stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
6.3 ஓவர் முடிவில் நேபாளம் 23 - 4 . தொடரின் குறைந்த ஒட்டம் எடுக்குமா?
- Today
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
எங்கு தவறு செய்தோமோ அங்கேயுள்ள நீதிமன்றுக்குத் தான் போக வேண்டும். அதனாலேயே பலர் அப்பவே ஏதோ கொடுத்துவிட்டு போவோம் என்கிறார்கள். இது வான் சாரதிகள் மூலமாக தெரிந்து கொண்டது.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நன்றி நான் கேட்டவரிடம் 280-300,000 இடையே வரும் எண்டுதான் கேட்டேன். இனிப்போய் 4 என சொல்லுவது அழகாக இராது. பார்ப்போம் அதையும் ஏனையதையும் போட்டு செய்யலாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது😂 (அறிஞர் அண்ணாவின் கல்லறை வாசகம்).
-
என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்?
ஓ… அப்போ அந்த படமும், பெயரும் உங்களது இல்லை போலும்👍.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
கள்ளனுக்கு ஒரு பாவம்… களவு கொடுத்தவனுக்கு (பலரை சந்தேகிப்பதால்) பல பாவம் என்பார்கள்… பல உண்மையான செயல்பாட்டாளர்கள் 2009 வரை, குறிப்பாக கீழ் அடுக்கில், உண்மையாக இருந்தார்கள் என்பதை மறுக்கவில்லை. இனத்துக்காக நேரம், வலுவை கொடுத்தவர்களுக்கு ஆதாரம் இல்லாமல் கள்ளபட்டம் கட்ட கூடாது என்பது உண்மை. ஆனால் இதை வைத்தே பல கள்ளரும் தப்புகிறாகள் என்பதும் உண்மை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மனமார்ந்த நன்றிகள் புலவர் ஐயா..
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
2009 மே 19 ற்கு முன் காவியமான அனைவரையும் மாவீரர் என அழைப்பது சாலப்பொருதமானதே என்பதே என் கருத்தும். ஆனால் நான் அறிந்த வகையில் வீரவேங்கை - 1ம் லெப்டினெண்ட்- 2ம் லெப்டினெண்ட்- கப்டன் - மேஜர், லெப்டினெண்ட் கேணல் - கேணல் - பிரிகேடியர் என்பதுதான் புலிகளின் தரநிலை அடுக்கு. அத்தோடு அதுவரை மாவீரர் ஆன பின் தரநிலை அறிவித்த இயக்கம், சமாதான காலத்தில் தளபதிகளை மட்டும், வாழும் போதே கேணல் என அறிவித்தது என நினைக்கிறேன். இங்கே தான் தளபதி சொர்ணம் போன்றோரை எப்படி அழைப்பது என்ற குழப்பம் வருகிறது. அவருக்கு வாழும்போதே இயக்கம் கொடுத்த தரம் கேணல். ஆனால் அவர் பெப்ரவரி மாதம் அளவில் மாவீரர் ஆகி இருந்தால் நிச்சயம் இயக்கம் அவரை பிரிகேடியர் ஆக்கி இருக்கும். இப்போ அவரை கேணல் என்பதா, பிரிகேடியர் என்பதா? வீரவேங்கை என்ற பதத்தை அவருக்கு பாவிக்க முடியாது என நினைக்கிறேன் (தவறு எனில் திருத்தவும்). ஆகவே மாவீரர் தளபதி சொர்ணம் என மட்டுமே நான் அவரை விளிக்கிறேன். எரிய சுணங்கினால்… நீங்கள் இருக்கிறியள்😂
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
பார்ப்போம். பகலவன் அண்ணா என்று ஒருவர் முள்ளிவாய்க்காலில் நிண்டு வந்தவர் முன்னர் யாழில் எழுதினார். அவர் கண்ணில் பட்டால் தகவல் சொல்ல கூடும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம்… 1992 உலக கிண்ணத்தில் சிம்பாப்வே 314 அடிக்க அதை இலங்கை திரத்தி, அர்ஜுன ரணதுங்க, சம்பக்க இராமநாயக்க கடைசியாக நிண்டு 315 அடித்ததெல்லாம் வேறலெவல் கிரிகெட். அப்போ டேவிட் ஹொட்டன் அவர்களின் கேப்டன். அப்போதும் எவன்ஸ் எண்டு ஒரு வேக பந்து வீச்சாளர் இருந்தார். கோழி பண்ணை வைத்திருந்தார். ஹென்றி ஒலங்கோ. வினோதமான சிகை கொண்ட கறுப்பின வீரர். அவர்களின் முதல் முழு கறுப்பின வீரரும் என நினைக்கிறேன். 1999 உலக கோப்பை நேரம், முகாபேயின் அடாவடியை எதிர்த்து இவரும் அண்டி பிளவரும் குரல் கொடுத்தனர். அத்தோடு கேரியர் ஓவர். அண்டி பிளவர் பின்னாளில் இங்கிலாந்து கோச் ஆகினார். அப்போ இங்கிலாந்துக்கு விளையாடிய க்ரேம் ஹிக், ரொபின் குக் கூட சிம்பாப்வே அடி உள்ளோரே. அதேபோல்தான் இப்போ சாம் கரன் மற்றும் சகோதரர்களும்.
