Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு! தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2026/1470794
  3. doSnpotesr6mif00l5073967lg1i75f43i05101ah7um3m iigfm1cfc6c47 · ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. எழில் என்று அதற்குப் பெயரும் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு பெரிதும் உதவுவது எழிலே தான். ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந் திருந்தார் அந்த விவசாயி. அவரைத் தேடிக் கொண்டு ஒருவர் வந்தார். வெகு தூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும், கசங்கிய ஆடைகளுமே உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார். விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். அவர் உட்கார்ந்ததும், சூடாக டீ குடிக்கி றீங்களா ? என்று கேட்டார். வந்தவர், அவசரமாக 'வேண்டாம்' என்று சொன்னார். சொல்லுங்க, என்ன விஷயம் ?' விவசாயி கேட்டார். ஒண்ணு மில்லை. நான் கோபி முல்லங் கரையிலிருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம, நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்றும் சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று... ரொம்பப் பெரிய காரா ?' என்று கேட்டார் விவசாயி. இல்லை, இல்லை. சின்ன கார் தான்' என்றார் வந்தவர். விவசாயி கயிறு உட்பட சில உபகரணங் களை எடுத்துக் கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்திய படியே அவருடன் சென்றார். விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லா வற்றையும் பொறுமையாகப் பார்த்தார். கார் சிறியதாகத் தான் இருந்தது. ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில், ஒரு வேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது. விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகவேப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். பிறகு, எங்கடா பழனி.. இழு பார்ப்போம் ! என்று சத்தமாகவேக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது. ஏண்டா கந்தா இழுடா ராஜா ! இன்னும் சத்தமாகவேச் சொன்னார் விவசாயி. குதிரை துளிகூட நகரவே இல்லை. டேய் முருகா... வேகமா இழு ! மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். மீண்டும் குதிரை ஒரு இஞ்ச் கூட நகரவேயில்லை. என் செல்லம்.. என் தங்கம்... எழிலூ.. நீயும் சேர்ந்தே இழுடா ! என்றார். அவ்வளவு தான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடமே, கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது. வெளியூர்க் காரரோ, விவசாயிக்கு நன்றி சொன்னார். ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேரால கூப்பிட்டீங்க ? அது தான் எனக்கு ஒண்ணுமே புரியலை. ஐயா, என் எழிலுக்கு ரெண்டு கண்ணுமே தெரியாது. தான் மட்டும் தான் இந்த கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்ன்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா ? அதான் அது கூட இன்னும் மூணு குதிரைகள் இருக்கிற மாதிரி நம்ப வெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. சரசரவென காரை வெளியே இழுத்துடுச்சு ! அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு பணம் எதுவும் செலவழிக்க வேண்டிய தில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப் பவையோ மிக ஏராளம், இதையே பிரெஞ்ச் கணித வியலாளரும், தத்துவ வியலாளருமான பிளெய்ஸ் பாஸ்கல் மிக (Blaise Pascal) அற்புதமாகச் சொல்லி யிருக்கிறார். வார்த்தைகளின் மகிமையோ அபாரமானது. அதனால் தான் நல்ல நல்ல சொற்களைப் பேச வாய்ப்பு இருக்கும் போது,.. கடுஞ் சொற்களை ஏன் பேச வேண்டும். இதையே கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்கிறார் வள்ளுவரும்... Voir la traduction.....!
