All Activity
- Past hour
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
இப்போ இந்திய இலங்கை இந்திய முஸ்லிம்களின் பிரார்த்தனை என்னவென்றால் அவர்களின் இந்துவாத இந்தியா ரஷ்யா சீனா இணைந்து அமெரிக்கா இஸ்ரேலுடன் சண்டை செய்து ஈரான் முல்லா அரசை காப்பாற்ற வேண்டும். அல்லா கைவிடுவிட்டார்
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சோழ அரச படத்தில் இளவரசியாக நடித்தவராம் அந்த தகுதி போதுமே
-
2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
சுருக்கமா கிழக்கில் தமிழர் நிலங்களை அரச உதவியுடன் முன்புபோல ஆக்கிரமிக்க முடியவில்லை, தமிழ் இளைஞர் யுவதிகளை காதல் எனும் பெயரில் லவ் ஜிகாத் பண்ண முடியவில்லை, தமிழர் வியாபார நடவடிக்கைகளை கறையான் அரித்ததுபோல் அரிக்க முடியவில்லை, விவசாய வயல் நிலங்களை அபகரிக்க முடியவில்லை, கிழக்கு எங்களுக்குத்தான் என்று மிரட்டல் விட முடியவில்ல....இப்படி சமூக நல்லிணக்கம் பண்ண முடியாமல் உங்க மனம் வாடுவதை புரிந்து கொள்ள முடியுது. மனசுக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு ஹிஸ்புல்லாஹ்.
- Today
-
'4 கப்பல்கள் மீது தாக்குதல்': இந்திய மாலுமிகளின் நிலை என்ன? வளைகுடா நிலவரம்
'4 கப்பல்கள் மீது தாக்குதல்': இந்திய மாலுமிகளின் நிலை என்ன? வளைகுடா நிலவரம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கோப்புப் படம் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 3 மார்ச் 2026 புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் 'நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் தொடர்ந்து வெடிப்புச் சத்தம் கேட்டது. இதனால் சற்று பயம் ஏற்பட்டது. ஆனால், 'தைரியமாக இருங்கள்' என அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து செல்போனில் தகவல் அனுப்பிவந்தனர்' என்கிறார் துபையில் வசிக்கும் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தடேயுஸ் அந்திரியாஸ். வணிக கப்பல் கேப்டனாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ள இவர், தற்போது துபையில் ஒருவருடன் இணைந்து சுற்றுலா படகு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மார்ச் ஒன்றாம் தேதி இரானின் ஏவுகணை தாக்குதலை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு அமைப்புகள் எதிர்கொண்டது குறித்து பிபிசி தமிழிடம் அவர் இவ்வாறு விவரித்தார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகளை தாக்குவதாக இரான் கூறியது. அந்தவகையில், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இரானின் தாக்குதலுக்கு இலக்காயின. அத்துடன், உலகின் முக்கிய கடல் வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்றும் இரான் எச்சரித்துள்ளது. பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,பிப்ரவரி 28 அன்று இரானிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு அபுதாபியில் உள்ள ஒரு பகுதியில் இருந்து புகை எழுகிறது. '4 கப்பல்கள் மீது தாக்குதல்' திங்கள்கிழமை (மார்ச் 2) மாலை 6 மணி வரை இரான் அருகே கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், அகில இந்திய கப்பல் மாலுமிகள் சங்க நிறுவனர் விமல்சன். ஆனால், அந்தக் கப்பல்களில் இருந்த மாலுமிகள் யாருக்கும் இந்த தாக்குதல்களால் பாதிப்பு ஏற்படவில்லை என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "இந்தத் தாக்குதலில் நான்கு கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கப்பலிலும் சுமார் 25 மாலுமிகளுக்கும் மிகாமல் உள்ளனர். அவர்களில் கணிசமானோர் இந்தியர்கள் ஆவர். நெட்வொர்க் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களை தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது" என்கிறார் விமல்சன். "இந்திய மாலுமிகளை மீட்பதற்கு அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். 'முழுமையான தரவுகள் வரவில்லை' கப்பலில் தவிக்கும் மாலுமிகளை மீட்பதற்கான முயற்சிகளை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருவதாகக் கூறுகிறார், பி.ஏ.கான். மேரிடைம் யூனியன் ஆஃப் இந்தியா (maritime union of India) என்ற அமைப்பின் சென்னை பிரிவின் தகவல் தொடர்பு அலுவலராக (liason officer) இவர் இருக்கிறார். "வளைகுடா நாடுகளுக்குச் சென்றுள்ள கப்பல்களில் தவித்துக் கொண்டிருக்கும் நபர்கள் பற்றிய விவரம் மட்டுமே வருகிறது. அதில், இந்தியாவில் குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தொடர்பான தகவல் எதுவும் எங்களுக்கு வரவில்லை" என்கிறார் அவர். "முழுமையான தரவுகள் வந்தால் மட்டுமே பாதிப்பு குறித்த விவரங்கள் தெரியவரும்" எனக் கூறும் பி.ஏ.கான், "யாரெல்லாம் இந்தியா கிளம்பி வரத் தயாராக உள்ளனர் என்ற விவரத்தை தூதரகத்துக்கு தெரிவிக்குமாறு வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது" எனக் கூறினார். அவர்களை அங்கு சென்று அழைத்து வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், "ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு கால்வாய்கள் உள்ளன. எந்த இடத்தில் கால்வாயை மூடியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை. இதனைத் தாண்டிச் செல்லும் போது குவைத், தோஹா, கத்தார் ஆகியவை வருகின்றன" என்கிறார். தற்போதைய சூழலில் கப்பலில் தங்கியிருப்பதே பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் பி.ஏ.