All Activity
- Past hour
-
உயிர்த்த ஞாயிறு விசாரணை: உண்மை விரைவில் வெளிவரும் – ரில்வின் சில்வா
திருடரின் கூட்டத்திற்கு பங்குதாரிகள் போகத்தான் செய்வார்கள். இனிமேல் கம்மன்பில தனித்து விடப்படுவார். சஹ்ரானுடன் சேர்ந்து இயங்கியவர்கள் முந்நூறு பேர் இன்னும் நாட்டில் உள்ளனராம், அவர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்வு கூறுகிறார் கம்மன்பில, அது எப்படி இவருக்குத் தெரியும்? அவர்களை அடையாளம் காட்ட வேண்டியது கம்மன்பிலவின் பொறுப்பு. இல்லையென்றால் இன்னொரு குண்டுவெடிப்பிற்கு கம்மன்பில தயாராகிறார் என்பது வெள்ளிடைமலை.
-
டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!
நல்ல மகிழ்ச்சியான தகவல், செய்தியினை இணைத்துவிடுங்கள்.
-
கொழுந்துவிட்டு எரியும் இஸ்ரேல் கப்பல்.. சுற்றிவளைத்து அடிக்கும் ஈரான்..! PTD
பகிர்வுக்கு நன்றி உடையார் . .......!
-
டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!
அமெரிக்கா ஈரான் மற்றும் பிராந்திய மத்தியஸ்தர்கள் 45 நாள் போர் நிறுத்தத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு கட்ட ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டத்தில் 45 நாள் போர் நிறுத்தம் ஹோர்முஸ் கால்வாயை உடனடியாகத் திறப்பதும் அடங்கும். இறுதி ஒப்பந்தம் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தவிர்க்குமாறு ஈரானைக் கட்டாயப்படுத்துவதும் அதற்கு பதிலாக ஈரானின் மீதான தடைகள் தளர்த்தப்பட்டு முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கபடுகின்றது. இருப்பினும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு பகுதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று கருதபடுகின்றது.
-
வீதியோரம்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் நன்றி உறவுகளே ........! 😂 கணனியில் இது ஒன்றுதான் உருப்படியாய் செய்கிறேன் அதற்கு யாழ் தான் காரணம் , இல்லையென்றால் தமிழ் எழுதுவதும் மறந்து போய்விடும் .......! 😂
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ஒருத்தர் மக்களைச் சந்திக்க மாட்டாராம்.மக்கள் தேவைகளைக் காது கொடுத்துக் கேட்கமாட்டராம்.தொண்டனின் சாவுக்கு ஆற அமர இருந்து வீடியோவில் இரங்கல் செய்தி கொடுப்பாராம்.சினிமாக்காரர்களின் நிகழ்வுகளுக்கு சின்னவீட்டோடு போய் கலந்து கொள்வாராம்.ஓட்டு மட்டும் மக்கள் போட்டு தன்னை முதலமைச்சர் ஆக்க வேண்டுமாம்.பனையூரில் படுத்துக்கொண்டே தேர்தலில் நிற்கும் ஒரே அரசியல்வாதி
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
கொள்கைத் தெளிவுள்ள மக்களையும் தலைவனையும் எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியாது.வளர்ச்சி மெதுவாக இருக்கலாம்.ஆனால் சீரான உறுதியான வளர்ச்சி.வீக்கமும் வளர்ச்சியும் ஒன்றல்ல.விஜைக்கு வந்திருப்பது வீக்கம்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
இப்படியானவர்களை நீங்கள் அறிய தருவது மிகவும் நல்லது தமிழ்நாட்டின் நல்ல காலம் இவர்களும் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டி போட வரவில்லை.ஆசை வரவில்லை
- Today
-
டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!
வெடிக்கும் பிராந்திய போர்-ஈரானால் பேரதிர்ச்சி US vs Iran | 45 days ceasefire
-
கொழுந்துவிட்டு எரியும் இஸ்ரேல் கப்பல்.. சுற்றிவளைத்து அடிக்கும் ஈரான்..! PTD
கொழுந்துவிட்டு எரியும் இஸ்ரேல் கப்பல்.. சுற்றிவளைத்து அடிக்கும் ஈரான்..! PTD
-
போர் அமைதியை விட அதிக லாபமா?
போர் அமைதியை விட அதிக லாபமா? அமெரிக்கா–இஸ்ரேல் போர் ஈரானை நோக்கி மேலும் ஆழமாகச் செல்லும் நிலையில், மோதல் ஆய்வாளர் டேவிட் கீன் ஏன் சில போர்கள் தெளிவான வெற்றியின்றி நீண்டுகொண்டே செல்கின்றன என்பதை ஆராய்கிறார். அவரின் வாதம் என்னவென்றால் — போர் என்பது அரசியல் கட்டுப்பாடு, பொருளாதார நலன்கள், மற்றும் போர்க்களத்தைத் தாண்டியும் நீடிக்கும் அதிகார அமைப்புகளுக்கு பயன்படும் ஒரு கருவியாக மாறிவிடலாம். தடைச் சட்டங்கள், கடத்தல், இராணுவச் செலவுகள், ‘பயனுள்ள எதிரிகள்’ போன்ற காரணிகள் மூலம், மோதல் எப்படி ஒரு செயல்பாட்டு அமைப்பாக மாறுகிறது என்பதையும், போரை விட அமைதியை அதிகமாகக் கவர்ச்சியாக மாற்றுவது தான் உண்மையான சவால் என்பதையும் கீன் விளக்குகிறார்.
-
சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்
பி.எம்.டி என்றால் ஆங்கிலத்தில் என்ன பொருள் என்பதை கட்டுரையாளர் எங்கும் சொன்னதாக தெரியவில்லை. PMD = Post Micturition Dribble
-
உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!
கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு Apr 6, 2026 - 10:49 AM இன்று (6) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் கொத்து, ப்ரைட் ரைஸ் மற்றும் சோற்றுப் பொதியின் விலைகள் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷன் தெரிவித்துள்ளார். தேங்காய் எண்ணெய் விலை குறைவடைந்தமையினால் ஏனைய சிற்றுண்டிகளின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmnmqq2ze000e356p5octdqi0
-
-
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்
தேசிய QR ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்! (நேரலை) Apr 6, 2026 - 09:48 AM தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளது. இன்று (6) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்நிலையில். குறித்த நிகழ்வை நேரலையில் பார்வையிட, https://adaderanatamil.lk/news/cmnmoj0ox000b356phppgbr20
-
உட்கட்டமைப்புகள் மீது கைவைத்தால் அமெரிக்காவுக்கும் அதே கதிதான்! ; ட்ரம்ப்பின் அச்சுறுத்தலுக்கு ஈரான் பதிலடி
உட்கட்டமைப்புகள் மீது கைவைத்தால் அமெரிக்காவுக்கும் அதே கதிதான்! ; ட்ரம்ப்பின் அச்சுறுத்தலுக்கு ஈரான் பதிலடி Published By: Digital Desk 3 06 Apr, 2026 | 09:57 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் அச்சுறுத்தல் தற்போது ஒரு மிகப்பெரிய உட்கட்டமைப்புப் போராக உருவெடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு, ஈரான் அதே பாணியில் நேரடிப் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் இஸ்மாயில் பாகாய் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், செய்தி அறிவிப்புகள் ஈரானின் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அதற்குப் பதிலாக அமெரிக்காவுக்குச் சொந்தமான அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் அதேபோன்ற உட்கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் எந்தவொரு சொத்துக்களும் ஈரானியப் படைகளின் இலக்குகளாக மாறும் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது 'ஆக்ஸியோஸ்' (Axios) நேர்காணல் மற்றும் 'ட்ரூத் சோஷியல்' பதிவுகளில் மிகத் தீவிரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். "ஈரான் உடன்பாட்டிற்கு வராவிட்டால், அங்குள்ள அனைத்தையும் நான் தகர்த்துவிடுவேன் என அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். வரும் செவ்வாய்க்கிழமைக்குள் ஈரானின் அனைத்து எரிசக்தி மற்றும் சிவில் உட்கட்டமைப்புகளையும் அமெரிக்கா முடக்கும் என அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் மிகப்பெரிய பாலம் ஏற்கனவே தகர்க்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஈரான் ஒரு சிறந்த நாடாக மாறுவதற்கு இன்னும் வாய்ப்பு இருக்கும்போதே உடன்பாட்டிற்கு வருவது நல்லது; இல்லையேல் அழிவைத் தவிர வேறு எதுவும் மிஞ்சாது" எனக் கூறியுள்ளார். ஒருபுறம் கடும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், மறுபுறம் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு "நல்ல வாய்ப்பு" இருப்பதாக அவர் நம்புவது, போர் தவிர்க்கப்படுவதற்கான ஒரு சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/242848
-
வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்
அரச வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம் Apr 6, 2026 - 07:44 AM அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு அந்த சங்கம் கோரியிருந்தது. இந்நிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை (09) பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று அறிவித்திருந்தார். உலக சுகாதார அமைப்பின் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காகத் தாம் இன்று இந்தியா புறப்படவுள்ளதாகவும், மீண்டும் நாடு திரும்பியதும் குறித்த பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் நேற்று அத தெரண செய்திகளுக்கு தெரிவித்தார். இதனையடுத்து தமது சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnmk49yl0006356p5eylv9nt
-
உயிர்த்த ஞாயிறன்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலி
உயிர்த்த ஞாயிறன்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலி Published By: Digital Desk 3 06 Apr, 2026 | 09:34 AM உயிர்த்த ஞாயிறன்று லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 வயதுக் குழந்தை உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்து வரும் போரின் ஒரு பகுதியாக, லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிரமடைந்தன. இதில் 4 வயதுக் குழந்தை உட்பட 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. லெபனான் கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு தினத்தைக் கொண்டாடிய வேளையில், அந்நாடு இந்த மாதத்தின் மிக வன்முறையான நாளை எதிர்கொண்டது. தெற்கு லெபனானில் வெளியேறுமாறு உத்தரவிட்ட சில மணிநேரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வயதுக் குழந்தை உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் பெய்ரூட்டில் ஜனா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டதுடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிரியாவுடனான பிரதான எல்லையான மஸ்னா எல்லைச் சோதசை் சாவடி மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அந்த எல்லை மூடப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 48 மணித்தியாலக் காலவகாசம் இன்று திங்கட்கிழமை (06) அமெரிக்க நேரப்படி இரவு 08 மணியுடன் நிறைவடைகிறது. எவ்வாறாயினும், ஈரானுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு "நல்ல வாய்ப்பு" இருப்பதாகத் தான் கருதுவதாக ட்ரம்ப் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/242846
-
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்
தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் இன்று ஆரம்பம் Apr 6, 2026 - 05:28 AM இன்று (6) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் எட்டும் வகையில், "தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்" ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணத்தை (Merchant Discount Rate) முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போது இலங்கையில் மிகவும் வலுவான டிஜிட்டல் நிதி உட்கட்டமைப்பு காணப்படுவதுடன், நாட்டின் வயதுவந்த மக்களில் 89% பேருக்கு வங்கி வசதிகள் உள்ளன. மேலும், ஒரு காலாண்டில் 6.3 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான 68 மில்லியன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் CEFTS கட்டமைப்பும், 20-க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 450,000 வர்த்தக நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள LankaQR கட்டமைப்பும் தற்போது செயலில் உள்ளன. இருப்பினும், பொருளாதாரத்தில் இன்னும் 1.48 டிரில்லியன் ரூபாய் பெறுமதியான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு நிலவரப்படி, LankaQR மூலம் மாதத்திற்கு சுமார் 395,000 ரூபாய் பெறுமதியான மிகக்குறைந்த அளவிலான கொடுக்கல் வாங்கல்களே இடம்பெற்றுள்ளன. இந்த இடைவெளியைக் குறைப்பதற்காக இன்று ஆரம்பிக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் சில விசேட மூலோபாயங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன், QR பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்காக விசேட அதிர்ஷ்ட லாபப் போட்டித் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் வாராந்தம் மற்றும் மாதாந்தம் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு 1,000,000 ரூபாய் வரையிலான பெறுமதியான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தின் வெற்றிக்காக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேசிய அளவிலான பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சமூக கற்புல சுட்டெண் மூலம் இத்திட்டத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொழில்நுட்ப ரீதியான ஒரு நடவடிக்கை மட்டுமல்லாது, நாட்டின் எதிர்கால கொடுப்பனவு முறையை டிஜிட்டல் மயப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொருளாதாரமாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். QR கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக வேகமான, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் பரிமாற்றம் பழக்கத்தை ஏற்படுத்தி எந்தப் பிரதேசத்தில் வாழ்ந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் பங்காளிகளாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். https://adaderanatamil.lk/news/cmnmf9br60000356pb1box43u
-
புதன்கிழமை அரச விடுமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்!
