stream_title_14
Showing all content posted in for the last 365 days.
- Past hour
-
வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!
வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை! வெனிசுலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வு காணுதல் மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது. வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் உரையாடல் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்புகளான ஐ.நா. பாதுகாப்பு பேரவையிலும் இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு, வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறையாண்மை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458491
-
நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!
நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்! நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். நுண்நிதி கடன்களைப் பெற்ற சுமார் 200 பெண்கள் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் லோகோவை (இலட்சினை) தவறாகப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான மொபைல் செயலி மூலம் இந்த மோசடி நடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட துணைத் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த மோசடி கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது வைப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458518
-
திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி!
திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி! தீபத் திருநாளின் போது தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் சடங்கு தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று (06) உறுதி செய்தது. நீதிபதிகளான ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு 5 ஆவது நாளாக விசாரித்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் உத்தரவில், அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு அரசு செயல்படக் கூடாது. பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல. மலையில் உள்ள தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. தூணில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது – என்று தெரிவித்தனர். https://athavannews.com/2026/1458522
-
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு!
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு! வெனிசுலா தலைநகர் கராகஸில் ஒரு இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் திங்களன்று (05) மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் முதன்முதலாக முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல என்று நிக்கோலஸ் மதுரோ கூறினார். அதேநேரம், மதுரோவின் மனைவி சிலியா புளோரஸும் குற்றமற்றவர் என்று வாதிட்டார். அரை மணி நேர விசாரணைக்கு முன்னதாக, மதுரோவுக்கு ஆதரவான மற்றும் எதிரான டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்தனர். அவர் கணுக்கால்களில் விலங்கிடப்பட்டு ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிற சிறைச்சாலை உடையுடன் நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, நான் நிரபராதி. நான் குற்றவாளி இல்லை. நான் ஒரு ஒழுக்கமான மனிதன். நான் இன்னும் என் நாட்டின் ஜனாதிபதிதான் என்று 63 வயதான மதுரோ ஒரு மொழிபெயர்ப்பாளரின் மூலம் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீனிடம் வலியுறுத்தினார். விசாரணைகளின் பின்னர் வழக்கு மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும்மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் உரையாற்றியபோது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடக்கே சில மைல்கள் தொலைவில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது. அங்கு ஒரு டஜன் நாடுகள் அமெரிக்காவின் “ஆக்கிரமிப்பு குற்றத்தை” கண்டித்தன. மேலும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கூறினார். உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட ஒரு நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் பயங்கரவாதம், சதி, கொக்கெய்ன் இறக்குமதி சதி மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். https://athavannews.com/2026/1458497
-
தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
நல்லவேளை நீங்கள் இந்த படத்தை இதற்கு முன்பு பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணுகிறேன். பார்த்திருந்தால் தமிழர்களை படிக்க வைத்து கல்வியில் முன்னேற்றவே கடந்த ௩௦ வருடமாக சிங்கள இனவாத இராணுவம் போராடியது என்று சொல்லி இருப்பீர்கள். சாதாரண மீன் பிடிக்கவே தூண்டலில் ஒரு இரையை மாட்டிடவேண்டி இருக்கு. ஒரு இனத்தை ஏமாற்ற இதுகூட செய்யாவிடின் எப்படி?