கான், "பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகள் எதுவும் தங்களுக்கு வரவில்லை" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரான் பல நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்தது. இந்த புகைப்படம் இரானிய தாக்குதலால் சேதமடைந்த பஹ்ரைனில் உள்ள ஒரு கட்டடத்தைக் காட்டுகிறது. துபை, அபுதாபியில் என்ன நிலவரம்? இரான் நடத்திய தாக்குதலால் துபையில் பதற்றம் நிலவியதாகவும், வீட்டை விட்டு வெளியே வரவே பயப்பட வேண்டிய நிலை இருந்ததாகவும் கூறுகிறார், தடேயுஸ் அந்திரியாஸ். துபையில் டிஸ்கவரி கார்டன் பகுதியில் வசித்து வரும் இவர், துபை துறைமுகத்தில் சுற்றுலா படகுகளை இயக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். "இன்னமும் படகு போக்குவரத்து தொடங்கவில்லை. திங்கள்கிழமை (மார்ச் 2) கூட வெடிப்புச் சத்தம் கேட்டது. அதற்கு முன்பாக செல்போனில் சைரன் சத்தம் ஒலித்தது. 'தைரியமாக இருங்கள்.. எந்தப் பிரச்னையும் இல்லை' என அதிகாரிகள் கூறினர்" என்றார் அவர். இரானில் இருந்து வந்த ஏவுகணைத் தாக்குதல் இடைமறிக்கப்பட்டதால் தொடர்ந்து அதிக வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் அவர் கூறினார். "கடந்த ஒன்றாம் தேதி தாக்குதல் அதிகரித்தபோது யாரும் வெளியில் வரக் கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர். சுற்றுலா படகு போக்குவரத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதேநேரம், நேற்று (மார்ச் 3) முதல் இயல்புநிலை திரும்பியது போன்று தென்படுகிறது" என்கிறார் அவர். அபுதாபியில் வசிக்கும் ஷாஜன் அஜித், அங்கு மார்ச் 3 முதல் அலுவலகங்கள் இங்குவதாகக் கூறுகிறார். "தற்போது அமைதியான சூழலே நிலவுகிறது" என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார். கத்தாரில் என்ன நிலவரம்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கத்தார் தலைநகர் தோஹாவுக்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளம் அதேநேரம், கத்தாரில் மக்கள் நடமாட்டம் சாலைகளில் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார் அங்கு பணிபுரியும் தமிழக தொழிலாளி ஒருவர். நாகர்கோவிலை சேர்ந்த அவர் பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் சில தகவல்களை விவரித்தார். "வீட்டில் இருந்தே வேலை பார்க்குமாறு அதிகாரிகள் அறிவித்துவிட்டனர். உடல்ரீதியாக உழைப்பு தேவைப்படும் இடங்களுக்கு மட்டுமே தொழிலாளர்கள் செல்கின்றனர்" என்கிறார். கடந்த சனிக்கிழமையில் இருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் அனைத்தும் மூடியே கிடந்ததாகக் கூறும் அவர், "தற்போது நிலைமை ஓரளவு சீரடைந்துவிட்டது" எனக் கூறுகிறார். சூப்பர் மார்கெட்டுகளில் பொருட்கள் தாராளமாக கிடைத்தாலும் இறக்குமதி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள் குறைவான அளவே வந்துள்ளதாகத் தெரிவித்தார். "போர்ச் சூழலைக் காரணம் காட்டி எந்த நிலையிலும் காய்கறி மற்றும் பொருட்களின் விலையை அதிகரிக்கக் கூடாது என அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனை அவ்வப்போது அவர்கள் ஆய்வு நடத்தி சோதிக்கின்றனர்" எனவும் அவர் தெரிவித்தார். விமான நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதால் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறும் அவர், "இரான் ஏவுகணைகளை தாக்கி முறியடிக்கும்போது அதில் இருந்து வெளிவரும் சிதறல்கள் தாக்கியதால் சிலருக்கு காயம் ஏற்பட்டது" என்கிறார். பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லக் கூடாது எனவும் ஜன்னல் அருகில் அமரக் கூடாது எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடப்பது தொடர்பாக சைரன் சத்தத்துடன் செல்போன் ஒலிப்பதால் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் மக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கத்தாரில் அதிகாரிகள் தரப்பில் பெரிதாக கெடுபிடிகள் இல்லை என்றாலும் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ளும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அலுவலகம் தகவல் இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அலுவலகம் மார்ச் 2 ஆம் தேதி அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, ஹோர்முஸ் நீரிணை மற்றும் பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் நிலைமை கூர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல்கள் தடுக்கப்பட்டதாகவோ, உயிரிழப்பு ஏதும் நடந்ததாகவோ இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்திய மாலுமிகள் தொடர்புடைய நான்கு சம்பவங்கள் இதுவரை பதிவாகியுள்ளன. அதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காயமடைந்துள்ளார். அந்த கப்பல்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கொடி ஏற்றப்பட்டவை. கப்பலில் இதர பணியாளர்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளதாகவும் இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பாதிப்புக்கு ஆளான கடற்படையினர் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த விவகாரங்களை கவனிக்க 'உடனடி நடவடிக்கை குழு' ஒன்றை (Quick response team) அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றம் அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில் இந்திய மாலுமிகள் மற்றும் வணிகக் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக, கப்பல் போக்குவரத்துறை இயக்குநர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு '4 கப்பல்கள் மீது தாக்குதல்': இந்திய மாலுமிகளின் நிலை என்ன? வளைகுடா நிலவரம்
-
