Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இப்ப வரும் செய்திகளில் உண்மை எது பொய் எது என்று கண்டு பிடிப்பதே சிரமம் . ...... ஆனால் செய்தி சொல்பவனுக்கு அது சொத்து சேர்க்கும் ஒரு தொழில் அவ்வளவுதான் .........! 😀 நன்றி அல்வாயன் ..........!
  3. புலிகள் சோசலிச கொள்கை என்று ஏனைய இயக்கங்கள் போல பகிரங்கமாக கூவிகொண்டு திரியவில்லை...அமெரிக்கர்களை கடத்துதல்,சிவப்பு தொப்பி நட்சத்திரம்,அரிவாள் என பிரச்சாரம் செய்யவில்லை... எங்களை விட அமெரிக்கா தெளிவாக உள்ளது ....சிறிலங்கா என்ற நாடு தனக்கு தேவையானது என..ஈரானின் கப்பல் சிறிலங்காவில் வைத்து நீர்மூழ்கியால் தாக்கப்பட்டமையும் ஒர் செய்தியை சொல்லி செல்கிறது. நண்பன் என்றால் அமைதியாக் இரு இல்லையென்றால் ...
  4. ஆச்சிக்கு ஒரு ஆப்பிள் போன் வாங்கிக் குடுத்து விடுங்கோ ....... கொட்டப் பெட்டிக்குள் வைத்துக் கொண்டு திரியட்டும் ......! 😂 அருமையான கவிதை அல்வாயன் ........!
  5. https://tamil.oneindia.com/news/chennai/nda-seat-pact-sealed-27-seats-to-bjp-18-to-pmk-11-to-ammk-in-aiadmk-alliance-783769.htmlபாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! By Vignesh Selvaraj Updated: Monday, March 23, 2026, 15:43 [IST] 3Subscribe to Oneindia Tamil சென்னை: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக 27 தொகுதிகளில் போட்டியிடும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டிடிவி தினகரனின் அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாமகவுக்கு என்.டி.ஏ கூட்டணியில் 18 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. AD தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள சூழலில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தச் சூழலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? இந்நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வருகை தந்தார். சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்களோடு வந்தார் பியூஷ் கோயல். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வருகை தந்தனர். இதையடுத்து, என்.டி.ஏ கூட்டணியில் ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாஜகவுக்கு - 27 தொகுதிகள், அமமுகவுக்கு -11 தொகுதிகள், பாமகவுக்கு -18 தொகுதிகள், ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். AD கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. Read more at: https://tamil.oneindia.com/news/chennai/nda-seat-pact-sealed-27-seats-to-bjp-18-to-pmk-11-to-ammk-in-aiadmk-alliance-783769.htmlஎடப்பாடி கூலாக பாஜகவை டீல் செய்துள்ளார்.தொகுதிப்பங்கீடு விடயத்தில் எடப்பாடியின் கையே மேலோங்கி இருந்தது.காங்கிரசின் விஜை கூட்டணி நாடகத்துக்கு பயந்து .4 வீத தேதிமுகவுக்கு அளவுக்கு மீறிய விட்டுக்கொடுப்புக்களைச் செய்து இவ்வளவு காலமும் விசுவாசமாக இருந்த கூட்டணிக்கட்சிகளுக்கு அல்வா கொடுத்த திமுக இப்பொழுது முழிக்கிறது. திருமா இரட்டை இலக்கத்துக்கு குறைவாக ஒத்துக்கொள்ளக்கூடாது என்று கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திருமாவுக்கு சிக்கல்.அதிக கட்சிகளின் கூட்டணிகளைக் கொண்ட திமுகவின்பலமே அதன்பலவீனமாகவும் இருக்கிறது.
  6. யார் எக்கில் புடுங்கியது என்று எனக்கு நீங்கள் எழுதிய முதலாவது பதிலில் பார்க்கலாம் 🫣
  7. Today
  8. இந்த இரணடு சாரிகளின் தலைகள் கூட்டாக கட்டிப்பிடித்து வியாபாரம் பண்ணுவார்கள் அவர்களின் தொண்டர்கள் படும் பாடு பெரியபாடு
  9. எனக்கு எமது வரலாற்று பாடம் ஒரு விடயத்தை நினைவுபடுத்துகின்றது. விடுதலை புலிகள் அமைப்பு மாவிலாறு நீர்த்தேக்கத்து நீரை திறந்துவிடாது தடைசெய்தமையும் அதைத்தொடர்ந்து இராணுவ நகர்வுகள் நடைபெற்று முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு போர் முற்றுப்பெற்றது. ஹோர்மூஸை ஈரான் முடக்குவது போரில் ஈரானை முழுமையான தோல்விக்கு இட்டுச்செல்லும் என ஊகிக்கின்றேன்.
