Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 80 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை எனக்கு இன்னும் புரியாதது என்னவென்றால், புத்தர் இலங்கைக்கு வருகை தந்தபோது நாகர்கள் மற்றும் தேவர்கள் உட்பட பில்லியன் கணக்கான ஆன்மாக்கள் புத்த மதத்திற்கு மாறினால், அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை மீண்டும் மதம் மாற்ற மகிந்த தேரர் ஏன் அனுப்பப்பட்டார்? அல்லது புத்தர் வந்து போன பிறகு, அந்த உயிரினங்கள் அனைத்தும் தனது கொள்கைகளை கைவிட்டு முந்தைய கொள்கைகளுக்கும் சிவன் மற்றும் நாக வழிபாடுகளுக்கும் திரும்பிச் சென்றார்களா? அல்லது புத்தர் சரியாகப் போதிக்கவில்லையா? அத்தியாயம் 14: தலைநகரில் வசிப்பவர்களுக்கு நீர்விழா நடத்த ஏற்பாடு செய்த தேவநம்பிய தீசன் வேட்டையாடுவதில் உள்ள இன்பத்தை அனுபவிக்கப் நாற்பதாயிரம் ஆண்களுடன் வேட்டைப் பயணத்திற்குச் சென்றார். மலையின் உச்சியில் இறங்கிய மகிந்தவிடம் மன்னனை வழிநடத்த விரும்பிய மலைக் கடவுள் (தேவன்), ஒரு ஆண் மானின் வடிவத்தை எடுத்தார். வேடடைக்குச் சென்ற மன்னன் அதைப் பின்தொடர்ந்தார். அந்த மான், மன்னனை மகிந்த தேரரிடம் அழைத்துச் சென்று, அதன் பின் மறைந்தது விட்டது. கட்டாயம் இது ராமாயணத்தில் நடந்த நிகழ்வின் ஒரு நகல், அதில் ராமர் தனது மனைவி சீதையின் வற்புறுத்தலின் பேரில் ஒரு மாயை மானைப் பின்தொடர்ந்தார். குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச் சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்; நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும் மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா! [மகளிர் மனம் போல நின்றும் ஓடியும் மான் மாயம் செய்தது / கம்பராமாயணம் - மாரீசன் வதைப் படலம்] மேலே கூறிய நம்பமுடியாத பல நிகழ்வுகளில் இருந்து, இது ஒரு உண்மையான வரலாற்று நிகழ்வாக இருக்க முடியாது என்பது, கொஞ்சம் சிந்திக்கும் ஆற்றல் உள்ள எவருக்கும் புரியும். அவர்கள், மன்னனும் மகிந்தவும் பல விடயங்களில் விவாதங்களை நடத்தினர். இறுதியில் மன்னனும் அவரது நாற்பதாயிரம் ஆட்களும் புத்த மதத்திற்கு உடனேயே மாறினர். வின்சென்ட் ஏ. ஸ்மித் [Vincent A. Smith], புத்த மதத்திற்கு மதமாற்றம் மிகவும் படிப்படியாக நடந்திருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறார். நிதானமான வரலாறாகக் கருத முடியாத பல அற்புதங்களும் இயற்கைக்கு மாறான நிகழ்வுகளும் இங்கு கூறப்பட்டு உள்ளன. அசோகரின் மகன் மகிந்தவைப் பற்றி மன்னர் தேவநம்பிய தீசன் அறிந்தது இதுவே முதல் முறை ஆகும். இருப்பினும், மன்னர் அசோகரும் மன்னர் தேவநம்பிய தீசனும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள்? 11- 18 முதல் 19 வரை பார்க்கவும். [1 5 (முத்துக்கள்) கடலில் இருந்து வெளிவந்து குவியலாக கரையில் கிடந்தன. 16 இவை அனைத்தும் தேவநம்பியதீசனின் பெருமையால் நிகழந்தவை. நீலமாணிக்கம் [Sapphire], பெரில் (Beryl) அல்லது காமதகம் , மாணிக்கம் [ruby], இரத்தினக்கல் அல்லது இரத்தினம் [gems] மற்றும் பல நகைகள் மற்றும் 17 முத்துக்களும் மூங்கில் தண்டுகளும் அனைத்தும் ஒரே வாரத்தில், மன்னனுக்கு அவர்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். இதைக் கண்ட மன்னன் மனதார மகிழ்ச்சியடைந்தார். 1 8 ‘என்னுடைய நண்பனான தர்ம அசோகனைத் தவிர வேறு யாரும் இவ்விலை மதிப்பற்ற பொருள்களைப் பெறத் தகுதி உள்ளவர்கள் அல்ல. இவற்றைப் பரிசாக அவருக்கு அனுப்புவேன்' என்று எண்ணினான். / 19 தேவநம்பியதீசனும், தர்ம அசோகனும் ஒருவரையொருவர் நேரில் பார்த்ததே இலலை. ஆயினும் வெகு காலமாகவே அவர்கள் நண்பர் களாக இருந்தார்கள் என்கிறது இந்தப்பகுதி. ஆனால் வேடிக்கை என்னவென்றால், அசோகர் தனது மகன் மற்றும் மகளைப் பற்றி தனது நீண்டகால நெருங்கிய நண்பரான மன்னன் தேவநம்பிய தீசனுடன் விவாதிக்க மறந்துவிட்டார்! நெருங்கிய நண்பர்கள் பொதுவாக தங்கள் குழந்தைகளைப் பற்றி முதலில் விவாதிப்பார்கள். ஆனால் இங்கு அதைக் காணவில்லை? இது ஒரு வினோதமான நட்பு அல்லது தோழமை! அத்தியாயம் 15 [மகா விகாரை]: இது ஒரு நீண்ட அத்தியாயம், பெரும்பாலும் புத்தர் மற்றும் முந்தைய புத்தர்களைப் பற்றிய நம்பிக்கையைப் பற்றியது, ஆனால் இலங்கையில் நடந்த எந்த நம்பகமான வரலாற்று நிகழ்வுகளையும் பற்றியது அல்ல. மேலும் புராணக் கதைகள் கண்டுபிடிக்கப்படும் போது அத்தியாயங்கள் பொதுவாக நீளமாக இருக்கும். ராணி அனுலாவும் [Queen Anula] ஐநூறு பெண்களும் பப்பஜ்ஜி தீட்சை [pabbajji ordination] பெற விரும்பினர். பப்ஜா (Pabbajjā) என்பது பௌத்த மதத்தில் மடாலய வாழ்க்கைக்குள் நுழைவதற்கான ஆரம்ப புத்த மத சடங்கு ஆகும். இது ஒரு துறவி (பிக்கு) அல்லது கன்னியாஸ்திரி (பிக்குனி) ஆக முழுமையாக வாழ்வை ஈடுபடுத்த முன், அதற்கான முதல் கட்டம் ஆகும், இதில் ஒரு நபர் உலகியலான வாழ்க்கையை விட்டு பௌத்த மதத்தின் வழியில் செல்வதை குறிக்கிறது. அதாவது, இங்கு கட்டாயம் நான்கு விடயங்களை விட்டு முற்றிலும் விலகியிருத்தல் வேண்டும். ஆண்-பெண் கலவி கூடாது. புல்லைக் கூட திருடக் கூடாது. உயிருள்ள சின்னசிறு உயிருக்கும் தீமை பயத்தலாகாது. இயற்கைக்கு மாற்றாக அருஞ்செயலைத் தன்னால் செய்ய இயலுமென்று காட்டலாகாது. இப்ப இலங்கையில் , பர்மாவில் பிக்கு அல்லது பிக்குணியின் வாழ்வு மற்றும் அவர்களின் செயல்கள், வாய்மொழி பேச்சுக்கள் இப்படித்தானா இருக்கிறது என்பதைக் நீங்களே கூறுங்கள்? எனவே இந்த நோக்கத்திற்காக சங்கமித்தாவை [Sanghamitta] அழைத்து வர முடிவு செய்யப்பட்டது. மேலும் தாரை வார்த்த நீர் தரையில் விழுந்தபோது ஒரு பூகம்பம் ஏற்பட்டது. 15 - 22 முதல் 26 வரை பார்க்கவும். ‘புத்தர் ஞானம் பெற்ற புனித போதி மரத்தின் தென்பகுதிக் கிளையுடன் அவள் இங்கே வருவாள். அவளுடன், புனிதத்தால் புகழ்பெற்ற பிக்குணிகளும் உடன் வருவார்கள். இகைக் குறித்து என்னுடைய தந்தையாகிய அரசனுக்குச் செய்தி அனுப்புக. அந்தத் தேரி இங்கு வந்ததும் இந்தப் பெண்களுக்குத் தீட்சை செய்து வைப்பாள்" என்றார் மகிந்த, அதுதான் நல்லது" என்றான் மன்னன். பின்பு அழகிய கலசத்தில் நீரை யெடுத்து மகிந்த தேரருடைய கையில் ஊற்றி தாரை வார்த்துக் கொடுத்தான். "இந்த மகா மேகவனத்தை பிக்கு சங்கத்துக்கு அளிக்கிறேன்' என்று மன்னன் சொன்னான். தாரை வார்த்த நீர் தரையில் விழுந்த போது பூமி அதிர்ந்தது. புவியின் காவலன் தேரரிடம், 'ஏன் இப்படி பூமி அதிர்கிறது?’ என்று கேட்டான். தீவில் இப்போது முதல் தர்மம் வேரூன்றிவிட்டது அதனால்" என்று தேரர் பதிலளித்தார். [எப்படியான புத்த தர்மம் உண்மையில் இலங்கையில் வேரூன்றிவிட்டது என்பதை வடக்கு கிழக்கில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்?] Part: 81 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 14: The King Devanampiya Tissa was having a water festival, and went on a hunting expedition with forty thousand men. The mountain god (Deva) wanted to guide the king to Mahinda who has just alighted on the top of the mountain. The mountain god took the form of a male deer and the king followed it. The deer lead the king to Mahinda Thera and vanished. This is a copy of the event that happened in the Epic Ramayana in which Rama went after an unreal deer on the urging of his consort Sita. This cannot be a real historical event. They, the king and Mahinda, had discussions on many subjects, and in the end, the king and his forty thousand men converted to Buddhism. Vincent A. Smith strongly expresses that the first conversion to Buddhism must have taken place in a very gradual manner. There are so many miracles and unnatural happenings, which cannot be considered as sober history. This is the first time the King Devanampiya Tissa came to know about Mahinda, the son of Asoka. However, it is alleged that the King Asoka and the King Devanampiya Tissa were intimate friends, 11- 18 to 19. Asoka forgot to discuss about his son and the daughter with his long-time intimate friend, the King Devanampiya Tissa! Intimate friends usually discuss first about their children. It is a queer friend ship! There is confusion with the name ‘Anula’. Anula is the consort of Sub-king Mahanaga. The sentence next to it says queen Anula! It seems that the name of the queen is also Anula and the name of the consort of the sub-king, the brother of the king who is next in line to the throne, is Anula. It seems quite strange. Chapter 15: This is a long chapter and mostly about the faith, about Buddha, and the previous Buddhas, but not about any reliable historical events that took place in Lanka. The chapters are usually long when the narratives are invented. The Queen Anula and five hundred other women wanted to receive pabbajji ordination. It was decided to bring Samghamitta for that purpose. Water from the king fell on the ground and an earthquake occurred. Earthquake occurs so many times due to Mahinda Thera’s actions, not less than nine times. No masonry buildings of that time would have survived, not only in Lanka but also in the adjacent South India, these so many earthquakes. Lanka and South India are not earthquake prone regions. There are stories of former four Buddhas, which cannot be considered as sober history. The Buddha prophesied that Dutthagamani would build a Thupa at a particular place, 15 – 168 to 169. The episode of Dutthagamani is imagined to come from the mouth of the Buddha. Any prophesies by anyone, even if it is by the Buddha, is with suspicious motive. A mango seed grow into a tall tree bearing fruits immediately, 15 – 41 to 43. The King Tissa built the MahaVihara. Lengthier the chapter, fraudulent is the narrative. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 80 B தொடரும் / Will follow துளி/DROP: 1971 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 80A] https://www.facebook.com/groups/978753388866632/posts/33119471261034761/?
  3. ஈராக் முதல் வெனிசுவேலா வரை இந்த ஒரே ஒப்பாரியை வைத்துவிட்டு ஓய்ந்துவிடுவதே வழமை. பிறகென்ன. பேசாமல் ஐ.நாவைக் கலைத்தவிட்டு அமெரிக்கச்சபையாக்கிவிடலாம்.
  4. Today
  5. இந்த செய்தியினை அமெரிக்க தரப்பினை தவிர வேறுதரப்பு உறுதி செய்ததாக தெரியவில்லை, இந்த பிரச்சார உலகில் உண்மைகள் பொய்களை பிரித்தறிவது கடினம், அமெரிக்க அதிபர் கூறியுள்ளார் என்பதற்காக அதனை தேவ வாக்காக எடுக்க முடியாது. கடந்த கால அமெரிக்க வரலாற்றினை பார்க்கும் போது உருவகப்படுத்தப்பட்ட கதைகளாக பல விடயங்களை அமெரிக்க தொடர்பில் கூறப்படுகிறது (நிலவில் கால் பதித்தது பற்றிய விவாதம் எப்போதும் இருக்கும்), இதற்கு காரணம் மக்களில் ஒரு பிரிவினர் செய்திகளை அப்படியே உண்டு ஜீரனிப்பதில்லை என்று கூறிவிட முடியாது ஆனால் அது அமெரிக்க கடந்த கால வரலாறுகளில் இருந்து மக்கள் பெற்ற அனுபவம். புலி வருது என கத்திய சிறுவனின் சிறுபிள்ளைத்தனம் ஏற்படுத்திய பாதிப்பு போல இன்று அமெரிக்க செய்தியினை நம்பமுடியாமல் இருக்கும் நிலை. அதனால் அமெரிக்கா இந்த ஆக்கிரமிப்பினை செய்யாது என மக்கள் நினைக்கவும் மாட்டார்கள், ஏனெனில் அதிலும் அமெரிக்க வரலாறு அற்புதமாக உள்ளது. அமெரிக்காவினை உத்தமர்கள் என சாதாரண மனநிலை கொண்டவர்கள் நம்பிவிடுவதில்லை, அவ்வாறு இந்த உலகில் எதுவும் நிகழ்வதில்லை, சில நம்பிக்கைகள் உண்மைகளால் உடைக்கப்படும் போது ஏற்படும் வலிகளை மடை மாற்ற முயற்சிப்பதால் யதார்த்தம் மாறப்போவதில்லை, யதார்த்தத்துடன் மனது முரண்டுபிடித்தால் அதனால் எமக்குத்தான் பாதிப்பு ஏற்படும். நாம் விரும்புவது போல உலகு இயங்குவதில்லை, அதனை எம்மால் எதுவும் செய்யமுடியாது; நிகழ்வதனை ஏற்று கொள்ளவேண்டியதுதான், இது ஒரு உறுதிப்படுத்தப்படாத செய்தி, ஆனால் அமெரிக்காவின் பிரச்சாரத்திற்கும் ஆக்கிரமிப்பிற்கும் நல்ல வரலாறு உண்டு.
