All Activity
- Past hour
-
நிலக்கரிக் கொள்வனவுக்கு மீண்டும் விலைமனு கோரல்!
நிலக்கரிக் கொள்வனவுக்கு மீண்டும் விலைமனு கோரல்! Published By: Digital Desk 1 01 Mar, 2026 | 07:39 AM (நமது நிருபர்) நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்காக 3 இலட்சம் மெட்ரிக் தொன் நிலக்கரியை அவசரமாகக் கொள்வனவு செய்ய லங்கா நிலக்கரி நிறுவனம் விலைமனுக் கோரியுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், 2026 மார்ச் - ஏப்ரல் காலப்பகுதிக்காக அவசர நிலக்கரி கொள்வனவுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரமற்ற நிலக்கரி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், லங்கா நிலக்கரி நிறுவனம் இவ்வாறு அவசர நிலக்கரி கொள்வனவுக்கான அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. லங்கா நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இந்த அறிவிப்பு கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 2026 மார்ச் - ஏப்ரல் காலப்பகுதிக்காக நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்திற்கு 3 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரியைக் கொள்வனவு செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. நிலக்கரிக் கொள்வனவுக்கு மீண்டும் விலைமனு கோரல்!
-
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
'இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய அரசு ஊடகம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 1 மார்ச் 2026, 01:08 GMT புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) இரானின் அதிஉயர் அயதுல்லா அலி காமனெயி இறந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது அயதுல்லா அலி காமனெயி மரணத்தை இரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. காமனெயி மரணத்திற்கு இரான் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என, அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் கண்ணீருடன் தெரிவித்தார். இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அறிக்கையுடன், இரானில் உள்ள பல அரசு ஊடகங்கள் அயதுல்லா காமனெயி மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளன. அதன் அறிக்கையில் 86 வயது அயதுல்லா எப்படி இறந்தார் என்பது குறித்தோ அல்லது அடுத்த தலைவர் யார் என்பது குறித்த தகவல்களோ இல்லை. தற்போது இரானின் அரசு தொலைக்காட்சி சேனலான IRINN, காமனெயி புகைப்படங்களுடன் பின்னணியில் குரான் ஓதப்படுகிறது. முன்னதாக, அத்தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் காமனெயி மரணத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை குற்றம் சாட்டிய இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரபூர்வ அறிக்கையை வாசித்தார். காமனெயியின் "தியாகம்" "அடக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு எழுச்சியின்" தொடக்கமாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமை, அமெரிக்காவும் இஸ்ரேலும் பல இரானிய நகரங்களைத் தாக்கின, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, அமெரிக்க அதிபர் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பக்கத்தில் காமனெயி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அலி காமனெயி மரணம் குறித்த செய்தி தவறானது என்றும், அது அமெரிக்க உளவியல் போரின் விளைவு என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக, இரானின் செய்தி நிறுவனமான ஃபார்ஸ் கூறுகிறது. புரட்சிகர காவல்படைக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், டிரம்பின் தகவலை மறுத்து, "டிரம்ப் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட செய்திகளைப் பரப்புவதில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளார். இதுபோன்ற நடத்தைக்கான முந்தைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று, மஷாத் நகரத்தின் வீழ்ச்சி குறித்த அவரது கூற்று ஆகும், இது பின்னர் ஆதாரமற்றது மற்றும் வெறும் பரபரப்பான ஊடக பிரசாரம் என்று நிரூபிக்கப்பட்டது." என தெரிவித்துள்ளது. "வரலாற்றில் மிக மோசமான மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார்" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டிரம்ப் கூறியது என்ன? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,காமனெயி மரணம் இரான் மக்களுக்கு நீதி என்று டிரம்ப் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான காமனெயி இப்போது இறந்துவிட்டார். இது இரான் மக்களுக்கு மட்டுமல்ல, காமனெயி மற்றும் அவரது ரத்தவெறி பிடித்த கும்பலால் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த உலகெங்கிலும் உள்ள பல நாடுகளின் சிறந்த அமெரிக்கர்கள் மற்றும் மக்களுக்குமான நீதி." என பதிவிட்டுள்ளார். "அவரால் எங்கள் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து தப்ப முடியவில்லை, மேலும் இஸ்ரேலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், அவரோ அல்லது அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களோ எதுவும் செய்ய முடியாது." "இரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இது. அவர்களது ஐ.ஆர்.ஜி.சி (புரட்சிகர காவல் படை), ராணுவ அதிகாரிகள் மற்றும் பிற பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் பலரும் இனி சண்டையிட விரும்பவில்லை என்றும், எங்களிடம் பாதுகாப்பு கேட்கிறார்கள் என்றும் நாங்கள் கேள்விப்படுகிறோம். நேற்று இரவு நான் சொன்னது போல், 'அவர்களுக்கு இப்போது பாதுகாப்பு கிடைக்கலாம், ஆனால் பின்னர் அவர்களுக்கு மரணம் மட்டுமே கிடைக்கும்.'" "ஐ.ஆர்.ஜி.சி மற்றும் காவல்துறை இரானின் தேசபக்தர்களுடன் அமைதியாக ஒன்றிணைந்து, ஒரு பிரிவாக, நாட்டை அதற்கு தகுதியான மகத்துவத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். இந்த செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும், ஏனென்றால் காமனெயி இறந்தது மட்டுமல்லாமல், நாடு பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட ஒரே நாளில் அழிக்கப்பட்டுள்ளது." "இருப்பினும், மத்திய கிழக்கு மற்றும் உண்மையில் உலகம் முழுவதும் அமைதிக்கான நமது இலக்கை அடைய, வாரம் முழுவதும் அல்லது தேவைப்படும் வரை கடுமையான மற்றும் துல்லியமான குண்டுவெடிப்பு தொடரும்." இதற்கிடையில், காமனெயி மரணம் குறித்த கூற்றுகளைத் தொடர்ந்து, இரானிய நகரமான கராஜில் கொண்டாட்டங்கள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. எக்ஸ் சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்டு பிபிசி பாரசீக மொழி சேவையால் சரிபார்க்கப்பட்ட ஒரு காணொளியில், இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி மரணம் குறித்த செய்திகளுக்குப் பிறகு, கராஜில் சில இரானியர்கள் கொண்டாடுவதைக் காண முடிகிறது. இருப்பினும், டொனால்ட் டிரம்ப் பதிவிடுவதற்கு முன்பே இது நிகழ்ந்தது. பட மூலாதாரம்,Reuters 'இரானிய அதிகாரிகள் 40 பேர் உயிரிழப்பு' பிபிசி கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் பேசிய உளவு மற்றும் ராணுவ வட்டாரங்கள், தாக்குதல்களில் இரானிய அதிகாரிகள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளன. இந்த அதிகாரிகள் ஒரே இடத்தில் இருந்தார்களா அல்லது பல்வேறு இடங்களில் இருந்தார்களா என்பது தெரியவில்லை. இறந்தவர்களுள் இரானின் அதிஉயர் தலைவர் காமனெயி, இஸ்லாமிய புரட்சிகர காவல் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரும் அடங்குவர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 'இரான் அதிஉயர் தலைவர் காமனெயி கொல்லப்பட்டார்' - உறுதிப்படுத்திய அரசு ஊடகம்
-
தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!
பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து சனத்தின் பதில்! Mar 1, 2026 - 12:33 AM இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இன்று (28) நடைபெற்ற போட்டியின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளாரா என்பது குறித்து சனத் ஜயசூரிய கருத்து வெளியிட்டுள்ளார். இன்று நடைபெற்ற போட்டியின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், தான் முன்னரே பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாகவும், தனது ஒப்பந்தக் காலம் எதிர்வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், இது குறித்து இதுவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும், இது தொடர்பாக கிரிக்கெட் நிறுவனத்துடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த சனத் ஜயசூரிய, இந்த பதவியை வேறு யாருக்காவது வழங்க வேண்டும் என்று நான் நினைத்தேன். அதனால்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து தொடரின் போது, இதில் தொடர விருப்பமில்லை என்று கூறினேன். அந்த முடிவை எடுத்த பின்னரே நான் அதனைத் தெரிவித்தேன். உலகக்கிண்ணத் தொடரை ஒரு பயிற்சியாளராகச் சிறந்த முறையில் நிறைவு செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அதனைச் செய்ய முடியவில்லை. அது குறித்து கவலையடைகிறேன். ஆனாலும், அணி இருந்த நிலையிலிருந்து ஒன்றரை வருடங்களுக்குள் தரவரிசையில் 4ஆம் இடத்திற்கு கொண்டு வர என்னால் முடிந்தது. டெஸ்ட் அணியை 6ஆம் இடத்திற்கு கொண்டு வந்தேன். இதனை நான் தனியாகச் செய்யவில்லை, எனது உதவிப் பணியாளர்கள் ஆரம்பத்திலிருந்தே எனக்கு பெரும் ஆதரவை வழங்கினார்கள். நான் செய்த விடயங்கள் குறித்து மகிழ்ச்சியடைய முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் உலகக்கிண்ணத் தொடர் நிறைவடைந்த விதம் குறித்து என்னால் மகிழ்ச்சியடைய முடியாது. அது குறித்து மிகவும் கவலையாக உள்ளது. பார்க்கலாம், எனது ஒப்பந்தம் ஜூன் மாதம் வரை உள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு இன்னும் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. எனவே அவர்களுடன் பேசி அடுத்தகட்டமாக என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார். பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து சனத்தின் பதில்!
-
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி!
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி! Published By: Digital Desk 1 01 Mar, 2026 | 07:48 AM (நா.தனுஜா) டித்வா சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் நாடு முகங்கொடுத்திருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு மேலும் ஒரு மில்லியன் யூரோ (சுமார் 370 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண வழங்கல் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை இந்த மேலதிக நிதியுதவி மூலம் மீளுறுதிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்நிதியுதவியானது மனிதாபிமான உதவி வழங்கல் அமைப்புக்கள் ஊடாக மக்களைச் சென்றடையும் எனவும், இந்நிதி அடிப்படை சேவை வழங்கல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உடனடி மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கென ஐரோப்பிய ஒன்றியம் தமது சக முகவரமைப்புக்கள் ஊடாக 2.35 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி!
-
மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி
மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி Published By: Vishnu 28 Feb, 2026 | 07:48 PM மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.இலங்கை விளையாட்டு நிலவும் சர்வதேச சூழ்நிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு திரளுகின்ற நிலை காணப்படுகின்றது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார். அவரது விளக்கத்தின் படி, 37 நாட்களுக்கு தேவையான பெற்றோல், 35 நாட்களுக்கு தேவையான டீசல், 47 நாட்களுக்கு தேவையான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “மக்கள் அச்சமடைவதற்கு எவ்வித காரணமும் இல்லை. கையிருப்பிலுள்ள முழுமையான அளவுகளை நாங்கள் கணித்துள்ளோம். மேலதிக கப்பல்கள் வராதிருந்தாலும் கூட, குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இடையூறு இல்லாமல் விநியோகிக்க முடியும்,” என அவர் குறிப்பிட்டார். இலங்கைக்கான பெற்றோல் மற்றும் டீசல் இறக்குமதி பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். கப்பல் கட்டணம் மற்றும் தூரம் அதிகமாக இருப்பதால், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்கள் பெரும்பாலும் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன எனவும் அவர் விளக்கமளித்தார். மசகு எண்ணெய் (Crude Oil) இறக்குமதியில் மட்டுமே சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாயினும், அதற்கான கையிருப்பும் சுமார் ஒரு மாதத்திற்கு போதுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தால் அதிகளவில் எரிபொருள் சேமிப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கு போர் சூழல்: நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் உறுதி
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது 01 Mar, 2026 | 07:39 AM ஆயத்துல்லா அலி காமேனி உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. அமெரிக்கா– இஸ்ரேல் இணைந்து நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு பின்னரே இந்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த இராணுவ நடவடிக்கை வாரம் முழுவதும் கடும் குண்டுவீச்சுகளுடன் தொடரும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த நடவடிக்கை தெஹ்ரான் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுஷ்டிக்கப்படுவதுடன் 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களில் ஒன்றாக தெற்கு ஈரான் பகுதியில் உள்ள ஒரு ஆரம்பப் பாடசாலை குறிவைக்கப்பட்டதாகவும், அதில் பல மாணவர்கள் உயிரிழந்ததாகவும் ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்க இராணுவத் தளங்கள், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் நெரிசலான நகரப்பகுதிகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதுடன், விமானப் போக்குவரத்து மற்றும் எண்ணெய் கப்பல் அனுப்புகைகளிலும் கடுமையான இடையூறுகளை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, அமெரிக்க இராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இதுவரை எந்த அமெரிக்க இராணுவ வீரர்களும் போர்சார்ந்த உயிரிழப்புக்கு உள்ளாகவில்லை என கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் இந்த தாக்குதல்களை “மத்திய கிழக்கின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம்” என விவரித்ததுடன், உலகத் தலைவர்கள் பிராந்தியத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்யத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய கிழக்கு முழுவதும் பதற்ற நிலை அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சமூகம் தணிக்கை முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வெல்லவேணும்...எனக்குப் புள்ளி ...சின்ன சுயநலம்- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானிய உச்சத் தலைவர் ஆயத்தொல்லா அலி கமேனியின் மகள், பேத்தி, மருமகன் ஆகியோர் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. -ராய்ட்டர்ஸ் இஸ்ரேல்டெ-டெல் அவிவ் நகரில் உள்ள கட்டடம் மீது ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் ஒன்றில், ஒருவர் உயிரிழந்தார் மேலும் 22 பேர் காயமடைந்தனர்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஆம், இதுவும் அமெரிகா, மேட்ற்கு, இஸ்ரேல் திட்டத்தின் ஒரு பகுதி. இதை வெளிப்படையாக (அமெரிக்கா அரசாங்கம் என்று