  10. அவரைத் தெரிவு செய்த மக்களில் ஒரு சிறு பகுதியினருக்கு தற்போதைய நிலைமை ஆப்பு: யாருக்கு? உரம், எரிபொருள் விலை என்பவற்றில் தங்கியிருக்கும் விவசாயிகள், பார ஊர்தி உரிமையாளர்கள்/ஓட்டுனர்கள் ஆகியோர் பாதிக்கப் படும் தரப்பினர் (ஆனால், பாதிக்கப் பட்டாலும் வரவு செலவுக் கணக்குப் பார்க்கத் தள்ளாடும் முட்டாள்கள் இவர்கள்!) ஆனால், இன்னொரு பகுதியினருக்கு கொள்ளை இலாபம்: எண்ணை/எரிவாயு முதலாளிகள், ஆயுத , பாதுகாப்பு ஒப்பந்தக் காரர்கள் - இவர்களுக்கு கணக்குப் பார்க்க தனியாக வெளிக் கம்பனிகள் இருக்கும், எனவே புத்திசாலிகள். இடையில் மாட்டுப் பட்ட, ட்ரம்ப் கும்பலுக்கு வாக்களிக்காத என்னைப் போன்றவர்களுக்குத் தான் அநீதி அதிகம்! ட்ரம்புக்கு முரட்டு முட்டுக் கொடுக்கும் என் தமிழ் அமெரிக்க நண்பர்கள், தற்போது எந்தக் கம்பனியின் பங்கை விற்கலாம், வாங்கலாம் என்று மட்டும் தான் பேசிக் கொள்கிறார்கள்! ஏனெனில், வரும் இலாபம், இலாபத்தை வைத்து பாலி, டொமினிக்கன் குடியரசு, மெக்சிகோ என்று சுற்றுலா-இப்படித் தான் அவர்கள் வாழ்க்கை இலக்குகள் இருக்கின்றன. என்ன ஒரு "ஆழமான, அர்த்தமுள்ள வாழ்க்கை" அவர்களது என்று ஆச்சரியப் படுகிறேன் நான்😂!
  11. அமெரிக்காவின் ஜனாதிபதி பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்.அது தான் ஒரு வல்லரசு நாட்டின் அதிபருக்கு வேண்டியது. ஆனால் தம்பர் வாய்க்கு வந்தபடி முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவருகிறார்.அமெரிக்காவின் பலவீனத்தை தம்பர் போட்டு உடைத்து விட்டார்.இது அவரைத் தெரிவு செய்த மக்களுக்குத் தேவை.
  12. யாழ் களத்தில் சிலர் (நீங்கள் அல்ல) - x ஐ பற்றி விவாதித்து தம் கருத்து தோற்கும் போது திடீரென y ஐ பற்றி கேள்வி கேட்டு விட்டு எஸ் ஆகுவார்கள் அல்லவா? தம்பரும் அதுபோலவே, அணுகுண்டை அழிக்கிறேன், மிசைல் வல்லமையை அழிக்கிறேன், என்னிடம் கேட்டு அடுத்த சுப்ரீம் லீடரை நியமிக்க வேண்டும் என போய்…. இப்போ சண்டைக்கு முன் சும்மா திறந்திருந்த ஹோர்மூஸ் நீரிணையை திறப்பேன் என்ற அளவில் வந்து நிற்கிறார்😂. அப்படியே யாழ்கள தம்பர்களை கண் முன் கொண்டு வருகிறார்.
  13. தம்பர் ஆவது வான் வழியில் வித்தை காட்டுவார்… செத்த கிளியை நம்பினால் பின் சல்மானும், சேய்க்கும் மாஸ்கோவில்தான் இறுதி நாட்களை கழிக்க வேண்டி வரும்😂. ரஸ்யாவை நம்புவதற்கு உக்ரேனை நம்பலாம். வளைகுடா நாடுகள் மிக விரைவாக, சீனாவிடம் சரணடைவது நல்லம். வேறு வழியில்லை. இனி அமெரிக்காவுக்கு ஈரான் பயப்படும் என நான் நம்பவில்லை. இஸ்ரேலுக்குத்தான் அமெரிக்காவை கட்டுப்படுத்துவது போல் சீனாவை கட்டுப்படுத்த முடியாது என்ற பின்னடைவு உண்டு. ஆனால் வளைகுடா நாடுகள், இஸ்ரேல், ஈரான் இடையே சமநிலையை பேண சீனாவால் மட்டுமே முடியும். விலை? பெட்டிரோ யுவான்.
  14. நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே😂. புலிகள், எண்டாலும் இயக்கம் எண்டாலும் ஒன்றேதான். நானும் நீங்களும் கூட இரெண்டு வார்த்தைகளையும் தமிழீழ விடுதலை புலிகள் என்ற இயக்கத்தை சுட்ட, முன்னர் பாவித்துள்ளோம். ஆகவே எக்கில் ஹேர் புடுங்காமல் உரையாடுவோம்😂.