புதன்கிழமை அரச விடுமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்! Apr 5, 2026 - 07:31 PM ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியினால் இன்று (05) மாத்தறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர்ச் சூழலால் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் தற்போது வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். எனவே, விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட புதன்கிழமையை மீண்டும் வேலை நாளாக மாற்றுவதற்கும், QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க முறைமைகளை நீக்கி நிலைமையை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் கூறினார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் ஏற்கனவே புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தினோம். ஆரம்பத்தில் ஓரிரு வாரங்கள் சிரமங்கள் இருந்தன, வரிசைகள் உருவானது உண்மைதான். இதனால் உடனடி நடவடிக்கையாக QR முறைமை மற்றும் ஒற்றை-இரட்டை இலக்க விநியோக முறையை அறிமுகப்படுத்தினோம். புதன்கிழமையை விடுமுறை நாளாக அறிவித்தோம். தற்போது வரிசைகளை இல்லாமல் செய்துள்ளோம். QR மற்றும் ஒற்றை-இரட்டை முறைமைகள் தற்போது சிறப்பாகச் செயற்படுகின்றன. இன்னும் சில நாட்களில் அந்த முறைகள் தேவையில்லை என்றால், அவற்றை நீக்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். புதன்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நிலைமை சீரானதும் தேவையேற்படும் போது மீண்டும் வேலைகளை ஆரம்பிப்போம். எரிபொருள் கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாலேயே அந்த நேரத்தில் அத்தகைய முடிவுகளை எடுத்தோம். ஆனால் இப்போது அச்சப்படத் தேவையில்லை. ஏப்ரல் மாதத்தில் மேலும் 9 கப்பல்கள் வரவுள்ளன என அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmnltwq1g0009356pq4kovm71
-
உயிர்த்த ஞாயிறு விசாரணை: உண்மை விரைவில் வெளிவரும் – ரில்வின் சில்வா
உயிர்த்த ஞாயிறு விசாரணை: உண்மை விரைவில் வெளிவரும் – ரில்வின் சில்வா Published By: Vishnu 05 Apr, 2026 | 07:32 PM (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் பற்றி முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில பிரதான சூத்திரதாரிகள், பிரதான சூத்திரதாரி யார்? என்பது பற்றி நூல் வெளியிடுகிறார்கள். நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பல பிரதான சூத்திரதாரிகள் சென்றிருந்தார்கள். உண்மை வெகுவிரைவில் வெளிவரும். ஆகவே கலக்கமடைய தேவையில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். வவுனியாவில் ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்ற 55 ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மக்களுக்காகவே எமது தோழர்கள் உயிர்நீத்தார்கள். 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரசியல் உரிமைகளுக்காக நாங்கள் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டோம்.எமது போராட்டம் மனித குலத்துக்கு எதிரானதாக அமையவில்லை. நாங்கள் எந்தவொரு இனத்துக்கோ அல்லது மதத்துக்கோ எதிரானதல்ல, எமது ஜனநாயக போராட்டத்தை 1970 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கம் எமக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டு எமது போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்தது. அந்த போராட்டத்தில் உயிரிழந்த எமது தோழர்கள் நாட்டுக்காக தியாகம் செய்தார்கள். பாரிய போராட்டத்துக்கு பின்னர் ஜனநாயக ரீதியில் ஆட்சியமைத்துள்ளோம். நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்கள் இன்று பொருளாதார மேம்பாடு பற்றி பேசுகிறார்கள்.பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கடுமையாக செயற்பட வேண்டும்.அனைவரும் அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய எதிர்க்கட்சியினர் இன்று அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். இன்று தூய்மையானவர்களை போன்று ஊழலுக்கு எதிராக பேசுகிறார்கள். ஒரு குடும்பத்தின் ஊழல் மோசடியால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. இதன் பின்னரும் அவர்கள் ஊழல் பற்றி பேசுவது ஆச்சியரியமாக உள்ளது. நடப்பு உலகளாவிய நிலைவரங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.மத்திய கிழக்கின் மோதல் நிலைமையை அரசாங்கம் என்ற ரீதியில் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அந்த மோதல்களால் ஏற்படும் நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கு கூடிய அவதானம் செலுத்த வேண்டும். எரிபொருள் தட்டுப்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளன. உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும். நெருக்கடி நிலைமையின் போது எரிபொருளை பதுக்கி வைத்து அவற்றை அதிக விலைக்கு விற்று பயனடைய வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் தவறானது. நாடு என்ற ரீதியில் மாற்றமடைய வேண்டுமாயின் தனிநபரின் செயற்பாடுகள் மற்றும் சிந்தனைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்தையும் எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் தான் இன்று உள்ளார்கள். உலகில் வேறெந்த நாடுகளிலும் இவ்வாறானதொரு எதிர்க்கட்சிகள் இல்லை. நாட்டை அழித்தாவது ஆட்சியை கைப்பற்றவே நினைக்கிறார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்களை தினசரி முன்வைக்கிறார்கள். ஒருசில ஊடகங்கள் அந்த பொய்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும்.மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என்று குறிப்பிட்டார்கள். இந்த மாதத்தில் அவர்களின் எண்ணம் நிறைவேறுமா என்பதை நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கமாட்டார்கள்.மாறாக அரசாங்கத்தை பாதுகாக்கவே வீதிக்கு இறங்குவார்கள். மத்திய கிழக்கின் மோதல் நிலைமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நெருக்கடி நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி அதில் சுகபோகமாக வாழும் மனநிலை அரசாங்கத்தில் எவருக்கும் இல்லை. ஏனெனில் இது மக்களாட்சி அரசாங்கம். உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் பற்றி முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒருசில பிரதான சூத்திரதாரிகள், பிரதான சூத்திரதாரி யார்? என்பது பற்றி நூல் வெளியிடுகிறார்கள். நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பல பிரதான சூத்திரதாரிகள் சென்றிருந்தார்கள். உண்மை வெகுவிரைவில் வெளிவரும். ஆகவே கலக்கமடைய தேவையில்லை. அரசாங்கத்தின் மீது திட்டமிட்ட வகையில் குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றுக்கு நாங்கள் ஒருபோதும் பலவீனமடையமாட்டோம்.ஏனெனில் பல ஆண்டுகாலமாக நாங்கள் இவ்வாறான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம்.ஆகவே விமர்சனங்களால் அரசாங்கத்தை எவராலும் வீழ்த்த முடியாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்கிறேன். அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். நாட்டின் அடிப்படை பிரச்சினைகளுக்கு நாங்கள் தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/242819