ஏராளன் started following ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு , '4 கப்பல்கள் மீது தாக்குதல்': இந்திய மாலுமிகளின் நிலை என்ன? வளைகுடா நிலவரம் , 2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் and 2 others
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
மதவெறி, வரட்டு கௌரவம், வெட்டி வீரம், முட்டாள்தனமான பழமைவாதம் போன்வற்றை கைவிட்டு அறிவு பூர்வமாக அரசியலை செய்வதே நீங்கள் கூறிய இனங்களின் வெற்றிக்கான முதற்படி. அதை செய்யாதவரை அழிவுகளும் புலம்பல்களும் தொடரும்.
-
2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் Published By: Digital Desk 3 03 Mar, 2026 | 04:29 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2019 ஆம் ஆண்டு ரத்துச் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகளை மீண்டும் செயற்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சின் கீழ் இயங்கி வரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 350 இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் பல தசாப்தங்களாக பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வமாக இயங்கி வந்தன. இந்நிறுவனங்கள், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு சமய ஒழுங்குகளை பாதுகாத்தல்,கலாசார விழுமியங்களை நிலைநிறுத்தல், இளைஞர் மற்றும் பெண்கள் முன்னேற்றம், கல்வி விளையாட்டு மற்றும் சமூக சேவைகள், சமூகப் பிரச்சினைகளுக்கான சமரச மற்றும் வழிகாட்டல் நடவடிக்கைகள் போன்ற பல துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வந்தன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும். சமூக நல்லிணக்கத்தினை பேணவும் இந்நிறுவனங்கள் முன்னனியில் செயல்பட்டன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஆனால், கடந்த 2019 ஆம் ஆண்டு,அப்போது இருந்த புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சினுடைய செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய. பதிவு செய்யப்பட்டிருந்த இந்நிறுவனங்களின் பதிவுகள் உடனடியாக இரத்து செய்யப்பட்டன. இவ்வாறு. எந்தவிதத் தனிப்பட்ட விசாரணை அறிக்கைகளும் வெளிப்படையாக அறிவிக்கப்படாமல், நாடு முழுவதும் செயல்பட்டு வந்த சுமார் 350 இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகள் மொத்தமாக இரத்து செய்யப்பட்டிருப்பது, குறித்த நிறுவனங்களை பல்வேறு நிர்வாக மற்றும் சட்ட சிக்கல்களுக்கு உள்ளாக்கியதுடன் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் கவலைகளையும் எழுப்பியுள்ளது. இந்த தீர்மானத்தின் காரணமாக, பல சமூக சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. கல்வி மற்றும் கலாசார திட்டங்கள் பாதிக்கப்பட்டன. இளைஞர் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் தடைப்பட்டன, சமூக நல்லிணக்க நடவடிக்கைகள் குறைந்துள்ளன. இவ்வாறான பல காரணங்களால் இந்த நாடும் நாட்டின் குடிமக்களும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை பெற்றுக் கொள்வதிலும் நிலையான அபிவிருத்திகளை அடைவதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் தொடர்பாக சந்தேகங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் இருந்தால், அவற்றை தனித்தனியாக விசாரித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால், எந்தவிதமான தனிப்பட்ட காரணங்களும் இல்லாமல், நாடு முழுவதும் உள்ள அனைத்து இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களின் பதிவுகளையும் ஒரே நேரத்தில் ரத்துச் செய்திருப்பதை ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாக கருதுவதுடன் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகவும் துரோகமுமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இந்த நிலைமையில், நாட்டின் ஒட்டுமொத்த நலனையும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு முன்பு சிறப்பாக இயங்கி வந்த இந்நிறுவனங்களின் பதிவுகளை உடனடியாக மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும். அவர்கள் தங்களது பணிகளை சட்டபூர்வமாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றும் வகையில் வழிகாட்ட தங்களது அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு ஆவண செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்றார். 2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர்: மீட்கப்பட்டோர் கராப்பிட்டியவிற்கு Mar 4, 2026 - 12:17 PM காலி கடற்பரப்பிலிருந்து 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' கப்பலில் 180 பேர் இருந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட அமைச்சர், அவர்களில் 30 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டு, தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். விபத்துக்குள்ளான ஈரானிய கப்பலில் 180 பேர்: மீட்கப்பட்டோர் கராப்பிட்டியவிற்கு
-
பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்
பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம் Published By: Digital Desk 3 03 Mar, 2026 | 04:12 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிப்பதற்கு 071 859 8888 என்ற வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 118 என்ற துரித இலக்கம் ஊடாக முறைப்பாடுகளை நேரடியாக அமைச்சுக்கு சமர்ப்பிக்க ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் தேசிய கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கையில் தற்போது 608 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. இன்றளவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சாதாரண சேவையில் 71,424 உத்தியோகத்தர்கள், 7,256 விசேட அதிரடிப்படையினர், ஆதரவு சேவையில் 1,032 உத்தியோகத்தர்கள், உப சேவை அடிப்படையில் 70 உத்தியோகத்தர்கள், என்ற அடிப்படையில் மொத்தமாக 79,782 பேர் சேவை புரிகிறார்கள். பொலிஸ் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.அரசாங்க சேவை ஆணைக்குழுவின் ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறை விதிகள் மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வழிகாட்டல்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடைமுறைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பதவி உயர்வுகள் செய்யப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட 22 துப்பாக்கிதாரிகள், 14 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்,கூர்மையான ஆயுதத் தாக்குதல்கள் அல்லது ஏனைய தாக்குதல்களில் தொடர்புடைய 50 பேர், குற்றச்செயல்களுக்கு உடந்தையாக இருந்த 142 பேர்,போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 57 பேர், துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த 22 பேர், ஏனைய செயற்பாடுகளில் ஈடுபட்ட 08 பேர் என்ற அடிப்படையில் 315 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் திணைக்களத்தில் நிகழும் முறைகேடுகள் இனங்காணப்பட்டுள்ளன. பொலிஸ் அதிகாரிகள் தவறான நடத்தைகளில் ஈடுபட வழிவகுக்கும் சூழ்நிலைகள் மற்றும் சூழ்நிலைகளை அடையாளம் காண்பதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டுள்ளத. அதன்பிரகாரம் அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும்,அத்தகைய செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை உகந்த மட்டத்துக்கு அதிகரிப்பதற்கும்,நலன்புரி வசதிகளை மேம்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குற்றம் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதிகாரிகளை அடையாளம் கண்டு பொறுப்புடனும் , நேர்மையுடனும் விசாரணைகளை மேற்கொள்வாற்கும் அவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பும் வழங்கப்படும். பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடளிப்பதற்கு 0718598888 என்ற வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் 118 என்ற துரித இலக்கம் ஊடாக முறைப்பாடுகளை நேரடியாக அமைச்சுக்கு சமர்ப்பிக்க ஏற்ற வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் தேசிய கரும பீடம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றார். பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பில் முறைப்பாடு அளிக்க வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் Mar 4, 2026 - 09:20 AM மத்திய கிழக்கிலுள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் மீது ஈரானிய ஏவுகணை ஒன்று தாக்கியுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கட்டார் தெரிவித்துள்ளது. ஈரானில் இருந்து தமது நாட்டுக்கு ஏவப்பட்ட மற்றுமொரு ஏவுகணையை தாம் வெற்றிகரமாக வழிமறித்துள்ளதாக கட்டார் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இதேவேளை, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 10 பேரை தாம் கைது செய்துள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது. கட்டாரில் IRGC சார்பாக செயற்பட்டதாகக் கருதப்படும் இரண்டு குழுக்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அந்நாட்டு அரச செய்தி நிறுவனமான QNA குறிப்பிட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஏழு பேர் கட்டாரின் இராணுவ நிலைகளை உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஏனைய மூவரும் ட்ரோன்களைப் பயன்படுத்தி "சதிவேலைகளை" முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "முக்கியமான இடங்களின் வரைபடங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் என்பனவும் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன" என QNA செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க விமானத் தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
-
லெபனானில் கூடுதல் பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேலிய படைக்கு அனுமதி – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்
லெபனானில் கூடுதல் பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேலிய படைக்கு அனுமதி – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் Published By: Digital Desk 3 03 Mar, 2026 | 05:03 PM இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வெளியிட்ட மொழிபெயர்க்கப்பட்ட அறிக்கையில், தாமும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இணைந்து, இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களைத் தடுக்க லெபனானில் உள்ள கூடுதல் மூலோபாயப் பகுதிகளைக் கைப்பற்றி முன்னேறுவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படைக்கு (IDF)க்கு அதிகாரம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், “லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாஹ் இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தொடர்ந்து வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதற்காக அந்த அமைப்பு பெரும் விலையைக் கொடுத்து வருகிறது இனியும் கொடுக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வடக்கு இஸ்ரேலில் அமைந்துள்ள கலிலேயா பகுதி சமூகங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக முன்பு அளிக்கப்பட்ட வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. பிராந்திய நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகம் கவனம் செலுத்தி வருவதுடன், பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் அவசியம் எனவும் வலியுறுத்தப்படுகிறது. லெபனானில் கூடுதல் பகுதிகளை கைப்பற்ற இஸ்ரேலிய படைக்கு அனுமதி – இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்