  6. வெனிசுலாவிலுள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை written by admin January 3, 2026 அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. State Department) இன்று (ஜனவரி 3, 2026) வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள அமெரிக்கப் பிரஜைகளுக்கு மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை (Security Alert) விடுத்துள்ளது. தலைநகர் காரகாஸில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தனது பயண ஆலோசனையை (Travel Advisory) மிக உயர்ந்த நிலைக்கு (Level 4: Do Not Travel) உயர்த்தியுள்ளது. 📝 எச்சரிக்கையின் முக்கிய அம்சங்கள்: Shelter in Place: வெனிசுலாவில் தற்போது இருக்கும் அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் பாதுகாப்பான இடங்களுக்குள்ளேயே (வீடுகள் அல்லது தங்கும் இடங்கள்) இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புச் சூழல் சாதகமாக இருக்கும்போது, உடனடியாக வெனிசுலாவை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். 2019 முதல் காரகாஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டுள்ளதால், அவசர காலங்களில் அமெரிக்க அரசாங்கத்தால் நேரடி உதவிகளை வழங்க முடியாது என்பதை இராஜாங்கத் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. குண்டுவெடிப்புகள், சிவில் அமைதியின்மை மற்றும் தன்னிச்சையான கைதுகள் போன்ற அபாயங்கள் இருப்பதால் எக்காரணம் கொண்டும் வெனிசுலாவுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் புதிய உத்தரவுப்படி, ஜனவரி 1, 2026 முதல் 39 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழையப் புதிய விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் மாலி, புர்கினா பாசோ, நைஜர் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளபடி, “Operation Absolute Resolve” என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்கச் சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு, நியூயோர்க்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA), வெனிசுலாவின் வான்பரப்பில் (Maiquetia FIR) அனைத்து அமெரிக்க வணிக மற்றும் சிவில் விமானங்கள் பறப்பதற்கு முழுமையான தடை விதித்துள்ளது. தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் “ஜிபிஎஸ் ஜாமிங்” (GPS Jamming) காரணமாக விமானப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இபிரியா (Iberia), ஏவியன்கா (Avianca) உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் காரகாஸிற்கான சேவைகளை நிறுத்தியுள்ளன. அத்துடன் வெனிசுலாவில் சிக்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளைப் பாதுகாப்பாக வெளியேற்ற அந்தந்த நாடுகள் தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன: இந்த நிலையிலேயே காரகாஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது பிரஜைகளை “இருந்த இடத்திலேயே இருக்குமாறு” (Shelter in Place) உத்தரவிட்டுள்ளது. நிலைமை சீரானதும், இராணுவப் பாதுகாப்புடன் கூடிய வெளியேற்ற நடவடிக்கைகள் (Evacuation) முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானிய வெளியுறவுத்துறை (FCDO), வெனிசுலாவில் உள்ள தனது நாட்டு மக்களை அவசர காலத் திட்டங்களை (Personal Emergency Plan) தயார் நிலையில் வைத்திருக்குமாறும், எல்லைகள் மூடப்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகள் தமது பிரஜைகளின் விபரங்களைச் சேகரித்து வருகின்றன. கொலம்பியாவில் உள்ள தமது தூதரகங்கள் ஊடாக இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளன. வெனிசுலாவிலிருந்து அதிகப்படியான அகதிகள் (Refugees) வரக்கூடும் என்பதால், கொலம்பியா எல்லையில் தனது இராணுவத்தைத் தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. இதேவேளை ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் கியூபா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை “இறையாண்மை மீதான அத்துமீறல்” எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மைலி போன்ற சில தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இது ஒரு “ஆபத்தான முன்னுதாரணம்” எனக் கவலை தெரிவித்துள்ளார். Tag Words: #TravelAlert #StateDepartment #USVenezuelaConflict #ShelterInPlace #Level4TravelAdvisory #CaracasAttacks #InternationalSecurity #TamilNewsWorld https://globaltamilnews.net/2026/225599/
  7. 🏥 பாரதிராஜா அவசர சிகிச்சைப் பிரிவில் ) அனுமதிக்கப்பட்டுள்ளார் written by admin January 3, 2026 இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் 27, 2025 அன்று பாரதிராஜாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் (Respiratory problems) மற்றும் சோர்வு ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று (ஜனவரி 3, 2026) அவருக்குத் திடீரென மூச்சுத்திணறல் அதிகரித்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை எம்ஜிஎம் (MGM) மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரல் தொடர்பான தொற்றுகள் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயப்படும்படி ஏதுமில்லை என்றும், வழக்கமான உடல்நலப் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் இருப்பதாக அவரது தரப்பினர் முன்னதாகத் தெரிவித்தனர். இருப்பினும், தற்போது அவர் ஐசியூவில் இருப்பதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். 💔 பின்னணி: கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா காலமானார். மகனின் மறைவு பாரதிராஜாவை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதன்பின்னர் அவர் மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் சில காலம் தங்கியிருந்துவிட்டு அண்மையில்தான் சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 84 வயதான பாரதிராஜா ’16 வயதினிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி ஏராளமான வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். கிராமத்து கதைகளை மையப்படுத்தி திரைப்படங்கள் எடுத்து பெரிய ஹிட் கொடுத்த அவா் பல திரைப்படங்களில் நடித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது Tag Words: #Bharathiraja #MGMHospital #ChennaiNews #KollywoodUpdates #IyakkunarImayam #GetWellSoon #TamilCinema #HealthUpdate #BreakingNewsTamil https://globaltamilnews.net/2026/225602/
  8. இவரது வழக்கு ஜனவரி 22ம் திகதி தான் நடைபெறும். https://www.tps.ca/media-centre/news-releases/dentist-arrested-in-sexual-assault-investigation/