  15. மக்கள் வீதிக்கு இறங்காமைக்கு நான் பின்வரும் காரணங்களை காண்கிறேன். ஜனவரியில்தான் 20,000க்கு மேலெ கொன்று குவிக்கப்பட்டார்கள். அதில் இருந்து மீண்டு மீள போராட 3 வருடம் எடுக்கும். இதுதான் ஈரானில் எப்போதும் நடப்பது. பஃலவி கூட இன்னும் வீதிக்கு இறங்க வேண்டாம் என்றே சொன்னார் யுத்தகால நடைமுறைகள் போராட்டம் இன்னும் மிருக தனமாக அடக்க வழிகோலும். இஸ்ரேலை நம்பிபாலும், தம்பரை நம்பி வீதியில் இறங்க அவர்கள் தயாரில்லை. ஏன் என்றால் ஆரம்பம் முதலே தம்பர் “வெனிசுவேலா” தீர்வைத்தான் விரும்பினார். பஃலவியை கூட அவர் சரிவரார் என கூறி ஒதுக்கினார் தம்பர். நல்லகாலம் தம்பரை நம்பி இறங்கி இருந்தால் மக்கள் அநியாயமாக பழிவாங்க பட்டு இருப்பார்கள். பிகு ஆனால் ஈரானிய மக்களை தாண்டி, ஈரான் இப்படி வெல்வது ஷியா அடிப்படைவாதிகள் இல்லாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் நல்ல செய்தி அல்ல. அரபு நாட்டினர் மட்டும் அல்ல, சதாமும், அசாத்தும், கடாபியும், நசாரும் கூட இவர்களில் இருந்து தள்ளியே நின்றார்கள். தனியே இவர்கள் ஷியா என்பது மட்டுமே காரணம் அல்ல.
  16. சகோதரி அருமையாக எழுதுகிறீர்கள் ....... கோட் மாற்றுவதுபோல் கோட்டல்களை மாற்றுகிறீர்கள் . ....... சூப்பர் தொடர்ந்து எழுதுங்கோ ........! 😂
  17. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல . ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பெருமளவில் போரடிக் கொண்டிருந்த போது தேவையில்லாமல் அமெரிக்கா இஸ்ரேல் போரில் இறங்கி ஈரானியர்களை ஒற்றுமையாக்கி விட்டது.
  18. அவரவர் கண் பார்வை. எனவே என் பார்வையில் இயக்கம். உங்கள் பார்வையில் புலி. என் பார்வையில் நல்லவை மட்டுமே படும். தொடரும்....
  19. அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவை கைவிட்டு ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,மார்ச் 12 அன்று முஹர்ரக்கில் உள்ள எரிபொருள் கிடங்குகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது. அதே நாளில் பஹ்ரைன், சௌதி அரேபியா மற்றும் ஓமனில் உள்ள எரிபொருள் நிலையங்களும் தாக்கப்பட்டன. கட்டுரை தகவல் பிபிசி மானிட்டரிங் 23 மார்ச் 2026, 02:10 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போர் ஒரு விரிவான பிராந்திய மோதலாக உருவெடுத்துள்ளது. இரானிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் வளைகுடாவின் உட்பகுதி வரை சென்றடைகின்றன. அவை அமெரிக்கத் தளங்களைத் தாண்டிப் பல வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள், எரிசக்தி தளங்கள், துறைமுகங்கள் மற்றும் பொதுமக்களின் இடங்களைக் குறிவைக்கின்றன. இரானிய தாக்குதல்களை அரபு மற்றும் மேற்கத்திய தலைவர்கள் பரவலாகக் கண்டித்துள்ளனர். அதேநேரத்தில், பிராந்தியத்தின் முக்கிய நாடுகள் அதிகரித்து வரும் நெருக்கடியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் வெளியுறவு அமைச்சர்களும் ஓர் அவசரக் கூட்டத்தைக் கூட்டினர். அடுத்தகட்டத் தாக்குதல்கள் 'கூட்டுத் தற்காப்பு நடவடிக்கைகளை' தூண்டக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பிராந்தியத்தை ஒரு விரிவான போருக்குள் தள்ளுவதைத் தடுக்க பதற்றத்தைக் குறைக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். பஹ்ரைனைச் சேர்ந்த டெராசாட் மையம், வளைகுடா நாடுகள் இரான் நாட்டுக்கு எதிராக எந்தவொரு விரோத நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றாலும் இரானிய தாக்குதல்களில் குடிமக்களுக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதால் அவை மோதலில் சிக்கியுள்ளன என்றும் வலியுறுத்தியது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் 51-வது விதியின் கீழ் கடுமையான சர்வதேசப் பொறுப்புக்கூறல் கோரிக்கைகள் எழுந்துள்ளன. பிராந்திய நெருக்கடி அதிகரித்து வருவதால், வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான தங்கள் பாதுகாப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனுடன் எதிர்கால உத்தி ரீதியான கூட்டணிகளின் தன்மையைக் கண்டறியவும், தங்கள் பாதுகாப்பு