All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எல்லாவற்றையும் பாக்கணும் எல்லாத்தையும் பாக்கணும். 😁
-
கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு
வந்த பின் காக்கும் சிஸ்டம் ************************************ அறிவுபூர்வமாக சிந்திக்கும் ஒரு சமூகம் அல்லது முன்னேற்றத்தை நோக்கி பயணிக்கும் ஒரு சமூகம் அல்லது நிர்வாக கட்டமைப்பு அல்லது அரசு ஒரு சம்பவம் நடந்த பின் என்ன செய்தீர்கள் என்று விசாரணை செய்யாது. மாறாக அச் சம்பவம் நடக்கும் முன் அதனை தடுத்து நிறுத்தவே முயற்சிக்கும் வருமுன் காப்பதனையே விரும்பும். சிறந்த திட்டமிடல் என்பது வரமுன் காப்பதே. வந்த பின் காப்பது தோல்வியின் அடையாளம். இன்று காலை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கூடு கலைந்து மாணவர்களை கொட்டியத்தில் 50 க்கு மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 39 மாணவர்கள் வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர் பிரதி அதிபர் உட்பட இரண்டு ஆசிரியர்களும் அனுமதிக்கப்பட்டனர். சம்பவத்தின் போது மாணவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக்கியுள்ளனர். பதற்றமடைந்துள்ளனர் தங்களது கற்றல் உபகரணங்கள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு குலைகளை முறித்தும் கையில் அகப்பட்ட பொருட்களை கொண்டும் குளவிகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போராடியிருக்கின்றார்கள். யுத்த காலத்தில் விமானத்தாக்குதலின் பின் அச்சூழல் எப்படியிருக்குமோ அதையொத்த நிலைமை அங்கு காணப்பட்டது. பாடசாலையில் குளவி கூடு காணப்படுகிறது. இது மாணவர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்தாக அமையலாம் எனவே இதனை உடனடியாக அகற்றி தருமாறு பாடசாலை நிர்வாகம் சம்மந்தப்பட்ட தரப்பினர்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே எழுத்து மூலம் அறிவித்திருந்தனர். ஆதாவது வருமுன் காப்பதற்கு பாடசாலை முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. ஆனாலும் இன்று சம்பவம் இடம்பெறும் வரை சம்மந்தப்பட்டவர்கள் இக் கோரிக்கை தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தவில்லை. சம்பவம் நடைப்பெற்ற பின்னரே விழுந்தடித்து ஒடிவந்து குளவி கூட்டை அகற்றுவது பற்றி ஆலோசிக்கின்றனர். இது கவலைக்குரியது. அதிஸ்டவசமாக ஆபத்தான நிகழ்வுகள் எதுவும் இன்று நடந்தேறியிருக்கவில்லை. ஏதேனும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்தால் யார் பொறுப்புக் கூறுவது? ஏன் இயலுமான விடயங்களில் வர முன் தடுக்க கூடிய திட்டமிடல்கள் இல்லை? போன்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் உண்டு. சம்பவத்தின் பின் வனஜீவராசிகள் திணைக்களம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பாதுகாப்பு படையினர், கல்வி அதிகாரிகள், என பலர் வந்து நிலைமைகளை ஆராய்ந்தனர். குளவி கூட்டை அகற்றுவது பற்றி திட்டமிட்டனர். நோய் வந்த பின் மருத்துவமனை. பேரழிவு வந்த பின் நிவாரணம். அநியாயம் நடந்த பின் விசாரணை. என்பதனை விட இவற்றை வருமுன் தடுப்பதே புத்திசாலித்தனம். Murukaiya Thamilselvan
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜோஷ் ஹெசல்வூட் காயம் காரணமாக உலக கோப்பையில் விளையாட மாட்டாராம். ஆஸ்திரேலியா பாடு திண்டாட்டம்தான்!🤣
-
"மூன்று கவிதைகள் / 23"
"மூன்று கவிதைகள் / 23" 'பொங்குக பொங்கல்' கற்ற அறிஞர்கள் வரலாறு பாட கற்புக் கன்னிகள் கோலம் போட உற்றார் உறவினர் கதிரவனை வணங்க ஏற்றுக உலையே! ஆக்குக சோறே! மதுக்குலாம் அலங்கல் மாலை மங்கையர் புதுக் கலத்தில் வளர்த்த செந்தீயில் பொது வெளியில் தோரணம் ஆட பதுமை கூடி பொங்குக பொங்கல்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................................... "மின்னலாய் ஒரு பின்னல்" [ஏழ்மை, உழைப்பு, செல்வம் & தானம்] ஏழ்மை இருந்தாலும் கல்வியை விடாதே உழைப்பு கட்டாயம் நிறைவேற்றும்! செல்வம் பூட்டி வைப்பதல்ல தானம் கொடுத்து மகிழ்வு காண்பதே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் .............................................................................. "மூவெழில் மூன்று" காற்றின் இசையில் கனவுகள் மலர, நினைவுகள் வான் உயர, அமைதியில் உறையும் ஆனந்தக் கற்பனை! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ..................................................................... துளி/DROP: 2019 ["மூன்று கவிதைகள் / 23" https://www.facebook.com/groups/978753388866632/posts/33671173965864485/?
