All Activity
- Past hour
-
ரோஜா முள்.
பாகம் 2 எப்போ வரும்..🤭
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேள்விகள் 68) - 70) க்குமான புள்ளிகள்: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) இங்கிலாந்து - 17 பேர் சரியாகக் கணித்துள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. நியூஸிலாந்து - 12 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. போட்டியாளர் Y1 Y2 Y3 Y4 செம்பாட்டான் ENG NZ ஏராளன் ENG PAK வசீ ENG NZ புலவர் ENG NZ சுவைப்பிரியன் ENG NZ அல்வாயன் ENG PAK ஈழப்பிரியன் ENG PAK நியூ பலன்ஸ் ENG NZ வாத்தியார் NZ SL கறுப்பி ENG PAK வாதவூரான் ENG SL வீரப் பையன்26 NZ PAK சுவி ENG PAK கிருபன் NZ PAK கோஷான் சே ENG NZ அஹஸ்தியன் ENG PAK கந்தப்பு ENG PAK நியாயம் ENG NZ எப்போதும் தமிழன் NZ PAK ரசோதரன் AFG SL பிரபா ENG PAK நிலாமதி AFG SL நந்தன் ENG NZ 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) 13 பேர் இங்கிலாந்து அணி முதலாவதாக வரும் எனக் கணித்துள்ளமையால் தலா மூன்று புள்ளிகள் வழங்கப்படும். 10 பேர் இந்திய அணி இரண்டாவதாக வரும் எனக் கணித்துள்ளமையால் தலா இரு புள்ளிகள் வழங்கப்படும். போட்டியாளர் சுப்பர் 8: குழு 2: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக சுப்பர் 8: குழு 2: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக செம்பாட்டான் ENG NZ ஏராளன் PAK ENG வசீ ENG NZ புலவர் ENG NZ சுவைப்பிரியன் ENG NZ அல்வாயன் PAK ENG ஈழப்பிரியன் PAK ENG நியூ பலன்ஸ் ENG NZ வாத்தியார் NZ SL கறுப்பி ENG PAK வாதவூரான் ENG SL வீரப் பையன்26 PAK NZ சுவி ENG PAK கிருபன் PAK NZ கோஷான் சே ENG NZ அஹஸ்தியன் ENG PAK கந்தப்பு ENG PAK நியாயம் ENG NZ எப்போதும் தமிழன் NZ PAK ரசோதரன் AFG SL பிரபா ENG PAK நிலாமதி AFG SL நந்தன் PAK NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 12 பேர் சிறிலங்கா அணி இறுதியாக வரும் எனக் கணித்தமையால் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டியாளர் பதில் செம்பாட்டான் PAK ஏராளன் SL வசீ SL புலவர் SL சுவைப்பிரியன் IRE அல்வாயன் SL ஈழப்பிரியன் SL நியூ பலன்ஸ் SL வாத்தியார் ENG கறுப்பி SL வாதவூரான் NZ வீரப் பையன்26 SL சுவி SL கிருபன் ENG கோஷான் சே PAK அஹஸ்தியன் SL கந்தப்பு NZ நியாயம் PAK எப்போதும் தமிழன் SL ரசோதரன் ENG பிரபா SL நிலாமதி ENG நந்தன் IRE
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேள்விகள் 65) - 67) க்குமான புள்ளிகள்: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) இந்தியா - அனைவரும் தெரிவு செய்ததால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. தென்னாபிரிக்கா - 04 பேர் சரியாகக் கணித்ததுள்ளனர். தலா இரு புள்ளிகள் வழங்கப்படுகின்றது. போட்டியாளர் X1 X2 X3 X4 செம்பாட்டான் IND AUS ஏராளன் IND AUS வசீ IND AUS புலவர் IND AUS சுவைப்பிரியன் IND AUS அல்வாயன் IND AUS ஈழப்பிரியன் IND AUS நியூ பலன்ஸ் IND AUS வாத்தியார் IND AUS கறுப்பி IND AUS வாதவூரான் IND AUS வீரப் பையன்26 IND AUS சுவி IND AUS கிருபன் IND SA கோஷான் சே IND SA அஹஸ்தியன் IND SA கந்தப்பு IND AUS நியாயம் IND AUS எப்போதும் தமிழன் IND SA ரசோதரன் IND AUS பிரபா IND AUS நிலாமதி IND AUS நந்தன் IND AUS 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) ஒருவரும் தென்னாபிரிக்கா அணி முதலாவதாக வரும் எனக் கணிக்கவில்லை. எனவே மூன்று புள்ளிகள் ஒருவருக்கும் கிடையாது. 09 பேர் இந்திய அணி இரண்டாவதாக வரும் எனக் கணித்துள்ளமையால் தலா இரு புள்ளிகள் வழங்கப்படும். போட்டியாளர் சுப்பர் 8: குழு 1: முதலிடம் - ? (3 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக சுப்பர் 8: குழு 1: இரண்டாமிடம் - ? (2 புள்ளிகள்) மஞ்சள் பெட்டிக்குள் அணியின் பெயரை ஆங்கிலச் சுருக்கிய வடிவில் தருக செம்பாட்டான் AUS IND ஏராளன் AUS IND வசீ AUS IND புலவர் AUS IND சுவைப்பிரியன் AUS IND அல்வாயன் AUS IND ஈழப்பிரியன் AUS IND நியூ பலன்ஸ் IND AUS வாத்தியார் AUS IND கறுப்பி AUS IND வாதவூரான் IND AUS வீரப் பையன்26 IND AUS சுவி IND AUS கிருபன் IND SA கோஷான் சே IND SA அஹஸ்தியன் IND SA கந்தப்பு IND AUS நியாயம் IND AUS எப்போதும் தமிழன் IND SA ரசோதரன் IND AUS பிரபா IND AUS நிலாமதி IND AUS நந்தன் IND AUS 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! ஒருவரும் ஸிம்பாப்வே அணி இறுதியாக வரும் எனக் கணிக்கவில்லை. எனவே புள்ளிகள் கிடையாது. போட்டியாளர் பதில் செம்பாட்டான் SA ஏராளன் WI வசீ WI புலவர் WI சுவைப்பிரியன் WI அல்வாயன் WI ஈழப்பிரியன் WI நியூ பலன்ஸ் SL வாத்தியார் WI கறுப்பி WI வாதவூரான் WI வீரப் பையன்26 SA சுவி WI கிருபன் WI கோஷான் சே ITA அஹஸ்தியன் WI கந்தப்பு WI நியாயம் WI எப்போதும் தமிழன் WI ரசோதரன் WI பிரபா WI நிலாமதி WI நந்தன் SCOT
- Today
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இது தவறான தகவல். அமெரிக்க வான்படைக்குச் சொந்தமான மூன்று எப் 15 ரக தாக்குதல் விமானங்களை குவைத்தின் விமான எதிர்ப்புப் படையனி சுட்டு வீழ்த்தியிருக்கிறது என்பதே சரியான தகவல். ஈரானின் விமானங்கள் குவைத்தின் வான்பரப்பிற்குள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமது தாக்குதலை நிறைவுசெய்து தளம் திரும்பிக்கொண்டிருந்த மூன்று அமெரிக்க விமானங்களை குவைத் விமான எதிர்ப்புப் படையணி ஈரானின் விமானங்கள் என்று தவறுதலாகக் கணித்து சுட்டு வீழ்த்தியிருக்கிறது. தாக்கப்பட்ட விமானங்களில் இருந்த ஆறு விமானமோட்டிகளும் பாதுகாப்பாக தரையிறங்கியதுடன் நலமுடன் இருப்பதாக குவைத் அரசு தெரிவித்திருக்கிறது. தனது தவற்றிற்காக அமெரிக்காவிடம் மன்னிப்புக் கோரியுள்ள குவைத் அரசு, இத்தாக்குதல் தொடர்பான பூரண விசாரணைகளை மேற்கொள்வதாகவும் கூறியிருக்கிறது.