-
தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
இரான்: பள்ளி தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கு இறுதிச்சடங்கு - தாய், தந்தையர் கண்ணீர் பட மூலாதாரம்,ISNA/WANA via Reuters கட்டுரை தகவல் கேப்ரியலா போமராய் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் தெற்கு இரானில் உள்ள ஒரு பள்ளியின் மீது அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இரானிய அதிகாரிகள் கூறும் நிகழ்வில் கொல்லப்பட்ட மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இரானின் ராணுவத் தளங்கள் மற்றும் தலைமையை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் பரவலான தாக்குதல்களை நடத்தியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ள உயிரிழப்பு எண்ணிக்கையை பிபிசி நியூஸால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை. அந்தப் பள்ளி இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளத்திற்கு அருகில் அமைந்திருந்தது. இந்தச் சம்பவம் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. அதே சமயம், அந்தப் பகுதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் "தெரியவில்லை" என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த இறுதிச் சடங்கில், நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்டனர். தங்கள் மகள்களை இழந்த தாய்மார்கள் மற்றும் தந்தையரின் துயரத்தை பின்னணியில் ஒருவர் விவரித்துக் கொண்டிருக்க, இஸ்லாமியக் குடியரசின் தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் கூட்டத்திற்கு நடுவே சுமந்து செல்லப்பட்டன. பட மூலாதாரம்,Shutterstock ஐஆர்ஜிசி தளத்திற்கு அருகே பள்ளி இருந்தது சனிக்கிழமை காலை பள்ளியை மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு ஐஆர்ஜிசி தளத்திலிருந்து சுமார் 600 மீட்டர் (1970 அடி) தொலைவில் அமைந்திருந்தது. இரானில் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான ஆறு நாட்கள் வேலை நாட்களாகும், வெள்ளிக்கிழமை மட்டுமே அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாகும். அப்படி என்றால், தாக்குதல் நடந்தபோது பள்ளியில் மாணவர்கள் இருந்திருக்கக் கூடும். இந்தச் சம்பவத்தை "காட்டுமிராண்டித்தனமான செயல்" என்றும், "ஆக்கிரமிப்பாளர்கள் செய்த எண்ணற்ற குற்றங்களின் பதிவில் மற்றொரு கருப்புப் பக்கம்" என்றும் இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் அழைத்தார். நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, 160 பேருக்காகக் கல்லறைகள் தோண்டப்படும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, " டிரம்ப் வாக்குறுதி அளித்த 'மீட்பு' என்பது உண்மையில் இப்படித்தான் இருக்கிறது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார். வெடிப்புச் சம்பவத்திற்குப் பிந்தைய காட்சிகளை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வீடியோக்களில், மக்கள் பீதியில் அலறிக் கொண்டிருக்க, ஒரு கட்டிடத்திலிருந்து புகை எழுவதும் அதன் அருகே மக்கள் கூடி நிற்பதும் தெரிகிறது. பட மூலாதாரம்,Mehr News/WANA via Reuters படக்குறிப்பு,பள்ளியின் இடிபாடுகளுக்குள் உயிர் பிழைத்தவர்களை உள்ளூர் மக்களும் மீட்புப் பணியாளர்களும் தேடிய காட்சி. பள்ளியை அமெரிக்க ஏவுகணை தாக்கியதா? ரூபியோ பதில் சர்வதேச செய்தி நிறுவனங்கள் இரானுக்குள் சென்று தகவல்களைச் சேகரிப்பதை, அந்நாடு விசா வழங்க மறுப்பது கடுமையாகக் மட்டுப்படுத்துகிறது. திங்களன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், அந்தப் பள்ளி கட்டடம் அமெரிக்க ஏவுகணையால் தாக்கப்பட்டதா என்று பிபிசி கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த ரூபியோ, "அமெரிக்கா வேண்டுமென்றே ஒரு பள்ளியை இலக்கு வைக்காது. பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, சொல்லப் போனால் அதற்கான தூண்டுதலும் இல்லை," என்று கூறினார். "எதனால் இது நடந்தது என்பது குறித்த விவரங்கள் என்னிடம் இல்லை, ஆனால் அமெரிக்கா ஒரு பள்ளியை இலக்கு வைக்காது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது," என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்க ஊடகங்களில் வெளியான அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மைய செய்தித் தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், "இந்த அறிக்கைகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்" என்றார். "பொதுமக்களை பாதுகாப்பது மிக முக்கியமானது, எதிர்பாராத பாதிப்புகளை குறைக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்"எனவும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre00zdz9y0o
-
வசந்தம் வருகிறது
சூழல் மாசு பற்றி உங்களின் அனுபவங்கள் ........எழுதுங்கள் . .....! வசந்தம் வரமுதலே இந்த ஒவ்வாமைக்கு ஒரு ஊசி இங்கு போடுவார்கள் இலவசமாக ........அதனால் அது அவர்களுக்கு கொஞ்சம் சுகமாய் இருக்கும் . ...... அங்கு அப்படி இல்லையா .........!
