stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம்
- Yesterday
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
உண்மையை சொன்னால்; மடைமாற்று, காவடி, தூக்குகாவடி என்பீர்கள். சுமந்திரனை சொன்னால் ஓடி வந்து காப்பாற்றுவீர்கள். பாவம் ஐயா நீங்கள்! அவர் செய்யும் அரசியலை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை உங்களால், அவரை விட்டுகொடுக்கவும் முடியவில்லை. உங்கள் பாடு திண்டாட்டந்தான். ஒருவற்கு உதவி செய்யும்போது, அவர்களுக்கு எது தேவை என்பதை கேட்டறிந்து செய்யவேண்டும். நான் விரும்பியதை எல்லாம் சொல்லிவிட்டு, அதுதான் அவர்களது தேவையென வாய் வம்பம் பேசக்கூடாது. இப்போவாவது அவர்களுக்கு என்ன தேவை என பாதிக்கப்பட்ட மக்களைகேட்டு செய்யுங்கள். அடுத்தவேளை தூங்க இடமில்லை, சாப்பிட ஏதுமில்லை, அவர்களை பாசத்துடன் அழைக்கிறோம் வாருங்கள் என்றால் எப்படி? ஏதாவது ஆயத்தங்கள் உண்டா? மலையகம் அவர்களது தாயகம். அங்கு அவர்கள் சுதந்திரமாக நிம்மதியாக வாழவேண்டிய சூழலை உருவாக்குவது அவர்களது பிரதிநிதிகளின் கடமை. தனது மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்யாமல் அந்த மக்களாலேயே நிராகரிக்கப்பட்டவர், மலையக மக்களுக்கு ஏதோ செய்யபோகிறாராம். இதைச்சொன்னால் மடைமாற்று, காவடி என்று தூக்கிக்கொண்டு, நிதர்சனத்தை ஏற்க மறுத்து ஏதோ ஜாம்பவானாக கயிறு திரிப்பு.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இப்படியான ஒரு கருத்து பொதுவாக எல்லோருக்கும் பொருந்தாது கலவரத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை செல்லப்பயந்து உயிர் அச்சம் கருதி பெற்றோரால் கட்டாயமாக வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றார்கள். அவர்கள் வந்தபோது ஜெர்மனி சென்றால் பாத் ரூம் கழுவலாம் பாரிஸ் சென்றால் தூசு தட்டலாம் இத்தாலி சென்றால் சாப்பாட்டு மேசை துடைக்கலாம் என்ற நினைப்பில் வரவில்லை ஒரு சில காலத்தில் திரும்பவும் நாட்டு நிலைமை சரி வந்துவிடும் 70 களில் ஜேவிபி ஐ அழித்தமாதிரி தமிழர்களின் போராட்டமும் அழிந்துவிடும் என்று நினைத்த பெற்றோர்களும் இருந்தார்கள் காலப்போக்கில் நிலைமையை உணர்ந்தவர்கள் தான் ஐரோப்பாவில் தங்களுக்கு கிடைத்த வேலைகளை செய்து பணம் ஈட்ட ஆரம்பித்தார்கள் இது என் அனுபவமும் கூட
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இங்கே யாரும் மலையக்த் தமிழ் மக்களுக்கு எதிரான விதத்தில் ஒரு கருத்தைத் தன்னும் எழுதவில்லை. ஒரு வேளையில் அவர்கள் வடக்கில் குடியேற்றப்பட்டால் எந்த விதத்தில் அவர்கள் முன்னேற்றம் இருக்கும்..... . வடக்கு மக்கள் அவர்களை எப்படி அனுசரித்துச் செல்வார்கள்....... . அவர்கள் ஒருவேளை அழைத்துவரப் பட்டால்..... தமிழ் அரசியல் வாதிகள் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு உறுதி அளிப்பார்களா ....... அன்றைய கால கட்டத்தில் வீட்டுப் பணிப்பெண்களாக தோட்ட வேலைகளுக்காக வடக்கு மக்கள் அவர்களை அழைத்து வந்து எப்படியான விதத்தில் வேலை வாங்கினார்கள் என்பதையெல்லாம்....... உணர்ந்த வகையில் தான் இந்த அழைப்பை நாங்கள் நிராகரிக்கின்றோம். இதையே மடைமாற்றி அவர்கள் வருவதை இவர்கள் விரும்பவில்லை அவர்கள் வந்தால் இவர்களுக்கு ஒத்துவராது இவர்கள் அவர்களை மதிக்காமல் பார்க்கின்றார்கள் என்ற வகையில் கருத்துக்களைத் திரித்து எழுதுவதால் எல்லாம் சரியென்றாகி விடாது. மலையக மக்கள் மலையகத்தில் சுதந்திரமாக தங்கள் உரிமைகளை அனுபவித்து வாழ வேண்டும் .மலையகம் மலையகத் தமிழர்களுடைய தாயகம் . இதை எந்தக்கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வடக்கில் மட்டும் ஒதுக்கி மிகுதி நாடு முழுவதும் சிங்களம் தன் கால்களை அகட்டி வைக்க வசதிகள் செய்து கொடுப்பவர்களை அல்லது அப்படிச் செய்ய நினைப்பவர்களை இனம் கண்டு தமிழர்களின் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்க வேண்டும்
-
மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு!