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
காமனெயியை பல மாதங்கள் வேவு பார்த்து துல்லியமாக தாக்கி கொன்ற அமெரிக்கா, இஸ்ரேல் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கோர்டோன் கோரேரா பாதுகாப்பு ஆய்வாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்ட தாக்குதல் எதிர்பார்க்கப்பட்ட நள்ளிரவு நேரத்தில் அல்லாமல், காலை வேளையில் நடந்துள்ளது. ஏனெனில், அதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக கிடைத்த முக்கியமான உளவுத்துறைத் தகவலை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்காவும் இஸ்ரேலும் முடிவு செய்திருந்தன. இரானிய மூத்த அதிகாரிகள் சந்திக்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக பல மாதங்களாக அவர்கள் காத்திருந்தனர். அதிஉயர் தலைவர் அலி காமனெயி சனிக்கிழமை காலை மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்திற்கு செல்வார் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். அதே சமயத்தில், மற்ற மூத்த ராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சந்திக்கும் இடத்தையும் தாக்க அவர்கள் முடிவு செய்திருந்தனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கடந்த பல மாதங்களாக அதிஉயர் தலைவரின் நகர்வுகளை கண்காணித்து வந்தனர். அதற்கு அவர்கள் பயன்படுத்திய முறைகள் ரகசியமானவை என்றாலும் அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகப் பதிவொன்றில் அதுகுறித்து சூசகமாக குறிப்பிட்டுள்ளார். "எங்களின் உளவுத்துறை மற்றும் மிகவும் நவீனமான கண்காணிப்பு அமைப்பை அவரால் (காமனெயி) தடுக்க இயலவில்லை." இது நேரடியாக ஒருவர் அளித்த தகவலாக இருக்கலாம். ஆனால் இரானிய தனிநபர்கள் குறித்து தொழில்நுட்ப முறையில் கண்காணித்ததன் மூலம் கிடைத்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,மார் எ லாகோவில் உள்ள ஒரு தற்காலிக போர் அறையில் இருந்து டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் நிகழ்வுகளைக் கண்காணித்தனர் கடந்தாண்டு ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில் இரானின் அணுசக்தி திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளை இஸ்ரேல் குறிவைத்தது. அப்போது, தனிநபர்களின் நகர்வுகளை அறிய அவர்களின் தொலைத்தொடர்பு மற்றும் மொபைல்போன் சாதனங்களை ஊடுருவியதாக கூறப்படுகிறது. இதில், சில சமயங்களில் முக்கிய அதிகாரிகளுடைய மெய்க்காப்பாளர்களின் நகர்வுகளை கண்காணிப்பதும் அடங்கும். நீண்ட காலமாக இவ்வாறு தகவல்களைச் சேகரிக்கும் போது, வழக்கமான நடத்தை மற்றும் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். இதன்மூலம், அவர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கணிக்கவும், பலவீனமான தருணங்களை கண்டறியவும் முடியும். இரான் தனது எதிரிகள் அதிஉயர் தலைவரைப் பின்தொடர்வதை அறிந்திருந்தது. அடுத்தடுத்த மாதங்களில் இந்த பலவீனங்களை அடையாளம் கண்டு நிவர்த்தி செய்ய இரான் தவறியது பாதுகாப்பு மற்றும் உளவுத் தகவலை தடுப்பதில் இரானின் தோல்வியையோ அல்லது புதிய கண்காணிப்பு வழிகளைக் கண்டறிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடர்ந்து தங்கள் உத்திகளை மாற்றிக் கொள்ளும் திறனையோ குறிக்கிறது. பகல் நேரத்தில் தாக்குதல் நடத்த வாய்ப்பு குறைவு என்று இரானியர்கள் கணித்திருக்கலாம். இந்த சூழலில், அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.விடம் இருந்து உளவுத்தகவல் கிடைத்ததாகவும், தாக்குதல் நடத்த அந்த தகவல் இஸ்ரேலிடம் வழங்கப்பட்டதாகவும் நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறது. தலைவர்களின் இடங்களை தாக்குவதில் இஸ்ரேலும், ராணுவ இலக்குகளைத் தாக்குவதில் அமெரிக்காவும் கவனம் செலுத்தும் வகையில் தங்களுக்குள் பணிகளை பிரித்துக்கொண்டதாக அறிகுறிகள் தென்படுகின்றன. முக்கியமாக, நீண்ட தூர ஏவுகணைகளை ஏவக் கூடிய போர் விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதலைத் திட்டமிடக்கூடிய வகையில், காமனெயி-யின் நகர்வுகள் மற்றும் பிற அதிகாரிகளின் நகர்வுகள் குறித்து போதுமான தகவல்களை உளவுத்துறை முன்கூட்டியே வழங்கியது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப் ஒரே ஒருவரை குறிவைத்து தலைமையை அழிக்கும் தாக்குதலாக அல்லாமல், இந்தத் தாக்குதல் விரிவான ஒரு பெரிய நடவடிக்கையின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. அதற்கான சாதகமான வாய்ப்பு கிடைத்ததால், அந்தத் திட்டம் முன்னதாகவே செயல்படுத்தப்பட்டது. இஸ்ரேலிய போர் விமானங்கள் டெஹ்ரானை அடைய சுமார் இரண்டு மணி நேரம் ஆகலாம். அவை எவ்வளவு தூரத்தில் இருந்து தங்கள் ஆயுதங்களை செலுத்தின என்பது தெளிவாகத் தெரியவில்லை. தாக்குதலுக்கான முடிவு எடுக்கப்பட்டதும், உள்ளூர் நேரப்படி காலை 9:40 மணியளவில் காமனெயி வளாகத்தைத் தாக்க இஸ்ரேலிய போர் விமானங்கள் 30 குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,இரானிய உச்ச தலைவர் காமனெயியின் வளாகத்தை செயற்கைக்கோள் படம் காட்டுகிறது. இரான் அதிஉயர் தலைவர் காமனெயி தன்னை பாதுகாத்துக் கொள்ள அந்த வளாகத்திற்கு கீழேயுள்ள பதுங்கு குழிகளை பயன்படுத்தலாம் என்பதால் இந்த அளவு குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம். இலக்கு(காமனெயி) தாக்கப்படுவதை உறுதிசெய்ய, பதுங்கு குழியை தகர்க்க பல குண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம். இரானிய தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிற இடங்களும் தாக்கப்பட்டன, அதில் அதிபர் மசூத் பெஷேஷ்கியனின் அலுவலகமும் அடங்கும். அவர் தான் பாதுகாப்பாக இருப்பதாக ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். கொல்லப்பட்டவர்களில் இரானின் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி ஷம்கானி, பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்ஸாதே மற்றும் ஐஆர்ஜிசி (இஸ்லாமிய புரட்சிகர காவல் படை) தளபதி ஜெனரல் முகமது பாக்பூர் உள்ளிட்ட ஏழு மூத்த இரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது. இரானில் போர் விமானங்கள் தாக்கிய போது, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள மார் எ லாகோவில் நள்ளிரவு நேரத்தில் அதிபர் டிரம்ப் தனது உயர் அதிகாரிகள் சிலருடன் நிகழ்வுகளைக் கண்காணிக்கக் கூடியிருந்தார். இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார் என்பதை உறுதிப்படுத்த சில மணிநேரம் ஆனது. இருப்பினும், இரான் இந்த சாத்தியத்திற்கும் தயாராகவே இருந்தது, அதிஉயர் தலைவருக்கு மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளின் இடத்திற்கும் அடுத்து வரக்கூடியவர்கள் குறித்த திட்டங்கள் தயாராக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்த மோதலின் போக்கில் இந்தக் கொலை என்ன விளைவை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு காமனெயியை பல மாதங்கள் வேவு பார்த்து துல்லியமாக தாக்கி கொன்ற அமெரிக்கா, இஸ்ரேல்