உத்திகளை மறுஆய்வு செய்யவும் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளின் உறவு பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images படக்குறிப்பு,சௌதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2025 நவம்பரில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார் (நவம்பர் 18, 2025 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம்) அரபு பிராந்திய மற்றும் உள்நாட்டு ஊடகங்கள் அமெரிக்கா குறித்த ஜிசிசி நாடுகளின் அணுகுமுறையை வெவ்வேறு விதமாகச் சித்தரித்துள்ளன. சில ஊடகங்கள் ராய்ட்டர்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி, வளைகுடா நாடுகள் அமெரிக்காவிடம் 'ஹோர்மூஸ் நெருக்கடி தீவிரமடைவதால் இரான் நாட்டை முழுமையாக முடக்க' அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்தன. மறுபுறம், மற்ற ஊடகங்கள் இரான் மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்காவின் முடிவை விமர்சித்தன. மேலும் 'வளைகுடா நாடுகள் குறிவைக்கப்படும் அபாயத்தை அமெரிக்கா புறக்கணிப்பதாக' குற்றம் சாட்டின. இதற்கிடையில், இந்தப் போர் அமெரிக்கப் பாதுகாப்பு குறித்த வளைகுடா நாடுகளின் பார்வையை அடிப்படை ரீதியாக மாற்றியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது வளைகுடா நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் மற்றும் அவர்களின் மூலோபாயக் கூட்டணியின் எதிர்காலத்தில் மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். மார்ச் 16 அன்று 'ஏஹாத்தா' என்ற அரபு பாட்காஸ்ட், தற்போதைய மோதலில் இருந்து வளைகுடா நாடுகள் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் குறித்து விவாதித்தது. அந்தப் பாட்காஸ்ட்டில் நிபுணர்கள் கூறுகையில், வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக் கோட்பாடு 'பலவீனமடைந்துள்ளது' என்றும், பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பு 'பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் தொடர்ச்சியான சுமையாக மாறி வருகிறது' என்றும் கூறினர். ஏனெனில், இரான் இப்போது பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கச் சொத்துகளை தாக்குதலுக்கான இலக்குகளாகக் கருதுகிறது. பதிலடி நடவடிக்கையாக அமெரிக்காவுடன் தொடர்புடைய பொருளாதார நலன்களைக் குறிவைப்பதாக இரான் எச்சரித்திருந்தாலும், டிரம்ப் நிர்வாகம் பதற்றத்தைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்ததாக நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இது 'அமெரிக்கா தங்கள் பாதுகாப்பு கவலைகளைக் கண்டுகொள்ளவில்லை என்ற வளைகுடா நாடுகளின் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது'. இதனால் வளைகுடா நாடுகளில் 'ஏமாற்றம் அல்லது துரோகம்' போன்ற ஆழமான உணர்வு ஏற்பட்டுள்ளதாக ஒரு நிபுணர் கூறினார். "அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது மற்றும் வளைகுடா நாடுகளை இரானிய பழிவாங்கலின் அபாயத்தில் தள்ளுகிறது என்ற எண்ணம் நிலவுகிறது. இருப்பினும், இந்த அதிருப்தி இருந்தபோதிலும், வளைகுடா அரசுகள் அமெரிக்கப் பாதுகாப்பு கூட்டணியை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்துள்ளன. ஆனால் இப்போது இதற்கான 'அரசியல் விலை அதிகமாக' இருக்கும்," என்று அவர் கூறினார். ரஷ்யா அல்லது சீனாவுடன் வளைகுடா நாடுகள் கைகோர்க்குமா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,தற்சமயம் வளைகுடா நாடுகள் சீனா மற்றும் ரஷ்யாவை முழுமையாகச் சார்ந்திருக்க வாய்ப்பில்லை (சித்தரிப்புப் படம்). அமெரிக்காவுடனான கூட்டணியில் வளைகுடா நாடுகளின் 'ஏமாற்றம்' குறித்துச் சில நிபுணர்கள் கூறினாலும், தற்போது ரஷ்யா அல்லது சீனாவுடன் புதிய கூட்டணிகளை உருவாக்குவது குறித்து அவர்களின் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வரவில்லை. ஏஹாத்தா பாட்காஸ்ட்டில் பேசிய நிபுணர்கள், அமெரிக்காவுக்குப் பதிலாக முழுமையாகச் சீனா அல்லது ரஷ்யாவுடன் கூட்டணி வைப்பது 'நடைமுறைக்குச் சாத்தியமற்றது' என்று