  9. ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு – ஐ.நா. எச்சரிக்கை 03 Jan, 2026 | 04:50 PM உலகளவில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் ஒரு பெண் கர்ப்பப்பை புற்றுநோயால் ( cervical cancer) உயிரிழக்கிறார் என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த நோய் முழுமையாகத் தடுப்பதற்கும் ஆரம்ப நிலையில் குணப்படுத்துவதற்கும் இயலும் என்றாலும், சமமற்ற சுகாதார அணுகுமுறைகள் காரணமாக பல உயிரிழப்புகள் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) முன்னெடுத்துள்ள கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக பேசிய ஜீனெட் என்ற பெண், “என் உடலே என்னை ஏமாற்றியது போல உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார். கர்ப்பப்பை புற்றுநோய் என கண்டறியப்பட்ட ஒரு ஆண்டுக்குள் அவர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கர்ப்பப்பை புற்றுநோய் என்றால் என்ன? கர்ப்பப்பை புற்றுநோய் என்பது பெண்களின் இனப்பெருக்க அமைப்பில் உள்ள கர்ப்பப்பையில் உருவாகும் புற்றுநோய் ஆகும். ஆரம்ப நிலையில் கண்டறியப்படாவிட்டால், இது உடலின் பிற பகுதிகளுக்கும் பரவக்கூடும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் சுமார் 6.6 இலட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டதுடன், 3.5 இலட்சம் பெண்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் நிறுவனம், இந்த நோயால் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு பெண் உயிரிழக்கிறார் என எச்சரித்துள்ளது. காரணம் என்ன? கர்ப்பப்பை புற்றுநோய் பெரும்பாலும் HPV (Human Papillomavirus) எனப்படும் வைரஸ் தொற்றுடன் தொடர்புடையது. இது பாலியல் தொடர்பு மூலம் பரவும் மிகப் பொதுவான வைரஸ் ஆகும். பாலியல் செயலில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது HPV வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம். பெரும்பாலும் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை தானாகவே நீக்கிவிடும். ஆனால் சில வகை HPV தொற்றுகள் நீடித்தால், அசாதாரண செல்கள் உருவாகி பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயம் உள்ளது. தடுப்பு மற்றும் சிகிச்சை கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் கூடிய நோயாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தில் பரிந்துரைகளின் படி, 9 முதல் 14 வயதுடைய அனைத்து சிறுமிகளுக்கும் HPV தடுப்பூசி வழங்க வேண்டும் என்பதுடன் 30 வயதிலிருந்து பெண்களுக்கு கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக HIV தொற்றுள்ள பெண்களுக்கு 25 வயதிலிருந்து கர்ப்பப்பை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது. ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், இது மிகவும் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாகும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலகளாவிய முயற்சி 2020 ஆம் ஆண்டு, 194 நாடுகள் இணைந்து கர்ப்பப்பை புற்றுநோயை ஒழிப்பதற்கான உலகளாவிய திட்டத்தை தொடங்கின. அந்த நாள், நவம்பர் 17, தற்போது உலக கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு நாள் ஆகக் கடைபிடிக்கப்படுகிறது. 2030க்குள் அடைய வேண்டிய இலக்குகள்: * 15 வயதிற்குள் 90% சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி * 35 மற்றும் 45 வயதுகளில் 70% பெண்களுக்கு பரிசோதனை * நோய் கண்டறியப்பட்ட 70% பெண்களுக்கு முழுமையான சிகிச்சை இந்த இலக்குகள் நிறைவேற்றப்பட்டால், 2120 ஆம் ஆண்டுக்குள் 7.4 கோடி புதிய நோய் சம்பவங்களைத் தவிர்க்கவும், 6.2 கோடி உயிர்களை காப்பாற்றவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் ஆகிய சர்வதேச அமைப்புகள், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மற்றும் பரிசோதனை வசதிகளை சமமாக அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235114
  10. டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் நிக்கோலஸ் மதுரோ என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்க போர்க்கப்பலான USS Iwo Jima-வில் மதுரோ இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  11. ரி20 உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் தலைவர் Published By: Vishnu 02 Jan, 2026 | 03:23 AM (நெவில் அன்தனி) இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு உலகின் தலைசிறந்த சுழல்பந்துவீச்சு நட்சத்திரம் ராஷித் கான் தலைவராக நியமிக்ப்பட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் 2024இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிவரை ஆப்கானிஸ்தான் முன்னேறி இருந்தது. ராஷித் கான் தலைமையிலான உலகக் கிண்ண குழாத்தில் சகலதுறை வீரர் முன்னாள் அணித் தலைவர் குல்பாதின் நய்ப், இடதுகை வேகப்பந்து வீச்சாளர் பஸால்ஹக் பாறூக்கி, சுழற்பந்துவீச்சாளர் முஜீஜ் உர் ரஹ்மான், வலதுகை வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக் ஆகிய அனுபவசாலிகளும் இடம்பெறுகின்றனர். உலகக் கிண்ணத்துக்கு பெயரிடப்பட்டுள்ள அதே குழாத்திலுள்ள வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் விளையாட உள்ளனர். உலகக் கிண்ணத்துக்கு தங்களைத் தயார்படுத்தும் தொடராக இரண்டு அணிகளுக்கும் இது அமையவுள்ளது. இந்தத் தொடர் ஜனவரி 19இலிருந்து 22ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த டி குழுவில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுகின்றது. இக் குழுவில் நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன. சென்னையில் பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள தனது ஆரம்பப் போட்டியில் நியூஸிலாந்தை ஆப்கானிஸ்தான் எதிர்த்தாடும். ஆப்கானிஸ்தானின் ஏனைய போட்டிகள் பெப்ரவரி 11 எதிர் தென் ஆபிரிக்கா (அஹமதாபாத்) பெப்ரவரி 16 எதிர் ஐக்கிய அரபு இராச்சியம் (டெல்லி) பெப்ரவரி 19: எதிர் கனடா (சென்னை) மே. தீவுகள் மற்றும் ரி20 உலகக் கிண்ணம் ஆகயவற்றுக்கான ஆப்கானிஸ்தான் குழாம் ராஷித் கான் (தலைவர்), இப்ராஹிம் ஸ்த்ரான் (உப தலைவர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், மொஹம்மத் இஷாக், சிதிக்குல்லா அத்தல், தாவிஷ் ரசூலி, ஷஹிதுல்லா கமல், அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், குல்பாதின் நய்ப், மொஹம்மத் நபி, நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், பஸால்ஹக் பாறூக்கி, அப்துல்லா அஹ்மத்ஸாய். பதில் வீரர்கள்: ஏ.எம். கஸன்பர், இஜாஸ் அஹ்மத்ஸாய், ஸியா உர் ரஹ்மான் ஷரிபி https://www.virakesari.lk/article/234981
  12. அமெரிக்கப் படையினர் மிக இரகசியமாக இரவோடு இராவாக, பாகிஸ்தான் நகரம் ஒன்றில் தரையிறங்கி, பின்லேடனை கொலை செய்த காட்சியை, அப்போதை ஜனாதிபதி பராக் ஒபாமா நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின், சில காட்சிகளை, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ அமெரிக்கப் படைகளினால் கைது செய்யப்பட்டதை டொனால்ட் ட்ரம்ப் நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். இதில் என்ன புதுமை? இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் எண்ணிக்கையில் குறைந்த சிறிய தேசிய இனம் ஒன்றின், அதேநேரம் வலுவான மரபு வழி விடுதலை இயக்கத்தை அழித்த நாடுகளில் அமெரிக்கா முக்கியமானது. இப்போது, சிறிய ஆனால் பொருளாதார வலுவுள்ள வெனிசுலா ஜனாதிபதியை, சட்ட ஆட்சிக்கு மாறாக கைது செய்து நியாயப்படுத்துவதும் அமெரிக்கா தான். ஆனால் ஒன்று -- சிறிய நாடுகளோடும், சிறிய விடுதலை இயக்கங்களோடும் மாத்திரமே அமரிக்காவின் சண்டித்தனம். அதேநேரம், அநுரகுமார திஸாநாயக்கா என்ன குறைந்தவரா? டித்வா புயலினால் அநுராதபுரத்தில் பேருந்து ஒன்று 60 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியபோது, இலங்கைக் கடற்படையினர் அவர்களை காப்பாற்றிய காட்சியை நேரலையில் பார்த்தவர் அல்லவா? அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid02M7WbaYWuRuP6bheyQi4LnbX4TaFWL9WJ4fHsXag8fgb5auv2k4DG98oTPe86vej8l/? படுக்கையில் வைத்து கணவன் மனைவியை தூக்கியதாக சொல்கிறார்கள். அப்படி இருக்க இப்படி எல்லாம் கட்டளை பிறப்பித்தாக சொல்லப்படுகிறது.