-
கருத்து படங்கள்
- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு Mar 4, 2026 - 11:40 AM காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடற்படை மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் இருந்த சுமார் 35 பேர், தற்போது இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், கப்பல் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை விமானப்படை கண்காணிப்பு விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இதனிடையே, இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குறித்த கப்பல் இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பில் விபத்துக்குள்ளாகவில்லை என்று தெரிவித்தார். குறித்த கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு- மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
மத்திய கிழக்கிற்கான சேவையை மீண்டும் தொடங்கும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! துபாய் வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL231 விமானங்களும், துபாயிலிருந்து கொழும்புக்கு UL232 விமானங்களும் இன்று இயக்கப்படும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் அமலில் இருக்கும். சேவைகள் படிப்படியாக மீட்டெடுக்கப்படுவதால், பயணிகளின் பாதுகாப்பு அதன் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று விமான நிறுவனம் வலியுறுத்தியது. https://athavannews.com/2026/1467109- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
இருக்க முடியாது இலங்கையில் இருப்பது salafi (சுனியில் ஓர் பகுதி) இஸ்லாம். அனால் 100% என்று இல்லை முஸ்லிம்கள் இருந்து வந்த பகுதியில் (இப்போதைய தமிழ்நாடு, கேரளம், ஆந்திராவின் தென் பகுதி) அப்போதே salafi வந்து விட்டது . இது ஒரு காரணம், தென்னிந்த்திய, இலங்கை, ஏன் இந்தோனேசிய மற்றும் அந்த பகுதியில் உள்ள முஸ்லிகள், modernity ஐ இலகுவாக உள்வாங்குவது. ஏனெனில் ஸலபி இஸ்லாம், சுனி இஸ்லாமை (மறு)சீரமைப்பது. இரான் ஷியா தலைமையை வெறுத்து ஒதுக்கி இருக்கும். 80 களில் தானே சவூதி, மத்தியகிழக்குக்கு (வேலைக்கு) போக தொடங்கியது. இதிலே தான் முஸ்லிம்கள் Wahhabism தின் செல்வாக்கின் கீழ் வந்து இருக்க கூடிய சாத்திய கூறுகள்- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இரான் விடயத்தில் இங்கு சிலருக்கு காமாலைக் கண். விவிலியாக் கிருமிகளின் பிரச்சாரத்தை அப்படியே எந்தக் கேள்வியும் ஏற்று, இப்பொது தாம் சொல்வது ஈரானுக்கு பொருந்துகிறது என்பதை கூட புரிய முடியாத, புத்தி மழுங்கி, உறைந்து போன நிலை. 6 நாடுகள் ஐ,நா சார்பாக சேந்து போட்ட ஒப்பந்தத்தை, இரான் எந்த குழப்பம்ம் இன்றி ஒத்துழைத்து , அமுல்படுத்த, ஒப்பந்தப்படி நீக்கப்படவவேண்டிய பொருளாதார தடைகளை நீக்காது, மேலும் இறுக்கி, US விவிலிய பிரளய கிருமி கிழித்து எறிந்து , ஐரோப்பிய விவிலிய பிரளய கிருமி வால்களுக்கும் அந்த கிழிப்புக்கு உடன்பட்டு ... சரி அதை விடுவோம், அவர்கள் (கள உறுப்பினர்கள்) சொல்லுவது அந்தந்த நாடுகள் தொழில்நுட்பத்தை அதுவுமாக வளர்த்தால் வைத்த இருக்கலாம் இரான் அதுவாக விருத்தி செய்த அணுசெறிவாக்கால் தொழில்நுட்பம். ஐ.நாவின் இறுக்கமான கண்கண்ணிப்பின் கீழ் வைத்து இருக்கலாம் என்றே முடிகிறது. இங்கே சிலர் சொல்லுவது, இரான் அதுவாக அந்த தொழில்நுஉட்பத்தை விருத்தி செய்யவில்லை என்பது, மேற்றுகின் , us, இஸ்ரேல் விவிலிய பிரளய கிருமிகளின் பிரசாரத்தை ஒப்புவித்து சொல்ழும் முழுப்பொய். ஏன் ஈரான் அதுவாக வளர்த்த மரபு ஏவுகணை தொழில்நுட்பத்தை கைவிட்ட வேண்டும்? ஏனெனில், இவற்றுறை எடுத்து விட்டு இரானை தாக்கி அழித்து, நான் முன்ப சொன்ன சமூகத்தை அழிப்பது, நலிவடையச்செய்து, உள்ளனர் குழப்ப / யுத்த விளிம்பில், வளங்களை, நிதிஅமைப்பு போன்றவற்றை இந்த விவிலிய பிரளய கிருமிகளின் கட்படின் கீழ் கொண்டு