சொல்லாமல்), wall street ournal , forbes இல் கருத்து பத்தியாக பிரசுருக்கப்பட்டு இருந்தது. அது முடியாவிட்டால், லிபிய போல ஆயுத குழுக்களினால் நிலபரப்பு பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் பிரதேசமாக மாற்றுவது. கதுருக்கியும், நேட்டோ உம தடுக்கும்- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானிய தலைநகரில் வசிப்பவர்கள் தங்கள் ஜன்னல்களிலிருந்து மக்கள் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஆரவாரம் செய்ததாகவும் தெருக்களில் கார் ஹாரன்கள் ஒலிப்பதாகவும் ஈரானில் உள்ள செயற்கைக்கோள் வழியாகப் பெறக்கூடிய ஈரானிய நாடுகடத்தப்பட்ட ஊடகங்கள் மூலம் வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன பழைய கால மன்னர் ஷாவின் மகனான Reza Pahlavi ஈரானின் ஆட்சியை கவிழ்க்க பாதுகாப்புப் படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். "மக்களுடன் சேர இது உங்களுக்கு கடைசி வாய்ப்பு" என்று சொல்லியுள்ளார்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஹாமெனி இறப்பு உண்மையயாக இருக்கலாம். 6 பேர் வரையில் . செய்திகளை பெருபிப்பது cia, மொசாட், அவரின் information மற்றும் மனா உளவியல் யுத்தத்துக்காக மற்ற திரியில் இப்படி நடக்காலம் (வவெனிசுல போல) என்றுசொல்லி இருந்த்தேன். (உயிரை ஆகுதி ஆகிய எமக்கே துரோகிகள் இருந்த போது, ஈரானில் இருப்பது ஆச்சரியம் அல்ல) ஆனால் , இது இரான் பதில் தாக்குதலை நிறுத்தாது. இரானின் எல்லா முக்கிய, தலைமை பொறுப்புக்களுக்கும் 5 அடுத்த படி வரையும் , மாற்று தற்கலிக பொறுப்பையும் வகுத்து, சிலரின் இழப்புகள் அமைப்பை குலைக்காது எதிர்ப்பு தொரவாதத்திற்கு எதுவாக அமைப்பு, ஆனி 2025 இல் நநடந்ததில் இருந்த பாடத்தில் இருந்து இரான் அரச / அரசாங்க அமைப்பாக உருவாக்கி உள்ளது. அத்துடன் igrc, ஹாமெனி தலைவர் என்றாலும், அரசில் இருன்னு பிறிம்பான அமைப்பு. ஹாமெனியை நியமிகத்தில் பெறும்பங்கு irgc. ஏற்கனவே கலைவரை irgc தெரிந்து விட்டதாக, உத்தியோகபூர்வ நியமனம் இடம்பெறவில்லை என்பதும். இப்படி பல சுயாதீன அமைப்புகள் கொண்டதே இரான் அரசு ஈரான் அரசின் தோற்றம் 79 புரட்சி என்றாலும், அதன் முறுக்கேறியது, அமெரிக்கா சதாமை கொம்பு சீவி. சதாமுக்கு அமெரிக்கா கொடுத்த இரசாயண, (உயிரியல் ஆயுத்தகங்கள் கூட) ஆயுதங்களினால் யுத்கம் செய்து, இரான் முறியடித்து வெற்றிகொண்டத்தில். காவது (இரசாயன ), யுத்தத்தால் முதிர்ச்சி பெற அரசு. மருவலமாக, 80 வயதுக்கும் அஹ்திக்கமான ஹாமெனி அமெரிக்கா / இஸ்ரேல் க்கு சிம்மசொப்பனமாக இருந்தது, அதுவும் சமய தத்துவ தலைவாராக இருந்து, ஹாமெனி இவர்களை பச்சடி போட்டுள்ளார் என்பது தெளிவு. ஈரான் போன்றவை, எல்லாமே அவ்வாற்றின் காலில் நின்று / பணத்தை வவைத்து போராடுவது. உண்மையான சுகந்திரத்துக்கான போராட்டம். (மற்றது ருசியா, இரான் உறவு வெளியே தெரிவாஹு போல இல்லை - ஏனெனில் வரலாறு,ஈரானை பலமுறை ருசியா ஆக்கிரமித்து உள்ளது. ) (மற்றவன் காசு, ஆயுதம் கொடுத்தால், அமெரிக்காவோ , இஸ்ரேல் ஓ இரானுடன் நின்று இருக்குமா என்பது சந்தேகம்)- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஐயோ…இது சாத்திரம் பாக்கிறது மாரி அண்ணை. சும்மா முகத்தை மட்டும் பார்த்து சொல்வது.- Yesterday
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானின் சுப்ரீம் லீடரும், இன்னும் பல முக்கியஸ்தர்களும் கொல்லப்பட்டு விட்டதாகவே இங்கு அமெரிக்காவில் செய்திகளில் வர ஆரம்பித்திருக்கின்றது. ஈரானில் பாடசாலைப் பிள்ளைகளும், பொதுமக்களுமாக நூற்றுக்கு மேற்பட்டோர் அமெரிக்க இஸ்ரேல் குண்டு வீச்சில் இறந்துள்ளதாகவும் செய்திகளில் சொல்லுகின்றார்கள். சுப்ரீம் லீடருக்கும், அமைச்சர்களுக்கும், தளபதிகளுக்கும், பாடசாலை பிள்ளைகளுக்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா.................. இந்தக் கொடுமைகளை கேட்பதற்கோ அல்லது தடுப்பதற்கோ உலகில் ஒரு நல்ல நாடும் இல்லை, ஒரு