All Activity
- Past hour
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ரைஸ் குக்கரில் செய்யும் அருமையான ஜீரா ரைஸ் சோறு ......! 👍
- Today
-
இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்திற்கு வருகை
இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்திற்கு வருகை 05 Apr, 2026 | 03:12 PM (எம்.நியூட்டன்) இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் நேரடி தரிசனம் மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்தில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் சுவாமிகளை வரவேற்றார். https://www.virakesari.lk/article/242807
-
ஏராளன் started following "சிஐஏவின் ஏமாற்றும் உத்தி" - இரானுக்குள் அமெரிக்க விமானப்படை வீரர் மீட்பு எப்படி நடந்தது? , இந்தியாவின் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் மாவிட்டபுரம் சிவபூமி திருக்குறள் வளாகத்திற்கு வருகை , அமெரிக்காவின் C-130 விமானம் மற்றும் 2 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீட்பு நடவடிக்கையின் போது தாக்குதல் - ஈரான் தெரிவிப்பு and 6 others
-
அமெரிக்காவின் C-130 விமானம் மற்றும் 2 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீட்பு நடவடிக்கையின் போது தாக்குதல் - ஈரான் தெரிவிப்பு
அமெரிக்காவின் C-130 விமானம் மற்றும் 2 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: மீட்பு நடவடிக்கையின் போது தாக்குதல் - ஈரான் தெரிவிப்பு Published By: Digital Desk 2 05 Apr, 2026 | 01:38 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்காவின் எப்-15ஈ போர் விமானத்திலிருந்து மாயமான கேணல் தர அதிகாரியை மீட்கும் நடவடிக்கையின் போது, பல அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான் கலங்கள் ஈரானியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் புரட்சிகர இராணுவம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் தனது அதிகாரியை மீட்டதாகப் பெருமிதம் தெரிவித்த அதேவேளையில், ஈரான் தரப்பிலிருந்து வெளியாகியுள்ள இந்தத் தகவல் போர்க்களத்தில் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்புகளைச் சுட்டிக்காட்டுகிறது. ஈரானின் மத்திய இராணுவக் கட்டளையகம் மற்றும் தஸ்நிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இஸ்பஹான் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்காவின் சி-130 ரக இராணுவப் போக்குவரத்து விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அத்துடன், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகொப்டர்களும் ஈரானியப் படைகளால் தகர்க்கப்பட்டுள்ளன. அதேமாகாணத்தில் இஸ்ரேலுக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் வான்வெளி, தரைப்படை, பஸிஜ் மற்றும் பொலிஸ் கட்டளையகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மூலம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "எதிரியின் பறக்கும் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன" என ஈரான் புரட்சிகர இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் "ஒரே ஒரு அமெரிக்க வீரர் கூட உயிரிழக்கவில்லை அல்லது காயமடையவில்லை" எனக் கூறி வரும் நிலையில், ஈரான் தரப்பிலிருந்து போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் வீழ்த்தப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி, போரின் உண்மைத்தன்மை தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை தோற்றுவித்துள்ளது. https://www.virakesari.lk/article/242792
-
இலங்கையில் எரிவாயு விலை அதிகரிப்பு
லாஃப்ஸ் எரிவாயு விலை ரூ. 1,070 உயர்வு Published By: Vishnu 05 Apr, 2026 | 09:23 PM உள்நாட்டு லாஃப்ஸ் எரிவாயு விலைகள் இன்று (5) நள்ளிரவு முதல் உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,070 உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 5,700 ஆக உள்ளது. அதேபோல், 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையும் ரூ. 418 உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 2,280 ஆக உள்ளது. https://www.virakesari.lk/article/242823
-
டெனால்ட் ட்ரம்பின் 48 மணிநேர காலக்கெடுவை நிராகரித்த ஈரான்!
நரகத்தின் கதவுகள் திறக்கும் ; ட்ரம்ப்பின் 48 மணித்தியால காலவகாசத்தை நிராகரித்தது ஈரான் Published By: Digital Desk 3 05 Apr, 2026 | 11:02 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த '48 மணித்தியால காலவகாசத்தை' ஈரான் சனிக்கிழமை (ஏப் 04) உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரானின் அத்தியாவசிய உட்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானின் மத்திய இராணுவக் கட்டளையகம் சார்பில் ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி விடுத்துள்ள அறிக்கையில், ட்ரம்ப்பின் எச்சரிக்கையை "உதவியற்ற, பதற்றமான, சமநிலையற்ற மற்றும் முட்டாள்தனமான செயல்" என விமர்சித்துள்ளார். ட்ரம்ப்பின் அதே பாணியில் பதிலளித்த அவர், "இந்தச் செய்தியின் எளிய அர்த்தம் என்னவென்றால், உங்களுக்கு நரகத்தின் கதவுகள் திறக்கப்படும் என்பதாகும்" என எச்சரித்துள்ளார். ட்ரம்ப் சனிக்கிழமை ட்ரூத் சோஷியல் தளத்தில், "ஈரான் ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய அல்லது ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க நான் 10 நாட்கள் அவகாசம் கொடுத்தது நினைவிருக்கிறதா? நேரம் முடிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மீது நரகமே மழையாகப் பொழிவதற்கு இன்னும் 48 மணிநேரமே உள்ளது. கடவுளுக்கே மகிமை!" எனப் பதிவிட்டுள்ளார். அண்மைக்காலமாக இரு தரப்பிற்கும் இடையே இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் நடப்பதாகக் கூறப்பட்ட போதிலும், ட்ரம்ப் தொடர்ச்சியாகக் காலவகாசத்தை வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் 05 நாட்கள் அவகாசம் வழங்கிய ட்ரம்ப், பின்னர் ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 06 ஆம் திகதி (திங்கட்கிழமை) இரவு 8 மணி வரை (அமெரிக்க நேரம்) இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தார். "பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன" என ஒருபுறம் கூறிக்கொண்டே, மறுபுறம் 'நரகம் பொழியும்' என எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதே இந்த அனைத்து மோதல்களுக்கும் மையப்புள்ளியாக உள்ளது. இதனை மீண்டும் திறக்க வைக்கவே அமெரிக்கா இந்தத் தீவிர அழுத்தங்களைப் பிரயோகித்து வருகிறது. https://www.virakesari.lk/article/242774
-
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது
