All Activity
- Past hour
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
வாய்ப்பில்லை ராஜா. 😂 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனக்கு இந்தப் போட்டியில் யார் இந்தியாவை வெல்வார்களோ அவர்கள் தான் வெல்ல வேண்டும்.மற்றும்படி இரண்டு அணிகளும் எனக்கு பிடித்தவை தான்.
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
வெனிசுவெலாகாரனை தூக்கின மாதிரி, ஈரான்காரனுக்கு இருந்த இடத்திலேயே "டொட்" வைச்சமாதிரி ....... நம்ம ரஷ்யன்காரனுக்கும் ஏதாவது சம்பவங்கள் செய்ய சாத்தியம் உள்ளதா சார்? 🤭
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்று ஒருத்தருக்கும் புள்ளிகள் கிடைக்காது போலிருக்கு🙂 SA (12.2/20 ov) 85/5 NZ New Zealand chose to field. CRR: 6.89 • Last 5 ov (RR): 32/3 (6.40)
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந்து முட்டுக் கட்டையைப் போட்டுவிட்டார்கள்.
-
"ஈரான் எந்தத் தலைவரை நியமித்தாலும் அவரும் எங்கள் இலக்கு" - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்
"ஈரான் எந்தத் தலைவரை நியமித்தாலும் அவரும் எங்கள் இலக்கு" - இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Published By: Vishnu 04 Mar, 2026 | 06:30 PM ஈரானால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு தலைவரும் எந்த சந்தேகமும் இல்லாமல் அழிக்கப்பட வேண்டிய எமது இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் எந்தத் தலைவரை நியமித்தாலும் அவரும் எங்கள் இலக்கு
-
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
நீங்கள் மேற்கூறிய அனைத்தும் எல்லா இனங்களிலும்,நாடுகளிலும் இருக்கின்றது.நீங்கள் கூறியதை வைத்துக்கொண்டு தான் இன்றைய உலகில் போர்களும், எல்லைச்சண்டைகளும் நடந்து கொண்டிருக்கின்றன.அதில் வெற்றி பெறுபவன் தான் வீரனாகவும் பலசாலியாகவும் மதிக்கப்படுகின்றான்.😎 மதவெறி, வரட்டு கௌரவம், வெட்டி வீரம், முட்டாள்தனமான பழமைவாதம் இவை இல்லாத சூழல் வேண்டுமாயின் பூமியை விட்டு அண்ட வெளியில் வேறு ஏதாவது கிரகத்தில் தேடிப்பாருங்கள். 😉
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
1954 - 2003 வரை இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் தூண்டப்பட்ட முஸ்லிம் ஊர்காவல்படை, காடையர்கள் மற்றும் ஜிகாத் ஆல் தென்தமிழீழம் வாழ் தமிழர்களுக்கு செய்யப்பட்ட அட்டூழியங்களின் வரலாறுகள்:
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன? பட மூலாதாரம்,Mashregh News / File Photo படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் தினுக் ஹேவாவிதரனா பிபிசி சிங்கள மொழி சேவை 4 மார்ச் 2026, 11:43 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானின் கடற்படை கப்பல் ஒன்று இலங்கையின் காலே துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் மூழ்கியது. இரானிய கப்பல் மூழ்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, இலங்கை பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தற்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இரானிய போர்க்கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடலில் அமெரிக்கா மூழ்கடித்ததாக" தெரிவித்தார். "அக்கப்பல் நீர்மூழ்கிக் குண்டால் மூழ்கடிக்கப்பட்டது" என அவர் தெரிவித்தார். ஆனாலும், தாக்குதலுக்கு உள்ளான இரானிய கப்பலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அதே சமயம், இலங்கையில் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் கப்பல் மூழ்கியதாக வெளியான செய்திகளை நிராகரிப்பதாகவும், மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புதிகா சம்பத் முன்னர் தெரிவித்திருந்தார். இலங்கையின் பாதுகாப்பு துறை செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் இதனை உறுதி செய்தார். காயமடைந்த 32 பேர் காலே தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்த 140-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என, சம்பத் துய்யகொந்தா பிபிசியிடம் தெரிவித்தார். நீர்மூழ்கி தாக்குதல் என்பதை மறுத்த இலங்கை கடற்படை இரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் தான் காரணம் என்கிற செய்தியை தாங்கள் முற்றிலும் மறுப்பதாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்தார். இன்று செய்தியாளர் சந்திப்பின்போது வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி, இரானிய கப்பல் நீர்முழ்கி தாக்குதலுக்கு உள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளதா என்கிற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கடற்படை தரப்பிலிருந்து இந்தக் கூற்றை முழுவதுமாக நிராகரிக்கிறோம்." என்றார். ''விபத்து நேர்ந்த விதம் தொடர்பில் பின்னரான காலத்தில் நடத்தப்படும் விசாரணைகளின் ஊடாகவே உறுதிப்படுத்த முடியும். விசேட நிபுணத்துவத்துடனான