-
சிரிக்கலாம் வாங்க
- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
ஒரு எடுகோளுக்கு, ஐலண்ட் இஸ்லாமியராகவே இருக்கட்டும் (எவருக்கும் அவரது இன அடையாளம் தெரியாது என்பதே உண்மை). இப்படி ஒரு இனவாதக் கருத்து? அதற்கு பல விருப்பக் குறிகள் வேற! இது போன்ற கருத்துக்களை உங்களைப் போன்றோரே வெளியிடும் போது தான், "குதிரைக்கு கடவுள் கொம்பு கொடுக்காதது அதன் குணம் அறிந்து தான்!" என்ற சொலவடை பொருத்தமாகத் தெரிகிறது😂!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பார்த்தேன் என்ன அடி ஜபிஎல் பந்து வீச்சாளர்களின் பந்துக்கே அந்த அடி என்றால் இந்த இளம் இங்லாந் பந்து வீச்சாளர்களின் பந்து பெடியனுக்கு தூசு மாதிரி.. என்னஇது கொதாரியாக கிடக்கு ஏனடாப்பா ஆட்டுக்குள்ள மாட்டைவிட நாம முழுசுறோம். போட்டி இன்றே தொடங்கி விட்டதா என்று நாலாபக்கமும் ஓடியாடி பார்த்தா இது வேற போட்டி. என்னா பெரிசு குதிரைக்கு காசு கட்டலையோ?- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்களுடைய எல்லாக் கருத்துகளுக்குமான பதில் இது: "சம்பந்தர் சொன்னதில் 99% தரவுத் தவறுகள் இல்லை" - என்பது தான் நான் எழுதியது. ஆனால், "கதிகாமர் 2012 நிலை கண்டு கிலேசம் கொண்டிருப்பார்" என்பது எனக்கு நம்பக் கஷ்டமான விடயம். அது சம்பந்தரின் வாய் வசனம், என் வாயில் நீங்கள் திணித்தால் தான் உங்கள் கருத்துக்குப் பலம் கிடைக்கும் என்றால், தாராளமாக "சம்பந்தரே ஜஸ்ரின் தான்" என்றும் எழுதி விடுங்கள்😂! இங்கே பேசப்படும் விடயங்கள் எல்லாம், சம்பந்தர் போன்றோர் ஏன் ஆயுதக் குழுக்களை நேசிக்கவில்லை? எப்படி புலிகளுக்கு ஆதரவாக வன்னி மக்களே முன்வந்து போராட முயலவில்லை (வலுக்கட்டாயமாக ஆட் சேர்க்க வேண்டியிருந்தமை), எவ்வாறு சர்வதேச அரங்கில் கதிர்காமர் சுட்டிக் காட்டக் கூடிய விடயங்களைப் புலிகள் செய்தனர்.. இவை பற்றியெல்லாம்பல பல வருடங்களாக cut and dry ஆக, சீரியசாக பலர் எழுதியாகி விட்டது. அந்த சீரியசான பதில்களை வாசிக்காமல் கடந்து போய் விட்டு மீண்டும் வந்து திரித்தல் அரைத்தல், பொரித்தல் என்று சிலர் ஆரம்பிக்கும் போது நிச்சயம் அவர்களுக்கு நக்கல் மூலம் தான் பதில் தர முடியும்! நக்கலுல் எள்ளலும் சுடுகிறதென்றால், தங்கள் கண் மூடித்தனமாக பக்தியில் திரிப்புகளை எழுதுவோரைத் தான் நீங்கள் கட்டுப் படுத்த வேண்டும்!- களைத்த மனசு களிப்புற ......!