ஈரானின் இராணுவத்தளபதி சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது Published By: Digital Desk 3 05 Apr, 2026 | 11:28 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்காவில் வசித்து வந்த ஈரான் புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. காசிம் சுலைமானியின் சகோதரியின் மகள் ஹமிதே சுலைமானி அப்ஷார் மற்றும் அவரது மகள் சரீனசதாத் ஹொசைனி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது நிரந்தர வதிவிட உரிமையை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ இரத்து செய்துள்ளார். தற்போது இவர்கள் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவின் காவலில் உள்ளனர். 2015-இல் சுற்றுலா விசா மூலம் அமெரிக்கா சென்ற ஹமிதே, 2019-இல் அரசியல் தஞ்சம் பெற்றார். எனினும், தஞ்சம் பெற்ற பின்னர் அவர் நான்கு முறை ஈரானுக்குப் பயணம் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது அவரது தஞ்சம் கோரிய விண்ணப்பம் "மோசடியானது" என்பதை நிரூபிப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கைது நடவடிக்கையை காசிம் சுலைமானியின் மகள் நர்ஜெஸ் சுலைமானி வன்மையாகக் கண்டித்துள்ளார்: "கைது செய்யப்பட்டவர்களுக்கும் எனது தந்தைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை; அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பொய்யான தகவல்களைப் பரப்புகிறது" என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா பலவீனமடைந்து வருவதால் இத்தகைய பொய்களைப் புனைவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஜெனரல் காசிம் சுலைமானி 2020-ஆம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், சுலைமானி ஒரு "கொடிய மேதை" எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் தற்போதைய போரில் ஈரான் இன்னும் பலமான நிலையில் இருந்திருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/242780
-
இலங்கையில் எரிவாயு விலை அதிகரிப்பு
லிட்ரோ எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் உயர்வு Published By: Vishnu 05 Apr, 2026 | 08:28 PM உள்நாட்டு லிட்ரோ எரிவாயு விலைகள் இன்று (5) நள்ளிரவு முதல் உயர்த்தப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 775 அதிகரித்து, புதிய விலை ரூ. 4765 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. . ஒரு 5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 308 அதிகரித்து, அதன் புதிய விலை ரூ. 1910 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு 2.3 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 140 அதிகரித்து, அதன் புதிய விலை ரூ. 890 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242822
-
விசேடதேவையுடைய சமூகத்தினருக்கான பிரத்தியேக இணையத்தளம்
இயலாமையுடைய சமூகத்தினருக்கான பிரத்தியேக இணையத்தளம் 05 Apr, 2026 | 04:53 PM (நமது நிருபர்) டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பன்னிரண்டு அமைச்சுக்களுடன் இயாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடலை முன்னெடுத்தது. இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏப்ரல் முதல் முன்னோடியாக இரண்டு வழித்தடங்களில் 10 தாழ்தள பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் தெரிவித்தனர். ஆறு வழிடத்தடங்களில் இவ்வாறான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்தபோதும், சக்கரநாற்காலிகளுடன் சென்று ஏறக்கூடியமை போன்ற வசதிகளைக் கொண்ட பஸ் தரிப்பிடங்களை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இந்த வசதிகளைப் பூர்த்திசெய்யும் பட்சத்தில் ஏனைய வழித்தடங்களிலும் இச்சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் குறிப்பிட்டனர். அத்துடன், இயலாமையுடைய குறைந்த வருமானத்தைப் பெறும் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவது மற்றும் அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான விசேட திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 50 மில்லியன் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த ரணவிரு சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், 30 வருட யுத்தத்தில் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் 23, 192 பேர் தமது அதிகாரசபையின் கீழ் பராமரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர். இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ரூ.864 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், 16-35 வயதுக்கிடைப்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 80 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பார்வைக் குறைபாடுள்ளோருக்கான மறுவாழ்வு அறக்கட்டளை நிதியின் மூலம் பார்வைக் குறைபாடுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உதவி சாதனங்கள் வழங்குவதற்காக ரூ. 17.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர். சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், 2026 முதல் 2035ஆம் ஆண்டு வரையில் முதல் 2035 வரை செயல்படுத்தப்படவுள்ள புதிய பத்தாண்டு சுகாதாரக் கொள்கை அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருப்பதாகவும், இந்தக் கொள்கையில் அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயாமையுடைய நபர்கள் உள்ளடங்கலாக நலிவடைந்த நபர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர். தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இயலாமையுடைய நபர்களுக்கான விரிவான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அமைய, 2022 முதல் 2025-ஆம் ஆண்டு காலப்பகுதியில் 750 இயலாமையுடைய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2026-ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரூ. 5.75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். 2026ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்காகன கொடுப்பனவுகளை மேற்கொள்ள ரூ.19,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்திடம் தெரிவித்தனர். அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் அணுகலுக்கான உரிமையை உறுதி செய்வதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பிரதேச செயலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் போன்ற பொதுவசதிகளுக்கான அணுகல்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் 2026ஆம் ஆண்டில் தமது அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்திற்கு விளக்கமளித்தனர். https://www.virakesari.lk/article/242813
-
அன்னைபூபதி அம்மாவின் 38ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு
அன்னைபூபதி அம்மாவின் 38ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு 05 Apr, 2026 | 02:50 PM (எம்நியூட்டன்) அன்னைபூபதி அம்மாவின் 38ஆம் ஆண்டு நினைவு தின அஞ்சலி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (05) , வலி வடக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தொகுதி அலுவலகத்தில் அன்னை பூபதி அம்மாவின் 38ஆம் ஆண்டு 18 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு வலி வடக்கின் உறுப்பினர் குலத்துங்கம் வில்வராசா தலைமையில் நடைபெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். வலி வடக்கின் பிரதேச சபை உறுப்பினர் தயானி சந்திரன் அவர்கள் மலர் மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சபையின் உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு மலர் தூவி தங்களது அஞ்சலியை செலுத்தினர். அன்னை பூபதி அம்மாவின் தியாகப் பாதை என்றும் தமிழர் மனங்களில் நிலைத்திருக்கும். https://www.virakesari.lk/article/242805
-
இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?
