All Activity
- Past hour
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
தொடங்கியது ஐபிஎல் 2026: ஆர்சிபிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் பட மூலாதாரம்,Abhishek Chinnappa/Getty Images 10 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள் 2026 ஐபிஎல் தொடர் இன்று பெங்களூருவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 10 அணிகள் விளையாடும் இந்த ஐபிஎல் தொடர் மொத்தம் 13 நகரங்களில் நடக்கிறது. லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகள் நடக்கும். அதன்பிறகு பிளே ஆஃப் சுற்றில், குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடைபெறும். ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். அதில் 7 போட்டிகளில் தங்கள் ஹோம் கிரவுண்டிலும், மற்ற 7 போட்டிகளை எதிரணிகளின் ஹோம் கிரவுண்டிலும் ஆடுவார்கள். டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். கேப்டன்கள் சொன்னது என்ன? டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பட்டிதார், "இது ஒரு சீசன் தொடக்க ஆட்டம். அதனால் பிட்ச் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். கடந்த சீசனிலிருந்து நிறைய சாதகமான விஷயங்கள் உள்ளன. நாங்கள் எதையும் தற்காத்துக் கொள்ளப் போவதில்லை, ஐபிஎல் 2026-லும் நாங்களே வெற்றி பெறுவோம். [காயங்கள் பற்றி] அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர், அதேபோல் மாற்று வீரர்களும் சிறப்பாக உள்ளனர். வீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடன் இருக்கிறார்கள், மருத்துவக் குழு அவர்களைக் கவனித்து வருகிறது" என்று கூறினார். சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் இஷான் கிஷன் தற்காலிகமாக அந்த அணியின் கேப்டனாக செயல்படுகிறார். டாஸின் போது பேசிய அவர், "நாங்களும் முதலில் பந்துவீசவே (fielding) விரும்பினோம். எங்களின் உள்ளுணர்வை நம்பி விளையாட நினைக்கிறோம். இது ஐபிஎல் என்பதால் புதிதாக எதையும் தொடங்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினாலே போதும். பேட் கம்மின்ஸ் நிச்சயமாகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர், ஆனால் மற்ற அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதாகவே தோன்றுகிறது; இந்த முறை நாங்களே வெற்றி பெறுவோம் என்று உணர்கிறேன்." என்று கூறினார். இரு அணிகளிலும் இடம்பெற்றிருக்கும் வீரர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபில் சால்ட், ரஜத் பட்டிதார் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி, சுயாஷ் ஷர்மா. இம்பேக்ட் வீரர்கள்: தேவ்தத் படிக்கல், ஜேக்கப் பெதெல், ரஷிக் சலாம், கனிஷ்க் சௌஹான், வெங்கடேஷ் ஐயர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி, அனிகேத் வெர்மா, சலில் அரோரா, ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனத்கட். இம்பேக்ட் வீரர்கள்: ஷிவாங் குமார், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் பெய்ன், ஆர் ஸ்மரன், சகிப் ஹுசெய்ன். ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதால், அவர்கள் அடுத்ததாக பேட்டிங் செய்யும்போது படிக்கல் அல்லது வெங்கடேஷ் ஐயர் இருவரில் ஒருவர் இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கலாம். சன்ரைசர்ஸ் அணியில் அவர்கள் பந்துவீசும்போது சலில் அரோரா, ஷிவாங் குமார், டேவிட் பெய்ன் ஆகிய பௌலர்களில் ஒருவரை அவர்கள் பயன்படுத்த வாய்ப்பு அதிகம். ஒருவேளை முதல் இன்னிங்ஸின் போது பேட்டிங் தேவைப்பட்டால் லியாம் லிவிங்ஸ்டனையும் களமிறக்கலாம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c04xzd964plo
-
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும்
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும் Mar 28, 2026 - 03:54 PM ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களுக்குள் நிறைவடையும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக தரைவழி ஆக்கிரமிப்பு இன்றி அனைத்து இலக்குகளையும் அடைய முடியும் என அவர் கூறியுள்ளார். பிரான்சில் நடைபெற்று வரும் 'G7' பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே மார்கோ ரூபியோ இந்தத் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பல மாதங்கள் நீடிக்காது என்றும், சில வாரங்களுக்குள்ளேயே தகுந்த முறையில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் ரூபியோ மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, போர் முடிவுக்கு வந்த பின்னரும் ஹார்முஸ் நீரிணை ஊடாக இடம்பெறும் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டணங்களை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து G7 பிரதிநிதிகள் அவருடன் கலந்துரையாடியுள்ளனர். ஹார்முஸ் நீரிணை ஊடாக வர்த்தக நன்மைகளைப் பெறும் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள், சுதந்திரமான போக்குவரத்துப் பாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின், அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmna5twyl000j356pdune110a
-
ஏராளன் started following ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் நிறைவடையும்
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
-
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
எரிபொருள் விலை குறித்து இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு! 28 Mar, 2026 | 03:17 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இம்முறை (மார்ச் மாதம்) மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர், தற்போதைய நிலையில் எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றத்தையும் செய்யப்போவதில்லை எனத் தெரிவித்தார். உலக சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலைகளின் மாற்றங்களுக்கு அமையவே அடுத்தகட்ட தீர்மானங்கள் எடுக்கப்படும். எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான இறுதி முடிவை அரசாங்கம் வரும் நாட்களில் எடுக்கும் என தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதன்படி, எரிபொருள் நிலையங்களில் தற்போது நடைமுறையிலுள்ள விலைகளே தொடர்ந்து அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242155
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
இண்டியன் பிறீமியர் லீக் திருவிழா சனிக்கிழமை ஆரம்பம்; ரசிகர்களுக்கு 2 மாதங்களுக்கு கொண்டாட்டம் Published By: Vishnu 27 Mar, 2026 | 07:33 PM (நெவில் அன்தனி) கிரிக்கெட் உலகில் நடத்தப்படும் தனிப்பட்ட தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறந்ததும் முழு உலகினாலும் கவரப்படுவதும் 'மினி உலகக் கிண்ணம்' என கருதப்படுவதுமான இந்தியாவின் மிகப் பெரிய கிரிக்கெட் திருவிழாவான இண்டியன் பிறீமியர் லீக் (ஐபிஎல்) சனிக்கிழமை 28ஆம் திகதி ஆரம்பமாகிறது. 19ஆவது ஐபிஎல் அத்தியாயம் நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையில் பெங்களூருவில் நாளை சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகிறது. 