All Activity
- Past hour
-
அதிசயக்குதிரை
(INTERESTING STORIES) படித்ததில் பிடித்தது · Balaji Srinivasan ·rspdoonetS 27405i9125a46famuih256i9164ahc0ac1ff786mi1a7g9502 · 1960-ல வாஷிங்டன்ல இருக்குற அந்த மருந்து கட்டுப்பாட்டு ஆபீஸ்க்குள்ள ஒரு சிங்க பெண்மணி கால எடுத்து வைக்குறாங்க, அவங்க பேருதான் டாக்டர் பிரான்சிஸ் கெல்சி. வேலைக்குச் சேர்ந்து முதல் நாளே அவங்க டேபிள்ல ஒரு ஃபைல் வந்து விழுது, அந்த ஃபைல்ல இருந்தது 'தாலிடோமைடு' அப்படிங்கிற ஒரு மருந்து. அவரோட கையெழுத்து அந்த ஃபைலக்கு தேவை அந்த நேரத்துல ஐரோப்பா முழுக்க அந்த மாத்திரை ஒரு 'மேஜிக் மருந்து' மாதிரி பேசப்பட்டுச்சு, குறிப்பா கர்ப்பமா இருக்குற பொம்பளைங்களுக்கு வர்ற அந்த வாந்தி, மயக்கம், அப்புறம் தூக்கம் வராம தவிக்கிற கஷ்டத்துக்கு இதுதான் பெஸ்ட்னு எல்லாரும் அடிச்சுக்கிறாங்க. அந்த மருந்து கம்பெனிக்காரங்க "ஏற்கனவே ஊர் முழுக்க வித்துக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துமஸ் குள்ள அமெரிக்காவுல கல்லா கட்டணும், சீக்கிரம் கையெழுத்தப் போடுங்கம்மா"ன்னு அவசரப்படுத்துறாங்க. ஆனா அந்த அம்மா சாதாரண ஆள் இல்ல, அவங்க கண்ணு அந்த ஃபைல்ல இருக்குற ஓட்டையக் கண்டுபிடிச்சிருச்சு. "எல்லாரும் விக்கிறாங்க சரி, ஆனா இந்த மருந்தால வயித்துல இருக்குற அந்தப் பச்சை மண்ணுக்கு என்ன ஆகும்னு நீங்க சரியா சொல்லலையே?"ன்னு கேட்டு அந்த ஃபைலை தூக்கி எறிஞ்சாங்க. அவ்வளவுதான், அந்த மருந்து கம்பெனிக்காரங்களுக்கு உச்சந்தலையில கோவம் ஏறிடுச்சு, "எங்ககிட்டயே வேலையைக் காட்டுறியா?"ன்னு இறங்குறாங்க. அவங்க மேலதிகாரிகளுக்குப் போன் போடுறது, அந்த அம்மாவை "உனக்கு ஒண்ணும் தெரியாது, நீ ஒரு லூசு, நீ ஏதோ பவர்ல இருக்கோம்னு ஆட்டம் போடுற"ன்னு அசிங்கப்படுத்துறதுன்னு இறங்குனாங்க. இன்னைக்கு இருந்தா கூட ஒரு பொண்ணு ஒரு பெரிய கம்பெனியை எதிர்த்து நிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு யோசிச்சுப் பாருங்க, அன்னைக்கு 1960-ல அந்த சிங்க பெண்மணி சுத்தி இருந்ததெல்லாம் ஆம்பளைங்க அதிகாரம், அவங்க கொடுத்த டார்ச்சர்ல அந்த அம்மா நினைச்சிருந்தா "போனா போகுது, எல்லாரும் கையெழுத்து போடுறாங்க நாமளும் போட்டுருவோம்"னு ஒதுங்கியிருக்கலாம். ஆனா அந்த அம்மாவுக்குத் தன்னோட படிப்பு மேலயும், அந்த நேர்மை மேலயும் இருந்த நம்பிக்கை பெருசு. "நீ என்ன வேணா பண்ணு, எனக்குச் சரியான பதில் கிடைக்கிற வரைக்கும் பேனா முனையைக் கூட அசைக்க மாட்டேன்"னு ஒத்தக் கால்ல நின்னாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷம் அந்த கம்பெனியோட மிரட்டலைத் தாங்கிக்கிட்டு அந்த ஃபைலை லாக் பண்ணி வச்சாங்க. 1961-ல ஜெர்மனியில இருந்து வந்த அந்த நியூஸ் உலகத்தையே நடுங்க வச்சிருச்சு. அந்த மருந்தைச் சாப்பிட்ட தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாம் கை, கால் இல்லாம, வெறும் முட்டி மட்டுமோ இல்ல சின்னதா மீன் துடுப்பு மாதிரி வளர்ந்த உறுப்புகளோட பிறக்க ஆரம்பிச்சது. பத்தாயிரம் குடும்பம் உருக்குலைஞ்சு போச்சு, பாதி குழந்தைங்க பிறந்த சில நாளுலயே செத்துப் போச்சு. அந்த நேரத்துலதான் அமெரிக்காவுக்கு உறைச்சது, அந்தப் பெண் சிங்கம் மட்டும் அன்னைக்கு மிரட்டலுக்குப் பயந்து கையெழுத்துப் போட்டிருந்தா, இன்னைக்கு அமெரிக்காவுல எத்தனையோ குடும்பம் கண்ணீர்ல மிதந்திருக்கும். அன்னைக்கு அவங்க தடுத்தது ஒரு பேப்பர் இல்ல, ஒரு தலைமுறையோட அழிவை. இதைக் கேள்விப்பட்ட உடனே அதிபர் கென்னடி அந்த பெண்மணி கூப்பிட்டு மெடல் கொடுத்து கௌரவிச்சாரு. பிரான்சிஸ் கெல்சி 90 வயது வரை அதே துறையில் பணியாற்றி, லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றினார், இது நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடம், அதாவது ஊரே ஒரு பக்கம் போனாலும், நாம் செய்வது சரி என்று நமக்குத் தெரிந்தால், அந்த நேர்மைக்காகப் போராடத் தயங்கக்கூடாது. இன்று அமெரிக்காவில் ஆரோக்கியமாக விளையாடிக்கொண்டிருக்கும் எத்தனையோ தலைமுறையினர், தங்களுக்குத் தெரியாமலேயே அந்தப் போராட்ட குணமிக்கப் பெண்ணுக்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள், நிஜமான வீரம் என்பது சண்டை போடுவது மட்டுமல்ல, தர்மத்திற்காகத் தனித்து நின்று 'வேண்டாம்' என்று சொல்லும் அந்தத் துணிச்சல்தான் என்பதை அவர் நிரூபித்துவிட்டார். இவ்வளவு பெரிய அநியாயத்துக்கு அப்புறம்தான், உலகத்துல ஒரு மருந்து மார்க்கெட்டுக்கு வரணும்னா அது எவ்ளோ கடுமையான டெஸ்ட்டுகளைத் தாண்டணும்ங்கிற அந்த 'எஃப்.டி.ஏ' (FDA) சட்டமே இன்னும் ஸ்ட்ராங் ஆச்சு. ஒரு தனி மனுஷியோட பிடிவாதம், இன்னைக்கு நாம சாப்பிடுற ஒவ்வொரு மாத்திரையோட பாதுகாப்புக்கும் அஸ்திவாரமா இருக்கு. அந்த அம்மா 101 வயசு வரைக்கும் வாழ்ந்துட்டு 2015-ல தான் இயற்கை எய்தினாங்க, நிஜமாவே அவங்க ஒரு நடமாடும் தெய்வம் தான். வணக்கம் பாலாஜி ஸ்ரீனிவாசன்.....!