President Donald Trump has also just issued a remarkable, profanity-laced threat to Iran, warning of severe military action should Tehran fail to make a deal or reopen the Strait of Hormuz, a critical oil thoroughfare. He said in a post to social media that Tuesday “will be Power Plant Day, and Bridge Day, all wrapped up in one, in Iran. There will be nothing like it!!!” Open the Fuckin’ Strait, you crazy bastards, or you’ll be living in Hell - JUST WATCH! US President Donald Trump, via Truth Social The missive marks the president’s latest signal regarding US plans to target Iran’s critical infrastructure. Trump’s deadline for Iran to reopen the strait has repeatedly shifted and during an address to the nation, he suggested the strait would “open up naturally” when the conflict is over. But the virtual shutdown of the strait, which accounts for the transit of approximately 20% of the world’s oil, has led to a major increase in gas prices. The war is deeply unpopular with Americans, according to CNN polling, and Trump has suggested it could be over in a matter of weeks. https://edition.cnn.com/
-
நெடுந்தீவுக்கான படகுச்சேவை தற்போது தனியார் கையில்; கைவிட்டது வீதி அபிவிருத்தி அதிகாரசபை!
நெடுந்தீவுக்கான படகுச்சேவை தற்போது தனியார் கையில்; கைவிட்டது வீதி அபிவிருத்தி அதிகாரசபை! 05 Apr, 2026 | 02:41 PM நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை (03) தொடக்கம் தனியார் கையில் வந்துள்ளதுடன், தொடர்ந்தும் இவ்வாறான நிலையே தொடர்கின்றது. நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகளில் எ ஒன்றான குமுதினி படகு திருத்தவேலை காரணமாக சேவையில் இல்லை. இதேவேளை, வடதாரகை திருத்த வேலைக்காக திருகோணமலையில், நெடுந்தாரகை திருத்தவேலைக்காக நெடுந்தீவில் என பயணிகள் சேவையில் இருந்து முற்றாக அரச படகுகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு தீவு மக்களை தவிக்கவிட்டுள்ளனர். தனியார் படகான கரிகணன் படகே தற்போது பயணிகள் சேவையில் இணைந்தது கொண்டதுடன் இதன்காரணமாக வழமையான அதன் மு.ப.11.30 மணி சேவையினை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை பண்டிகைக்காலம் நெருங்கிவரும் நிலையில் மு.ப.11.30 மணி சேவை நிறுத்தப்பட்டதால் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். படகு சேவைகள் தொடர்பாக உரிய திட்டமிடல் இன்றி வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் செயற்பட்டு வருவதுடன் பயணிகள் சேவைக்காக மாற்று ஏற்பாடுகள் செய்வது தொடர்பிலும் அக்கறை இன்றி இருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. https://www.virakesari.lk/article/242803
-
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம்
விண்வெளியிலிருந்து பார்க்கும் போது பூமி எப்படி இருக்கிறது? - ஆர்டெமிஸ் 2 குழு எடுத்த புகைப்படம் பட மூலாதாரம்,Nasa/Reid Wiseman படக்குறிப்பு,'ஹலோ, வேர்ல்ட்' என்று தலைப்பிடப்பட்ட இந்தப் புகைப்படம், ஓரியன் விண்கலத்திலிருந்து பார்க்கப்படும் பூமியைக் காட்டுகிறது. கட்டுரை தகவல் சோபியா ஃபெரைரா சாண்டோஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான பாதி தூரத்தை ஆர்டெமிஸ் 2 விண்கலக் குழுவினர் கடந்து செல்லும்போது எடுத்த பூமியின் முதல் உயர்தரப் படங்களை நாசா வெளியிட்டுள்ளது . விண்கலக் குழுவினர் தங்களின் இறுதி எஞ்சின் எரிப்பு செயல்பாட்டை முடித்து, நமக்கு மிக நெருக்கமான விண்வெளி அண்டை வீடான நிலவை நோக்கிய பாதையில் பயணிக்கத் தொடங்கிய பிறகு, இந்த "அற்புதமான" படங்களை அந்தத் திட்டத்தின் கமாண்டர் ரீட் வைஸ்மேன் எடுத்ததாக நாசா கூறுகிறது. விண்கலம் ஏவப்பட்ட இரண்டு நாட்கள், ஐந்து மணிநேரம் மற்றும் 24 நிமிடங்களுக்குப் பிறகு இந்த மைல்கல் எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டதும், விண்கலக் குழுவினர் ஒட்டுமொத்தமாக "மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக" விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் கூறினார். 'ஹலோ, வேர்ல்ட்' என்று அழைக்கப்படும் முதல் புகைப்படம், பரந்து விரிந்த நீல அட்லாண்டிக் பெருங்கடலைக் காட்டுகிறது. பூமி சூரியனை மறைக்கும்போது வளிமண்டலத்தின் ஒளியாலும், இரு துருவங்களிலும் தோன்றும் பச்சை நிற துருவ ஒளிகளாலும் (அரோரா) இப்படம் சூழப்பட்டுள்ளது. இதில் பூமி தலைகீழாகத் தோன்றுகிறது. இடதுபுறத்தில் மேற்கு சஹாரா மற்றும் ஐபீரிய தீபகற்பமும், வலதுபுறத்தில் தென் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியும் தெரிகின்றன. கீழ் வலதுபுறத்தில் பிரகாசமாகத் தெரியும் கோளை வெள்ளி என்று நாசா அடையாளம் கண்டுள்ளது. பட மூலாதாரம்,Nasa/Reid Wiseman படக்குறிப்பு,'ஆர்டெமிஸ் II பூமியைத் திரும்பிப் பார்க்கிறது' என்ற தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தையும், ஓரியன் விண்கலத்தின் நான்கு பிரதான ஜன்னல்களில் ஒன்றிலிருந்து வைஸ்மேன் எடுத்தார். வெள்ளிக்கிழமை அதிகாலையில் விண்கலக் குழுவினர் நிலவை நோக்கிய பயணத்திற்கான 'டிரான்ஸ்-லூனார் இன்ஜெக்ஷன்' எரிப்புச் செயல்முறையை வெற்றிகரமாக முடித்த பிறகு இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. இந்த எரிப்புச் செயல்பாடு ஓரியன் விண்கலத்தைப் பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து வெளியேற்றியது. ஓரியன் விண்கலத்தில் இருந்த நான்கு விண்வெளி வீரர்களும் நிலவை நோக்கி 200,000 மைல்களுக்கும் அதிகமான தூரம் பயணிக்க இலக்கு வைத்துள்ளனர். ஆர்ட்டெமிஸ் II தற்போது ஒரு மீள் பாதையில் உள்ளது. இந்தப் பாதை, விண்கலக் குழுவினரை நிலவின் மறுபக்கத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் கொண்டு வரும். 