Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இங்கிலாந்து கொஞ்சம் கஷ்டப்படுகிறது போல இருக்குது. 6.4 ஓவரில் 43-2
  3. வடக்கில் தேசிய மக்கள் சக்தி காலூன்றியது எப்படி? - ஆர்வத்துடன் செவிமடுத்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி 22 Feb, 2026 | 02:45 PM (நா.தனுஜா) முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி வடக்கில் காலூன்றுவதற்கு வழிவகுத்த பின்னணிக் காரணங்கள் குறித்து பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் ஆர்வமாகக் கேட்டறிந்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் நாட்டுக்கு வருகைதந்திருந்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் சிவில் சமூகத்தின் சார்பில் கலாநிதி அகிலன் கதிர்காமர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, சட்டத்தரணி கௌதமன், பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் நபீலா இக்பால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் அவற்றிலிருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள், சிறுபான்மையின மக்களின் உரிமைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதற்குப் பதிலீடாக முன்மொழியப்பட்டுள்ள புதிய வரைவு, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படாமை, மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் தொடரும் காலதாமதம், புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் நிலவும் பின்னடைவு, முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அதேவேளை முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களின்போது வடக்கில் காலூன்றுவதற்கு வழிகோலிய காரணிகள் குறித்து பிரித்தானிய பிரதி பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அதனை அவ்வப்போது கேள்விகள் எழுப்பி ஆர்வத்துடன் கேட்டறிந்த பிரதி பிரதமர் டேவிட் லமி, இம்மாற்றத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் தொடர்பிலும் கேட்டறிந்தார். https://www.virakesari.lk/article/239301
  4. இலங்கையை உலுக்கிய இரட்டைக் கொலை: துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர்..! அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பாக கைதான துப்பாக்கிதாரி முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சந்தேகநபர் பத்தேகமவைச் சேர்ந்த 46 வயதானவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் சந்தேகநபர் 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சட்டபூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, சந்தேகநபரிடமிருந்த குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசியொன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நீதிமன்றில் முன்னிலை இந்த நிலையில் அவர் இன்றைய தினம் (22) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். அக்குரேகொட பகுதியில் காரில் வைத்து சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் துப்பாக்கிதாரி என கூறப்படும் சந்தேகநபர் அம்பலாங்கொடவில் வைத்து நேற்று (21) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/akkuregodda-shooting-incident-suspect-1771730111
  5. அதுசரி, ராஜபக்ச குடும்பத்தினரின் ஊழல்கள் தூசு தட்டப்படும்போது மட்டும் ஏன் இந்தபிக்குகள் புத்தரை தூக்கிக்கொண்டு குதிக்குதுகள்?
  6. டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம் 22 Feb, 2026 | 12:51 PM (நா.தனுஜா) இந்திய விஜயத்தின்போது 13 ஆவது திருத்தம் குறித்தோ, அதிகாரப்பகிர்வு குறித்தோ பேசப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று எமக்குத் தெரியாது. ஆனால் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு அப்பால் மாகாணசபைத்தேர்த்லை விரைந்து நடாத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார். இதுபற்றிக் கருத்துரைத்த சுரேஷ் பிரேமசந்திரன், வழமையாக இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின்போது அழுத்தமாகவும், அன்றேல் மேலோட்டமாகவேனும் இவ்விடயங்கள் குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கும் நிலையில், இம்முறை இதுபற்றிப் பேசப்படவில்லை என அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறுவது எந்தளவுக்கு உண்மையாக இருக்கக்கூடும்? என சந்தேகம் வெளியிட்டார். அதேவேளை டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் இந்தியாவே பதிலளிக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் இவ்விடயத்தில் இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்தாலும், பிரயோகிக்காவிட்டாலும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும், அதனை விரைந்து நிறைவேற்றவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/239282