விசாரணை குழு, தொழில்நுட்ப விசாரணைகள் குழுவின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அதற்காக அதிகாரம் உள்ள நிறுவனங்கள் தொடர்புப்பட வேண்டும். வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவலை நிராகரிக்கின்றோம்." என்று கூறினார். இரானிய கப்பலின் நிலை பற்றி பிபிசி சிங்களா விசாரித்தபோது, கடற்படை சென்ற சமயத்தில் கப்பல் முழுவதும் மூழ்கியதாக அவர் தெரிவித்தார். "அபயக் குரல்கள் எங்களுக்கு கிடைத்தபோது சம்பவம் நடந்த இடத்திற்கு கடற்படை கப்பல் சென்றடைந்தன, ஆனால் அங்கு எண்ணெய் படலங்கள், சில உயிர்காக்கும் படகுகளை மட்டுமே கண்டோம். அங்கு எந்த இரானிய கப்பலும் இல்லை. அது மூழ்கியிருந்தது." என்றும் தெரிவித்தார். கப்பல் மூழ்கியதற்கான காரணத்தை தற்போது வரை இலங்கை ராணுவத்தால் உறுதிசெய்ய முடியவில்லை. தொடர்ந்து பேசிய அவர், "விபத்துக்குள்ளான கப்பலில் காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.32 பேரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளோம். தொடர்ந்தும் தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன." என்றார். கப்பல் மூழ்கி வரும் இடத்திலிருந்து சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "'இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த கடலை அண்மித்த பகுதியிலிருந்து உயிரிழந்த சில மனித உடல்களை நாங்கள் மீட்டுள்ளோம். இந்த சடலங்கள் கப்பலில் கடமையாற்றிய ஊழியர்களுடையதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம். எனினும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஊடாகவே இந்த சடலங்கள் இந்த கப்பலில் பணியாற்றியவர்களுடையதா என்பது உறுதிப்படுத்தப்படும்.'' என அவர் குறிப்பிடுகின்றார். கப்பல் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை - பாதுகாப்பு இணை அமைச்சர் இரானிய கப்பல் விபத்தில் சிக்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார். "கடற்படை இதனை விசாரித்து வருகிறது. காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதே நேரத்தில், உறுதியான காரணத்தை எங்களால் கண்டறிய முடியவில்லை," என்று அவர் கூறினார். கப்பலின் நிலை பற்றி தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். காயமடைந்தவர்களின் நிலை என்ன? கப்பலில் இருந்தவர்களில் காயமடைந்த 32 பேர் காலே தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் எஸ்.டி.யு.எம் ரங்கா பிபிசியிடம் தெரிவித்தார். "32 நோயாளிகள் உள்ளனர். பலருக்கு வெட்டுக் காயங்களும், தீக்காயங்களும் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரின் நிலை மோசமான நிலையில் உள்ளது. 7 பேருக்கு மிதமான அளவிலும் மற்றவர்களுக்கு சிறிய அளவிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயம் ஏற்பட்டதற்கான காரணத்தை உறுதியாக கூற முடியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார் அந்தக் கப்பல் குழுவினரை மீட்க இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை கூட்டாக இணைந்து செயல்பட்டதாகவும் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார். இலங்கையின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அந்தக் கப்பல் ஆபத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். கப்பலில் உள்ள குழுவினரை மீட்க இலங்கை கடற்படை கப்பல் ஒன்று அனுப்பப்பட்டதாக, கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திகா சம்பத் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ள இலங்கை விமானப் படையின் விமானம் இன்று (மார்ச் 4) அனுப்பப்பட்டதாக, விமானப் படை செய்தித் தொடர்பாளர் நலின் வெவாகும்புரா தெரிவித்தார். காலை 5 மணிக்கு கிடைத்த தகவல் இரானிய கடற்படைக்குச் சொந்தமான ஐஆர்ஐஎஸ் டேனா "விபத்துக்கு உள்ளானதாக" இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் நாடாளுமன்றத்தில் கூறினார். இன்று காலை 05:08 மணிக்கு கப்பல் மூழ்குவதாக கடற்படைக்கும் கடலோரக் காவல் படைக்கும் தகவல் கிடைத்தது என்றும் அவர் தெரிவித்தார். காலை 6 மணிக்கு இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை தலையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். "6 மணிக்கு முதல் கடற்படை கப்பல் சென்றது, 7 மணிக்கு இரண்டாவது கப்பல் சென்றது. இந்த மீட்புப் பணியில் விமானப்படையும் கடற்படையும் ஈடுபட்டது," என்றார் விஜிதா ஹெராத். கப்பலில் 180 பேர் வரை இருந்ததாகவும் 30 பேர் தீவிர ஆபத்தில் இருந்ததாகவும் தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் இரானிய கடற்படையின் 86 பிரிவைச் சேர்ந்தது. மிகவும் பேசப்பட்ட இந்தக் கப்பல் 2022-2023 ஆண்டுகளில் இரானிய கடற்படையின் பலத்தைக் காட்டுவதற்காக உலகம் முழுவதும் 65,000 கிமீ கடல் பயணத்தை மேற்கொண்டது. இந்தக் கப்பல் முழுவதும் இரானால் உருவாக்கப்பட்டது. இரானின் பண்டர் அப்பாஸில் உள்ள