மாலைத்தீவு எல்லையில் இலங்கை மீன்பிடிப் படகுகள் சுற்றிவளைப்பு! written by admin December 18, 2025 மாலைத்தீவின் விசேட பொருளாதார வலயத்திற்குள் (SEZ) சட்டவிரோதமாக நுழைந்த இரண்டு இலங்கை மீன்பிடிப் படகுகள் அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படையினரால் (MNDF) நேற்று (17) சிறைபிடிக்கப்பட்டுள்ளன. 🔍 சம்பவத்தின் விபரங்கள்: இடம்: மாலைத்தீவின் வடக்கு பகுதியில் உள்ள கேலா (Kelaa) தீவிலிருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. நேரம்: நேற்று முற்பகல் 8:30 மணியளவில், வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை: கைப்பற்றப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாலைத்தீவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 🚩 பின்னணி: கடந்த காலங்களிலும் இதேபோன்று இலங்கை மீனவர்களின் படகுகள் மாலைத்தீவு எல்லைக்குள் வைத்துப் பிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னதாக இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் பேரில், 300 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருட்களுடன் சென்ற இலங்கை படகொன்றை மாலைத்தீவு படைகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 💬 மீனவர்களின் கவனத்திற்கு: கடல் எல்லைகளைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுவது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்பதோடு, இது போன்ற கைதுகள் மீனவ குடும்பங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது குறித்த மேலதிக விழிப்புணர்வு அவசியமாகும். #SriLankaFishermen #MaldivesNavy #MNDF #MaritimeSecurity #BreakingNews #LKA #Maldives #TamilNews #FishermenIssue https://globaltamilnews.net/2025/224471/
-
முக்கிய அறிவிப்பு: இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
முக்கிய அறிவிப்பு: இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை! written by admin December 18, 2025 🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இலங்கையில் சிக்குன்குனியா (Chikungunya) வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC), இலங்கைக்கு ‘Level 2’ பயண சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளது. 🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> முக்கிய பின்னணி: 🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">காரணம்: கொசுக்களால் பரவும் சிக்குன்குனியா வைரஸின் அதீத பரவல். 🚨" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;">தற்போதைய நிலை: அண்மையில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் உள்கட்டமைப்புகள் மற்றும் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நோய் பரவல் அதிகரித்துள்ளது. 🛡️" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்: இலங்கைக்கு பயணம் செய்வோர் கூடுதல் பாதுகாப்புடன் இருக்குமாறு (Enhanced Precautions) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கொசுக்கடியிலிருந்து தப்பிக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும். காய்ச்சல், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். இலங்கையிலுள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்தத் தகவலைப் பகிர்ந்து விழிப்புடன் இருக்க உதவுங்கள்! 🙏" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> #SriLanka #Chikungunya #CDCalert #TravelNotice #HealthAlert #CycloneDitwah #StaySafe #SLNews #PublicHealth #இலங்கை #சிக்குன்குனியா https://globaltamilnews.net/2025/224478/
-
🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!