கூறினர். இருப்பினும், வளைகுடா நாடுகள் புதிய கூட்டணிகளைத் தேடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் அமெரிக்காவுடனான அவர்களின் உறவுகள் இனி 'தனித்துவமானவை அல்லது உத்திரீதியானவை என்று இருக்காது. வளைகுடா நாடுகள் அமெரிக்காவுடனான கூட்டணியைத் தக்கவைத்துக்கொண்டு, பிராந்திய ராஜீய ரீதியிலான தன்னாட்சியை விரிவுபடுத்த முயலலாம். அதேநேரத்தில் மேற்கத்திய நாடுகள் அல்லாத நாடுகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான பன்முக உத்தியை அவர்கள் கடைப்பிடிக்கலாம். உதாரணமாக அமெரிக்கா-இரான் பேச்சுவார்த்தையில் கத்தார் மற்றும் ஓமன் மத்தியஸ்தப் பாத்திரத்தை வகித்துள்ளன. இது பிராந்தியத்தில் தங்கள் ராஜீய செல்வாக்கை வலுப்படுத்தும் அவர்களின் விருப்பத்தைக் காட்டுகிறது. கத்தாரின் அல் ஜசீரா முபாஷெர் தொலைக்காட்சியும் போருக்குப் பிந்தைய வளைகுடா நாடுகளின் யதார்த்தங்கள் குறித்து விவாதித்தது. அதில் ஒரு நிபுணர் கூறுகையில், வளைகுடா நாடுகள் "அமெரிக்காவுடனான கூட்டணியை முழுமையாகக் கைவிடத் தயாராக இல்லை" என்றார். ஆனால் அதற்குப் பதிலாக இந்த அனுபவம், போருக்குப் பிந்தைய திட்டமிடல் மற்றும் வெளிநாட்டுக் கூட்டணிகள் (அமெரிக்காவாக இருந்தாலும் சரி, பிற நாடுகளாக இருந்தாலும் சரி) வளைகுடா நாடுகளின் தன்னிறைவுக்கு மாற்றாக அமைய முடியாது என்ற புரிதலை வளர்க்கும் ஒரு படியாக அமைந்துள்ளது. "அமெரிக்க தளங்கள் தங்கள் சிறிய மற்றும் பாதுகாப்பற்ற நாடுகளைப் பாதுகாக்கும் என்று வளைகுடா நாடுகள் நம்பி, அமெரிக்கத் தளங்களுக்காகப் பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவழித்தன. ஆனால் அனைத்து வளைகுடா நாடுகளின் தலைநகரங்களும் விதிவிலக்கின்றி குறிவைக்கப்பட்ட போது, இந்தத் தளங்களால் எந்தப் பயனும் இல்லை என்பதைப் போர் நிரூபித்துள்ளது," என்று நிபுணர்கள் கூறினர். அவர்கள் மேலும் கூறுகையில், "இது அமெரிக்கப் பாதுகாப்பை மட்டுமல்லாமல், ஆறு ஜிசிசி நாடுகளை பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற வல்லரசுகளுடன் இணைக்கும் பரந்த ஒப்பந்த நெட்வொர்க்கையும் விரிவான மறுமதிப்பீட்டுக்கு உள்ளாக்கியுள்ளது. பிராந்தியம் தாக்கப்பட்ட நேரத்தில் இத்தகைய ஏற்பாடுகள் பலனளிக்கவில்லை," என்றனர். வளைகுடா நாடுகளின் முன்னுரிமைகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,போர்கள் இப்போது போர் விமானங்களைத் தாண்டி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வரை விரிவடைந்துள்ளன (சித்தரிப்புப் படம்) வளைகுடா நாடுகளுக்குக் கூட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தற்போது முதன்மையான முன்னுரிமையாக மாறியுள்ளது குறித்துப் பல செய்திக் கட்டுரைகள் விவாதித்துள்ளன. எழுத்தாளர் அப்துல்லா அகமது அலி, பிராந்திய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வளைகுடா சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு அழைப்பு விடுத்தார். எமிரேட்ஸ் செய்தித்தாளான அல்-கலீஜில் வெளியான கட்டுரையில், "தற்போதைய நெருக்கடி, நவீனப் போரை இனி படைகள் அல்லது விமானங்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மாறாக, ஒரு நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் சைபர் தாக்குதல்கள் போன்ற சிக்கலான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கும் திறனே முக்கியமானது," என்று அவர் எழுதியுள்ளார். வளைகுடா நாடுகள் "தற்காலிக வளைகுடா ஒருங்கிணைப்பில் இருந்து உண்மையான மற்றும் நிரந்தர ஒருங்கிணைப்பை நோக்கி நகர முடியுமா" என்ற கேள்வியை எழுத்தாளர் எழுப்பியுள்ளார். இதையே வலியுறுத்தி எழுத்தாளர் ஜாசிம் அல்-மாலிகி, வளைகுடா நாடுகளின் ராணுவ சக்திகளை ஒன்றிணைக்க வேண்டுகோள் விடுத்தார். கத்தாரின் அல்-ஷார்க் (Al-Sharq) செய்தித்தாளில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், கூட்டு வளைகுடா ராணுவப் படையை நிறுவுவது என்பது ஒவ்வொரு நாட்டின் தேசிய ராணுவங்களையும் கொண்டு ஒரு ஒருங்கிணைந்த ராணுவத்தை உருவாக்குவது அல்ல, மாறாக ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவதாகும் என