2024இலும் 2026இலும் அடுத்தடுத்து ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சம்பியன் பட்டங்களையும் 2025இல் ஐசிசி மகளிர் 50 ஓவர் உலகக் கிண்ண பட்டத்தையும் வென்றதன் மூலம் இந்திய கிரிக்கெட் ஒரு பொற்காலத்தில் இருப்பதை எடுத்துக்காட்டுகிறது. இந் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய ஆதிக்கத்தின் அச்சாணியாக விளங்கும் இண்டியன் பிறீமியர் லீக் மீது முழு உலகின் கவனம் இப்போது திரும்பியுள்ளது. இண்டியன் பிறீமியர் லீக்கில் உலகின் தலைசிறந்த வீரர்கள், பயிற்றுநர்கள், கிரிக்கெட் ஆய்வாளர்கள், அணிகளின் முகாமைத்துவ குழுவினர்கள், உரிமையாளர்கள் அனைவரும் ஒன்றினைவதால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான இரசிகர்களுக்கு பெரு விருந்து காத்திருக்கிறது. தலா ஐந்து தடவைகள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் (2010, 2011, 2018, 2021, 2023) மற்றும் மும்பை இண்டியன்ஸ் (2013, 2015, 2017, 2019, 2020), மூன்று தடவைகள் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2012, 2014, 2024), நடப்பு சம்பயின் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (2025), முன்னாள் சம்பியன்களான ராஜஸ்தான் றோயல்ஸ் (2008), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2016), குஜராத் டைட்டன்ஸ் (2022) ஆகியவற்றுடன் டெல்ஹி கெப்பிட்டல்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய பலம்வாய்ந்த பத்து அணிகள் இண்டியன் பிறீமியர் லீக் மகுடத்திற்காக இந்த வருடம் களம் இறங்குகின்றன. முதல் இரண்டு அத்தியாங்களில் விளையாடி 2009இல் சம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ் அதன் பின்னர ஐபிஎல் இல் விளையாடவில்லை. வீரர்களின் அதிரடி துடுப்பாட்டம், துல்லியமான பந்துவீச்சு, அற்புதமான களத்தடுப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கே தரும் இண்டியன் பிறீமியர் லீக் இம்முறையும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது. இந்த வருடம் வீரர்களுக்கென புதிய நடத்தை விதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. வீரர்களது பயிற்சிகள் தொடர்பான புதிய விதிகளே இதில் அடங்குகிறது. இது தொடர்பில் பத்து அணிகளினதும் தலைவர்கள் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இந்த வருடம் முதல் தடவையாக ரசிகர்கள் நேரலையில் போட்டியை கண்டுகளிக்கும் வகையில் இந்தியாவின் 15 நகரங்களில் ஐபிஎல் ரசிகர்கள் பூங்காங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இம்முறை இரண்டு முக்கிய வீரர்கள் ஏலத்தின் மூலம் வெறு அணிகளுக்கு விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவந்த ரவிந்த்ர ஜடேஜா, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இணைந்துள்ளதுடன் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்காக விளையாடிய சஞ்சு செம்சன் இம்முறை சென்னை சுப்பர் கிங்ஸில் இணைந்துள்ளார். அத்துடன் இந்தத் தொடர், இரண்டு நிறுவன உரிமையாளர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரிமையாளர் மாற்றங்களுக்கு மத்தியில் தொடங்குகிறது. இந்த வாரம், சில மணி நேர இடைவெளியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள், முறையே ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் கல் சோமனி தலைமையிலான கூட்டமைப்புகளுக்கு சாதனை ஒப்பந்தங்களில் விற்கப்பட்டன. இதன் மூலம் அந்த அணிகள் மதிப்பு முறையே 1.78 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் 1.63 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். கடந்த வருடம் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ஓட்டங்களால் வெற்றிகொண்டு முதல் தடவையாக றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சம்பியனாகி இருந்தது. இந்த வருடம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சம்பியன் பட்டத்தை தக்கவைக்க கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சென்னை சுப்பர் சிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் ஆகிய அணிகள் ஆறாவது சம்பியன் பட்டத்துக்கு குறிவைத்து விளையாடவுள்ளன. இதுவரை சம்பியனாகாத அணிகளும முதல் தடவையாக கிண்ணத்தை வென்றெக்க முயற்சிக்கவுள்ளன. எனவே இந்த வருட ஐபிஎல் பரபரப்பான முடிவுகளைத் தரும் என நம்பப்படுகிறது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தடையில்லாச் சான்றிதழ்களை பெற்ற ஐந்து இலங்கை வீரர்கள் ஐபிஎல் இல் விளையாடவுள்ளனர். அந்த ஐவரும் ஏற்கனவே தத்தமது அணிகளில் இணைந்துகொண்டுள்ளனர். இரண்டு வீரர்களுக்கு இன்னும் தடையில்லா சான்றிதழ் வழங்கப்படவில்லை. கமிந்து மெண்டிஸ், ஏஷான் மாலிங்க ஆகிய இருவரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாட உள்ளனர். பெத்தும் நிஸ்ஸன்க, துஷ்மன்த சமீர ஆகிய இருவரும் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். இதேவேளை, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் ஒப்பந்தும் செய்யப்பட்டிருந்த இங்கிலாந்து சகலதுறை வீரர் சாம் கரன், காயம் காரணமாக விலகியதால் அவருக்குப் பதில் தசுன் ஷானக்க அவ்வணியில் இணைந்துள்ளார். இந்த ஐந்து வீரர்களும் கட்டாய உடற்தகுதி சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் காயத்திலிருந்து இன்னும் பூரண குணம் அடையாமல் இருக்கும் வனிந்து ஹசரங்க, மதீஷ பத்திராண ஆகிய இருவரும் தேவையான உடல் செயல்திறன் தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. லக்னோவ் சுப்பர் ஜயண்ட்ஸ் அணியில் வனிந்து ஹசரங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேவேளை, முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மதீஷ பத்திரனவை இந்திய நாணயப்படி 18 கோடி ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் சாதனைகள் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர் விராத் கோஹ்லி ஆவார். அவர் முதலாவது அத்தியாயத்திலிருந்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். கோஹ்லி 259 இன்னிங்ஸ்களில் 8 சதங்கள், 63 அரைச் சதங்களுடன் 8661 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார். ஐபிஎல் இல் அதிக சதங்கள் மற்றும் அதிக அரைச் சதங்கள் குவித்த சாதனையாளராகவும் கோஹ்லி திகழ்கிறார். அதிக விக்கெட்களை வீழ்த்திய சாதனையாளர் யுஸ்வேந்த்ர சஹால் ஆவார். 2013இலிருந்து மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய நான்கு அணிகளுக்காக யுவஸ்வேந்த்ர சஹால் விளையாடியுள்ளார். அவர் 172 இன்னிங்ஸ்களில் 221 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்களைப் பூர்த்திசெய்த ஒரே ஒரு வீரர் யுஸ்வேந்த்ர சஹால் ஆவார். சஹால் 8 தடவைகள் 4 விக்கெட் குவியல்களையும் ஒரு தடவை 5 விக்கெட் குவியலையும் பதிவுசெய்துள்ளார். அத்துடன் ஒரே பருவகாலத்தில் இரண்டு ஹெட்ரிக் சாதனைகளை நிலைநாட்டியவரும் சஹால் ஆவார். ஐபிஎல் வரலர்ற்றில் 3 ஹெட்ரிக்குளை பதிவு செய்தவர் அமித் மிஷ்ரா ஆவார். தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கை புனே வொரியர்ஸ் அணிக்கு எதிராக 2013இல் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கிறிஸ் கேல் குவித்த 175 ஓட்டங்களே இன்றும் தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இருந்த வருகிறது. அதிகூடிய மொத்த எண்ணிக்கையை பெற்ற அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகும். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 2024இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 287 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்தது. இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால் ஐபிஎல் இல் பெறப்பட்ட அதிகூடிய நான்கு மொத்த எண்ணிக்கைகளும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினாலேயே பெறப்பட்டுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் பெறப்பட்ட மற்றைய 3 அதிகூடிய மொத்த எண்ணிக்கைகள் வருமாறு: 277 - 3 விக். எதிர் மும்பை இண்டியன்ஸ் (2024) 278 - 3 விக். எதிர் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் (2025) 286 - 6 விக். எதிர் ராஜஸ்தான் றோயல்ஸ் (2025) மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கை 49 (9.4 ஓவர்கள்) றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2017) மிகச் சிறந்த இணைப்பாட்டம் 229 ஓட்டங்கள் - 2ஆவது விக். விராத் கோஹ்லி மற்றும் ஏ.பி. டி வில்லியர்ஸ் - றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் குஜராத் லயன்ஸ் (2016) https://www.virakesari.lk/article/242121