  13. '2 லட்சம் ஆண்டுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த குகை'; நீங்களும் டிரெக்கிங் போகலாம் - Gudiyam Caves Tour திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் குகை குறித்து விவரிக்கிறது இந்த காணொளி. தயாரிப்பு - ஹேமா ராக்கேஷ் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - ஜனா #GudiyamCave #Tamilnadu இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  14. உலகக் கிண்ணத்துக்கு முன்னர் கமின்ஸ் உட்பட மூன்று ஆஸி. வீரர்கள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் Published By: Vishnu 01 Jan, 2026 | 09:44 PM (நெவில் அன்தனி) இலங்கையிலும் இந்தியாவிலும் இந்த வருடம் கூட்டாக நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் குழாத்தில் பெட் கமின்ஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், டிம் டேவிட் ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மூவரும் அடுத்த சில வாரங்களுக்குள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். இந்த மூவரும் அண்மையக் காலமாக உபாதை காரணமாக சிகிச்சையுடன் ஓய்வுபெற்று வந்தனர். ஆனால், பெட் கமின்ஸ் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் மாத்திரம் அணித் தலைவராக விளையாடி மீண்டும் ஓய்வு பெற்று வருகின்றார். அவுஸ்திரேலிய அணியின் தலைவராக மிச்செல் மார்ஷ் தொடர்ந்து செயல்படுவார். இதேவேளை, ஆறு சர்வதேச ரி20 போட்டிகளில் மாத்திரம் விளையாடி 13 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றியுள்ள சகலதுறை வீரர் கூப்பர் கொனலிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து, இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற தொடர்களில் கொனலி விளையாடவில்லை. ஆனால், பேர்த் ஸ்கோச்சஸ் அணிக்காக பிக் பாஷ் லீக்கில் 166.66 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 170 ஓட்டங்களைப் பெற்றதாலும் 7.62 என்ற கட்டுப்பாட்டு பந்துவீச்சுடன் 5 விக்கெட்களைக் கைப்பற்றியதாலும் அவரை குழாத்தில் இணைத்துக்கொள்ள அவுஸ்திரேலியா தெரிவாளர்கள் தீர்மானித்தனர். அடம் ஸம்ப்பா, மெட் குனேமான், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் நான்காவது சுழற்பந்து வீச்சாளராக கொனலி இடம்பெறுகின்றார். ஆனால் தலா 13 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள மிச்செல் ஓவென், பென் டுவார்ஷுய்ஸ் ஆகிய இருவரும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அவுஸ்திரேலிய குழாத்தில் பெட் கமின்ஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் இந்த மாத இறுதியில் ஸ்கான் பரிசோதனையின் பின்னரே அவர் தொடர்ந்து விளையாடக்கூடிய உடற் தகுதியைக் கொண்டுள்ளாரா இல்லையா என்பது தெரியவரும். உபாதை காரணமாக ஆஷஸ் தொடரில் விளையாடாமல் இருந்த ஜொஷ் ஹேஸ்ல்வூட் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளபோதிலும் அவர் பூரண உடற்தகுதியைக் கொண்டிருந்தால் மாத்திரமே உலகக் கிண்ணத்தில் விளையாடக்கூடியதாக இருக்கும். டிம் டேவிட்டுக்கும் அதே கதிதான். இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அயர்லாந்து, ஓமான், முன்னாள் சம்பியன் இலங்கை, ஸிம்பாப்வே ஆகிய அணிகளுடன் பி குழுவில் முன்னாள் உலக சம்பியனான அவுஸ்திரேலியா இடம்பெறுகிறது. அவுஸ்திரேலியா தனது ஆரம்பப் போட்டியில் அயர்லாந்தை பெப்ரவரி 11ஆம் திகதியும் இரண்டாவது போட்டியில் ஸிம்பாப்வேயை 13ஆம் திகதியும் எதிர்த்தாடும். இந்த இரண்டு போட்டிகளும் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும். அவுஸ்திரேலிய தனது மூன்றாவது போட்டியில் இலங்கையை கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 16ஆம் திகதி சந்திக்கும். இதே விளையாட்டரங்கில் ஓமானுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் கடைசிப் போட்டி பெப்ரவரி 20ஆம் திகதி நடைபெறும். ரி20 உலகக் கிண்ணத்துக்கான அவுஸ்திரேலிய குழாம் மிச்செல் மார்ஷ் (தலைவர்), சேவியர் பாட்லட், கூப்பர் கொனலி, பெட் கமின்ஸ், டிம் டேவிட், கெமரன் க்றீன், நேதன் எலிஸ், ஜொஷ் ஹேஸ்ல்வூட், ட்ரவிஸ் ஹெட், ஜொஷ் இங்லிஸ், மெட் குனேமான், க்ளென் மெக்ஸ்வெல், மெத்யூ ஷோட், மாக்கஸ் ஸ்டொய்னிஸ், அடம் ஸம்ப்பா. https://www.virakesari.lk/article/234976
  15. 1) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), நெதர்லாந்து எதிர் பாகிஸ்தான் NED PAK PAK 2) முதல் சுற்று குழு C:சனி 07 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் BAN WI WI 3) முதல் சுற்று குழு A:சனி 07 பெப்: 1:30 PM, வாங்கெடே, இந்தியா எதிர் ஐக்கிய அமெரிக்கா IND USA IND 4) முதல் சுற்று குழு D:ஞாயிறு 08 பெப்: 5:30 AM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் நியூஸிலாந்து AFG NZ NZ 5) முதல் சுற்று குழு C:ஞாயிறு 08 பெப்: 9:30 AM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் நேபாளம் ENG NEP ENG 6) முதல் சுற்று குழு B:ஞாயிறு 08 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் அயர்லாந்து SL IRE SL 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இத்தாலி BAN ITA BAN 8) முதல் சுற்று குழு B:திங்கள் 09 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), ஓமான் எதிர் ஸிம்பாப்வே OMA ZIM ZIM 9) முதல் சுற்று குழு D:திங்கள் 09 பெப்: 1:30 PM, அஹமதாபாத், கனடா எதிர் தென்னாபிரிக்கா CAN SA SA 10) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 5:30 AM, டெல்லி, நமீபியா எதிர் நெதர்லாந்து NAM NED NAM 11) முதல் சுற்று குழு D:செவ்வாய் 10 பெப்: 9:30 AM, சென்னை, நியூஸிலாந்து எதிர் ஐக்கிய அமீரகம் NZ UAE NZ 12) முதல் சுற்று குழு A:செவ்வாய் 10 பெப்: 1:30 PM, கொழும்பு (SSC), பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அமெரிக்கா PAK USA PAK 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG SA SA 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS IRE AUS 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG WI ENG 16) முதல் சுற்று குழு B:வியாழன் 12 பெப்: 5:30 AM, பல்லேகல, சிறிலங்கா எதிர் ஓமான் SL OMA SL 17) முதல் சுற்று குழு C:வியாழன் 12 பெப்: 9:30 AM, வாங்கெடே, இத்தாலி எதிர் நேபாளம் ITA NEP ITA 18) முதல் சுற்று குழு A:வியாழன் 12 பெப்: 1:30 PM, டெல்லி, இந்தியா எதிர் நமீபியா IND NAM IND 19) முதல் சுற்று குழு B:வெள்ளி 13 பெப்: 5:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் ஸிம்பாப்வே AUS ZIM AUS 20) முதல் சுற்று குழு D:வெள்ளி 13 பெப்: 9:30 AM, டெல்லி, கனடா எதிர் ஐக்கிய அமீரகம் CAN UAE UAE 21) முதல் சுற்று குழு A:வெள்ளி 13 பெப்: 1:30 PM, சென்னை, நெதர்லாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா NED USA USA 22) முதல் சுற்று குழு B:சனி 14 பெப்: 5:30 AM, கொழும்பு (SSC), அயர்லாந்து எதிர் ஓமான் IRE OMA IRE 23) முதல் சுற்று குழு C:சனி 14 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், பங்களாதேஷ் எதிர் இங்கிலாந்து BAN ENG ENG 24) முதல் சுற்று குழு D:சனி 14 பெப்: 1:30 PM, அஹமதாபாத், நியூஸிலாந்து எதிர் தென்னாபிரிக்கா NZ SA SA 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் vd மேற்கிந்தியத் தீவுகள் NEP WI WI 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM USA NAM 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK 28) முதல் சுற்று குழு D:திங்கள் 16 பெப்: 5:30 AM, டெல்லி, ஆப்கானிஸ்தான் எதிர் ஐக்கிய அமீரகம் AFG UAE AFG 29) முதல் சுற்று குழு C:திங்கள் 16 பெப்: 9:30 AM, ஏடென் கார்டன்ஸ், இங்கிலாந்து எதிர் இத்தாலி ENG ITA ENG 30) முதல் சுற்று குழு B:திங்கள் 16 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் சிறிலங்கா AUS SL AUS 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN NZ NZ 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE ZIM ZIM 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA UAE SA 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM PAK PAK 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND NED IND 37) முதல் சுற்று குழு C:வியாழன் 19 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், இத்தாலி எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ITA WI WI 38) முதல் சுற்று குழு B:வியாழன் 19 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), சிறிலங்கா எதிர் ஸிம்பாப்வே SL ZIM SL 39) முதல் சுற்று குழு D:வியாழன் 19 பெப்: 1:30 PM, சென்னை, ஆப்கானிஸ்தான் எதிர் கனடா AFG CAN AFG 40) முதல் சுற்று குழு B:வெள்ளி 20 பெப்: 1:30 PM, பல்லேகல, அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK USA Select USA Select NED Select NED Select NAM Select NAM Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு A: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக Pak குழு A: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) AUS Select AUS AUS SL Select SL SL IRE Select IRE Select ZIM Select ZIM Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு B: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS குழு B: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SL 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG WI Select WI WI BAN Select BAN Select NEP Select NEP Select ITA Select ITA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு C: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG குழு C: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக WI 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ SA Select SA SA AFG Select AFG Select CAN Select CAN Select UAE Select UAE Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) குழு D: முதலிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக SA குழு D: இரண்டாமிடம் - ? (1 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக NZ 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2:சனி 21 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y3 NZ PAK PAK 54) சுப்பர் 8: குழு 2:ஞாயிறு 22 பெப்: 9:30 AM, பல்லேகல, Y1 எதிர் Y4 ENG SL ENG 55) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 22 பெப்: 1:30 PM, அஹமதாபாத், X1 எதிர் X4 IND SA IND 56) சுப்பர் 8: குழு 1:திங்கள் 23 பெப்: 1:30 PM, வாங்கெடே, X2 எதிர் X3 AUS WI AUS 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, Y1 எதிர் Y3 ENG PAK PAK 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y2 எதிர் Y4 NZ SL NZ 59) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 9:30 AM, அஹமதாபாத், X3 எதிர் X4 WI SA SA 60) சுப்பர் 8: குழு 1:வியாழன் 26 பெப்: 1:30 PM, சென்னை, X1 எதிர் X2 IND AUS AUS 61) சுப்பர் 8: குழு 2:வெள்ளி 27 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), Y1 எதிர் Y2 ENG NZ ENG 62) சுப்பர் 8: குழு 2:சனி 28 பெப்: 1:30 PM, பல்லேகல, Y3 எதிர் Y4 PAK SL PAK 63) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 9:30 AM, டெல்லி, X2 எதிர் X4 AUS SA SA 64) சுப்பர் 8: குழு 1:ஞாயிறு 01 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், X1 எதிர் X3 IND WI IND சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS WI Select WI Select SA Select SA Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக AUS சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG NZ Select NZ Select PAK Select PAK PAK SL Select SL Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக PAK சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக ENG 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! Enter a Team அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ்/கொழும்பு (RPS), PAK IND IND 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, ENG AUS ENG இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) ஞாயிறு 08 மார்ச்: 1:30 PM, அஹமதாபாத்/கொழும்பு (RPS) அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND ENG ENG உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) BABAR AZAM 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SA 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JOFRA ARCHER 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) DARYL MITCHEL 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) ADAM ZAMPA 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PAK 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) BABER AZAM 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
  16. Backyard Chef,,இந்த பகுதியிலும் நிறைய சமையல்கள் பார்க்கலாம்.
  17. 🚨 வெனிசுலாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் – அவசர நிலை அறிவிப்பு written by admin January 3, 2026 வெனிசுலாவில் இன்று (ஜனவரி 3, 2026) அதிகாலை தலைநகர் காரகாஸ் (Caracas) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) தேசிய அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். இன்று அதிகாலை சுமார் 2:00 மணியளவில் காரகாஸில் உள்ள முக்கிய இராணுவத் தளங்கள் மற்றும் அரச கட்டடங்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து நாடு முழுவதும் “வெளிப்புறத் தொந்தரவு நிலை” (State of External Disturbance) மற்றும் அவசர நிலையை மதுரோ அறிவித்துள்ளார். இராணுவம் மற்றும் சிவில் படைகளை உடனடியாகத் தயார் நிலையில் இருக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். காரகாஸ் மட்டுமன்றி மிராண்டா, லா குவைரா மற்றும் அராகுவா ஆகிய மாநிலங்களிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் சில இராணுவத் தளங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கமே இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாக மதுரோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “வெனிசுலாவின் அபரிமிதமான எண்ணெய் வளங்கள் மற்றும் தாதுக்களைக் கைப்பற்றுவதே அமெரிக்காவின் ஒரே நோக்கம்” என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகங்கள் (CBS, Fox News) டிரம்ப் நிர்வாகம் இந்தத் தாக்குதல்களுக்கு உத்தரவிட்டதாகத் தெரிவித்துள்ள போதிலும், வெள்ளை மாளிகை அல்லது பென்டகன் அதிகாரப்பூர்வமாக இதுவரை எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாகவே போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேர்தல் முறைகேடுகளைக் காரணம் காட்டி வெனிசுலா மீது அமெரிக்கா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தது. கடந்த வாரங்களில் கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்களை நிலைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tag Words: #VenezuelaCrisis #CaracasExplosions #Maduro #NationalEmergency #USVenezuelaTensions #OilAndMinerals #BreakingNews #SouthAmericaPolitics #TamilNews https://globaltamilnews.net/2026/225568/
  18. எண்ணெய் வளத்தை குறிவைத்து அமெரிக்கா நகர்கிறது. அதில் வெற்றியும் அடையும். ஈரானிலும் ஆட்சி மாற்றத்தை விரும்பி நகர்வுகள் இருக்கின்றன. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
  19. தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! 03 Jan, 2026 | 12:59 PM சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக சனிக்கிழமை (03) காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். தையிட்டி விகாரையில் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235109
  20. அப்ப சிறிதரன் பா.உ வும் அனுர காவடியாக மாறி விட்டாரா? அல்லது பார் லைசென்ஸ் விடயம் வெளியே வராமல் இருக்க ஆட்சிக்கு வரும் எந்த அரசிடமும் சரணாகதி அடையும் நிலையா? சிறிதரன் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
  21. ட்ரம்ப் செய்திருக்கிறார். இதையே பைடனோ ஒபாமாவோ செய்திருந்தால் யாழ் களத்தில் "இடதுசாரிப் போர்வையோடு வலம் வரும் அதி வலதுசாரிகள்" இப்ப "ஏகாதிபத்தியம், பிள்ளைத் தாச்சிப் பத்தியம்" என்று ஒரே சருவச் சட்டியைத் தலையில் தூக்கிக் கொண்டு வந்திருப்பர். இப்ப எந்தத் "தலைவன்" பக்கம் சார்ந்து எழுதுவது என்ற "தொண்டையில் முள்ளு" நிலைமை😂!