  7. Rukmani Palaniappan ·oodntpeSrsu6m5tm7i7cml260076c2gat39mfgfa2lltcfi8u 2c1ah6lh6t · வாலி- துரத்தி விட்ட 3 அசிஸ்டெண்ட்ஸ்.. நாளடைவில் சினிமாவையே ஆட்சி செய்யும் டைரக்ட்டர்களான அதிசயம்!! கடந்த 1967ஆம் ஆண்டு தன்னிடம் மூன்று பேர் உதவியாளராக சேர முயன்றனர் என்றும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் படிப்படியாக முன்னேறி மிகப்பெரிய இயக்குனர் ஆகினர் என்றும் கவிஞர் வாலி பேட்டி ஒன்றில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறியுள்ளார். கவிஞர் வாலி ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். தந்தை இறந்த நேரம் தாயும் நோய்வாய் படுக்கையில் இருந்த நேரம், தன்னுடைய வயிற்று சாப்பாட்டிற்கு கூட சம்பாதிக்க முடியாத நிலை இருந்தது. அந்த நேரத்தில் அவருக்கு ஒரு சில பாடல்கள் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. கவியரசு கண்ணதாசன் உச்சத்தில் இருந்ததால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கண்ணதாசனுக்கு மட்டுமே பாடல் எழுத வாய்ப்பு கொடுத்தனர். இந்த நிலையில்தான் ‘நல்லவன் வாழ்வான்’ என்ற படத்திற்காக வாலி ஒரு பாடல் எழுதினார். எதையும் தாங்கும் இதயம் என்ற அந்த பாடல் நல்ல ஹிட் ஆனாலும் அதன் பிறகு வாலிக்கு பாடல்கள் வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை. இந்த நிலையில் இனி சினிமாவே வேண்டாம். மதுரைக்கு போய் விடுவோம் என்று வாலி முடிவு செய்தார். மதுரையில் டிவிஎஸ் கம்பெனியில் தனது நண்பர் வேலை பார்த்ததால் அவரிடம் சொல்லி ஒரு வேலை தேடிக் கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்தார். அவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு செல்லும்போது தான் அவரை பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் சந்திக்க வந்தார். எங்கே செல்கிறீர்கள் என்று அவர் கேட்டபோது, ‘இனிமேல் எனக்கு சினிமா வேண்டாம், நான் மதுரை செல்கிறேன்’ என்று வாலி கூறினார். பிபி ஸ்ரீனிவாஸ் அப்போது, ‘இந்த பாடலை நீ ஒரு முறை கேள், அதன்பிறகு நீ மதுரை செல்ல வேண்டும் என்று முடிவு செய்தால் நான் தடுக்க மாட்டேன்’ என்று கூறினார். அந்த பாடல் கண்ணதாசன் எழுதிய ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும் என்ற வரியை கேட்டதும் இனி சினிமாவிலேயே போராடுவது என்று வாலி முடிவு செய்தார். அதன் பின்னர்தான் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் சினிமாவின் உச்சத்திற்கு சென்றார். இந்த நிலையில் தான் திடீரென கண்ணதாசனிடம் உதவியாளராக சேர வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. மாதம் 300 ரூபாய் சம்பளம் என்றும் பேசப்பட்டது. இந்த வாய்ப்பை கண்ணதாசனிடம் கேட்டு வாலிக்கு வாங்கி கொடுத்தவர் இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். ஆனால் அந்த வாய்ப்பை வாலி மறுத்துவிட்டார். ஏன் என்று கேட்டபோது, ‘நான் கண்ணதாசனுக்கு எதிராக கடைவிரிக்க வந்திருக்கிறேன், அவரிடமே போய் உதவியாளராக இருந்தால் என்னுடைய தனித்தன்மை போய்விடும். ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்தால் கடைசி வரைக்கும் காஜா போட தான் வைப்பார்கள். மிஷினில் உட்கார விடமாட்டார்கள். அதேபோல் நான் கண்ணதாசனின் உதவியாளராக சென்றால் கடைசி வரை உதவியாளராகவே இருக்க வேண்டிய நிலை ஏற்படும், என்னுடைய தனித்தன்மை போய்விடும். இருக்கிற தமிழ் கொஞ்சமாக இருந்தாலும் அதை எப்படி காசு பண்ண வேண்டும் என்று பார்க்க வேண்டுமே தவிர, ஒருவரிடம் உதவியாளராக வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை’ என்று கூறினார். இதனால் ஜி.கே.வெங்கடேஷ் அதிர்ச்சியடைந்து, ‘நீ உருப்படவே மாட்டாய்’ என்று சாபம் விட்டு சென்றார். அன்றைக்கு வாலி எடுத்த முடிவு மிகச் சரியானது என்பது போகப் போக தெரிய வந்தது. அன்றைக்கு மட்டும் அவர் கண்ணதாசனிடம் வேலைக்கு சேர்ந்திருந்தால் அவருடைய தனித்தன்மை மறைந்திருக்கும். கடைசி வரை கண்ணதாசனிடம் அவர் உதவியாளராக இருந்திருப்பார். இந்த நிலையில்தான் தன்னிடம் யாரும் உதவியாளராக வேலை கேட்டு வந்தால் அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்தார். மேலும் தன்னிடம் உதவியாளராக சேர்ந்தால் கடைசி வரை அவர்கள் உதவியாளராக இருக்க நேரிடும் என்பதுதான் அவர் அனுபவத்தில் கற்ற பாடம். இந்த நிலையில்தான் மூன்று பேர் தன்னிடம் உதவியாளராக சேர வாய்ப்பு கேட்டு வந்தனர் என்றும், ஆனால் நான் மூவரையுமே சேர்த்து கொள்ள மறுத்துவிட்டேன் என்றும் வாலி கூறியிருந்தார். ஆனால் அதன் பிறகு அந்த மூவருமே தட்டு தடுமாறி திரையுலகில் வெற்றி பெற்றனர். அந்த மூவர்தான் கங்கை அமரன், ராம நாராயணன், மற்றும் ஆர்.சி.சக்தி. பின்னாளில் இந்த மூவரின் படங்களுக்கும் நான் பாடல்கள் எழுதினேன் என்றும் வாலி கூறினார். மேலும் என்னிடம் நீங்கள் உதவியாளராக சேர்ந்திருந்தால் இந்த அளவுக்கு பெரிய இயக்குனராக வந்திருக்க மாட்டீர்கள், இது நான் அனுபவத்தில் கற்ற பாடம், எதனால் நான் உங்களை உதவியாளராக சேர்க்கவில்லை என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று அவர்கள் முன்னிலையிலேயே வாலி கூறினார். நமக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த திறமையை வைத்து, நாமாக முன்னேற வேண்டுமே தவிர இன்னொருவருக்கு உதவியாளராக இருந்து நமது திறமையை வீணடிக்க கூடாது என்ற வாலியின் வாழ்க்கை பாடம் நம் அனைவருக்குமே பொருந்தும்......!