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சியின் வேட்பாளராக களம் இறங்கும் இயக்குநர் சுந்தர் சி 28 Mar, 2026 | 04:23 PM அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதி கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் மதுரை மத்திய தொகுதியில் அக்கட்சியின் சார்பில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்குவார் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி அன்று ஒரே கட்டமாக தமிழக முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் பொது தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அக்கூட்டனையில் இடம்பெற்றிருக்கும் கல்வியாளர் ஏ சி சண்முகம் தலைமையிலான புதிய நீதி கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் புதிய நீதி கட்சியின் தலைவரான ஏசி சண்முகமும், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமியும் கை சாத்திட்டனர். மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக திரைப்பட இயக்குநர் சுந்தர் சி தெரிவு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தொகுதியில் அவர் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏப்ரல் ஆறாம் திகதி தமிழக சட்டப்பேரவைக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு நாள் என்பதால் அதற்குள் சுந்தர் சி வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் திரைப்பட இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக களம் இறங்கி இருப்பது அரசியல் பார்வையாளர்கள் இடத்தில் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே இயக்குநர் சுந்தர் சி யின் மனைவியும் ,நடிகையுமான குஷ்பூ சுந்தர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் துணைத் தலைவர் என்பதாலும் அதிமுக கூட்டணியில் பாஜகவும் இடம் பிடித்திருப்பதாலும் சுந்தர் சிக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242158
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1GFnLddVwPkbTD8BE2Bp7dWeC0EXu_A1YsPk7v43ceaE/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 223 யாழ்களப் போட்டிக்கான கணிப்புக்கள் திங்கள் 13 ஏப்ரல் அன்று முதல் புள்ளிகளை வழங்கப் பாவிக்கப்படும் என்பதால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) மார்ச் 28, சனி, 14:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 2) மார்ச் 29, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 3) மார்ச் 30, திங்கள், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 4) மார்ச் 31, செவ்வாய், 15:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் PBKS எதிர் GT 5) ஏப்ரல் 1, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 6) ஏப்ரல் 2, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 7) ஏப்ரல் 3, வெள்ளி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 8) ஏப்ரல் 4, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 9) ஏப்ரல் 4, சனி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 10) ஏப்ரல் 5, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 11) ஏப்ரல் 5, ஞாயிறு, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 12) ஏப்ரல் 6, திங்கள், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 13) ஏப்ரல் 7, செவ்வாய், 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 14) ஏப்ரல் 8, புதன், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 15) ஏப்ரல் 9, வியாழன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 16) ஏப்ரல் 10, வெள்ளி, 15:00 UK, குவஹாத்தி, ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு RR எதிர் RCB 17) ஏப்ரல் 11, சனி, 11:00 UK, முலான்பூர், பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் PBKS எதிர் SRH 18) ஏப்ரல் 11, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 19) ஏப்ரல் 12, ஞாயிறு, 11:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 20) ஏப்ரல் 12, ஞாயிறு, 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு MI எதிர் RCB 21) ஏப்ரல் 13, திங்கள், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 22) ஏப்ரல் 14, செவ்வாய், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 23) ஏப்ரல் 15, புதன், 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RCB எதிர் LSG 24) ஏப்ரல் 16, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் MI எதிர் PBKS 25) ஏப்ரல் 17, வெள்ளி, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் GT எதிர் KKR 26) ஏப்ரல் 18, சனி, 11:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 27) ஏப்ரல் 18, சனி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs சென்னை சூப்பர் கிங்ஸ் SRH எதிர் CSK 28) ஏப்ரல் 19, ஞாயிறு, 11:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 29) ஏப்ரல் 19, ஞாயிறு, 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 30) ஏப்ரல் 20, திங்கள், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 31) ஏப்ரல் 21, செவ்வாய், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 32) ஏப்ரல் 22, புதன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் LSG எதிர் RR 33) ஏப்ரல் 23, வியாழன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 34) ஏப்ரல் 24, வெள்ளி, 15:00 UK, பெங்களூரு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 35) ஏப்ரல் 25, சனி, 11:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் DC எதிர் PBKS 36) ஏப்ரல் 25, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் RR எதிர் SRH 37) ஏப்ரல் 26, ஞாயிறு, 11:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 38) ஏப்ரல் 26, ஞாயிறு, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் LSG எதிர் KKR 39) ஏப்ரல் 27, திங்கள், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு DC எதிர் RCB 40) ஏப்ரல் 28, செவ்வாய், 15:00 UK, நியூ சண்டிகார், பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 41) ஏப்ரல் 29, புதன், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 42) ஏப்ரல் 30, வியாழன், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு GT எதிர் RCB 43) மே 1, வெள்ளி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் RR எதிர் DC 44) மே 2, சனி, 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 45) மே 3, ஞாயிறு, 11:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 46) மே 3, ஞாயிறு, 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 47) மே 4, திங்கள், 15:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 48) மே 5, செவ்வாய், 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் DC எதிர் CSK 49) மே 6, புதன், 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 50) மே 7, வியாழன், 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு LSG எதிர் RCB 51) மே 8, வெள்ளி, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 52) மே 9, சனி, 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 53) மே 10, ஞாயிறு, 11:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் CSK எதிர் LSG 54) மே 10, ஞாயிறு, 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs மும்பை இந்தியன்ஸ் RCB எதிர் MI 55) மே 11, திங்கள், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 56) மே 12, செவ்வாய், 15:00 UK, அஹமதாபாத், குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 57) மே 13, புதன், 15:00 UK, ராய்பூர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 58) மே 14, வியாழன், 15:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 59) மே 15, வெள்ளி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 60) மே 16, சனி, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 61) மே 17, ஞாயிறு, 11:00 UK, தர்மசாலா, பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு PBKS எதிர் RCB 62) மே 17, ஞாயிறு, 15:00 UK, டெல்லி, டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 63) மே 18, திங்கள், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 64) மே 19, செவ்வாய், 15:00 UK, ஜெய்பூர், ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 65) மே 20, புதன், 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் KKR எதிர் MI 66) மே 21, வியாழன், 15:00 UK, சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் CSK எதிர் GT 67) மே 22, வெள்ளி, 15:00 UK, ஐதராபாத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு SRH எதிர் RCB 68) மே 23, சனி, 15:00 UK, லக்னோ, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 69) மே 24, ஞாயிறு, 11:00 UK, மும்பை, மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் MI எதிர் RR 70) மே 24, ஞாயிறு, 15:00 UK, கொல்கத்தா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் KKR எதிர் DC கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) அணி? அணி? அணி? அணி? 