-
அமெரிக்காவின் C-130 விமானம் மற்றும் 2 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீட்பு நடவடிக்கையின் போது தாக்குதல் - ஈரான் தெரிவிப்பு
அமெரிக்கா 2-வது வீரரை மீட்ட போது இரு ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்களை இரான் சுட்டு வீழ்த்தியதா? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்க மீட்பு நடவடிக்கையின்போது அழிக்கப்பட்டதாக இரான் கூறும் விமானத்தின் பாகங்கள், இரானிய அரசுத் தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. கட்டுரை தகவல் கேப்ரியெலா போமெராய் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானின் தொலைதூரப் பகுதியில் தனது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போன விமானப் படையை சேர்ந்த ஒருவரை, அமெரிக்க ராணுவம் வியப்பூட்டும் நடவடிக்கையின் மூலம் மீட்டுத்துள்ளது. சரியான சூழல்கள் இன்னும் தெளிவாக இல்லை; எனினும், எதிரிப் பிரதேசத்தில் இருந்து அவரை மீட்கும் அந்த நடவடிக்கை மிகவும் சிக்கலானதாக அமைந்திருந்தது. இந்தத் திட்டத்தில், சிஐஏ-வுடன் (CIA) இணைந்து, சிறப்புப் படைகளும், அமெரிக்கப் போர் விமானங்களும் ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டிருந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில், "இரானின் மலைப்பகுதிகளுக்கு நடுவே, படுகாயமடைந்தவரும், உண்மையிலேயே வீரமிக்கவருமான எஃப்-15 விமானப் பணிக்குழு உறுப்பினர்/அதிகாரியை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம்." என பதிவிட்டிருந்தார். ஆயுதங்களை கையாளும் அதிகாரி மற்றும் விமானியுடன் சென்ற எஃப்-15 ரக போர் விமானம், தெற்கு இரானின் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்த விமானிக்கு சோதனையான காலகட்டம் தொடங்கியது. கடந்த 20 ஆண்டுகளில் எதிரித் தாக்குதலால் அமெரிக்கப் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும். எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் (Strike Eagle) விமானத்தில் இருந்த அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த இருவராலும் விமானத்திலிருந்து வெற்றிகரமாக வெளியேற முடிந்தது; விமானி அதே நாளில் மீட்கப்பட்டார். இரண்டாவது வீரர் காணாமல் போனார். அமெரிக்கா அவரைக் கண்டுபிடிப்பதற்காக துரிதமாக செயல்படத் தொடங்கியது. இரான் அவரை உயிருடன் பிடிக்க விரும்புவதை தெளிவுபடுத்தியதுடன், 50,000 பவுண்டுகள் (66,100 டாலர்கள்) சன்மானத்தையும் அறிவித்தது. பிபிசியால் சரிபார்க்கப்படாத, சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள், ஆயுதம் ஏந்திய பொதுமக்கள் அவரைத் தேடுவதைக் காட்டுவது போல் தோன்றின. அந்த அதிகாரி தரையில் விழுந்த பிறகு, தன்னைத் தற்காத்துக்கொள்ள அவரிடம் ஒரு கைத்துப்பாக்கி மட்டுமே இருந்தது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்காகப் பயிற்சி பெற்றிருப்பார். அதில் தனது எச்சரிக்கை சிக்னலை (beacon) இயக்குவது, உயரமான இடத்திற்குச் செல்வது, தன்னை மறைத்துக்கொள்வது மற்றும் தகவல் தொடர்பை ஏற்படுத்துவது ஆகியவை அடங்கியிருக்கும். படக்குறிப்பு,வெள்ளிக்கிழமையன்று தெற்கு இரானின் வான்பரப்பில், ஒரு அமெரிக்க விமானமும் ஹெலிகாப்டர்களும் பறப்பதை ஒரு காணொளி காட்டுவதாகத் தெரிகிறது. அமெரிக்க ஊடகச் செய்திகளின்படி, அவர் ஒரு மலை இடுக்கில் தன்னை மறைத்துக் கொண்டதுடன், இரான் தனது சிக்னலை பின்தொடரக்கூடும் என்று அஞ்சி, தனது கருவியின் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார். அதன் பிறகு, அவர் தன்னை மீட்பவர்கள் வருவதற்காகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, மீட்பு நடவடிக்கையில் சிஐஏ (CIA) முக்கியப் பங்கு வகித்தது. அந்த விமானியின் துல்லியமான இருப்பிடத்தை ஒரு மலை இடுக்கில் கண்டறிந்து, அந்தத் தகவலை பாதுகாப்பு துறைக்கு தெரியப்படுத்தியது அமெரிக்க உளவு முகமைதான். மீட்பு நடவடிக்கையைத் திட்டமிட்டுக் கொண்டிருந்த அமெரிக்க அதிகாரிகளால், அவரது இருப்பிடம் "24 மணி நேரமும்" கண்காணிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார். டிரம்ப் மேலும் கூறுகையில், "அந்த அதிகாரி, ஒவ்வொரு மணி நேரமும் மேலும் மேலும் நெருங்கி வந்துகொண்டிருந்த எங்கள் எதிரிகளால் பின்தொடரப்பட்டார்," என்று கூறினார். அமெரிக்கப் படைகள் இரண்டாவது விமானியை ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டதாக இரானுக்குள் செய்தியைப் பரப்பி, சிஐஏ ஒரு ஏமாற்று நடவடிக்கையையும் முன்னெடுத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. "அவரை மீட்டுவர அமெரிக்க ராணுவம் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் கொண்ட டஜன்கணக்கான விமானங்களை, அனுப்பியது" என்று அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தனித்து விடப்பட்ட அந்த அதிகாரியை நோக்கி அமெரிக்கச் சிறப்புப் படைகள் முன்னேறிச் சென்ற போது, இரானியப் படைகளை அவரது இருப்பிடத்திலிருந்து விலக்கி வைப்பதற்காகக் குண்டுகளும் ஆயுதங்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புக் குழுவினரை வெளியேற்றுவதற்காக அனுப்பப்பட்ட இரண்டு போக்குவரத்து விமானங்கள், இரானுக்குள் அமைந்திருந்த ஒரு தொலைதூரத் தளத்திலிருந்து புறப்பட இயலாமல் போனதாகவும், அவை எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்குழுவினரை மீட்டு வருவதற்காக, சிறப்புப் படையினர் கூடுதலாக மூன்று விமானங்கள் மூலம் அங்கு சென்றதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்தன. பிபிசி வெரிஃபையால் உறுதி செய்யப்பட்ட காணொளிகளும் புகைப்படங்களும், மத்திய இரானின் மலைப்பாங்கான பகுதியில் இஸ்ஃபஹான் நகரத்திலிருந்து தென்கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் புகைந்து கொண்டிருந்த விமானச் சிதைவுகளைக் காட்டுவதாகத் தெரிந்தன. இரானிய ராணுவம், இந்த நடவடிக்கையின் போது இரண்டு அமெரிக்க C-130 ராணுவப் போக்குவரத்து விமானங்கள் மற்றும் இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தது; "தெற்கு இஸ்ஃபஹானில் உள்ள ஒரு கைவிடப்பட்ட விமான தளத்தில் மேற்கொள்ளப்பட்ட 'ஏமாற்று மற்றும் தப்பித்தல்' நோக்கம் கொண்ட ஒரு பணி... முழுமையாக முறியடிக்கப்பட்டது" என்றும் கூறியது. காணாமல் போன விமானப்படையை சேர்ந்த 2-வது நபரை தேடிக் கொண்டிருந்தபோது, இஸ்ஃபஹான் நகருக்கு மேலே பறந்த அமெரிக்க ஆளில்லா