All Activity
- Past hour
-
ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஜயவேவா. - சீலரத்ன தேரர்.- காணொளி: 👉 https://www.facebook.com/reel/907114451932584 👈
-
கறையான் புற்று
பகிர்வுக்கும், பங்களிப்புக்கும் மிக்க நன்றி.....!
-
வசந்தம் வருகிறது
ஒவ்வாமை என்பது ஒரு அசௌகரியம் தான் என்றாலும் இக்காலத்தில் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும் படியாக நாம் அனுமதிக்கக் கூடாது. நித்திரைத் தூக்கம் ஏற்படுத்தாத (non-drowsy) ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் பல வந்து விட்டன. கீழ் வரும் மருந்துகளில் எவையாவது உங்கள் நாட்டில் கிடைக்கின்றனவா என்று தேடிப் பாருங்கள், மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே இவை மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடும். fexofenadine centrizine levocentrizine loratadine desloratadine
- Today
-
வெற்றிலை மென்றுகொண்டு வெதுப்பக வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியில் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜின் அதிரடி ! மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் இடம்பெற்று இருந்த நிலையில் , பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய சுகாதார விதி முறைகளுக்கு அமையவே வியாபாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. வெற்றிலை மென்று வெதுப்பக வண்டியினை ஓடி வந்தவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் குறித்த வண்டியின் சாரதியிடம் மருத்துவ சான்றிதழ் இன்மையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு சினிமா பாடல்களை ஒலி எழுப்பி செல்வதனால் அதிக பிரச்சினைகள் ஏற்படுவதனால் , வெதுப்பக வண்டிகளுக்கென்று பிரத்தியேகமான ஒலியினை வழங்கிய போதிலும் , அதனை மீறியதனால் , பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எவராவது செயற்படுவார்களாயின் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார். https://athavannews.com/2026/1467673
-
கறையான் புற்று
எனக்கும் ஒரு சின்ன சந்தேகம்.🤭இந்த தடவை யாழில் எழுதுபவர்களின் ஆக்கங்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது..அடிக்கடி ஞாபகபடுத்தல்கள் தேவை போலும்..✍
-
தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் - வேகமெடுக்கும் கரூர் நெரிசல் வழக்கு
புதுடெல்லி: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரூரில் கடந்த் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கடந்த 12-ம் தேதி ஆஜரானார். அப்போது அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் 19-ம் தேதி ஆஜாரக சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து அன்றைய தினம் மீண்டும் அவர் ஆஜரானார். அன்று காலை 10.30 மணிக்கு விசாரணை தொடங்கி 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அப்போதே விஜய்யின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு, விஜய் கைதாக வாய்ப்பு என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஊகங்கள் பொய்க்க அவர் விசாரணை முடிந்து சென்னை திரும்பினார். அதேவேளையில், 2-வது முறையாக விஜய் ஆஜரானபோது சில கேள்விகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க அவரது தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் படலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், விஜய் நாளை (மார்ச் 10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஐ அலுவலக வட்டாரங்களில், ‘கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையில் சில விவரங்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பாக விஜய்யிடம் மேலும் விசாரித்து, தெளிவு பெற வேண்டியுள்ளது. இதன் நிமித்தமாகவே அவர் மார்ச் 10-ல் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது’ எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் இருக்கலாமோ என்ற சந்தேகங்களை சிலர் எழுப்பி வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாகக் களம் காண திட்டமிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில் தவெக தனித்து நிற்கிறது. தவெகவை தங்கள் கூட்டணிக்கு வருமாறு தமிழக பாஜக தரப்பில் காய் நகர்த்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் விஜய்க்கு சிபிஐ அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் - வேகமெடுக்கும் கரூர் நெரிசல் வழக்கு
-
கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள் அத்துமீறல் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் - ரவிகரன்