-
பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்
பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல் Published By: Vishnu 02 Mar, 2026 | 04:04 AM (க.சிவலிங்கமூர்த்தி) இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக பாட்டாளி வர்க்கத்தை மையப்படுத்திய புதிய அரசியல் வேலைத்திட்டமொன்றை முன்னிறுத்தி முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாடு கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (1) எழுச்சியுடன் நடைபெற்றது. வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நவதாராளவாத பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச தலையீடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கையின் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களில் இருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான கட்சி ஆர்வலர்களின் பங்கேற்புடன் இம்மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்றியது.South Asians & Diaspora இந்த மாநாட்டில் நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு ஒன்பது பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. மக்கள் போராட்ட அனுபவத்தைக் கொண்டு பாட்டாளி வர்க்கத்திற்கான பலமான அரசியல் கட்சியை கட்டியெழுப்புதல்Politics 2. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிடியில் இருந்து பொருளாதாரத்தை விடுவித்தல் 3. நவதாராளவாதத்திற்கு மாற்றாக சோசலிச பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்தல் 4. தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்துதல் 5. நாடு தழுவிய ரீதியில் மக்கள் போராட்ட சபைகளை நிறுவி மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்துதல்Beaches & Islands 6. இலங்கையின் இறைமையைப் பாதிக்கும் இந்திய மேலாதிக்க ஒப்பந்தங்களை இரத்து செய்தல் 7. திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய வளங்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் 8. ஏகாதிபத்திய போர்களுக்கு எதிராக சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைதல் 9. முதலாளித்துவத்தினால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுதல் ஆகிய ஒன்பது கோரிக்கைகளும் இங்கு வலியுறுத்தப்பட்டன.South Asians & Diaspora மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான சேனாதீர குணதிலக்க புபுது ஜயகொட நிரோஷா குருகே ரவிந்து முதலகே குமார் குணரத்னம் சமீர கொஸ்வத்த ஹேமமாலி அபேரத்ன மற்றும் துமிந்த நாகமுவ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி சார்பில் எஸ்.கே. செந்திவேல் மற்றும் சோசலிச மக்கள் சம்மேளனம் சார்பில் கல்ப ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச ரீதியில் பல நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டிற்கு தமது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கினர். இத்தாலியின் பிரான்டே பொப்பலாரே அமைப்பின் சார்பில் அலேசியோ அரேனா அர்ஜென்டினாவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் லூசியானோ ரவனெட்டி பங்களாதேஷின் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷோயப் பச்சாவார்ஜி பிரான்சின் புதிய ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சியின் சுலைமான் ஸ்டானிஸ்லாஸ் நேபாளத்தின் விஞ்ஞான சோசலிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஜகத் ரமாலி மற்றும் சர்வதேச சோசலிச லீக்கின் ஸ்டீவ் மேக்ஸ்வினி ஆகியோர் நேரடியாகவும் காணொளி மூலமும் உரையாற்றினர். கியூபா தூதுவர் பட்ரிசியா லசாரா பெகோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் ஜெர்மனியின் ஹான்ஸ் பீட்டர் அன்டன் ஸ்பெக்ட் நேபாளத்தின் வின்சென்சோ வசாலோ இத்தாலியின் நிக்கோலோ சகேட்டி யேமன் நாட்டின் மவுரிக் மிலியா இந்தியா சார்பில் சுபாஷ் தர்ஷ்குப்தா இங்கிலாந்தின் ரோஜர் சில்வர்மேன் மற்றும் துருக்கியின் அமினா ஆகியோர் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். மாநாட்டின் இறுதியில் அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது. பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்
-
-
TIN இலக்கம் கட்டாயமாகிறது!
TIN இலக்கம் கட்டாயமாகிறது! Mar 2, 2026 - 03:46 PM தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும். அதன்படி, பின்வரும் சேவைகளுக்கு இச்சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது, ஏதேனும் ஒரு நிதி நிறுவனத்தில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல். கட்டிட வரைபடங்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல். மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகன அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல். காணி அல்லது காணி உரிமத்தைப் பதிவு செய்தல். வணிகப் பதிவுகளை மேற்கொள்ளுதல். இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றுதல். கடன் அட்டைகளை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் கட்டாயம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. TIN இலக்கம் கட்டாயமாகிறது!