ஷாஹித் டார்விஷ் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 1,500 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 95 மீட்டர் நீளம் கொண்டது. இந்தக் கப்பலில் நூர் அல்லது காதர் என்று அழைக்கப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 76 மிமீ ஃபஜர்-27 கடற்படை துப்பாக்கி, 30மிமீ ஆயுத அமைப்பு, ஆயுதங்கள் மற்றும் தளத்திலிருந்து வான் நோக்கிச் செலுத்தும் ஏவுகணைகள் ஆகியவை உள்ளன. உலகளாவிய வர்த்தகத்தை காப்பதிலும் கடற்கொள்ளையை எதிர்கொள்வதிலும் மற்றும் நீண்ட தூர கடற்சார் திட்டங்களை நடத்துவதிலும் இரானின் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது என இரான் கடற்படை தெரிவிக்கிறது. இந்தியா வந்திருந்த கப்பல் இந்தக் கப்பல் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி இந்தியாவில் விசாகப்பட்டினம் வந்திருந்தது. இந்திய கடற்படையின் எக்ஸ் தளப் பதிவின் படி, இந்த கப்பல் கடற்படை பயிற்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன?
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானிய கொடியை அணிந்த முஸ்லிம் ஒருவரால் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட ஈழத்தமிழ் பெண் ... இஸ்லாமிய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட ஈழத்தமிழ் பெண்ணிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.. இதெல்லாம் எங்கட ஆக்களுக்கு கண்ணுக்கு தெரியாது. தன்ர வீட்டுக்கு நடந்தால் மட்டும் தான் ரத்தம் .... (இதுக்கும் ஒரு -1 பார்சல் பிளீஸ்)
-
Savithan San... A Tamil female killed in US by a Muslim shooter
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இது விபத்துக்குள்ளாகவில்லை. அமெரிக்க நீர் மூழ்கி கப்பலில் இருந்து torpedo தாக்குதலின் மூலம் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
- Today
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
காத்தான்குடி போராளிகளை ஈரானுக்கு ஏற்றிச் செல்ல வந்த ஈரான் போர்க்கப்பல் இலங்கைக்கு அருகே தாக்குதலுக்கு உள்ளானது. 😂 Inuvaijur Mayuran
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இலங்கைக்கு அருகில் முல்லாக்களின் போர்க்கப்பல் ஒன்று நீர்மூழ்கி தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது... மொத்த கலக்குழு (crew) 180 பேரில் 150 பேர் வரை காணாமல் போயுள்ளனராம்... எங்கும் அடி எதிலும் அடி... 🤣🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தற்போது ஈரான் போரை வழிநடாத்திக் கொண்டிருக்கும் முப்படை தளபதிகள். !! 😂 யாழ்ப்பாணம்.com
-
ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!
ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை! இலங்கையில் ஒரே பாலினத்தவர் (LGBTQ+) சமூகத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்த வழக்கில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை எடுத்துள்ள முக்கிய கொள்கை முடிவு இன்று நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அல்லது மேம்படுத்தும் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) கொள்கை ரீதியான தீர்மானம் எடுத்துள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக, ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையப்படுத்திய சுற்றுலாத் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்கி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு கடிதம் வழங்கப்பட்டிருந்தது. இந்தக் கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி ‘தேச ஹிதைஷி தேசிய இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர்களில் ஒருவரான வைத்தியர் வசந்த பண்டாரவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். இத்தகைய சுற்றுலாத் திட்டங்கள் நாட்டின் கலாசாரம் மற்றும் சட்டதிட்டங்களுக்கு முரணானது என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. அதிகாரசபை இத்தகைய திட்டங்களை முன்னெடுக்கப் போவதில்லை எனத் தற்போது கொள்கை ரீதியான முடிவை எடுத்துள்ளதால், இது தொடர்பான சர்ச்சைகளுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளைப் பரிசீலித்து வருகிறது. https://athavannews.com/2026/1467161
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சுவைப்பிரியன் நீங்கள், விஜயை... மிக உன்னிப்பாக அவதானித்து இருக்கின்றீகள். 😂
-