  8. ஆவடி வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரியில் 23-ஆவது பட்டமளிப்பு விழா 07/02/2026 அன்று காலை 10.30 மணிக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது. கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவைக் கல்லூரியின் நிறுவனத் தலைவர் கர்னல் டாக்டர் வேல் ஸ்ரீ ஆர்.ரங்கராஜன் அவர்கள் தலைமை தாங்கித் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.வி.கே.சாந்தி அவர்கள் வரவேற்புரை நல்கிக் கல்லூரி ஆண்டறிக்கையினை வாசித்தார். அவர் பேசும்பொழுது, “கல்லூரி என்பது உலகின் “கல்லூரி என்பது உலகின் முன்னேற்றத்தோடு தனிநபர் வாழ்க்கையை ஒன்றிணைக்கும் மாபெரும் இடமாக இருக்கிறது. அதனை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். கல்லூரித் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி.ரங்கராஜன் மகாலட்சுமி கிஷோர் அவர்கள் மற்றும் வேல்டெக் கல்விக் குழுமத்தின் துணை இயக்குநர் Ms.எஸ்கந்த கிஷோர் வேல் ஆகியோர் முன்னிலை உரையாற்றினார். சென்னை டி சி எஸ் நிறுவனத்தின் வணிக அலகு துறையின் பொதுமேலாளர் மற்றும் தலைவர் திரு.தீபக்நாதன் அவர்கள் விழாவில் கலந்து கொண்டு, பட்டமளிப்பு தினச் சிறப்புரை ஆற்றி, பட்டதாரிகளுக்குப் பட்டச் சான்றிதழ்களை வழங்கித் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசும் பொழுது, “மாணவர்கள், ஸ்மார்ட் ஃபோனைப் போல காலத்திற்கு ஏற்றவாறு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.“ என்றார். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 389 பேர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன. கணினியியல் துறை மாணவர்கள் 85 பேர்களுக்கும், கணினிப் பயன்பாட்டியல் துறை மாணவர்கள் 113 மாணவர்களுக்கும், வணிக நிர்வாகவியல் துறை மாணவர்கள் 43 பேர்களுக்கும், வணிகவியல் துறை மாணவர்கள் 132 பேர்களுக்கும் இளங்கலைப் பட்டங்கள் வழங்கப் பெற்றன. முதுகலை வணிகவியல் துறை மாணவர்கள் 16 பேர்களுக்கு முதுகலைப் பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பட்டம் பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் கல்லூரிப் பேராசிரியர்களும் பெருமளவு கலந்து கொண்டனர். பேராசிரியர் டாக்டர் S.தீர்த்தமலை அவர்களும் பேராசிரியை டாக்டர் D.ஹேமலதா அவர்களும் பட்டமளிப்பு விழாவினை ஒருங்கிணைப்புச் செய்தனர்.
  9. பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் மிகவும் சிந்திக்கத்தக்க ஒரு சுய மதிப்பீடு ........! sooStrnepd6m:9172u4393l0c7av821f74im3e1i,h1t9r r0ua3805 21éh · அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையால் பெரும் தவறுகளைச் செய்துவிட்டேன்!" - இந்தியப் பயணத்தில் மனம் திறந்த பிரான்ஸ் அதிபர் மக்ரோன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தற்போது இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். புதுடெல்லியில் இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், தனது ஆட்சிக் காலத்தில் செய்த தவறுகள் குறித்தும், தனது தனிப்பட்ட ஆசைகள் மற்றும் காதல் குறித்தும் மிகவும் வெளிப்படையாகப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. "எப்போதெல்லாம் எனக்கு என் மீது அதீத நம்பிக்கை இருந்ததோ, அப்போதெல்லாம் நான் தவறுகளைச் செய்திருக்கிறேன்; அதுவும் மிகப்பெரிய தவறுகளைச் செய்திருக்கிறேன்," என்று அதிபர் மக்ரோன் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு உதாரணமாகத் தனது மேடைப் பேச்சுகளைச் சுட்டிக்காட்டிய அவர், "நாம் நினைத்ததை எல்லாம் பேசிவிடலாம் என்று கருதிப் பேசும்போது, அது பல நேரங்களில் மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. பின்பு அதற்காக நாம் பெரிதும் வருந்த நேரிடுகிறது. நமது பேச்சை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற கவனிப்பு குறையும்போதுதான், இந்த அதீத தன்னம்பிக்கை தலைதூக்குகிறது," என்று தனது முந்தைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். "உங்களுக்கு இப்போது 25 வயதாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?" என்ற சுவாரஸ்யமான கேள்விக்குச் சற்றும் தயங்காமல் பதிலளித்தார் அதிபர். "கலை மற்றும் படைப்பாற்றல் துறையில் எனது திறமைகளை வளர்த்துக்கொண்டிருப்பேன். முற்றிலும் தனித்துவமான ஒன்றைச் செய்திருப்பேன்," என்று கூறிய அவர், பல ஆண்டுகளாகத் 'தரவு அறிவியல்' (Data Science) படிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும், ஆனால் அதை இன்னும் தொடங்கவில்லை என்றும் புன்னகையுடன் குறிப்பிட்டார். இன்றைய இளைய தலைமுறையினரின் நிலை குறித்துத் தனது ஆழ்ந்த கவலையையும் அவர் வெளிப்படுத்தினார். "பருவநிலை மாற்றம், இயற்கை வளங்கள் அழிவு, உலகெங்கும் நடக்கும் போர்கள், நாடுகளுக்கிடையே இல்லாத ஒற்றுமை மற்றும் அசுர வளர்ச்சியடையும் தொழில்நுட்பங்கள் எனப் பலவிதமான அழுத்தங்களுக்கு இன்றைய இளைஞர்கள் ஆளாகியுள்ளனர். இதனால், அவர்களின் இளமைக்காலத்திற்கே உரித்தான கள்ளங்கபடமற்ற தன்மை தொலைந்துவிட்டது வருத்தமளிக்கிறது," என்றார். முடிவாக, "உங்கள் காதல் கதையை 60 விநாடிகளில் சொல்ல முடியுமா?" என்று நெறியாளர் கேட்டபோது, அதிபரின் பதிலில் கவித்துவம் எட்டிப்பார்த்தது. "காதல் என்பது முற்றிலும் எதிர்பாராமல் நடப்பது; அது முன்கூட்டியே எழுதி வைக்கப்பட்டதல்ல. அதை மிக ஆழமாக, முழுமையாக வாழ்ந்து பார்க்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து செல்லும் மிக முக்கியமான உணர்வு அதுதான். ஒவ்வொருவரின் காதலும் முற்றிலும் தனித்துவமானது; அதை வேறெந்தக் காதலுடனும் ஒப்பிட முடியாது," என்று நெகிழ்ச்சியாகப் பதிலளித்து நேர்காணலை நிறைவு செய்தார் அதிபர் மக்ரோன் .......!