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை! Mar 2, 2026 - 02:51 PM மத்திய கிழக்கில் போர் நிலைமை மேலும் தீவிரமடையக் கூடும் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில், ஈரானியப் பாதுகாப்புப் படைகளின் இராணுவத் தளங்களை விட்டுப் பொதுமக்களை விலகியிருக்குமாறு ஈரான் அரசாங்கம் அவசர அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஈரானின் இராணுவ இலக்குகள், கட்டளை மையங்கள் மற்றும் இஸ்லாமியப் புரட்சிகரக் காவற்படையின் தளங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே இந்த முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிரிகளின் திடீர் வான்வழித் தாக்குதல்கள் அல்லது ஏவுகணைத் தாக்குதல்களின் போது பொதுமக்கள் உயிரிழப்பதைத் தவிர்க்கும் நோக்கில், இராணுவத் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறு ஈரானிய மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அவசர அறிவிப்பானது, ஈரான் எந்த நேரத்திலும் ஒரு பாரிய அளவிலான போரை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றதா என்ற சந்தேகத்தை சர்வதேச அரங்கில் ஏற்படுத்தியுள்ளதுடன், ஈரானிய மக்கள் மத்தியிலும் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இராணுவத் தளங்களை விட்டு விலகுமாறு ஈரானியர்களுக்கு எச்சரிக்கை!
-
லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல்
லெபனானின் 50 கிராமங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவு! 02 Mar, 2026 | 10:12 AM ஈரான் மீதான தாக்குதல் மற்றும் கமேனியின் மறைவைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லெபனானின் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்டுள்ளது. லெபனானின் தென்பகுதி மற்றும் பெய்ரூட் புறநகர் பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. தாக்குதல் நடத்தப்படவுள்ள இலக்குகளில் இருந்து குறைந்தது 1,000 மீற்றர் தொலைவிற்கு அப்பால் செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் கமேனியின் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தது. இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பெய்ரூட்டின் தெற்குப் புறநகர் பகுதிகள் மீது இஸ்ரேல் தற்போது வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இப்போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் தரப்பு, "தமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் எந்தவொரு எதிரியும் அதற்கான விலையைத் தீர்மானமாகச் செலுத்தவேண்டியிருக்கும்" என எச்சரித்துள்ளது. இந்தத் தொடர் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். மத்திய கிழக்கில் நிலவும் இந்த யுத்தச் சூழல் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/239939
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
தமிழரை அழிக்க உதவிய ஈரான்: துன்பத்தில் பங்குகொள்ள அழைப்புவிடும் சோனகர்கள்
- Tamil hatred of the Sri Lankan Muslims
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
மத்திய கிழக்கு முழுவதும் இரான் தாக்குதல் - செளதி, இராக், குவைத், கத்தாரில் என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,Reuters 2 மார்ச் 2026, 02:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்பொலா இலக்குகளைத் தாக்கத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலை நோக்கிய ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதன் ஒரு அறிக்கை கூறுகிறது. பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 149 பேர் காயமடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெய்ரூட் மீது தாக்குதல் பெய்ரூட்டில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணிக்கு சற்று முன்பு தொடர் வெடிப்புச் சத்தங்களால் மக்கள் விழித்துக் கொண்டனர். இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா ஆயுதக்குழு வடக்கு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக அதன் இலக்குகளை இஸ்ரேலிய இராணுவம் தாக்கத் தொடங்கியது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் புகை மூட்டங்கள் எழுவதை சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்டுகிறது. விமான நிலைய சாலையிலும் வடக்கு நோக்கிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதையும், இரவு வரை நீண்ட வரிசைகள் உருவாகி இருப்பதையும் வீடியோக்கள் காட்டுகின்றன. பெய்ரூட்டில் அது இன்னும் நீண்ட இரவாக இருக்கும். விமான நிலையத்திற்குச் செல்லும் பிரதான சாலையில் தாக்கத்தை ஆன்லைனில் உள்ள பிற படங்கள் காட்டுகின்றன. சேதமடைந்த கார்கள் மற்றும் உடைந்த கண்ணாடிகள் தெருவில் உள்ளன, ஆனால் சேதத்தின் அளவு தெளிவாகத் தெரியவில்லை. ஹெஸ்பொலா இரானுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இஸ்ரேலிய பொதுமக்களை குறிவைப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் ஒரு அறிக்கையில் குற்றம் சாட்டியிருந்தது. "அந்த குழுவின் முடிவுக்கு" எதிராக செயல்படுவோம் என்றும், ஹெஸ்பொலா வடக்கு இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. ஹெஸ்பொலாவின் நடவடிக்கைகள் லெபனானுக்கு மேலும் அழிவை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும், தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு வலுவாக பதிலடி கொடுத்து வருவதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது. பட மூலாதாரம்,Houssam Shbaro/Anadolu via Getty Images படக்குறிப்பு,பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் கார்கள் இஸ்ரேலை தாக்கியதை உறுதிப்படுத்தியது ஹெஸ்பொலா லெபனானில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியதாக ஹெஸ்பொலா உறுதிப்படுத்தியுள்ளது. இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக அந்த குழு கூறியுள்ளது. இது "சட்டபூர்வமான தற்காப்பு நடவடிக்கை" என்றும் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு ஏவுகணை தளத்தில் "துல்லியமாக இலக்கைத் தாக்கும் ராக்கெட்டுகள் மற்றும் டிரோன்களின் கூட்டத்தை" ஏவியதாக ஹெஸ்பொலா கூறியது. ஆனால் இஸ்ரேலிய இராணுவத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய பிரதேசத்தில் திறந்தவெளியில் அந்த ஏவுகணைகள் விழுந்தன. ஷியா முஸ்லிம் அரசியல் மற்றும் இராணுவக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு இரானின் வலுவான ஆதரவு உள்ளது. இந்த குழு இஸ்ரேலின் இருப்பையே எதிர்க்கிறது. பட மூலாதாரம்,Anwar AMRO / AFP via Getty Images படக்குறிப்பு,காமனெயிக்கு அஞ்சலி செலுத்த பெய்ரூட்டில் ஹெஸ்பொலா ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் திரண்ட மக்கள் லெபனான் பிரதமர் எச்சரிக்கை தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவதற்கு எதிராக எச்சரிக்கும் வகையில் லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். "தெற்கு லெபனானில் இருந்து ராக்கெட்டுகளை ஏவுவது ஒரு பொறுப்பற்ற மற்றும் சந்தேகத்திற்கிடமான செயலாகும், இது லெபனானின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல்களைத் தொடர சாக்குப்போக்குகளை வழங்குகிறது," என்று அவர் கூறுகிறார். இஸ்ரேலும் லெபனானும் 2024 இல் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் பேரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன, இது இஸ்ரேல் - ஹெஸ்பொலா இடையே ஓராண்டுக்கும் மேலாக நீடித்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனாலும் அப்போதிருந்தே இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறியதாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். 