-
ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
Choose your preferred flight from Chennai to Jaffna MAAJAF Tue, 06 Jan -- Non-stop Low cost first Day departures Fly Your Way Select your preferred cabin & seats. Stretch | Business Economy 6E 1177 10:30 MAA, T2 01h 15m Non-stop 11:45 JAF Filling Fast Starts at ₹11,319 + Earn 1,058 IndiGo BluChips Fare Types Know more Baggage Change/cancellation Add-ons and services Saver fare ₹11,319 + Earn 1,058 IndiGo BluChips 7 kg Cabin bag allowance 15 kg Check-in bag allowance Change charges upto INR 5999 Cancellation charges upto INR 10000 Flexi plus fare ₹12,264 + Earn 1,166 IndiGo BluChips 7 kg Cabin bag allowance 15 kg Check-in bag allowance Change charges upto INR 1999 Cancellation charges upto INR 8024 Complimentary meal Complimentary standard seat Super 6E fare ₹15,519 + Earn 1,538 IndiGo BluChips 7 kg Cabin bag allowance 20 kg Check-in bag allowance Change charges upto INR 649 Cancellation charges upto INR 2999 Complimentary meal Complimentary XL (Extra legroom) Seat Click here to know more about flight இந்த பாதையால் செல்லலாம்தானே ? அவர்களுடன் தொலைபேசியில் / ஈமையிலில் பேசினால் ஒரு கடடனத்துடன் இன்னும் ஒரு பொதி கொண்டு போக முடியும் என்று நம்புகிறேன். கொழும்பு ( மாலைதீவு) விமானநிலையம் அண்ணளவாக $120 டாலர்கள் வரி விதிக்கிறார்கள். எப்போதும் சென்னையில் இருந்து அல்லது வேறு இந்திய விமானநிலையத்தில் இருந்து டிக்கெட் குறைந்த விலையிலேயே கிடைக்கும். டிக்கெட்டும் மலிவாக கிடைக்கும் என்றே எண்ணுகிறேன்.
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
நான் பாருக்கோ அல்லது சிறியருக்கோ வெள்ளை அடிக்க வில்லை.ஒரு காலத்தில் கிளிநொச்சியில் ஒரு பார் இருந்ததில்லை.இப்ப முலைக்கு முலை உள்ளது.உதாரனத்துக்கு ஒரு பியர் 730 ருபா.1 அடித்தால் கானாது.சரி 2 அடித்தால் ஒரு ஆம்பிளையின் அரை நாள் சம்பளம்.ஆனால் கசிப்பு ஒரு போத்ல் 200 ருபா.அரை அடித்தால் கானுமாம். (நான் ஒரு நாளும் கசிப்பு குடித்ததிலலை .)இந்தக் கசிப்பால் கள்ளு விற்ப்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
- Today
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
முடிவுவரை தொய்வில்லாமல் அலட்டாமல் சிறப்பாக எடுத்துள்ளார்கள்🙏🙏🙏
-
தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
நான், அனுரா செய்யும் நல்ல காரியங்களை வரவேற்கும் அதே நேரம் அடாவடிகளை விமர்சிக்கிறேன். நீங்கள் அதை கவனிப்பது இல்லை. இப்போ நான் விமர்ச்சித்த படியினாலேதான் இப்படி ஒரு பதிவை எனக்கெதிராக இட்டிருக்கிறீர்கள். சரி..... இப்ப சொல்லுங்கள், நான் எந்த அரசை வரவேற்கவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்? மஹிந்தா, கோத்தா, ரணில், மைத்திரி. இவர்களின் ஆட்சியில் இதைவிட மேலாக ஏதும் நடந்ததா? அவர்கள் போட்ட திட்டம், கட்டடங்கள்தானே இவையனைத்தும், அவர்களின் ஆலோசனைப்படிதான் இவைகள் நிறைவேற்றப்படுகின்றன. மெல்லெனப்பாயும் நீர் கல்லையும் உருக்கிப்பாயுமாம். சட்டம் அவர்கள் வீட்டுக்கதவை தட்டுமட்டும் அனுராவை விழுத்த அல்லது தமக்கு கீழ் அடிபணிய வைக்க முயற்சிப்பார்கள். அதையேதான் எதிர்கட்சிகள், விசேடமாக நாமல் சூழுரைக்கிறார்.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
முன்பு ஈராக்கிலும் அணுஆயுதம் தயாரிக்கிறார்கள் என்று குற்றம் சுமத்தி அந்த நாட்டை சூறையாடி, நிர்வாகத்தை குலைத்து, மக்களை அகதியாகிவிட்டார்கள். ஆனால் அப்படி ஒரு அணு ஆயுத களஞ்சியத்தையோ, ஆய்வு கூடத்தையோ யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. நாடுகள் மேல் குற்றம் சுமத்தி, தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து, அந்த நாட்டிலுள்ள வளங்களை சூறையாடுவதும் அந்நாட்டின் நிர்வாகங்களை குழப்புவதுந்தான் அமெரிக்காவின் பிழைப்பு. இவர் மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பிப்பாரானால் அமெரிக்காவே முதல் அழிக்கப்படும்.
