கதை ஆணித்தரமாக உணர்த்துகிறது. ஒரு தேர்ந்த இலக்கியப் படைப்பாகவும், அதே சமயம் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. வாசிப்பவர்களின் மனதில் ஈரம் கசியவைக்கும் ஒரு கனமான படைப்பு இது.
-
மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
- கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 20.12.2025
-
கருத்துப்படம் 19.12.2025
-
கருத்துப்படம் 17.12.2025
-
கேலி 15.12.2025
-
கருத்துப்படம் 12.12.2025
-
கருத்துப்படம் 11.12.2025
-
கருத்துப் படம் 06.12.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 15.10.2025
-
கருத்துப்படம் 10.10.2025
-
கருத்துப்படம் 09.10.2025
-
கருத்துப்படம் 07.10.2025
-
கருத்துப்படம் 04.10.2025
-
ரசோதரன்-இன்னுமொரு பாலம் 22.09.2025
- தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்
ஏற்கெனவே அல்ல, இன்றும் தமிழர்கள் புத்தரைக் கடவுளாகவே வணங்குகிறார்கள், வழிபடுகிறார்கள். சாதி, சமயம், மதம் கடந்து எங்கு ஒரு கடவுளுக்குரிய கோவிலைக் கடந்து செல்லும் சந்தர்ப்பம் நேரும்போதும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாகவேனும் தமிழர்கள் வணங்கிச் செல்வதைக் காணலாம். தமிழ் இனத்தவரைத் தவிர வேறு எந்த இனத்தவரிடையும் இந்தப் பண்பைக் காண்பது அரிது.- “60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!
எதுக்கும் முதல் போடவேண்டும் என்பதை போல, 60 களில் ஆரோக்கிய்யம் இயன்ற அளவு அவரவர் கட்டுபாட்டில் இருக்க, ஆக குறைந்தது 50 வயதில் இருந்து தயார் படுத்த வேண்டும். விரும்பியதை கைவிடட வேண்டும் என்பது அல்ல, உணவில், அசைவில் .. போன்றவற்றில் வேண்டிய, அல்லது இயன்ற மாற்றங்கள் மாற்றங்கள்- தேசங்களின் குரல்கள்
இங்கேயும் அப்படித்தான். அவர்கள் பார்வையில் இந்தியனாகத்தான் என்னைப் பார்த்தார்கள். ஒரு சிலர் “ஆபிரிக்காவா?” என்றும் கேட்டதுண்டு. அதிகம் எதற்கு, என்னை முதன் முதலாக சந்தித்த போது, தமிழ்சிறி என்னை பிறேஸிலியன் என்றே நினைத்துக் கொண்டாராம். சரி..சரி.. நானும் ஒத்துக்கொள்கிறேன்😊 தமிழ், சிங்களம் எனப் பிரிந்திருந்தாலும் ஆங்கிலம் எங்களுக்குப் பொது மொழியாகவே இருக்கிறது. ஒருவேளை கூட்டுக் கோழிக்கு, அவர்களுடனான பழக்கத்தில் அந்தத் தொனி வந்திருக்கலாம்.- அமரசிறி : கருணாகரன்
நீண்ட கதை. பார்த்தவுடன் பிறகு வாசிக்கலாம் என்று விட்டுவிட்டேன். அதிகாலையில், அமைதியான நேரங்களில்தான் நான் அதிகம் வாசிப்பேன். இன்று 'அமரசிறி'யை வாசிக்க முடிந்தது. வாசிக்கத் தொடங்கியபோது, பல நினைவுகள் வந்து குழப்பிக் கொண்டிருந்தன. அதனால், நின்று நிதானித்து வாசிக்க, நினைத்த நேரத்தை விட கொஞ்சம் அதிகமான நேரம் எனக்குத் தேவைப்பட்டு விட்டது. சில விஷயங்கள், அதை நாங்களே செய்யாவிட்டாலும், பார்வையில் விழுந்து விட்டாலே நினைவில் தங்கிவிடும். என்னிடமும் பல நினைவுகள் இருக்கின்றன. இன்றுவரை அதை மறக்க முடியவில்லை. எப்போதாவது, அவை வந்து போகின்றன. 'அமரசிறி'யை வாசிக்கும் போதும், அந்த நினைவுகள் வந்து நின்று தொல்லைகளும் தந்தன. எண்பதுகளின் ஆரம்பம். வெளிநாட்டுக்கு இடம் பெயர்வதற்கான எண்ணம் எனக்குள் தோன்றிய காலம். பத்திரகாளி கோவில் வாசலோடு இருந்த திண்ணையில் அமர்ந்து, நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். திடீரென வீதியில் சலசலப்பு. வெள்ளை வானில் இருந்து கைகள் கட்டப்பட்டவரை ஒருவர் அழைத்து வந்தார், இல்லை, இழுத்துக் கொண்டு வந்தார். அவர்களின் பின்னால் ஆயுதம் ஏந்திய இருவர் வந்து கொண்டிருந்தனர். இழுத்துக் கொண்டு வந்தவர் எனக்கு நன்கு தெரிந்தவர், பின்னாளில் கடற்படைத் தளபதியான சூசை. அப்போதிருந்த பதட்டத்தில் எல்லோரும் போல், நானும் எழுந்து கொண்டேன். என்னை கடந்து போகும் போது, சூசை மட்டுமல்ல, இழுத்து வந்தவரும் என்னைப் பார்த்தார், அல்லது எங்களைப் பார்த்தனர். அந்த மனிதர், "தண்ணீர்" என்று கேட்டார். ஒரு நொடிதான், இழுத்துக் கொண்டு செல்லப்பட்டுவிட்டார். அந்த ஒரு நொடியிலான அவரது பார்வையும், "தண்ணீர்" கேட்ட அவரது குரலும், இன்றும் நினைவில் வந்து, வந்து போகின்றன. நடப்பதைப் பார்க்க கூட்டம் கூடியது. நான் பத்திரகாளி கோவிலின் முன்னாலேயே நின்று விட்டேன். "காட்டிக் கொடுப்பவர்களுக்கும், துரோகிகளுக்கும் இதுதான் தண்டனை" என்ற சூசையின் குரல் கேட்டது. தொடர்ந்து ஒரு துப்பாக்கியின் வெடிச்சத்தம். நின்று கொண்டிருந்த காந்தி சிலைக்குப் பின்னால், கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவரின், தலை தொங்கிய நிலையில், நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நகரத்தில் நடந்த முதல் சம்பவம் இதுதான். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் சிவனுகணேசன். நாற்பது வருடங்களுக்கு மேலாக, அடிக்கடி என்னிடம் வந்து போகிறவர்களில் சிவனுகணேசனும் ஒருவர்.- ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா?
