Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அரசியல் பச்சோந்தி வைகோவின் மதிமுக விற்கு எந்த ஒரு தொகுதியும் வழங்கியிருக்க கூடாது. தனித்து நின்றால் ஐந்து வாக்குகள் கூட இவர்களுக்கு கிடைக்காது.
  3. 75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை! 2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது. இதனால் அவரது தனிப்பட்ட பணத்தில் இருந்து 75 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சுகாதார அமைச்சின் அன்றைய செயலாளர் ஜனக்க சந்திரகுப்த, மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன ஆகியோர் 50 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா உள்ளிட்ட இரு தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அறிவித்தது. https://athavannews.com/2026/1470218
  4. யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு! ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்குமிடையே இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார். Marc Andre Franche மற்றும் அவரது குழுவினர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜை சந்தித்து யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் மனித உரிமைகள் உத்தியோகத்தர் சேவியர் குமுதினியும் கலந்துகொண்டார். https://athavannews.com/2026/1470236
  5. சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்! தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், ‘சிரித்துக் கொண்டே அழுவதாக’ ம.தி.மு.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த சட்டசபை தேர்தலை விட, ஒரு தொகுதியை குறைத்து தலா ஐந்து தொகுதிகள் தரப்பட்டுள்ளன. ம.தி.மு.க.,வுக்கு கடந்த முறை ஆறு தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் தற்போது நான்கு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியதோடு, ஒரு தொகுதியில் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிடவும், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், புதிதாக கூட்டணிக்கு வந்த தே.மு.தி.க.,வுக்கு 10 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்பட்டுள்ளன. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான பேச்சு, தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில் துவங்கி உள்ளது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதிகள் விபரம் குறித்து, இரு தரப்பும் இடையே நேற்று பேச்சு நடத்தப்பட்டது. நேற்றைய பேச்சுக்கு பின், ம.தி.மு.க., அவைத்தலைவர் அர்ஜுனராஜிடம், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ”சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்; நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகிறோம். எங்களின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்படவில்லை,” என்றார். ம.தி.மு.க.,வை தொடர்ந்து, கொங்கு மக்கள் தேசிய கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் தி.மு.க., தரப்பில் பேச்சு நடந்தது. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து சில மாதங்களுக்கு முன் விலகி, தி.மு.க., கூட்டணியில் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு இணைந்தார். அவருக்கு தி.மு.க., தலைமை, ஒரு தொகுதியை உறுதி செய்ததாகவும், கொங்கு மண்டலத்தில் உள்ள சங்ககிரி அல்லது பரமத்திவேலுார் தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால், சென்னை அறிவாலயத்தில் தி.மு.க., தொகுதி பங்கீட்டு குழுவினரை, நேற்று முன்தினம் தனியரசு சந்தித்தபோது, ‘முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு தொகுதி ஒதுக்க உத்தரவு தரவில்லை’ என கூறப்பட்டதால், அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் தொடருவதா என்பது குறித்து, இன்று தன் முடிவை அறிவிக்க உள்ளார். https://athavannews.com/2026/1470233
  6. Today
  7. டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த வேண்டத்தகாத ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ. Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கணக்குகளூடாக, பிறருடன் பாலியல் சம்பந்தமான உரையாடல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake பாலியல் படங்களும் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுபவத்தை அவர் “மெய்நிகர் பாலியல் வன்முறை” என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விவகாரம் ஏன் இப்பொழுது முக்கியமானதாக மாறியிருக்கின்றது என்றால், இது ஒரு தனிநபரின் பிரச்சினையைத் தாண்டி, சமூக அளவிலான ஆபத்துகளைக் கொண்டது என்பதால். Deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று யாருடைய முகத்தையும் வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கலாம். இது குறிப்பாக பெண்களுக்கு எதிரான ஒரு புதிய வகை டிஜிட்டல் வன்முறை எனலாம். ஒருவரின் அடையாளம், சமூகத்தில் அவருக்கான மதிப்பு, மற்றும் மனநிலை ஆகியவற்றை ஒரே நேரத்தில் பாதிக்கும் இந்தத் தொழில்நுட்பம், சட்ட ரீதியாகவும் சவாலாக இருக்கின்றது. இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்ததன் பின்னர், யேர்மனியில் ஒரு சமூக எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பொழுது, நாளுக்கு ஒரு ஊர்வலம் என்று ஏதாவது ஒரு பெரும் நகரத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. Fernandesஉம் இதில் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கிறார். இன்று இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட குற்றச்சாட்டு என்பதைத் தாண்டி, ஒரு சமூக விழிப்புணர்வாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது. விசாரணைகள் நடைபெறுகின்றன. Fernandesஇன் முன்னால் கணவர். Christian Ulmen இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கின்றார். Collien Fernandes விவகாரம், இன்றைய உலகில் நாங்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்களின் ஒன்று. ஒரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றம் மனித வாழ்வை எளிதாக்குகிறது, அதே நேரத்தில் அதைத் தவறாக பயன்படுத்தப்படும் அபாயத்தையும் உருவாக்குகிறது. இந்த நிகழ்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள், மற்றும் சட்ட மாற்றங்களின் அவசியம் குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது. படம்- நன்றி,விக்கிபீடியா
  8. DPD பார்சல் சேவிஸ் தான் எமக்குப் பார்சல்களைக் கொண்டுவந்து தந்தது. அதனால் பயமில்லை அண்ணா. ஏன் கருவாட்டுடன் தான் பார்ட்டி வைக்கலாமா ??? ஆனாலும் திரியாய்ப் பாரைக் கருவாட்டை முதல் வாரம் போய்ப் பார்த்துவிட்டு வந்தும் இன்னும் இரண்டு வாரம் இருக்குத்தானே என்று எண்ணி வாங்காமல் விட்டிட்டனே என்ற கவலை இருக்குத்தான்.