  22. வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ‘சிறைபிடிப்பு' : அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பட மூலாதாரம்,Reuters 3 ஜனவரி 2026, 09:12 GMT புதுப்பிக்கப்பட்டது 47 நிமிடங்களுக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படையால் சிறைபிடிக்கப்பட்டதாக, பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் இருக்கும் இடம் மற்றும் தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது இன்னும் தெரியவில்லை. அதேசமயம், மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது டிரம்ப் நிர்வாகம் பல வாரங்களாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வெனிசுவேலா அதிபர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அமெரிக்காவில் குற்றச் செயல்களை பரப்புவதில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டுகிறார். பட மூலாதாரம்,Reuters இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ கூறியுள்ளார். முன்னதாக, அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில், வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் வெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அந்த நாட்டில் அவசரநிலையை அறிவித்திருந்தார். நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள லா கார்லோட்டா ராணுவ விமான நிலையம் மற்றும் ஃபுவர்டே டியூனா பிரதான ராணுவத் தளம் ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன. இந்த இரண்டு இடங்களிலும் நடந்ததாகக் கூறப்படும் வெடிப்புகளின் காணொளிகளும் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ், சனிக்கிழமை அதிகாலையில் வெனிசுலா தலைநகர் கராகஸில் நடந்த வெடிப்புகள் மற்றும் விமானங்கள் பறந்தது குறித்த தகவல்கள் பற்றி டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் அறிந்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. டிரம்ப் கூறியது என்ன? வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், "வெனிசுவேலாவிற்கும் அதன் தலைவர் அதிபர் நிக்கோலஸ் மதுரோவிற்கும் எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. தனது மனைவியுடன் இருந்த நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர்." என்று கூறியுள்ளார். மேலும், "இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் தொடர்ந்து வரவுள்ளன. இன்று காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு) மார்-எ-லாகோவில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்" என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ஜே.டி. வான்ஸ் கூறியது என்ன? வெனிசுவேலா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், "அதிபர் டிரம்ப் பல வழிகளை முன்வைத்தார், ஆனால் இந்த செயல்முறை முழுவதும் அவர் மிகத் தெளிவாக இருந்தார்: போதைப்பொருள் கடத்தல் நிறுத்தப்பட வேண்டும், திருடப்பட்ட எண்ணெய் அமெரிக்காவிற்குத் திருப்பித் தரப்பட வேண்டும் என்பதில்" எனத் தெரிவித்துள்ளார். "அதிபர் டிரம்ப் தான் சொல்வதை நிச்சயம் செய்வார் என்பது மதுரோவுக்கு புரிந்திருக்கும். இந்த சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்ட எங்கள் துணிச்சலான படைகளுக்கு பாராட்டுகள்." என்றும் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார். மதுரோ மீது நியூயார்க்கில் வழக்கு பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் (கோப்புப் படம்) மதுரோ மற்றும் அவரது மனைவி மீது நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்தில் குற்ற வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போன்டை தெரிவித்துள்ளார். மதுரோ மீது "போதைப்பொருள்-பயங்கரவாத சதி, கொக்கைன் இறக்குமதி சதி, இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல், அமெரிக்காவிற்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருக்க சதி" ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். "அவர்கள் விரைவில் அமெரிக்க நீதிமன்றங்களில் அமெரிக்க மண்ணில் அமெரிக்க நீதியின் முழு தாக்கத்தையும் எதிர்கொள்வார்கள்" என்று போன்டை கூறுகிறார், ஆனால் மதுரோவின் மனைவி மீது என்ன குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதை அவர் கூறவில்லை. "இந்த இரண்டு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய, நம்பமுடியாத மற்றும் மிகவும் வெற்றிகரமான பணியைச் செய்த எங்கள் துணிச்சலான ராணுவத்திற்கு மிகப்பெரிய நன்றி," என்றும் போன்டை தெரிவித்துள்ளார். நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? காணொளிக் குறிப்பு,வெனிசுவேலாவை அமெரிக்கா தாக்கிய தருணம் வெனிசுவேலா தலைநகர் கராகஸில் வசிக்கும் பிபிசி செய்தியாளர் வனேசா சில்வா, தனது வீட்டு ஜன்னலிலிருந்து ஒரு வெடிப்பைக் கண்டார். வெடிப்பின் சத்தம் மிகப்பெரியதாகவும், "இடியை விட வலிமையானதாகவும்" இருந்ததாகவும், இதனால் தனது வீடு அதிர்ந்ததாகவும் அவர் கூறினார். கராகஸ் ஒரு பள்ளத்தாக்குப் பகுதி, எனவே அந்த சத்தம் நகரத்தைச் சுற்றி எதிரொலித்தது. "என் இதயம் துடித்தது, கால்கள் நடுங்கின," என்று அவர் கூறினார், "வெடிப்புகள் இவ்வளவு நெருக்கமாக நிகழ்ந்ததைக் கண்டு பயந்ததாகவும்", "அவை மிகவும் துல்லியமாகத் தெரிந்ததாகவும்" கூறினார். நகரத்தில் இப்போது அமைதி நிலவுகிறது, ஆனால் எல்லோரும் இன்னும் பரபரப்பாக ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்பி, நிலவரத்தை அறிந்து வருகிறார்கள் என்று அவர் கூறினார். தனது உறவினர் ஒருவர் வானத்திலிருந்து ஏதோ விழுவதைக் கண்டார் என்றும், பத்து வினாடிகள் கழித்து ஒரு பெரும் வெடிப்பு சத்தத்தைக் கேட்டார் என்றும் வனேசா கூறினார். பட மூலாதாரம்,AFP via Getty Images இதுவரை தெரிய வந்தது என்ன? வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் குறித்து கீழ்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளன. வெனிசுவேலாவின் மீது அமெரிக்கா ஒரு "பெரிய அளவிலான தாக்குதலை" நடத்தியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு, "நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்" என்றும் அவரது சமூகவலைத்தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரோவைக் கைது செய்யும் இந்த நடவடிக்கையை அமெரிக்க ராணுவத்தின் டெல்டா படை மேற்கொண்டதாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். வெனிசுவேலா தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளதுடன், "இராணுவ ஆக்கிரமிப்பை" நிராகரித்து கண்டிப்பதாகவும் கூறியுள்ளது. வெனிசுலாவுக்கு எதிராக மேலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ எதிர்பார்ப்பதாக குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ கூறுகிறார். பனிப்போருக்குப் பிறகு அமெரிக்கக் கண்டத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத் திரட்டல் இதுவாகும், மேலும் பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்தைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது என்று பிபிசி செய்தியாளர் கிராண்ட் எழுதுகிறார். விடை தெரியாத 6 கேள்விகள் அதிபர் மதுரோவும் அவரது மனைவியும் எங்கு இருக்கிறார்கள் ? தாக்குதல்களால் ஏதேனும் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட்டனவா? தாக்குதலுக்குப் பிறகு வெனிசுவேலாவின் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு என்ன? எத்தனை தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அவை எங்கு நடந்தன? டிரம்ப் இந்த ராணுவ நடவடிக்கையை எடுக்க முடிவு செய்ததற்கான காரணங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் (டிரம்ப் அறிவித்துள்ள செய்தியாளர் சந்திப்பில் இது பற்றிய தகவல்கள் தெரிய வரலாம்) முன்னதாக, வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ இந்தத் தாக்குதல்களைக் கண்டித்ததுடன் தேசிய அவசரநிலையையும் அறிவித்திருந்தார். தனது நாட்டின் எண்ணெய் மற்றும் கனிம வளங்களைக் கைப்பற்றுவதற்கான அமெரிக்காவின் முயற்சி இது என்று அவர் குற்றம்சாட்டியிருந்தார். வெனிசுவேலா தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் பல வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. அவற்றில் ராணுவத் தளங்களும் அடங்கும். மறுபுறம், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை வெனிசுவேலா கண்டித்துள்ளது. "அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்தால் வெனிசுவேலா மீது நடத்தப்பட்ட மிகவும் கடுமையான ராணுவ ஆக்கிரமிப்பை வெனிசுவேலா சர்வதேச சமூகத்தின் முன் நிராகரிக்கிறது, கண்டிக்கிறது" என்று வெனிசுலா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images முன்னதாக, கராகஸில் நடந்த தாக்குதல்கள் "வெனிசுவேலாவின் மூலோபாய வளங்கள், குறிப்பாக அதன் எண்ணெய் மற்றும் கனிமங்களைக் கைப்பற்றுவதையும்" மற்றும் "நாட்டின் அரசியல் சுதந்திரத்தை உடைப்பதையும்" நோக்கமாகக் கொண்டவை என்று வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தார். வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவசரநிலையை செயல்படுத்த உத்தரவிட்டிருந்தார். அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களும் "சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான சூழ்நிலைகளில்" செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். "நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,லோபஸ் (வலது) 2014 முதல் மதுரோ (இடது) ஆட்சியின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக இருந்து வருகிறார். இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் பற்றிய தகவல்களை வெனிசுவேலா அரசாங்கம் சேகரித்து வருவதாகவும், பொதுமக்கள் வாழும் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும் வெனிசுவேலாவின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ லோபஸ் கூறியுள்ளார். வெளிநாட்டு துருப்புக்களின் இருப்பை வெனிசுவேலா "எதிர்க்கும்", நாடு முழுவதும் உடனடியாக ராணுவப் படைகள் நிலைநிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஒரு காணொளி உரையில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய விளாடிமிர் பட்ரினோ லோபஸ், வெனிசுவேலாவிற்கு எதிரான "மிக மோசமான ஆக்கிரமிப்பை" எதிர்கொள்ள ஒன்றுபட்ட எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தார். அனைத்து ஆயுதப் படைகளும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற 'மதுரோவின் உத்தரவுகளை' வெனிசுவேலா பின்பற்றி வருவதாகவும் கூறினார். "அவர்கள் எங்களைத் தாக்கியுள்ளனர், ஆனால் எங்களை அடிபணிய வைக்க அவர்களால் முடியாது" என்று வெனிசுவேலா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn0yd1vwy0ko