  4. எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு! ஸ்ரீலங்கா டெலிகாம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், காப்புறுதிக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா வைத்தியசாலை உள்ளிட்ட எட்டு அரச நிறுவனங்களை விற்பனை செய்வது தொடர்பான முந்தைய நிர்வாகத்தின் முடிவை தற்போதைய அரசாங்கம் செயல்படுத்தாது என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட விற்பனையை எதிர்த்து கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் பிறர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு மீதான விசாரணையின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேய்கூன் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டவர்களில், முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவையும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அடங்குவர். சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரசு சட்டத்தரணி, தற்போதைய அரசாங்கம் நிறுவனங்களை விற்பனை செய்யும் நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும், மறுசீரமைப்பு முயற்சிகளை மேற்பார்வையிடுவதற்காக மட்டுமே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனிஷ்க விதாரணா, அரசாங்கம் விற்பனை நடவடிக்கையைத் தொடரப் போவதில்லை என உறுதி செய்துள்ளதால், இந்த மனுவைத் தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டார். இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த பின்னர், உயர் நீதிமன்ற அமர்வு மனு மீதான விசாரணையை நிறைவு செய்தது. https://athavannews.com/2026/1470852
  5. தாமதமான இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி......! 🙂
  6. Today
  7. போட்டி என்றால் ஓடி வரும் @வீரப் பையன்26 @செம்பாட்டான் ஆகியோரை காணவில்லை? என்னை T20 போட்டியிலும் அழைக்கவில்லை
  8. மனித புதைகுழி என சந்தேகம்: அகழ்வில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை Published By: Vishnu 03 Apr, 2026 | 04:33 AM தற்செயலாக எலும்புகள் எதுவும் கண்டெடுக்கப்படாமலேயே ஒரு மனித புதைகுழி எனச் சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடத்துமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள காணியொன்றில் அரசாங்கச் செலவில் ஆறு அடி ஆழம் வரை தோண்டிய அகழ்வுப்பணி குறிப்பிடத்தக்க எதனையும் கண்டெடுக்கப்படாமலேயே நிறைவு செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட 150-இற்கும் மேற்பட்ட முஸ்லிம் ஹஜ் யாத்திரிகர்களின் உடல்கள் இருப்பதாகக் கூறப்பட்ட அந்தக் காணியில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 2.8 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தது. மனித புதைகுழி ஒன்றைத் தேடும் நோக்கில் தற்செயலாக மனித எச்சங்கள் எதுவும் கண்டெடுக்கப்படாமல் நீதிமன்ற மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, குற்றமொன்று இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதுமின்றி மூடிவிட நேர்ந்த இலங்கையின் முதலாவது இடம் மட்டக்களப்பில் அமைந்துள்ள குருக்கள்மடமாகும். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமயத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள்மடம் பகுதியில் உள்ள கடற்கரை காணியில், 2026 மார்ச் 30ஆம் திகதி திங்கட்கிழமையன்று களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபனின் மேற்பார்வையின் கீழ், சட்டவைத்திய அதிகாரிகள், சட்ட நிபுணர்கள் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் பங்களிப்புடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அகழ்வுப் பணிகளுக்காக அடையாளம் காணப்பட்ட நிலப்பரப்பை சுமார் ஆறு அடி ஆழத்திற்குத் தோண்டும்போது கடல் நீர் ஊற்றெடுத்ததையடுத்து, நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைவாக அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டதாக, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று நாட்கள் பூர்த்தியான 2026 ஏப்ரல் முதலாம் திகதி மாலை வேளையில், பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முபாரக் முகஸம் தெரிவித்தார். “இன்றைய தினம் இரண்டு மீற்றர் ஆழத்துக்கு அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அகழ்வுப் குழி நீரினால் நிரம்பியதால், அகழ்வுப்பணியைத் தொடர்வதில் பயனில்லை என்ற சட்ட வைத்திய அதிகாரிகளின் தீர்மானத்துக்கு இணங்க, அகழ்வுப் பணிகள் இன்று நிறைவு செய்யப்பட்டன.” அகழ்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலப்பரப்பில் 5 மீற்றர் நீளம், 5 மீற்றர் அகலம் மற்றும் 9 அடி ஆழத்துக்கு அகழ்வுப்பணியை மேற்கொள்வதற்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள மேலும் சில இடங்களில் அகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூப் நீதிமன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, அந்த