வந்து, வெற்றுக் கோது பொம்மை நிர்வாகத்தை உருவாக்கி, இஸ்ரேல் எந்த நேரத்திலும் தாக்க கூடிய நிலை, தாக்கப்படும் நாடு திருப்பி தாக்க முடியாத நிலையில் கொன்டு வருவது. இப்பொது நிலைமை அமெரிக்கா, குர்திஸ் ஐ இறக்கி ஆட்சி கவிழ்ப்பை இரானில் நடத்த ஆயத்தம் செய்ய. அறிந்த ஈரான் குர்திஸ் பிரதேசத்தில் தாக்குதல் நடத்தி உ ள்ளது. (தனிப்பட்ட முறையில் இரானுக்கு எனது பிரார்தனைகள், இறை பலத்தை வழங்குமாறு, அமெரிக்கா, ஐரோப்பிய, இஸ்ரேல் விவிலிய பிரளய கிருமிகளை இந்த பூமியில் இருந்து சுவடுகள் இல்லது அழிப்பதற்கு.) இரான் இவர்களை அழிக்காது விட்டால், இந்த பூமியில் மனித வர்க்கமும், வாழ்வும் அழிக்கப்படும். கீழே இருக்கிறது காரணம் - அமெரிக்கா, மேற்கு, இஸ்ரேல் விவிலிய பிரளய கிருமிகளின் ன்மையான திட்டத்தை இஸ்ரேல் இப்போது வெளியில் சொல்லி இருக்கிறது. அனால், இதை இங்கே முதலே நான் சொல்லிவிட்டேன். கீழே இருக்கும் யூகோடிபே வீடியோ, நான் முதலில் சோனா மேற்கு, us , இஸ்ரேல் விவிலியக் பிரளயக் கிருமிகள், apocalyptic evils, துருக்கி, பாகிஸ்தானை அழிகக்கும் திட்டம், இஸ்ரேல் வெளியில் இப்போது சொல்லி ள்ளது இதை இந்த வீடியோ ஐ பார்த்து சொல்லவில்லை, முதலே நான் சொல்லிவிட்டேன். (அதாவது என்ன நடக்கிறது என்பதை நாடிபிடிக்க தெரிந்ததால்) புதிய தகவல் US படை தலைமையிலும் இந்த விவிலிய பிரளய கிருமித்தன்மை தொற்றி இருப்பது- அமெரிக்காவின் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் மாணவி பலி!
அமெரிக்காவின் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் தமிழ் மாணவி பலி! Published By: Vishnu 04 Mar, 2026 | 03:24 AM அமெரிக்காவின் டெக்சாஸ் ஆஸ்டினில், மார்ச் 2, 2026 அன்று பார் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சவிதா சண்முகசுந்தரம் (21) உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஆவார். ஆஸ்டினில் உள்ள ஒரு மதுபான விடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 21 வயது இந்திய-அமெரிக்க மாணவி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 53 வயதான நிடியாகா டியாக்னே என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபரின் உடையில் ஈரானியக் கொடி வடிவமைப்பும் "அல்லாஹ்வின் சொத்து" என்ற வாசகங்களும் இருந்தன என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வார இறுதியில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே புதிய மோதல் வெடித்த நிலையில், துப்பாக்கிச் சூடு மற்றும் தற்போது உயிரிழந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் ஈரானுடனான தொடர்புகள் குறித்து சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/240100- ஈரானில் 1,000 பொதுமக்கள் உயிரிழப்பு - மனித உரிமைகள் குழு தெரிவிப்பு
ஈரானில் 1,000 பொதுமக்கள் உயிரிழப்பு - மனித உரிமைகள் குழு தெரிவிப்பு 04 Mar, 2026 | 09:27 AM கடந்த 28 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன. இந்த தாக்குதலில் ஈரானில் சிறுவர்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையான காலப்பகுதியில் 181 சிறுவர்கள் உட்பட குறைந்தது 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உரிமைகள் குழு தெரிவித்துள்ளது. அத்துடன், 100 சிறுவர்கள்உட்பட 5,400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தக் குழு தனது அறிக்கை முதற்கட்டமானது எனவும், மேலும் நூற்றுக்கணக்கான இறப்புகளைச் சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/240103- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இப்படி எல்லாருக்கும் ஒரு தூசண சொல்லில் ஒரு எழுத்தை மாத்தி விட்டு எழுத முடியும் புலவர். நீங்கள் மேலே சொன்ன சொல்லை சமூகவலைதளங்களில் நாதக காவாலிகள் எப்படி பயன்படுத்துவது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. உங்கள் பெயரை கூட இப்படி விரசமாக் எழுத