அண்மையில் நானும் இந்த மதுவல்லாத பியரில் கொஞ்சம் நாட்டம் காட்டுகிறேன். இப்போதைக்கு ஹைனிக்கன் 0%, ஸ்டெல்லா 0% சுவை நன்றாக உள்ளது. ஏனையவை பிடிக்கவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும் சிலது zero sugar ஆனால் அல்கஹோல் இருக்கும். பார்த்து வாங்காவிட்டால் கற்பு பறிபோய்விடும்😂- மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இங்க கருத்துக்களை பார்த்தால்… “என்னது பெரியவர் சாகலியா… செத்துடார்ன்னு நம்பி வெட்டியான் கூட சாரயத்தை கடனுக்கு குடிச்சிட்டானே”… எண்ட விவேக் ஜோக்தான் நினைவுக்கு வருகிறது. கவலை வேண்டாம் மகிந்த சாகும் போது அனுர முன்னிலையில் முழு ராசமரியதையுடன் சங்கநாயகர்கள் ஓதித்தான் அனுப்புவார்கள். தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும்… மறுபடியும் தர்மமே மண்ணை கவ்வும்😂- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
டங்க டலீவர் டக்கா அவர்களையும், ரணில் போல ஒரு “நிக்காத வழக்கில்” அனுர அரசு கைது செய்து நாடகம் ஆடுகிறது. ரணில், டக்லசை எல்லாம் தண்டிப்பது அல்ல அனுரவின் நோக்கம். டக்காவும் அனுரவும் ஒரே கூட்டணியில் இருந்தோர்தான். #ஈயம் பூசுனா மாரியும் இருக்கோணும், பூசவும் கூடாது- ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! - ஷோபாசக்தி
ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.கவும்! ஷோபாசக்தி இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளியலிலும் போரிலும் இந்திய ஒன்றிய அரசின் தலையீடும் கட்டுப்பாடும் இன்றுவரை வலுவாகவே இருக்கின்றது. எனவே, இந்தியப் பெருநிலப் பரப்பில் நிகழ்ந்த எந்த அரசியல் – பண்பாட்டு மாற்றங்களும் இலங்கையிலும் வலுவான பாதிப்பைச் செலுத்தியுள்ளன. இந்த வகையில், தமிழகத்தில் தோன்றிய திராவிட இயக்கக் கருத்தியல் இலங்கைத் தமிழர்களிடையேயும் உடனடியாகவே பரவத் தொடங்கியது. 1925-இல் ஈ.வெ.ரா. பெரியாரால் தொடக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியலை உள்வாங்கி, 1927-இல் யாழ்ப்பாணத்தில் ‘திராவிடன்’ பத்திரிகை வெளியாகத் தொடங்கியது. ‘திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம்’, ‘திராவிட வித்தியாசாலை’ ஆகியவை யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டன. வடமராட்சியில், தமிழறிஞரும் பகுத்தறிவாளருமான கந்தமுருகேசனாரின் தலைமையில் இளைஞர் திரள் திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் செயற்பட்டது. இவர்களால் ‘திராவிடர் கலை மன்றம்’ என்ற வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டு ‘திராவிட நாடு’ ,’குடியரசு’ போன்ற பத்திரிகைகள் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டன. 4 பெப்ரவரி 1938-இல் ‘புலோலி’ கிராமச் சங்கத் தேர்தலில் ‘துறையா’ வார்ட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் முருகப்பர் வேலுப்பிள்ளை போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார். இவர் புரோகித மறுப்புச் சங்கத்தின் தலைவருமாவார். அதேபோன்று ‘ஆலடி’ வார்ட்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ப.கதிர்காமர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இந்தச் செய்தியை 10 ஏப்ரல் 1938 தேதியிடப்பட்ட ‘குடியரசு’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. தொகுத்துப் பார்க்கும்போது ஈழத் தமிழர்களிடையே தமிழ்த் தேசியச் சிந்தனைகளும் இடதுசாரிச் சிந்தனைகளும் அறிமுகமாவதற்கு முன்பே திராவிட இயக்கச் சிந்தனைகள் அறிமுகமாகியிருந்தன எனக் கருதக் கூடியதாகவே உள்ளது. 1932-இல் கொழும்பில் ‘இலங்கை சுயமரியாதை இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. இதே வருடத்தில்தான் பெரியார் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய இடங்களில் உரைகளை நிகழ்த்தினார். அந்த உரைகளில் தேசம், தேசியம், சாதி, மதம் போன்றவற்றைக் கடுமையாகத் தாக்கி விமர்சித்துப் பேசி, பகுத்தறிவையும் சுயமரியாதையையும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றுமையையும் பெரியார் வலியுறுத்தினார். ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்ற எண்ணத்தை முன்வைத்தார். இதற்கு 50 வருடங்கள் கழித்துத்தான் பெனடிக்ட் ஆண்டர்ஸனின் ‘Imagined Communities’ என்ற புகழ்பெற்ற நூல் வெளியாகி, தேசியம் என்பது கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கம் என்றவாறான சிந்தனை 1990-களில் தமிழில் விவாதிக்கப்பட்டது. “தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால் அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்” என்று தனது கொழும்பு உரையில் பெரியார் குறிப்பிட்டார். 1944-இல் இந்தியாவில் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு ‘திராவிடர் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டபோது, இலங்கை சுயமரியாதை இயக்கமும் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றிக்கொண்டது. 1949-இல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள் தி.மு.கவை நிறுவியபோது, இலங்கையிலும் அவ்வாறே திராவிடர் கழகத்திலிருந்து ஏ.