  9. அட 6 மாதமாக காணாத அத்தாருக்கு பாரைக் கருவாடுடன் நல்ல பாட்டி நடக்கப் போகுதென்று எண்ணிவிட்டேன்.
  10. ஜெயமோகனின் மாபெரும் விருது அறிவிப்பும் நவீன தமிழ் இலக்கியத்தின் ஆபத்தான இடமும் றியாஸ் குரானா 0000000000000000000000 தற்காலத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஜெயமோகன் ஆகப்பெரும் ஆளுமையாக உருவெடுத்துள்ளார் என்பதிலும், அவரது வாசிப்பு வீச்சும், எழுத்து வன்மையும் இணையற்றவை என்பதை நாம் முற்றிலும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். 'விஷ்ணுபுரம்' தொடங்கி 'வெண்முரசு' வரை அவர் உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான புனைவுலகம் என்பது இலக்கியச் செயல்பாட்டையும் தாண்டிய ஆழமான கருத்தியலாகும். அவரது எழுத்துக்கள் இந்திய மெய்யியல், அத்வைத தரிசனம், உன்னதவாதம் அத்தோடு ஆதிக்கப் பண்பாட்டுத் தொடர்ச்சி ஆகியவற்றைத் தனது அடிப்படைத் தத்துவார்த்த அடித்தளமாகக் கொண்டு இயங்குகின்றன. அவரது நாவல்கள், சிறுகதைகள், பல நூற்றுக்கணக்கான கட்டுரைகள் அதுபோலவே விவாதங்களை நாம் வெறும் மேலோட்டமான அழகியலாகவோ அல்லது தனிமனித அகத்தேடலாகவோ மட்டும் சுருக்கிப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தரவு சார்ந்த, பொருள்முதல்வாத மேலும் சமூகப் பொருளாதாரக் கோணங்களில் இருந்து ஒரு சமூக விமர்சகனாக இவற்றை நான் அணுகும்போது, ஜெயமோகனின் சிந்தனை முறைக்கு எதிராக மிகக் கடுமையான, ஆழமான, அத்தோடு கட்டமைப்பு ரீதியான விமர்சனங்களை நாம் ஈவிரக்கமின்றி முன்வைக்க வேண்டியுள்ளது. மனித இனம் இந்த உலகை வென்றதற்கு மிக முக்கியக் காரணம், மனிதர்களால் கற்பனையான கதைகளை உருவாக்கி, அதை உண்மை என நம்பி கோடிக்கணக்கானோருடன் இணைந்து செயல்பட முடிந்ததே காரணம் என்ற வரலாற்று யதார்த்தத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மதம், தர்மம், சாதி, தேசம், கடவுள் என்பவை சமூகங்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் மனித மூளையின் கற்பனையில் உதித்த சமூகக் கருவிகளே தவிர, அவை எக்காலத்திலும் மாறாத பிரபஞ்ச உண்மைகளாகக் கருதப்படக்கூடிய தகுதியற்றவை. இந்தக் கோணத்தில் ஜெயமோகனின் ஆகப்பெரும் படைப்பான 'வெண்முரசு' அத்தோடு அவரது தத்துவார்த்தக் கட்டுரைகளை நாம் அணுகினால் அவர் மீதான மிகக் கடுமையான அரசியல் விமர்சனம் தன்னிச்சையாகவே எழும். ஜெயமோகன் இந்தப் புனைவுகளை வெறும் வரலாற்றுச் சமூகக் கருவிகளாக, அதற்கான கால வெளி சார்ந்த எல்லைகளுக்குள் வைத்துப் பார்க்காமல், அவற்றை பிரபஞ்சத்தின் அறுதி உண்மைகளாகவும், மனிதர்கள் எக்காலத்திலும் மீற முடியாத 'தர்மமாகவும்' புனிதப்படுத்துகிறார். ஒரு எழுத்தாளராக அவர் செய்வது மாபெரும் பிற்போக்குத்தனம் என்றே நான் ஆணித்தரமாகக் கருதுகிறேன். மனிதன் கற்பனையான புனைவுகள் அத்தோடு மாயைகளில் இருந்து விடுபட்டு, அறிவியல் மற்றும் சமூக யதார்த்தங்களை நோக்கி நகர வேண்டிய இந்த நவீன காலகட்டத்தில், ஜெயமோகன் தனது அபாரமான மொழி ஆளுமையைப் பயன்படுத்தி, மீண்டும் பழைய இதிகாச மற்றும் மதப் புனைவுகளுக்குள் தமிழ் வாசகர்களைக் கட்டிப்போடும் வேலையைச் செய்கிறார். பல ஆயிரம் பக்கங்களில் அவர் திரும்பத் திரும்ப நிறுவுவது, மனிதர்களைப் பிரித்து ஆளும் பழைய காலக் கற்பனைகளைத்தான். அவரது எழுத்துக்கள், வாசகர்களின் தர்க்க சிந்தனையை மழுங்கடித்து, உணர்ச்சிகரமான கற்பனைகளுக்குள் மனிதனை அடிமையாக்கும் வேலையை மிகக் கச்சிதமாகச் செய்கின்றன. இந்த தத்துவார்த்த மாயையிலிருந்து விடுபட்டு, சமூகத்தின் விளிம்புநிலை யதார்த்தங்களை நாம் நோக்கினால், இந்தியாவின் வறுமை, விவசாயிகளின் துயரம், அத்தோடு விளிம்புநிலை