-
Germany இல் உயில் எழுதுவது பற்றி ஆலோசனைகள்
ஜேர்மனியில் சட்டத்தரணி / நொத்தாரிசு மூலம் உயில் எழுதப்படல் வேண்டும் என நினைக்கின்றேன். Dolmetscher மூலம் மொழிபெயர்ப்பு செய்து கை எழுத்து வைக்கப் பட்ட உயில்…… பிற்காலத்தில் பிள்ளைகள் மூலம் ஒரு பிரச்சினை வந்தால்? நீதிமன்றத்தில் செல்லுபடியாகும் என்று சொல்ல முடியாது.
- Yesterday
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
போலீசார் சிறிய குறுக்கு வீதிகளிலேயே மறைந்திருந்து கெல்மெட் போடாத உந்துருளி ஓட்டுநர்களிடம் கைலஞ்சம் வாங்குவது வழமை, கொடுத்து செல்வது நம்மவர் வழமை. ஒன்று, நேரமினக்கேடு மற்றது, கொடுக்காவிட்டால் கள்ள கேஸ் போடுவது, போதைப்பொருள் வைத்து கைது செய்வது. இது கள்ளன் போலீஸ் விளையாட்டு. ஒருவராவது நான் தவறு செய்தால் நீதிமன்றுக்கு அனுப்பு நான் அங்கே சரி செய்கிறேன் என்று சொல்வதில்லை, சொன்னாலும் அது நடக்கபோவதுமில்லை. தவறுகளில் இருந்து லஞ்சம் கொடுத்து மீளுவது. நடுராத்திரி லஞ்சம் வாங்குவது சுலபம், இவர்கள் கொடுத்து வேறு பழக்கியிருக்கிறார்கள், நண்பர்களாக பழகி இருக்கிறார்கள். தீயவர் நட்பு இப்படித்தான் முடியும். அவர்கள் தவறு செய்திருந்தால் வாகனத்தை நிறுத்த பல வழிகள் உண்டு. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிப்பதில் என்ன பிரச்சனை பொலிஸாருக்கு? எதையோ மறைப்பதற்காக அவரை சுட்டு, மற்றவர்களை அச்சுறுத்தி, ஆதாரங்களை சோடித்து, என்ன வேலை அது? இருபக்கமும் லஞ்சம் பெற்ற கை ஒருநாள் இப்படித்தான் முடியும். எல்லா ஆவணங்களும் கைவசம் வைத்திருப்பவர்களையே மிரட்டி பணம் பறிக்கிறார்கள் இந்த வழிப்பறித்திருடர். சில மாதங்களுக்கு முன் தெற்கில் சில இளைஞர் வாகனத்தில் எங்கோ சென்று விட்டு நடுராத்திரி திரும்பிக்கொண்டிருந்த போது போலீசார் அவர்களை இடைமறித்து லஞ்சம் கேட்டிருக்கிறார்கள், அவர்கள் மறுக்கவே போலீசார் வாகனத்தை சோதனையிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள், அவர்களும் சம்மதித்து வாகனத்தில் இருந்து இறங்கி வழி விட்டிருக்கிறார்கள். ஒரு போலீசார் தனது காற்சட்டை பையிலிருந்த போதைப்பொருளை வாகனத்தில் வைத்துவிட்டு கண்டெடுப்பதுபோல் அவர்களை மிரட்டியுள்ளார், அவர்கள் இளைஞர், விடவில்லை, கடைசியில் போலீசார் கைது செய்யப்பட்டு வேலையிழந்தார். நம் ஊரில் மக்களை பயமுறுத்தி இப்படி பல சேட்டைகள் நடந்துள்ளன. போலீசாரை சோதனைக்கு அமர்த்தும்போது போதைப்பொருள், மது பரிசோதனை, உடமையேதும் அவர்கள் வசம் உண்டா என்பதை பரிசோதித்து கடமைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், அவர்கள் உடலில் கமெரா பொருத்தப்படவேண்டும் இல்லையேல் கடமைக்கு அனுமதிக்க கூடாது.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