நிலப்பரப்பை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை சிங்கள, தமிழ் புத்தாண்டுக்குப் பின்னர் இடம்பெறும் சட்டத்தரணி முபாரக் முகஸம் குறிப்பிட்டார். “இப்பகுதிக்கு அண்மையில் அமைந்துள்ள வேறொரு பகுதியில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முறைப்பாட்டாளர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளார். ஸ்கேன் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவு உள்ளது. ஏப்ரல் மாதம் புத்தாண்டின் பின்னர் சந்தேகத்துக்குரிய பகுதியில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மனித எச்சங்களோ அல்லது வேறு எச்சங்களோ கண்டெடுக்கப்படாத நிலையில் அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவு செய்யப்பட்டன.” இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் மனிதப் புதைகுழிகளில் தற்செயலாக எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படாமல் ஒரு பாரிய புதைகுழியைக் கண்டறிவதற்காக அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இடம் இதுவாகும். இதற்கு முன்னர் வடக்கிலும், கொழும்பிலும், சம்பூரிலும், மாத்தளையிலும் தற்செயலாக மனித எலும்புகள் தென்பட்ட பின்னரே இவ்வாறான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பாரிய புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் குறித்த இடத்தில் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2025 ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் இடம்பெற்ற அந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/242605
  9. நாம் மூன்றாம் உலகப்போரை நோக்கி நகர்கிறோமா? அல்லது இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் அஹ்மென் கவாஜா, குளோபல் ஜர்னலிசம் குழு, குளோபல் ஸ்டோரி போட்காஸ்ட் 2 ஏப்ரல் 2026 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ள நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதல் மிகப் பெரிய ஒன்றாக உருவெடுக்குமா என்பது குறித்த கவலைகள் எழுந்துள்ளன. இந்தப் போர் இரானை மட்டுமல்லாமல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இராக், பஹ்ரைன், குவைத், செளதி அரேபியா, ஓமன், அஜர்பைஜான், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, சைப்ரஸ், சிரியா, கத்தார் மற்றும் லெபனான் உள்ளிட்ட பல பகுதிகளை பாதித்துள்ளது. இந்த மோதல் பிராந்திய அளவில் இருந்து முழுமையான உலகப் போராக மாறக்கூடுமா என்று இப்போது பலர் யோசித்து வருகிறார்கள். ஒரு போர் எப்போது உலகப் போராக மாறுகிறது? "போர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்படுகின்றன என்றும், போருக்குச் செல்பவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாக அறிந்திருக்கிறார்கள் என்றும் மக்கள் நினைக்கிறார்கள்" என்று பிபிசியின் 'குளோபல் ஸ்டோரி' பாட்காஸ்ட்டில் பேசிய பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச வரலாற்றுப் பேராசிரியர் மார்கரெட் மேக்மில்லன் கூறுகிறார். "உண்மையில், கடந்த காலப் போர்களைப் பற்றி நீங்கள் பார்த்தால், முதல் உலகப் போர் வெடிப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவற்றில் தற்செயலான சம்பவங்கள், எதிரியை தவறாக மதிப்பிட்டது போன்றவை இருந்தன. சில நேரங்களில் இதை ஒரு பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் சண்டையைப் போல புரிந்துகொள்ளலாம்'' ''ஆஸ்திரிய - ஹங்கேரி பேரரசர் பிரான்ஸ் ஜோசப்பின் உறவினர் ஃபிரான்ஸ் ஃபெர்டினாண்ட் படுகொலை செய்யப்பட்டதே, 1914-ல் முதல் உலகப் போரைத் தூண்டிய தொடர் நிகழ்வுகளுக்குக் காரணமாக அமைந்தது'' என்கிறார் மேக்மில்லன். சில வாரங்களுக்குள், பல கூட்டணிகள் ஐரோப்பாவை மோதலுக்குள் இழுத்தது. ஆஸ்திரிய - ஹங்கேரி செர்பியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது, ஜெர்மனி ஆஸ்திரியாவை ஆதரித்தது, ரஷ்யா செர்பியாவிற்கு ஆதரவாகத் திரண்டது, பிரான்ஸ் ரஷ்யாவை ஆதரித்தது மற்றும் பிரிட்டன் ''மரியாதை மற்றும் உத்தி'' ஆகிய இரண்டின் பெயரால் போரில் இறங்கியது. அதன்பின் நடந்தது ஓர் உலகளாவிய பேரழிவாக மாறியது என்கிறார் மார்கரெட் மேக்மில்லன். பட மூலாதாரம்,Stringer/Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவும் இஸ்ரேலும் இரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்களையும், இரானிய எண்ணெய் மற்றும் எரிவாயு தளங்களையும் குறிவைத்துள்ளன. லண்டன் கிங்ஸ் கல்லூரியின் சர்வதேச வரலாற்றுப் பேராசிரியர் ஜோ மயோலோ, உலகப் போரை அனைத்துப் பெரும் சக்திகளும் ஈடுபடும் ஒரு முழுமையான போர் என்று வரையறுக்கிறார். "முதலாம் உலகப் போரில் ஈடுபட்டவர்கள் ஐரோப்பிய பேரரசு சக்திகள். இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இருந்தன," என்று அவர் பிபிசியிடம் விவரித்தார். மத்திய கிழக்கின் இன்றைய பதற்றங்களை