பொடியன் பொல்லாதவன் ......! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- Today
- இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
இதனை நிராகரிக்கிறேன். "நரி" ரணிலால் தங்கள் இருப்பிற்கே ஆபத்து என்று கண்டு கொண்ட பின்னர் புலிகள் எடுத்த முடிவு மகிந்தவைக் கொண்டு வருவது என்பது. அப்படிக் கொண்டு வந்த பின்னர் 2005 இல் "அவர் யதார்த்தமாக நடப்பவர் என்கிறார்கள்" என்று அது வரை எந்த சிங்களத் தலைவர் பற்றியும் சொல்லாத கருத்தை மாவீரர் தின உரையிலேயே பிரபாகரன் சொன்னார். இந்தப் பின்னணியில், "எவர் வந்தால் அதிக தீமை மக்களுக்கு?" என்று புலிகள் சீர்தூக்கிப் பார்த்ததாக எங்கேயும் பதிவுகள் இல்லை. அப்படி ஏதும் இருந்தால் இங்கே பகிருங்கள், பேசலாம். புலிகளின் இலக்கு, 2004/05 இல் தங்கள் அமைப்பிற்கு இருந்த existential threat இனை நீக்குவது மட்டும் தான். யுத்தம் ஆரம்பித்த பின்னர், வன்னியில் மக்களை வெளியேற விடாமல் தடுத்து வைத்த போது, மக்கள் இழப்பைப் பற்றி புலிகள் பெரிதாகக் கரிசனை கொள்ளவில்லை என்பதை மீண்டும் நிரூபித்தனர். இதையெல்லாம் நான் உங்களுக்குப் பதிலாக எழுதுவது நீங்கள் வாசித்து, யோசிப்பீர்கள் என்பதால் அல்ல! உங்கள் போன்றவர்களுடைய பக்தியும், மயக்கங்களும் எதிர்கால சந்ததிக்கு வரலாறாக காவப் படும் ஆபத்து இருக்கிறது (ஏற்கனவே AI நாங்கள் செவி மடுக்க விரும்பும் வரலாற்றை எழுதும் படி கேள்வி கேட்கும் பணியை ரஞ்சித் ஆரம்பித்து விட்டார்!). இதைத் தடுப்பது மட்டுமே என் நோக்கம்!- இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
கெட்டிக் காரன்! அப்படியே அடுத்த கட்டத்திற்கு நகர முயற்சியுங்கள்😎!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியைக் காண முடியலில்லை. இப்போதான் ஓட்டங்களைப் பார்த்தேன். என்னா அடி அடிச்சிருக்கான் பயபுள்ள. அதுவும் 25வது பரிமாற்றத்திலேயே, பையன் 175 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கிறான். நின்றிருந்தால்....... நினைச்சாலே புல்லரிக்குது.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பாட்டுக்கு பாட்டெடுத்து .......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பெண் : { பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ } (2) ஆண் : கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க ஹோய் ஆண் : தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ பெண் : இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான் பெண் : ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம் விட்டு போனானே பெண் : ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு ஆண் : மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு ஆண் : மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே ஆண் : மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே ஆண் : ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு பெண் : வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு பெண் : ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன் பெண் : நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க ஹோ ஹோ ஹோ நான் மட்டும் இங்கிருக்க ஆண் : தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க ஹோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ........! --- பாட்டுக்குப் பாட்டெடுத்து ---- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இறுதிப் போரை தடுத்து நிறுத்தி மக்களை காக்கும. செயலை செய்யக்கூடய வல்லமை புலிகளுக்கு மட்டுமே இருந்தது. அதை அவர்கள் உரிய நேரத்தில் செய்யவில்லை. 2009 ஜனவரிக்கு பிறகு சம்பந்தர் என்ன பாலசிங்கம் உயிரோடு இருந்திருந்தாலும் அது முடிந்து இருக்காது என்பது இயல்பான பொது அறிவு உடையவர்கள். அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதில் நவரத்தினம் என்ன புசத்தினாலும் வன்னி மைந்தன் என்ன புசத்தினலும் பொது அறிவு உள்ள மக்கள் இந்த புசத்தலை நம்பப் போவதில்லை. பொது அறிவு இல்லாதவர்களையே அவர்களால் ஏமாற்ற முடியும். புலிகளல் முடியாததை சம்பந்தர் தலைகீழாக நடந்தாலும் முடிந்திருக்காது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்லாந் படு தோல்வி அடைய போகுது...............இந்தியா வீரர்களின் பந்து வீச்சுக்கு அடிப்பது சிரமம்...............................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
100 ரண்கள் ..கடந்தவுடன் ...இங்கிலாந்து பயிற்சியாளர்களும் ...பார்வையாளர்களும் பட்ட ரென்சன் ...கண்கொள்ளக்காட்சி....பவுண்டரி எல்லைவரை வந்து அறிவுறுத்தல் கொடுக்கத்தொடங்கி விட்டினம்...- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பார்த்தேன் என்ன அடி ஜபிஎல் பந்து வீச்சாளர்களின் பந்துக்கே அந்த அடி என்றால் இந்த இளம் இங்லாந் பந்து வீச்சாளர்களின் பந்து பெடியனுக்கு தூசு மாதிரி...........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்துக்கு இலக்காக 412 ஓட்டம்...நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது....பார்ப்போம் இந்த 19 வயது ரீமை இலங்கைக்கு அனுப்பி பாகிஸ்தான் விளையாடாத போட்டியன்றூ... காட்சிப் போட்டியில் விளையாட வைக்கலாம் ...இந்திய ஏ அணியே வாங்கிக்கட்டலாம்- தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்!
தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்! ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) தங்குவதற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாத ஆப்கானியர்களை மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்பும் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தியுள்ளது. இது நடைமுறைச் சிக்கல்களையும், ஐநா அகதிகள் முகமையின் கவலையையும் தூண்டியுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளிடமிருந்து வரும் அழுத்தத்தினால், பிரஸ்ஸல்ஸ் (ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம்) காபூலில் உள்ள தாலிபான் அரசாங்கத்துடன் தொடர்புகளைத் தொடங்கியுள்ளது. இந்த நாடு கடத்தல் நடவடிக்கையின் சாத்தியக்கூறுகளை ஆராய ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இதுவரை இரண்டு “தொழில்நுட்பப் பயணங்களை” (Technical missions) மேற்கொண்டுள்ளனர். இதில் மிகச் சமீபத்திய பயணம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. “மீண்டும் அனுமதிப்பது (Readmission) மற்றும் திரும்புதல் நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பது குறித்த பணிகளை ஆராய்வதற்காக” இந்த பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கஸ் லாம்மெர்ட் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இத்தகைய நாடு கடத்தல் என்பது கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இது சட்ட மற்றும் தார்மீக ரீதியான பல கவலைகளை எழுப்புகிறது. தாலிபான் அதிகாரிகள் கடந்த ஆண்டில் “தங்கள் ஒடுக்குமுறையை அதிகரித்துள்ளதாக” மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இந்த வாரம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஊடக சுதந்திரத்திற்கு எதிரான புதிய விதிகள் மற்றும் பெண்கள், சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகளை அது சுட்டிக்காட்டியுள்ளது. இருப்பினும், ஐரோப்பாவின் 27 உறுப்பு நாடுகளில் பெரும்பாலானவை இப்போது இந்த நாடு கடத்தலை வலியுறுத்துகின்றன. குடியேற்றத்திற்கு எதிரான பொதுமக்களின் கருத்து மாற்றம் மற்றும் ஐரோப்பா முழுவதும் வலதுசாரி கட்சிகளின் தேர்தல் வெற்றி போன்றவை இதற்கு முக்கியக் காரணமாகின்றன. https://athavannews.com/2026/1463547- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
- “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
என்ன சொல்கின்றீர்கள்? சம்பந்தர் அரசியல் சூட்சும்ம் நினைந்தவர், அரசியல் ஞானி என்றெல்லாம் புகழ்ந்து தறள்ளியுள்ளீர்கள். 2002 ல் புலிகள் அப்படிச் சொல்லவில்லை. அவர்கள் கூறியது, “இவையள் தனித்து எதுவும் செய்ய முடியாது. அதற்கான தகுதி புலிகளுக்கு மட்டுமே உள்ளது. தாங்கள் சொல்லுறத கேட்டு பாராளுமன்றதமில சொல்லுறத்துக்கு மட்டும் தான் இவயள நாங்கள் வைச்சிருக்கிறம்.” இவ்வாறு பகீரங்கமாக பத்திரிகையாளர்களுக்கு சொல்லப்பட்டது. அதாவது நீங்கள் கூறிய அரசியல் ஞானியை புலிகள் தாங்கள் சொன்னதை அப்படியே சொல்லும் பியோனாக தான் வைத்திருந்துள்ளார்கள். சுப்பர் பவர் இருந்த புலிகளாலேயே எதையும் சாதிக்க முடியாத போது ஒரு பியோனால் அதை செய்திருக்க முடிந்திருக்கும் என்று நினைக்கின்றீர்களா? - “தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.