குறிப்பிட்டுள்ளார். "நவீன பாதுகாப்பு சவால்கள் இனி முந்தைய காலங்களைப் போலப் பாரம்பரியமானவை அல்ல. இவற்றில் இப்போது பாலிஸ்டிக் ஏவுகணைகள், டிரோன்கள், சைபர் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்கள் அடங்கும். இவை ஒரு நாட்டின் திறன்களைத் தாண்டி கூட்டான எதிர்வினை தேவைப்படும் சவால்கள்," என்று அவர் மேலும் எழுதியுள்ளார். வளைகுடா நாடுகள் இரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா? பட மூலாதாரம்,AFP via Getty Images படக்குறிப்பு,கடந்த ஆண்டு மே மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற இரண்டாவது ஆசியான்-ஜிசிசி கூட்டத்தின் போது குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா காலித் அல்-ஹமத் அல்-சபா. மோதல் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகள் தாங்கள் தொடங்காத ஒரு போருக்குள் இழுக்கப்படும் பயத்திற்கும், தங்கள் தற்காப்பு உரிமையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியத்திற்கும் இடையில் சிக்கியுள்ளன. வளைகுடா நாடுகளின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று 'இரான் உடனான நேரடிப் போருக்குள் இழுக்கப்படுவதைத் தவிர்ப்பது' என்பதாகும். கடந்த சில வாரங்களாக, பல நிபுணர்கள் மற்றும் வளைகுடா அதிகாரிகள், வளைகுடா நாடுகள் "போரின் ஒரு பகுதி அல்ல" என்பதை வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இரான் எரிசக்தித் தளங்களையும் தனது இலக்குகளில் சேர்த்தவுடன், இரானிய தாக்குதல்களுக்கு ராணுவ நடவடிக்கை மூலம் பதிலடி கொடுக்கும் உரிமையை வளைகுடா நாடுகள் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. மார்ச் 19 அன்று செளதி அரேபிய வெளியுறவு அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான், தனது நாடு மற்றும் பிற வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்வதற்கு ஒரு எல்லை உண்டு என்று இரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். செளதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகளிடம் 'மிக முக்கியமான திறன்களும் ஆற்றலும்' உள்ளன என்றும், அவற்றை அவர்கள் 'விருப்பப்படி' பயன்படுத்தலாம் என்றும் அவர் எச்சரித்தார். இரானுக்கு எதிரான தாக்குதலில் வளைகுடா நாடுகளின் சாத்தியமான பங்களிப்புக்கான பல காரணங்களை அல் ஜசீரா பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சர்வதேசச் சட்டத்தின் கீழ் வளைகுடா நாடுகளின் தற்காப்பு உரிமை, அமெரிக்காவுடன் வலுவான பாதுகாப்பு கூட்டணியின் சாத்தியக்கூறு மற்றும் வளைகுடா நலன்களுக்கு ஏற்ப ஒரு புதிய இரானிய அரசு அமைவதற்கு உதவும் திறன் ஆகியவை அடங்கும். இருப்பினும், வளைகுடா நாடுகள் இரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிரான பிற வாதங்களும் இருப்பதாக அந்தச் சேனல் கூறியுள்ளது. தாக்குதலில் ஈடுபடுவது, குறிப்பாக இஸ்ரேலுடன் நிற்பது, வளைகுடா நாடுகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற கவலை இதில் அடங்கும். இது அவர்கள் 'இஸ்ரேலின் நலன்களுடன் நிற்கிறார்கள்' என்ற வாதத்தை வலுப்படுத்தும். போரில் ஈடுபடுவது பிராந்தியத்தின் பொருளாதார முன்னுரிமைகளுக்கு எந்தப் பலனையும் தராது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. வளைகுடா நாடுகள் தாக்குதலில் ஈடுபட்டால், அமெரிக்கா-இஸ்ரேல் ஆகியவை இரானுடனான மோதலில் இருந்து பின்வாங்கக்கூடும் என்றும், இதன் மூலம் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக் கொள்வார்கள், பின்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் 'வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு' வந்த 'ரட்சகர்களாக' மாறிப் போரை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுப்பார்கள், அதற்குப் பதிலாகப் பெரிய சலுகைகளைக் கோருவார்கள் என வளைகுடா அதிகாரிகள் அஞ்சுவதையும் அந்தச் சேனல் சுட்டிக்காட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce84vemmg5xo
  20. தம்பர் விழுந்தும் மண்படவில்லை என்று எஸ்கேப் ஆகப்பார்க்கிறார்.