-
குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்?
நல்ல காலம் பல்துலக்கும் பொருள் ஒன்று தொண்டையை அறுக்கும் வாளாக மாற இருந்தது ........! 😚
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
அதிகூடிய வெற்றி இலக்கைக் கடந்த அணி என்ற சாதனையுடன் 19இன் கீழ் உலகக் கிண்ண அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா Published By: Vishnu 04 Feb, 2026 | 09:13 PM (நெவில் இந்தியா) ஹராரே, குவின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்றைய தினம் (04) கணிசமான மொத்த எண்ணிக்கைகள் குவிக்கப்பட்ட ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட்களால் மிக இலகுவாக இந்தியா வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் பெப்ரவரி 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலக சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா எதிர்த்தாடவுள்ளது. ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 311 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 41.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 311 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதன் மூலம் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய வெற்றி இலக்கை விரட்டிக்கடந்த அணி என்ற சாதனையை இந்தியா நிலைநாட்டியது. இலங்கையில் 2006ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 305 ஓட்டங்களை நியூஸிலாந்து விரட்டிக்கடந்து ஈட்டிய வெற்றியே முந்தைய விரட்டிக்கடக்கப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. இன்றைய போட்டியில் ஆரம்ப வீரர்களான ஆரோன் ஜோர்ஜ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதம் குவித்ததுடன் மூன்று பெறுமதி வாய்ந்த இணைப்பாட்டங்களில் பங்களிப்பு செய்து இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கினார். ஆரம்ப விக்கெட்டில் வைபவ் சூரியவன்ஷியுடன் 57 பந்துகளில் 90 ஓட்டங்களையும் இரண்டாவது விக்கெட்டில் அணித் தலைவர் அயூஷ் மஹாத்ராவுடன் 101 பந்துகளில் 114 ஓட்டங்களையும் மூன்றாவது விக்கெட்டில் விஹான் மல்ஹோத்ராவுடன் 79 பந்துகளில் 96 ஓட்டங்களையும் ஆரோன் ஜோர்ஜ் பகிர்ந்தார். மிகவும் பொறுமையுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஆரோன் ஜோர்ஜ் 104 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 115 ஓட்டங்களைக் குவித்தார். வைபவ் சூரியவன்ஷி எப்போதும் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 33 பந்துகளில் 9 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களையும் அயூஸ் மஹாத்ரா 59 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையும் பெற்றனர். விஹான் மல்ஹோத்ரா 38 ஓட்டங்களுடனும் வேதாந்த் திரிவேதி 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 310 ஓட்டங்களைக் குவித்தது. ஆப்கான் சார்பாக இருவர் சதங்கள் குவித்தனர். 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண நொக் அவுட் வரலாற்றில் ஒரே அணியைச் சேர்ந்த இருவர் சதங்கள் குவித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் பைசால் ஷினோஸதா 110 ஓட்டங்களையும் உஸைரூல்லா நியாஸாய் ஆட்டம் இழக்காமல் 101 ஓட்டங்களையும் பெற்றதுடன் அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 148 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அவர்களை விட ஆரம்ப வீரர்களான ஒஸ்மான் சதாத் 39 ஓட்டங்களையும் காலித் அஹ்மத்ஸாய் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கனிஷ்க் சௌஹான் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தீப்பேஷ் தேவேந்திரன் 64 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஆரோன் ஜோர்ஜ் https://www.virakesari.lk/article/237838
-
அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர
அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர 04 Feb, 2026 | 06:13 PM (இராஜதுரை ஹஷான்) நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார். கொழும்பில் புதன்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாக சுதந்திரமடைந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார். 78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. அதேபோல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/237826
-
ஏராளன் started following கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்! , அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர , குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்? and 1 other
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
மக்கள் மிகவும் "பயத்துடன்" பங்கு பற்றிய மாதிரித் தான் தெரிகிறது😂!
-
குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்?