மக்களின் அன்றாடப் பாடுகள் ஆகியவை அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் ஒட்டுமொத்தத் தோல்வியாகவே தரவுகளின் அடிப்படையில் நமக்குத் தெளிவாகத் தெரிகின்றன. இந்த யதார்த்தவாதக் கோணத்தில் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலையோ அல்லது பிச்சைக்காரர்கள், பழங்குடியினர் குறித்து அவர் எழுதியுள்ள பல கட்டுரைகளையோ வாசிக்கும்போது, அவர் மீது மிகக் கடுமையான அறரீதியான குற்றச்சாட்டு எழுகிறது. ஜெயமோகன் வறுமையையும், மாற்றுத்திறனாளிகளின் நிலை, விளிம்புநிலை மக்களின் தீர்க்க முடியாத துயரத்தையும் ஒரு 'ஆன்மீகத் தரிசனமாக' மடைமாற்றி விடுகிறார். ஏழாம் உலகத்தில் பிச்சைக்காரர்களை வைத்து அவர் உருவாக்கும் தத்துவ விவாதங்கள் இலக்கிய ரீதியாக சுவாரஸ்யமானவையாக இருக்கலாம். ஆனால் சமூக ரீதியாக அவை மிகவும் ஆபத்தானவை. ஒரு பிச்சைக்காரனின் துயரம் என்பது பிரபஞ்சத்தின் ரகசியமோ அல்லது அவனது கர்ம வினையோ கிடையாது. அது ஆளும் வர்க்கத்தின் அரச வளங்கள் சிலரிடம் மட்டும் குவிக்கப்படுவதன் நேரடி விளைவு. ஜெயமோகன் விளிம்புநிலை மக்களின் பட்டினியை உன்னதப்படுத்துவதன் மூலம், அந்தப் பட்டினிக்குக் காரணமான அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தை எந்தவொரு விமர்சனத்திலிருந்தும் தப்ப வைக்கிறார். சுரண்டலைத் தத்துவப்படுத்துவது என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யப்படும் ஆகப்பெரிய அறிவுசார் துரோகம். 'அறம்' போன்ற கதைகளில் வரும் மனிதர்களின் தியாகங்கள் கூட, சமூக அமைப்பின் கட்டமைப்பு ரீதியான அநீதிகளைக் கேள்வி கேட்காமல், வெறும் தனிமனித அறமாகச் சுருங்கிவிடுகின்றன என்பதை ஒரு சமூக விமர்சகனாக என்னால் சுட்டிக்காட்டாமல் கடந்து செல்ல இயலாது. இந்தச் சுரண்டலின் வேர் எங்குள்ளது என்று நாம் ஆழமாகப் பார்த்தால், பல நூற்றாண்டுப் பொருளாதாரத் தரவுகள் நிறுவுவது ஒன்றே ஒன்றைத்தான். செல்வம் அதுபோலவே அதிகாரம் என்பது தகுதியால் வருவது கிடையாது. அது வாரிசுரிமையாகவும், மூலதனக் குவிப்பாகவும் ஒரு சிறிய ஆதிக்க வர்க்கத்திடமே தங்கிவிடுகிறது. இந்த அமைப்புரீதியான சமத்துவமின்மையே சமூகத்தின் அனைத்து அநீதிகளுக்கும் அடிப்படைப் காரணம். ஆனால் ஜெயமோகனின் பல கட்டுரைகளில் (குறிப்பாக சாதி, குடி, அத்தோடு வர்ண அமைப்பு குறித்த விவாதங்களில்), அவர் இந்தியச் சமூகப் படிநிலைகளை முற்றிலுமாக நிராகரிக்காமல், அவற்றுக்கு ஒரு பண்பாட்டு அல்லது தொழில் ரீதியான 'சமநிலைக்' காரணம் இருந்தது என்று வாதிடுவதைக் காண முடிகிறது. "வர்ணம் வேறு, சாதி வேறு. வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் அமைந்தது" என்ற பழமையான, பலமுறை தோற்கடிக்கப்பட்ட வாதத்தை நவீன மொழியில் பலமுறை அவர் தற்காத்துப் பேசியுள்ளார். தகுதியுள்ளவர்களே தலைமை ஏற்க வேண்டும் என்ற சிந்தனை அவரது எழுத்துக்களில் அடிநாதமாக இழையோடும். ஆழமாகப் பார்த்தால், ஜெயமோகனின் சிந்தனை என்பது ஆதிக்க வர்க்கத்தின் சொத்துக் குவிப்பையும், அதிகாரப் பரம்பரையையும் நியாயப்படுத்தும் ஒரு அதிநவீனத் தத்துவச் சால்ஜாப்பு மட்டுமே. 'தகுதியானவர்கள்' என்று அவர் கருதுபவர்கள், தலைமுறைகளாகக் கல்வியையும் நிலத்தையும் தங்களுக்குள் குவித்து வைத்துக்கொண்ட வர்க்கமே தவிர, அவர்கள் பிறப்பால் எவ்வகையிலும் மேன்மையானவர்களும்கூடக் கிடையாது. ஜெயமோகனின் 'பண்பாட்டுத் தொடர்ச்சி' என்ற வாதம், உண்மையில் மூலதன ஆதிக்கத் தொடர்ச்சிக்கான ஒரு பண்பாட்டு முகமூடி மட்டுமே. இதற்கு வலு சேர்க்கும் விதமாக, அவர் தொடர்ந்து நவீன அறிவியலையும் உலகளாவிய முன்னேற்றங்களையும் நிராகரிப்பதைக் காண முடியும். உலகம் கடந்த காலத்தை