-
ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
ரஸ்ஸியாவின் அதிகாரியுடன் குமாரசாமியும் உடனிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருக்குச் சொல்லாமல் இந்தச் சந்திப்பு நடந்திருக்கும் என்று நாம் நம்பவில்லை.
-
தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
இது நடப்பது நீங்கள் ஆதரிக்கும் அநுரவின் அரசில்த்தானே?
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
Composite PMI score card பயன்படுத்தாமல் வெறுமனே PMI Index மற்றும் NMI Index மட்டும் புள்ளியிடுவதற்கு பயன்படுத்துகிறார்கள். Composite PMI வெறும் மேலோட்டமான பொருளாதார பார்வைக்கு பயன்படுத்தப்படுகிறது.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
https://tradingeconomics.com/united-states/non-manufacturing-pmi இது அமெரிக்காவின் NMI index NMI index 50% உம் மேல் அதிகரித்தால் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது, மறுவளமாக 50 குறைந்தால் பொருளாதாரம் சுருங்குகின்ற நிலை ஏற்படுகிறது. https://tradingeconomics.com/australia/composite-pmi இது அமெரிக்காவின் உற்பத்தி மற்றும் சேவை துறை ஒன்றினைந்த குறிகாட்டி இது. PMI வெறுமனே உற்பத்திதுறையாகவும் NMI வெறுமனே சேவை துறையாகவும் இருக்கின்றது, இந்த இரண்டும் இணைந்த கொம்போசிட் பி எம் ஐ. தற்போதய நிலவரத்தின் படி அமெரிக்க உற்பத்திதுறை சிரமமான காலகட்டத்தில் உள்ளது ஆனால் சேவைத்துறை 50 மேல் உள்ளது, இது சாதகமாக தோன்றினாலும் கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது இது வீழ்ச்சி போக்கில் செல்கிறது. உற்பத்தித்துறையும் சேவைத்துறையும் ஒருங்கிணைந்த குறிகாட்டி கடந்த 3 ஆண்டுகளில் அதிகரிப்பினை காட்டுகிறது.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இதுகுறித்த எனது அவதானிப்பை இங்கே பதிகிறேன். உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் ஆக்கிரமிப்பினை எதிர்த்து நான் எழுதிய கருத்துக்களுக்கு குமாரசாமி தனது கருத்துக்களை முன்வைத்து வந்தார். அவ்வாறான வாதத்தில் ரஸ்ஸியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உக்ரேனை ஆக்கிரமிப்பது நியாயமானதுதான் என்று எழுதினார். பின்னர் ஒருபடி மேலே சென்று இந்தியா தனது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களின் போராட்டத்தினை அழித்ததையும் தன்னால் புரிந்துகொள்ளமுடியும் என்று கூறி உக்ரேன் மீதான ரஸ்ஸியாவின் பலவந்த ஆக்கிரமிப்பினை நியாயப்படுத்துவதற்கான உசாத்துணையாகப் பாவித்திருந்தார். இதற்காக நான் அவரைக் கடிந்துகொண்டபோதும் இன்றுவரை அவர் இக்கருத்தினை மீளப்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த தான் சேர்ந்த இனமான தமிழினத்தின் விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டது நியாயமானதுதான் என்று கருதும் ஒருவர், எம்முடன் சம்பந்தப்படாத உக்ரேன் எனும் நாட்டின் இருப்பைத் தியாகம் செய்து, தான் போஷிக்கும் சோசலிஸ ரஸ்ஸியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று விரும்புவதை என்னால் புரிந்துகொள்ள முடியும்.