குளியலறையில் வழுக்கி விழுந்த நபரின் தொண்டைக்குள் சிக்கிய பல் துலக்கும் பிரஷின் முன் பகுதி - என்ன ஆனார்? படக்குறிப்பு,பிரேமலால் மற்றும் அவரின் எக்ஸ்ரே படம் கட்டுரை தகவல் தாரகா சம்மனா பிபிசி சிங்கள சேவை 9 மணி நேரங்களுக்கு முன்னர் பல் துலக்குவது எளிதான ஒன்றாக இருந்தாலும் அதுவே ஆபத்தானதாக மாறியது என சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படியான ஒன்றை தான் இலங்கையில் உள்ள பிரேமலால் எதிர்கொண்டார். சவாலான அறுவை சிகிச்சைக்குப் பிறகு தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பாகத்தை (bristle) மருத்துவர்கள் அகற்றி பிரேமலால் உயிரை காப்பாற்றினர். சிகிச்சை முடிந்த பிறகு ஓய்வில் இருந்த பிரேமலாலுடன் பிபிசி சிங்கள சேவை உரையாடியது. "ஜனவரி 23-ஆம் தேதி காலை குளியலறை சென்று பல் துலக்கிய போது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் வாயில் இருந்த பிரஷ் இரண்டாக உடைந்து ஒரு பகுதி தொண்டைக்குள் சிக்கியது. அதை பலமுறை இழுத்துப் பார்த்தும் அது என் தொண்டையில் இருந்து வராததால் ஆபத்தின் தீவிரத்தை உணர்ந்தேன்" என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் இது மிகவும் ஆபத்தானதாக உள்ளது எங்களால் சிகிச்சை அளிக்க இயலாது என மருத்துவர்கள் மறுத்தனர்" என பிரேமலால் தெரிவித்தார். "உடனடியாக மாத்தறையில் உள்ள பொது மருத்துவமனைக்கு சென்று நிலைமையை விவரித்தேன். அவர்கள் என்னை உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சையளிக்க தொடங்கினர்" என்றார். முதலில் தன்னுடைய வயிறு மற்றும் மார்பு பகுதிகளில் மருத்துவர்கள் பரிசோதித்ததாகவும் ஆனால் பிரஷ்ஷின் பாகம் இருப்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. பின்னர் சிகிச்சை முடிந்து விரும்பினால் கையெழுத்து போட்டு விட்டு வீட்டுக்கு செல்லலாம் என மருத்துவர்கள் சொன்னதால், தான் வீட்டுக்கு சென்றதாக பிரேமலால் பிபிசியிடம் தெரிவித்தார். இறுக்கமான தொண்டை வீட்டுக்கு சென்று ஒரு மணி நேரமான பிறகு தன்னுடைய தொண்டை இறுக்கமாவதை பிரேமலால் உணர்ந்தார். இதையடுத்து, அவர் அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு சென்று, தன்னுடைய தொண்டை இறுக்கமாவதையும், இருமல் அதிகரிப்பதையும், சளியுடன் சேர்ந்து ரத்தம் வருவதையும் மருத்துவரிடம் தெரிவித்தார். அங்கிருந்த மருத்துவர் லக்மல் பிரேமலாலுக்கு உடனடியாக எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளார். அதன்படி, அவருக்கு எக்ஸ்-ரே பரிசோதனை செய்யப்பட்டது. பல் துலக்கு பிரஷின் தலைப்பகுதி அவரது உடலுக்குள் இருப்பதை பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியது. "இது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பது போன்றது, எக்ஸ்-ரேயில் பிரஷின் தலைப் பகுதி தொண்டைக்குள் இருப்பது தெரிகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் எக்ஸ்-ரேயில் தெரிவதில்லை என்று மாத்தறை மருத்துவமனையில் என்னிடம் கூறப்பட்டது" என்று அவர் கூறினார். மாத்தறை முதல் கல்லே வரை… படக்குறிப்பு,பிரேமலாலின் கழுத்தில் பல் துலக்கும் பிரஷின் முன்பகுதி எவ்வாறு சிக்கிக்கொண்டது என்பதை எக்ஸ்-ரே பரிசோதனை காட்டியது.. மருத்துவரின் ஆலோசனைப்படி காலி நகரில் உள்ள காது மூக்கு தொண்டை நிபுணரான மருத்துவர் அனுருத்தா விக்ரமசிங்கேவை சந்திக்க பிரேமலால் மாத்தறையில் இருந்து தன்னுடைய மகனுடன் அந்த நகருக்கு பயணம் மேற்கொண்டார். காலி நகரில் உள்ள தனியார் மருத்துவனையில் அனுருத்தாவை சந்திக்க சென்ற பிரேமலாலுக்கு ஏமாற்றம், அங்கு மருத்துவர் இல்லை. இருப்பினும் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மருத்துவ பணியாளர்கள் அவரது எக்ஸ்ரே மற்றும் மருத்துவ அறிக்கையை உடனடியாக மருத்துவர் அனிருத்தாவுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி விவரித்ததாகவும் மருத்துவ அறிக்கையை பார்த்த மருத்துவர் அனிருத்தா தன்னை அங்கேயே இருக்கும்படி அறிவுறுத்தி, சில மணிநேரத்தில் தன்னை காலி நகர தேசிய மருத்துவமனையில் அனுமதித்தாகவும் பிபிசியிடம் தெரிவித்தார் பிரேமலால். வெற்றிகரமான சிகிச்சை படக்குறிப்பு,பிரேமலாலின் தொண்டையில் சிக்கிய பிரஷின் முன்பகுதி காலி நகர தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேமலாலுக்கு மருத்துவர் அனிருத்தா மேற்பார்வையில் காலை 9 மணிக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் உடைந்த பிரஷின் முன்பகுதியை அவர்களால் கண்டறிய முடியவில்லை. சில மணித்துளிகள் தனக்கு தொண்டை பகுதியில் ஏற்பட்டிருந்த வலி குறைந்ததையும் தன்னால் இயல்பாக பேச முடிந்ததையும் உணர்ந்த பிரேமலால் சிறிதி நேரத்திலேயே மீண்டும் பழைய அறிகுறிகள் தென்பட்டதையும் அதனால் தொண்டை பகுதியில் மீண்டும் ரத்தப்போக்கு ஏற்பட்டதையும் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். மருத்துவர் அனிருத்தா ஆலோசனைப்படி மீண்டும் பிரேமலாலுக்கு எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைக்கப்பட்டு அந்த முடிவுகளின்படி பிரஷின் உடைந்த பாகம் தொண்டைக்குள்ளேயே இருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர், இதனால் அவருக்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பிரேமலால் நன்றாக சாப்பிட்டு பேசிக் கொண்டிருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சரியமடைந்தனர். ஜனவரி 25-ஆம் தேதி பிரேமலாலுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. "இந்தச் சம்பவம் நம்மை எப்படிப் பாதிக்கும் என்று தம்மால் துல்லியமாகக் கூற முடியாது என்று மருத்துவர் கூறினார். இலங்கையில் எங்கும் இது போன்ற ஒரு சம்பவம் பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளில்கூட இது பதிவாகியிருப்பதாகச் சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இவ்வாறு செய்தால் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் கூறினார்." என்று சிகிச்சைக்கு முன்பு மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக பிரேமலால் நினைவு கூர்ந்தார். "சரியாக காலை 11.45 மணிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, நான் அறுவை சிகிச்சை அறையிலிருந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டேன், இன்றும் உடைந்த பிரஷ்ஷின் பாகத்தை நான் என்னுடன் வைத்துள்ளேன்" என்றார் பிரேமலால். 