விட இப்போதுதான் மிகச் சிறந்த நிலையில் இருக்கிறது என்பதை ஆயுள் காலம், சுகாதாரத் தரவுகள், வன்முறைக் குறைவு ஆகியவற்றின் மூலம் நம்மால் ஆணித்தரமாக நிறுவ முடியும். ஆனால் ஜெயமோகனின் பல எழுத்துக்கள் நவீன உலகை ஒரு சாபக்கேடாகவும், அறிவியல் பகுத்தறிவை ஆன்மாவைத் தொலைத்த இயந்திரத்தனமாகவும் சித்திரிக்கின்றன. அவர் தொடர்ந்து ஒரு 'இழந்த பொற்காலத்தை' நோக்கி வாசகர்களை ஈர்க்கிறார். பழங்காலக் கிராமிய வாழ்க்கை, பண்டைய ஞானிகளின் வாழ்வு முறை ஆகியவை மட்டுமே உன்னதமானவை என்ற பிம்பத்தைக் கட்டமைக்கிறார். ஆனால் அவர் உன்னதப்படுத்துகிற அந்தப் பழங்காலம் என்பது சிசு மரணங்கள் மலிந்த, தொற்றுநோய்களால் மனிதர்கள் கொத்துக் கொத்தாக மடிந்த, தீண்டாமை மேலும் அடிமைத்தனம் கொடிகட்டிப் பறந்த ஒரு கொடூரமான இருண்ட காலம் என்பதே தரவுகள் சுட்டிக்காட்டும் உண்மை. நவீன அறிவியலும், ஜனநாயக அமைப்புகளும் மட்டுமே மனிதனின் வாழ்நாளை நீட்டித்து, அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளன. (ஒப்பீட்டளவில்) ஜெயமோகனின் நவீனத்துவ மற்றும் அறிவியல் மீதான இந்த அவநம்பிக்கை என்பது, எதார்த்தத் தரவுகளைப் புறக்கணிக்கும் வெற்று உணர்ச்சிவாதமே ஆகும். அவர் தரவுகளின் வெளிச்சத்தைக் காட்டிலும், தொன்மங்களின் இருட்டையே அதிகம் விரும்புகிறார். இந்த இருட்டு, ஆதிக்க சக்திகள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்த எப்படிப் பயன்படுகிறது என்பதை நாம் நுட்பமாக அவதானிக்க வேண்டும். அரசும் பெருநிறுவனங்களும் மக்களின் வளங்களைக் கொள்ளையடிக்கும்போது, மக்கள் அதனை எதிர்த்துப் போராடாமல், ஏதோ ஒரு தத்துவ விசாரணையில் மூழ்கியிருக்கவே அதிகாரம் எப்போதும் விரும்பும். ஜெயமோகன் தன்னை எந்தவொரு நேரடி அரசியல் கட்சிக்கும் சார்பற்றவர் என்று தொடர்ந்து கூறிக்கொண்டாலும், அவர் உருவாக்கும் 'இந்துப் பெருமிதம்', 'பாரதீயப் பண்பாட்டு மீட்சி', அத்தோடு 'ஆழ்ந்த ஆன்மீகத் தேடல்' ஆகிய கருத்தியல்கள், சமகால வலதுசாரி மற்றும் பெருமுதலாளித்துவ அரசியல் அதிகாரத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகின்றன. மக்கள் தங்கள் நில உரிமைகள், வேலைவாய்ப்பு, அத்தோடு பொருளாதாரச் சுரண்டல்கள் குறித்துக் கோபம் கொள்ள வேண்டிய காலகட்டத்தில், அவர் அவர்களை அத்வைதத்தின் நுட்பங்கள், இதிகாசங்களின் தத்துவங்கள், பண்பாட்டுப் பெருமைகளை நோக்கித் திசை திருப்புகிறார். என் வாசிப்பில், ஜெயமோகனின் எழுத்துக்கள் ஆதிக்க வர்க்கம் மக்களுக்குப் புகட்டும் ஒரு பண்பாட்டு மயக்க மருந்தாகவே செயல்படுகின்றன. அந்த வேலையை அவரது எழுத்துக்கள் மிகக் கச்சிதமாகச் செய்கின்றன. இவற்றின் தொடர்ச்சியாகவே, ஜெயமோகன் ஆர்.எஸ்.எஸ் சார்புடையவரா என்ற தொடர் விமர்சனத்தையும் நாம் கருத்தியல் ரீதியாக அணுக வேண்டும். அவர் நேரடியாக வலதுசாரி அமைப்புகளிலோ கட்சியிலோ உறுப்பினராக இருந்ததில்லை. (விஷ்ணுபுரம் நாவல் ஆர்.எஸ்.எஸ் காரியாலயங்களில் விற்கப்பட்டன) தன்னை ஒரு காந்தியவாதி என்றும், அத்வைதி என்றுமே அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்துத்துவ அரசியலை அவர் பல இடங்களில் கடுமையாக விமர்சித்தும் உள்ளார். அவர்கள் மதத்தை வெறும் அரசியல் திரட்டலுக்கான கருவியாகச் சுருக்குகிறார்கள் என்று வெளிப்படையாகவே எழுதியுள்ளார். ஆனால், அவர் அரசியல் ரீதியாக அவர்களை விமர்சித்தாலும், தத்துவார்த்த ரீதியாக வலதுசாரி அரசியலுக்குத் தேவையான மிகப்பெரிய அறிவுசார் அடித்தளத்தை தமிழ்நாட்டில் உருவாக்குபவர் அவரே என்பது எனது ஆழமான நிலைப்பாடு. இந்தியாவை மொழிகளாலும் தேசிய இனங்களாலும் ஆன ஒரு கூட்டாட்சியாகப் பார்க்காமல், ஒற்றைப் பண்பாட்டு