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) #2 - ? (3 புள்ளிகள்) #3 - ? (2 புள்ளிகள்) #4 - ? (1 புள்ளி) 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! அணி? 74) செவ்வாய் 26 மே 15:00 UK, Venue TBC - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team அணி? 75) புதன் 27 மே 15:00 UK, Venue TBC - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team அணி? 76) வெள்ளி 29 மே 15:00, Venue TBC - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (4புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator அணி? 77) ஞாயிறு 31 மே 15:00 UK, பெங்களூரு - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (7 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 அணி? 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் (Best Bowling Figures) எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி ஞாயிறு 12 ஏப்ரல் 2026 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 கேள்விக்கொத்து கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. https://docs.google.com/spreadsheets/d/1GFnLddVwPkbTD8BE2Bp7dWeC0EXu_A1YsPk7v43ceaE/edit?usp=sharing அதிகபட்ச புள்ளிகள் 223 யாழ்களப் போட்டிக்கான கணிப்புக்கள் திங்கள் 13 ஏப்ரல் அன்று முதல் புள்ளிகளை வழங்கப் பாவிக்கப்படும் என்பதால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். குழுநிலைப் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும் வெற்றி (Win) - 2 தோல்வி (Loss)- 0 முடிவில்லை (No Result) - 1 சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சம்நிலையில் முடிய வாய்ப்பில்லை வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும். இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும். அணிகளை சுருக்கிய வடிவில் தந்தால் வசதியாக இருக்கும். CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) குழுநிலைப் போட்டிகள் முடிவடைந்து தரவரிசையில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் அடுத்த Playoff கட்டத்திற்கு போகும். முதலாம், இரண்டாம் இடங்களில் இருக்கும் அணிகள் Qualifier 1 போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி உடனடியாகவே இறுதி போட்டிக்கு தெரிவாகிவிடும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு Qualifier 2 இல் கிடைக்கும். மூன்றாம், நான்காம் இடங்களில் இருக்கும் அணிகள் Eliminator போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி Qualifier 2 இல் மீண்டும் விளையாடவேண்டும். இதில் தோல்வி அடையும் அணி போட்டித் தொடரில் இருந்து நீக்கப்படும். இறுதிப் போட்டியில் Qualifier 1 இலும் Qualifier 2 இலும் வெற்றி பெறும் அணிகள் 31 மே 2025 அன்று பெங்களூரு மைதானத்தில் வெற்றிக் கிண்ணத்திற்காக மோதும். Qualifier 1: 1st placed team v 2nd placed team Eliminator: 3rd placed team v 4th placed team Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 போட்டி விதிகள் போட்டி முடிவு திகதி ஞாயிறு 12 ஏப்ரல் 2026 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும். பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும். ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார். போட்டி நடாத்துபவரைத் தவிர்த்து குறைந்தது 10 பேராவது போட்டியில் பங்குபற்றவேண்டும். யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்
- Today
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026 வணக்கம், 19வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2026 சீசன் மார்ச் மாதம் 28 இல் தொடங்க உள்ளது. இறுதிப்போட்டி பெங்களூருவில் மே 31 ஆம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. யாழ்கள ஐபிஎல் T20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். 25 பேர் பங்குபற்றினாலும் உடனுக்குடன் புள்ளிகளை கணக்கிட கூகிள் ஷீற் தயார்.😃 எனினும் பத்துப் பேருக்குக் குறைவாகப் பங்குபற்றினால் போட்டி நடாத்தப்படமாட்டாது! போட்டிகளின் அட்டவணைகள் இந்திய மாநிலத் தேர்தல்கள் காரணமாக முன்னர் முழுமையாக வெளியிடப்படாமையால், யாழ் களப் போட்டி தாமதமாக ஆரம்பித்துள்ளது. எனவே முதல் 20 போட்டிகளுக்கு (ஏப்ரல் 12 வரையானவை) பங்குபெற்றும் அனைவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். அதன் பின்னரே (ஏப்ரல் 13 இல் இருந்து) போட்டிகளின் முடிவுகளின்படி புள்ளிகள் வழங்கப்படும். குறிப்பு: போட்டிகளில் வெல்லும் அணிகளின் நிலைகளைக் கணிக்க வசதியாக அனைத்துப் போட்டிகளும் கேள்விக்கொத்தில் தரப்படும். ஆனால் முதல் 20 போட்டிகளுக்கான பதில்கள் பொருட்படுத்தப்படாமல் தலா இரு புள்ளிகள் (மொத்தமாக 40 புள்ளிகள்) இனாமாக வழங்கப்படும். இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) 1. Chennai Super Kings Ruturaj Gaikwad (captain), Ayush Mhatre, Sarfaraz Khan, Sanju Samson, MS Dhoni, Urvil Patel, Kartik Sharma, Shivam Dube, Ramakrishna Ghosh, Shreyas Gopal, Aman Khan, Prashant Veer, Rahul Chahar, Khaleel Ahmed, Gurjapneet Singh, Anshul Kamboj, Mukesh Choudhary, Jamie Overton*, Dewald Brevis*, Matt Short*, Spencer Johnson*, Zak Foulkes*, Matt Henry*, Noor Ahmad*, Akeal Hosein* 2. Delhi Capitals Axar Patel (captain), Prithvi Shaw, Karun Nair, Nitish Rana, Ashutosh Sharma, Sameer Rizvi, Sahil Parakh, KL Rahul, Abishek Porel, Vipraj Nigam, Auqib Nabi, Madhav Tiwari, T Vijay, Ajay Mandal, Kuldeep Yadav, Mukesh Kumar, T Natarajan, Mitchell Starc*, Pathum Nissanka*, Dushmantha Chameera*, Lungi Ngidi*, David Miller*, Tristan Stubbs*, Kyle Jamieson* 3. Gujarat Titans Shubman Gill (captain), Sai Sudharsan, Shahrukh Khan, Anuj Rawat, Kumar Kushagra, Washington Sundar, Manav Suthar, Rahul Tewatia, Nishant Sindhu, Jayant Yadav, Arshad Khan, Sai Kishore, Mohammed Siraj, Prasidh Krishna, Gurnoor Brar, Ishant Sharma, Ashok Sharma, Kulwant Khejroliya, Jos Buttler*, Tom Banton*, Luke Wood*, Glenn Phillips*, Jason Holder*, Rashid Khan*, Kagiso Rabada* 4. Kolkata Knight Riders Ajinkya Rahane (captain), Angkrish Raghuvanshi, Manish Pandey, Rahul Tripathi, Rinku Singh, Tejasvi Dahiya, Anukul Roy, Daksh Kamra, Ramandeep Singh, Sarthak Ranjan, Prashant Solanki, Varun Chakravarthy, Kartik Tyagi, Umran Malik, Vaibhav Arora, Saurabh Dubey, Navdeep Saini, Cameron Green*, Rovman Powell*, Sunil Narine*, Finn Allen*, Rachin Ravindra*, Tim Seifert*, Matheesha Pathirana*, Blessing Muzarabani* 5. Lucknow Super Giants Rishabh Pant (captain), Abdul Samad, Ayush Badoni, Himmat Singh, Akshat Raghuwanshi, Mukul Choudhary, Arshin Kulkarni, Shahbaz Ahmed, Digvesh Rathi, M Siddharth, Akash Singh, Avesh Khan, Mohammed Shami, Mohsin Khan, Prince Yadav, Arjun Tendulkar, Mayank Yadav, Naman Tiwari, Matthew Breetzke*, Aiden Markram*, Anrich Nortje*, Nicholas Pooran*, Josh Inglis*, Mitchell Marsh*, Wanindu Hasaranga* 6. Mumbai Indians Hardik Pandya (captain), Rohit Sharma, Suryakumar Yadav, Danish Malewar, Robin Minz, Shardul Thakur, Naman Dhir, Raj Bawa, Tilak Varma, Mayank Markande, Raghu Sharma, Ashwani Kumar, Deepak Chahar, Jasprit Bumrah, Mohammed Izhar, Mayank Rawat, Will Jacks*, Ryan