முடியும். இதைத்தான் செய்ய வேண்டாம் என நீங்கள் அறிவுத்தப்பட்டீர்கள். அதன் பின்னும் செய்து குட்டு வாங்கினீர்கள். இப்போதும் விளங்காத மாதிரி நடித்து கொண்டு அதையே செய்கிறீர்கள்😂. ஏன் இந்த சின்ன பிள்ளைதனம்? மட்டுறுதினர் பார்வையில் விடப்படுவீர்கள் என எச்சரிக்க பட்ட பின்னும் இது தொடர்ந்தால் நிர்வாகம் என்ன செய்ய முடியும்? அப்படி ஏதும் செய்தால் அதை நிர்வாக எதேச்சாதிகாரம் என்பீர்கள். மட்டுறுதினர் பார்வையில் விடப்படுவது எவ்வளவு அசெளகரியமானது என்பதை இதற்கு உள்ளாகி இருக்கும் சக தம்பி ஒருவரிடம் தனி மடலில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் 😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
மேலே தெளிவாக சொல்லி உள்ளேன். இன்னும் அடைய வேண்டிய தூரம் அதிகம் ஆனால் இதுவரை அடைந்து விட்ட தூரமும் கணிசமானதே. ஒரு சின்ன உதாரணம். தமிழ் நாட்டு கிரிகெட் அணி. இதில் உள்ளூர் போட்டிகளில் விளையாட கூட அதிகம் பிராமணர் ஆதிக்க சாதியினர்தான் தேர்வாகிறனர். தமிழ் நாட்டு கிரிகெட் நிர்வாகம் மாநில அரசு கட்டுப்பாட்டில் இல்லை. இதையே மாநில அரசின் கையில் இருக்கும் ஒரு அமைப்பில், துறையில் பார்த்தீர்களானால் பல பிற்படுத்த, மிகவும் பிற்படுத்தபட்ட, பட்டியல் இன மக்கள் எல்லாம் இருப்பார்கள். மாநில (திராவிட) கட்சிகள் ஆட்சிக்கு வந்திராவிடில் கிரிகெட் போலவே ஏனைய தமிழ்நாட்டு நிறுவனங்களும் இருந்திருக்கும். இதுதான் சாதி எதிர்ப்பு சாதித்தது.- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
நன்றி. தகவலுக்கும். புத்தக பரிந்துரைக்கும்.- பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
முழு ஆவணம்:-
மாதனூர- படைக்கலன் = வாள் & தண்டம்.jpg
-
இளவம்பாடி நடுகல் கல்வெட்டு.jpg
-
poovaalai sivan kovil, pennaakaram vattam, tharmapuri - kipi 1335.jpg
-
Polearms- meelpaadi, vellore.jpg
-
chandrapuram (2).jpg
-
செஞ்சி வட்டத்தில் உள்ள மேல் ஒலக்கூரின் வடக்க சாலை.
-
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கோட்டைப்பாடி கிராமத்தில் கோட்டை மேட்டுக்கருகிலுள்ள பெரிய கண்மாய் கரையில் பகவதி அம்மன் கோயிலுக்குக்கருகில் நடப்பட்டுள்ள தனிக்கல். ad 10-11 cent - Copy
-
ஊர் வேப்பநத்தம், வட்டம் அரூர், மாவட்டம் தருமபுரி - Copy.jpg
-
நாகை நல்லூர் வணிகக் கல்வெட்டு - 10th centuary.jpg
-
kothandam type bow - வடஆர்க்காடு அம்பேத்கார் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வங்கட்டூர்.jpg
-
info not available.jpg
-
விழுப்புரம் மாவட்டம்| found: இராமசாமி படையாச்சியார்,.jpg
-
வடசிறுவளூர் பல்லவர் நடுகல்.jpg
-
திண்டுக்கல் மாவட்டம் தாதன்கோட்டை.jpg
-
தாமல் ஊருக்கு கிழக்கேயுள்ள அம்மன்கோவிலிலுள்ள நடுகல் - கிபி600.jpg
-
ஊர்ஊத்தம்பட்டிதண்டா வட்டம்அரூர் மாவட்டம்தருமபுரி.jpg
-
ஊர் மேலப்புஞ்சை, வட்டம் செங்கம், மாவட்டம் திருவண்ணாமலை.jpg
-
sadas.jpg
-
muththaalraayan - விழுப்புரம் மாவட்டம், செஞ்சிவட்டத்தில் உள்ள துடுப்பாக்கம் தருமராசா கோயில் சுவர் ஓரத்தில் நடுகல் உள்ளது..jpg
-
This hero stone belongs to the 08th – 09th Century CE. Anumanthandalam, Kanchipuram District, Tamil Nadu His sword and Shield are in a kind of rectangular shape.webp
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தென்னாபிரிக்கா முற்று முழுதான அணி. அவர்களை குறைத்து எடைபோட்டு விட்டேன். இந்தியா, அவுஸ்திரேலியாவோடு ஒரே குழுவில் வந்ததால், அவர்கள்தான் அரை இறுதிக்கு வரமாட்டார்கள் என்று தெரிவு செய்துவிட்டேன். அவர்கள் அந்த chockers என்ற நிலையிலிருந்து மீண்டுவிட்டார்கள். அவர்கள்தான் வெல்வதற்கு வாய்ப்புக் கூட.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கவனமாக இருங்கள். உடம்பைக் கவனியுங்கள் சுவை. - ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.