09 Mar, 2026 | 04:21 AM (இராஜதுரை ஹஷான்) கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி மற்றும் சட்டவிரோதமான அத்துமீறல்களை உடனடியாக தடுக்குமாறு மகாவலி பணிப்பாளர் நாயகத்திற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன என்று சுட்டிக்காட்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் காணி அமைச்சருக்கும் குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைத்தல் தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது. இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேற்படி விடயம் தொடர்பாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் டிஒபிஒ பிபி70 இலக்க நில அளவை வரைபடத்தின் 17,18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களும் மகாவலி அதிகார சபையால் தென்பகுதியைச் சேர்ந்த ஒரு சிங்கள வர்த்தகருக்கு உப்பளம் அமைப்பதற்காக தற்பொழுது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு முரணான வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்படி நடவடிக்கை அப்பகுதிக்குரிய மக்களிடையே அதிருப்தியையும் இரண்டு இனங்களுக்கு இடையேயும் முறுகல் நிலையை தோற்றுவித்தது. மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து கடந்த 2026.02.27 ஆம் திகதியன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மேற்படி அத்துமீறிய செயற்பாட்டை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது. இதன் தொடர்ச்சியாக, அதே நாள் (2026.02.27 மாலை 03.00 மணி) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்படி உப்பளச் செய்கையை அடுத்துவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும் வரையிலும் நிறுத்திவைக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு கடிதம் அனுப்பப்படும் என மாவட்டச் செயலாளரால் தெரிவிக்கப்பட்டது. எனினும், 2026.03.06 ஆம் திகதி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறித்த பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசாங்கத்தின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன. எனவே சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் இவ் அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்தஇ முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க,வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகர்கள் அத்துமீறல் அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் - ரவிகரன் | Virakesari.lk
-
வெற்றிலை மென்றுகொண்டு வெதுப்பக வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Published By: Digital Desk 3 09 Mar, 2026 | 12:56 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு வெற்றிலை மென்று கொண்டு வெதுப்பக வண்டியில் வெதுப்பக உணவுப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் குறித்த வண்டியின் சாரதி மருத்துவ சான்றிதழையும் பெற்றிருக்கவில்லை எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கின்றார். இந்நிலையில் வெதுப்பக வண்டிகளில் சினிமா பாடல்களை பெரும் சத்தமாக ஒலி எழுப்பிச் செல்வதனால் அதிக சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதனால், வெதுப்பக வண்டிகளுக்கென பிரத்தியேகமானதொரு ஒலியை ஏற்கனவே வழங்கியிருந்த போதிலும் அதனை அவர் கடைப்பிடிக்காததனாலும், பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக அதற்காகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எவராவது செயற்படுவார்களாயின் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடனும், விசேட கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் பிரதேச சபையில் இடம்பெற்று இருந்த நிலையில், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய சுகாதார விதி முறைகளுக்கு அமையவே வெதுப்பக உணவுப் பொருட்களை வியாபாரம் செய்ய வேண்டும் என அப்பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் ஏற்கனவே சகல வெதுக்கப உணவு விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். வெற்றிலை மென்றுகொண்டு வெதுப்பக வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Virakesari.lk
-
யாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி ; இருவர் கைது
09 Mar, 2026 | 04:35 PM யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 865 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றியுள்ளனர். அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் , கைப்பற்றப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். யாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி ; இருவர் கைது | Virakesari.lk
-
உலகளாவிய மசகு எண்ணெய் விலை அதிர்வுகளை சமாளிக்க இலங்கை தயாராக உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு