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து! கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையில் ஒரு பெண்ணின் சடலம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் தன்னுடைய கவலையினையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருப்பின் மிகவும் அருவருக்கதக்க விடயமாகும். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வைத்தியசாலை நிர்வாகம் சுயாதீனமான, நீதியான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும். கிளங்கன் வைத்தியசாலை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான ஆதார வைத்தியசாலையாகும். இவ்வைத்தியசாலையினை நம்பியே மலையக பெருந்தோட்ட மக்கள் உள்ளனர். இந்த சம்பவம் வைத்தியசாலையினை நம்பியிருக்கின்ற மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துவதோடு நம்பகத்தன்மையினையும் இல்லாமல் செய்கின்ற விடயமாகும். இதுத்தொடர்பில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் பேசி உரிய நடவடிக்கைகளை பக்கசார்பின்றி முன்னெடுக்குமாறு கூறியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய அனுதாபத்தினையும், கவலையினையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1467178
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சிறியர் இந்த விடையயம் சங்கீதாவுக்கு முன்பே எனக்கு தெரியும்.சும்மா சோதிச்சுப் பார்த்தனான்.🤣
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அவர் தெரிவித்தபடி விஜையின் கொள்கை தலைவராக பெரியாரை வைத்திருப்பது தான் காரணம் சீமான் விஜய் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் உள்ள மிகபெரும்பான்மையினர் தீவிர பெரியாரிஸ்ட்டுகள். 👇 விஜையின் கொள்கைத்தலைவராக பெரியாரை வைத்திருப்பது சரியாகத்தான் இருக்கிறது. பெரியாரிஸ்ட்டுகள் திருமணம் கடந்த உறவு என்று அதற்கு நல்ல பெயரும் வைத்திருக்கிறார்கள்.
-
ஆப்பிளின் iPhone 17e மொடல் இன்று அறிமுகம்!
ஆப்பிளின் iPhone 17e மொடல் இன்று அறிமுகம்! லண்டன், நியூயார்க் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் ஆப்பிள் நிறுவனம் இன்று பிரம்மாண்டமான சிறப்பு நிகழ்வை நடத்துகிறது. இதில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மலிவு விலை ஐபோன் மாடலான iPhone 17e அறிமுகம் செய்யப்படவுள்ளது. சுமார் $599 (இந்திய மதிப்பில் ₹50,000) விலையில் வரவுள்ள இந்த போனுடன், மாணவர்களைக் கவரும் வகையில் அதே விலையில் புதிய 12-இன்ச் மேக்புக் (MacBook) மாடலும் இன்று வெளியாகும் எனத் தெரிகிறது. https://athavannews.com/2026/1467166
-
ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!
ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு! இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ஈரானின் புதிய உயர்த் தலைவரராக அவரது 56 வயதான மூத்த மகனான மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொமெய்னியின் தந்தையை அடக்கம் செய்த நினைவிடத்துக்கு அருகிலேயே அவரை புதைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன. கொமெய்னியின் உடல் அவரது பிறந்த ஊரான மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற ஷியா புனிதத் தலமான இமாம் ரெசா நினைவிடத்தில் (Imam Reza shrine) அவரது தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. மஷாத்துக்கு கொண்டு செல்வதற்கு முன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் இமாம் கொமெய்னி தொழுகை கூடத்தில் (Grand Imam Khomeini Prayer Hall) ஒரு பிரமாண்ட பொது விடைபெறும் நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதிச் சடங்குகள் இடம்பெறும் திகதிகள் மற்றும் நேரம் தொடர்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் இரகசியமாகவே அவற்றை அரசு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் தெஹ்ரானின் நடுப்பகுதிகளில் ஏற்கனவே பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் கொமெய்னி கொல்லப்பட்டார். அவரது மறைவையொட்டி, ஏற்கனவே ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்க தினமும் 07 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1467150
-
4 நாடுகளுக்கு மாணவர் விசா வழங்கலை நிறுத்திய இங்கிலாந்து!
4 நாடுகளுக்கு மாணவர் விசா வழங்கலை நிறுத்திய இங்கிலாந்து! இந்த மாதம் முதல் ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவம் நடவடிக்கையை இங்கிலாந்து அரசு நிறுத்தும் என்று உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆப்கானியர்களுக்கு திறமையான வேலை விசாக்களையும் நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசா துஷ்பிரயோகம் பரவலாக இருப்பதாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதலில் இங்கிலாந்துக்கு கல்வி பயில்வதற்காக வந்த பின்னர் புகலிடம் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்கம் தனது வெளியீட்டில், 2021 மற்றும் 2025 க்கு இடையில் சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்குச் சென்றவர்களிடமிருந்து – கல்வி போன்ற ஏதாவது ஒன்றைச் செய்வதற்காக – புகலிடம் கோருபவர்கள் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறியது. https://athavannews.com/2026/1467147
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
அறுபதை அறுபது வெல்லுமா முடிவிலே?😊