🚨 அமெரிக்காவில் கோர விமான விபத்து: முன்னாள் NASCAR வீரர் கிரெக் பிஃபிள் -மனைவி குழந்தைகள் உட்பட 6 பேர் பலி! written by admin December 18, 2025 அமெரிக்காவின் வட கரோலினா (North Carolina) மாநிலத்தில் உள்ள ஸ்டேட்ஸ்வில் (Statesville) பிராந்திய விமான நிலையத்தில் இன்று காலை நிகழ்ந்த ஒரு தனியார் விமான விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ✈️ என்ன நடந்தது? விபத்து: இன்று (டிசம்பர் 18, 2025) காலை 10:20 மணியளவில், Cessna C550 ரகத்தைச் சேர்ந்த பிசினஸ் ஜெட் விமானம் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்தது. உயிரிழப்பு: இந்த விபத்தில் புகழ்பெற்ற முன்னாள் NASCAR கார்பந்தய வீரர் கிரெக் பிஃபிள் (Greg Biffle), அவரது மனைவி கிறிஸ்டினா, இரு குழந்தைகள் மற்றும் விமானி உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொடூரத் தீ: விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே பெரும் தீப்பிழம்பாக மாறியது. சம்பவ இடத்திலேயே பலரும் பலியாகியுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 🔍 விசாரணையில் அதிர்ச்சித் தகவல்: இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாகத் தரையிறங்க முயன்றுள்ளது. அந்த நேரத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் மற்றும் சீரற்ற வானிலையும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. #NASCAR #GregBiffle #PlaneCrash #NorthCarolina #Statesville #BreakingNews #BreakingNewsTamil #AviationAccident #LKA #Tragedy https://globaltamilnews.net/2025/224482/
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இந்த வேலையைத்தான் செய்வோம் என்று வெளிநாடுகளுக்கு நாங்கள் யாரும் இடம் பெயர்ந்து வரவில்லை. எந்த வேலையையும் செய்யத் தயாராகவேதான் இருந்தோம். புலம்பெயர்ந்து நாங்கள் வந்த போது புதுவை இரத்தினதுரை கூட கவிதையில் எங்களைப் பற்றிச் சொன்னார் “தூசு தட்டியே காசு பார்த்தவர்கள்” என்று. சரி அதை விடுங்கள். இங்கே யாரையும் யாரும் வற்புறுத்தவில்லை. விருப்பமுள்ளவர்கள் வாருங்கள். ஒன்றாகப் பயணிப்போம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. குமாரசாமி, நான் எழுதியதை நீங்கள் மேலோட்டமாகவே வாசித்திருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது இந்தப் பகுதியை வாசிக்க மறந்து விட்டீர்களோ தெரியவில்லை. இப்படியான முயற்சிகள் மறக்கப்பட வேண்டியவையல்ல. மீண்டும் சிந்திக்க வேண்டிய விடயங்கள். இதைப் போன்று வெவ்வேறு வடிவங்களில் முயற்சிகள் இருக்கலாம்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
G 10 நாணயங்கள் USD 89.2% EUR 28.9% YPY 16.8% GBP 10.2% CHF 6.4% AUD 6.1% CAD 5.8% SEK 1.6% NZD 1.5% NOK 1.3% 200% அடிப்படையில் 2025 ஆண்டிற்குரிய வர்த்தக அடிப்படையிலான கணிப்பு (இரண்டு நாணயங்களாக இருப்பதானால் 200%)
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நாணய வர்த்தகத்திற்கு தற்போதுள்ள மிதக்கவிடப்பட்ட நாணயக்கொள்கை ஏதுவாக இருக்கின்றது, பொதுவாக மிதக்க விடப்பட்ட நாணயம் ஒரு தன்னிச்சையான உறுதித்தன்மை கொண்டது (Automatic stabilizer). Balance of Payment எனப்படும் நாடுகளுக்கிடையேயான வர்த்தக பெறுபேறுகள் நாணயத்தின் பெறுமதிகளில் தன்னிச்சையாக இடம் பெறுகிறது (வேறு பல காரணிகளும் காணப்படுகிறது பின்னர் விரிவாக பார்க்கலாம்). நாணய வர்த்தகத்திற்கு ஏதுவாக இருப்பதற்கு நாணயங்களுக்கிடையேயான மாற்றங்கள் உதவுகின்றன (Volatility). Commodity நாணயங்கள் அதிகளவான தளம்பல்கள் காணப்படும் (Volatility).
-
தமிழர் பகுதியில் சுவிசின் இரகசிய நகர்வு.
பல கோடி பில்லியன் டாலர் கனிமவள தீவு இலங்கைக்கு கிட்டுமா? அமெரிக்காவின் அண்மைய நகர்வுகள் இதை நோக்கியா? அப்பாவி சுவிசை அமெரிக்கா களமிறக்கியுள்ளதா? இந்தியா என்ன செய்யப் போகிறது?