  10. Today
  11. புங்குடுதீவில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் 6 மதத்திற்கு பின்னர் கைது! யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் நபர் ஒருவரை வெட்டி கொலை செய்ததுடன் , நால்வருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் ஒருவர் சுமார் 06 மாத கால பகுதியின் பின்னர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற கத்தி குத்து தாக்குதலில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 40 வயதுடைய அற்புதராசா அகிலன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். தாக்குதல் சம்பவத்தினை தடுக்க முற்பட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் தாக்குதலாளிகள் தாக்குதலை மேற்கொண்டதில் அவர்களும் படுகாயமடைந்திருந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை அடையாளம் கண்டு , அவர்களை கைது செய்வதற்கான நடவாடிக்கைகளை முன்னெடுத்த வேளை நால்வரும் தலைமறைவாகியிருந்தனர். தலைமறைவானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்ட வேளை, சந்தேகநபர்களில் ஒருவர் முல்லைத்தீவு காட்டு பகுதியை அண்மித்த பகுதியில் நடமாடுவதாக அறிந்து , அங்கு விரைந்த பொலிஸார் கடந்த செப்டெம்பர் மாதம் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் ,06 மாத கால பகுதிக்கு பின்னர் மற்றுமொரு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதேவேளை ஏனைய இருவரில் ஒருவர் வெளிநாடொன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் , மற்றைய நபரை கைது செய்வதற்கு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2026/1465786
  12. அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்புக்கு நீதி கோரி யாழில் போராட்டம்! அல்லைப்பிட்டியில் பொலிசாரால் சுட்டுக்கொ*லை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று(22) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அல்லைப்பிட்டி பகுதியில் ஹயஸ்வாகனத்தில் பயணித்த வேளை பொலிசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அல்வினோ அருள்பயாஸ் (வயது 17) இவரின் குடும்பத்தாருக்கு பொலிசாரால் தொடர்ச்சியான அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், பொலிஸ் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் பொலிஸார் தம்மை கண்காணித்து வருகின்றதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுவரை சுட்டுக் கொலை செய்த பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1465793
  13. உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை! உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் நீர்ப்பாசன துறையில், இளநிலை பொறியாளராக பணிபுரிந்தவர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் 2010 – 20 வரை சித்ரகூட் மற்றும் பாண்டா பகுதியைச் சேர்ந்த சிறுவர்களை, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ எடுத்து சட்ட விரோத இணையதளங்களுக்கு விற்றுள்ளனர். சிறுவர் ஆபாச வீடியோ தொடர்பாக, உத்தர பிரதேச சைபர் கிரைம் பொலிஸார் நடத்திய சோதனையில், குறித்த தம்பதியின் கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்தது. உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை, இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்லைன் கேம் விளையாட வைப்பது, சாக்லேட், இனிப்புகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை தருவது என, பலவிதமாக ஆசைக்காட்டி சிறுவர்களை இருவரும் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சந்தேகநபர்கள் சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் வெளிநாட்டுக்கும் விற்கப்பட்டதும் தெரிய வந்தது. இவர்களால் பாதிப்படைந்த சிறுவர்கள் இன்றும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து, 2020ல் வழக்குப்பதிவு செய்த குற்றப்புலனாய்வு துறையினர் குறித்த தம்பதியின் வீட்டில் சோதனை நடத்தியது. இதில், 8 லட்சம் ரூபாய், 12 மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள் , ஒரு ஹார்ட் டிஸ்க், ஆறு பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் இருவர் மீதும் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாண்டா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ஆறு ஆண்டுகளாக நடந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உட்பட, 74 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இதையடுத்து குறித்த தம்பதி செய்த குற்றங்கள் அரிதிலும் அரிதானவை எனவும் மிகவும் ஒழுக்கக்கேடானது எனவும் இதுபோன்ற குற்றங்கள், குழந்தைகளின் வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் தார்மீக அடித்தளத்தையும் உலுக்குகின்றன எனவும் தெரிவித்து குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதால், போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் மத்திய – மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார். https://athavannews.com/2026/1465778
  14. விழியை பறித்த கடவுள் வழியை கொடுக்க மறக்கவில்லை; யாழ்.பல்கலை பட்டமளிப்பில் நெகிழ்ச்சி! Published By: Digital Desk 3 22 Feb, 2026 | 09:25 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது தொடர்ச்சியாக மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவில் சுன்னாகம் வாழ்வகத்தை சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார், சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர். பார்வை இழந்தும், கல்வியில் சாதிக்த வேண்டும் என்ற அவாவில் கல்வி பயின்று, இவ்வாறு பட்டம் பெற்ற பட்டதாரிகளை பலரும் பாராட்டி வருகின்றனர். https://www.virakesari.lk/article/239257