-
பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்
முன்னோடி குறிகாட்டிகள் (Leading Indicators) 3 இலிருந்து 6 மாதங்களுக்கு முன்னரே எதிர்வு கூறப்படுகிறது என கூறுகிறார்கள். முன்னோடி குறிகாட்டியில் முதலாவதாக Survey (கணக்கெடுப்பு) இல் PMI, NMI, Consumer confident ஆகிய 3 விடயங்கள் மட்டும் இந்த பகுதியில் உள்லடக்கப்பட்டுள்ளது. PMI index பொதுவாக நாட்டின் மொத்த உற்பத்தியில் தாக்கம் செலுத்தும் (25%) பெரு நிறுவனங்களினிடம் நடத்தப்படும் கருத்து கணிப்புகளினடிப்படையில் 5 பிரிவுகளினடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது புதிய ஒப்பந்தம் 30%, உற்பத்தி25%, வேலை 20%, வழங்கல் 15%, இருப்பு 10%. PMI index 50 50% மேல் அதிகரித்தால் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது, மறுவளமாக 50 குறைந்தால் பொருளாதாரம் சுருங்குகின்ற நிலை ஏற்படுகிறது. https://tradingeconomics.com/united-states/business-confidence இது அமெரிக்க PMI index இதனை பார்க்கும் போது அமெரிக்க பொருளாதாரம் சுருக்க நிலைநோக்கி செல்கிறது. Fundamental analysist scorecard முறைமியினை பயன்படுத்தி எவ்வாற்றான தாக்கம் GDP இல் ஏற்படும் என குறிகாட்டிகளை தயாரிக்கிறார்கள்.
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
சாத்தான் வேதம் ஓதுகிறது.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இந்த காணொளியினை முன்பு வேறு ஒரு திரியில் இணைத்துள்ளேன். இவரது கட்சி இரஸ்சியாவில் 3ஆவது பெரிய கட்சி என குறிப்பிடுகிறார்கள், இந்த சதிக்கோட்பாடு பற்றி ட்ரம்பின் மீது இரஸ்சியாவின் ஆதிக்கம் பற்றிய சதிக்கோட்பாடு பற்றியது, இதில் வெனிசுலா பற்றியும் கூறியுள்ளார். குறித்த நபர் இறந்து விட்டார் 2022 என நினைக்கிறேன். இந்த காணொளியினை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன், இது பற்றிய உங்கள் கருத்து என்ன.
-
"எங்கள் பேத்தி ஜெயாவின் பிறந்தநாள் இன்று!" (ஜனவரி 6, 2026)
தில்லை உங்கள் பேத்தியின் பிறந்தநாளை உங்களுடன் சேர்ந்து நாங்களும் கொண்டாடுகிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயா.
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
நான் குடித்ததில்லை. ஆனால் குடிக்கு எதிரானவனும் அல்ல. ஆனால் திட்டமிட்ட இன ஒழிப்பின் ஒரு அங்கமாக, வகை தொகையின்றி எமது பகுதியில் பார்கள் திறந்து விடப்பட்டுள்ள நிலையில்… ஊரில் போதை கலாச்சாரம் பற்றியும் அதன் தாக்கம் பற்றியும் இந்த யாழில் எத்தனை அருமையான பதிவுகள், திரிகள்…. அத்தனைக்கும் பிறகும்….மக்கள் நலன் பேண வேண்டிய ஒரு எம்பி….. கள்ள கொமிசனுக்க்காக பார் லைசன்ஸ் வாங்கி கொடுத்து விட்டு…. பிடிபட்டு விடுவோம் என பயந்து ஆனுர அரசு சொல்லும் சகல விடயத்துக்கும் ஒரு பணய கைதி போல் ஓம்படுகிறார்… இந்த கள்ளனுக்கு வக்காலத்து வாங்கவும் சிலர்🤦♂️.
-
மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
முதலீடு என்றால் பார் திறப்பதுதானே ? நாம் வசிக்கும் நாட்டில் escorts எனப்படும் ஒரு பெண் சுயமாக பாலியல் தொழில் செய்வது சட்டபூர்வம். போவதும் விடுவதும் தனிமனித சுதந்திரம். ஆம்ஸ்டடார்ம் போன்ற நகரில் ஒரு படி மேலே. ஆகவே இந்த தொழிலை இலங்கையில் ஒரு தமிழ் எம்பி குத்தகைக்கு எடுத்து செய்யலாம்? உங்கள் கருத்தை நான் சரியாக விளங்கி கொண்டேனா?