'பாடமாக இருக்கட்டும்' படக்குறிப்பு,குணமடைந்த பின் பிரேமலால் வீடு திரும்பியுள்ளார். ஒரு வார காலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரேமலால் தற்போது வீடு திரும்பியுள்ளார். பிபிசியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தனக்கு எந்த வித அசெளகரியமும் ஏற்படவில்லை என புத்துணர்ச்சியுடன் தெரிவித்தார் பிரேமலால். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் நம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் எளிய பணிகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்று கூறி பிபிசியுடனான உரையாடலை முடித்தார் பிரேமலால். "இலங்கை மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனக்கு நடந்தது ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" "ஒரு சிறிய தவறு பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதை இதுபோன்ற சம்பவம் நமக்கு கற்பிக்கும் பாடமாக இருக்கட்டும்" என்றார் பிரேமலால். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgvl32vnpjo
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வெளியேற்றி 19இன் கீழ் உலகக் கிண்ண இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து Published By: Vishnu 03 Feb, 2026 | 10:32 PM (நெவில் அன்தனி) ஸிம்பாப்வே புலாவாயோ, குவீன்ஸ் கழக விளையாட்டரங்கில் று செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை 27 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இங்கிலாந்து, ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெற்றது. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் முன்னாள் சம்பியன் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது இது மூன்றாவது தடவையாகும். 1998இல் நடைபெற்ற இரண்டாவது அத்தியாயத்தில் உலக சம்பியனான இங்கிலாந்து, 2022இல் உப சம்பியனாகி இருந்தது. அணித் தலைவர் தோமஸ் ரியூ மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி குவித்த சதம், கட்டுப்பாடான பந்துவீச்சகள் என்பன இங்கிலாந்தை வெற்றிபெறச் செய்தன. அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஒலிவர் பீக் தனித்து போராடி சதம் குவித்த போதிலும் அது பயனற்று போனது. இந்த வருடம் முதுல் தடவையாக தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் பென் டோக்கின்ஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்த போதிலும் ஜோசப் முவர்ஸ் (25), பென் மேயஸ் (24) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆரம்ப வீழ்ச்சியை சரி செய்து 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். இந் நிலையில் தோமஸ் ரியூ, காலெப் ஃபோக்னர் (40) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 135 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்து இளையோர் அணியை பலப்படுத்தினர். மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தோமஸ் ரியூ 107 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 110 ஓட்டங்களைப் பெற்று 6ஆவதாக ஆட்டம் இழந்தார். (236 - 6 விக்.) ரெல்பி அல்பர்ட் (15), பர்ஹான் அஹ்மத் (28 ஆ.இ.), செபஸ்டியன் மோர்கன் (15 ஆ.இ.) ஆகியோர் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் ஹேடன் ஷில்லர் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இலங்கை வம்சாவளி வீரர் நேடன் குறே 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 278 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 47.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதல் சுற்று, சுப்பர் சிக்ஸஸ் ஆகிய சுற்றுகளில் திறமையை வெளிப்படுத்திய வில் மலாசுக் இப் போட்டியில் வெறும் 15 ஓட்டங்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஸ்டீவன் ஹோகன் (3) ஆட்டம் இழந்தார். இந் நிலையில் இலங்கை வம்சாவளி வீரர் நிட்டேஷ் செமுவல், அணித் தலைவர் ஒலிவர் பீக் ஆகிய இருவரும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கடெ;டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். நிட்டேஷ் செமுவல் வழமைபோல் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 47 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அலெக்ஸ் லீ யங் (3), ஜேடன் ட்ரேப்பர் (12) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (134 - 5 விக.) இதனைத் தொடர்ந்து ஒலிவர் பீக், ஆரியன் ஷர்மா ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ஆரியன் ஷர்மா (34) ஆட்டம் இழந்தார். நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஹேடன் ஷில்லர் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது களம் விட்டகன்றார். ஒரு பக்கத்தில் ஒலிவர் பீக் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். லம்ஸ்டென் வீசிய 16ஆவது ஓவரில் 6, 4, 4, 4, 4 என 22 ஓட்டங்களைக் குவித்த ஒலிவர் பீக்கினால் கடைசிப் பந்தில் ஒற்றையை எடுக்க முடியாமல் போனது. அடுத்த ஓவரின் முதலாவது பந்தில் சார்ள்ஸ் லெச்மண்ட் (2) ஆட்டம் இழந்தார். ஒலிவர் பீக்குடன் 9ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களை லெச்மண்ட் பகிர்ந்தார். ஒலிவர் பீக் தனித்து போராடி 88 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட சரியாக 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் ஜேம்ஸ் மின்டோ 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் செபஸ்டியன் மோர்கன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரெல்ஃபீ அல்பர்ட் 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மானி லம்ஸ்டென் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: தோமஸ் ரியூ https://www.virakesari.lk/article/237747
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் மற்றப் போட்டிகளைப் பார்க்கேல போல. 19 வயசுப் பெடியள் பட்டாசு. வைபவைத் தெரியும். ஆனா, முதல் ஆறு பேருமே, எப்போதும் அடி வெளுக்கிற ஆக்கள். தேவைக்கு ஏற்ற மாதிரி விளையாடுவாங்கள். தோற்பாங்கள் என்ற நினைவே வரவில்லை. அவங்கள் இன்னும் தோற்கவே இல்லை.