பலர் பெரும்பாலும் பிராந்திய அளவிலான ஒன்றாகவே விவரிக்கிறார்கள். ஆனால் ஒரு விரிவான மோதல் அதிகரிப்பதற்கான சூழல்கள் நிலவுகின்றனவா? பிப்ரவரி மாதம் பிபிசிக்கு அளித்த பேட்டியில், யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஏற்கனவே மூன்றாம் உலகப் போரைத் தொடங்கிவிட்டதாக நம்புவதாகவும், ரஷ்யாவை பின்வாங்கச் செய்வதற்கு தீவிர ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத்தைப் பிரயோகிப்பதே ஒரே தீர்வு என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,இரான் உடனான அமெரிக்க - இஸ்ரேல் போர் தொடர்ந்து பிராந்தியத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், லெபனானில் பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஆபத்து என்ன? அப்படியென்றால், மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதற்கான தற்போதைய ஆபத்து என்ன? "இந்த மோதலைத் தீவிரப்படுத்தக்கூடிய நாடு அநேகமாக இரான் அல்லது ஏமனில் உள்ள ஹூத்திகள் போன்ற இரானின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்" என மேக்மில்லன் கூறுகிறார். கப்பல் போக்குவரத்துப் பாதைகளைக் குறிவைப்பது அல்லது ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது போன்ற இரானின் சாத்தியமான நடவடிக்கைகள் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும். இது எரிசக்தி விநியோகத்தைப் பாதிப்பதோடு வல்லரசு நாடுகளையும் உள்ளே இழுக்கக்கூடும் என்று மேக்மில்லன் குறிப்பிடுகிறார். மேலும், அமெரிக்காவின் தலையீடும் இதில் உள்ள ஆபத்தை அதிகரிக்கிறது. மற்ற நாடுகள் நேரடியாக இதில் ஈடுபடாவிட்டாலும், பொருளாதார ரீதியாகவோ அல்லது உத்தி ரீதியாகவோ பாதிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் மற்றொரு ஆபத்தும் இருப்பதாக அவர் கூறுகிறார். அதாவது ஒரு பிராந்தியத்தில் நடக்கும் மோதல்கள் மற்ற இடங்களில் வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்பது அவரது கூற்று. உதாரணமாக, மேற்கத்திய நாடுகள் திசைதிருப்பப்பட்டிருப்பதை தைவான் மீது நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக சீனா கருதலாம் அல்லது உலகின் கவனம் வேறு எங்கோ இருக்கும்போது ரஷ்யா யுக்ரேனில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்கிறார் அவர். "ஒரு பிராந்தியத்திற்கு வெளியே மோதல் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் எப்போதும் உள்ளன. ஏனெனில் தங்களைத் தடுக்கக்கூடியவர்கள் இந்த மோதலில் ஈடுபடுவதைப் பார்த்து, பிராந்தியத்திற்கு வெளியே உள்ள மற்றவர்கள் இதில் தங்களுக்குரிய வாய்ப்புகளைக் காண்பார்கள்" என்கிறார் மேக்மில்லன். எந்தெந்த நாடுகள் இழுக்கப்படும் வாய்ப்பு உள்ளது? பேராசிரியர் மயோலோ இந்த மோதல் பிராந்திய அளவிலேயே இருக்கும் என்றும், செளதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளை இது உள்ளே இழுக்கும் என்றும் நம்புகிறார். ஆனால் சீனா மற்றும் ரஷ்யா இந்தப் போருக்குள் இழுக்கப்படும் என்று அவர் கருதவில்லை. "உலகில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதற்காகச் சீனா உடனடியாகத் தைவானை தாக்கும் என்பது முற்றிலும் அர்த்தமற்றது. ஆனால் நாம் உலகப் போரைப் பற்றி, அதாவது மூன்றாம் உலகப் போரைப் பற்றிப் பேசுகிறோம் என்றால், சீனாவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ இதில் நேரடியாக ஈடுபட எந்த விருப்பமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஐரோப்பாவிற்கு அதற்கான நாட்டம் இன்னும் குறைவாகவே இருக்கும்" என்றும் பேராசிரியர் மயோலோ குறிப்பிட்டார். சீனாவிடம் வேறு திட்டங்கள் இருப்பதாக அவர் நம்புகிறார். "உங்கள் எதிரி ஒரு மிகப்பெரிய உத்தி தவறைச் செய்யும்போது, அவர்களைத் தடுக்காமல் அப்படியே அதைத் தொடர விடுவீர்கள்" என்கிறார் அவர். எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்பட்டாலும், சீனாவுக்கு அது சிறிய இழப்பு மட்டுமே என்று கூறிய மயோலோ, "அமெரிக்கா மத்திய கிழக்கில் மூழ்கிக் கிடப்பது சீனாவிற்கு மிகப்பெரிய நலன்களை வழங்கக்கூடும்'' என்கிறார் அவர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரஷ்யா இரானுடனான தனது கூட்டாண்மை பற்றிப் பெருமையாகப் பேசினாலும், இரானுக்கு ராணுவ உதவி வழங்க வேண்டிய கட்டாயம் ரஷ்யாவிற்கு இல்லை. தலைவர்களின் பங்கு பெருமை, கௌரவ உணர்வு அல்லது எதிரிகள் மீதான பயம் ஆகியவற்றால் போர்கள் தூண்டப்படுவதை வரலாறு வெளிப்படுத்தியுள்ளது என்று மேக்மில்லன் கூறுகிறார். தலைவர்கள் நிகழ்வுகளின் போக்கை மாற்றியமைக்க முடியும் என்பதையும் வரலாறு காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். "முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸ் பிரதமர் (ஜார்ஜஸ்) க்ளெமென்சோ, போர் தொடுப்பதை விட அமைதியை ஏற்படுத்துவது கடினமானது" என்று கூறினார். மேக்மில்லனின் கூற்றுப்படி, மக்களால் பெரிய இழப்புகளோ அல்லது தியாகங்களோ செய்யப்படும்போது, தலைவர்கள் "போரை