1972-ஆம் ஆண்டிற்குப் பிறகு மனிதர்கள் பூமியின் சுற்றுப்பாதையைத் தாண்டிப் பயணிப்பது இதுவே முதல் முறையாகும். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த விண்கலம் ஏவப்பட்டது. விண்கலக் குழுவினர் ஏப்ரல் 6-ஆம் தேதி நிலவின் மறுபக்கத்தைக் கடந்து, ஏப்ரல் 10-ஆம் தேதி பசிபிக் பெருங்கடலில் இறங்குவதன் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,அந்த குழுவினரால் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம், டெர்மினேட்டர் என்று அழைக்கப்படும் இரவுக்கும் பகலுக்கும் இடையிலான பிரிவு பூமியைக் குறுக்கிடுவதைக் காட்டுகிறது. எரிப்புச் செயல்பாடு முடிந்ததும், புகைப்படங்கள் எடுப்பதற்காக விண்கலக் குழுவினர் ஜன்னலுக்கு அருகிலே இருந்து படங்களை எடுத்துக் கொண்டிருந்ததாக மிஷன் ஸ்பெஷலிஸ்ட் ஜெர்மி ஹேன்சன் ஹூஸ்டனில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திடம் தெரிவித்தார். "நிலவின் ஒளியால் ஒளிரும் பூமியின் இருண்ட பகுதியின் அழகான காட்சியை நாங்கள் காண்கிறோம்," என்று அவர் கூறினார். விண்வெளியைப் பார்க்கும் ஆர்வத்தில் ஜன்னல்களில் கறை படிந்ததால், அவற்றை எப்படிச் சுத்தம் செய்வது என்று கேட்பதற்காக வைஸ்மேன் பின்னர் ஹூஸ்டனில் உள்ள கட்டுப்பாட்டு மையத்திற்கு மீண்டும் அழைத்தார். விண்கலத்திலிருந்து நமது கிரகத்தைப் படம் பிடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. அவ்வளவு தூரத்தில் புகைப்படம் எடுக்கும்போது 'எக்ஸ்போஷர்' அமைப்புகளைச் சரிசெய்வது சிரமமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார். "இது உங்கள் வீட்டின் பின்புறம் சென்று நிலவைப் படம் பிடிக்க முயல்வதைப் போன்றது. இப்போது அப்படித்தான் உணர்கிறேன்" என்று அவர் கட்டுப்பாட்டு மையத்திடம் கூறினார். ஆனால் அது இப்போது ஒரு பிரச்னையாக இல்லை. வைஸ்மேன் எடுத்த மற்றொரு புகைப்படம், பூமியை இரவு மற்றும் பகலாகப் பிரித்துக் காட்டுகிறது. ஒளிக்கும் இருளுக்கும் இடையிலான அந்த எல்லைக்கோடு 'டெர்மினேட்டர்' என்று அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,NASA/Reid Wiseman படக்குறிப்பு,பூமி சூரியனை முழுமையாக மறைக்கும்போது, இரவு நேரத்தில் விளக்குகள் மினுமினுக்கின்றன. பின்னர், பூமி கிட்டத்தட்ட முழு இருளில் மூழ்கியிருக்க, இரவில் மனிதகுலத்தின் மின்விளக்குகள் மினுமினுப்பதைக் காட்டும் மற்றொரு படத்தை நாசா வெளியிட்டது. மேலும், 2026-இல் எடுக்கப்பட்ட பூமியின் தோற்றத்தையும், மனிதர்கள் கடைசியாக நிலவில் கால் பதித்த 1972-ஆம் ஆண்டு அப்பல்லோ 17 குழுவினர் எடுத்த அதே போன்ற ஒரு படத்தையும் நாசா அருகருகே வைத்து ஒப்பிட்டுக் காட்டியது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,அன்றும் இன்றும்: 1972-ல் (வலதுபுறம்) மற்றும் 2026-ல் (இடதுபுறம்) காணப்படும் பூமி. "கடந்த 54 ஆண்டுகளில் நாம் வெகுதூரம் வந்துவிட்டோம், ஆனால் ஒரு விஷயம் மாறவில்லை. விண்வெளியிலிருந்து பார்க்கும்போது நமது பூமி அவ்வளவு அழகாக இருக்கிறது" என்று நாசா குறிப்பிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czjwmk7jlnzo
-
யாழ்ப்பாணம் சுற்றுலா மேம்பாட்டுக்கு இந்திய ‘டீம் பைசன்’ ஆதரவு : வடக்கு அழகை பாராட்டிய பயணிகள்
யாழ்ப்பாணம் சுற்றுலா மேம்பாட்டுக்கு இந்திய ‘டீம் பைசன்’ ஆதரவு : வடக்கு அழகை பாராட்டிய பயணிகள் 05 Apr, 2026 | 02:33 PM யாழ்ப்பாணம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கின்றது. இந்தப் பிரதேசத்தின் அழகை வியந்து ரசித்தோம். இங்குள்ள மக்களின் விருந்தோம்பல் பண்பு எம்மைக் கவர்ந்திழுத்துள்ளது. மறக்க முடியாத பல நல்ல அனுபவங்களைத் தந்த இங்கு, எமது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட ஏனையோரையும் சுற்றுலா வருமாறு நாம் ஊக்குவிப்போம். சுற்றுலாத்துறையில் வடக்கு மாகாணம் இன்னமும் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம், என்று இந்தியாவின் 5 மாநிலங்களிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த துவிச்சக்கரவண்டிப் பயணக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்தியாவிலிருந்து வருகை தந்த 'டீம் பைசன்' (Team Bison) துவிச்சக்கரவண்டிப் பயண அணியினருக்கான கௌரவிப்பு நிகழ்வு, வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் சனிக்கிழமை (04) இரவு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியாவிலிருந்து வருகை தந்த குழுவினருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். அவர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில், ஆயிரக்கணக்கான வருடங்களாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகச் சிறந்ததும் நெருக்கமானதுமான உறவு காணப்படுவதுடன், இந்தியா எமக்குத் தொடர்ந்தும் பல வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது. மூன்று தசாப்த காலக் கொடிய போரால் வடக்கு மாகாணம் கடுமையாகப் பாதிக்கபட்டிருந்தாலும், தற்போது இங்கு மிகவும் அமைதியான சூழல் நிலவுகின்றது. யாழ்ப்பாணத்துக்கும் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை என்பன ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இந்தியச் சுற்றுலாவிகளின் வருகை எமது மாகாணத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. நாமும் ஒரு சகோதரனைப் போல இந்தியாவுடன் மிகச் சிறந்த உறவைப் பேணி வருகின்றோம். வடக்கு மாகாணத்தில் தற்போது சுற்றுலாத்துறை வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. அதேநேரம், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் உறுதியான தலைமையின் கீழ், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான மிகப்பெரியதொரு போராட்டத்தை எமது நாடு தற்போது முன்னெடுத்து வருகின்றது. போதைப்பொருளை எமது நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு நாம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றோம். அதேவேளை, எமது ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானதாகும். எமது மூதாதையர்கள் பாரம்பரிய கிராமப்புற உணவுகளை உட்கொண்டதாலேயே மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால், சிறுவர்கள் தற்போது துரித உணவுகளை நாடும் நிலை காணப்படுகின்றது. இந்த நிலைமை மாற்றப்பட்டு, ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளின் பக்கம் நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வலிமையான சமூகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சைக்கிள் சுற்றுலா, இளைஞர்களுக்கு ஓர் உத்வேகத்தை அளிப்பதுடன், சமூகத்துக்குச் சாதகமான பங்களிப்பை எவ்வாறு வழங்குவது என்பதற்கான சிறந்ததொரு முன்மாதிரியாகும். சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய பல இடங்கள் வடக்கில் அடையாளங்காணப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. நெடுந்தீவு போன்ற தீவுகளில் அனுமனின் பாதச் சுவடுகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை நீங்கள் பார்வையிடுவதுடன், உங்களின் இந்தப் பயண அனுபவங்களை இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு, எதிர்காலத்தில் அவர்களையும் வடக்கு மாகாணத்துக்கு வருகை தர நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார். 'போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' மற்றும் 'ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி' ஆகிய உயரிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணத்தில், இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ;டிரா, ஹரியானா மற்றும் கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர் பங்கேற்றிருந்தனர். இவர்களுக்கான கௌரவத்தை வடக்கு மாகாண ஆளுநர், சுற்றுலாப் பணியகத் தலைவர், பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து வழங்கி வைத்தனர். அத்துடன், இந்தக் குழுவினர் நயினாதீவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உதவிப் பொருட்களையும் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242802
-
நீளிரா விமர்சனம்: போர் குறித்த முக்கியமான அரசியல் படைப்பு - இது பதைபதைக்க வைக்கும் ஈழத்து சினிமா!
படத்தில் தலையாட்டிகள், காட்டி கொடுப்பவர்கள், ஈப்பி போன்ற ஆயுத குழுக்கள் வருகின்றார்களா? நான் இப்படியான திருமண வைபத்தை கண்டுற்றுள்ளேன். அங்கு முகமூடிகளும் வருகின்றார்கள். கிந்திய இராணுவம் பத்து வீடுகள் தொலைவில் வரும்போதே நாய்கள் குரைக்கும் சத்தத்தில் வீடே அதிர்ந்துவிடும். கிந்திய இராணுவத்தின் துர்நாற்றம் அவ்வளவு விசேடமானது.
-
"சிஐஏவின் ஏமாற்றும் உத்தி" - இரானுக்குள் அமெரிக்க விமானப்படை வீரர் மீட்பு எப்படி நடந்தது?
"சிஐஏவின் ஏமாற்றும் உத்தி" - இரானுக்குள் அமெரிக்க விமானப்படை வீரர் மீட்பு எப்படி நடந்தது? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கேப்ரியேலா போமராய், கிரேஸ் எலிசா குட்வின், கோஞ்சே ஹபிபியாசாத், கிறிஸ் பார்ட்ரிட்ஜ், பிபிசி நியூஸ், ஆயுத ஆய்வாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் வெள்ளிக்கிழமை அன்று தெற்கு இரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தின் காணாமல் போன வீரரை அமெரிக்கா மீட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை சமூக வலைதளத்தில் இந்த மீட்பு நடவடிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவம் தனது வரலாற்றிலேயே "மிகவும் துணிச்சலான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றைச் செய்து முடித்துள்ளது" என்று கூறினார். அந்த அதிகாரி "இப்போது பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறார்!" என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த விமானத்தில் இரண்டு வீரர்கள் இருந்தனர், இருவரும் விமானத்திலிருந்து வெளியேறியிருந்தனர். அவர்களில் ஒருவர் ஏற்கனவே அமெரிக்கப் படைகளால் மீட்கப்பட்டிருந்தார். தங்களது வான் பாதுகாப்பு அமைப்பால் அந்தப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மீட்பு நடவடிக்கை மற்றும் அது எப்படி நடந்தது என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் இங்கே: அந்த அதிகாரி எப்படி மீட்கப்பட்டார்? தெற்கு இரானில் விமானம் வீழ்த்தப்பட்ட பிறகு, காணாமல் போன வீரரைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே ஒரு போட்டியே நடந்தது. அமெரிக்க மீட்பு நடவடிக்கையின் துல்லியமான விவரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த நடவடிக்கையை நன்கு அறிந்த ஒருவர், இது தெற்கு