  15. இந்தியாவில் ரயில்களில் 'பயணிக்கும்' ராஜநாகங்கள் - புதிய ஆபத்து பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சூரத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், ஊர்வன ஆராய்ச்சியாளருமான திகான்ஷ் பார்மர் ஒரு தனித்துவமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். கட்டுரை தகவல் ஜெய் சுக்லா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் ராஜநாகத்தின் இயற்கையான வாழ்விடமாக உள்ளன. ராஜநாகம் பொதுவாகக் காடுகளில் வாழ்கிறது, ஏனெனில் அங்கு அதற்குத் தேவையான இரை, நீர் மற்றும் பாதுகாப்பான இடம் கிடைக்கிறது. காடுகளில் வாழும் ராஜநாகங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூரத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், ஊர்வன ஆராய்ச்சியாளருமான திகான்ஷ் பார்மர் ஒரு தனித்துவமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். இவரது ஆய்வின் மூலம் இந்தியாவில் ராஜநாகங்கள் ரயில்களில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. காடுகளில் வாழும் ராஜநாகங்கள் எப்படி ரயில் தண்டவாளங்கள் அல்லது ரயில்களை வந்தடைகின்றன? கோவா செல்லும் பல ரயில் பாதைகள் அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்கின்றன. ராஜநாகங்கள் சில நேரங்களில் உணவு அல்லது தங்குமிடம் தேடி தண்டவாளங்கள் அல்லது ரயில்களுக்கு அருகில் வருவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் மூலம், அவை இயற்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்குச் சென்றடைகின்றன, அங்கு அவற்றுக்கு உணவோ அல்லது பாதுகாப்பான தங்குமிடமோ இருப்பதில்லை. இவரது ஆராய்ச்சி, அமெரிக்காவின் சூழலியல் மற்றும் அதன் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தலைப்புகள் குறித்த ஆராய்ச்சிகளை வெளியிடும் புகழ்பெற்ற 'பயோட்ரோபிகா' இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகின் மிக நீளமான விஷப்பாம்பான ராஜநாகம் (ஓபியோபாகஸ் காலிங்கா), தவறுதலாக நீண்ட தூர ரயில்களில் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த இதழில் ஆராய்ச்சி வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு விகிதம் 36 சதவீதம் மட்டுமே என்பதால், அதில் ஆராய்ச்சி வெளியிடப்படுவது விஞ்ஞானிகளுக்கு முக்கியமான ஒன்று. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது புனித தீவில் கிடைத்த கூழாங்கல்லில் பதிந்திருந்த 'சிரிக்கும்' உருவம் "யார் ஹீரோ" மீண்டும் இணையும் ரஜினிகாந்த் , கமல் ஹாசன் - இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதம் பாடிய 4 மாணவர்களுக்கு என்ன நேர்ந்தது? ராஜேந்திர சோழன் கடல் கடந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்தது ஏன்? என்ன கிடைத்தது? End of அதிகம் படிக்கப்பட்டது ராஜநாகத்தின் பரவல் மாறிவரும் விதம், அந்தப் பாம்பு இனத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஒரு சவாலாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. திகான்ஷ் பார்மர், சர்வதேச விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து கோவாவில் 47 ராஜநாகங்கள் கண்டறியப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். இதற்காக, அவர்கள் கோவாவின் விலங்குகள் மீட்புப் படையின் உதவியையும் பெற்றனர். இந்த மீட்புப் படை பல ஆண்டுகளாக பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கோவாவில் 5 ரயில் நிலையங்களுக்கு அருகில் ராஜநாகம் கண்டுபிடிப்பு பட மூலாதாரம்,Sourabh Yadav படக்குறிப்பு,கோவாவின் சந்தோர் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்ட ராஜ நாகத்தை கோவா விலங்கு மீட்புப் படை உறுப்பினர் ரிங்கு காப்பாற்றுகிறார். கோவாவின் விலங்குகள் மீட்புப் படையினரால் ராஜநாகங்கள் மீட்கப்பட்ட 47 இடங்களை திகான்ஷ் பார்மர் ஆய்வு செய்தார். இதில் 18 இடங்கள் வட கோவாவிலும், 29 இடங்கள் தெற்கு கோவாவிலும் இருந்தன. தனது ஆய்வு குறித்து பிபிசி குஜராத்தியிடம் திகான்ஷ் பர்மர் கூறுகையில், "ராஜநாகம் இந்தியாவின் தேசிய ஊர்வன இனமாக அறியப்படுகிறது. இந்தியா முழுவதும் காணப்படும் ராஜநாகங்களின் உடலில் உள்ள வரிகள் மாறுபட்டிருந்தாலும், அது ஒரே இனமாகவே கருதப்பட்டது. தனி இனமாகப் பார்க்கப்படவில்லை. அதில் வேறு இனங்களும் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். எனவே, குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் இந்த நாகத்தை 'ஓபியோபேகஸ் காலிங்கா' என்று அவர்கள் அங்கீகரித்தனர். இந்தப் பாம்பு பாதுகாக்கப்பட்ட பிரிவின் கீழ் வருகிறது"என்றார். இந்தப் பாம்பு ஒருவரைக் கடித்தால், அவர் தண்ணீர் கூட கேட்க முடியாது, உடனடியாக இறந்துவிடுவார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வில், அந்த இடங்கள் அனைத்தும் ரயில் நிலையத்திற்கு அருகிலோ அல்லது ரயில் பாதைக்கு அருகிலோ இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "கோவா விலங்குகள் மீட்புப் படை 2002 முதல் 2024 வரை மொத்தம் 120 ராஜநாகங்களை மீட்டது. அந்த இடங்களை நாங்கள் ஆய்வு செய்தபோது, அவற்றில் 47 இடங்கள் ரயில்வேயை பகுதியைச் சுற்றியே இருந்தன. ஒரு பாம்பு கோவாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் தண்டவாளத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது" என்றார். பட மூலாதாரம்,Mehul Thakur படக்குறிப்பு,ராஜநாகத்தின் பரவல் மாறிவரும் விதம், அந்தப் பாம்பு இனத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஒரு சவாலாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கோவா விலங்குகள் மீட்புப் படையின் தலைவர் அம்ரித் சிங் பிபிசி குஜராத்திடம் கூறுகையில், "தெற்கு கோவாவில் உள்ள 'சந்தோர்' என்ற ரயில் நிலையத்தில் ராஜநாகம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. நாங்கள் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தோம். அது காயமடைந்த நிலையில் இருந்தது. பொதுவாக இதுபோன்ற பாம்புகள் காணப்படாத இடம் அது" என்றார். "சந்தோர் ரயில் நிலையத்தில் ராஜநாகம் கண்டறியப்பட்ட விவகாரம், இத்தகைய சூழலியல் ரீதியாகத் தொடர்பில்லாத இடத்திற்கு இந்தப் பாம்பு எப்படி வந்திருக்கக் கூடும் என்பதைத் தீவிரமாக