இளஞ்செழியனின் தலைமையில் ‘இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம்’ (இ.தி.மு.க.) தோற்றம் பெற்றது. இ. தி.மு.க. இலங்கைக்கான அரசியலையே முதன்மையாக முன்னெடுத்தது. ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று திராவிட நாட்டையே முன்வைத்துத் தமிழக தி.மு.க. பெயரிட்டிருப்பதால், இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கு அது பொருந்தாது எனக் கருதிய இ. தி.மு.கவினர் ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்றே தமது இயக்கத்தின் பெயரை வைத்துக்கொண்டனர். இயக்கக் கொள்கைகளான சாதியொழிப்பு, பெண் விடுதலை, மொழிப்பற்று மற்றும் பண்பாட்டு முன்னெடுப்புகளை தி.மு.கவைப் பின்பற்றியே இ. தி.மு.கவினர் அமைத்துக்கொண்டனர். தமிழகத்தில் வெளியாகிய தி.மு.க பத்திரிகைகளின் தொடர்ச்சியாகவே இலங்கையிலும் 1950 – 1971 காலப்பகுதியில் ‘திராவிடமணி'(கொழும்பு) ‘நாம்’ (பதுளை) ‘ஈழமுரசு’ (மட்டக்களப்பு) ‘இனமுழக்கம்’ (யாழ்ப்பாணம்) ‘எரிமலை’ (அக்கரைப்பற்று) போன்ற முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட திராவிடச் சிந்தனைப் பத்திரிகைகள் வெளியாகின. மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடையே இ.தி.மு.க கிளைகளை அமைப்பதற்குத் திராவிட இயக்க சினிமாக்கள் உதவின எனச் சொல்லும் ஆய்வாளர் பெ.முத்துலிங்கம் “பராசக்தி திரைப்படம் மலையக சினிமாக் கொட்டகைகளில் திரையிடப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பிஜி, மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் அவலநிலை பற்றி இப்படத்தில் குரலெழுப்பப்படுவதுடன் சீர்திருத்தக் கருத்துகளையும் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களுக்கு எதிரான காட்சிகளையும் இப்படம் கொண்டிருந்தது” எனச் சுட்டிக்காட்டுகிறார். 1951 டிசம்பரில் முதல் மாநில தி.மு.க மாநாடு சென்னையில் நடத்தப்பட்டபோது, இ. தி.மு.க. பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இ.தி.மு.கவால் திரட்டப்பட்ட நிதியையும் மாநாட்டுக்கு அளித்தனர். காலத்திற்குக் காலம் தமிழகத் திராவிட இயக்கத்தினர் இ.தி.மு.கவின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வந்து நாடு முழுவதும் பரப்புரைக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார்கள். இவ்வாறு இலங்கை வந்தவர்களில் பேராசிரியர் க. அன்பழன், ஆசிரியர் கி.வீரமணி, சி.பி. சிற்றரசு, கலைவாணர் என் .எஸ்.கிருணன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, நாவலர் இரா. நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் போன்ற பலர் இருந்தார்கள். இலங்கையில் தமிழ் மொழிக்குச் சமவுரிமை கோரியும், இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினருக்குக் குடியுரிமை கோரியும், தமிழகத்தில் நிகழ்ந்த இந்தித் திணிப்புக்கு எதிராகவும் இ.தி.மு.க பலமுனைப் போராட்டங்களை முன்னெடுத்த போதெல்லாம், தமிழக தி.மு.கவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழக தி.மு.க. தலைவர்கள் அறிக்கைகளையும் செய்திகளையும் வெளியிட்டார்கள். யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகளை அமைத்திருந்த இ.தி.முக 1957 டிசம்பரில் சாதியொழிப்பை முன்வைத்து சமூக சீர்திருத்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டபோது, அந்த மாநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், அவர்கள் மூவரையும் இலங்கை வர இந்திய அரசு அனுமதிக்கவில்லை. இக்காலகட்டத்தில், இலங்கையில் நிலவும் ஒற்றையாட்சி முறைக்கு மாற்றாகத் தமிழ் -சிங்கள கூட்டாட்சி முறையை முன்வைத்துப் போராடிக்கொண்டிருந்த ‘இலங்கை தமிழரசுக் கட்சி’க்கும் இ.தி.மு.கவுக்கும் இடையே தோழமை நிலவியது. இரு அமைப்புகளும் பல தருணங்களில் சேர்ந்து செயற்பட்டன. இ.தி.மு.க 1960-இல் பண்டாரவளையில் நடத்திய கலாசார மாநாட்டில் தமிழரசுக் கட்சித் தலைவர்களான சாம் தம்பிமுத்து, எம். திருச்செல்வம், செனட்டர் மு. மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். 1961-இல் தமிழரசுக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் ஏ. இளஞ்செழியனின் தலைமையில் இ.தி.மு.க பங்கெடுத்தது. நுவரெலியாவில் இ.தி.மு.க நடத்திய கூட்டத்தில் அ.அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம், மங்கையர்க்கரசி போன்ற தமிழரசுக் கட்சியினர் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழரசுக் கட்சியுடன் கூட்டாகச் செயற்படுவது என இ.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியது. 1962 ஏப்ரலில், ஹட்டன் நகரத்தில் மொழியுரிமை – மலையக மக்களின் குடியுரிமை ஆகியவற்றை முன்வைத்து இ.தி.மு.க நடத்திய இரண்டாவது மாநில மாநாட்டில் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே. வி. செல்வநாயகம் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். கூட்டாட்சி கோரிப் போராடிக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சியுடனான இ.தி.மு.கவின் அரசியல் கூட்டு சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. திராவிட நாடொன்றை உருவாக்க முயலும் தமிழக தி.மு.க செயற்பாட்டின் ஓர் அங்கமே இ.தி.மு.