இரானில் நடந்த ஒரு "மிகப்பெரிய" போர் காலத் தேடல் மற்றும் மீட்புப் பணி(combat search and rescue mission) என்று விவரித்தார். மீட்புப் பணியின் போது அமெரிக்க மற்றும் இரான் படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும், விமானத்திலிருந்து குதித்தபோது அந்த விமானிக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பிபிசி புரிந்துகொள்கிறது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் வீரர்களை மீட்பது என்பது - 'காம்பாட் சர்ச் அண்ட் ரெஸ்க்யூ' (சிஎஸ்ஏஆர்) என அழைக்கப்படும் - அமெரிக்க ராணுவம் மற்றும் அதன் கூட்டாளிகள் தயாராகும் மிகவும் சிக்கலான மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். சிஎஸ்ஏஆர் பணிகளுக்குப் பின்னால் உள்ள விமானப்படைப் பிரிவுகள், ராணுவத்தின் மிகவும் பயிற்சி பெற்ற மற்றும் சிறப்பு வாய்ந்த உறுப்பினர்களைக் கொண்டவை. இந்தத் தேடுதல் பணிகள் பெரும்பாலும் ஹெலிகாப்டர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன, அவை எதிரி நிலப்பரப்பிற்கு மேல் தாழ்வாகப் பறக்கும். அவற்றுடன் தாக்குதல் நடத்தும் மற்றும் அப்பகுதியைக் கண்காணிக்கும் பிற ராணுவ விமானங்களும் உடன் செல்லும். டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில், அந்த விமானி - ஒரு கர்னல் - "இரான் மலைப்பகுதிகளில் எதிரிகளால் வேட்டையாடப்படும் நிலையில், எதிரி எல்லைக்குள் இருந்தார், அவர்கள் ஒவ்வொரு மணிநேரமும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்" என்று கூறினார். பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் அதிகாரிகள் கூறுகையில், அந்த விமானப் படை வீரர் 24 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு கைத்துப்பாக்கியுடன் மலைப்பகுதிகளில் மறைந்து கொண்டு, தனியாகவே நேரத்தைக் கழித்ததாகத் தெரிவித்தனர். அந்த விமானியின் இருப்பிடம், மீட்புத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த மூத்த அமெரிக்க அதிகாரிகளால் "24 மணி நேரமும்" கண்காணிக்கப்பட்டதாக அதிபர் மேலும் கூறினார். அமெரிக்க ராணுவம் இரானுக்குள் டஜன் கணக்கான விமானங்களை அனுப்பியதாகவும், அமெரிக்கர்கள் எவரும் கொல்லப்படாமலோ அல்லது காயமடையாமலோ இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் டொனால்ட் டிரம்ப் கூறினார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... சிஐஏவின் பங்கு என்ன? மலை இடுக்குகளில் மறைந்திருந்த அந்த விமானப் படை வீரரைக் கண்காணித்து, அவரது சரியான இருப்பிடத்தைப் பென்டகனுக்குத் தெரிவித்ததன் மூலம் இந்த மீட்பு நடவடிக்கையில் சிஐஏ மிக முக்கியப் பங்காற்றியதாக மூத்த அதிகாரி ஒருவர் சிபிஎஸ் செய்தியிடம் தெரிவித்தார். அதே சமயம், அந்த முகமை இரான் நாட்டுக்குள் ஒரு ஏமாற்றும் உத்தியையும் (Deception campaign) கையாண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு முயற்சி நடந்து கொண்டிருந்தபோதே, அந்த வீரர் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு இரான் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார் என்ற செய்தியை அந்த முகமை பரப்பியது. காணாமல் போன விமானியைத் தேடிக்கொண்டிருந்தபோது இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் வீரர்கள் அமெரிக்க ட்ரோன் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக இரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன. அமெரிக்க ட்ரோன் இரானின் தெற்கு இஸ்பஹான் மாகாணத்தில் விழுந்து நொறுங்கியதாக ஐஆர்ஜிசியின் மக்கள் தொடர்பு அலுவலகம் கூறியதாக பகுதி அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, காணாமல் போன அமெரிக்க வீரரை உயிரோடு கண்டுபிடிக்க விரும்புவதாக இரான் கூறியிருந்ததுடன், அவரை கண்டுபிடிக்க உதவும் குடிமக்களுக்கு வெகுமதி அளிப்பதாகவும் அறிவித்திருந்தது. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் வீரர்கள் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்ள உயர் பயிற்சி பெற்றவர்கள். "அவர்களின் முதல் முன்னுரிமை உயிரோடு இருப்பதும், பிடிபடுவதைத் தவிர்ப்பதும்தான்" என்று பாதுகாப்பு முன்னுரிமைகள் என்ற சிந்தனை அமைப்பின் ராணுவ ஆய்வு இயக்குநர் ஜெனிஃபர் கவானாக் பிபிசியிடம் தெரிவித்தார். "அவர்கள் உடல் ரீதியாகத் தகுதியுடன் இருந்தால் - நகர முடியாத அளவுக்குக் காயம் ஏற்படவில்லை என்றால் - விமானம் விழுந்த இடத்திலிருந்து எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு தூரம் விலகிச் செல்லவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மறைந்து கொள்ளவும் பயிற்சி பெற்றுள்ளனர்," என்று அவர் கூறினார். உணவு அல்லது தண்ணீர் இல்லாமல் எவ்வளவு காலம் இருக்க முடியும் அல்லது உள்ளூர் நிலப்பரப்பில் இருந்து ஆதாரங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது போன்ற உயிர்வாழும் நுட்பங்களிலும் அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என்று கவானாக் கூறினார். விமானம் எங்கே, எப்போது சுட்டு வீழ்த்தப்பட்டது? தெற்குப் பகுதியில் அமெரிக்க விமானத்தை தங்கள் நாட்டுப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக இரான் அரசு ஊடகங்கள் முதலில் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. எஃப்-15 வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் துல்லியமான இடம் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இரானின் அரசு ஊடகங்களில் கோகிலுயே