ஆன்மீகத் தேசமாக அவர் முன்வைப்பது இந்து ராஷ்டிர சிந்தனைக்கு மிகவும் நெருக்கமானது. மேலும், தமிழ்நாட்டில் வேரூன்றியிருக்கும் பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய சிந்தனைகளைத் தொடர்ந்து தாக்கி, அவற்றுக்கு மாற்றுவடிவமாகப் பாரம்பரிய தர்மத்தையும் அத்வைதத்தையும் அவர் நிறுவுகிறார். இந்தியாவின் வரலாற்றை ஒடுக்கப்பட்டவர்களின் அதிகாரப் போராட்டமாகப் பார்க்காமல், வேதாந்த சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சியாகவே முன்வைக்கிறார். ஆக, தற்கால வலதுசாரி அரசுகள் பெருமுதலாளித்துவத்துடன் இணைந்து இயங்கும்போது, ஜெயமோகன் உருவாக்கும் பிரம்மாண்டமான இந்து ஞான மரபு விவாதங்களும், பண்பாட்டுப் பொற்காலம் குறித்த ஏக்கங்களும், அந்த அதிகார வர்க்கத்திற்கு மிகச் சிறந்த கருத்தியல் கவசமாகப் பயன்படுகின்றன. அவர் வலதுசாரி அரசியல் தடையின்றி இயங்குவதற்கான பாதுகாப்பான சமூக மனநிலையைத் தயார் செய்து கொடுக்கிறார். இந்தச் சூழலில், இப்படியான பழமைவாதத்தை முட்டுக்கொடுத்து நிறுத்துகின்ற ஒருவர், பெருமுதலாளிகள் அதுபோலவே பழமைவாத ஆதரவாளர்களின் பின்புலத்துடன் 'ஒரு கோடி ரூபாய்' என்ற மாபெரும் பணப்பரிசுடன் ஒரு இலக்கிய விருதினை அறிவித்து, இந்தியாவிலேயே மிகப்பெரிய இலக்கிய அதிகார நிறுவனமாகத் தன்னை முன்னிறுத்துவது என்பது வெறுமனே இலக்கியச் செயல்பாட்டையும் தாண்டிய ஒரு மிகத் தீவிரமான அரசியல் மேலாதிக்கச் செயல்பாடாகவே உருவெடுத்துள்ளது. ஆதிக்க வர்க்கம் தங்களது சித்தாந்தத்தை மக்கள் மீது வன்முறையால் திணிப்பதைத் தவிர்த்துவிட்டு, நுட்பமான இலக்கிய நிறுவனங்கள் மற்றும் விருதுகள் மூலம் தங்களது மதிப்பீடுகளே ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனை முறையாக இருக்க வேண்டும் என மூளைச்சலவை செய்கிறது. ஜெயமோகன் முன்னெடுக்கும் இந்த மாபெரும் அதிகார நிறுவனமும், அதன் அபரிமிதமான பண பலமும் அத்தகைய மேலாதிக்கத்தை நிறுவும் கருவியே ஆகும். ஒரு கோடி ரூபாய் என்பது தமிழ் இலக்கியச் சூழலில் கற்பனைக்கெட்டாத ஒரு பெரும் மூலதனம். இந்த மூலதனத்தின் ஈர்ப்பு விசை, தன்னிச்சையாகவே பல இளம் எழுத்தாளர்களைத் தன்பால் ஈர்க்கும். மார்க்சிய, தலித்திய, பின்நவீனத்துவ, பெண்ணிய மற்றும் திராவிடச் சிந்தனை கொண்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கூட, இந்த அதிகார நிறுவனத்தின் அங்கீகாரத்திற்காகவும், பணப்பரிசுக்காகவும் தங்களது தீவிரமான சமூக விமர்சனங்களை மழுங்கடித்துக்கொண்டு, ஜெயமோகன் வரையறுக்கும் உன்னதவாத மற்றும் ஆன்மீக அளவுகோல்களுக்கு ஏற்பத் தங்களது எழுத்துக்களைச் சமரசம் செய்துகொள்ளும் நிலை உருவாகும். பணத்தின் மூலம் மாற்றுச் சிந்தனைகள் நேரடியாகத் தடை செய்யப்படாமல், அதிகார நிறுவனத்தின் பிரம்மாண்டத்தால் அவை தானாகவே அடங்கிப் போகச் செய்யப்படுகின்றன. சம்மதத்தை உற்பத்தி செய்யும் மிக நுட்பமான தந்திரம் இது. தமிழ் இலக்கியம் என்பது காலம் காலமாக மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், சிறுபான்மையினர் இலக்கியம், பின்நவீனத்துவம் எனப் பல்வேறு விளிம்புநிலை மக்களின் மாற்றுக்குரல்களால் பன்முகத்தன்மை கொண்டு விளங்கும் ஒரு களம். ஆனால், பெரும் பணபலத்தோடு ஒரு அதிகார நிறுவனம் உருவாகும்போது, அது ஒரு குறிப்பிட்ட அழகியலை மட்டுமே உண்மையான இலக்கியம் என்று உலகிற்கு அறிவித்து, மற்றவற்றின் மீது மிக மோசமான ஒரு குறியீட்டு வன்முறையைச் செலுத்துகிறது. ஜெயமோகனைப் பொறுத்தவரை, இந்திய ஞானமரபு, தொன்மங்கள், அத்தோடு ஆன்மீகத் தேடல் ஆகியவற்றைக் கொண்ட காத்திரமான படைப்புகளே ஆகச் சிறந்தவை என்ற அளவுகோல் உள்ளது. இந்த