நிறுத்தாமல் தொடர்ந்து, வெற்றி பெற வேண்டும்" என்று முடிவு செய்கிறார்கள் என்ற வாதம் பெரும்பாலும் முன்வைக்கப்படுகிறது. தலைவர்களுக்குப் பெருமை என்பது ஒரு காரணியாக இருக்கலாம் என்று கூறும் அவர், புதினை ஒரு உதாரணமாகக் காட்டுகிறார். "யுக்ரேனை ஆக்கிரமிக்க முயன்றதன் மூலம் அவர் ஒரு பெரிய தவறைச் செய்துள்ளார் என்பது தெளிவாகிறது" என்று குறிப்பிட்டார். பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, ரஷ்யா ஒட்டுமொத்தமாக 12.5 லட்சம் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளது. இது குறைவான மதிப்பீடாகவே கருதப்படுகிறது. தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அல்லது பின்வாங்க மறுக்கும் தலைவர்கள் மோதல்களை நீடிக்கச் செய்யவும் ஆழப்படுத்தவும் முயல்வார்கள் என்று மேக்மில்லன் கூறுகிறார். கடந்த காலத்தில், ஹிட்லர் போன்றவர்கள் தோல்வி தவிர்க்க முடியாதது என்று தெரிந்தும் கூட, சித்தாந்தம், பெருமை அல்லது மாயையினால் தூண்டப்பட்டுத் தொடர்ந்து போரிட்டனர் என்று அவர் குறிப்பிடுகிறார். இத்தகைய முடிவுகள் சிறிய அளவிலான மோதல்களைப் பேரழிவை ஏற்படுத்தும் போர்களாக விரிவுபடுத்தக்கூடும். பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,இரான் உடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் தொடங்கி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிகள் பதற்றத்தைக் குறைக்க ராஜீய நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்று மேக்மில்லன் கூறுகிறார். "நீங்கள் எதிர்த் தரப்பைப் பற்றி அறிந்திருக்க வேண்டும்... மேலும் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார். "இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் போர் மூலமாக தாங்கள் எட்டக்கூடிய இலக்குகளை அடைந்துவிட்டதை உணர வேண்டும்.'' என்கிறார் மயோலோ மேலும் போர் தொடர்வது என்பது, யாருக்கும் அவர்கள் "விரும்பிய பலனைத் தராது" என்று அவர் விளக்குகிறார். "தடைகளை நீக்குவது, பாதுகாப்பு ஒப்பந்தம், உலக அரசியலில் இரானின் இடம் குறித்த புரிதல்கள் போன்றவற்றில் சில உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும்'' மத்தியஸ்தம் மூலம் மட்டுமே சம்பந்தப்பட்ட சக்திகள் போரை நிறுத்தி பின்னர் அதை ஒரு நிரந்தர ஏற்பாடாக மாற்ற முடியும் என்று மயோலோ கூறுகிறார். இந்த செய்தி பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் பாட்காஸ்ட்டான 'தி குளோபல் ஸ்டோரி'-யின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது. தொகுப்பு: அலெக்ஸாண்ட்ரா ஃபுஷே - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy3r9j9z1jo
  10. கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்; பந்தவீச்சிலும் களத்தடுப்பிலும் ஏஷான் மாலிங்க அபாரம் Published By: Vishnu 03 Apr, 2026 | 02:56 AM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை நையப்புடைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 65 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது. ஹென்றிச் க்ளாசன், ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், ஜெய்தேவ் உனத்காட், ஏஷான் மாலிங்க ஆகியோரின் துல்லியமான பந்தவீச்சுகள், நிட்டிஷ் குமார் ரெட்டியின் சகலதுறை ஆட்டம் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தன. அத்துடன் மிகவும் முக்கிய வேளைகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கெமரன் க்றீன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி ஆகிய இருவரும் ரன் அவுட் ஆனதும் சன்ரைஸ் ஹைதராபாத்துக்கு சாதகமான முடிவு கிடைக்க உதவியது. இந்த இரண்டு ரன் அவுட்களிலும் இலங்கை வீரர் ஏஷான் மாலிங்க முக்கிய பங்காற்றினார்.இலங்கை செய்திகள் கெமரன் க்றீனை நேரடியாக ரன் அவுட் செய்த மாலிங்க, ரகுவன்ஷியின் ரன் அவுட்டிலும் பங்களிப்பு செய்தார். அத்துடன அஜின்கியா ரஹானேயின் சற்று சிரமமான பிடியையும் மாலிங்க எடுத்தார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 226 ஓட்டங்களைக் குவித்தது. இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் ஓர் அணி பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். நான்கு வீரர்கள் 35க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்றது. ட்ரவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி வெறும் 34 பந்துகளில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ட்ரவிஸ் ஹெட் 21 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 46 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 4 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 48 ஓட்டங்களையும் விளாசினர். அணித் தலைவர் இஷான் கிஷான் சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். அனிக்கெட் வர்மா ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். (118 - 4 