Rickelton*, Quinton de Kock*, Corbin Bosch* Sherfane Rutherford*, Mitchell Santner*, Trent Boult* AM Ghazanfar* 7. Punjab Kings Shreyas Iyer (captain), Harnoor Singh, Nehal Wadhera, Priyansh Arya, Pyla Avinash, Prabhsimran Singh, Vishnu Vinod, Harpreet Brar, Musheer Khan, Shashank Singh, Suryansh Shedge, Praveen Dubey, Yuzvendra Chahal, Arshdeep Singh, Vijaykumar Vyshak, Vishal Nishad, Yash Thakur, Azmatullah Omarzai*, Ben Dwarshuis*, Cooper Connolly*, Marcus Stoinis*, Mitchell Owen*, Xavier Bartlett*, Marco Jansen*, Lockie Ferguson* 8. Rajasthan Royals Riyan Parag (captain), Shubham Dubey, Vaibhav Suryavanshi, Yashasvi Jaiswal, Aman Rao, Dhruv Jurel, Ravi Singh, Ravindra Jadeja, Yudhvir Singh, Ravi Bishnoi, Yash Raj Punja, Vignesh Puthur, Sandeep Sharma, Tushar Deshpande, Sushant Mishra, Kuldeep Sen, Brijesh Sharma, Jofra Archer*, Lhuan-dre Pretorius*, Donovan Ferreira*, Kwena Maphaka*, Nandre Burger*, Adam Milne*, Shimron Hetmyer*, Dasun Shanaka* 9. Royal Challengers Bengaluru Rajat Patidar (captain), Virat Kohli, Devdutt Padikkal, Jitesh Sharma, Venkatesh Iyer, Krunal Pandya, Swapnil Singh, Satwik Deswal, Kanish Chouhan, Vihaan Malhotra, Vicky Ostwal, Suyash Sharma, Bhuvneshwar Kumar, Rasikh Salam, Mangesh Yadav, Abhinandan Singh, Jacob Bethell*, Phil Salt*, Jordan Cox*, Josh Hazlewood*, Tim David*, Romario Shepherd*, Jacob Duffy*, Nuwan Thushara* 10. Sunrisers Hyderabad Pat Cummins* (captain), Ishan Kishan (stand-in captain), Aniket Verma, R Smaran, Salil Arora, Abhishek Sharma, Nitish Kumar Reddy, Harshal Patel, Harsh Dubey, Shivang Kumar, Krains Fuletra, Zeeshan Ansari, Amit Kumar, Jaydev Unadkat, Shivam Mavi, Onkar Tarmale, Sakib Hussain, Praful Hinge, Liam Livingstone*, Brydon Carse*, David Payne*, Travis Head*, Heinrich Klaasen*, Kamindu Mendis*, Eshan Malinga* போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே. Points table Pos Grp Team Pld W L NR Pts NRR Qualification 1 A Punjab Kings (R) 14 9 4 1 19 0.372 Advanced to Qualifier 1 2 A Royal Challengers Bengaluru (C) 14 9 4 1 19 0.301 3 B Gujarat Titans (4th) 14 9 5 0 18 0.254 Advanced to Eliminator 4 B Mumbai Indians (3rd) 14 8 6 0 16 1.142 5 B Delhi Capitals 14 7 6 1 15 0.011 Eliminated 6 B Sunrisers Hyderabad 14 6 7 1 13 −0.241 7 B Lucknow Super Giants 14 6 8 0 12 −0.376 8 A Kolkata Knight Riders 14 5 7 2 12 −0.305 9 A Rajasthan Royals 14 4 10 0 8 −0.549 10 A Chennai Super Kings 14 4 10 0 8 −0.647 Most runs Runs Player Team 759 Sai Sudharsan Gujarat Titans 717 Suryakumar Yadav Mumbai Indians 657 Virat Kohli Royal Challengers Bengaluru 650 Shubman Gill Gujarat Titans 627 Mitchell Marsh Lucknow Super Giants Most wickets Wickets Player Team 25 Prasidh Krishna Gujarat Titans 24 Noor Ahmad Chennai Super Kings 22 Josh Hazlewood Royal Challengers Bengaluru 22 Trent Boult Mumbai Indians 21 Arshdeep Singh Punjab Kings Most valuable player Points Player Team 320.5 Suryakumar Yadav Mumbai Indians 311.0 Sai Sudharsan Gujarat Titans 273.0 Yashasvi Jaiswal Rajasthan Royals 272.5 Nicholas Pooran Lucknow Super Giants 272.0 Mitchell Marsh End of season awards Award Prize Player Team Fantasy player of the season ₹10 lakh (US$12,000) and trophy Sai Sudharsan Gujarat Titans Most Valuable Player ₹10 lakh (US$12,000) and trophy Suryakumar Yadav Mumbai Indians Orange Cap (most runs) ₹10 lakh (US$12,000) Sai Sudharsan Gujarat Titans Purple Cap (most wickets) ₹10 lakh (US$12,000) Prasidh Krishna Gujarat Titans Emerging player of the season ₹10 lakh (US$12,000) Sai Sudharsan Gujarat Titans Most fours ₹10 lakh (US$12,000) and trophy Sai Sudharsan Gujarat Titans Most sixes ₹10 lakh (US$12,000) and trophy Nicholas Pooran Lucknow Super Giants Most dot balls ₹10 lakh (US$12,000) and trophy Mohammed Siraj Gujarat Titans Highest batting strike rate ₹10 lakh (US$12,000), trophy and a car Vaibhav Sooryavanshi Rajasthan Royals Catch of the season ₹10 lakh (US$12,000) and trophy Kamindu Mendis Sunrisers Hyderabad Best pitch ₹50 lakh (US$59,000) Arun Jaitley Cricket Stadium, Delhi —N/a Team fairplay award ₹10 lakh (US$12,000) —N/a Chennai Super Kings Runners-up ₹12.5 crore (US$1.5 million) —N/a Punjab Kings Champions ₹20 crore (US$2.4 million) and IPL trophy —N/a Royal Challengers Bengaluru
-
இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல் --- --- --- *ஈரான் பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டமைக்கு பதிலடியா என பிரித்தானிய ஊடகம் கேள்வி! --- --- --- ஈரானுடன் இணைந்து செயற்படும் யெமன் (Yemen) நாட்டின் ஹூதி (Houthis) போராளிகள், இன்று சனிக்கிழமை இஸ்ரேல் மீது முதன் முதலாக ஏவுகணைத் தாக்குதல நடத்தியுள்ளதாக ரொய்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் ஆரம்பித்து நான்காவது வாரம் நிறைவடைந்து, ஐந்தாவது வாரம் ஆரம்பித்த போது, நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் என ரொய்டர்ஸ் நிறுவனம் விமர்சிக்கிறது. சில வாரங்களுக்குள் இராணுவ நடவடிக்கைகளை முடிக்க எதிர்பார்ப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ (Marco Rubio) கூறிய நிலையில், இத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரொய்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. ஆகவே, ஐந்தாவது வாரத்தில் நுழைந்துள்ள போரை ஹூதிகள், விரிவுபடுத்தி நீடிக்கும் அபாயம் தெரிகிறது. ஏனெனில் அனைத்து முனைகளிலும் "ஆக்கிரமிப்பு" முடியும் வரை தங்கள் நடவடிக்கைகள் தொடரும் என ஹூதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேவேளை, இஸ்ரேல் மீதான ஹூதிகளின் தாக்குதல், ஈரான் பாடசாலை மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இருக்கலாமோ என த கார்டியன் (theguardian) என்ற பிரித்தானிய ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது. யேமன் கடற்கரையில் உள்ள பாப் அல்-நீரிணை (Bab al-Mandab Strait ) சூயஸ் கால்வாயை (Suez Canal) நோக்கிய பிரதான கடல் போக்குவரத்து பாதையாகும். ஹார்மூஸ் நீரிணைப் பகுதியை ஈரான் பலமாக வைத்திருப்பதற்கு பாப் அல்-நீரிணை பிரதான பங்கு வகிக்கிறது. ஹர்மூஸ் நீரிணை பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்க வேண்டும் என்றும் பிரான்சில் நடைபெற்ற ஜீ -7 நாடுகள் கூட்டத்தில், அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியிருந்தார். குறிப்பாக, இந்த நீரிணை உலகளாவிய எண்ணெய் - இயற்கை எரிவாயு விநியோகத்தில், ஐந்தில் ஒரு பங்கிற்கு இலவச பாதையாக மாற்ற வேண்டும் என்ற தொனியில் அவர் கருதிட்டிருந்தார். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid013bcybpAeZ7cSqPCE6CP9XZHa8bcHmfY36W3FNiwibPH6yqeLdCMUM4TSCN6LzhFl&id=1457391262&mibextid=wwXIfr இவ்வளவு காலமும் இல்லாமல் புதிதாக இந்த தாக்குதல் தொடங்கியிருப்பது அமெரிக்க இஸ்ரேலுக்கு பெரும் தலையிடியாக அமையலாம்.
-
ஈழப்பிரியன் started following இஸ்ரேல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்
-
தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
திருப்பதி மட்டும் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருந்தால் திமுக ஆட்டையைப் போட்டு திருப்பதியானுக்கு மொட்டையடித்து பழனியாக்கியிருப்பார்கள். இங்குள்ள (யேர்மனியில்) கோயில்களில், தட்டில் விழுவது ஐயருக்கு, மற்றவை நிர்வாகத்துக்கு.கோயிலில் எங்கே சாமி இருக்கிறார்? ஆசாமிகள்தான் கோயிலை ஆக்கிரமித்திருக்கின்றார்கள்.