  21. எரிபொருள் விலை உயர்வு தாக்கம்: பேருந்து கட்டணம் அதிகரிப்பு Published By: Vishnu 23 Mar, 2026 | 07:06 PM பேருந்துக் கட்டணங்களை இன்று திங்கட்கிழமை (23) நள்ளிரவு முதல் 12.19 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதித்த தெரிவித்தார். இதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 27 இலிருந்து ரூ. 30 ஆக உயர்கிறது. மேலும், மேற்கு மாகாண சாலைப் பயணிகள் போக்குவரத்து ஆணையம் முச்சக்கர வண்டி கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து சில தனியார் பேருந்துகள் சேவையை நிறுத்தியதால், பயணிகள் கடும் சிரமத்தையும் நெரிசலையும் எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/241771
  22. புரிகிறது. கொள்கையளவில் ஈரானின் அடிப்படை வாதிகள் வெல்லக் கூடாது. ஆனால், இந்த 3 வாரங்களில் என்னிடம் உருவான ஒரு கேள்வி, பெரும்பாலான ஈரானியர்களே இந்த அடிப்படை வாதத்தைச் சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கும் போது வெளியார் என்ன செய்ய முடியும் என்பது தான்! அவர்கள் அடிப்படை வாதத்தை ஆதரிக்கவில்லை, ஆனால் அதோடு வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று நினைத்திருக்கிறார்கள் என நம்புகிறேன். அந்த சகிப்புத் தன்மை இருக்கும் வரை தலைமையைக் கொன்று ஒன்றும் மாறப் போவதில்லை என நினைக்கிறேன். தென்னமெரிக்க நாடுகளில் ஒரு போதை வஸ்துக் கும்பல் தலைவரைக் கொன்றால் உடனேயே அடுத்தவர் பதவிக்கு வருவது போல, ஈரானிலும் இருப்பார்கள். கடைசியில் "பாலாவி" (Pahlavi) தான் பாவம்😂!
  23. வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் ஜனாதிபதி Published By: Vishnu 23 Mar, 2026 | 06:44 PM நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தி, அவர்களின் பங்களிப்புடன் நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் எதிர்நோக்கியுள்ள வலுசக்தி விநியோகத்திலான சவால்களுக்கு மத்தியில், வலுசக்தியைச் சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்தி நாடு எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றிகொள்ள அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது, நிறுவன ரீதியாகவும் தனிநபர் ரீதியாகவும் தற்போது அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்பாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவதற்காக தொடர்ச்சியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் பொருட்டு திங்கட்கிழமை (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக வலுசக்தி முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் நடைமுறைச் சாத்தியமான நிலைக்குக் கொண்டு வருவது குறித்தும், குறிப்பாக அரச சேவைக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டல்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. அதேபோல், உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி நுகர்வை முறையான முகாமைத்துவத்திற்கு உட்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த நிறுவனங்களுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் மற்றும் ஏனைய அலங்கார மின் கட்டமைப்புகளுக்கு அதிகளவிலான மின்சாரம் செலவிடப்படுவதாகவும், அதனைக் மட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் மின்சார நுகர்வில் குறிப்பிடத்தக்க அளவைச் சேமிக்க முடியும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது. நகர்ப்புறங்களில் அவசியமற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் வலுசக்தி முகாமைத்துவத்திற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அது தொடர்பாகப் பின்பற்றக்கூடிய மாற்று வழிமுறைகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து கலந்துரையாடி, விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி.கே. பெரேரா, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/241769
  24. அமெரிக்காவில் தற்போது வித்தியாசம் இல்லை என்பது என் அனுபவம் (ஐரோப்பா, கனடா நிலை எனக்குத் தெரியவில்லை). கடைசியாக நான் ஏஜென்சி மூலம் இலங்கைக்கு ரிக்கற் வாங்கியது 2012 இல். அதுவும் வாழ்ந்த நகரத்தில் எனக்கு அறிமுகமான ஒரு இந்தியர் ஏஜென்சி வைத்திருந்ததால் அவருக்கு போனைப் போட்டு வாங்கியிருக்கிறேன். அதன் பிறகு குடும்பத்தில் இருப்பவர்களின் பல பயணங்கள், எல்லாம் நேரடியாக இணையத் தளத்தில் தான். இதில் பல சௌகரியங்கள் உண்டு. தற்போது போன் app கள் இருக்கின்றன. பெரும்பாலான விமான சேவைகளுக்கு app மூலமே check-in செய்து கொள்ளலாம். விமான நிலையத்தில், ஆவணத்தைக் காட்டி பயணப் பைகளை நிறுத்து அவர்களிடம் கொடுத்து விட்டுப் போக வேண்டியது தான். பயண முகவர்கள் மூலம் பயணச் சீட்டு வாங்கினாலும், இறுதியில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமெனின் பயணி விமான நிறுவனத்திடம் தான் நேரில் செல்ல வேண்டும், மேலே சுமே சென்றது போல. எனவே, என்ன வகையான பயன் பயண முகவர்களிடம் வாங்குவதால் கிடைக்கிறதெனத் தெரியவில்லை. ஐரோப்பாவில் அப்படியான ஏதும் பயன்கள் இருக்கின்றனவோ தெரியவில்லை.