விமானத்தை, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையைச் (IRGC) சேர்ந்த வீரர்கள் சுட்டு வீழ்த்தியதாக இரானிய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. இஸ்ஃபஹான் அருகே நடந்ததாக கூறப்படும் நிகழ்வுகள் குறித்த இந்த இரு தகவல்களையும் பிபிசி-யால் உறுதிப்படுத்த முடியவில்லை. பட மூலாதாரம்,Reuters அமெரிக்க நேரப்படி நள்ளிரவுக்கு முன்னதாகவே மீட்புப் பணி நிறைவடைந்ததாகவும், அவர் மருத்துவ சிகிச்சைக்காக குவைத்துக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த அதிகாரி "பலத்த காயமடைந்துள்ளார்" என்றாலும், "அவர் முழுமையாக குணமடைந்துவிடுவார்" என்று டிரம்ப் கூறினார். மீட்கப்பட்ட போது அவர் இருந்த துல்லியமான இடம் குறித்தோ, அல்லது அவரது அடையாளம் குறித்தோ அமெரிக்க அதிகாரிகள் எவ்விதத் தகவலையும் வெளியிடவில்லை. அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அதிகாரியும், ஓய்வுபெற்ற கடற்படை தலைவருமான வில்லியம் ஃபாலன், மீட்புப் பணியின் வெற்றிக்கு "அதன் நேரம்" அநேகமாகச் சாதகமாக அமைந்திருக்கக் கூடும் என்று பிபிசியிடம் தெரிவித்தார். "இருள் எங்கள் வீரர்களுக்குச் சாதகமானது; ஏனெனில், இரவு நேரங்களில் செயல்படுவதில் அவர்கள் நன்கு பழகியவர்கள்." எதிரி பிரதேசத்திற்கு மேலே பறக்கும்போது, "தாக்குதலுக்கு உள்ளாகும் நபராக இருக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும்" என்று ஃபாலன் கூறுகிறார். ஞாயிற்றுக்கிழமை 00:00 EDT (04:00 GMT) மணிக்குச் சற்று முன்னதாக, இரண்டாவது வீரர் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. "அமெரிக்கப் வீரர் ஒருவரையும் ஒருபோதும் கைவிடமாட்டோம்!" என்று டிரம்ப் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை தோல்வியடைந்ததாக இரான் உறுதிபடக் கூறியுள்ளது. இரானின் முதன்மை ராணுவக் கட்டளையகத்தின் செய்தித் தொடர்பாளரான இப்ராஹிம் ஸோல்ஃபாகரி, ஒரு காணொளியில், அமெரிக்க ராணுவ விமானங்கள் பல அவசரமாகத் தரையிறங்க நேர்ந்ததாகத் தெரிவித்தார். "தாமே தொடங்கிவைத்த போர் மற்றும் ஆக்கிரமிப்பு எனும் சகதியில் சிக்கிக்கொண்ட அந்த அறியாமை கொண்ட அதிபர்... எந்தவொரு ஆக்கிரமிப்பும், தரைவழி நடவடிக்கையும் அல்லது ஊடுருவலும்... தீர்க்கமான மற்றும் அவமானகரமான தோல்வியை எதிர்கொள்ளும் என்பதை முழுமையாக உணர்ந்துகொண்டார்," என்று அவர் கூறினார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... குறிப்பாக, அந்த விமானி மீட்கப்பட்டுவிட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்ததிலிருந்து, "தோல்வியடைந்த" நடவடிக்கை குறித்த இந்த வாதம் இரானிய அதிகாரிகளாலும், அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியாலும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இரானிய எல்லைக்குள் ஒரு எஃப்-15இ போர் விமானம் இழக்கப்பட்டதையும், அதைத் தொடர்ந்து சில மீட்பு விமானங்கள் அழிக்கப்பட்டதையும், அமெரிக்க வான்படையின் வரம்புகளைச் சுட்டிக்காட்டும் நிகழ்வுகளாகச் சில அமெரிக்கப் பகுப்பாய்வாளர்கள் விவரித்துள்ளனர். அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையத்தின் முன்னாள் தளபதியான ஜெனரல் ஃபிராங்க் மெக்கென்சி, பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ்-ஸிடம் பேசுகையில், "அந்தப் பணியின்போது நாங்கள் உண்மையில் ஓரிரு விமானங்களை இழந்தோம்" என்று தெரிவித்தார்; இருப்பினும், இதுபோன்ற ஒரு சூழலில் அத்தகைய இழப்பை "எந்த நாளிலும்" ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். "ஒரு விமானத்தை உருவாக்க ஓராண்டு ஆகும்; ஆனால், யாரையும் கைவிடாத ஒரு ராணுவ மரபை உருவாக்க 200 ஆண்டுகள் ஆகும்," என்று அவர் சிபிஎஸ்-இன் ஃபேஸ் தி நேஷன் (Face The Nation) நிகழ்ச்சியில் தெரிவித்தார். படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y9j52wve8o
-
வைத்தியர்களின் வேலைநிறுத்தம் குறித்து அமைச்சர் விளக்கம்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சர் திகதி நிர்ணயித்தார் Published By: Vishnu 06 Apr, 2026 | 12:04 AM வேலைநிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, வியாழக்கிழமை (9) அன்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) கலந்துரையாடலை நடத்தத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்தபோது அவர் இவ்வாறு கூறினார்; உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திங்கட்கிழமை (6) இந்தியா புறப்படவிருப்பதாகவும், திரும்பி வந்தவுடன் இதுகுறித்த கலந்துரையாடலை நடத்துவதாகவும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/242829
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
ஹாட்ரிக் தோல்வி: சிஎஸ்கே அணிக்கு நெருக்கடிக்கு மத்தியில் தெரியும் தூரத்து வெளிச்சம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சூப்பர் கிங்ஸின் செயல்பாடு ரசிகர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது (கோப்புப் படம்) கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் சிஎஸ்கே முன்னாள் வீரர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐபிஎல் சீசனில் தொடர்ந்து மூன்றாவது போட்டியாக தோல்வியை சந்தித்திருக்கிறது. 250 என்ற மிகப் பெரிய இலக்கை சேஸ் செய்த சூப்பர் கிங்ஸ் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது. டாஸ் மற்றும் பந்துவீச்சின்போது முதல் 6 ஓவர்கள் இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக இருந்தன. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஓரளவு சாதகமாக இருக்க, சிஎஸ்கே பௌலர்கள் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். அதிகம் விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் சிக்கனமாகப் பந்துவீசினார்கள். பவர்பிளேவில் ஆர்சிபி அணி 51 ரன்களே எடுத்தது. ஆனால், அதன்பிறகு எதுவுமே சூப்பர் கிங்ஸுக்கு சாதகமாகச் செல்லவில்லை. பவர்பிளேவில் அவ்வளவு சிறப்பாகப் பந்துவீசிவிட்டு கடைசியில் 250 ரன்கள் விட்டுக்கொடுப்பது என்பது மிகவும் ஏமாற்றம் தடுவதாக இருந்தது. சிஎஸ்கே-வுக்கு பேட்டிங் பலமாக இருக்கிறது, பந்துவீச்சுதான் பிரச்னை என்று முன்பே பேசியிருக்கிறோம். ஆனால், இப்படியான செயல்பாடு மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கிறது. சூப்பர் கிங்ஸ் பௌலர்களால் சரியான லென்த்தில் பந்தை பிட்ச் செய்ய முடியவில்லை. சீராக அவர்களால் செயல்பட முடியவில்லை. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது 'X Factor' என்பதே இந்த அணியின் பந்துவீச்சில் இல்லை. நூர் அஹமதுக்கு இந்த ஆடுகளத்தில் பந்து சுழலவில்லை. அதனால் அவரை ஆர்சிபி பேட்டர்கள் எளிதாகக் கையாண்டுவிட்டார்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டெத் ஓவர்களில் சூப்பர் கிங்ஸ் பௌலர்களால் சோபிக்க முடியவில்லை (கோப்புப் படம்) அதேசமயம் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரேமாதிரியாகவே செயல்படுகிறார்கள். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அஷோக் ஷர்மா மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுகிறார். லக்னோ அணியில் கூட பிரின்ஸ் யாதவ் மிரட்டலாக செயல்படுகிறார். அதுபோன்ற பௌலர்கள் சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை. அனைவருமே மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசுபவர்களாகவே இருக்கிறார்கள். அதிவேகம் இல்லை, வேரியேஷன்கள் இல்லை - இதெல்லாம் இன்று டி20 கிரிக்கெட்டில் மிகவும் முக்கியம். பேட்டர்களின் அதிரடிக்கு சிஎஸ்கே பந்துவீச்சாளர்களிடம் பதிலே இருப்பதாகத் தெரியவில்லை. நிறைய பந்துகளை ஸ்லாட்டிலேயே வீசினார்கள். யார்க்கர்கள் அதிகம் வீசவில்லை. அன்ஷுல் கம்போஜ் ஒரு யார்க்கரை மிகச் சிறப்பாக வீசினார். ஆனால், அதுவும் நோ பாலாக மாறிவிட்டது. சூப்பர் கிங்ஸ் பௌலர்களின் வீரியமற்ற பந்துவீச்சை ஆர்சிபி பேட்டர்களும் இதை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். தேவ்தத் படிக்கல் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பாக ஆடினார். அந்த ஃபார்மை தற்போது ஐபிஎல் அரங்கில் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். சால்ட் ஒரு நல்ல தொடக்கம் கொடுத்திருந்தார். கேப்டன் ரஜத் பட்டிதார் ஒரு மிகமுக்கிய வீரராக அந்த அணிக்கு உருவாகியிருக்கிறார். கடைசி கட்டத்தில் டிம் டேவிட் ஒவ்வொரு பந்தையுமே மாயமாக மறைய வைத்துக் கொண்டிருந்தார். அந்த அணியின் ஒவ்வொரு பேட்டருமே இந்தப் போட்டியில் அனுபவித்து பேட்டிங் செய்தனர். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானது, பெரிய ஸ்கோர் எடுக்கக்கூடியது என்றாலும், 250 என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே அல்ல. சூப்பர் கிங்ஸ் பௌலர்களால் விக்கெட் எடுக்கவும் முடியவில்லை. ரன்களைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. எதிரணி பேட்டர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவும் முடியவில்லை. அவர்கள் இந்தப் போட்டிகளில் எந்தவித நேர்மறையான தாக்கத்தையுமே ஏற்படுத்திடவில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,போராட்ட குணத்தையும் காட்டாமல் பெரும் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது சிஎஸ்கே (கோப்புப் படம்) இந்த பௌலிங் செயல்பாட்டுக்குப் பிறகு தான் மீண்டும் அவர்கள் ஏலத்தில் எடுத்த முடிவுகள் மீது பார்வை திரும்புகிறது. இரண்டு இளம் வீரர்களை வாங்கியது நல்ல விஷயம் தான். ஆனால், இருவருக்கும் தலா 14.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. குறைந்தபட்சம் ஒருவரை மட்டும் அவ்வளவு செலவு செய்து வாங்கிவிட்டு, மீதித் தொகையை ஒரு தரமான பந்துவீச்சாளரில் முதலீடு செய்திருக்கலாம். அதிவேகமாக வீசும், வேரியேஷன்கள் காட்டும் ஒரு பௌலரை வாங்க அந்தத் தொகையை முதலீடு செய்திருக்கலாம். ஏலத்தில் அப்படி நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆனால், சிஎஸ்கே அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறவிட்டது. இதற்கு நேர்மாறாக இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பந்துவீச்சு. ஹேசில்வுட் இடத்தை ஜேக்கப் டஃபி சிறப்பாக நிரப்பிக் கொண்டிருக்கிறார். நல்ல பவுன்சர்கள் வீசுகிறார்கள். ரன் கொடுத்தாலும், புதிய பந்தில் விக்கெட்டுகள் எடுக்கிறார். புவனேஷ்வர் குமார் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தற்போது 200 ஐபிஎல் விக்கெட்டுகள் கைப்பற்றிவிட்டார். குருனால் பாண்டியாவோ பவுன்சர் வீசுவது, சைட் ஆர்ம் வீசுவது என்று என்னென்னவோ செய்கிறார். பேட்டர்களை குழப்பிக் கொண்டிருக்கிறார். இது பார்ப்பதற்கு முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு நல்ல முடிவுகளைக் கொடுக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பிரச்னையைப் பற்றித்தான் சீசன் தொடங்கியது முதல் பேசியிருக்கிறோம். பேட்டிங் நன்கு பலமாக இருக்கிறது என்று நினைத்திருந்தவர்களுக்கு அங்கேயும் சில பிரச்னைகள் எட்டிப்பார்க்கவே செய்கிறது. ஒரு மிகச் சிறந்த டி20 உலகக் கோப்பைக்குப் பின் வந்த சஞ்சு சாம்சன் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் அந்த உலகக் கோப்பை ஃபார்மை ஐபிஎல்லில் சூப்பர் கிங்ஸுக்கு எடுத்து வர முடியாமல் தடுமாறுகிறார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இன்னும் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடிடவில்லை. கடந்த போட்டியில் அரைசதம் அடித்த இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவும் இந்தப் போட்டியில் விரைந்து வெளியேறினார். நெருக்கடியான சூழ்நிலை அவர்களின் செயல்பாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 250 போன்ற ஸ்கோரை சேஸ் செய்யும் போது ஒவ்வொரு டாட் பாலுமே கூட மலையளவு நெருக்கடியை அதிகரிக்கும். அதனால், அவர்கள் எல்லா பந்துமே அடிக்க முயற்சி செய்யவேண்டும். ஆனால், அது இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸுக்கு பலன் தரவில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தோனி களத்தில் இல்லாததும் சூப்பர் கிங்ஸுக்கு பின்னடைவாக அமைந்திருக்கிறது (கோப்புப் படம்) "பிரெவிஸ், தோனி இல்லாதது பெரும் குறை" இன்னொரு முக்கியமான விஷயம் டெவால் பிரெவிஸ் மற்றும் மஹேந்திர சிங் தோனி ஆகியோரையும் சிஎஸ்கே மிஸ் செய்கிறது. பிரெவிஸ் மிடில் ஆர்டரில் அணிக்குப் பெரும் உத்வேகம் கொடுத்திருப்பார். கடைசி கட்டத்தில் தோனியின் ஹிட்டிங் அணிக்கு வலுசேர்த்திருக்கும். ஆனால், அவை இரண்டுமே தற்போது இல்லாமல் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் களத்தில் தோனியின் அனுபவம் இல்லாததுமே சூப்பர் கிங்ஸுக்குப் பின்னடைவு தான். அவர் களத்தில் இருந்தால் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும். சிஎஸ்கே அணிக்கு நம்பிக்கை தரும் விஷயங்கள் இந்த பிரச்னைகள் இருந்தாலும் சர்ஃபராஸ் கானின் செயல்பாடு தூரத்தில் தெரியும் ஒளிபோல் இருக்கிறது. அவர் தனி ஆளாக அந்த டாப் ஆர்டரில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவர் தங்கம் போல. அடிப்படை விலையான 75 லட்ச ரூபாய்க்கு அவர் கிடைத்தார். சையது முஷ்தாக் அலி தொடரில் அவர் ஆடிய விதம் பிரமாதமாக இருந்தது. அப்படியொரு செயல்பாட்டுக்குப் பின் அவரை எப்படி 75 லட்ச ரூபாய்க்கு எடுக்க முடிந்தது என்று நான் ஆச்சர்யப்பட்டேன். சூப்பர் கிங்ஸுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் அது. இப்போது பார்த்தால் அவர்தான் 14 கோடி ரூபாய் வீரரைப் போல் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அவரால் லேப் ஷாட்கள் ஆடமுடியும். ஸ்கொயர் திசைக்கு