விக்.) இந் நிலையில் ஹென்றிக் க்ளாசன், நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஹென்றிச் க்ளாசன் 35 பந்துகளில் 52 ஓட்டங்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 24 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ப்ளெசிங் முஸாரபானி 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வைபவ் அரோரா 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட கடினமான 227 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பின் அலன் 7 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களைப் பெற்று முதலாவதாக ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. கெமரன் க்றீன் (2), அணித் தலைவர் அஜின்கியா ரஹானே (8) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ரன் அவுட் ஆனதும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆட்டம் கண்டது. ஆங்ரிஷ் ரகுவன்ஷி, ரின்கு சிங் ஆகிய இருவரும் சிறந்த இணைப்பாட்டத்தை ஏற்படுத்த முயற்சித்த போதிலும் அவர்கள் இருவரும் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரகுவன்ஷி ஆட்டம் இழந்தார். ரகுவன்ஷி 29 பந்துகளில் 6 பவுண்டறிகள். 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களையும் ரின்கு சிங் 25 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் சுனில் நரேன் 4 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 12 ஓட்டங்களைப் பெற்றார். அவரது விக்கெட்டை ஏஷான் மாலிங்க வீழ்த்தினார். பந்துவீச்சில் ஜெய்தேவ் உனத்காட் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன்: நிட்டிஷ் குமார் ரெட்டி https://www.virakesari.lk/article/242604
  11. புனிதன் joined the community
  12. அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 11:15 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் ராண்டி ஜோர்ஜை வியாழக்கிழமை பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிரடியாகப் பதவியிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் இராணுவத்தின் பல சிரேஷ்ட அதிகாரிகளை ஒரே நேரத்தில் பதவி நீக்கியுள்ளார். இராணுவத்தின் 41 ஆவது படைத் தளபதியான ராண்டி ஜோர்ஜ், இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருக்கும் நிலையிலேயே உடனடியாகப் பணி ஓய்வு பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். இராணுவத்தின் பயிற்சி மற்றும் உருமாற்றக் கட்டளையகத்தின் தலைவர் ஜெனரல் டேவிட் ஹோட்னே மற்றும் இராணுவ மதகுருமார் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் வில்லியம் கிரீன் ஆகியோரையும் ஹெக்ஸெத் பதவி நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானுடன் போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழலில், இராணுவத்தின் மிக உயர்ந்த தளபதியைப் பதவியிலிருந்து நீக்குவது அமெரிக்க வரலாற்றில் ஒரு அரிய மற்றும் வழக்கத்திற்கு மாறான செயலாகும். இந்த பதவி நீக்கங்களுக்கான உத்தியோகபூர்வக் காரணத்தை பென்டகன் வெளியிடவில்லை. ராண்டி ஜோர்ஜிற்குப் பதிலாக, ஜெனரல் கிறிஸ்டோபர் லானீவ் தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட் ஹெக்செத் பதவியேற்றது முதல் இராணுவத்தில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்: இந்த மாற்றங்கள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராகத் தனது இராணுவ பலத்தை அதிகரித்து வரும் வேளையில் நிகழ்கின்றன. https://www.virakesari.lk/article/242629
  13. யாழ் விரைவுரையாளர் கொலை வழக்கு - நீதிமன்றின் உத்தரவு Apr 3, 2026 - 09:56 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்தமருத்துவ துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டார். இந் நிலையில் அவரது சடலம் தனங்கிளப்பு பகுதியில் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சந்தேகநபர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இருதரப்பு சட்டத்தரணிகளின் நீண்ட வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் இரண்டாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மகள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கான மனநிலையில் உள்ளாரா என்பதை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் சட்ட வைத்திய அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார். இந்த விடயத்தில் ஊடகங்களின் செய்தி அறிக்கையிடல் பொறுப்பு வாய்ந்ததாக அமைய வேண்டும் எனவும் நீதவான் அறிவுறுத்தியுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnieh1hv0009356pjbggkdzx