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
ஏன் வரலாற்றை 1954 ஓடு நிறுத்தி விட்டீர்கள்😂? அப்படியே 1922 வரை பின்னோக்கிப் போனால் உக்ரைன் பிரதேசமே சோவியத் ஒன்றியத்தில் இருக்கவில்லை. 1922 இல் வலுக்கட்டாயமாக இணைத்தார்கள். இன்னும் ஒரு 600 ஆண்டுகள் பின்னோக்கிப் போனால் கிரைமியா இன்றைய துருக்கியை உள்ளடக்கியிருந்த ஒட்டோமான் பேரரசின் சொத்து. 1800 களில் ரஷ்ய சாம்ராஜ்ஜியம் கைப்பற்றிக் கொண்டது. இதெல்லாம் தாண்டி 1991 - 94 களில் ரஷ்யா கிரைமியாவை உள்ளடக்கிய உக்ரைன் தேசத்தை ஏற்றுக் கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது - இது தான் இறுதியாக எல்லைகள் ஏற்றுக் கொள்ளப் பட்ட சந்தர்ப்பம். "கிழக்கு நோக்கி ஒரு அங்குலம் கூட வர மாட்டோம்.." என்ற வாய் வார்த்தையை இங்கே மந்திரம் போல ஓதும் "புரின் புரியன்மார்" எவரும் 90 களில் ஏற்றுக் கொண்ட உக்ரைன் எல்லையை 2014 இல் ஏன் புரின் கிழித்தெறிந்தார் என்று ஆராய முனைய மாட்டார்கள்! ஏனெனில், அவர்கள் தகவல் பெறுவது சந்திரனுக்குப் போன ஸ்புட்னிக்கில் இருந்து😎!
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
1954 வரை கிரிமியா ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்தது என்று தரவுகள் கூறுகின்றன. பின்பு குருஷேவினால் உக்ரேனுடன் இணைக்கப்பட்டதாகவும், சோவியத் உடைவின் பின்னர் உக்ரேனிடம் இருந்த கிரிமியா மேற்குலகினூடான உக்ரேனின் நெருக்கத்தின் காரணமாக கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கம் கையைவிட்டு போய்விடுமோ என்ற அச்சமும் கனிமங்களின் சுரண்டலும் கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிக்க காரணங்களில் ஒன்றாக இருந்தது என்பது நான் சொல்லி கிருபன் அறியும் நிலையில் இருக்காது என்று நினைக்கிறேன், அதன் தொடர்ச்சியே மறைமுக மேற்குலகுக்கெதிராக ரஷ்யா தொடுத்த கீவ் நோக்கிய ரஷ்யாவின் படையெடுப்பும் என்பது பின்னாளில் அனைவரும் அறிந்த வரலாறு. உக்ரேன் ரஷ்ய பலத்துடன் ஒப்பிடும்போது நோஞ்சான்தான், ஆனால் உக்ரேனுக்கு பின்னாலிருந்த மேற்குலகும் நேட்டோ ஆதரவும் நிச்சயமா நோஞ்சான்கள் இல்லை என்பது நம் அன்னைவரையும்விட ரஷ்யாவுக்கு நல்லாவே தெரியும். அதுவே போராக வெடித்தது. ஆக்கிரமிப்புகள் நியாயப்படுத்த முடியாதவை, இங்கே காரணங்களைதான் சொல்கிறேன், மற்றும்படி ரஷ்ய &உக்ரேன் பக்கம் நிக்கவோ நியாயப்படுத்தவோ எந்த நிமிடமும் முயற்சிக்கவில்லை, ஒரு இன ஆக்கிரமிப்புபோரில் இருவருமே எமக்கெதிராய் நின்றவர்கள். இந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் 1987ல் வந்த உடன்படிக்கையும் அதன் பின்னரான புலிகள் நிலைப்பாடு பற்றியும் சிலமாதங்களின் முன்னர் ஏற்கனவே நீண்ட விளக்கம் ஒன்றை உங்களுக்கு தந்திருந்தேன் அதனை மீண்டும் பதிவு செய்ய விரும்பவில்லை நீங்கள் விரும்பினால் தேடி பிடித்து சரிபார்த்து கொள்ளுங்கள். அப்புறம் 1990,94,2002ல் எந்த வகையான சிங்கள அரச உள சுத்தியான பாலைபழம்போன்ற தீர்வுகள் தமிழர்களை நோக்கி நெருங்கி வந்தன , எப்படி அநியாயமாக அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டோம் என்பதை உங்களிடமிருந்து அறியவிரும்புகிறேன்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
இந்த நிக்கசனின் செயற்பாடு தற்போதுள்ள நாணய முறைமையினைன் உருவாக்கியது (முக பெறுமதி நாணயங்களை உலக வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் முறை). முன்னர் இருந்த pegged (அமெரிக்க நாணயத்தினை தங்கத்தின் பெறுமதிக்கு ஈடாக பேணுவதன் மூலம்) முறைமியில் இருந்து மிதக்கவிடப்பட்ட நாணயக்கொள்கை உருப்பெற்றது(Float), தற்போது இரண்டு வகையுடன் (pegged, Float) இரண்டும் இணைந்த 3வது முறையும் உள்ளது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தற்போதய ட்ரம்ப் போல நிக்சன் பிரட்டன்வூட் தீர்மானத்திற்கெதிராக இறக்குமதி தீர்வைகளை அறிமுகப்படுத்தினார் இதனை நிக்சனின் வர்த்தக போர் என குறிப்பிடுகிறார்கள்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