  23. அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது. இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்… பகிரங்கமாக சவால் அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம். ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்பதற்காக தேர்தலே நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசுக்கு சொல்லியிருக்கிறோம். அப்படி பார்த்தால் கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்கள் நடாத்தியிருக்க முடியாது. எனவே தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவது அடிப்படையான விடயம். அரசானது தேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்துகொண்டு மாகாணசபை தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகின்றது. முடிந்தால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரிய அளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர். அதனை நடத்தினால் மண் கௌவ்வுவீர்கள் என சவாலாக கூறுகின்றோம். நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும். மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்று எங்களை விட தீவிரமாக இருந்தவர்கள் இந்த ஜேவிபியினர். கடந்தகாலங்களில் மாற்று வரைபுகள் வந்தபோது இவர்கள் அந்த கூட்டங்களுக்கே வரமாட்டார்கள். அதனை நீக்குமாறு நாங்கள் நடாத்திய போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் சார்ந்த முக்கியமான ஒருவர் பங்கு கொண்டிருந்தார். எனவே ஆட்சிக்கு வந்தவுடன் இருப்பதை விட மோசமான ஒரு வரைபு தற்போது வெளிவந்துள்ளது. பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்காகவாம் என்று கூறப்படுகின்றது. இது ஒரு நகைப்பிற்குரிய விடயம். அவ்வாறு எனில் மக்களை பாதுகாப்பதற்காக இல்லை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக கட்சி சில கலந்துரையாடல்களை நடாத்தும்.அந்த வரைபை முற்றாக எதிர்க்கிறோம். கட்சியில் இருந்து நீக்கம் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப்படும் வரைக்கும் அவர் நிரபராதியாக இருந்தாலும் கூட ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்ற ரீதியிலே இந்த செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க கூடாது. எனவே உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்குவது என்ற தீர்மானம் எடுத்திருக்கிறோம். அரியநேந்திரன் அத்துடன் எங்களுடைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக பேசியிருக்கிறோம். குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அரியநேந்திரனை கட்சியின் நிகழ்வு ஒன்றில் முக்கியத்துவம் வழங்கியதான குற்றச்சாட்டு ஒன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மீது இருந்தது. கட்சி தீர்மானத்திற்கு மாறாக செயற்ப்பட்டமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரே அரியநேந்திரன். அந்த தீர்மானத்துடன் இணைந்து செயற்ப்படவேண்டியது கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.எனவே அவ்வாறு செயற்ப்பட இடமளிக்க முடியாது என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளோம். சிறீதரன் மீது குற்றச்சாட்டு அத்துடன் தேசிய ரீதியில் ஒரு குற்றச்சாட்டு ஒன்று எமது நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் அரசுடன் இணைந்து அனைத்திற்கும் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. விசேடமாக கணக்காளர் நாயகம் நியமனத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்கு சார்பாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கும் இராணுவ அல்லது பாதுகாப்புத்தரப்பின் பின்புலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிறீதரன் சார்பாக வாக்களித்தமை மட்டுமல்லாமல் அவர்களை தெரிவுசெய்கின்ற நேர்முக பரீட்சையிலும் தேர்வுசெய்துள்ளார். என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தது.அதனை அவர் மறுத்திருந்தார். ஆனால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த இருவரையும் நியமிக்கக்கூடாது என்று கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு எழுதிவைத்திருந்தோம். எனவே அது ஒரு தர்மசங்கடமான நிலைமையை கட்சிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது. இவர்களை நியமிக்க கூடாது என்று கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கட்சியை சேர்ந்தவர் அவர்களை தெரிவுசெய்துள்ளார். அத்துடன் அதற்கு முன்னரும் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மத்தியகுழு கூட்டத்தில் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். கூடிய புள்ளி எண்ணிக்கையை பெற்றவருக்கு அந்த பதவியை வழங்காமல் இரண்டாவதாக வந்தவருக்கு அரசாங்கம் கொடுத்தபோது அரசுடன் இணைந்து அவர் வாக்களித்ததாக சொல்லப்பட்டது. ஒழுக்காற்று விடயங்கள் அதற்கான நியாயப்பாடுகளை கட்சிக்கூட்டத்தில் அவர் சொல்லியிருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவி தொடர்பான வாக்கெடுப்பிலும் அப்படி செயற்ப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. கணக்காளர் நாயகம் விடயத்தில் மூன்று தடவைகள் அவ்வாறு நடந்துள்ளது. இறுதியாகவே அந்த இராணுவ அதிகாரியும், அதற்கு முன்பு ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பரையும் பின்னர் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவரையும் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும் அந்த மூன்றும் நிறைவேறவில்லை. ஏனெனில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரும் சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் சேர்ந்து அந்த பிரேரணைகளிற்கு எதிராக வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு சார்பாக சிறீதரனின் வாக்கு உட்பட நான்கு வாக்குகள் கிடைத்தது. எனவே அரசுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு இருந்தது. ஏற்கனவே இது தொடர்பாக நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரச்சனையை எழுப்பியிருந்தார். சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துவது பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த மற்றய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி. எனவே அப்படியாக இருப்பவர் எல்லா விடயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு சார்பாக வாக்களிப்பது தொடர்பான குற்றச்சாட்டு எட்டாவது தடவையாக நடந்துள்ளது. எனவே கட்சியையும் சங்கடப்படுத்தாமல் அவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக அரசியலமைப்பு பேரவையில் இருந்து அவர் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றார். அத்துடன் கட்சியின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் உத்தரவு மீறப்படும் சந்தர்ப்பத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவர்களுக்கு ஞாபகமூட்டப்பட்டிருக்கின்றது. https://tamilwin.com/
  24. 4 வது நிமிடத்தில் இருந்து இன்றைய சனலில் சவுக்கு சல்லியர்கள் படத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை பற்றி 👇
  25. 43-NAM 46-OMA 49-ITA 52-UAE 67-WI 70-IRE மற்றும் முடிந்தால் வினா 76க்கு அபிசேக் சரமா என்றும் வினா 78 க்கு வருன்சக்கரவத்தி என்றும் மாத்தி விடவும்.நன்றி.
  26. எப்படியும் கட்டின விகாரையை எந்த சிங்கள அரசும் இடிக்கப் போவதில்லை. நயினாதீவு நாகவிகாரை பிக்கு பக்கத்தில் தான் உண்மையான விகாரை இருந்தது. அது தனக்குத்தான் சொந்தம் என்கிறார். ஆகவே அந்த விகாரையையும் புதுப்பித்து 2 விகாரைகள் வரத்தான் போகிறது. இதற்குள் அர்சுனா பொன்ற அரை லூசுகள் விகாரையை அகற்றப் போராடாமல் நல்லூர் கந்தசுவாமி கோவிலை இடிக்க வேணும் என்று புதுப்புரளியை கிளப்பி விட்டிருக்கிறார். தமிழ் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையால் தமிழ்மக்கள் அனுராவுக்கும் அர்ச்சுனாவுக்கும் பின்னால் போய்க்கொண்டிருக்கிறார்கள். இது தமிழர் அரசியலில் மிகவும் ஆபத்தான போக்காக இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.