-
ஈரானில் தரைவழி தாக்குதல் இல்லாமலேயே இராணுவ நடவடிக்கையில் வெற்றி பெறுவோம்: மார்கோ ரூபியோ
ஈரானில் தரைவழி தாக்குதல் இல்லாமலேயே இராணுவ நடவடிக்கையில் வெற்றி பெறுவோம்: மார்கோ ரூபியோ 28 Mar, 2026 | 12:37 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) பிரான்ஸ் நாட்டின் அப்பயி டிஸ் வோக்ஸ்-டி-செர்னே நகரில் ஜி7 வெளியுறவு துறை அமைச்சர்களுக்கான கூட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமாகியது. இதில் உறுப்பு நாடுகள் பங்கேற்றன. இந்தக் கூட்டத்தில், மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையைப் பற்றி விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஹோர்ர்மூஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இணைந்து பணியாற்ற நெருங்கிய ஒருங்கிணைப்பை தொடரும் விதமாக உறுப்பு நாடுகள் ஒப்புதல் தெரிவித்தன. இதற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, “ஈரானின் அனைத்து இராணுவ திறன்களையும், அவற்றில் உள்ள கடற்படை, விமானப்படை, ஏவுகணைகள் மற்றும் ஏவுகலன்களை நாங்கள் அழித்து விடுவோம். எந்தவித தரை படை தாக்குதல் இல்லாமலேயே இதைச் சாதிப்போம்,” என்று தெரிவித்துள்ளார். மேற்காசியாவில், மோதலை முன்னிட்டு, 82-வது விமான படை பிரிவின் ஆயிரக்கணக்கான வீரர்களை அமெரிக்கா குவிக்க தயாராகி வருகிறது. சில மாதங்கள் அல்ல, இன்னும் சில வாரங்களிலேயே மோதல் முடிவுக்கு வரும் என ரூபியோ குறிப்பிட்டார். வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகையின் செய்தியின் படி, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழ்நிலையில் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை அனுப்ப அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. அனுப்பப்படும் படை தொகுதியில் கவச வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் போன்ற இராணுவ உபகரணங்களும் இடம்பெறும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெறுவதால் ஏப்ரல் 6-ஆம் திகதி வரை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் மேற்கொள்ளாது என டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்தக் காலத்தில் ஈரான் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு எதிரான எந்தவித இராணுவ தாக்குதல்களும் நடைபெறாது. https://www.virakesari.lk/article/242146
-
-
திமுகவால் நீட் விலக்கை சாத்தியமாக்க முடியாதது ஏன்?
'அப்பா, ரொம்ப கஷ்டப்படுத்தறேனா': திமுகவால் நீட் விலக்கை சாத்தியமாக்க முடியாதது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் (எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்) செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் வசித்து வந்த மாணவி தேவதர்ஷினிக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. 2021 ஆம் ஆண்டு பிளஸ்டூ படிப்பை அவர் நிறைவு செய்துவிட்டார். ஆனால், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை மூன்று முறை எழுதியும் அவர் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி தற்கொலையால் உயிரிழந்தார். அவரது பெற்றோரான செல்வராஜ்-தேவி தம்பதியினர் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் சிறிய அளவில் பேக்கரி ஒன்றை நடத்தி வருகின்றனர். பேக்கரி பெயரளவுக்கு இருந்தாலும் சமோசா தயாரித்து கடைகளுக்கு விற்கும் தொழிலில் செல்வராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த தம்பதியின் இரண்டு பெண் குழந்தைகளில் மூத்த மகள் தேவதர்ஷினி. மருத்துவம் படிக்க வேண்டும் என்பது சிறுவயது கனவாக இருந்து வந்ததாக கூறுகிறார் செல்வராஜ். "பிளஸ் 2 பொதுத்தேர்வில் என் மகள் 600க்கு 526 மதிப்பெண் வாங்கினார். முதல் ஆண்டு நீட் தேர்வில் சுமார் 200 மதிப்பெண்ணும் இரண்டாம் ஆண்டில் சுமார் 300 மதிப்பெண்ணும் வாங்கினார். மூன்றாவது முறையாக நீட் தேர்வை எழுதியபோது 476 மதிப்பெண்ணை தேவதர்ஷினி வாங்கினார். மூன்று முறையும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்தது. குடும்ப சூழல் காரணமாக அரசு ஒதுக்கீட்டுப் பிரிவில் மருத்துவம் படிப்பது தான் அவரது நோக்கமாக இருந்தது" என்றார் செல்வராஜ். 'இப்படியொரு முடிவை எதிர்பார்க்கவில்லை' படக்குறிப்பு,நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்த தேவதர்ஷினி மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கி தனியார் நீட் பயிற்சி வகுப்பில் அவரை செல்வராஜ் சேர்த்துள்ளார். "முதல் முறையாக நீட் பயிற்சி வகுப்பில் சேர்ப்பதற்காக 2 லட்ச ரூபாயைக் கட்டணமாக செலுத்தினேன். சமோசா விற்ற பணத்தில் குருவி சேர்ப்பதுபோல பணத்தைச் சேர்த்துக் கட்டினேன்" என்கிறார் அவர். "நான்காவது முறை நல்ல மதிப்பெண் வந்துவிடும் என உறுதியாக இருந்தார். அவரே லோன் செயலி மூலமாக கடன் வாங்கினார். இதற்கு மாதம் ஐந்தாயிரம் செலுத்தி வந்தேன்" என்கிறார் செல்வராஜ். கடந்த ஆண்டு நீட் தேர்வுக்கு ஏறக்குறைய ஒரு மாதகாலம் இருந்தபோது மார்ச் 28 அன்று மாலை தற்கொலையால் உயிரிழந்தார். "அன்று வகுப்பில் இருந்து வந்ததில் இருந்தே சோகமாக இருந்தார். சமோசா தயாரித்துக் கொண்டிருந்த என்னிடம் 'அப்பா, உன்னை ரொம்பவும் கஷ்டப்படுத்தறேனா?' எனக் கேட்டார். 'அப்படியெல்லாம் இல்லை. நீ நிச்சயம் ஜெயிப்பாய்' என்றேன்" எனக் கூறுகிறார். படக்குறிப்பு,தேவதர்ஷினியின் தந்தை செல்வராஜ் "ஆனால் இப்படியொரு முடிவை என் மகள் எடுப்பாள் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை" எனக் கூறி கதறியழுத செல்வராஜ், "நாங்கள் அடைந்த துன்பத்தை யாரும் அடையக் கூடாது. இதைவிட பெற்றோருக்கு வேறு என்ன கஷ்டம் வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார். "நீட் தேர்வு தொடர்பாக எந்தச் செய்தியை பார்த்தாலும் என் மகள்தான் நினைவுக்கு வருகிறார். நீட் தேர்வுக்காக எத்தனையோ பேர் உயிரிழந்துவிட்டனர். அரசுகள் கொண்டு வரும் சட்டங்களால் ஏழைக் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்" என அவர் கூறுகிறார். '5 ஆண்டுகளில் 19 மரணங்கள்' பட மூலாதாரம்,X/EDAPPADI PALANISAMY படக்குறிப்பு,எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்) தேவதர்ஷினியைப் போலவே நீட் தேர்வு காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் 19 மாணவ, மாணவிகள் உயிரிழந்ததாக, பெயர்களை தனது எக்ஸ் தள பதிவில் பட்டியலிட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சொல்லப் போகும் பதில் என்ன?' என கேள்வி எழுப்பியிருந்தார். மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி ஆட்சியில் இருந்த போதே நீட் தேர்வு முன்னெடுக்கப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2017 ஆம் ஆண்டுதான் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு அரியலூரில் மாணவி அனிதா உயிரிழந்தது தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில், 'ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவோம்' என, தி.