60 களின் நடுப்பகுதியிலேயே அமெரிக்க வியட்நாம் போருக்குத்தேவையான நிதியினை பெறுவதற்காக ஒப்பந்த அடிப்படைகளை மீறி அமெரிக்கா நாணயங்களை அச்சிட்டது, இதனால் அமெரிக்காவுடனான வர்த்தகத்தின் பெறுபேறாக அமெரிக்காவினால் செலுத்தப்பட்ட அமெரிக்க நாணயங்கள் மற்ற நாடுகளின் மத்திய வங்கியில் 14 பில்லியன் காணப்பட்ட வேளை அமெரிக்காவிடம் தங்கம் வெறும் 13.2 பில்லியன் பெறுமதியில் இருப்பு காணப்பட்டதாக கூறப்படுகிறது, அதனால் பிராண்ச் ஜேர்மனி போன்ற நாடுகள் பிச்சை வேண்டாம் (அமெரிக்க நாணயம்) நாயை பிடி (பதிலாக தங்கத்தினை தா) என நின்றார்கள். இதன் பின்னர் நிக்சன் தங்க நாணயத்திற்கு ஈடான அமெரிக்க நாணய கொள்கையினை கைவிட்டு முக பெறுமதிகொண்ட தற்போதய நாணய முறைமைக்கு மாறினார். இதனையே நாணயங்களின் முழுப்பெறுமதி மற்றும் முகப்பெறுமதி என கூறப்படுகிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
தற்போதய நவீன உலக வர்த்தகத்தின் அடிப்படை 1944 இல் பிரட்டன்வூட் எனும் அமெரிக்க இடத்தில் ஏற்பட்ட உடன்பாடுகளுடன் ஆரம்பமாகிறது, அப்போது நிலவியிருந்த நாடுகளுக்கிடையேயான முறையற்ற நாணய கொள்கை மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், அதிக வரி என்பதனால் உலக வர்த்தகம் பாதிப்பிற்குள்ளாகியிருந்தது, அதனை தீர்ப்பது மற்றும் உலக பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியினை அடிப்படையாக கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. உலக வர்த்தகத்திற்கு தங்கத்திற்கு ஈடாக முழு பெறுமதியுடன் அமெரிக்க நாணயத்தினை உருவாக்கினார்கள், அதன் மூலம் அமெரிக்க நாணயம் உலக வர்த்தக நாணயமாகியது அப்போதிருந்த அமெரிக்க நாணயத்தினை Gold exchange standard என அழைத்தார்கள், இதனை adjustable pegged foreign exchange system என்பதன் மூலம் நாடுகளின் நாணயங்களை இணைத்தார்கள். பின்னர் வியட்நாம் யுத்த செலவுகளை ஈடுகட்ட முடியாத நிலையில் நிக்சன் ஆட்சிக்காலத்தில் இந்த தங்க நாணய அந்தஸ்தினை நிக்சன் கைவிட்டார் (70 களி என நினைக்கிறேன்).
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
நாணய வர்த்தகத்தின் நீண்டகால முதலீடுகளினடைப்படையான (Fundamental analysis) பற்றி எழுதும் ஒரு ஆர்வம் ஏற்பட்டுள்ளது, இதற்கு அடிப்படையான காரணமான நிகழ்கால உலக அரசியல் மாற்றங்கள் காணப்படுகின்றது (குறிப்பாக உக்கிரேன் இரஸ்சிய போர்), அனைத்து பக்க தரப்பு வாதங்களையும் உள்ளடக்க அனைத்து விருபமுள்ள கள உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியமாகிறது, எனது கருத்துக்கள் தவறாக இருக்கலாம் அதனால் உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள். நாணய வர்த்தகத்தின் அடிப்படை ஆய்விற்கு (Fundamental analysis) அதன் வரலாறு முக்கியமாக உள்ளது ஆனாலும் முடிந்தளவு மிக மிக சுருக்கமாக வரலாறு பற்றிய குறிப்புக்களை பதிய முயற்சிக்கிறேன்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இந்த பணம் யூரோ கிளியர் வங்கியில் பெல்ஜியத்தில் முடக்கியுள்ளது (இது முழுக்க இரஸ்சிய மத்தியவங்கியின் பணம்) இதனை பற்றியே தற்போது பேசுகிறார்கள், இந்த பணத்தினில் கை வைப்பது சட்ட விரோதமானது (உலக மற்றும் ஐரோப்பிய), அதற்கு மாற்று வழி தேடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயல்கிறது, இதனை ஐரோப்பிய வங்கியின் தலைவர் கிறிஸ்ரின் லகார்ட் கூட எதிராக கருத்து கூறியுள்ளார்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
உண்மை, ஆனால் தனியாரின் பணமும் முடக்கப்பட்டிருக்கிறது.