முன்னாலும் ஆடமுடியும். தற்போது நன்கு ஃபிட்டாகவும் மாறியிருக்கிறார். நிச்சயமாக சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசன் போகப்போக அவர் மிகவும் முக்கியமான வீரராகத் திகழ்வார். சிஎஸ்கேவுக்கு இன்னொரு பாசிடிவ் என்றால் அது லோயர் மிடில் ஆர்டரில் பிரஷாந்த் வீர் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரின் செயல்பாடு. பந்துவீச்சில் அதிக ரன்கள் கொடுத்திருந்தாலும் ஓவர்டன் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறார். அவர் விளையாடிய 2 போட்டிகளிலுமே அவர் நல்ல பங்களிப்பைக் கொடுத்தார். அதேபோல் இளம் பிரஷாந்த் வீர் தன்னிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒரு பேட்டிங் செயல்பாட்டைக் காட்டினார். ஆரம்பத்தில் மெதுவாக இன்னிங்ஸைத் தொடங்கினாலும் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை பின்னர் காட்டினார். இந்த விஷயங்கள் நிச்சயம் சூப்பர் கிங்ஸுக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல விஷயங்கள். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பலமானது என்று கருதப்பட்ட சிஎஸ்கே-வின் பேட்டிங்கிலும் சில பிரச்னைகள் இருக்கின்றன (கோப்புப் படம்) 'போராட்ட குணம் அவசியம்' எப்படிப் பார்த்தாலும் சூப்பர் கிங்ஸ் அணி சரி செய்ய வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. இன்னும் அவர்கள் 11 லீக் போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கிறது. அதனால் விரைவில் செய்யப்படும் மாற்றங்கள் நன்மை விளைவிக்கலாம். அதேசமயம் இது ஒரு வீரரின் திறனில் மாற்றம் கொண்டு வரக்கூடிய காலகட்டமும் அல்ல. அவர்களின் மன உறுதியில் மாற்றம் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். அதற்கு முக்கியமாக களத்தில் போராட்ட குணத்தைக் காட்டத் தொடங்கவேண்டும், வெற்றி பெறத் தொடங்கவேண்டும். இதற்கு முன்பும் சூப்பர் கிங்ஸ் இப்படியான சூழ்நிலைகளில் இருந்திருக்கிறது. 2010ல் இப்படி கடினமான சூழ்நிலைகளில் இருந்து வந்து கோப்பையையே வென்றிருக்கிறார்கள். ஆனால், அப்போது அணி இருந்த மனநிலையே வேறு. தோல்வியே பெற்றாலும் எப்படி தோற்கிறோம் என்பது முக்கியம். சூப்பர் கிங்ஸின் இந்தத் தோல்விகள் மிகவும் மோசமாக வந்திருக்கின்றன. விளையாடிய 3 போட்டிகளிலுமே அந்த அணி படுதோல்வி அடைந்திருக்கிறது. எதிரணிகள் மிகவும் எளிதாக வென்றிருக்கிறார்கள். இந்த வீரர்கள் எந்தவொரு போட்டி மனப்பான்மையையும் காட்டாமல், தயார் நிலையிலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த இடத்தில் ஆர்சிபி முற்றிலும் மாறுபட்ட அணியாக இருக்கிறது. கிரிக்கெட் நம்பிக்கையால் தீர்மானிக்கப்படும் விளையாட்டு என்பார்கள். அந்த வகையில் ஆர்சிபி-யின் நம்பிக்கை அளவுகடந்து இருக்கிறது. அனைத்துத் துறைகளிலுமே அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். மீண்டும் கோப்பை வெல்லக்கூடிய அணியாகத் தெரிகிறார்கள். இந்த இடத்தில் அவர்களின் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளாரின் பங்களிப்பைப் பற்றி குறிப்பிட்டாகவேண்டும். தடுமாறும் ஒரு அணியை தூக்கி நிறுத்துபவர் தான் சிறந்த பயிற்சியாளர். ஆண்டி ஃபிளார் ஆர்சிபி-யை அப்படித் தூக்கி நிறுத்தியிருக்கிறார். உதாரணமாக 2024 சீசனில் முதல் 8 போட்டிகளில் அந்த அணி 7 போட்டிகளைத் தோற்றிருந்தது. ஆனால், அதன்பிறகு 6 போட்டிகளை வென்று அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதிலிருந்து அவர்கள் கொஞ்சம் கூட பின்தங்கவேயில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சிஎஸ்கே - ஆர்சிபி: இரு அணிகளின் பயணங்களும் வெவ்வேறு துருவங்களில் இருக்கின்றன (கோப்புப் படம்) 'எதிரெதிர் திசையில் பயணிக்கும் சிஎஸ்கே, ஆர்சிபி' ஐபிஎல்லில் அதிக கவனம் பெறும் இந்த இரண்டு அணிகளும் எதிரெதிர் திசையில் பயணிக்கின்றன. ஆர்சிபி ஐபிஎல் கிரிக்கெட் உலகின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சூப்பர் கிங்ஸோ உச்சத்தில் இருந்து பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியுமே இந்த இரு அணிகளின் சமீபத்திய பயணத்தின் பிரதிபலிக்காகவே இருந்தது. நான் சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தவன். அது ஒரு மிகச் சிறந்த சூழலாக இருந்திருக்கிறது. ஆனால், இப்போது அது பெருமளவு மாறியிருக்கிறது. ஒரு முன்னாள் வீரராக இது எனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக இருக்கிறது. இருந்தாலும் இது மிகப் பெரிய தொடர். இன்னும் 11 லீக் போட்டிகளில் விளையாட வேண்டியிருக்கிறது. அதனால் இங்கு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகவே இருக்கிறது. விரைவில் சூப்பர் கிங்ஸ் எழுச்சி பெற்று அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவோம். ஆனால், சூப்பர் கிங்ஸ் அணியும் வீரர்களும் நம்பிக்கையோடு இருந்தால் மட்டும் போதாது. களத்தில் தாக்கம் ஏற்படுத்தவேண்டும். (இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல்19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy01vn1lq92o
-
குழந்தைகள், சிறுவர்களை AI மூலம் உருவாக்கும் ஆபத்தான காட்சிகள்
குழந்தைகள், சிறுவர்களை AI மூலம் உருவாக்கும் ஆபத்தான காட்சிகள் --- ---- --- * 2026 இல் உருவான யுனிசெப் விதிகளின் படி தண்டனைக்குரிய குற்றம்.... * இந்திய தொழில்நுட்ப சட்டத்தில் தடை * ஐரோப்பிய - பிரித்தானிய விதிகளின் பிரகாரம் அது குற்றச் செயல் * 2025 இல் இலங்கை ஊடக அமைப்புகள் உருவாக்கிய ஒழுக்க கோவைகள் - அரசாங்கம் பரிசீலிக்கிறது. . *சட்டங்கள் விதிகளை விட மனசாட்சி - சமூக பொறுப்பு முக்கியம் ---- ---- ---- சமூக வலைத்தளங்களில், குறிப்பாக தமிழ் நாட்டு சமூக வலைத்தள பதிவுகளில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் - குழந்தைகள் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI மூலம் நகைச்சுவை மற்றும் விளம்பர காட்சிகளை உருவாக்கி வெளியிடுகின்றனர். வயதான மனிதர்கள் பேசுகின்ற திருமண விடயங்கள், விவாகரத்து மற்றும் கணவன் - மனைவி குடும்பச் சண்டைகள் போன்றவற்றை, 4 - 5 வயது குழந்தைகளின் மழலை மொழியில் நகைச்சுவையாக வெளியாகி வருகின்றன. இச்செயல்கள் மிகச் சமீபகாலமாக, இந்திய சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இது சமூகத்தில் பாரிய எதிர் விளைவுகளை தோற்றுவிக்கும் அபாயம் உள்ளது. இவை, 2026 ஆம் ஆண்டு யுனிசெப் UNICEF உருவாக்கிய பத்து விதிகளை உள்ளடக்கிய ஒழுக்க கோவைகளில் (Discipline Coimbatore) தண்டனைக்குரிய குற்றமாகும். சிறுவர்கள், குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் எந்த ஒரு காட்சிகளையும் AI மூலம் தயாரிப்பதற்கு யுனிசெப் தடை விதிக்கிறது. பிரித்தானியா, இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புதிய