-
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப்
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் - ட்ரம்ப் 04 Feb, 2026 | 04:22 PM நாங்கள் ஈரானுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த விடயத்தில் அவர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க கப்பலை வேகமாக நெருங்கிய ஈரான் நாட்டின் ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், அவர், சிறிது காலத்துக்கு முன்பு அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது நடக்கவில்லை. அதனால் நாங்க் “மிட்நைட் ஹேமர்” என்ற பெயரில் நடவடிக்கையை தொடங்கி தாக்குதல் நடத்தினோம். அவர்கள் தற்போது மீண்டும் “மிட்நைட் ஹேமர்” போன்ற ஒரு தாக்குதலை விரும்பவில்லை என நான் நினைக்கிறேன். பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறிய டிரம்ப், எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்று கூறவில்லை என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செவ்வாய்க்கிழமை (3) அமெரிக்காவின் “யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்” விமானம் தாங்கிக் கப்பலை, அச்சுறுத்தும் விதத்தில் வேகமாக நெருங்கிச் சென்ற ஈரானின் ஷாஹித்-139 ட்ரோனையே அமெரிக்கப் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். கப்பலிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன எப்-35சி போர் விமானமே அந்த ட்ரோனை நடுவானில் சுட்டு வீழ்த்தியுள்ளது. இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என அமெரிக்கப் படையினர் தெரிவித்திருந்தனர். ஈரான் எல்லையிலிருந்து சுமார் 800 கி.மீ தொலைவில் அமெரிக்க கப்பல் இருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ட்ரோன் மீதான தாக்குதலின்போது அமெரிக்க படையினர் எவருக்கும் காயமோ அல்லது உபகரண சேதமோ ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237825
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
அதுதான் பாயிண்டு பிரியன்சார் ....இந்த இடத்தில் சிறப்பாக நடைபெற்றது என்பது தவிர்க்கப்பட்டால் நல்லது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதே மைதானத்தில்தான் பைனல் ...6 ம் திகதி ...பார்ப்போம்..
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆம் பார்த்தேன் நான் அப்கானிஸ்தான் வெல்லும் என நினைத்தேன்....... இந்திய இளம் வீரர்கள் மின்னல் வேகத்தில் அடிச்சு ஆடி சீக்கிரமே வென்று விட்டினம்............. அப்கானிஸ்தான் அடிச்ச ஸ்கோர் நல்ல ஸ்கோர் பந்து வீச்சாளர்கள் சுதப்பி விட்டினம்.................... இங்லாந் எதிர் இந்தியா பினலில்................
-
கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!
கடாபியின் மகன் சயிப் அல்-இஸ்லாம் சுட்டுக் கொலை; லிபியாவில் பரபரப்பு Published By: Digital Desk 3 04 Feb, 2026 | 10:32 AM லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மகனும், அவரது அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சயிப் அல்-இஸ்லாம் கடாபி (Saif al-Islam Gaddafi) சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 53 வயதான அவரின் மரணத்தை அவரது அரசியல் குழு உறுதிப்படுத்தியுள்ளதாக லிபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லிபியாவின் தலைநகர் திரிப்போலியிலிருந்து சுமார் 136 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஜின்டான் (Zintan) நகரிலுள்ள அவரது இல்லத்தில், முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட கமாண்டோ குழுவினர் தாக்குதல் நடத்தியதாக அவரது அரசியல் அணியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் “கோழைத்தனமான மற்றும் துரோகமான படுகொலை” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சயிப் அல்-இஸ்லாமின் வழக்கறிஞர் கலேத் அல்-சாயிதி மற்றும் அவரது அரசியல் ஆலோசகர் அப்துல்லா ஒத்மான் ஆகியோர், செவ்வாய்க்கிழமை சமூக வலைத்தளங்களில் அவரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதற்கிடையில், சயிப் அல்-இஸ்லாமின் சகோதரி ஒருவர் லிபிய தொலைக்காட்சியிடம், அவர் அல்ஜீரிய எல்லைக்கு அருகிலான பகுதியில் உயிரிழந்ததாக கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 1969 முதல் 2011 வரை லிபியாவை ஆட்சி செய்த முஅம்மர் கடாபியின் மகன்களில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக சயிப் அல்-இஸ்லாம் கருதப்பட்டார். 1972ஆம் ஆண்டு பிறந்த அவர், 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் மேற்கத்திய நாடுகளுடன் லிபியாவின் உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக, அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் அவர் முன்னணியில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. 2011ஆம் ஆண்டு கடாபி ஆட்சி வீழ்ச்சியடைந்தபோது, அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியதாக சயிப் அல்-இஸ்லாம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து, அவர் ஜின்டான் நகரில் உள்ள ஒரு ஆயுதக் குழுவினரால் கைது செய்யப்பட்டு, சுமார் ஆறு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். 2011 போராட்டங்களின் போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) அவரை விசாரிக்க முயன்றது. 2015ஆம் ஆண்டு, ஐநா ஆதரவு பெற்ற திரிப்போலி நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டு பொதுமன்னிப்பு சட்டத்தின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர், சயிப் அல்-இஸ்லாம் ஜின்டான் நகரிலேயே வசித்து வந்தார். 2021ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தாலும், அந்தத் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. கடாபி ஆட்சி வீழ்ச்சியடைந்ததிலிருந்து லிபியா பல்வேறு ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் பிரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. தற்போது நாடு இரண்டு போட்டி அரசாங்கங்களுக்கு இடையே பிளவுபட்டுள்ளது. இந்த சூழலில், சயிப் அல்-இஸ்லாமின் படுகொலை லிபிய அரசியல் நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இதனிடையே, திரிப்போலியைத் தளமாகக் கொண்ட உயர் அரசியல் பேரவையின் முன்னாள் தலைவர் கலேத் அல்-மிஷ்ரி, இந்த படுகொலை தொடர்பில் அவசரமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். சயிப் அல்-இஸ்லாம் கடாபியின் மரணம், லிபிய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுவதுடன், நாட்டின் எதிர்கால அரசியல் சமநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. https://www.virakesari.lk/article/237781
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
அரச பணியாளர்கள் அரசு சொல்வதைத் தானே செய்ய வேண்டும்.