09 Mar, 2026 | 04:47 PM உலக சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலை மாற்றங்களை எதிர்கொள்ளும் பலமான நிலையில் இலங்கை தற்போது உள்ளதாகவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடுகையில், இலங்கை தற்போது மிகச் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, அக்காலத்தில் 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் தற்போது 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன், மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை விடவும் சாதகமான நிலையில் உள்ளது. மேலும், பூச்சிய நிலையை நெருங்கியிருந்த நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை பொருளாதார அதிர்ச்சிகளைத் தாங்குவதற்கான ஒரு முக்கிய கவசமாக அமைகிறது. எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் விலை உயர்வு, சுற்றுலாத் துறையில் சரிவு மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் போன்ற சவால்கள் ஏற்படக்கூடும். இவ்வாறான அழுத்தங்களைக் கட்டுப்படுத்தவே மத்திய வங்கி நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகின்றது. இதன் மூலம் தேவையற்ற கேள்வி மற்றும் செலவு அழுத்தங்களை கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை செய்ய முடியும். எத்தகைய உலகளாவிய சவால்கள் ஏற்பட்டாலும், முறையான பணம், நிதி மற்றும் வெளிநாட்டு பொருளாதார கொள்கைகள் ஊடாக நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைத் தொடர்ந்து பலப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டார். உலகளாவிய மசகு எண்ணெய் விலை அதிர்வுகளை சமாளிக்க இலங்கை தயாராக உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு | Virakesari.lk
-
ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையினை மீளவும் நினைவுபடுத்துகிறது - சிறீதரன்
09 Mar, 2026 | 05:27 PM (எம்.நியூட்டன்) சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார். சுதந்திரப்பறவைகள் மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில், முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள். உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக எட்டு ஆண்டுகள் கடந்தும் தாய்மார்கள் வீதியில் நின்று போராடுகிறார்கள். 2009-ல் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டபோது, அதன் சிதைவுகளையும் ஆவணங்களையும் உலகுக்கு வெளிப்படுத்தியதில் பெண்களின் துணிச்சல்மிக்க பங்களிப்பு மகத்தானது. ஈரான் இன்று இஸ்ரேல் மீது கொத்துக்குண்டுகளை வீசுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ள சூழலில், அன்று 22 நாடுகளின் துணையோடு தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட அநீதியை உலகம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக, ஐநா சபையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை எனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்த ஈரானின் நிலைப்பாட்டையும், ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்றிய அமெரிக்காவின் தமிழர்கள் மீதான சார்பு நிலைப்பாட்டையும் நாம் நினைவில் வைத்து இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் வாக்களிக்கும் உரிமை கூட இல்லாத ஒரு இருண்ட யுகத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம். உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் எங்களை மீண்டும் பின்னோக்கித் தள்ளினாலும், எமது பெண்கள் தாய், தாரம், பிள்ளை எனப் பல பரிமாணங்களில் சமூகத்தை வழிநடத்துகிறார்கள் என்றார். ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையினை மீளவும் நினைவுபடுத்துகிறது - சிறீதரன் | Virakesari.lk
-
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பன்னிரெண்டு வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச் சாட்டுத் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று (09)குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.G அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனையும், அத்துடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை | Virakesari.lk
-
அநுரா அல்ல, ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் அதையே செய்திருப்பார்!