13 மாத மோதலைத் தொடர்ந்து வந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், லெபனானில் ஹெஸ்பொலாவுடன் தொடர்புடைய இலக்குகள் என்று கூறி இஸ்ரேல் கிட்டத்தட்ட தினசரி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்கப் படைகள் தளம் கொண்டுள்ள இராக்கின் எர்பில் சர்வதேச விமான நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அன்று கரும்புகை எழும்புவது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. தாக்குதலைத் தொடரும் இரான் செளதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சகம், நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் ராஸ் தனூரா சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அருகில் பறந்த இரண்டு டிரோன்கள் இடைமறிக்கப்பட்டபோது விழுந்த சிதிலங்களால் சிறிய அளவு சேதம் ஏற்பட்டதாக செளதி பிரஸ் ஏஜென்சி கூறியுள்ளது. பிபிசி உறுதிப்படுத்திய வீடியோவில், சுத்திகரிப்பு நிலையத்தில் தீ மற்றும் அதிக அளவில் புகை எழுவது காணப்படுகிறது. செளதி அரேபியா நீண்ட காலமாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. சனிக்கிழமை, சௌதி அரசு இரான் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. பட மூலாதாரம்,Social media தோஹாவில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக வந்த செய்திகளைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் துபையிலும் வெடிச்சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பிரெஞ்சு செய்தி நிறுவனமான ஏஎஃப்பி (AFP) தெரிவித்துள்ளது. வடக்கு இராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எர்பில் விமான நிலையத்திற்கு மேலே மூன்று ஆயுதம் ஏந்திய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கப் படைகள் தளம் கொண்டுள்ள அந்த விமான நிலையத்திற்கு அருகே பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நடந்துள்ளது பட மூலாதாரம்,AFP via Getty Images குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அல்லது அதன் அருகில் கரும்புகை எழும்புவதாக ஏஎஃப்பி மற்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அப்பகுதியில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் காணப்பட்டதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், சமீபத்தில் வெளியாகியிருக்கும் புதிய படங்கள், குவைத் நகரத்தின் மீது புகைத் தூண்கள் எழுவது காட்டுகின்றன. அங்குள்ள அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல் நடந்திருக்கலாம் என்ற தகவல்களின் பின்னர் இது வெளியாகியுள்ளது. குவைத்தில் உள்ள அமெரிக்க குடிமக்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்றும், வீட்டிலேயே பாதுகாப்பாக தங்கிக் கொள்ளவும் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று, மத்திய கிழக்குப் பகுதியில் முழுவதும் இரான் தாக்குதல்கள் நடத்திய நிலையில், குவைத்தில் ஒருவரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் கூட்டாளியான குவைத்தில் அமெரிக்க இராணுவத் தளம் உள்ளது. தங்களை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை தடுத்து நிறுத்தியதாகவும் குவைத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், குவைத்தில் அமெரிக்க விமானம் தாக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. "இன்று காலை பல அமெரிக்க போர் விமானங்கள் கீழே விழுந்தன," என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானப் பணியாளர்கள் "பாதிப்பின்றி உயிர் தப்பினர்" என்றும், அவர்கள் வெளியேற்றப்பட்டு உடல்நல பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர் என்றும் அது கூறியுள்ளது. அவர்களின் உடல்நிலை "நிலையாக உள்ளது" என்றும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் "சூழ்நிலைகள்" குறித்து தனது அமெரிக்க கூட்டாளியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், சம்பவத்தின் "காரணங்கள்" குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு மத்திய கிழக்கு முழுவதும் இரான் தாக்குதல் - செளதி, இராக், குவைத், கத்தாரில் என்ன பாதிப்பு?
-
''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது - எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' - எலான் மஸ்க்
''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது - எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' - எலான் மஸ்க் Published By: Vishnu 02 Mar, 2026 | 07:49 AM ''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது. எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' என எலான் மஸ்க் தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் கூறுகையில், சூரிய ஒளியை அடிப்படையாகக் கொண்ட எதிர்காலத்தை நோக்கி சீனா வேகமாக நகர்கிறது மற்றும் மின்சாரம், இது புதைபடிவ எரிபொருட்களின் (எண்ணெய் மற்றும் எரிவாயு) தேவையை வெகுவாகக் குறைக்கும். அவர் தனது x கணக்கில் ஒரு பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "சீனாவின் மொத்த வாகனங்களில் 12% இப்போது மின்சார வாகனங்கள் (EVகள்) என்று அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது. இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் நாட்டின் எரிபொருள் விற்பனை 5.7% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ''சீனா வேகமாக சூரிய சக்தி மற்றும் மின்சார ஆற்றலுக்கு மாறுகிறது - எதிர்காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் மிகக் குறைவாகவே இருக்கும்'' - எலான் மஸ்க்
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து! Mar 2, 2026 - 01:54 PM குவைத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்கப் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அலி அல் சலேம் அமெரிக்கத் தளத்திலிருந்து சுமார் ஆறு மைல் தொலைவில், குறித்த விமானத்தின் இயந்திரம் தீப்பற்றி எரிந்தவாறு கீழே விழும் காட்சி காணொளிகளில் பதிவாகியுள்ளது. அதில் இருந்த விமானி விமானத்திலிருந்து குதித்துப் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதுடன், பின்னர் பிரதேசவாசிகள் அவருக்கு உதவியுள்ளனர். எனினும், விமானத்திலிருந்த ஆயுதக் கட்டமைப்பு இயக்குநரின் நிலைமை குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. இந்த விமானம் விபத்துக்குள்ளானமைக்கான காரணம் ஈரானிய ஏவுகணைத் தாக்குதலா அல்லது இயந்திரக் கோளாறா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இதுவரை 3 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குவைத்தில் அமெரிக்கப் போர் விமானம் விபத்து!