கவின் இந்த நடவடிக்கை எனக்கூறி இ.தி.மு.கவைத் தடை செய்யுமாறு சிங்கள இனவாத அரசியல்வாதிகள் கூக்குரலிட்டார்கள். பெயர்பெற்ற சிங்கள இனவாதிகளான கே.எம்.பி. ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க, கம்யூனிஸ்ட் கட்சியின் பேர்ஸி விக்ரமரத்ன ஆகியோர் நாடாளுமன்றத்தில் இ.தி.மு.வை தடைசெய்யுமாறு கோரினார்கள். இவர்கள் இ.தி.மு.கவை, தமிழக தி.மு.கவின் நேரடிக் கிளை என்றும் அது இலங்கையைத் தமிழகத்துடன் இணைக்க முயல்கிறது என்றும் சொன்னார்கள். 1962 ஜூலை 22-ஆம் தேதி, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசால் அவசரகாலச் சட்டத்தின்கீழ் இ.தி.மு.க. தடைசெய்யப்பட்டது. இந்தத் தடையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் அ.அமிர்தலிங்கம் நீண்ட உரையாற்றினார். அந்த உரையில் “இவர்கள் குறிப்பிடும் பூதம் என்ன என்பதை நான் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்றுத் தோன்றிய ஓர் இயக்கமல்ல. நான் இலங்கைச் சர்வகலாசாலையில் 1946- 1947 ஆண்டளவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை திராவிடர் கழகம் இருந்தது. இவர்களது நோக்கம் இலங்கையில் வாழ்கின்ற மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் சாதியின் பெயரால் காணப்படும் பேதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதாகும்…மலைநாட்டுத் தமிழ் மக்கள் தன்மானம் பெற்றவர்களாகப் பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இலங்கையில் தி.மு.க இயங்கி வருகிறது” என்றார். இலங்கை சமசமாஜக் கட்சியும் இந்தத் தடையைக் கண்டித்து “மலையக மக்களின் அடிப்படை உரிமையான குடியுரிமை இலங்கை அரசால் மறுக்கப்படுவதே இ.தி.மு.கவின் வளர்ச்சிக்கு முதன்மையான காரணம்” என்றது. இ.தி.மு.கவின் மீதான தடை 1963-இல் நீக்கப்பட்டது. 1965-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, இடதுசாரிக் கட்சிகள் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்தார்கள். தமிழரசுக் கட்சியினர் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். எனவே, இ.தி.மு.க. பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு நிலையெடுத்து வடக்கு – கிழக்கில் பரப்புரையை மேற்கொண்டது. எனினும், தேர்தலின் பின்பு தமிழரசுக் கட்சி டட்லி சேனநாயக்கவின் அரசு அமைய ஆதரவு கொடுத்ததால், தமிழரசுக் கட்சியுடனான உறவை இ.தி.மு.க முறித்துக்கொண்டது. 1968-இல் இ.தி.மு.க தன்னை அரசியல் கட்சியாக நிறுவிக்கொண்டது. அதே வருடத்தில் அக்டோபர் 14-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொழும்பில் நடத்தியது. இவ்விழாவில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தி.மு.கவினரும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வை திரிபுபடுத்தி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ‘எத்த’ நாளிதழ் “ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி திருப்பி அனுப்ப வேண்டியுள்ள இந்தியர்களைத் தடுத்து, இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்து, தென்னிந்தியாவையும் வட இலங்கையையும் ஒன்றிணைத்து திராவிட இராச்சியத்தை உருவாக்குவதற்கான சதி அம்பலமாகியுள்ளது. இந்திய தி.மு.கவின் தலைவர் அண்ணாதுரையின் பிறந்தநாளைக் கொண்டாடும் தோரணையில் இலங்கை வந்துள்ள அண்ணாதுரை குழுவினர் இதற்கான அமைப்பு வேலைகளை நடாத்திச் செல்கின்றனர்” என்று எழுதியது இ.தி.மு.க. யாழ் மாவட்டத்தின் நான்காவது மாநில மாநாட்டை 18.09.1969-இல் நடத்தியது. அன்றைய தினம் முற்றவெளியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இ.தி.மு.க பொதுச்செயலாளர் ஏ. இளஞ்செழியன் “தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை சாத்வீகப் போராட்டத்தின் மூலம் பெற முடியாவிடின், புரட்சி ஒன்றின் மூலம் பெறவிரும்பினால் தமிழ் மக்கள் கெரில்லா யுத்தத்திற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். காவல்நிலையங்களைத் தகர்த்தல், ஆயுதப் பயிற்சி முகாம் அமைத்தல் வேண்டும்” என்று கூறினார். எனினும் “அதற்கான தேவை தற்போது இல்லை” என்றும் குறிப்பிட்டார். ஈழநிலத்தில் முதன்முதலாக ‘கெரில்லா போராட்டம்’ என்ற சொல்லாடல் இ.தி.மு.கவாலேயே உச்சரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரையைச் சிங்கள அரசியல்வாதிகள், பத்திரிகைகள் மட்டுமல்லாமல் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்தமாகக் கண்டித்தார்கள். மறுபடியும் இ.தி.மு.க. மீது தடை கோரப்பட்டது. 1971-இல் ஜே.வி.பி. நடத்திய ஆயுதக் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஏ.இளஞ்செழியனும் இ.தி.மு.கவின் பல உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டார்கள். இ.தி.மு.கவை ஒரு பிரிவினைவாதச் சக்தியாகவும், தமிழக தி.மு.கவின் திராவிட நாடு கொள்கையை முன்னெடுக்கும் இலங்கைக் கிளையாகவுமே இலங்கை அரசு, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜே.வி.பி, சிங்கள ஊடகங்கள் போன்றவை தொடர்ச்சியாகச் சித்திரித்துக்கொண்டிருந்தன. இது இ.தி.மு.கவுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. உண்மையில் இ.தி.மு.க, தமிழக தி.மு.கவின் நேரடிக் கிளை என இ.