மாபெரும் விருதின் மூலம், இந்த குறிப்பிட்ட பழமைவாத மேலும் இந்துத்துவச் சார்புடைய அழகியலே இந்தியாவிலேயே தலைசிறந்தது என்ற பிம்பம் பண்பாட்டு மூலதனமாக உருவாக்கப்படுகிறது. இது தலித் இலக்கியத்தையோ, பெண்ணிய இலக்கியத்தையோ, பின்நவீனத்துவ இலக்கியத்தையோ நேரடியாகத் தாக்காது. அதற்கீடாக, அவற்றின் அழகியலை, "இது வெறும் பிரச்சாரம்", "இது உன்னதக் கலையென ஏற்கவியலாது" என்று முத்திரை குத்தி, இலக்கிய வரைபடத்தின் ஓரத்திற்குத் தள்ளிவிடும் அபாயம் உள்ளது. செவ்வியல் என்ற சொல்லுக்குள் ஒரு பெரும் ஆபத்தான வெடிகுண்டை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு நவீன தமிழ் இலக்கியத்தை அச்சுறுத்தும் தந்திரோபாயம் இதனுள் பொதிந்திருக்கிறது. ஜெயமோகனின் சிந்தனைகளும் எழுத்துக்களும் தனிமனிதனின் அகத் தேடலுக்கும், தமிழ் மொழியின் அழகியலுக்கும் மாபெரும் பங்களிப்பைச் செய்திருக்கலாம். ஆனால், ஒரு தீவிரமான விமர்சகனாக அவரை சமூக, வரலாற்று, பொருளாதார நிலைப்பாடுகளின் அடிப்படையில் அளவிடும்போது, அவரது ஒட்டுமொத்த எழுத்தியக்கமும் பழமைவாதத்தை முட்டுக்கொடுத்து நிறுத்துவதாகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தத்துவார்த்தமாக நியாயப்படுத்துவதாகவும், விளிம்புநிலை மக்களின் யதார்த்தப் பிரச்சினைகளை ஆன்மீக இருட்டடிப்புச் செய்வதாகவுமே வெளிப்படுகிறது. அவர் சொற்களால் கட்டும் பிரம்மாண்டமான தத்துவக் கோட்டைகள், எதார்த்தமற்ற புனைவுகளின் அடித்தளத்தில்தான் எழுப்பப்பட்டுள்ளன. இப்போது, அந்தப் புனைவுகளை வெறும் வார்த்தைகளைத் தாண்டியும், பல கோடி ரூபாய் மூலதனத்தின் துணையோடும், ஒரு மாபெரும் அதிகார நிறுவனத்தின் வாயிலாகவும் ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியச் சூழலின் மீதும் ஒரு மேலாதிக்கமாக நிலைநிறுத்த அவர் முற்படுகிறார். இது, தமிழின் பன்முகத்தன்மையை அழித்தொழித்து, ஒற்றைப் பரிமாண, ஆதிக்கச் சார்பு இலக்கியச் சூழலை உருவாக்கும் மாபெரும் அரசியல் செயல்பாடாகவே இதைக் கருதி எவ்விதச் சமரசமுமின்றி நாம் முழுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது. #ஜெயமோகன் #தமிழ்இலக்கியம் #இலக்கியவிமர்சனம் #பண்பாட்டுஅரசியல் #விருது #கருத்தியல்வன்முறை #விளிம்புநிலைஅரசியல் #tamilliterature #riyasqurana #றியாஸ்குரானா https://www.facebook.com/share/1K7cywzmw4/?mibextid=wwXIfr
  11. வணக்கம் வாத்தியார் . .........! பாடகா் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான் பெண் : பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை புல்விாியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை பட்சிகளின் கூக்கூக்கூ பூச்சிகளின் ரிங் ரிங் ரிங் சங்கீதம் சொல்லித்தருமே தங்கப்பெண்ணே காலோடு சலங்கை பூட்டி கரையெல்லாம் வீணை மீட்டி நதிபாடும் பாடல் கேளாய் பட்டுப் பெண்ணே பூமி ஒரு வீணை அதைக் காற்றின் கைகள் மீட்டுதே கேட்கும் ஒலியெல்லாம் அட சாிகமபதனிசாி பெண் : கண்தூங்கும் நேரத்தில் மௌனத்தின் ஜாமத்தில் கடிகாரச் சத்தம் சங்கீதம் கண்கானா தூரத்தில் சுதிசேரும் தாளத்தில் ரயில் போகும் ஓசை சங்கீதம் பசிகொண்ட நேரம் தாளிக்கும் ஓசை சந்தோஷ சங்கீதம் தாலாட்டும் அன்னைக்கெல்லாம் தங்கள் பிள்ளை மாா்பை முட்டி பாலுண்ணும் சத்தம் சங்கீதம் பெண் : சிட்சிட்டுக் குருவிகளும் சில்லென்று நீராடி சிறகுலா்த்தும் ஓசை சங்கீதம் கரைகொண்ட பாறைமேல் கடல் கொண்ட அலைவந்து கைதட்டும் ஓசை சங்கீதம் காற்றோடு தென்னை அசைகின்ற ஓசை சிருங்கார சங்கீதம் முத்தாடும் நீாின் மேலே தத்தித் தத்தித் தாவிச் செல்லும் தவளைகள் ஓசை சங்கீதம் ........! ..... பூப்பூக்கும் ஓசை ......