இந்த திரியை நான் இணைத்ததன் காரணம் இதில் சொல்லப் படுவவை பெருவாரியானவை நிஜம். இதில் சொல்லப்பட்டுள்ள முதல் இரண்டு படிகளில் நான் இருந்து இருக்கிறேன். மற்றும் பெரிய நிதிப்பங்களிப்பாளன். பிரெஞ்சு பொறுப்பாளரிடம் ஒப்படைத்ததும் எமது கடமை மற்றும் பொறுப்பு நிறைவு பெறும். அதற்கு அடுத்த கட்டம் எமக்கு தெரியாது தெரியவும் முடியாது. இதில் மூன்றாவது நிலை பொறுப்பாளர். பிரெஞ்சு பொறுப்பாளர் எவரும் வாழ்க்கை தரத்தில் மிகவும் கடினமான நிலையிலேயே இன்றும் உள்ளனர். எனவே பிரான்ஸை பொறுத்தவரை அவர்களும் இதற்குள் அடங்கமாட்டார்கள். எனவே அதற்கு அடுத்த படிமுறைகளிலையே தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் பிரான்ஸை பொறுத்தவரை தலைவர் எப்பொழுதும் பணத்தை விட்டு வைக்கவில்லை. ஒரு மில்லியன் சேர்க்க முடியும் என்றால் இரண்டு மில்லியன் கேட்பார். அதனால் எப்பொழுதும் கடனும் பொறுப்புக்கூறலும் தான் சுமையாக இருக்கும். இதை நான் இங்கே சொல்வது உண்மையை தேடுபவர்களுக்கு மட்டுமே. செயற்பாட்டாளர்களை கள்ளர்களாக அல்லது தலைவருடன் நின்றவர்களை மக்களிடம் இருந்து அப்புறப்படுத்த தலைகீழாக நிற்பவர்களுக்கானது அல்ல.
-
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.
விஜை அரசியலில் வந்து சாட்டைக்கு தீனி போட்டதுதுதான் கண்ட மிச்சம்.விஜய் பேச்ச முடிந்தவுடன் சாட்டையின் அடுத்த வெளளியீட்டுக்கு எல்லேரும் வெயிற்றிங். சும்மாவே ஆடுற சாட்டைக்கு விஜைக்கு சாட்டையைக் கொடுத்த தற்குறிகள். சாட்டை சலங்கை கட்ட ஆடப் போகிறார்.
-
சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் விசில் கொண்டு செல்ல தடை.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள்.- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
காசை சுருட்டியவர்கள் அடைதியாக இருந்து காசை அனுபவிக்க விரும்புகின்றனர் கோஷான் சேயோ பத்த வைத்து எரிய விடுகின்றார் கொள்ளை அடித்தவர்களுக்கு கோவம் பத்தி எரிய போகின்றது 😂- புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
ரஷ்ய செம்பான AFD ஆட்சியை கைபற்றுவது சீமான் வார்த்தையில் சொல்வதானால் வாய்பில்லை ராசா மற்ற ஜனநாய கட்சிகளும் அதனுடன் கூட்டு சேராது உங்கள் தேர்தல் முறையும் அந்த கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் செய்யும் நல்ல விடயம் அந்த கட்சியின் சக்கிவாய்ந்த தலைவி Alice Weidel இப்போ கொஞ்சம் நல்ல மாதிரி சிந்திக்கின்றாவாம் ரஷ்யாவுக்கு விசிட் பண்ண விரும்பிய தனது கட்சி செம்புகளை விமர்சித்துள்ளார் ரஷ்யாவின் எஸ்தோனியா போலந்திற்க்கு எதிரான வான்வெளி மீறல்களை கண்டித்துள்ளார். ரஷ்யா ஒரு ஆக்கிமிப்பு வெறி கொண்ட நாடு தானே- Germany இல் உயில் எழுதுவது பற்றி ஆலோசனைகள்
Germany இல் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் தனது சொத்து (வீடு, bank இல் இருக்கும் பணம் ஆகியவற்றை பிள்ளைகளுக்கு என்று உயில் எழுதி, Dolmetscher மூலம் tranlate செய்து கை எழுத்து போட்டு வைத்து வைத்திருப்பதாக சொன்னாள். இது சாத்தியமா ? இப்படியும் செய்யலாமா?- புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