தி.மு.வோ அல்லது தி.மு.கவோ ஒருபோதும் சொல்லியதில்லை. இரண்டு இயக்கங்களுக்குமிடையே அரசியல் – கலாசார கூட்டிணைவு உள்ளது என்றே இரு இயக்கங்களுமே பிரகடனப்படுத்தியிருந்தன. தமிழகத்தில் தி.மு.கவில் பிளவு ஏற்பட்டு, எம். ஜி. ஆர் அ.தி.மு.கவை தோற்றுவித்தார். இந்தப் பிளவின் தாக்கம் இலங்கையிலும் நிச்சயமாக எதிரொலித்து இ.தி.மு.கவைப் பலவீனப்படுத்தியிருக்கும். இன்னொருபுறத்தில் இ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஏ.இளஞ்செழியன் விலகி ‘இளம் சோசலிஸ முன்னணி’ என்ற அமைப்பை உண்டாக்கினார். இந்தப் அமைப்பு ட்ராட்ஸ்கிய அரசியலை முன்னெடுத்தது. 1972-இல் இலங்கையில் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களிடையே தோன்றிய தமிழ்த் தேசியவாதப் பேரலை, 1976-இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழீழப் பிரகடனம், இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்பு ஆகியவற்றால் இலங்கையின் அரசியல் சூழல்கள் மாறின. உள்நாட்டுப் போர் இலங்கையின் மீது இறங்கிக்கொண்டிருந்தது. அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தன. இவையெல்லாம் இ.தி.மு.க. தொடர்ந்தும் வீறுடன் இயங்குவதற்கான சூழலை நாட்டில் இல்லாமல் செய்தன. எழுபதுகளின் இறுதியில் இ.தி.மு.க. கலைந்துபோயிற்று. இ.தி.மு.கவின் துணை அமைப்புகளாகச் செயற்பட்ட ‘இலங்கை இளம் திராவிடர் முன்னேற்றக் கழகம்’, ‘கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றம்’ போன்றவையும் செயலிழந்தன. “இ.தி.மு.க. மூன்று தசாப்த வரலாற்றுடன் அஸ்தமித்த போதிலும், அது ஒரு வரலாற்றுத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது. மலையக மக்களின் அடிப்படை மனித உரிமையான பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்பாக மக்கள் போராட்டத்தை இதுவே முன்னெடுத்தது. மலையக மக்கள் மத்தியில் நிலவிய அறியாமை நீங்கி விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் இ.தி.மு.கவே காரணமாக இருந்துள்ளது” என்று இ.தி.மு.கவை மதிப்பிடுகிறார் ஆய்வாளர் பெ. முத்துலிங்கம். 2 2012-இல், பெரவள்ளூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர் மு. கருணாநிதி “தமிழீழம் என்பது அய்ம்பது – அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தந்தை செல்வா அவர்கள் தலைமையில் உருவான கீதம். அந்தக் காலத்திலிருந்து அவரோடு இணைந்து திராவிட முன்னேற்ற கழகமும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், நானும், நம்முடைய நண்பர்களும் நின்றிருக்கிறோம்” என்றார். உண்மையிலேயே ‘தமிழீழம்’ என்ற கருத்தாக்கத்தின் துணையாக மட்டுமல்லாமல், அந்தக் கருத்தாக்கத்தின் தோற்றத்திற்கான ஒரு காரணமாகவும் தி.மு.க. இருந்திருக்கிறது. 1940 ஆகஸ்ட் 24 -இல், பெரியார் ‘நீதிக்கட்சி’ மாநாட்டில் தொடக்கிவைத்த ‘திராவிட நாடு’ முழக்கத்தை தி.மு.க. 1962-வரை முன்னெடுத்தது. ‘அடைந்தால் தனிநாடு இல்லையேல் சுடுகாடு’ போன்ற பலநூறு முழக்கங்கள் உருவாகின. தி.மு.க. உருவாகிச் சரியாக மூன்று மாதங்கள் கழித்து, இலங்கையில் எஸ்.ஜே. வி. செல்வநாயகத்தின் தலைமையில் ‘தமிழரசுக் கட்சி’ தொடக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்தில் தி.மு.கவின் கருத்தியல் தாக்கம் கணிசமாகவே இருந்தது. தமிழரசுக் கட்சி முன்நிறுத்திய இனவுணர்வு, மொழிப்பற்று, சங்ககாலப் பெருமிதங்கள், பண்டைய தமிழ் அரசர்களின் காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிப்பது, மேடைகளில் முழங்கும் அடுக்குத் தமிழ், தீப்பொறியான பத்திரிகை எழுத்துகள் எல்லாமே தி.மு.கவிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டன. தமிழரசுக் கட்சி ஆதரவு ‘சுதந்திரன்’ பத்திரிகையில் தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்களைக் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின. அண்ணாவும் கலைஞரும் உலகத் தமிழினத்தின் தலைவர்களாகவும் சமூக மறுமலர்ச்சியாளர்களாகவும் கருதப்பட்டார்கள். ஈழத் தமிழ் அரசியலாளர்களின் முதன்மை நட்புச் சக்தியாக தி.மு.கவே இருந்தது. ஈழத் தமிழர்களின் இல்லங்களிலே பேரறிஞர் அண்ணாவின் படமும் கலைஞரின் படமும் தொங்கத் தொடங்கின. அண்ணாவின் பெயரால் படிப்பகங்களும் மன்றங்களும் உருவாகின. அண்ணாவின் உருவச் சிலைகள் நிறுவப்பட்டன. 1969-இல் யாழ்ப்பாண முற்றவெளியில் நிகழ்ந்த இ. தி.மு.க. மாநாட்டில் யாழ்.முற்றவெளிக்கு ‘அண்ணா நகர்’ எனப் பெயரிட வேண்டும் என்ற தீர்மானத்தை வேலணை வீரசிங்கம் முன்மொழிந்து அந்தத் தீர்மானம் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. பத்திரிகைகள் இலங்கையில் பரவலாகப் படிக்கப்பட்டன. தி.மு.க.இயக்கத் திரைப்படங்கள் – குறிப்பாக கலைஞர் எழுதியவை- இலங்கையில் கொண்டாடப்பட்டன. ஈழ அரசியலிலும் முன்னொருபோதும் இல்லாத அடைமொழிகள் ‘தந்தை’, ‘தளபதி’, ‘சொல்லின் செல்வர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ , ‘தீப்பொறி’ என்றெல்லாம் தோன்றின. தி.மு.கவின் மேடைப்பேச்சுப் பாணியைப் பின்பற்றி செ.இராசதுரை, ம.க.அ.அந்தனிசில், காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் என ஒரு பேச்சாளர் பட்டாளமே உருவானது. 