மு.க பிரசாரம் செய்தது. தி.மு.க அரசு செய்தது என்ன? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை தி.மு.க அரசு அமைத்தது. அந்தக் கமிட்டி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி நிராகரித்தார். 2022 ஆம் ஆண்டு மீண்டும் அதே மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு தி.மு.க அரசு அனுப்பியது. இந்த முறை மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பினார். இந்த மசோதாவும் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 'பா.ஜ.க தான் காரணம்' படக்குறிப்பு,தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காமல் இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க உள்ளதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளரும் வழக்கறிஞருமான சரவணன் அண்ணாதுரை. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "மத்திய அரசு இயற்றும் சட்டத்துக்கு மாநில அரசுகளால் விலக்கு பெற முடியும். அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு வழிவகைகள் உள்ளன" என்கிறார். "பொதுப் பட்டியலில் கல்வி இருப்பதால் மாநில அரசுகள் விலக்கு கேட்கலாம். அவ்வாறு நீட் தேர்வுக்கு விலக்கு கொடுக்கப்பட்டால் தி.மு.க அரசுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நோக்கில் திட்டமிட்டு பா.ஜ.க அரசு தடுத்து நிறுத்துகிறது" என்கிறார் அவர். தொடர்ந்து பேசிய சரவணன் அண்ணாதுரை, "நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்பது என்பது தி.மு.கவின் விருப்பம் அல்ல. தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக அது உள்ளது. அதனை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மதிக்கவில்லை" என்கிறார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார், தமிழ்நாடு பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி. 'தி.மு.க அரசுக்கு ஏற்பட்ட சரிவு' படக்குறிப்பு,தமிழ்நாடு பா.ஜ.க தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி "சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதா, சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லாவிட்டால் திருப்பி அனுப்பிவிடுவார்கள். தி.மு.க அரசு நிறைவேற்றிய மசோதா சட்டத்துக்கு உட்பட்டதாக இல்லை" என்கிறார் அவர். நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகளில் பல்வேறு சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாகக் கூறும் நாராயணன் திருப்பதி, "இதன் காரணமாகவே தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்" எனக் கூறுகிறார். "தேர்தல் பிரசாரத்தில், 'ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம்' என தி.மு.க தலைவர் கூறினார். ஆனால், அவ்வாறு நிறைவேற்ற முடியாததை அக்கட்சிக்கு ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாக பார்க்கிறேன்" என்கிறார் நாராயணன் திருப்பதி. நீட் தேர்வுக்கு சாதகமாக நீதிமன்ற உத்தரவுகள் இருந்ததாகக் கூறும் நாராயணன் திருப்பதி, "நீட் விலக்கு தொடர்பாக தி.மு.க அரசு முன்வைத்த வாதங்களை உச்ச நீதிமன்றம் புறம்தள்ளிவிட்டது." என்கிறார். நீட் - கள நிலவரம் 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய1,35,715 மாணவர்களில் 76,181 (56.13 சதவீதம்) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதுவே 2024 ஆம் ஆண்டில் 1,52,919 பேர் நீட் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 89,198 பேர் (58.33 சதவீதம்) தேர்ச்சி பெற்றனர். "காலம் செல்லச்செல்ல நீட் மிகச் சிறந்த நிலையை எட்டும்" எனக் கூறும் தமிழ்நாடு பா.ஜ.க தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுகளை சிலர் முன்வைத்தனர். அவை சரிசெய்யப்பட்டுவிட்டன" என்கிறார். அ.தி.மு.க ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை சுட்டிக்காட்டிய நாராயணன் திருப்பதி, " அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகளவில் மருத்துவம் படிப்பதற்கு இது ஒரு காரணமாக அமைந்தது. நீட் தேர்வை ஒன்றும் செய்ய முடியாது எனத் தெரிந்தும் திட்டமிட்ட ரீதியில் தி.மு.க பிரசாரம் செய்தது" என்கிறார். "மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் நீட் தேர்வு ரத்தாகிவிடும் எனக் கூறவில்லை. ஆனால், போலியான நம்பிக்கையை மக்கள் மத்தியில் தி.மு.க விதைத்தது" எனவும் அவர் விமர்சித்தார். இதனை மறுக்கும் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் சரவணன் அண்ணாதுரை, "நீட் விலக்கு தொடர்பாக தி.மு.க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது. ஆனால், தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்" என்கிறார். "நீட் விலக்கு கேட்பது என்பது சமூகநீதிப் போராட்டம். இதை தி.மு.க அரசு ஒருபோதும் கைவிடாது. இந்த தேர்தலிலும் நீட் விலக்கு பிரசாரத்தை முன்னெடுப்போம்" எனவும் அவர் தெரிவித்தார். 'மருத்துவம் மட்டுமே படிப்பு அல்ல' படக்குறிப்பு,சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் சாந்தி "நீட் தேர்வில் விலக்கு கேட்பதை மாநிலத்தில் ஒரு கட்சியின் பிரச்னையாக பார்க்கக் கூடாது" என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலாளர் சாந்தி. "மாநில அரசின் செலவில் இயங்கும் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான உரிமையாக இதைப் பார்க்க வேண்டும்" என்கிறார் அவர். "அதேநேரம், கல்வி, வேலைவாய்ப்பில் போட்டித் தேர்வுகளைத் தவிர்க்க முடியாது. அதற்கேற்ப மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் சாந்தி. "பெற்றோர் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போது தான் நீட் தேர்வு அச்சம் காரணமாக ஏற்படும் தற்கொலை உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்" எனவும் அவர் தெரிவித்தார். மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம். சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019 - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnv8qpr6637o
-
நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது – அரசியல் அதிர்ச்சி !
நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது – அரசியல் அதிர்ச்சி ! 28 Mar, 2026 | 09:47 AM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்ற பாலன் ஷா (Balen Shah) தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நேபாளத்தில் இடம்பெற்ற ‘Gen Z’ இளைஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. அந்த போராட்டங்களின் போது சுமார் 77 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களாக முன்னாள் பிரதமர் ஒலி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதே வழக்கில் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் லேக்காக் (Ramesh Lekhak ) காவலில் எடுக்கப்பட்டுள்ளார். நேபாளத்தின் தேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளின் பக்தாபூர் மாவட்டத்தின் குண்டு பகுதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்த சர்மா ஒலி அதிகாலை 5 மணியளவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டிற்குள் நுழைந்த பொலிஸார் திடீரென இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். பாலன் ஷா பிரதமராக பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது நேபாள அரசியலில் பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. நேபாள தேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கைது நடவடிக்கை நேபாள அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/242135
-
அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான தொழிற்சாலைகளை உடனடியாக காலி செய்யுங்கள்: ஈரானின் புரட்சிகர காவலர்களின் எச்சரிக்கை
அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான தொழிற்சாலைகளை உடனடியாக காலி செய்யுங்கள்: ஈரானின் புரட்சிகர காவலர்களின் எச்சரிக்கை Published By: Vishnu 28 Mar, 2026 | 04:28 AM அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புகளைக் கொண்ட பிராந்திய தொழிற்சாலைகளின் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானில் உள்ள ஒரு கனநீர் ஆலை மற்றும் 'மஞ்சள் கேக்' உற்பத்தி ஆலையை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்கப் பங்குதாரர்களைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலை ஆதரிக்கும் பிராந்தியத்தில் உள்ள கனரக தொழிற்சாலைகள் மீது தங்கள் போராளிகள் பதிலடி கொடுப்பார்கள் என்று IRGC எச்சரித்துள்ளது. சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தாக்குதல்கள் முடியும் வரை, குறிவைக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் (1 கி.மீ) சுற்றளவில் வசிக்கும் பொதுமக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/242129
-
அதிகரிக்கும் வெப்பம்: மே 25 வரை நீடிக்கும் என எச்சரிக்கை
நிலவும் வெப்பமான வானிலை : பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை 28 Mar, 2026 | 01:04 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இலங்கையின் பல பகுதிகளில் சனிக்கிழமை (28) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது 'எச்சரிக்கை மட்டத்தில்' (Caution Level) நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.South Asians & Diaspora மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் வெப்பச் சுட்டெண் (Heat Index) 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை காணப்படலாம் என திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார். வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பநிலையை 39 - 45°C 'எச்சரிக்கை' (Caution) நிலை , 46 - 52°C: 'தீவிர எச்சரிக்கை' (Extreme Caution) நிலை , 52°C க்கும் மேல் 'அபாயம்' (Danger) நிலை என வகைப்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (27) பதிவான அதிகபட்ச வெப்பநிலை குருணாகல் மாவட்டத்தில் 37.8°C பதிவாகியுள்ளது. தற்போதைய வெப்பமான காலநிலை சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க எச்சரித்துள்ளார். அதிக வெப்பத்தினால் உடல் நீர்ச்சத்து குறைதல், வெப்பத்தினால் ஏற்படும் தளர்ச்சி , வெப்பத்தாக்கம் அல்லது மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள் காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும். வெளியில் செல்லும்போது தொப்பி, வெயில் கண்ணாடி அணிவதோடு, வெப்பத்தை உறிஞ்சாத வெளிர் நிறத்திலான தளர்வான ஆடைகளை அணியவும். தாகம் எடுக்காவிட்டாலும், சீரான இடைவெளியில் அதிகளவு தண்ணீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும். மயக்கம், அதிகப்படியான வேர்வை அல்லது கடும் சோர்வு ஏற்பட்டால், உடனடியாக குளிர்ந்த இடத்திற்குச் செல்லவும். நிலைமை தொடர்ந்தால் மருத்துவ உதவியை நாடவும். https://www.virakesari.lk/article/242149
-
தபால் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி : பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தபால் திணைக்களத்தின் பெயரில் நிதி மோசடி : பொதுமக்களுக்கு எச்சரிக்கை 28 Mar, 2026 | 12:33 PM ( இணையத்தள செய்தி பிரிவு) தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடி குறித்து இலங்கைத் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களுக்கு ஒரு பொதி (Parcel) வந்துள்ளதாகவும், அதனைப் பெற்றுக்கொள்ள ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்றும் கூறி மோசடியாளர்கள் குறுஞ்செய்திகளை அனுப்புகின்றனர். அந்தச் செய்தியில் உள்ள போலி இணையதள இணைப்பை (Link) கிளிக் செய்யுமாறும் கோரப்படுகின்றனர். இணைப்பை கிளிக் செய்ததும், வங்கி அட்டைகளின் விபரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுகிறது. அவ்வாறு விபரங்களை வழங்கியதும், பாதிக்கப்பட்டவர்களின் வங்கித் கணக்குகளிலிருந்து பணம் திருடப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதோடு, இது தொடர்பாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைத் தபால் திணைக்களம் இது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளது. சந்தேகத்திற்கிடமான எந்தவொரு இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும், தெரியாத நபர்களுக்கோ அல்லது இணையதளங்களுக்கோ உங்களது வங்கி அட்டை விபரங்கள் அல்லது OTP குறியீடுகளை வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு இலங்கைத் தபால் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/242145
-
ஈரானுடன் இந்த வாரம் பேச்சுவார்த்தை! -அமெரிக்காவின் விசேட தூதூவர்.-
ஆமைக்கு ஏதிராக ஈரானுடன் பலர் புகுந்துவிளையாடுகின்றார்கள், ஆமை இதில் வென்றால்தான் நல்லது, பேச்சுவார்த்தையில் போய்யென்றாலும்
-
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்
வியட்நாம் சண்டை பற்றிய படங்களைப் பார்த்தால் அமெரிக்கா தோற்றதாக சொல்லமாட்டார்கள்.
-
சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் தாக்குதல் – 10 அமெரிக்கப் படையினர் காயம்
அமெரிக்கா வியாட்னமில் சந்தித்தைவிட பல மடங்கு தோல்வியை இந்த போரினால் சந்திக்க போகின்றது😇, அதனை விலையை நாமும் செலுத்த வேண்டியுள்ளது , ஒரு மூளை பிசகின ஒருவரால் ஆமையை முதல் ஆண்டவர் நடக்கமுடியாமல் தடுக்கி விழுந்தார், இப்ப இருக்கின்றா ஆமையின் தலைவார் வாயால் வழுக்கி விழுகின்றார், ஓவ்வொரு சட்டியருக்கும் சேடம் இழுக்கும் போது ஞானம் வரும் இந்த ஆமை தலைவருக்கு இன்னும் அந்த ஞானம் வரவில்லையே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
நேற்றுவரை பாஜகவுடன் கூட்டணிவைத்திருந்த தேதிமுகவுக்கு கடந்த தேர்தலில் அதுவும் அமமுகவுடன் கூட்டணிவைத்து 0.43 வீத வாக்குகள்தான் அதற்கு 10+1 ராஜ்ய சபா கொடுத்த திமுகவினர்.பாஜக கூட்டணியில் சேரமாட்டாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் இரு கம்னியூஸ்ட்டுகள்>விசிக>மநீம> தவாகவுக்கு குநறந்த இடங்களைக் கொடுத்திருப்பது. தெலுங்கு பாசத்தைத்தவிர வேறு எதைச் சொல்வது. 2.8 வீத வாக்குகளை கொண்ட மநீமய்யத்துக்கு உதய~ரியனில் நிற்க வற்புறுத்தியதால் மனமுடைந்து தேர்தலில் நிற்பதையே புறக்கணித்து விட்டார். தமிழர்களைப்புறக்கணித்து தெலுங்கர்களை அரவணைத்திருக்கிறது திமுக.
-
புலவர் started following சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தத்தை நெஞ்சம் .......சர்வர் சுந்தரம் . ......கே.ஆர் விஜயா......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ..........! இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் ஆண் : தேன் சிந்துதே வானம்…….. உனை எனை தாலாட்டுதே….. மேகங்களே தரும் ராகங்களே…… எந்நாளும் வாழ்க ஆண் : பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள் பனிமேடை போடும் பால் வண்ண மேனி பனிமேடை போடும் பால் வண்ண மேனி கொண்டாடுதே சுகம் சுகம்……. பருவங்கள் வாழ்க பெண் : வைதேகி முன்னே ரகு வம்ச ராமன் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் விளையாட வந்தான் வேறென்ன வேண்டும் சொர்க்கங்களே வரும் தரும்… சொந்தங்கள் வாழ்க ஆண் : கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும் பெண் : கையோடு கைகள் உறவாட வேண்டும் ஆண் : கன்னங்களே இதம் பதம்…….. காலங்கள் வாழ்க .........! ...... தேன் சிந்துதே வானம் ……..
-
அமெரிக்காவின் போர் நிறுத்த திட்டத்தை இரான் நிராகரிப்பது ஏன்?
ஈரானின் நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே, அதற்கு என ஒரு இறையாண்மை உள்ளது, ] 👆 இவர் உண்மையில் தெரிந்து தான் சொல்கின்றாரா 🙄 நிபந்தனைகளில் ஒன்று ஹோர்முஸ் கால்வாயை ஈரானிடம் நிரந்தரமாகவே கொள்ளையடித்து கப்பம் பெற்று கொள்ள ஒப்படைக்க வேண்டும் அடுத்தது ஈரானால் உருவாக்கபட்டு வழிநடத்தபடும் முஸ்லிம் மத பயங்கரவாத அமைப்புக்களாள ஹிஸ்புல்லா ஹமாஸ் ஹவுதி இவர்களை யாரும் இனி தாக்ககூடாது