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
கோலியை விஞ்சி அசத்தல்: 'நீண்ட' காத்திருப்பை சாதனையாக மாற்றிக் காட்டிய சாம்சன் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரவீன் பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் 'ஜஸ்டிஸ் ஃபார் சஞ்சு சாம்சன்' (சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும்) கடந்த 10 ஆண்டுகளில், இந்த வரி சமூக வலைதளங்களில் பல முறை ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், சஞ்சு சாம்சன் ஒரு அற்புதமான செயலைச் செய்தார், அது அடிக்கடி ட்ரெண்ட் ஆகும் அந்த வரியையே மாற்றிவிட்டது. டி20 உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட காலிறுதி போன்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் விளாசி, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற உதவினார். சஞ்சுவின் இந்த இன்னிங்ஸிற்குப் பிறகு, 'இறுதியாக சஞ்சு சாம்சனுக்கு நீதி கிடைத்துவிட்டது' என்பதுதான் அதிகமாக விவாதிக்கப்பட்டது. ஆனால் 'சஞ்சு சாம்சனுக்கு நீதி வேண்டும்' என்ற ட்ரெண்டிலிருந்து 'இறுதியாக சஞ்சு சாம்சனுக்கு நீதி கிடைத்துவிட்டது' என்ற நிலைக்கு வர சஞ்சு சாம்சன் கடந்து வந்த பயணம் எவ்வளவு கடினமானது மற்றும் எவ்வளவு நீண்டது என்பதை அவரை விட யாராலும் சிறப்பாக விவரித்திருக்க முடியாது. இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, அவர் மைதானத்தில் மண்டியிட்டு அமர்ந்து, தனது நீண்ட கால கனவு நனவானது போல வானத்தை உற்றுநோக்கிக் கொண்டிருந்தார். சஞ்சு சாம்சன் எப்போதும் தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டாத ஒரு வீரராகவே அறியப்படுகிறார். ஆனால் இந்த இன்னிங்ஸ் பலவற்றை மாற்றியுள்ளது. அவர் இப்போது தனது உணர்ச்சிகளை நேரடியாக வெளிப்படுத்தியுள்ளார். போட்டிக்குப் பிறகு அவர் கூறுகையில், "இந்த இன்னிங்ஸ் எனக்கு மிக முக்கியமானது. நான் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்து, எனது நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று கனவு கண்ட நாளிலிருந்து, இதற்காகத்தான் நான் அதிகம் காத்திருந்தேன்," என்றார். நீண்ட காத்திருப்பு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சஞ்சு சாம்சன் மிக இளம் வயதிலேயே எதிர்கால நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டார். கடந்த இருபது ஆண்டுகளில் ரோஹித் சர்மாவிற்குப் பிறகு இந்தியாவில் ஏதேனும் ஒரு வீரர் மிகவும் திறமையானவராகக் கருதப்பட்டார் என்றால், அது சஞ்சு சாம்சன் தான். ரோஹித் சர்மாவைப் போலவே, சஞ்சு சாம்சனும் இயல்பாகவே புல்-ஷாட் ஆடுபவர். எந்த ஒரு சிறப்பான முயற்சியும் எடுக்காமல், வெறும் டைமிங் மூலமாகவே பெரிய சிக்ஸர்களை அடிக்கும் திறன் கொண்டவர். சஞ்சு சாம்சன் தனது 17 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது முதல் சீசனில் அவர் சிறப்பாகச் செயல்படவில்லை. இருப்பினும், அடுத்த சீசனில் பலமாக மீண்டு வந்த அவர், ஐந்து இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார். அதற்கு அடுத்த ஆண்டே, ராஜஸ்தான் ராயல்ஸ் அவருக்கு வாய்ப்பளித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சஞ்சு சாம்சனைத் தேர்ந்தெடுக்கும் போது, அப்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "சஞ்சு சாம்சன் இந்திய அணியின் எதிர்காலமாகத் திகழப் போகும் ஒரு சில வீரர்களில் ஒருவர்" என்று கூறினார். ஐபிஎல் தொடரின் தொடக்க ஆண்டுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக சஞ்சு சாம்சனுக்குப் பலன் கிடைத்தது. 2015-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார். இந்தச் சுற்றுப்பயணத்தில், இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது, ஆனால் அவரால் 19 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்பிறகு, மீண்டும் அணிக்குத் திரும்ப அவர் 2019 வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், 2024 வரை இந்திய அணியில் தனது இடத்தைப் பிடிக்க சஞ்சு சாம்சனால் முடியவில்லை. 2024-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவரால் இடம்பெற முடிந்தது. ஆனால் அப்போதும் கூட, அவர் மைதானத்தில் இல்லாமல் பெஞ்சில் தான் அமர வேண்டியிருந்தது. அந்த உலகக் கோப்பையின் போது பெஞ்சில் அமர வைக்கப்பட்ட கோபமோ என்னவோ, பின்னர் அணியின் ஆடும் லெவனில் இடம் கிடைத்தவுடன் வெறும் ஐந்து டி20 சர்வதேச போட்டிகளில் அவர் மூன்று சதங்களை விளாசினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2024 உலகக் கோப்பையின் போது சஞ்சு சாம்சன் டக்அவுட்டிலேயே இருந்தார். ஆனால், அப்போதும் கூட அணியில் அவரது இடம் உறுதி செய்யப்படவில்லை. இத்தகைய சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகும், அவர் அணியின் பரிசோதனைகளில் ஒரு பகுதியாகவே நீடித்தார். கடந்த ஆண்டு, அவரை டாப் ஆர்டரில் விளையாட வைப்பதற்காக சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரர் இடத்திலிருந்து மிடில் ஆர்டருக்கு மாற்றப்பட்டார். சுப்மனுக்கான தரப்பட்ட வாய்ப்புகள் பலன் தராத நிலையில், உலகக் கோப்பைக்கு சற்று முன்பு மீண்டும் அவருக்குத் தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கப்பட்ட போது, அவரது ஃபார்ம் சரிந்திருந்தது. நேற்றைய ஆட்டத்திற்கு முந்தைய 12 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. பின்னர் இந்த உலகக்கோப்பையின் தொடக்கத்தில், இஷான் கிஷன் பலமாக மீண்டு வந்து, இந்திய அணியில் சாம்சனின் இடத்தைப் பிடித்துவிட்டார். இரண்டு போட்டிகளுக்கு முன், அபிஷேக் சர்மாவின் மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் கேப்டன் சூர்யகுமாரிடம் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்று கேட்கப்பட்ட போது அவர் எப்படிப்பட்ட அனுபவத்தைக் கடந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். அதற்கு கேப்டன் சூர்யகுமார், "அப்படியென்றால் அபிஷேக்கிற்குப் பதிலாகவோ அல்லது மூன்றாவது வரிசையில் திலக்கிற்குப் பதிலாகவோ அவரை விளையாட வைக்கச் சொல்கிறீர்களா?" என்று கேட்டார். இந்தப் பதிலைக் கூறிவிட்டு சூர்யகுமார் சிரித்தார். ஆனால், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் தோல்வி, சஞ்சு சாம்சன் மீண்டும் அணிக்குள் வருவதற்கான வழியை திறந்துவிட்டது. அதன்பிறகு கேப்டன் சூர்யகுமார் தனது வார்த்தைகளை மாற்றிக்கொண்டது மட்டுமல்லாமல், போட்டிக்கு பிறகு மைதானத்திற்குள் நுழையும் போது தனது தொப்பியைக் கழற்றி தலைவணங்கி சஞ்சு சாம்சனின் திறமையை அங்கீகரித்தார். சஞ்சு சாம்சன் இந்தியாவிற்கு அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தபோது, சூர்யகுமார் கூறுகையில், "காத்திருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நான் எப்போதும் சொல்வேன். இந்திய அணிக்காக விளையாடாத போது அவர் செய்த கடின உழைப்பினால்தான் இது