ஆராய எங்களைத் தூண்டியது" என்று அந்த ஆராய்ச்சி விவரங்கள் குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பயோட்ரோபிகா' இதழில் வெளியாகியுள்ளது. இந்த வகை ராஜநாகங்கள் கர்நாடகாவின் காசில் ராக் மற்றும் தண்டேலி புலிகள் காப்பகத்தில் காணப்படுகின்றன. இந்த ரயில்கள் கோவாவிற்குள் நுழையும் போது, பாம்புகள் இந்தப் பகுதியில் தங்கிவிடுகின்றன. செப்டம்பர் 2021-இல், கோவா விலங்குகள் மீட்புப் படை வாஸ்கோடகாமா அருகே ஒரு ராஜநாகத்தை மீட்டது. அது ரயில் நிலையத்திலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. லோலிம், பாலோலெம் மற்றும் பெட்னே ரயில் நிலையங்களைச் சுற்றியும் மற்ற மூன்று ராஜநாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஐந்து இடங்களுமே ராஜநாகத்தின் இயற்கையான வாழ்விடங்கள் அல்ல. இதுவே பாம்பிற்கும் ரயில்வேக்கும் இடையே உள்ள இந்த 'வியத்தகு தொடர்பை' விஞ்ஞானிகள் கவனிக்கக் காரணமாக அமைந்தது என்கிறார் திகான்ஷ் பார்மர். 'இந்த ராஜ நாகம் ரயிலில் பயணித்திருக்க வேண்டும்' பட மூலாதாரம்,AMRUT SINGH படக்குறிப்பு,கோவா விலங்கு மீட்புப் படையைச் சேர்ந்த அம்ரித் சிங், ராஜ நாகத்தை மீட்கிறார். இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளரும் விஞ்ஞானியுமான திகான்ஷ் பார்மர், பிபிசி குஜராத்திடம் பேசுகையில், "அந்தப் பாம்பு எப்படி ரயில் நிலையத்திற்கு வந்தது என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். கர்நாடகாவிலிருந்து கோவாவிற்குச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் கர்நாடகாவின் காசில் ராக் பகுதியிலிருந்தே வருகின்றன. இந்தப் பகுதிகள் அடர்ந்த காடுகளைக் கொண்டவை. அங்கு ராஜநாகங்கள் அதிகளவில் காணப்படுகின்றன." என்றார். "ஆராய்ச்சியின் அடிப்படையில், எங்கள் குழு ஒரு புதிய 'ரயில்வே பரவல் கருதுகோளை' முன்மொழிந்துள்ளது. இதன்படி, காடுகள் நிறைந்த மலைப்பகுதி ரயில் நிலையங்களில் எலிகள் அல்லது பிற உயிரினங்களை வேட்டையாடும் போது, ராஜநாகங்கள் சில நேரங்களில் சரக்கு அல்லது பயணிகள் ரயில்களில் ஏறியிருக்க வேண்டும். பின்னர் என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே பல கிலோமீட்டர் தொலைவில், தங்களுக்கு முற்றிலும் ஒவ்வாத சூழல் உள்ள இடத்தில் இறங்கியிருக்க வேண்டும் என இது குறிப்பிடுகிறது"என்று திகான்ஷ் பர்மர் கூறுகிறார். இந்த ஆராய்ச்சிக்கு இந்தியா முழுவதும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற செய்திகளில் வெளியான தகவல்கள் வலுசேர்ப்பதாக திகான்ஷ் கூறுகிறார். அதன்படி , ராஜநாகங்கள் உள்ளிட்ட பாம்புகள் ரயில்கள் அல்லது ரயில் நிலையங்களைச் சுற்றி காணப்படுகின்றன. "நாங்கள் ஆராய்ச்சி செய்த இடங்கள் பொதுவாக பாம்புகளின் வாழ்விடம் இல்லை. ஆனால் வெகு தொலைவில் உள்ள கர்நாடகாவிற்கு அருகிலுள்ள காடுகளில் இந்த பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. நாங்கள் பார்த்த ராஜநாகங்கள் அனைத்தும் ரயில் நிலையங்களைச் சுற்றியே இருந்தன. எனவே, அவை ரயில் வழியாக இங்கு வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்யலாம்." என்றும் என்று திகான்ஷ் பர்மர் விவரிக்கிறார். இதற்கு முன்னதாக, 2017-ஆம் ஆண்டு வாக்கில், திகான்ஷ் பார்மர் சூரத் ரயில் நிலையத்தில் இதே போன்ற முறையில் ஒரு பாம்பை மீட்டிருந்தார். 'பாம்பின் பயணம்' தற்செயலா அல்லது உணவுக்கான தேடலா? பட மூலாதாரம்,DIKANSH PARMAR படக்குறிப்பு,சூரத் விஞ்ஞானி திகான்ஷ் பர்மருடன் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்கும் மற்ற ஆராய்ச்சியாளர்கள் கலிபோர்னியாவின் விக்டர் வேலி கல்லூரியின் உயிரியல் துறை பேராசிரியர் முனைவர் ஹென்ரிச் கைசர் மற்றும் ஜெர்மனியின் பான், பல்லுயிர் மாற்றம் ஆய்வுக்கான லீப்னிஸ் நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் டென்னிஸ் ரோடர் ஆவர். ராஜநாகங்கள் ரயில் நிலையங்களைச் சுற்றி காணப்படுவதற்கான காரணம் நடைமுறை ரீதியானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு கூறுகிறது. தானியங்கள், பழங்கள் அல்லது இதர பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களின் கழிவுகள் காரணமாக, ரயில்வே பகுதிகளில் எலிகள் அதிகளவில் கூடுகின்றன. எலிகள் அங்கேயே தங்கள் வாழிடங்களை அமைத்து வாழ்கின்றன. இவை பாம்புகளுக்கு உணவாக அமைகின்றன. மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது, பாதுகாப்பான தங்குமிடத்தைத் தேடி அவை ரயில்களில் தஞ்சம் புகக்கூடும். இந்த ஆராய்ச்சியில் கலிபோர்னியாவில் உள்ள விக்டர் வேலி கல்லூரியின் உயிரியல் பேராசிரியர் முனைவர் ஹென்ரிச் கைசர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் டென்னிஸ் ரோடர் (பல்லுயிர் மாற்றம் ஆய்வுக்கான லீப்னிஸ் நிறுவனம் (எல்ஐபி), பான், ஜெர்மனி) ஆகியோரும் ஈடுபட்டனர். முனைவர் ஹென்ரிச் பிபிசி குஜராத்திடம் கூறுகையில், "பொதுவாக சாலைகளையும் ரயில் பாதைகளையும் வனவிலங்குகளுக்கான தடைகளாகவோ அல்லது அவற்றிற்கான மரணப் பொறிகளாகவோ நாம் கருதுகிறோம். ஆனால் இந்த விரைவுப் பாதைகள் கவனக்குறைவாக அவற்றின் போக்குவரத்துப் பாதைகளாகச் செயல்படக்கூடும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது." என்றார். "இந்த ராஜநாகம் தற்செயலாக ரயிலுக்குள் சென்றிருக்கலாம் அல்லது உணவு தேடியோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ ரயில் பாதையை அணுகியிருக்கலாம்" என்று அவர்கள் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து, இணைப் பேராசிரியர் முனைவர் டென்னிஸ் ரோடர் பிபிசி குஜராத்திடம் பேசுகையில், "மனிதர்களின் இந்த உள்கட்டமைப்புகள், இந்த வேட்டையாடும் உயிரினத்தின் நடமாட்டத்தை எப்படித் தற்செயலாகப் பாதிக்கின்றன என்பதை இந்த ஆராய்ச்சி காட்டுகிறது." என்றார். இது அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி என்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறும் அவர்கள், "உண்மைகளும் தர்க்கங்களும் ஆதாரங்களுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டனர். பட