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 97 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 97 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வசபனின் மரணத்திற்குப் பிறகு, வங்கனாசிக தீசன் மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவன் மகா மங்கள என்ற பெயரில் ஒரு விகாரை [Mangla Maha Viharaya] கட்டினான். அவனது மனைவி மகா மாதா முன்பு உணவளித்த தேரரின் நினைவாக ஒரு விகாரை கட்ட பணம் சேகரித்தார். வங்கனாசிக தீசன் இறந்த பிறகு அவரது மகன் முதலாம் கஜபாகு [Gajabahu I] ஆட்சிக்கு வந்து இருபத்தி இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். முதலாம் கஜபாகு [அல்லது Gajabahugamani] அதிகமாக தமிழ் பெற்றோரையும் மற்றும் தமிழ் தாத்தா பாட்டியையும் கொண்டு இருப்பதால், இவனும் தமிழனாக கருத வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் செங்குட்டுவன் கண்ணகிக்கு கோவில் கட்டியபோது, அந்த இந்திர விழாவில் கலந்து கொள்ளச் சென்ற மன்னனே இவனாகும். கஜபாகுவின் மரணத்திற்குப் பிறகு, இவனது மாமனார் மகாலக நாகர் [Mahalaka Naga] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவர் தீவில் ஏழு விகாரைகளைக் கட்டினான். வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கில் விகாரைகளைக் கட்டிய ஒரே மன்னனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் பல ஆரம்பகால ஆட்சியாளர்கள் தமிழ் அல்லது திராவிட கூறுகளைக் கொண்ட பெயர்களைக் கொண்டிருந்ததுடன் தீவின் ஆரம்பகால மக்களில் ஒருவரான நாக மக்கள், தென்னிந்திய தமிழ்ப் பகுதிகளுடன் வலுவான கலாச்சார மற்றும் மொழியியல் உறவுகளைக் கொண்டிருந்தனர் என்று வரலாறு கூறுகிறது. நாக என்ற சொல் தமிழ் மற்றும் பாலி இலக்கியங்களில் காணப்படுகிறது. இது நாகதீபம் (நயினாதீவு) போன்ற இடங்களில் வாழ்ந்த பாம்பு வழிபாட்டு மக்களைக் குறிக்கிறது. சிங்களம் ஒரு தனித்துவமான மொழியாக உருவாவதற்கு முன்பு, தீவின் மக்கள் பிராகிருதம் மற்றும் [அல்லது] ஆரம்பகால திராவிட மொழியைப் பேசினர். தொல்பொருள் ஆய்வில், ஆரம்பகால பிராமி கல்வெட்டுகளில் (கிமு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது) கூட, பல தனிப்பட்ட பெயர்கள், குலப் பெயர்கள் மற்றும் பட்டப்பெயர்கள் தமிழ் சொற்களை ஒத்திருக்கின்றன. சிங்களம் ஒரு கட்டமைக்கப்பட்ட மொழியாக கி.பி 5-6 ஆம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் உருவாகத் தொடங்கியது. இது பாலி (பௌத்த நூல்கள் காரணமாக), சமஸ்கிருதம் மற்றும் உள்ளூர் [பிராகிருத / திராவிட அல்லது தமிழ் மொழிகளால்] பேச்சுவழக்குகளால் செல்வாக்கு செலுத்தப்பட்டது. அதாவது மகாவம்சம் எழுதும் பொழுது, உண்மையில் சிங்களம் என்ற மொழி உருவாகவில்லை, அது மிக மிக ஆரம்ப நிலையில் தான் இருந்துள்ளது, ஆனால், தமிழ் மிகவும் வளர்ந்த உச்ச நிலையில் இருந்துள்ளது. அதனால்த் தான் மகாவம்சத்தில் தமிழர் என்ற சொல்லே காணப்படுகிறது, ஆனால் சிங்களம் அல்லது சிங்களவர் என்ற சொல் அங்கு இல்லை. ஆக சிஹல ["Sihala" (Sīhaḷa, සිහළ, சீஹள] என்ற சொல் ஒருக்காவோ இரண்டுதரமோ மட்டுமே அங்கு கூறப்படுகிறது, ஆனால் அது மகாவம்சத்தின் (5 ஆம் நூற்றாண்டு பாலி நாளேடு) படி, சிஹல (சிஹால) என்ற பெயர் சமஸ்கிருத / பாலி வார்த்தையான "சிஹா" ("Sīha" lion/ சிங்கம்) மற்றும் "லா" ("La" நிலம்/இடம்) ஆகியவற்றிலிருந்து உருவானது, அதாவது "சிங்கத்தின் நிலம்" அல்லது "சிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்" என்ற அர்த்தத்தில் மட்டுமே காணப்படுகிறது. மற்றும் படி மொழி ஒன்றையோ அல்லது அப்படியான மொழி ஒன்றை பேசுபவர்கள் பற்றியோ குறிக்கவே இல்லை. வட இந்தியாவிலிருந்து குடியேறியவர்களால் கொண்டுவரப்பட்ட இந்தோ-ஆரிய பேச்சுவழக்கில் இருந்து சிங்களம் தோன்றியது என்றாலும், தமிழ் மற்றும் பிற தென்னிந்திய சமூகங்களுடனான தொடர்பு காரணமாக திராவிட மொழிகளால் பெரிதும் செல்வாக்குக்கு உள்ளானது என்பது வரலாறு. இலங்கை தென்னிந்தியாவுடன், குறிப்பாக தமிழ்நாட்டுடன், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியான தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன், அனுராதபுர காலம் (கிமு 377 முதல்) பல தமிழ் ஆட்சியாளர்கள் அல்லது தமிழ் தொடர்புகளைக் கொண்ட ஆட்சியாளர்களைக் கொண்டு இருந்ததும் தெரியவருகிறது. அத்துடன் இலங்கையின் பல இடப்பெயர்கள் தமிழ் மற்றும் நாக பூர்வீகம் கொண்டவையாகவும் உள்ளன. உதாரணமாக, நாகதீபா (நயினாதீவு). மேலும் அனுராதபுரம் - சில கோட்பாடுகள் "அனுராத" திராவிட இணைப்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன ["Anu" and "Ratha" resemble Tamil words rather than purely Sanskrit. "Anu" could come from Tamil "Anu" (அணு) meaning small or a prefix denoting something related. "Ratha" (ரத) means chariot in Sanskrit, but in Tamil, "Rathapuram" (ரதபுரம்) is a common place-name structure. It suggests a settlement or city related to a chariot or a ruling class.]