சாத்தியமானது. இப்போது அதற்கான பலனை அவர் அறுவடை செய்துள்ளார்," என்றார். ' என்னால் இதைச் செய்ய முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே இருந்தேன்' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சஞ்சு சாம்சன் 11 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான போதிலும் 60 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கடந்த 10-12 ஆண்டுகளில் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தபோது தான் எதையெல்லாம் கடந்து வந்தேன் என்பது குறித்துப் பேசிய சஞ்சு சாம்சன், "எனது பயணம் எண்ணற்ற ஏற்றத்தாழ்வுகளுடன் சிறப்பானதாக இருந்தது. நான் எப்போதும் என்னையே சந்தேகித்தேன். என்னால் முடியுமா, என்னால் இதைச் செய்ய முடியுமா என்று நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருந்தேன்," என்றார். "ஆனால் இந்தச் சந்தேகங்களுக்கு மத்தியிலும், முடிவுக்கு வராத ஒன்று இருந்தது, அது நம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி. இப்போது நான் எனது ஆசிர்வாதங்களைப் பெற்றுள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்"என்றார் அவர். "நான் இந்த வடிவத்தில் பல வருடங்களாக விளையாடி வருகிறேன். நான் ஐபிஎல் தொடரில் 12 ஆண்டுகளாகவும், இந்திய அணியுடன் 10 ஆண்டுகளாகவும் இருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் எனக்கு விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இந்த நேரத்தில் நான் டக்அவுட்டில் இருந்தேன். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பது மிகவும் முக்கியமாக இருந்தது. இது எனக்கு நிறைய உதவியது" என்றும் குறிப்பிட்டார். சஞ்சு சாம்சன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியில், ஒரு நல்ல தொடக்கம் கிடைத்த பிறகும் பொறுப்பற்ற ஷாட்களை ஆடி அடிக்கடி ஆட்டமிழப்பதாகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை, அவரது ஆட்டத்தில் ஒரு தெளிவான மாற்றம் தெரிந்தது. போட்டிக்குப் பிறகு ஹாட்ஸ்டாரில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், சஞ்சு சாம்சன் இதற்கு முன் இப்படி பேட்டிங் செய்து தான் பார்த்ததில்லை என்று கூறினார். பந்தை காற்றில் பறக்கவிட்டு லாங் ஷாட்களை அடிக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, அவர் தரைப்பகுதியில் ஷாட்களை ஆட முயன்றார். அத்துடன், தனது விக்கெட்டையும் அவர் இழக்கவில்லை. அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "அணிக்கு மிகவும் தேவைப்பட்ட நேரத்தில் சஞ்சு சாம்சன் நிதானத்தை கடைபிடித்தார். அவர் மீண்டும் அணிக்குத் திரும்பியதிலிருந்து, ஒரு வித்தியாசமான அணுகுமுறையுடன் மைதானத்திற்கு வருகிறார். இந்த இன்னிங்ஸ் அற்புதமானது, ஏனென்றால் இந்தியா ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்திருந்தது. அவர் தனது விளையாடும் பாணியை மாற்றியுள்ளார். நிதானம் என்ற அந்த ஒரு வார்த்தை தான் அனைத்தையும் மாற்றியது"என்றார். போட்டிக்குப் பிறகு தனது ஆட்டத்தில் செய்த மாற்றங்கள் குறித்தும் சஞ்சு சாம்சன் பேசினார். அவர் கூறுகையில், "ஆரம்பத்தில், நாங்கள் விக்கெட்டுகளை இழந்து கொண்டிருந்தோம். நான் பார்ட்னர்ஷிப்களை உருவாக்க முயற்சித்தேன். அந்த நேரத்தில், அடுத்த பந்தைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன். அனைத்து கேள்விகளுக்கும் மத்தியில், நான் என்னை நம்பினேன், பந்து எப்படி வந்ததோ அப்படியே விளையாடினேன். அது எனக்குக் கை கொடுத்தது," என்றார். பட மூலாதாரம்,Getty Images கோலியை விஞ்சி சாம்சன் படைத்த சாதனை டி20 உலகக் கோப்பையில் இலக்கைத் துரத்தும்போது , இந்தியாவிற்காக மிகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடிய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக, 2016-ல் விராட் கோலி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஆட்டமிழக்காமல் 82 ரன்களும், 2022-ல் பாகிஸ்தானிற்கு எதிராகவும் ஆட்டமிழக்காமல் 82 ரன்களும் எடுத்திருந்தார். கோலியை விஞ்சி, டி20 உலகக் கோப்பையில் இலக்கைத் துரத்தும் போது அதிக ரன் சேர்த்த இந்திய வீரராக தற்போது சஞ்சு சாம்சன் உருவெடுத்துள்ளார். அதனால்தான் சஞ்சு சாம்சனின் இந்த இன்னிங்ஸ் சமூக வலைதளங்களிலும் பெரிதும் பாராட்டப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சஞ்சு சாம்சனின் 97 ரன்கள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சாம்சனுக்கு பாராட்டு விளையாட்டுச் செய்தியாளர் பரத் சுந்தரேசன் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டிருந்தார். அதில், "அனைத்து அழகான பவுண்டரிகளுக்கு மத்தியிலும், சஞ்சு சாம்சனின் தோழமை உணர்வு அவரது இன்னிங்ஸை முன்னோக்கி எடுத்துச் சென்றது. அவர் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் சென்றார் மற்றும் உலகக் கோப்பையின் மறக்க முடியாத இன்னிங்ஸ்களில் ஒன்றை விளையாடினார்" என்று கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். "வாழ்வா சாவா என்ற நிலையில் இருந்த ஒரு போட்டியில் சஞ்சு சாம்சன் இந்தியாவின் நம்பிக்கையாகத் திகழ்ந்தார். அவர் ஒருபோதும் கவனம் பெற்றவராக இருந்ததில்லை, ஆனால் அவர் ஒரு ஆட்டத்தை மாற்றியமைப்பவராக தன்னை நிரூபித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார். ஹிந்துஸ்தான் டைம்ஸின் விளையாட்டுச் செய்தியாளர் ஆஷிஷ் மாகோத்ரா சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், " சஞ்சு சாம்சன், என்ன ஒரு பயணம்" என்று கூறியுள்ளார். "சுப்மன் கில்லுக்காக சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரருக்கான இடத்திலிருந்து நீக்கப்பட்டார். கில் சிறப்பாக செயல்படவில்லை. சஞ்சு சாம்சன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் இஷான் கிஷனுக்காக அவர் நீக்கப்பட்டார். அபிஷேக்கின் மோசமான ஃபார்ம் மற்றும் வலது-இடது கை ஆட்டக்காரர்கள் கலவையின் தேவை ஆகியவை சாம்சனை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. இப்போது அவர் இந்தப் போட்டியின் நட்சத்திரமாகத் திகழ்கிறார்"என்று அவர் பதிவிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y6jyxe3rzo
-
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்! 02 Mar, 2026 | 02:22 PM காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் 06.03.2025 அன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் சேவையானது அசாதாரண காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இதன் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வழமைபோல் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் இந்த கப்பல் சேவையில் இயங்கும் என்றும் கூறப்படுகிறது. www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் ஊடாகவோ அல்லது 0212224647, 0117642117 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!