மற்றும் போயர்-அகமது, மற்றும் குசெஸ்தான் ஆகிய இரண்டு மாகாணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இரண்டு வீரர்கள் இருந்தனர். விமானத்தின் ஒரு வீரர் முன்னதாகவே மீட்கப்பட்டார். அந்த நடவடிக்கையில் வளைகுடாப் பகுதியில் தாக்கப்பட்ட ஏ-10 வார்தாக் விமானமும் அடங்கும், அதன் விமானி விமானத்திலிருந்து குதித்து தப்பிய பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். எஃப்-15இ விமானத்திலிருந்து மீட்கப்பட்ட வீரரை ஏற்றிச் சென்ற ஒரு ஹெலிகாப்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், அதிலிருந்த வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது - ஆனால் அது பாதுகாப்பாகத் தரையிறங்கியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன. அமெரிக்க மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை, மலைப்பகுதிகளில் வசிக்கும் நாடோடிப் பழங்குடியினர் சுட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) தெரிவித்துள்ளது. குறைந்தது இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களை நோக்கி மூன்று ஆயுதம் ஏந்திய நபர்கள் சுடுவதைக் காட்டும் வெள்ளிக்கிழமை வெளியான வீடியோவை பிபிசி வெரிஃபை (BBC Verify) சரிபார்த்தது. இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியது புதிய இரானிய வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் என்று இரானின் கூட்டு ராணுவ தலைமை கூறியதாக இரானின் அதிகாரப்பூர்வ ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கோகிலுயே மற்றும் போயர்-அகமது பகுதி ஒரு மலைப்பாங்கான தென்மேற்கு மாகாணமாகும், இங்கு நாடோடிகள் உட்பட 7,00,000-க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள நாடோடிகள் தங்கள் கால்நடைகளையும் முகாம்களையும் வனவிலங்குகள் மற்றும் திருட்டுகளிலிருந்து பாதுகாக்க துப்பாக்கிகளை வைத்திருப்பதாக அறியப்படுகிறது. குசெஸ்தான் மாகாணம் எண்ணெய் மற்றும் பல தொழில்களின் மையமாக உள்ளது. இங்கு அரேபியர்கள், பெர்சியர்கள், லோர்கள் மற்றும் பிற இனக்குழுக்கள் உட்பட 4.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப்படம் அந்த விமானத்தின் நோக்கம் பற்றி நமக்கு என்ன தெரியும்? எஃப்-15இ (F-15E) விமானம் தரை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் ஆகிய இரண்டிற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரானில், அவை பெரும்பாலும் இரானிய ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்தும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கலாம். வானிலிருந்து தரையை தாக்குதல் பணியில், இந்த விமானம் லேசர் மற்றும் ஜிபிஎஸ் (GPS) மூலம் வழிநடத்தப்படும் துல்லியமான ஆயுதங்களையும் பிற குண்டுகளையும் வீசும் திறன் கொண்டது. இந்த விமானத்தில் இரண்டு பேர் இருப்பார்கள்: விமானி மற்றும் பின் இருக்கையில் இருக்கும் ஒரு ஆயுத அமைப்பு அதிகாரி. "விஸோ" (Wizzo) என்று அழைக்கப்படும் ஆயுத அதிகாரி, இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், ஆயுதங்கள் சரியான தாக்குதலுக்குத் தயார் செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் பொறுப்பானவர். இந்த இருவர் அமைப்பு, வேலைப்பளுவைப் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது, குறிப்பாக விமானி அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்க முயலும் ஒரு நெருக்கடியான சூழலில் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த அமெரிக்க விமானத்தை எது வீழ்த்தியது என்று நமக்குத் திட்டவட்டமாகத் தெரியவில்லை, ஆனால் அது இரானியர்களால் வீழ்த்தப்பட்டிருந்தால், அதற்கு தரையிலிருந்து இருந்து வானில் தாக்குதல் நடத்தும் ஏவுகணை தான் பெரும்பாலும் காரணமாக இருந்திருக்கும். Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy91894rxvqo
-
உறுதிப்படுத்தாத செய்தி: டொனல்ட் டிரம்ப் வைத்தியசாலையில்?
டிரம்ப் ஐயாவின் இந்த பதிவு அவருக்கு பைத்தியம் முற்றியதால் வந்ததா அல்லது அவரது மலவாசல் அடைத்ததால் வந்ததா? அய்யா கக்கா போகும்நேரங்களில்தான் குறுஞ்செய்திகளை பதிகின்றார் என கூறப்படுகின்றதே. இலங்கையில் வானகங்களை வாழ்வாதாரமாக ஓட்டுபவர்கள் ஏற்கனவே புலம்ப தொடங்கிவிட்டார்கள். மத்திய கிழக்கு போரின் பாதிப்பில் இலங்கை ஏற்கனவே ஆட்டம் காணத்தொடங்கிவிட்டது.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
கொள்கை கிலோ என்ன விலை என கேட்கும் கதாநாயக-வணங்கிகளுக்கு… கொள்கை சார் நிலைப்பாடு மதில் மேல் பூனையாக தெரிவதில்லை வியப்பேதும் இல்லை. ஏற்கிறேன்.
-
உறுதிப்படுத்தாத செய்தி: டொனல்ட் டிரம்ப் வைத்தியசாலையில்?
ஏற்கிறேன். ஆனால் இன்னும் 3.5 வருடம் இருக்கே…
-
உறுதிப்படுத்தாத செய்தி: டொனல்ட் டிரம்ப் வைத்தியசாலையில்?
தம்பருக்கு ஒன்றும் நடக்கக்கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்.. ஏனென்றால் தம்பர் இருந்தாத்தான் republicans கீழ அதழபாழாத்துக்க போய் இன்னம் இரண்டு மூன்று terms க்கு ஆட்சிக்கு வராது. அது மட்டுமல்லாமல் இந்த மாகா (MAGA) அமைப்பு உருத்தெரியாமல் போகும்.. தம்பர் ஆட்சியால் இருக்கும் போது இறந்தால் அனுதாப அலையால் மாகாவும், republicans உம் வெற்றி பெறுவார்கள். இந்த டிரம்பால் ஆஸ்திரேலியாவில் ஜீனா ரேயின்கார்ட்டின் நிதி உதவியானால் போலின் கன்சன் மாதிரியான இனவாதிகள் வேற்றபெறுகிறார்கள்
-
இரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி அமெரிக்க ஊடகங்கள் கூறுவது என்ன?