விதிகளை உருவாக்கியுள்ளன. ஆனால், இது பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வோருக்கு தெரிவதில்லையா? குறிப்பாக தமிழக சமூக வலைத்தள பதிவர்களுக்கு இது புரிவதில்லையா? அல்லது வந்தாரை வாழ வைக்கும் “தமிழ் நாடு” என்று புகழ் பாடிக் கொண்டு சென்னை நகரில் வேலை தேடி வரும் மாற்று மொழி பேசுவோரின் சதித் திட்டமா இது? IT Rules எனப்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளின் பிரகாரம், 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் புதுப்பிக்கப்பட்ட ஒழுக்க கோவைகள், சிறுவர்கள் - குழந்தைகள் ஆகியோரை பயன்படுத்தி AI மூலம் காட்சிகள் தயாரிப்பதை தடை செய்கிறது. இந்திய குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் (Protection of Children from Sexual Offences - POCSO) மூலம் கடும் தண்டனை வழங்கப்படும். சிறுவர்களை வைத்து AI காட்சிகள் தயாரிக்கப்படுவது, இச் சட்டத்தினால் தடுக்கிறது. பிரித்தானியாவில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் (Online Safety Act - 2023, 2024) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவர்கள் - குழந்தைகள் பற்றிய காட்சிகள் எதையும் தயாரிக்க முடியாது. 2025 ஆம் ஆண்டு ஜூலை முதல், சிறுவர்கள் - குழந்தைகள் பற்றிய விடயங்களை பதிவு செய்யவது தண்டனைக்குரிய குற்றமாகும். குறிப்பாக, பிரித்தானியாவில் ஆபாசம், தற்கொலை, உணவு பழக்கங்கள் தொடர்பான காட்சிகள் பற்றிய வயது சரிபார்ப்பு (Age Assurance) கடுமையான விதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதேநேரம், டிஜிற்றல் சேவை (Digital Services Act - EU) எனப்படும் ஐரோப்பிய ஒன்றிய சட்டம், சிறுவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்வதை தடை செய்துள்ளது. அது தண்டனைக்குரிய குற்றமாகும். சிறுவர்களை வைத்து நகைச்சுவைக் காட்சிகள் தயாரிக்கவும் முடியாது... அவுஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கிறது. சிறுவர்கள் - குழந்தைகளை வைத்து காட்சிகளை தயாரிக்கவும் முடியாது. அதேவேளை, இலங்கையின் ஊடக அமைச்சு மற்றும் ஊடக அமைப்புகள் 2025 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ஒழுங்கு விதிகளின் (Code of Media Ethics) படி, குழந்தைகளின் அறியாமை - அப்பாவித்தனம் ஆகியவற்றை வர்த்தக ரீதியாகவோ அல்லது தவறான முறையிலோ பயன்படுத்த முடியாது... வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில் 16 வயதுக்கு உட்பட சிறுவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை புதிய ஒழுக்க கோவைகளை தயாரித்து வருகிறது. ஏனெனில், இலங்கையில் 2024 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிகழ்நிலைக் காப்பு சட்டத்துக்கு (Online Safety Act) ஊடக அமைப்புகளும், சிவில் சமூக அமைப்புகளும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. சிறுவர் உரிமைகள் பற்றிய யுனிசெப் ஒப்பந்தத்தத்தை இலங்கை 1991 ஆம் ஆண்டு ஏற்றுக் கொண்டது. இதனால் சிறுவர்கள் - குழந்தைகள் குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தடுக்க முடியும். சமூக வலைதள கட்டுப்பாடுகள் இலங்கையில் சட்ட ரீதியாக இல்லை. ஊடக ஒழுக்க விதிகளில் மாத்திரமே உண்டு. கடந்த ஆண்டு ஊடக அமைப்புகள் நடத்திய உரையாடலில் இந்த விடயங்கள் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. கொழும்பில் ஊடக அமைப்புகள் இது பற்றி தொடர்ந்து விவாதித்து வருகின்றன. ஐ.நா விதிகளின் பிரகாரம், யுனிசெப் ஒழுக்க கோவைக்கு ஏற்ப இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறுவர்கள் - குழந்தைகள் போன்றோரை பயன்படுத்த முடியாது. அதாவது சிறுவர்கள் - குழந்தைகள் பற்றிய உள்ளடக்கப் பாதுகாப்பு விதி முறைமைகள் (Content Moderation) வயதுக் கட்டுப்பாடுகள் (Age Restrictions) ஐ.நா விதிகளின் பிரதான அம்சமாகும். இது உலக பொது விதி என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளும் இச் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியும்... அதேவேளை, விதிகள் - ஒழுக்க கோவைகள் மற்றும் சட்டங்கள் என்பதை விடவும் மனசாட்சி, சமூகப் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் முக்கியமானதாகும். அச்சு மற்றும் இலத்திரனியல் பிரதான ஊடகங்களில் (mainstream media) பணியாற்றும் செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் ஊடக ஒழுக்க விதிகளை விடவும் தத்தமது மனசாட்சிக்கு ஏற்ப நடைமுறை விவகாரங்கள் (Current Affairs) பற்றிய விடயங்களில் அவதானமாக செயற்பட்டு வருகின்றனர். ஆனால், இப் பொறுப்பை சமூக வலைத்தள பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது. சட்டங்கள் - ஒழுக்க விதிகள் ஊடாக மாத்திரமே அவர்களை கட்டுப்படுத்த முடியும். அதேநேரம், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் பலர் பொறுப்புடன் செயல்படுவதையும், யூரியூப் சனல்களில் செய்திகள் - விமர்சனங்களை பதிவேற்றம் செய்யும் சில செய்தியாளர்கள், ஊடகத்துறையில் பணியாற்றிய சிலர் பொறுப்புடன் செயற்படுவதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும். குறிப்பு - (A) பிரித்தானியாவில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் குறைந்த நான்கு வருடங்களாக பொதுமக்கள் - ஊடகத்துறை வல்லுநர்கள், பிரதான ஊடகங்களின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலருடனும் கலந்துரையாடி 2023 - 2024 இல் உருவாக்கப்பட்டது. குறிப்பு - (B) இலங்கையில் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை குறிப்பிடட சிலர் அறை ஒன்றுக்குள் கூடியிருந்து நான்கு மாதங்களில் உருவாக்கினர். இதன் காரணமாக ஊடக அமைப்புகள் - சிவில் அமைப்புகள் எதிர்த்தன. அதாவது, தொழில்முறை பத்திரிகையாளர்களை (Professional Journalists) திட்டமிட்டுக் கட்டுப்படுத்துகிறது. அத்துடன் அரசாங்கத்துக்கு எதிரான ஜனநாயக போராட்டங்கள் - தமிழர்கள் அரசியல் உரிமைப் போராட்டங்கள் ஆகியவற்றையும் அது தடுக்கிறது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0sUgjoSftLWtafxjWnnVNUUJgg83wUpqYbUPwVNCKMmevCk6Ci5Jgzz9V8EBMUP6dl/?mibextid=wwXIfr
-
ஈழப்பிரியன் started following குழந்தைகள், சிறுவர்களை AI மூலம் உருவாக்கும் ஆபத்தான காட்சிகள்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
வேற வழி இல்லை… தர்க்கம் பிழைத்தால்….. முட்டியை தூக்குவதுதானே உங்கள் modus operandi 😂 நீங்கள் சொன்னது பச்சை பொய் என நான் கூறி அதற்கு ரஞ்சித் சாட்சியம் கூறியும் பல நாட்கள் ஆகி விட்டது. நீங்கள் எல்லாம் கொள்கை பற்றி கதைக்கும் வரை இந்த நினைவூட்டல் தொடரும். இறைவா….எழுதிய ஒரு கருத்தை இல்லை என பொய் சொல்ல என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது சிலருக்கு😂.