. திருகோணமலை ஒரு தமிழ் வம்சாவளி பெயர் மற்றும் கதிர்காமம் ஒரு தமிழ்-சைவ யாத்திரைத் தலம். மற்றும் ஆரம்பகால ஆட்சியாளர்கள் இன்று புரிந்து கொள்ளப்படுவது போல் பிரத்தியேகமாக "சிங்களவர்" அல்லது "தமிழர் " அல்ல, மாறாக வெவ்வேறு இனக்குழுக்களின் கலவையாக இருந்திருக்கலாம்? மற்றது அப்பொழுது தமிழ் மொழி முழுமை பெற்று இருந்தாலும் சிங்கள மொழி என்ற ஒன்று ஆரம்பிக்கவே இல்லை. சுருக்கமாக, ஆரம்பகால இலங்கையில், குறிப்பாக தனித்துவமான சிங்கள அடையாளம் தோன்றுவதற்கு முன்பு, ஆழமான தமிழ் மற்றும் திராவிட செல்வாக்குகள் இருந்தன என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. நவீன தேசியவாதம் தமிழ் மற்றும் சிங்கள வரலாறுகளைப் பிரிக்கும் முயற்சிக்கு வழிவகுத்தாலும், உண்மை என்னவென்றால், இரண்டு கலாச்சாரங்களும் பல நூற்றாண்டுகளாகப் பின்னிப் பிணைந்திருந்தன. சிங்கள மொழியே உண்மையில், காலப்போக்கில் குறிப்பிடத்தக்க தமிழ் மற்றும் திராவிட செல்வாக்குகளுடன் வளர்ந்தது என்பது வெள்ளிடைமலை. இதற்கு சிறந்த உதாரணம் தொலெமி அல்லது தாலமியின் [Ptolemy] வரைபடம் (கி.பி. 2 ஆம் நூற்றாண்டு) தமிழ் ஒலிப்பு முறையை ஒத்த பெயர்களைக் கொண்ட இலங்கை நகரங்களைக் குறிக்கிறதுடன் [Ptolemy’s map (2nd century AD) refers to Sri Lankan cities with names resembling Tamil phonetics.] அனுராதபுரத்திலேயே உள்ள ஆரம்பகால பிராமி கல்வெட்டுகள் (கிமு 3-2 ஆம் நூற்றாண்டு வரை) தமிழ்-பிராக்ருத செல்வாக்குகளைக் காட்டுகின்றதும் [Early Brahmi inscriptions in Anuradhapura (dating to the 3rd-2nd century BCE) show Tamil-Prakrit influences.] ஒரு எடுத்துக்காட்டு ஆகும். Part: 97 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 After the death of Vasabha, Vannakatissa ruled for three years. He built a Vihara with the name Mahamangala. His consort Mahamatta collected money to build a Vihara in memory of the Thera whom she fed previously. On the death of Vannakatissa his son, Gajabahugamani came to power and ruled for twenty-two years. Gajabahugamani is Tamil being born to Tamil parents and Tamil grandparents. He is the king Kajavahu who went to attend the Indravilla in Tamilnadu. This helped fix the date of the great king Cheran Sengutuvan. After the death of Gajabahugamani, his father in law, Mahalaka Naga ruled for six years. He built seven Viharas in the island He was the only one on record to have built Viharas in north, south, west and east. Mahalaka Naga was also a Tamil. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 98 தொடரும் / Will follow துளி/DROP: 2016 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 97 https://www.facebook.com/groups/978753388866632/posts/33634819606166588/?
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
என்.பி.பி அடியாட்களின் மிரட்டலுக்குப் பயந்து என்பதை சேர்த்துவிடவும்..
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
பார்க்க பார்க்க மனசுக்குள் வேதனை தான் மிஞ்சுகின்றது. ஈற்றில் இதற்குத்தானா இத்தனை ஆயிரம் போராளிகளின் தியாகங்களும், பொது மக்களின் இழப்புகளும் ??
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வீரப்பையனாரே..இன்றைய அரையிறுதிஆட்டம் இந்தியா ....ஆப்கான் பார்த்தீர்களா...எப்படி இருந்தது ஆட்டம் ...இந்தியா தோற்றுவிடும் என்றூ ... மீண்டும் போர்வைக்குள் போய்விட்டென்....பின்னர் நடந்தது வேறை..
-
கதை - 196 / கண்மணி டீச்சர் [ஆறு பகுதிகள் ]
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 05 ஒருநாள் ஓய்வு பெற்ற அதிகாரி: “நான், ஒருவேளை, இளமையாக இருந்திருந்தால்… நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்திருப்பீர்களா?” என்று சும்மா ஒரு கதைக்கு கேட்டார். அதற்கு கண்மணி : “இல்லை... இனிமேல் என்றும் இல்லை ... நான் பட்ட துயர் காணும் ... நான் குடும்ப வாழ்வில், ஆண் பெண் குடும்ப உறவில் மரத்துப் போனேன்" என்றாள். “உனக்கான மகிழ்ச்சியை ஏன் மறுக்க வேண்டும்?” “நான் திரும்ப ஒருமுறை மீண்டும் மாட்டிக்கொள்வதை மறுக்கிறேன் ,” என்று அவள் பதிலளித்தாள். “இனி வரும் திருமணம் வேறுபட்டதாக இருக்கலாம்.” “ஆம். “மாறலாம்” என்று சொல்வது எளிது. ஆனால் அந்த மாற்றத்தின் ஆபத்தை மீண்டும் ஏற்கச் சொல்லப்படுவது எப்போதும் பெண்களுக்கே. ஆண்களுக்கு திருமணம் ஒரு முயற்சி. பெண்களுக்கு அது ஒரு சூதாட்டம்.” [Yes. But women are expected to risk that difference. Men are not.]” அவர் அவளை தனிமையிலிருந்து காப்பாற்ற விரும்பினார். அழிப்பிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவள் விரும்பினாள். அதிகாரி: “ஏன்?” கண்மணி: “ஏனென்றால் அப்போதும் கூட, நான் அதிகமாக அனுசரித்துச் செல்ல வேண்டியவளாக இருப்பேன். இன்னும் சமரசம் செய்ய வேண்டும். இன்னும் மன்னிக்க வேண்டும்.” அவள் தன் இறுதி எண்ணத்தை கவனமாக இடைவெளி விட்டுச் சொன்னாள் கண்மணி: “சாத்தியத்தை விட, அமைதியை நான் தேர்வு செய்கிறேன். நம்பிக்கையை விட, தெளிவை நான் தேர்வு செய்கிறேன். அதற்காக நான் அன்பை நிராகரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. அழிப்பை மறுக்கிறேன் என்று அர்த்தம்.” அவர், அவளின் வார்த்தைகளை கவனமாக கேட்டார். அவளை மீண்டும் சம்மதிக்க வைக்க, அதன் பின் அவர் முயற்சிக்கவில்லை. சில உரையாடல்கள் உடன்பாட்டுடன் முடிவதில்லை. அவை புரிதலுடன் முடிவடைகின்றன. அவள் அன்பை விரும்பினாள். அவள் ஆசையை ரசித்தாள். அவள் தன்னை ரசிப்பதை விரும்பினாள். ஆனால் கவனிப்பு என்ற வேடத்தில், அதிகாரம் இருப்பதை வெறுத்தாள் திருமணம் ஒரு காலத்தில் அவளுடைய குரலை எடுத்துக் கொண்டது. அதைத் திரும்பப் பெற அவள் இனிமேல் ஒருநாளும் பேரம் பேச மாட்டாள். அதன் பின் ஒருநாள், ஓய்வு பெற்ற அதிகாரி கண்மணிக்கு காதல் மற்றும் ஏக்கம் [romantic, sensual, longing] கொண்ட, அழகிய தமிழ் கவிதைகளை அனுப்பினார். உறங்கும் போது