  14. அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவி நீக்கப்பட்டார் Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 09:39 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்காவின் சட்டமா அதிபர் பாம் பொண்டி குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்ப்பின் நீண்டகால விசுவாசியாகக் கருதப்பட்ட பொண்டியின் இந்த வெளியேற்றம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம் பொண்டியின் பதவிக்காலம் முழுவதும் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களைக் கையாண்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. எப்ஸ்டீனுடன் தொடர்புடைய நபர்களின் பட்டியலை வெளியிடுவதாக உறுதியளித்த போதிலும், பின்னர் அத்தகைய பட்டியல் எதுவும் இல்லை என நீதித்துறை அறிவித்தது. எப்ஸ்டீன் தொடர்பான மில்லியன் கணக்கான கோப்புகளை வெளியிடுமாறு ட்ரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம், இறுதியில் பொண்டிக்கு எதிரான அதிருப்தியாக மாறியது. கடந்த பெப்ரவரி மாதம் பாராளுமன்றக் குழுவின் விசாரணையின் போது, ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஒருவரை "தோற்றுப்போனவர்" என பொண்டி விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாம் பொண்டிக்கு பதிலாக அவரது முன்னாள் துணை அதிகாரியான டாட் பிளான்ச் புதிய தலைமை சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். தான் ஒரு தனியார் நிறுவனத்தில் இணையவுள்ளதாகவும், அங்கிருந்தபடியே ஜனாதிபதி ட்ரம்ப்பிற்காக தொடர்ந்து போராடப்போவதாகவும் பொண்டி தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் உள்நாட்டு பாதுகாப்புத் துறைத் தலைவர் கிறிஸ்டி நோம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில வாரங்களிலேயே நீக்கப்படும் இரண்டாவது உயர் அதிகாரி பாம் பொண்டி ஆவார். வியாழக்கிழமை காலை வரை பொண்டியைப் புகழ்ந்து பேசிய ட்ரம்ப், திடீரென இந்த மாற்றத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242618
  15. மார்ச் 30 இல் தனது பிறந்தநாளை கொண்டாடிய @யாயினி அக்காவிற்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள், வளத்துடன் வாழ்க.
  16. பெரிய வௌ்ளி தினம் இன்று! Apr 3, 2026 - 06:45 AM இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் அவர் சிலுவையில் அறையப்படதையும் நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி இன்றாகும். கிறித்தவர்களின் வழிபாட்டில் முக்கிய நாளாக இந்த பெரிய வெள்ளி பார்க்கப்படுகின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்படும் நிகழ்வாகும். மனிதர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக இறைவனின் திருக்குமரர் மனித குலத்தின் மீட்பராக பூலோகம் வருகை தந்து, சிலுவையில் அறைந்து மனித குல இரட்சண்யத்திற்காக செய்த தியாகத்தை கிறிஸ்தவ அடியார்கள் இன்றைய நாளில் நினைவுகூருவார்கள். கத்தோலிக்க தேவாலயங்களில் இது தொடர்பான மூன்று மணிநேர விசேட ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. https://adaderanatamil.lk/news/cmni7p2kv0002356pco1szip0
  17. புவியில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டிமிஸ் II Apr 3, 2026 - 05:22 AM புவியின் சுற்றுப்பாதையில் இருந்து வெற்றிகரமாக வௌியேறிய ஆர்ட்டெமிஸ் II தற்போது நிலவின் மேற்பரப்பை நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்வெளி வீரர்கள், நிலவைச் சுற்றி வருவதற்கான தங்களின் 10 நாள் பயணத்தின் இரண்டாம் நாளில் கால்பதித்துள்ளனர். இது மனிதகுலம் இதுவரை விண்வெளியில் சென்றிராத மிக நீண்ட தூரப் பயணமாக கருதப்படுகின்றது. நேற்று (2) ஏவப்பட்டதில் இருந்து 23 மணிநேரத்திற்கும் மேலாக, விண்கலம் பூமியைச் சுற்றி வந்துள்ளது. இன்றைய தினம் 'ட்ரான்ஸ்-லூனார் இன்ஜெக்ஷன்' (trans-lunar injection burn) எனப்படும் முக்கியமான கட்டத்திற்கான இறுதி முடிவை விண்வெளி வீரர்கள் எதிர்நோக்கியிருந்தனர். இது பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து விண்கலத்தை வெளியேற்றி, நிலவை நோக்கிய பாதையில் செலுத்த உதவும் செயன்முறையாகும். இந்த நிகழ்வு அதிகாலை 5.19 மணியளவில் இடம்பெற்ற நிலையில் நாசாவின் அனுமதியுடன் புவி சுற்றுப்பாதையில் இருந்து குறித்த விண்கலம் வெற்றிகரமாக வௌியேறியது. விண்வெளி வீரர்கள் எதிர்வரும் ஏப்ரல் 6 திங்கட்கிழமை அன்று நிலவின் மறுபக்கத்தை சென்றடைவார்கள். 50 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மனிதர்கள் மீண்டும் நிலவை நோக்கிப் பயணிக்கின்றனர். அவர்கள் நிலவில் தரை இறங்கப் போவதில்லை என்றாலும், இதற்கு முன்பு மனிதர்கள் பார்த்திராத ஒரு காட்சியை அங்கிருந்து காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலவின் மேற்பரப்பை சுற்றிவருவதற்காக ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலம் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmni4pfsc0000356p7dn50pgz
  18. எழுச்சியான பாடல் ...அருமை தொடருங்கள்
  19. பாடலும் இசையும் மட்டும் அல்ல, ஒவ்வொரு நுணுக்கத்திலும் ஒரு அழகும், ஒவ்வொரு ஒலியிலும் ஒரு உயிரும் தெரிகிறது. முழுக்க முழுக்க மனதை கவரும் அளவுக்கு நன்றாக உள்ளது.