-
தையிட்டி விகாரைக்கெதிராக போராடியவா்களுக்கு சொந்தப் பிணை
இவற்றிற்கு நீதிமன்றம், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள், அவைதான் இந்தப்பிரச்னைக்கு காரணம் என்றும் சுட்டிக்காட்ட யாரும் முன்வரவும் மாட்டார்கள். போன பௌர்ணமிதினத்தன்று மக்கள் அமைதியாக தெரு ஓரத்தில் கூடாரம் அமைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுக்கொண்டிருந்தனர், போலீசார் அவர்களின் கூடாரங்களை பிடுங்கி, அராஜகம் புரிந்தனர். அது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையோ? எப்படியும் நாட்டில் ஒரு இனவன்முறையை ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற மாட்டோமா எனும் நப்பாசையில் ஒருவரும், இவர்களை உசுப்பிவிட்டால் தம் ஊழலுக்கான தண்டனையில் இருந்து தாம் தப்பிவிடாலெமென்கிற கனவில் ஊழல்வாதிகளும் பிக்குகளுக்குப்பின்னால் அலைகிறார்கள். முற்றுந்துறந்த துறவிகள் தமிழரின் காணிகளை அடாத்தாக பிடிப்பதற்கு, மண்ணாசை கொண்டு நாட்டை கொழுத்தியே தீருவோமென கொழுத்தாடு பிடிக்குதுகள். இதுகளின்ர காவியை கழட்டி வீட்டுக்கனுப்ப வேண்டும்.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இதுதான் (புட்டின் காதலால்) ஏற்பட்டுள்ள பச்சை இரெட்டைதன்மை. அமெரிக்கா உக்ரேன் ஒப்பந்தத்தின் போது நீங்கள்தான் உக்ரேனில் வளமுள்ளது அதை அமெரிக்கா சுரண்டுகிறது என எழுதினீர்கள். ஆனால் அதையே ரஸ்யா செய்தால் - அது வளக்கொள்கை அல்ல, பாதுகாப்பு 😂. இதையேதான் டிரம்பும் சொல்கிறார். எண்ணை என்பது அமெரிக்காவின் பொருளாதார-பாதுகாப்பு சம்பந்தபட்டது என்று. இங்கே உக்ரேனை ஆதரித்த எவரும், வெனிசுவேலா மேலான அமெரிக்க தாக்குதலை ஆதரிக்கவில்லை. மாறாக கடுமையாக கண்டித்துள்ளனர். ஆனால் நீங்கள் ? புட்டினுக்கு ஆலவட்டம் பிடிப்பதற்க்காக… இலங்கையில் இந்தியா நடந்து கொண்டவிதம் சரி என எழுதும் அளவுக்கு போனவர். யார் நடு ரோட்டில் நிற்கிறார்கள்… யார் சொந்த இனத்தின் போராட்டத்தை கூட புட்டினுக்காக கொச்சை படுத்தி விட்டு நடுரோட்டில் மகாராஜாவின் உடையோடு பவனி வருகிறார்கள் என்பதை களம் அறியும். இதுவும் தனிமனித தாக்குதல் அல்ல.
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
நான் எப்போதும் நடுத்தெருவில்தானே அண்ணை. நீங்களும் உங்கள் சகாக்களும் கூட அடி கடி நடுநிலை ந**கி என புகழ்வீர்களே ? மறந்து போச்சா?
-
ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை
இல்லை சுவை அப்படி எதுவும் நினைப்பதில்லை. நானும் வருடாவருடம் ஊருக்கு போய் வருகிறேன். 35 மணிநேரம் தொடர்ந்து பயணம் செய்ய எனக்கும் ரொம்ப கஸ்டமாகவே உள்ளது. பலாலியில் போய் இறங்கினால் எனக்கும் சந்தோசமே.