கொழும்பில், ஈரான் கப்பல் விவகாரம் --- --- --- *அநுரா அல்ல, ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் அதையே செய்திருப்பார்! *டில்லி தமிழர் பக்கம் முழுமனதோடு இல்லை என்ற உண்மையை இனிமேலாவது ஏற்றுக் கொள்ளுங்கள்... *மிலிந்த மொறகொடவில் இருந்து ரில்வின் வரை... --- --- --- மிலிந்த மொறகொட இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக, அதாவது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரின் அதிகாரங்களுடன், 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை பதவி வகித்திருந்தார். கோட்டாபய, ரணில் ஆகியோர் ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது இவர், தூதுவராக இருந்தார். அப்போது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாநிலங்களுக்குச் சென்று. ஈழத்தமிழர் விவகாரத்தை, இலங்கையின் உள்ளக விவகாரமாக மாற்றும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டவர். அத்துடன் --- தென்னிந்தியாவின் பெருங்கற்கால (Megalithic) வரலாறுகளை மேற்கோள் காண்பித்து ஆயிரம் ஆண்டு காலம் என்று கூறி, வரலாறுகளை திரிபுபடுத்தி சிங்களவர்கள் - ஆரியர்கள் என்ற இரு இனமும் இரடடையர்கள் (Twin civilization) அதாவது ”இரட்டை நாகரிகம்” என வரலாற்றை மாற்றியவர், இந்த மிலிந்த மொறகொட. 2009 இல் இறுதிப் போர் நடைபெற்ற போது இந்தியா, ஈழத்தமிழர் பக்கம் சென்றுவிடாமல், மிலிந்த மொறகொட உள்ளிட்ட மூவர் கொண்ட குழுவை உருவாக்கி, போரில் தமிழர்களைப் பாதுகாப்பது மற்றும் மனிதாபிமான பணிகள் பற்றிய தகவல்களை வழங்கிக் கொண்டிருந்ததாக, மகிந்தவின் முன்னாள் செயலாளர் லலித் வீரதுங்க ஆங்கில இணையம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். இவை பற்றி எல்லாம் எனது அரசியல் பத்தி எழுத்துக்களில் நான் பல தடவை சுட்டிக்காட்டி வருகிறேன். அக் கட்டுரைகள் இப்போதும் பொருந்துகின்றன. கூர்மை இணையத்திலும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் சஞ்சீவி ஞாயிறு இதழில்களிலும் உண்டு. எனது முகநூலிலும் பார்க்கலாம். அன்று மிலிந்த கையாண்ட அதை அணுகுமுறையை இன்று அநுர அரசாங்கமும் கையாளுகின்றது. அதன் காரண - காரியத்தோடு தான் இப் படத்தை இன்று மீள்பதிவு செய்தேன். கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால், சிங்கள தலைவர்கள், வடக்கு கிழக்குத் தமிழர் விவகாரத்தில் ஒரு புள்ளியில் நின்று தான் செயற்படுவர் என பல ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறேன். ஊடகங்களுக்கு வழங்கிய பல நேர்காணல்களிலும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். நான் மாத்திரமல்ல வேறு சில அரசியல் பத்தி எழுத்தாளர்களும் எழுதியுள்ளனர். ஆனால் -- தமிழ்த் தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள், தேர்தல் அரசியல் நோக்கில் மாத்திரமே ஒன்றினைவது அல்லது அப்படியான தோற்றத்தைக் காண்ப்பிக்கின்றனர். ஆனால், இந்தியாவை எப்படி கையாள்வது, குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கம் தான் பிரச்சினைக்குரியது. ஆனாலும், பாஜாக அரசாங்கத்தை அணுகுவது பற்றிய உத்தி ஒன்றை வகுத்திருக்கலாம் அல்லவா? ஆனால் பொருத்தமான பரிசோதனை செய்யப்படதாக தெரியவில்லையே? இப்போது காலம் கடந்து விட்டதே? ஆனால் சிங்கள தலைவர்கள், ஜேஆர் காலத்தில் இருந்து, இன்றைய அநுர வரையும் புவிசார் அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்து ஒருமதித்த குரலாகக் கையாண்டு வருகின்றனர். 13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று கொழும்பில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு துணிவோடு நேர்காணல் வழங்கிய பின்னர் தான், டில்லியில் மிலிந்த தூதுவராக பதவியேற்றிருந்தார். மிலிந்த எடுத்து வைத்த அதே அடியைத் தான், ரில்வின் சில்வா சென்ற மாதம் இந்தியாவுக்கு சென்று இன்னும் ஒருபடி மேலே காய் நகர்த்தியிருக்கிறார். அதேவேளை, இதே மிலிந்ததான், 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் சமாதானப் பேச்சு நடைபெற்றபோது, உலகம் எல்லாம் சென்று, தமிழர்களின் போராட்டம் ”இனவாதம்” ”பயங்கரவாதம்” என்று கூறி இராஜதந்திரப் பிரச்சாரம் செய்தவர். ஆகவே -- 2009 ஆம் ஆண்டு புவிசார் அரசியலும், 20026 ஆம் ஆண்டு உருவாகியுள்ள புவிசார் அரசியல் பதற்றமான சூழலும், இலங்கைக்குச் சாதகம் தான். ஈரான் கப்பல் விவகாரத்தை அநுர கையாண்ட விதம் முட்டாள் தனமானது என சில விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் -- இந்திரா காந்தி காலத்தில் இருந்து புதுடில்லி, கையாளும், இரட்டைத் தன்மையான சர்வதேசக் கொள்கைக்குள் (Dual International Policy) புகுந்து கொண்டு தான், இலங்கை சீவியம் நடத்துகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். (இரட்டை சர்வதேசக் கொள்கை என்பது புவிசார் அரசியல் சூழலைப் பொறுத்து) இந்திரா காந்தி காலத்தில் இருந்து, டில்லி முழு மனதோடு தமிழர் பக்கம் இல்லை என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளுங்கள். மலையகத் தமிழர் விடத்திலும் இந்தியா ஒப்பாசாரமான தலையசைப்புத் தான். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0b7rQtxsCbX5VCgouPij4QhUnKt2yo2fq96hhFXneu86dcJ3PDkxKTmUpPXjVPgYbl&id=1457391262&mibextid=wwXIfr
-
ஈழப்பிரியன் started following அநுரா அல்ல, ரணில் ஜனாதிபதியாக இருந்தாலும் அதையே செய்திருப்பார்!