  25. கொமேனியின் மறைவை போல ஒரு நல்ல விடயமாகவே பி பி யின் தம்பரின் அகற்றமும், அடக்கமும் இருக்கும், என்னை பொறுத்தமட்டில். ஆனால் ஈரானிய அடிப்படைவாதிகள் இவ்வாறு வெல்வது, நிச்சயம் அரபு முஸ்லிம் நாடுகளுக்கோ எனைய தனி மனித சுதந்திரங்களை அனுசரித்து போகும் இஸ்லாமிய நாடுகளுக்கோ, நல்ல சகுனமாக இராது. அமெரிக்காவின் அடிவருடிகள் என நாம் மிக சுலபமாக அரபுநாடுகளை கடந்து போகலாம். ஆனால் உண்மையில் அடிப்படைவாதத்துக்கு எதிரான மிக் முக்கிய பங்கை ஆற்றுவது யு ஏ ஈ. சல்மான் வந்த பின் சவுதியில் கூட மிக நல்ல மாற்றங்கள் வந்தன. சில மத விதிகளை, சில ஹதீசுகளை நடைமுறை படுத்தவே தேவையில்லை என அண்மையில் அறிவித்தார். ஈரான் இந்த போரில் படுதோல்வி அடையாமல், சரணாகதி ஆகாமல், ஒரு போர்நிறுத்தம் வரும் எனில் - அது ஈரானின் வெற்றியே. தம்பர், செத்த கிளி, பிபி எல்லாரும் தற்காலிகமானவர்கள். ஆனால் ஈரானின் இந்த வெற்றி, அந்த பிராந்தியத்துக்கும், உலகுக்கும், ஷியா அடிப்படைவாதத்தில் நம்பிக்கை இல்லாத அனைவருக்கும் நீண்ட கால நோக்கில் ஒரு பெரும் தலையிடியாக அமையும். யாழ்களத்தில் ஸ்கோர் கேட்கும் மனநிலையில், அமெரிக்காவுக்கு அடி போட்டால் காணும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது உறைக்கும் போது காலம் கடந்து விட்டிருக்கும். இதே ஆட்கள்தான் பொதுபல சேனாவின் முஸ்லிம் எதிர்ப்பை ஆதரித்து, முஸ்லிம்களை ஆதரித்து எழுதிய எம்போன்றோரை திட்டினார்கள் என்பது அடுத்த லெவல் முரண்நகை. ஆனால் உங்கள் போன்ற கருத்தாளர்களுக்கு நான் சொல்வது புரியும் என நினைக்கிறேன்.
  26. கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் : இதுவரை ஐவர் கைது! 23 Mar, 2026 | 07:51 PM கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து பெண்ணொருவர் உயிருடன் மீட்கப்பட்டதோடு, அதே கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை (22) மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைதாகியுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரும் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பின்னணி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளுவினாமடு, நெல்லிக்காடு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவர் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டதோடு, அன்றைய தினம் அதே கிணற்றில் மற்றுமொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட பெண், சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், இச்சம்பவத்தில் கடத்தல், கொள்ளை மற்றும் மனிதப் படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 3 சந்தேக நபர்கள் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். குறித்த சந்தேக நபர்கள் 22 மற்றும் 34 வயதுடைய நாவற்காடு மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், பெண் சந்தேக நபர் காஞ்சனகுடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஆவார். சந்தேக நபர்கள் குறித்த இரு பெண்களையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். வழியில் அவர்களுக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை அருந்தக் கொடுத்துள்ளனர். அவர்கள் மயக்கமடைந்ததும், அவர்களிடம் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அவர்களை நீர் நிறைந்த குறித்த கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர். இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர். இவர் கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வெல்லாவெளி பகுதியிலிருந்து களுவாஞ்சிக்குடி பளுவாமம் அரச வைத்தியசாலை மற்றும் வங்கிக்குச் சென்று மீண்டும் திரும்பிக்கொண்டிருந்தபோது, சந்தேக நபர்கள் இவரை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று மேற்கூறியவாறு போதைப்பொருள் கலந்த பானத்தைக் கொடுத்து நகைகளைக் கொள்ளையடித்து கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர். கிணற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை தனது மூன்று வயது குழந்தையுடன் வவுணதீவு பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்வதற்காகப் பேருந்திற்குக் காத்திருந்தபோது, கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரும் அவரது மனைவியும் முச்சக்கரவண்டியில் வந்து தாங்களும் மட்டக்களப்பு செல்வதாகக் கூறி அவர்களை ஏற்றியுள்ளனர். குறித்த பெண் தனது தேவைகளை முடித்துவிட்டு மட்டக்களப்பு நகரிலிருந்து திரும்பும்போது சந்தேக நபர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து மீண்டும் முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றுள்ளனர். செல்லும் வழியில் போதைப்பொருள் கலந்த பானத்தை குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு கொடுத்துள்ளனர். அவர் மயக்கமடைந்த பிறகு நகைகளைக் கொள்ளையிட்டு அவரை கிணற்றுக்குள் தள்ளியுள்ளனர். இந்நிலையில் அவரது குழந்தை வவுணதீவு பாலக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் பின்னர் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் முதலில் 3 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளைத் தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றை விற்பனை செய்தமை தொடர்பில் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 39 மற்றும் 49 வயதுடைய இவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் கிழக்கு மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இதுவரை கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று (23) அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/241768

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.