-
ஈரோடு தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தன? களத்தில் பிபிசி கண்டது என்ன?
ஈரோடு தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருந்தன? களத்தில் பிபிசி கண்டது என்ன? பட மூலாதாரம்,TVK கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 18 டிசம்பர் 2025, 15:38 GMT புதுப்பிக்கப்பட்டது 56 நிமிடங்களுக்கு முன்னர் ஈரோட்டில் இன்று தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. நெரிசல் ஏற்படாத வகையில் பலமான தடுப்புகள் அமைக்க வேண்டும், போதிய அளவு குடிநீர் வசதி செய்யப்பட வேண்டும், மருத்துவ வசதிகள் மற்றும் ஆம்புலன்ஸ் செல்லும் வழிகள், உரிய நேரத்திற்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 84 நிபந்தனைகளை இந்த கூட்டத்துக்கு காவல்துறை விதித்தது. இருவர் மயக்கமடைந்தது, தடுப்பை ஏறிக் குதித்தபோது ஒருவருக்கு காலில் அடிபட்டது ஆகியவை தவிர இந்த கூட்டம் நல்லபடியாக நடந்து முடிந்தது என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். கரூர் சம்பவத்திற்குப் பிறகான முதல் பொதுக்கூட்டம் கரூரில் கடந்த செப்டெம்பர் 27ஆம் தேதியன்று, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இதனால் தவெக மீது மிகவும் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. சம்பவம் நடந்து இரு நாட்கள் கழித்து, இதுகுறித்து விஜய் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர், தமிழக அரசின் மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பட மூலாதாரம்,TVK ஈரோடு பொதுக் கூட்டம், கரூர் துயர சம்பவத்திற்குப் பின் தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், இதற்கு 84 விதமான நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது. அதை ஏற்றுக்கொண்டதன் பேரில் இந்தக் கூட்டதிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கரூரில் 'ரோடு ஷோ' நடத்த விஜய் பல மணி நேரம் தாமதமாக, இரவு நேரத்தில் வந்ததும் 41 பேர் உயிரிழப்புக்குக் காரணம் என்று தமிழக அரசின் தரப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில் ஈரோட்டில் காலை 11 மணியிலிருந்து மதியம் ஒரு மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டுமென்று அனுமதியில் குறிப்பிடப்பட்டிருந்தது என்கிறார் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா. படக்குறிப்பு,விஜய் கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது... பொதுக்கூட்ட ஏற்பாடுகள் எப்படி இருந்தன? பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சுமார் 20 ஏக்கரில் செய்யப்பட்டு இருந்தபோதும், கார்கள் மற்றும் டூ வீலர்கள் நிறுத்த வெவ்வேறு பகுதிகளில் இடம் தயார் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து பொதுக்கூட்ட திடலுக்கு அரை கி.மீ. நடந்து வரும் வகையில் ஏற்பாடுகள் இருந்தன. பிரதான வாயில் உள்படப் பல திசைகளிலும் வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் நின்று கூட்டத்தைப் பார்ப்பதற்கான இடம், மொத்தம் 72 'பப்ளிக் பாக்ஸ்' எனப்படும் 72 தடுப்புகளால் ஆன பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அதற்குள் தொண்டர்கள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் அனுமதிக்கப்பட்ட 'பப்ளிக் பாக்ஸ்'களில் ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோன்று அப்பகுதிகளில் பெண் காவலர்கள் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒவ்வொரு பப்ளிக் பாக்ஸ் பகுதியிலும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு, தேவைப்படுவோர் எடுத்துக் குடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவை தவிர்த்து மக்கள் நடந்து வரும் வழிகளில் பல இடங்களில் சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. கூடுதலாகச் சில குடிநீர் லாரிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. விஜய் பரப்புரை பேருந்தில் நின்று பேசுவதைப் பார்க்கும் வகையில் ஆங்காங்கே எல்இடி திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் பொதுக்கூட்டம் நடந்தபோது கடுமையான