  20. இந்தியாவில்…. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி… போன்ற பலரும் இரட்டை தொகுதிகளில் போட்டியிடுபவர்களே. அதிலும் இந்த காந்திக்கள்…. வடக்கில் ஒரு தொகுதியும், தெற்கில் ஒரு தொகுதியும் என்று அகலக் கால் வைத்திருப்பார்கள். 😂
  21. Yesterday
  22. உண்மைதான்… இத்தாலி கலந்து கொள்ளும் போது, அந்த விளையாட்டுக்களில் விறுவிறுப்புக்கும், ரசிகர்களின் கொண்டாட்டமும், ஆரவாரமும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.
  23. ஈழவிடுதலை மட்டுமல்லாமல் தன்னிலை பொருளாதாரத்தையும் செய்து காட்டிய விடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியாக தடை செய்தது அமெரிக்கா என்ற தகவலையும் உங்களுக்கு இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
  24. அருமை. நல்ல எழுத்துக்கள். இன்றைய காலம். அதனோடு சேர்ந்திருக்க அருமையான இணைப்பு.
  25. நல்ல விடயம். இதே போல் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை புறம் தள்ள வேண்டும். அவர்களை புறம் தள்ளி வைத்தால் இந்த உலகு அமைதிப்படும்.பல அமைப்புகள் உயிரூட்டப்படும். இன்றைய உலகின் நம்பர் வன் குழப்பவாதி என்றால் அது அமெரிக்கா மட்டுமே.
  26. 2030ல் சீனா ஏதோ பெரிய திட்டம்/ நடவடிக்கை,ஆராய்ச்சி சந்திரனில் செய்யவிருப்பதாக வாசித்த ஞாபகம். அதற்கு முதல் நாசா காணி பிடிக்கப்போகின்றது போல் இருக்கின்றது.🤣
  27. மிகவும் கவலையான விடயம் மட்டுமல்ல பொருளாதார ரீதியிலும் கவலையான விடயம். உதைபந்தாட்டத்தில் இத்தாலி முதன்மை வகிக்கும் நாடு. இத்தாலி மக்கள் உதைபந்தாட்ட ரசிகர்கள் மட்டுமல்ல அதில் ஊறிப்போயுள்ள சமூகத்தினர். உலக கோப்பை என்றால் பிரேசில்.ஆர்ஜென்ரீனா,பிரான்ஸ்,இத்தாலி,ஜேர்மனி,இங்கிலாந்து,ஸ்பானியா,நெதர்லாந்து போன்ற நாடுகள் முக்கியம் இணைந்திருக்க வேண்டும்.
  28. ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே அரசியல் மேடைகளில் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சீமான். அது திருமாளவனின் அரசியல் மேடை என நினைக்கின்றேன்.சீமான் அன்றிருந்த கொள்கையில் இன்றும் நிலை மாறவில்லை. அது அவர் பிரச்சனை. ஈழ அரசியலுக்காக நான் சீமானை ஆதரிப்பதில்லை.ஏனென்றால் அரசியல் என்பது காலத்திற்கு காலம் மாறும். அதில் யாருமே பந்தயம் கட்ட முடியாது. சீமான் தன் அரசியல் இலாபத்திற்காக ஈழத்தை கையில் எடுத்தார் என்றால்.... பழ. நெடுமாறன் என்ன மாதிரி? அவரின் இன்றைய நிலைகள் என்ன? எப்படி?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.