அது போராளிகளுக்கு தான் ஐயனே தெரியும். எனக்கு (பொதுமகன்) உந்த காகம் பொறுக்கின மாதிரி எங்கேனும் கிடைக்கும் கொசுறு தகவல்தான் தெரியும். ஆனால் ஒன்று. வட்டுவாகல் பாலம் விழுந்த பின்னர் அதை மீளக் கைப்பற்ற 13 கடற்கரும்புலிகள் மே 12 ம் திகதி முயன்றனர்; முடிவில் தோற்றுப் போயினர். அவர்களில் ஒருவன் கடற்கரும்புலி கப்டன் ஈகன் (அன்னாரின் உறவினர் முன்னொரு காலத்தில் ஊடகத்திற்கு வழங்கிய தகவல்). இதிலிருந்து அறிவது இவருக்கு தரநிலை வழங்கப்பட்டுள்ளது - என்றாலும் ஒருவரின் தரநிலையை வைத்து ஒக்கத்திற்குமே முடிவெடுக்கேலாது. முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர்களால் தான் முற்றாக நிறுத்தப்பட்ட திகதி தொடர்பான இத்தகவல் வழங்க முடியும். மற்றொன்று, மே மாதம் இரண்டாம் கிழமையோடு - ஏறத்தாழ 10 ம் திகதியோடு - தலைமைச்செயலகத்தின் சிறப்பு ஆளணி அறிக்கை பகுதி செயலற்றுவிட்டது/ நிறுத்தப்பட்டது. எனினும் மற்ற தனியான ஆளணி அறிக்கை பகுதிகள் தொடர்ந்து செயலுறுவாய் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. -- ஓம் அது உண்மை. என்றாலும் எல்லோருக்கும் வழங்கும் பொதுவான தரநிலையே அவர்களுக்கும் வழங்கலாம் என்பது எனது எண்ணம். மாவீரர்களில் புலிகள் வேறுபாடு காட்டியதில்லை. ஒவ்வொரு து. கல்லறைகள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் (லெப். சங்கர் எ சுரேஸ் தவிர்த்து)- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
1983 உலகக் கிண்ணத்தில் சிம்பாப்வே அவுஸ்ரேலியாவை வென்று தங்கள் வருகையை உலகுக்கு அறிவித்தார்கள். அதன் பின் எழுந்து வந்த சிம்பாப்வே அணியை ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். பிளவர் சகோதர்களின் வருகை அணியை எங்கேயோ கொண்டு போனது. 90களில் அந்த அணி, நெருப்பு அணி. டெஸ்டில் பாகிஸ்தானை வென்றவர்கள். அரசியலால் சின்னாபின்னமான அணி. இப்போதுதான் மெல்ல எழுந்து வருகிறார்கள். இந்த வெற்றி, அவர்களுக்கு மீண்டும் ஒரு உத்வேகம் குடுக்குமா. அந்த 90கள் திரும்பவும் நடக்குமா.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஊக்குவிப்புக்கு நன்றி. அவர்கள் எவ்வாறு இலங்கையின் சுழல்பந்தைச் சமாளிக்கப் போகிறார்கள் என்பதில் தெரியும். சுழல் பந்திற்கு தடுமாறுவார்கள் என்றே நினைக்கிறேன். இலங்கை வெல்லும் என்றுதான் நினைக்கிறேன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நன்றி பிரியன்சார் ...பலசாலி நன்றாகத்தான் உதவுவார் ....கடைசியில் பாய்ந்தடித்து முன்னுக்கும் நிற்பார்...பார்த்து சூதானமாக இருங்கோ ( செம்பாட்டனுக்கு நன்றி)- இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு.!
தெரியவில்லைக் கோசான்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @alvayan க்கு வாழ்த்துக்கள். மீண்டும் ஒர தடவை பலசாலி என்று நிரூபிக்க முன்வந்த @goshan_che க்குப் பாராட்டுக்கள். - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.