  12. அண்ணி அவள் தாகத்துக்கு ........ படம் : மனைவி (1969) விஜயகுமாரி & ராமாபிரபா ........ ! 😍
  13. இந்த சிற்பக்கலைகளைக் காணும்போது அந்தச் சிற்பிகளின் பாதம் தொட்டு வணங்கவேண்டும் போல் இருக்கு . ........! 😊
  14. காலங்காலமாய் இந்த நடக்கிற பாதயாத்திரைதான் ஒழுங்காய் நடக்கின்றது . .........! 🙏
  15. செல்வச்சந்நிதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை! வெள்ளி, 27 மார்ச் 2026 05:41 AM வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - கதிர்காமத்திற்கான பாரம்பரிய புனித பாதயாத்திரை, ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது. ஸ்ரீ கதிர்காம கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 15 தினங்கள் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ள இத்திருவிழா, ஜூலை மாதம் 29 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. இலங்கையின் மிக நீண்ட இந்தப் பாதயாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் அடியார்கள், ஜெயா வேல்சாமியுடன் 077-8386381 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு தமது பங்கேற்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இம்முறை 95 யாத்திரிகர்கள் மாத்திரமே உள்வாங்கப்படவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். செல்வச்சந்நிதி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் இந்தப் பாரம்பரிய பாதயாத்திரை, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய 3 மாகாணங்களையும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை ஆகிய 7 மாவட்டங்களையும் கடந்து செல்லவுள்ளது. சுமார் 52 நாள்கள், 572 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்தப் பயணம், இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/55871
  16. கையைவிட்டுப் போன பொதி திரும்ப வந்தால் கண்டபடி எல்லாம் திறக்கக் கூடாதாம். இன்றைய அறிவியல் உலகில் விமானத்தில் வரும் பயனிகளின் பொதிகளையும் மிக நுட்பமாகத் திறந்து போதைப் பொருட்களையும் அதற்குள் வைத்துக் கடத்துகிறார்களாம்.😳
  17. கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் வனவள திணைக்களம் அத்துமீறல் ; பொதுமக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டார் சத்தியலிங்கம் 27 Mar, 2026 | 11:26 AM வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகராயன்குளம், புளியங்குளம் ஆகிய பகுதியில் வனவள திணைக்களத்தினால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பிலான பொதுமக்களின் முறைப்பாடுகளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை (25) பொதுமக்களுடன் நேரில் கலந்துரையாடி பெற்றிருந்தார். குறித்த பகுதியைச் சேர்ந்த மக்களுடன் ஏ9 வீதி, பரசங்குளம், புளியங்குளத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு மக்கள் தொடர்பகத்தில் குறைகேள் கலந்துரையாடலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர், இதன்போது கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளிலிருந்து வருகைதந்திருந்த பொது மக்களினால் பிரதானமாக முன்னிலைப்படுத்தப்பட்ட வனவள திணைக்களத்தினரால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பிலான முறைப்பாடுகளையும், அதற்குரிய ஆவனங்களையும் பெற்றுக்கொண்டார். மேலும் மக்களால் தெரிவிக்கப்பட்ட தமதுபக்க நியாயாதிக்கத்தையும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் விரைவில் குறித்த காணிகளை நேரில் வருகைதந்து பார்வையிடுவதாகவும் தெரிவித்தார். மேற்படி விடயங்கள் தொடர்பில் மக்களால் கையளிக்கப்பட்ட ஆவனங்களை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், விடயத்தை அரசாங்க அதிபர், வனவள திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/242058
  18. நீங்களும் அதிகநாட்கள் யாழுக்கு வரவில்லையோ அண்ணா? ஔவையின் இந்தப் 60 ம் அவரின் என்ன பெயருள்ள நூலில் இருக்கிறது. நான் இதுவரை அறியவில்லை.
  19. பொருட்கள் எதுவும் தொலையவில்லை. திடுதிப்பெனக் கிளம்பியதில் கருவாடு, கறிவேப்பிலை மற்றும் சில வேண்டவேண்டும் என எண்ணிய பொருட்கள் வாங்கவில்லை. சரி அடுத்ததடவை வாங்குவோம் என மனதைத் தேற்றியாச்சு. 😃
  20. ’’கூச்சமில்லாமல் ஜிப்பை கழற்றுபவர்கள்’’: சின்மயி கடும் பதிலடி! பாலியல் குற்றங்கள் குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளன. அவரது பேச்சுக்குப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா நேரடியாகவும் கடுமையாகவும் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சர்ச்சைக்குரிய பேச்சு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எஸ்.வி. சேகர், சமூகத்தில் ஒழுக்கம் குறைந்து வருவதாகவும், குழந்தைகளுக்குக் கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், அனைத்துத் தவறுகளுக்கும் அரசாங்கத்தையே குறை கூறக்கூடாது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பாலியல் குற்றங்கள் குறித்துப் பேசிய அவர், சர்ச்சையைத் தூண்டும் வகையில் சில உதாரணங்களைக் கூறினார்: "தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. நான் என் வீட்டைப் பூட்டாமல் விட்டுவிட்டு, திருடன் திருடினான் என்றால் அதற்குச் சட்டம் எப்படிப் பொறுப்பாகும்?" எனக் கேள்வி எழுப்பினார். "பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வெளியே சென்றால் ஒருவரைத் துணைக்கு அனுப்ப வேண்டும்," என்றும் குறிப்பிட்டார். மிக முக்கியமாக, அண்மையில் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "ஒரு பெண் புதருக்குள் சென்றதாகச் சொல்கிறார்கள்; அவர் ஏன் அங்கு சென்றார்? புதருக்குள் பொலிஸாரால் மின்விளக்கு பொருத்த முடியுமா?" எனக் கேட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணையே குறை கூறும் வகையில் அமைந்த இந்த வரிகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைக் கிளப்பின. பாதிப்புக்குள்ளான பெண்ணின் பக்கம் நின்ற சின்மயி எஸ்.வி. சேகரின் இந்த கருத்துக்குப் பாடகி சின்மயி தனது 'எக்ஸ்' (X) பக்கத்தில் நேரடியான பதிலடி கொடுத்துள்ளார். அவரது பதிவில் உள்ள முக்கிய அம்சங்கள்: "ஒரு பெண் ஏன் புதருக்குள் சென்றார் என்று கேட்கிறீர்கள். அந்த இடத்தில் கழிவறை வசதியே இல்லையென்றால் அவர் வேறு என்ன செய்வார்?" எனச் சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார். அந்தப் பெண் இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகவே அங்கு சென்றார் என்ற தகவலை அவர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் போதிய கழிவறை வசதிகள் இல்லாததால், திறந்தவெளியைப் பயன்படுத்தும் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது இது முதல் முறையல்ல என்பதை அவர் நினைவுபடுத்தினார். எவ்விதக் கூச்சமும் இன்றிப் பொதுவெளியில் ஜிப்பை கழற்றி சிறுநீர் கழிக்கும் ஆண்களிடம் கேள்வி கேட்காதவர்கள், பாதுகாப்பற்ற சூழலில் தள்ளப்படும் பெண்களைக் குறை கூறுவது ஏன் என அவர் சாடியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளாமல், அவர்களின் மீதே பழி போடும் மனநிலையைச் சின்மயி தனது பதிவின் மூலம் கடுமையாகச் சாடியுள்ளார். https://www.tamilmirror.lk/cinema/கூச்சமில்லாமல்-ஜிப்பை-கழற்றுபவர்கள்-சின்மயி-கடும்-பதிலடி/54-374632