தலைவரும் இல்லை................... ஈராக், ஈரான், வெனிசுவேலா போன்ற நாடுகள் எல்லாமே வெற்றுக் கோதுகள் போன்றன. வெறும் வாய் வீச்சு மட்டுமே என்றே தோன்றுகின்றது. ரஷ்யாவையும், சீனாவையும் தங்கள் பாதுகாப்புக்கு நம்பும் எந்த தலைவர்களினதும், நாடுகளினதும் நிலைமை கடைசியில் அந்தோ பரிதாபம் என்றே முடிந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் ரஷ்யாவிடமும், சீனாவிடமும் என்ன வாங்கிக் குவித்து வைத்திருக்கின்றார்கள்? அடிப்பதற்கு குண்டுகளும் இல்லை, குடிப்பதற்கு தண்ணியும் இல்லை என்று வந்து நிற்கின்றது ஈரான்.............................. ரஷ்யாவும், சீனாவும் நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம் என்று சொல்வதை தவிர, ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடமாட்டார்கள். அதிபர் ட்ரம்பிற்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு இந்த தாக்குதல்கள் நல்ல ஒரு மடை மாற்றும் வாய்ப்புகள். முன்னர் ஓபாமா ஈரான் மேல் தாக்குதல்கள் செய்யப் போகின்றார், அது அநீதி என்று சொன்ன அதிபர் ட்ரம்ப் இன்று ஈரான் மேல் ஒரு தலைப்பட்சமாக தாக்குதல்கள் மேற்கொள்ளுகின்றார். அதிகாரமும், ஆணவமும் உள்ள சில மனிதர்களால் அப்பாவி மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றார்கள்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஓம் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் அறிவிப்பின் படி ஈரானின் உச்ச தலைவர் மத தலைவர் அயதுல்லா கமேனி அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டார். "நமது அமைதி இலக்கை அடைய" ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் என்று ரம்ப் அறிவித்தார்.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் மீதான தாக்குதல் வெற்றியளித்தால் நாடு பல பிரிவுகளாக பிரியலாம் என சொல்கிறார்கள். இதன் மூலமாவது குர்திஷ் மக்களுக்கென தனி மண் கிடைக்கட்டும்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நான் அன்று தொடக்கம் திரிஷா தீவிர ரசிகன் என்பது ஊர் உலகம் அறிந்த விடயம். 😎 செல்லம் திரிஷா முதல்வராகி மக்கள் சேவை செய்ய என் வாழ்த்துக்கள். 😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
மற்றவரின் மனைவி (வைப்பாட்டி) என்று தெரிந்த பின்னரும் இவ்வாறு நினைப்பது தவறு சகோ...😋- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா வெல்லுமா. வென்றால், அரை இறுதியில் மோதும் அணிகள் இங்கிலாந்து - இந்தியா - (சென்ற உலகக் கோப்பையிலும் இவர்கள்தான் அரை இறுதியில் மோதினார்கள்) தென்னாபிரிக்கா -நியுசிலாந்து- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரானிய அதிபர் கொல்லப்பட்டு விட்டார் ட்ரம் அறிவித்துள்ளார்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சகிப்சாடா பஃர்கான், இந்தத் தொடரில் 383 ஓட்டங்கள் அடித்திருக்கிறார். இதுதான் இந்தத் தொடரில் அதிகூடிய ஓட்டமாய் இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டாவதாக ஸிம்பாப்வெயின் ப்ரயன் பெனட்டும் (277 ஓட்டங்கள்), மூன்றாவதாக எய்டன் மார்க்கிரமும் (264 ஓட்டங்கள்) உள்ளார்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
😂 மனோகரா…பொறுத்தது போதும்…பொங்கி எழு😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இரண்டு அரை இறுதிப் போட்டிகளும், இந்தியாவில் நடைபெறும். இலங்கையில் அரை இறுதிப் போட்டி ஒன்றை நடாத்துவதற்காக, இலங்கை பாகிஸ்தானை போக வைக்கும் என்று, ஒரே கலபரம், கலாய்ப்பு. உந்த max fixing கோஸ்டியோட ஒரே தொல்லை. ஏனென்றால், இலங்கை உல்லாசத் துறைக்கு நல்லதாம். எதுக்கெடுத்தாலும், காச வாங்கிட்டாங்கள் என்று ஓடித்திரிவாங்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மேலேயும் கீழேயும் ஒரு மாற்றமும் இல்லை. நடுவில் சில மாற்றங்களுடன், இன்றைய நிலை.
Important Information
By using this site, you agree to our Terms of Use.