மூலாதாரம்,DIKANSH PARMAR படக்குறிப்பு,மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது, பாதுகாப்பான தங்குமிடத்தைத் தேடி அவை ரயில்களில் தஞ்சம் புகக்கூடும். பாம்புகள் பற்றிய இந்த ஆராய்ச்சி ஏன் முக்கியமானது? இந்தக் கேள்விக்கு பதிலளித்த முனைவர் ரோடர், "ராஜநாகத்தின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. அவை சரக்கு அல்லது பயணிகள் ரயில்கள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றால், அது மனித உயிருக்கும் அவற்றிற்கும் ஆபத்தானது. எனவே, இந்த ஆராய்ச்சியின் மூலம், மனித உயிருக்கு ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மற்றும் ராஜநாகத்தையும் பாதுகாக்க வேண்டும்" என்றார். "ராஜநாகம் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு. அதனால் தான் மக்கள் அதைப் பார்த்தவுடன் பெரும்பாலும் கொன்றுவிடுகிறார்கள். அது மனித குடியிருப்புகளில் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டால், அது மனித உயிருக்கு ஆபத்தானது. எனவே, காட்டின் சமநிலையை பேணவும், பல்லுயிர் பெருக்கத்திற்காகவும் அதன் பாதுகாப்பு அவசியமானது. இந்த ஆராய்ச்சி அதை வலியுறுத்துகிறது," என்று திகான்ஷ் பர்மர் விளக்குகிறார். வனப்பகுதிகளில் தேவையில்லாமல் ரயில்களை நிறுத்தக் கூடாது என்றும், ரயில் பெட்டிகளில் மீதமுள்ள உணவுகளை வைக்கக் கூடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இது எலிகளைக் கவர்ந்திழுக்கக்கூடும். அத்துடன், பாம்புகள் போன்ற வன உயிரினங்கள் ரயில் தண்டவாளங்களுக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகாதபடி காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். "ரயில்கள் அல்லது பிற வழிகள் மூலம் இதுபோன்ற மனித குடியிருப்புகளுக்கு அவை வந்தாலும், அவை உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. எனவே, அவை பாதுகாக்கப்பட வேண்டும்" என்கிறார் திகான்ஷ் . அவரது கூற்றுப்படி, மனித குடியிருப்புகளில் ராஜநாகங்கள் இருப்பது மனித-பாம்பு மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இத்தகைய இடங்களை வந்தடையும் பாம்புகள் பசி, மன அழுத்தம் மற்றும் இறப்பு அபாயத்தை எதிர்கொள்கின்றன. "இந்த ஆராய்ச்சி வெறும் சுவாரஸ்யமான சூழலியல் கதை மட்டுமல்ல, இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புக்கான எச்சரிக்கையும் கூட. ரயில்கள் தற்செயலாக விஷப்பாம்புகளை ஏற்றிச் செல்கின்றன என்றால், இந்த விஷயத்தில் விழிப்புணர்வும் தெளிவான வழிகாட்டுதல்களும் தேவை," என்கிறார் முனைவர் ரோடர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0k1305k4mxo
  16. அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே "பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்" - சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் Published By: Digital Desk 3 22 Feb, 2026 | 10:02 AM அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் ஏற்பாடுகளுடன் அதனை கொண்டுவர முயல்கின்றனர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் சனிக்கிழமை (21) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்டத்திற்க்கு எதிராக மக்கள் போராடிய போதும் , அதனையும் மீறி அந்த சட்டத்தை அமுல் படுத்தினர். பின்னர் அந்த பயங்கரவாத தடை சட்டத்தால் தற்போது ஆட்சியில் உள்ளவர்களும் பல இன்னல்களை எதிர்கொண்டனர். பயங்கரவாதத்தை இல்லாதொழிப்போம் என வாக்குறுதி வழங்கி தற்போது ஆட்சி அமைத்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறி , தற்போது பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை அமுல் படுத்த முயல்கின்றனர். இது மிகவும் பயங்கரமான சட்டமாக வரவுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் போது . பயங்கரவாத தடை சட்டத்தினால் தடுக்க முடியாது. அதற்கு அந்த சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் போதாமையால் உள்ளதால் தற்போது, பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக அந்த போராட்டங்களை கட்டுப்படுத்தவே புதிய சட்டமூலத்தை கொண்டு வருகின்றனர்.என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/239264
  17. இருளை வென்ற அறிவு ஒளி! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பில் நெகிழ்ச்சி! Feb 22, 2026 - 12:28 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழாவில், வாழ்வகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர். மூன்றாம் நாளான நேற்று (21) நடைபெற்ற ஒன்பதாம் அமர்வில், வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் செல்வி. சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுள் துரைராசா அருண்குமார், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, 1S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி, வாழ்வக வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் ஏனைய மாணவர்களுக்கு இணையான புள்ளிகளைப் பெற்றுச் சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இன்றுவரை இவருக்கே உரித்தாகின்றது. பார்வைத்திறனற்ற இந்த இரு மாணவர்களும், தமது வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டமை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlxe43pw0003356pl60yv84b