1972-இல் தொடங்கப்பட்ட ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’யின் தேர்தல் சின்னமாக ‘உதயசூரியன்’ இருந்தது. 1970-களின் மத்தியில் ஈழ இளைஞர்கள் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். இவர்களிடமும் தி.மு.கவின் கருத்தியல் தாக்கம் இருந்ததைப் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியகுழு உறுப்பினருமான கணேசன் “அப்போது தூய தேசியவாதச் சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்சினைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை” என்று அவரது ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்’ நூலில் குறிப்பிடுகிறார். எந்தவொரு தமிழகத் தலைவருக்கும் முன்னாலேயே கலைஞர் ஈழப் போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். 1977-இல் பிரபாகரன் தனது 23-வது வயதில் கலைஞரைச் சந்தித்தார். காசி ஆனந்தனும் மாவை சேனாதிராஜாவும் அழைத்துச் சென்றிருந்தார்கள். பிரபாகரன் ஒருமுறை கலைஞருக்கு உதவி கோரி எழுதிய கடிதத்தில் “எங்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள்” என எழுதியிருந்தார். கலைஞர் மறைந்தபோது, வடக்கு – கிழக்கு முன்னாள் முதலமைச்சரான வரதராஜப்பெருமாள் “அவர் தமிழர்களின் மொழியை, கலைகளை, இலக்கியத்தை, ஊடகங்களை, அரசியலை, சமூகத்தை எனத் தமிழுலகின் பல பாகங்களையும் அய்ம்பது வருடங்களுக்கு மேல் ஆண்ட பேரரசன். அவரைத் தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு” என்று எழுதினார். கலைஞர் மு.கருணாநிதி அனைத்து ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். ஈழப் பிரச்சினையின் அடிப்படை குறித்துத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார். தமிழகத்தின் பல்வேறு ஈழ ஆதரவாளர்களைப் போன்று வெறுமனே குருட்டுத்தனமாகப் புலிகளின் புகழைப் பாடுபவராகக் கலைஞர் ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத்தில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகளுக்காகப் புலிகளைக் கண்டித்தார். புலிகளை எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்தார். ஆனால், அந்த எதிர்ப்பு ஒருபோதும் வெறுப்பாக மாறியதில்லை. புலிகளின் அரசியல்துறைத் தலைவர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது, கலைஞர் இரங்கல் கவிதையும் எழுதினார். இலங்கையில் தமிழர்கள் மீதான இன வன்முறை 1956-இல் ஆரம்பித்தது. இதன் பின் எத்தனையோ இன வன்முறைகள். அத்தனை வன்முறைகளையும் எதிர்த்து இந்தியாவிலிருந்து ஒலிக்கும் முதல் குரல் தி.மு.கவுடையதாகவே இருந்தது. 1956-இல் சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழுவில் ‘இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1958, 1977, 1981, 1983 என்றெல்லாம் இலங்கையில் தமிழர்களின் மீது இனரீதியான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டபோது, தி.மு.க. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராகக் குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருந்தது. இந்திய ஒன்றிய அரசுக்கு இது குறித்துக் கடிதங்களை எழுதியது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழக மக்களை அணிதிரட்டியது. 1983-இல், வெலிகடைச் சிறைப் படுகொலைகளை தி.மு.க. கண்டித்து எட்டு இலட்சம் மக்களைத் திரட்டிச் சென்னையில் பேரணியை நடத்தியது. 1983 ஆகஸ்ட் 10-இல், மத்திய – மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்னையில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தனர். கலைஞர் 1985-இல் தமிழீழ ஆதரவாளர் அமைப்பை (டெசோ ) உருவாக்கினார். 1986-இல் மதுரையில் டெசோ அமைப்பின் சார்ப்பில் மாபெரும் இலங்கைத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்தப்பட்டது. வாஜ்பாய்,என்.டி.ராமராவ் போன்ற அனைத்திந்தியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமை கிடைக்கும்வரை போராடுவது, ஈழப்போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, ஈழத் தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவிதத் தியாகத்திற்கும் தயாராக இருப்பது, இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது என நான்கு தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தி.மு.கவினர் வெறும் அறிக்கைகளிலும் மேடைகளிலும் மட்டும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் அல்ல. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தி.மு.க. தனது தோற்றம் முதலே இயங்கியிருக்கிறது. எண்ணற்ற ஆர்ப்பாட்டங்களையும் மாநாடுகளையும் பேரணிகளையும் மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது. தி.மு.கவினர் ஈழப் போராளிகளுக்குத் தமது வீடுகளிலும் சட்டமன்ற விடுதியிலும் அடைக்கலம் கொடுத்தார்கள். பல்வேறு இக்கட்டுகளிலிருந்து போராளிகளைக் காப்பாற்றினார்கள். இதற்காகத் தி.மு.கவினர் நீண்டகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்திருக்கிறார்கள். இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பியபோது, அமைதிப்படையை வரவேற்க கலைஞர் மறுத்தார். “இந்திய இராணுவம் இலங்கையில் என் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த அய்ந்தாயிரம் பேர் கொல்லப்படக் காரணமாக இருந்தது என்பதை எண்ணித்தான், அந்தப் படையை வரவேற்க நான் செல்லவில்லை” என முதலமைச்சராகக் கலைஞர் கூறியது சட்டமன்றத்தில் பதிவாகியது. ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த காலப்பகுதியில் தி.மு.க. ஆட்சியிலிருந்தது. யுத்தத்தை நிறுத்தக் கலைஞர் தன்னால் முடிந்தளவு முயற்சித்தார். தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரோடு புலிகள் கடைசிவரை தொடர்பை வைத்திருந்தார்கள். யுத்தத்தை நிறுத்துமாறு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்தது. மனிதச் சங்கிலிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் பெருமளவில் நடத்தியது. இலங்கையில் தலையீடு செய்து போரை நிறுத்துமாறு ஒன்றிய அரசைக் கோரியது. 2009 ஏப்ரல் 27-ம் தேதி, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கலைஞர் யுத்த நிறுத்தம் கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். உண்ணாவிரதத்திலிருந்த கலைஞரை பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் தொடர்புகொண்டு பேசினார்கள். இலங்கை அரசு கனரக ஆயுதத் தாக்குதல்களையும் விமானத் தாக்குதல்களையும் நிறுத்துவதாக உறுதியளித்தது. அந்த உறுதியளிப்பின் நகல் பிரணாப் முகர்ஜி மூலம் கலைஞரிடம் கையளிக்கப்பட்ட பின்பே கலைஞர் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார். எனினும், எப்போதும் போலவே இலங்கை அரசு இந்தமுறையும் தனது வாக்குறுதியைச் சீக்கிரமே மீறியது. ஒரு மாநில அரசாக தி.மு.க. ஈழப் பிரச்சினையில் தனது உச்சபட்ச அழுத்தத்தை ஒன்றிய அரசுக்குக்குக் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் வேறெந்தக் கட்சியோ இயக்கமோ ஒன்றிய அரசுக்கு இந்தளவுக்கு அழுத்தத்தைக் கொடுத்ததில்லை. இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு மாநில அரசினதும் முதல்வரினதும் அதிகார எல்லைகள் இவ்வளவே. இந்த அழுத்தங்கள் போதாது, தி.மு.க. மத்திய அரசிலிருந்து விலக வேண்டும் என்றெல்லாம் அப்போது சிலர் விமர்சித்தார்கள். இந்த விமர்சனம் சரியற்றதும் தொலைநோக்கற்றதுமாகும். தி.மு.கவின் பதினெட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை விலக்கிக்கொள்வதால் மத்தியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருக்காது. மாறாக 1990-இல் நிகழ்ந்ததைப் போன்று தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் கலைக்கப்பட்டிருக்கக்கூடும். அது தி.மு.கவுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் கேடாகத்தான் முடிந்திருக்கும். தி.மு.க. பதவி விலகியிருந்தாலும் ஈழத்தில் யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்காது. ஏனெனில், அந்த யுத்தம் சர்வதேச அரசுகளின் நீண்டகாலத் திட்டத்துடன் புலிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்டது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச அரசுகள் புலிகளுக்கு முன்வைத்த நிபந்தனைகளைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளாமல் மே 15-வரை போரிட்டுக்கொண்டிருந்தார்கள். ஈழத்தின் எந்த அரசியல் தலைவரோ, அறிவுச் சமூகமோ தி.மு.கவிடம் பதவி துறப்புக் கோரிக்கையை வைத்ததில்லை. புலிகள் கூட வைத்ததில்லை. அந்த நேரத்தில் வேறெவரையும் விடக் கலைஞர் தமிழக ஆட்சிப் பொறுப்பிலிருப்பதுதான் உகந்ததென அவர்கள் கருதினார்கள். 2009 மே மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில், புலிகளின் தீவிர ஆதரவுத்தளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தி.மு.கவோடு கூட்டணிக்குச் செல்லுமாறு புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அறிவுறுத்தியதாக 2019-இல் லண்டனில் நிகழ்ந்த ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூலின் விமர்சனக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் தெரிவித்தார். போருக்குப் பின்னும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. தீவிரமாகவே இயங்கியது. 2011 ஏப்ரல் 27- இல் நடைபெற்ற தி.மு.க உயர்நிலை செயற்திட்டக் குழு கூட்டத்தில் முதல் தீர்மானமாக ‘இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக அய்க்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2012 மார்ச் 1-இல் தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் ‘அய்.நா மனிதவுரிமை ஆணையத்தில் கொண்டு வரவுள்ள தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, இந்திய அரசு எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை ஆதரிக்கக்கூடாது’ என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்காகத் தி.மு.க பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று எழுத்தாளரும் சட்டமன்ற உறுப்பினருமான து.