வெயில் இருந்ததால் அவற்றில் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை இருந்தது. இவற்றைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 11 மணிக்கு கூட்டம் துவங்கி மதியம் 12:45 மணிக்குள் முடிவடைந்தது. இருவர் மயக்கம், ஒருவர் காலில் காயம் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, இளைஞர் ஓருவர் ஸ்பீக்கர்கள் வைக்கப்படிருந்த இரும்பு தூணின் மீது ஏறியிருந்தனர். அருகில் இருந்தவர்கள், நிர்வாகிகள், காவல் துறையினர் கூறியும் அவர்கள் இறங்க மறுத்துவிட்டனர். அதைப் பார்த்த விஜய், ''தம்பி! உடனே கீழே இறங்குப்பா... நீ கீழே இறங்கு நான் முத்தம் கொடுக்கிறேன்!'' என்று கூறியதும் அவர்கள் இருவரும் இறங்கிவிட்டனர். இதேபோன்று தடுப்பில் ஏறிக் குதித்த ஓர் இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டது. பொதுக்கூட்டம் நடக்கும் விஜயமங்கலம் பகுதியிலுள்ள சுங்கச்சாவடியில், கோவையில் இருந்து வந்த விஜயை காண மக்கள் திரண்டிருந்தனர். அவர்களை தடுப்பதற்காக காவல்துறையினர் கனமான கயிறுகளை வைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் யாரும் பொதுக் கூட்டத்திற்கு வரவேண்டாமென்று தலைமை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்ததால், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை பார்ப்பது அரிதாக இருந்தது. கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் அனைவரும் நின்றபடியே விஜய் பேச்சை கேட்டனர் பள்ளி வயதுடைய மாணவர்கள், மாணவிகள் சிலரை பெற்றோர்கள் அழைத்து வந்தபோது, அவர்களை பொதுக்கூட்டத்திற்கு வரும் வழியிலும், வாயில் பகுதியிலும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர். ''வழக்கமான நிபந்தனைகளுடன் சில விஷயங்களை கட்டாயமாகச் செய்ய வேண்டுமென்று கூறியிருந்தோம். குறிப்பாக குடிநீர் வசதி போதிய அளவில் செய்யப்பட வேண்டும்; நெரிசல் ஏற்படாத வகையில் தனித்தனியாக பல பகுதிகளை அமைத்து, பலமான தடுப்புகளை அமைக்க வேண்டும்; மருத்துவக் குழு தயாராக இருக்க வேண்டும்; ஆம்புலன்ஸ் செல்ல வழிகள் விட வேண்டும்; முக்கியமாக தாமதமின்றி உரிய நேரத்துக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டுமென்று கூறியிருந்தோம்.'' என்றார் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சுஜாதா. மேலும் ''பொதுக்கூட்டத்துக்கான இடம் சகல வசதிகளையும் கொண்டதாக இருக்க வேண்டுமென்பதும் அதில் முக்கிய நிபந்தனை. இந்த இடத்தில் அவை எல்லாமே இருந்தன. அதுமட்டுமின்றி, நாங்கள் கூறிய நிபந்தனைகளை சரியாகச் செய்துள்ளனரா என்பதை ஆய்வும் செய்தோம். குறிப்பாக 'பப்ளிக் பாக்ஸ்'களுக்கு இடையிலான இரும்புக் கம்பிகளை 3 அடி ஆழத்துக்குத் தோண்டி வலுவான அடித்தளத்துடன் அமைக்கவும் அறிவுறுத்தியிருந்தோம். அதனால் நெரிசல் எங்குமே ஏற்படவில்லை.'' என்றார். ''பொதுக் கூட்டத்தில் இருவர் மயக்கம் அடைந்திருந்தனர். தடுப்பை ஏறிக் குதித்த ஒரு இளைஞருக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. அவை தவிர்த்து, வேறு எங்கும் எந்தவித விபத்துகளும், அசம்பாவிதங்களும் நடந்ததாகத் தகவல் இல்லை. இருப்பினும் அரசு மருத்துவமனைகளில் யாராவது அனுமதிக்கப்பட்டுள்ளனரா என்றும் கண்காணித்து வருகிறோம். மற்றபடி பொதுக்கூட்டம் அமைதியாக நடந்து முடிந்துள்ளது'' என்றார் சுஜாதா. ''கோவை, திருப்பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1800க்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பெண்கள் பகுதிகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு கொடுப்பதற்காக 400 பெண் காவலர்களை நியமித்திருந்தோம். அதனால் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடிந்தது'' என்றார் சுஜாதா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj69063xd3eo
-
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2025
இங்கு சிட்னியிலும் வெய்யில் 40 பாகை செல்சியஸில் உள்லது இங்கிலாந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ச்சியாக மோசமாக விளையாடுவதால் அனைத்து துறை ஆட்டக்காரர்களும் பந்து வீச்சாளர்களும் பெரும் நெருக்கடியினை இந்த அதிக வெய்யிலில் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