விமானியை மீட்ட கொமாண்டே படை
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
ரசோதரன், ஒரு தெளிவை முதலில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் விஜய் ரசிகன் இல்லை. சமீப காலங்களில் வெளியான ரஜினி, விஜய், அஜித் படங்களையே நான் பார்த்ததில்லை. அல்லது பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் இருந்ததே இல்லை. பிக்பொஸ்ஸையோ, தமிழ் டிவிகளோ கூட என் வாழ்க்கையில் இல்லை. அதனால் நான் சொல்வது நீங்கள் குறிப்பிடுவதுபோல் எனது பார்வை, ‘ரசிகனின் பார்வை’ இல்லை, ஒரு ‘பார்வையாளனின் பார்வை’. சிறிது பின்னோக்கிப் போவோமா? 1970களின் இறுதியில், குறிப்பாக 1977 காலகட்டத்தில், எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, தகவல் ஊடகங்கள் இன்றுபோல் இல்லை. திருச்சி(FM) வானொலி, குமுதம், ஆனந்த விகடன் போன்ற வார இதழ்கள்தான் அரசியல் செய்திகளை ஈழத் தமிழரிடம் கொண்டு வந்து சேர்ந்தன. அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் எதிர்கொண்ட சவால்கள் சாதாரணமானவை அல்ல. “நடிகன் ஆளுவானா?”, “படிப்பு என்ன?”, “கட்சிக் கொள்கை என்ன?” போன்ற கேள்விகள் மட்டுமல்ல, அரசியல் அழுத்தங்கள், ஊடக விமர்சனங்கள், கூடவே அவர் தொடங்கிய கட்சி நீடிக்காது, கட்சியை திமுகவுடன் இணைத்துவிட்டு மீண்டும் நடிக்கப் போய்விடுவார் என்ற கணிப்புகளும் இருந்தன. ஆனால் திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றி அந்த கணிப்புகளை மாற்றிவிட்டது. அதுவே அவரை ஒரு அரசியல் சக்தியாகவும் நிலைநிறுத்தியது. இப்போது இன்றைய சூழ்நிலைக்கு வருவோம், சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நடிகர் மீண்டும் அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார். அது விஜய். முக்கியமாக, “இனி முழு நேர அரசியல்” என்ற அறிவிப்பு அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. இதை கோசானும் தனது கருத்தில் குறிப்பிட்டிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வருவதாகச் சொன்ன உடனேயே, பழம் பெரும் கட்சிகள் அவரை கவனிக்கத் தொடங்கிவிட்டன. அதிலும் குறிப்பாக திமுக,அவரை ஓரம் கட்ட என்னென்ன தகிடு தத்தங்கள் செய்ய முடியமோ அத்தனையையம் செய்யத் தொடங்கிவிட்டன. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், விஜய்க்கும் அரசியல் மற்றும் மறைமுக அழுத்தங்கள் இருப்பதைப் பார்க்கின்றோம். அது அரசியலின் ஒரு பகுதிதான். இதில்,அவர் அவற்றைக் எல்லாம் கடந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்வாரா? என்பது அடுத்த கேள்வி. நீங்கள் குறிப்பிடுவது போல், “மூன்றாவது கட்சியும் அதே மாதிரி ஆகிவிடுமா?” என்ற சந்தேகம் நியாயமானதே. ஆனால் மாற்றம் இல்லாத நிலையும் ஒரு ஆபத்துதான். ஒரே குடும்பம் அல்லது ஒரே கட்சி நீண்ட காலம் ஆட்சி செய்வதும், கொள்ளை அடிப்பதும்,அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுவதும் நல்லது என்கிறீர்களா? அதனால், என்னைப் பொருத்தவரையில் ஒரு புதிய அரசியல் அலை எழும்போது அதை முழுக்க நிராகரிக்கவும் முடியாது, கண்மூடித்தனமாக ஏற்கவும் முடியாது. அனால் சோதித்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. விஜய் பற்றி பேசும்போது, அவர் இப்போது ‘சாத்தியம்’ மட்டுமே. நடைமுறைப்படுத்துவது இன்னும் மக்கள் கையில் தான் இருக்கிறது.விஜய், நல்ல ஆட்சி கொடுத்தால் தொடர வாய்ப்புக் கிடைக்கும். இல்லையென்றால் மக்கள் மேலும் ஒரு மாற்றத்தைச் செய்யத் தயங்க மாட்டார்கள். அவ்வளவுதான் விசயமே. தனிப்பட்ட வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து பேசும்போது, அது அரசியல் மதிப்பீட்டிலிருந்து தனியாக இருக்க வேண்டும். “வீட்டுக்கு வீடு வாசல்படி” என்ற பழமொழி இங்கே பொருந்தும். முடிவாகச் சொல்வதானால், “நல்லவர்” என்ற ஒருவரைத் தேடுவது என்பது பிள்ளையார் கலியாணம் மாதிரி. அரசியல் மாற்றமாக விஜய் இருப்பாரா இல்லையா என்பது இன்னும் ஒரு முக்கியமான கேள்வி. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதி. இந்தத் தேர்தல் போட்டியின் முடிவு கண்டிப்பாக பலரது புருவங்களை உயர்த்தும். அறிஞர் அண்ணா சொன்னது போல், “மக்களின் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு”
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பொட்டுக்குள்ளால் ஓடிப்போய் பறித்துக் கொண்டு ஓடி வரவேண்டும் ......... அவ்வளவு அழகு ......! 😋
-
கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்
-
கருத்துப்படம் 05.04.2026
-
கருத்துப்படம் 02.04.2026
-
கருத்துப்படம் 31.03.2026
-
கருத்துப்படம் 30.03.2026
-
கருத்துப்படம் 28.03.2026
-
கருத்துப்படம் 22.03.2026
-
கருத்துப்படம் 19.03.2026
-
கருத்துப்படம் 13.03.2026
-
கருத்துப்படம் 12.03.2026
-
கருத்துப்படம் 11.03.2026
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எப்போது நாடகத்தை ஆரம்பிக்கலாம் ......... ரவிசந்திரன் & ஜெயலலிதா.......! 😍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே பெண் : ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய் சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே ஆண் : பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும் நீ என் கவிதை நீ பாடும் ராகம் நீ என் நாதம் நீ என் உயிரும் நீ பெண் : காலம் யாவும் நான் உன் சொந்தம் காக்கும் தெய்வம் நீ பாலிலாடும் மேனி எங்கும் கொஞ்சும் செல்வம் நீ ஆண் : இடையோடு கனி ஆட தடை போட்டால் நியாயமா உன்னாலே பசி தூக்கம் இல்லை எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை இனி மேலும் ஏன் இந்த எல்லை ஆண் : காலைப் பனியும் நீ கண்மணியும் நீ என் கனவும் நீ மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ என் நினைவும் நீ பெண் : ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு உரிமை தர வேண்டும் நூலில் ஆடும் இடையும் உண்டு நாளும் வர வேண்டும் ஆண் : பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே வருகின்ற தை மாதம் சொந்தம் அணிகின்ற மணிமாலை பந்தம் இரவோடும் பகலோடும் இன்பம் .......! .... ஆசை கூடாது ......