இரவிக்குமார் ஈழ அகதிகள் முகாம்களைப் பார்வைட்டு 04.07.2006 அன்று முதல்வரிடம் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அது குறித்து து. இரவிக்குமார் விகடன் இதழில் (11.10.2009) இவ்வாறு எழுதியிருந்தார்: “முதல்வர், உடனடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். தமிழ் அகதிகளுக்கு அதுவரை மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக உள்ளது என்பதை அறிக்கையில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்… அது மிகவும் குறைவு என்பதை உணர்ந்த முதல்வர் உடனடியாகப் பணக்கொடையை இரு மடங்காக உயர்த்தி ஆணையிட்டார். அது மட்டுமின்றி, அகதி முகாம்களின் நிலைமைகளைச் சீர்படுத்திடப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதல்வர் ஆணையிட்டார். முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில் நான் முன்வைத்திருந்த கோரிக்கைகள் பலவும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. குடியுரிமை தொடர்பான எனது கோரிக்கையும் இன்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசிடம் அது தொடர்பாக வலியுறுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.” ஈழ அகதி மாணவர்ளுக்கு மருத்துவம், பொறியியல், ஐ.டி.ஐ. போன்ற துறைகளில் தி.மு.க. அரசு இட ஒதுக்கீடுகளை வழங்கியிருந்தது. அதன்பின்பு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, ஈழ அகதி மாணவர்களுக்கு 12-ஆம் வகுப்புக்கு மேல் படிக்க அனுமதி இல்லை என்று 03.09.1991-இல் ஆணை பிறப்பித்தது. மறுபடியும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துதான் இந்த ஆணையை விலக்கிக்கொண்டது. தி.மு.க என்ற 75 வருட வரலாறு கொண்ட கட்சியின்மீது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் பலவற்றில் நியாயமும் உண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைப் பொறுத்தளவில் தி.மு.க. மீதான எதிர் விமர்சனங்கள் செல்லுபடியவற்றவை என்றே நான் கருதுவேன். ஏனெனில், இலங்கைத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் இனவழிப்புகளையும் முக்கால் நூற்றாண்டாகத் தொடர்ச்சியாகக் கவனமெடுத்துக் குரல் கொடுத்த இலங்கைக்கு வெளியிலுள்ள ஒரேயொரு கட்சியாக தி.மு.கவே இருக்கிறது. இலங்கையில் இருக்கும் சிங்கள முற்போக்குக் கட்சிகளோ, இடதுசாரி இயக்கங்களோ கூட இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அளவுக்குப் போராடிய வரலாறு கிடையாது. இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக தி.மு.க. தன்னால் முடிந்த அனைத்தையுமே செய்திருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றிலும் ஈழப் போராட்டத்திலும் தி.மு.கவின் மதிப்பு மிக்க பங்களிப்பு இன்னும் விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும். இன்னும் துல்லியமாகச் சொன்னால் ஈழத் தமிழர்கள் மீது நேர்மையான கரிசனம் கொண்டு ஈழத்திற்கு வெளியே செயலாலும் சிந்தனையாலும் தியாகங்களாலும் இயங்கிய ஒரேயொரு பேரியக்கம் தமிழகத் திராவிட இயக்கமேயாகும். கட்டுரையை எழுதப் பயன்பட்டவை: 1.எழுதாத வரலாறு – பெ. முத்துலிங்கம். 2. ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை – நாவலர் ஏ.இளஞ்செழியன். 3.ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி – என்.கே.ரகுநாதன். 4.’நமது மலையகம்’ இணையத்தளம். 5.’நமது’ வலைத்தளம். (‘காலத்தின் நிறம் கருப்பு – சிவப்பு’ தொகுப்பு நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. நவம்பர் 2025). https://www.shobasakthi.com/shobasakthi/2025/12/26/ஈழத்தில்-திராவிடச்-சிந்த/- ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
நத்தாருக்கு அடித்தது முறிய முதலே விளையாட தொடங்கினால் இப்படித் தான் முடியும்.- மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
கதாநாயகன் ரேஞ்சில் இருந்தவர் கடந்த 15 வருடத்தில் பாதி சிங்களவருக்கு ஊழல் வாதி ஆகிட்டார் இன்னும் கொஞ்ச வருடங்களில் உயிருடன் இருந்து மிகுதி சிங்களவரிடமும் சாபம் பெற்று இத்தாலி முசோலினி போல் போய் தொலையட்டுக்கும்.- 🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
ஆழிப் பேரலையால் உயிர் நீத்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.- மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதி!
இப்ப 15 வருடத்துக்கு மேலாக இந்தா போறார் போறார் என்றார்களே பொய்யா கோப்பாலு. சாது ஓதியே ஆளைப் பிழைக்க வைத்துவிடும்.- 🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰
ஆழிப்பேரலை 21வது நினைவேந்தல் ; மூதூரில் 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கி வைப்பு 26 Dec, 2025 | 03:43 PM மூதூரில் ஆழிப்பேரலையின் 21வது நினைவேந்தலைத் தொடர்ந்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (26) தி/மூதூர் – அல்மனார் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வு ஈராக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், பரக்கா நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி முஜீப் அவர்களால் கல்விப் பொருட்கள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த கல்விப் பொருட்கள், அவர்களின் கல்வி பயணத்திற்கு ஓர் ஊக்கமாகவும், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலாகவும் அமைந்தது. இந்நிகழ்வில் பொதுமக்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234476 - கிறுக்கல்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.