-
ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்! Mar 2, 2026 - 01:18 PM மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஓரணியில் திரண்டு வருவதுடன், ஐக்கிய அரபு அமீரகம் அங்குச் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான விசேட சலுகைகளை அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கத் தயாராக உள்ளதாகப் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட்டறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளன. நட்பு நாடுகளின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவப் பயன்படும் தளங்களை அழிப்பதற்கான தற்காப்புத் தாக்குதல்களை நடத்தத் தயாராக உள்ளதாகவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஈரானின் தாக்குதல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுப்பதற்கான திட்டங்களைப் பரிசீலித்து வருவதாக வளைகுடா நாடுகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. "பதற்றத்தைத் தணிக்க மேற்கொண்ட பலகட்ட தூதரக முயற்சிகளையும் மீறி ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. எங்களின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்" என வளைகுடா நாடுகள் தமது கூட்டறிக்கையில் எச்சரித்துள்ளன. இந்தப் போர் பதற்றம் மற்றும் விமான ரத்துச் சம்பவங்கள் காரணமாகத் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை அரசே ஏற்கும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இதன்படி, பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் ஏற்கனவே தங்கியுள்ள ஹோட்டல்களில் தங்குமிட காலத்தை இலவசமாக நீட்டித்துக் கொள்ள முடியும் என்றும், அமீரக அரசுக்கு விருந்தினர்களின் பாதுகாப்பே முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
பெருமளவு கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். நிதானமாகப் பதிலளிக்கிறேன். உங்களுடன் வாதிடும் நோக்கத்தில் அல்ல, மாறாக சில கருத்துக்களை முன்வைப்பதற்காக மட்டுமே. வேலையில் இருக்கிறேன், ஆனால் கட்டாயம் பதில் தருகிறேன். நன்றி
-
இன்று உலக தாய்மொழி தினம்
அம்மா என்ற சொல் இயற்கையில் தோன்றிய ஒன்றாகும். பிறந்த குழந்தை அழுவதும், சிரிப்பதுமாக வாயை மூடி மூடித் திறக்கின்றது. குழந்தை வாயைத் திறக்கும் போது அ என்ற ஒலி எழுகின்றது. வாயை மூடும் போது ம் என்ற ஒலி எழுகின்றது. ம்+அ. ம்ம -ம்ம -என்ற ஒலி மீண்டும் மீண்டும் வெளிவரும் போது அது அம்மா என்ற தமிழ் சொல்லைத் தருகின்றது. தமிழ்மொழி இனிமையானது, சுவையானது. அதனால்தான் பூச்சி புழுக்கள்கூட தமிழுக்குள் புகுந்து தமிழைத் தின்பதற்கு முனைகின்றன.😲
-
Paanch started following இன்று உலக தாய்மொழி தினம்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் குறிப்பிட்ட திரி சாத்திரக் குறிப்பு இல்லை. மாறாக சாத்திரம் ஏமாற்று வேலையா என்ற விவாதப் பதிவு. அத் திரியில் கருத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு திரியில் மட்டுறுத்தினர் கருத்து எழுதினாலும் அதே திரியில் கள விதிகள் அப்பட்டமாக மீறப்படும்போது அவரே தணிக்கை செய்ய முடியும்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
எல்லாம் சரி, ஐநா, நேட்டோ பங்கேற்காது இன்னொரு நாட்டை தாக்கும் உரிமையை யார் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்தது? ரஸ்சியா உக்ரேனுக்கு அடித்தால் மட்டும் குய்யோ முறையோ என்று கத்துவது!!
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
போராட்டக்காரர்களை உருவாக்கியது யார், அவர்களுக்கு பண உதவி செய்தது யார் என்று குழந்தை பிள்ளையை கேட்டாலும் சொல்லும். ஒருகாலத்தில் ஆப்பிரிக்காவிலேயே கூடிய GDP , HDI ஐ கொண்டிருந்த நாட்டை இப்படி அழித்தது யார்? அவரை கொன்றதன் காரணம் முழு ஆபிரிக்க தேசத்தையும் ஒரே நாணய (African Dollar) பரிமாற்றத்திற்குள் கொண்டுவர முயன்றதே. ராபர்ட் முகாபே ஜிம்பாப்வேயை 37 வருடங்கள் ஆண்டாரே. மேற்கு எதுவும் செய்யவில்லையே! தலிபான், அல்கயிதா, ஹமாஸ் இவர்களை எல்லாம் உருவாக்கிவிட்டது யார்?
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சரி. எற்றுக்கொள்கிறேன். களவிதிகளை மீறும் நோக்கம். எனக்கு. சிறுதுளியும் கிடையாது. இல்லை மேலும் களவிதிக்கு. முரண்பாடாபத் தான் இந்த திரி. களத்தில் அனுமதிக்கப்பட்டதா ? ஏன். அதை அனுமதித்து. மூன்று. பக்கங்கள். வரை. கருத்துகள். பதித்து. இருக்கிறார்கள். ? மேலும். ஒரு. மட்டுநிறுத்தினர். ஒரு. திரியில். கருத்தையும். எழுதிக்கொண்டு. அதே. திரியில். மட்டுநிறுத்தவும். முடியுமா. ? இதுபற்றி. களவிதிகள். என்ன சொல்கிறது. ?நன்றிகள். பல. வணக்கம். - "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.