கனவிலும் விடிந்தவுடன் நினைவிலும் குளத்தில் நீந்தும் தாமரையைப் போல் மன ஓடையில் நீந்துகின்றது உன் நினைவு வாழும் வரை உயிரிலும் எண்ணத்திலும் நீயே.. வானவில்லாய் எனக்கு அழகு பொழிந்து ஏழு நிறமாய் உன் கோலத்தைக் காட்ட காற்றைக் கண்ட மரம் போல் என் மனமும் கவலை மறந்து ஆடிப் பாடி நடனமாடுகிறதே … எனக்குள் தனிமையைத் தவிடு பொடியாக்கி எனக்குள்ளே எங்கோ இருந்து இசைக்கிறாய் உன்னைத் தேடி அலைந்திடும் தேடலில் உன் வண்ணமும் என்னைத் தீண்டி மயக்குதே ... ஒளியிழந்த விழிகளுக்கும் நீ கனவைத் தந்தாய் இருண்டுவிடும் என்னுலகம் மீண்டும் - கலைந்துவிடாதே மறக்க முடியாத பிம்பமாய் தவிர்க்க முடியாத நினைவாய் கண்ணின் கண்மணியாய் வந்தவளே - விலகிவிடாதே.. அவள் அவற்றை ஆர்வத்துடன் திரும்பத் திரும்ப படித்தாள். உடைமையைக் கோராத ஆசையை அவள் ரசித்தாள் [She enjoyed desire that did not demand possession.]. கவிதை, விளைவுகளின்றி நெருக்கத்தை அனுமதித்தது [Poetry allowed intimacy without consequence.]. கடமை இல்லாமல் ஏங்குதலுக்கு வழிவகுத்தது. [Longing without obligation.]. “என்னை அழைக்கும் ஆசை என்னை அச்சுறுத்தவில்லை. என்னைச் சொந்தம் கொள்ளும் முயற்சிதான் என்னை நடுங்கச் செய்கிறது.” [Desire does not frighten me, she realised. Ownership does.] என்றாள்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 06 தொடரும் துளி/DROP: 2015 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/33634639602851255/?
-
குட்டிக் கதைகள்.
இப்ப வாற சின்னதிரையின் ஒரு பகுதி போல இருந்தது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
@புலவர் பெருமானுக்கு உதவி செய்யலாமே எனும் நல்நோக்குடன் தமிழ்நெட்டில் தேடுதல் வேட்டை மேற்கொண்டேன். மறைந்த சம்மந்தர் அவர்கள் 2009 ஜனவரி தொடக்கம் சம்மந்தப்பட்ட பதிவுகளை பார்வையிட்டேன். போர் நிறைவடைந்து பத்து வருடங்களின் பின்னரும் மனுசன் பாவம் தமிழர்கள் சம்மந்தப்பட்ட விடயங்களில் நன்றாகவே குரல் கொடுத்துள்ளது. ஆக ஒரே ஒரு இடத்தில்தான் சறுக்கல் தெரிகின்றது. ரணில் கையுக்குள் இலங்கை தேசியகொடியை திணித்து உயர்த்திக்காட்டிய சம்பவம்தான் அது. விடுதலை புலிகள் அமைப்பு போராளிகள் - மாவீரர்கள் தியாகங்களிற்கு ஈடு, இணை இல்லை. சாதாரண தமிழ் அரசியல்வாதிகளினால் அவர்களிற்கு இணையாக பணியாற்ற முடியாது அவர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பமுடியாது என்பதுதான் யதார்த்தம். இதற்கு சம்மந்தர், சுமந்திரரை குறைசொல்லி என்ன செய்வது? முன்னைய வீச்சில் போராட்டம் நகரவேண்டும் என்றால் முன்னைய ஒழுக்கம், தியாகம், கட்டுக்கோப்பு, உயிர்க்கொடை எல்லாம் அவசியம். ஆனால், இப்போது அடிப்படை கட்டமைப்பே இதற்கு இல்லையே!
-
யாழ். மாவட்டத்தில் சுதந்திர தினம்!
பாதுகாப்பு படையினரும் பாடசாலை மாணவ மாணவியருடன் சிறப்பாக நடந்தேறியுள்ளது.
-
நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே - அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை
கொலையான அஜித்குமார் | கோப்புப் படம் கி.மகாராஜன் Updated on: 04 Feb 2026, 3:55 am மதுரை: ‘மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை. அஜித்குமாரின் மரணம் என்பது காவல் மரணமே என உறுதியாகியுள்ளது’ என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், 2 பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், “அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறிக்கிட்ட நீதிபதி, நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “அது உண்மை இல்லை என்பதால், புகார் முடிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நீதிபதி, “ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?. அவர் தானே எல்லாவற்றிற்கும் காரணம்?. ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? முன் விரோதம் ஏதும் இருந்ததா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு விசாரித்துள்ளனர்.” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில், “இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிரபு என்ற போலீஸ்காரரைத் தவிர மற்றவர்கள் அடித்ததாகவே கூறியிருக்கின்றனர். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, “வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனம் பதறுகிறது. ஏதுமில்லாத விசயத்துக்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம்.” என குறிப்பிட்டு விசாரணையை பிப்.17-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே - அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை
-
மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை
04 Feb, 2026 | 10:01 AM மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர். அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை,எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை,உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை | Virakesari.lk
-
ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி
04 Feb, 2026 | 10:34 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த 5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல் வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவசரமாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலம் மேலதிக சட்டவைத்திய விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக, குறித்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி | Virakesari.lk