  18. எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது: மன்னாரில் ஆலம் கடும் எச்சரிக்கை! 21 Feb, 2026 | 04:36 PM இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், கைது செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கு நியாயம் கோரிப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சமீபத்தில் காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 47 மீனவர்களும் அவர்களது 6 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான படகுகள் எல்லை தாண்டி வரும் நிலையில், ஓரிரு படகுகள் மட்டுமே கைது செய்யப்படுவது எமது நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு சிறிய தீர்வாகவே அமைகிறது. இது குறித்து அரசாங்கத்திற்கு நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறோம். இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே தமிழக மீனவர்கள் இக்குற்றச்செயலைச் செய்கிறார்கள். ஒரு நாட்டின் இறையாண்மையையும் எல்லையையும் மீறுகிறோம் என்ற குற்ற உணர்ச்சி கூட அவர்களுக்கு இல்லை. வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், எமது கடல் வளங்களைச் சூறையாடி, மீன்பிடி உபகரணங்களையும் அவர்கள் சேதப்படுத்துகிறார்கள். குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் படகுகளை விடுவிக்கக் கோரியும் மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் தமிழகத்தில் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை நடத்துவது வேடிக்கையானது. தவறு செய்துவிட்டு அதை நியாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. இந்திய மத்திய மற்றும் தமிழக அரசுகள் தமது மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சர் இந்திய மீனவர் விவகாரத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதாக நாங்கள் கருதுகிறோம். வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விவகாரத்தில் அவர் மௌனம் சாதிப்பதை ஏற்க முடியாது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அமைச்சருக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்திய மீனவர்களின் வருகையை முற்றாகக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். எமது கடல் பரப்பில் அவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தொடர்ச்சியான கைதுகள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இந்த அத்துமீறலைத் தடுக்க முடியும்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/239236
  19. யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்! Feb 22, 2026 - 11:47 AM யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (22) இப்பொராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனத்தை தாம் மறித்தபோது, அதனை நிறுத்தாது சென்றமையால் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதில் வாகனத்தைச் செலுத்திய சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும், நிறுத்தாமல் சென்ற வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இது பொலிஸாரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே, உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பதும், சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட வழக்கு விசாரணை நாளை மறுதினம் (24) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlxct9bf0001356pwu9kcdvd
  20. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் 21 Feb, 2026 | 02:50 PM இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை (21) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மீனவர்களையும், விடுதலை செய்யப்படாமல் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப் படகையும் விடுவிக்க கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசிடம் வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. https://www.virakesari.lk/article/239231
  21. மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை Feb 22, 2026 - 10:51 AM மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள், தொடர்ச்சியாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகப் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம், மன்னார் நகரசபை சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி, வைத்தியசாலைப் பகுதியை அண்டியுள்ள இரண்டு உணவகங்கள் மீதும், மன்னார் உப்புக்குளம் மற்றும் பள்ளிமுனை வீதிப் பகுதிகளில் அமைந்துள்ள இரு உணவகங்கள் மீதும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமை, கழிவகற்றல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படாமை, அதிக அளவு இலையான்கள் காணப்பட்டமை, கையுறை பயன்படுத்தாமை, சுகாதாரமற்ற முறையில் உணவுகளைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmlxas09q0001356pwlqy3vwn
  22. அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தடையை மீறி 15 சதவீத உலகளாவிய வரியை அறிவித்தார் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Published By: Digital Desk 1 22 Feb, 2026 | 09:00 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த பரவலான இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணித்தியாலத்திற்குள், அவர் புதிய வரி உயர்வை அறிவித்துள்ளார். உலகளாவிய இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதாக நேற்று சனிக்கிழமை (21) தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த 'அவசரகால அதிகாரங்களுக்கு' பதிலாக, 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ் இந்த வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். இந்த அதிகாரத்தின் கீழ் விதிக்கப்படும் வரிகள் அதிகபட்சமாக 150 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு மேல் நீடிக்க பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பை "வேடிக்கையானது" மற்றும் "அமெரிக்காவிற்கு எதிரானது" என அமெரிக்க ஜனாதிபதி; கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், இந்த 15 சதவீத வரி உயர்வு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஏற்றுமதியைப் பாதிக்கும். இருப்பினும், கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்குஇதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக குறித்த பதிவில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/239252

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.