  21. பாழ்கிணற்றுப் படுகொலை: ’’ சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது’’ :கண்டனப் போராட்டம் ரீ.எல். ஜவ்பர்கான் மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது என வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கோரியும் மட்டக்களப்பு நகரில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது. வெல்லாவெளி 40ஆம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பாரிய கொள்ளை மற்றும் கொலைகளின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தொடர்பாக மூவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில், மூவரை நான்கு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கவும், ஏனைய இருவரை மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (27) மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காந்தி பூங்காவிலிருந்து பழைய கச்சேரி (மாவட்ட செயலகம்) வரை பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள்: “இக்கொடூரக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது”, “குற்றவாளிகளுக்கு உச்சகட்டத் தண்டனை வழங்கப்பட வேண்டும்”.“பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர். "கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே!", "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்!", "பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது கை வைக்காதே!" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர். மாவட்ட செயலகத்தின் முன்பாகத் திரண்ட மக்களைச் சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை நீதித்துறை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசாங்க அதிபரிடம் போராட்டக்காரர்களால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோருடன் பிரதேச சபைத் தவிசாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர். https://www.tamilmirror.lk/செய்திகள்/பாழ்கிணற்றுப்-படுகொலை-சட்டத்தரணிகள்-ஆஜராகக்-கூடாது-கண்டனப்-போராட்டம்/175-374634
  22. ’’தலைமையே பதவி விலகு; ரெலோ தலைமைக்கு எதிராக போராட்டம்! எஸ். கீதபொன்கலன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்சியின் 12-வது தேசிய மகாநாட்டை உடனடியாகக் கூட்டி புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வலியுறுத்தியும் இன்று (27) திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், கட்சியின் மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது. அங்கிருந்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்ற அங்கத்தவர்கள், திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்பாகத் தொடர்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கட்சியின் மூத்த உறுப்பினர் கௌரிதாஸ் பத்மலோஜினி கூறியதாவது: "கட்சியின் யாப்பு விதிகளின்படி, தற்போதைய தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 23.03.2026 அன்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே, தாமதமின்றி கட்சியின் 12-வது தேசிய மகாநாடு கூட்டப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்." மேலும் அவர் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் கட்சியின் புதிய நிர்வாகிகள் யாப்பு விதிகளின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளின் தெரிவும் கட்சியின் தலைமைக் குழு முன்னிலையிலேயே நடைபெற்றது. இருப்பினும், இந்தத் தெரிவு யாப்புக்கு முரணானது என தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் கட்சியின் தலைமைத்துவத்தின் ஆசீர்வாதம் இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாகவும், உட்கட்சி ஜனநாயகத்தை மீறும் இச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி, வழக்கை மீளப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அவற்றுள் சில: • "தலைமைக் குழுவே! தேசிய மகாநாட்டை உடனே நடத்து!" • "தங்கண்ணா, சிறி அண்ணா கட்டிக்காத்த கட்சியைச் சீரழிக்காதே!" • "கட்சித் தலைமையே! இரட்டை வேடம் போடாதே, ரெலோவை அழிக்காதே!" • "பதவி ஆசை போதும்; சாகும் வரை நீங்களா பதவியில் இருப்பீர்கள்?" • "தலைமைக்குழு உறுப்பினர்களே! பதவி ஆசைக்காகவா அன்று ஆயுதம் தூக்கினீர்கள்?" கட்சியின் புதிய நிர்வாகிகளின் தெரிவை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மகாநாட்டை நடத்தி புதிய தலைமையை உருவாக்க வழிவிடுமாறு போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். https://www.tamilmirror.lk/செய்திகள்/தலைமையே-பதவி-விலகு-ரெலோ-தலைமைக்கு-எதிராக-போராட்டம்/175-374635
  23. 10 இந்திய மீனவர்களுக்கு 10 வருட சிறை – தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்- சான்று பொருட்கள் அரசுடமையாக்கம் adminMarch 27, 2026 இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத் தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய 10 மீனவர் களின் வழக்கு விசாரணை நேற்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த மாதம் 19 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து 2 படகுகளுடன் குறித்த 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது குறித்த மீனவர்களை நேற்று வியாழக்கிழமை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் குறித்த மீனவர்கள் 10 பேர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 10 மீனவர்களையும் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவித்தார். மேலும் ஒவ்வொரு மீனவர் களுக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு வழக்கின் சான்று பொருட்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. https://globaltamilnews.net/2026/231091/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.