-
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன்
நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை - வே. இராதாகிருஷ்ணன் 18 Dec, 2025 | 05:48 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மலையகம் எமது தாயகம். நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. அதனால் மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்குதேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆளும் தரப்பினரால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், அனத்தத்தில் பாதிக்கப்பட்ட மலையக தோட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறி முகாம்களிலும் பாடசாலைகளிலும் தங்கிவரும் நிலையல், அவர்களுக்கு எந்த வசதியும் செய்துகொடுக்காமல் தற்போது அவர்களை தங்களின் வீடுகளுக்கு செல்லுமாறு அரசாங்கம் தெரிவித்து வருகிறது. தேசிய கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் அறிக்கைக்கு அமையவே அவர்கள் தங்களின் வீடுகளைவிட்டு முகாம்களுக்கு வந்தார்கள்.அதனால் கட்டிட ஆராச்சி நிறுவனத்தின் முறையான அறிக்கையை பெற்றுகொண்ட பின்னரே அந்த மக்களை அவர்களின் இருப்பிடங்களுக்கு அனுப்புவது பொருத்தமாகும். வேவெண்டன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் காமினி திஸாநாயக்க பாடசாலைகளில் இருக்கிறார்கள். அவர்களை தற்போது வேறு பாடசாலைகளுக்கு செல்லுமாறு அல்லது தொண்டமான் பயிற்சி நிலையத்துக்கு அல்லது வீடுகளுக்கு போங்கல் என தெரிவிக்கிறார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அந்த மக்களின் நிலமையை புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் மலையகத்தில் பல பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் வரவு செலவு திட்ட விவாதத்தின்போது, மலையக மக்களுக்கு தனியான வீடு நிர்மாணித்து கொடுக்க வேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் அனைவரும் தெரிவித்து வந்தார்கள். அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதேபோன்று மலையக மக்களுக்கு 7பேர்ச் காணியை பெற்றுக்காெடுத்து, அந்த மக்கள் அங்கே வாழ்வதற்கு தேவையான வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மாறாக நாங்கள் மலையகத்தைவிட்டு யாழ்ப்பாணத்துக்கோ, மட்டக்களப்புக்கோ செல்வதற்கு தயார் இல்லை. மலையகம் எமது தாயகம். நாங்கள் எமது தாயகத்தில் இருப்பதற்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும். தோட்டக் கம்பனிகளுடன் கலந்துரையாடி இந்த காணிகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்க வேண்டும். எமது காலத்தில் அதனை மேற்கொள்ள நாங்கள் முயற்சித்தோம். அது சாத்தியமாகவில்லை. அதனால் அதனை தற்போது நீங்களாவது செய்யுங்கள். நாட்டில் இன்று தேயிலை, இறப்பர் போன்றவை ஒரு லட்சத்தி 3ஆயிரம் ஹெக்டயர்களில் பயிர்ச் செய்யப்படுகின்றன. அகவே பெருந்தோட்ட மக்களுக்கு அதிலே 7பேர்ச் காணி ஒதுக்குவதாக இருந்தால், வெறும் 5ஆயிரம் ஏக்கர் காணியே தேவைப்படுகிறது. அதனை ஒதுக்கிக்கொடுப்பதால் எந்த நட்டமும் ஏற்படப்போவதில்லை. அந்த மக்களும் இந்த நாட்டு பிரஜைகள் என அரசாங்கத்தில் இருக்கும் 159பேரும் பேசி இருக்கிறார்கள்.அதனால் அந்த மக்களுக்கு காணிகளை பிரித்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால், இந்த சமூகம் ஒதுக்கப்பட்ட சமூகமாக மாறிவிடும். அதேநேரம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களைவிட வெளி மாவட்டங்களில் இருந்து அதிகமான நிவாரணங்கள் கிடைக்கப்பெற்றன. அவர்கள் அனைவருக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/233750
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இரஸ்சிய மத்திய வங்கியின் பணம் அது. அனைத்து நாடுகளு இதே போல நடைமுறையினை பின்பற்றுகின்றன, இது தனியார் பணமல்ல.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
உந்த நரிப்புத்தி தெரிந்துதான் ரஷ்யா உக்ரேனின் கரைப்பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கின்றது. மற்றவர்கள் சொத்துக்களை ஆட்டைய போடுவதில் மேற்குலகினருக்கு நிகர் யாருமில்லை.