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கிய அமெரிக்கா பின் கடாபிக்கு என்ன செய்தது?] அமெரிக்கா லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கியதா ஈராக்கில் சதாம் என்ற சர்வாதிகாரியை அகற்றும் நடவடிக்கையில் யுகே அவுஸ்ரேலியா போன்ற மேற்கு நாடுகள் தான் அமெரிக்காவுடன் சேர்ந்து பங்குபற்றின
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
👌 மிகச் சரி
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த நிலையில் அந்த மக்கள் இப்போது. சுதந்திரம் என்று கூவிக்கொண்டு போனவர்கள், அந்த மக்களை அந்தர வழியில் அம்மோ என்று விட்டு வெளியேறிவிட்டார்கள் தங்கள் வேலை முடிந்தவுடன். ட்ரம்பும் நெதன்யாகுவும் பதவி விலக வேண்டுமென அவர்களது மக்களே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.
-
ஈரான் மீதான தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுகிறது - சுவிஸ்
இதையே எத்தனை நாளைக்கு அறுந்த இசைத்தட்டு போல சொல்லிக்கொண்டிருக்கப்போகிறீர்கள். ஈரானிய மொத்த சனத்தொகை எவ்வளவு? அதில் எத்தனைபேர் வந்து அமெரிக்காவிடமும் இஸ்ரயேலிடமும் தமக்கு சுதந்திரம் பெற்றுத்தர கேட்டார்கள்? எத்தனைபேர் காமெனியின் இறப்பை வீதிக்கு வந்து கொண்டாடினார்கள். ஏன் ட்ரம்பை அதிபர் பதவியில் இருந்து அகற்றினால் அமெரிக்காவில் மக்கள் கூடி கொண்டாட மாட்டார்களா? வடகொரியாவிடமும்தான் அணுஆயுதம் இருக்கிறது. தன்னை யாராவது தாக்கினால் தான் அதை பாவிப்பேன் என்கிறது. அதில் பிழை எதுவும் இல்லையே! ஈரானிடம் அணுஆயுதமே இல்லை. பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்கத்தான் போர் என்கிறது அமெரிக்கா. ஏன் அது உலகில் வேறு யாரிடமும் இல்லையா! தன்னை தற்காத்துக்கொள்ள ஒரு நாடு அதை உருவாக்குவதில் என்ன தவறு கண்டீர்கள்! இதில உக்கிரேனுக்கு ரஷ்யா அடித்ததற்கு கூப்பாடு வேறை!! சுதந்திரம் பெற்றுக்கொடுக்கிறோம் என்று கூவிக்கொண்டு போர் தொடுத்த ஆப்கான், ஈராக், லிபியா, சிரியா போன்ற நாடுகளில் எல்லாம் தேனும் பாலும்தான் ஓடுகிறதா!!
-
கறையான் புற்று
சரியான காசு தான்.... ஆதலால் தான், கை பொருத்தினாக்கள் குறைவோ, என்ன?
-
கறையான் புற்று
சந்தேகம் சின்னதாக இருந்தாலும் தொகை பெரிது. 35,000 யூரோ
-
கறையான் புற்று
பகிர்வுக்கு நன்றி... சின்ன சந்தேகம்: ஒரு கை செய்ய 30,000-35,000 யூரோ வா இல்ல 35000 ரூபாய் ஆ ஐயனே
-
கறையான் புற்று
நன்னிச்சோழன், இது யாழ் 28 அகவைக்காக எழுதியது. “வெண்புறா’ திட்டத்தின் செயற்பாடுகள் மற்றும் பயண அனுபவங்களை 2015இல் பொங்கு தமிழில் எழுதியிருந்தேன். இப்பொழுது அந்தத் தளம் இல்லை. கிருபன் அவற்றை யாழ் இணையத்தில் பதிந்து வைத்திருக்கின்றார். அதற்கான லிங்கை கீழை இணைத்திருக்கின்கேன்
-
களைத்த மனசு களிப்புற ......!
repSodsntofafclg325il477h 29hh2f4fith621m0umm1f2titihml0fi1l · தோனி என்னடா பண்ணினார் தோனி என்னடா செஞ்சார் என்று எல்லோரும் கேட்கிறார்கள் இன்னிக்கி தோனி இல்லனா இந்தியா உலகத்துல இப்படிப்பட்ட இடத்தில் இருந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான் தொடர்ந்து உலக கோப்பை போட்டிகளில் தோல்வியே பெற்று வந்த இந்திய அணி கபில்தேவ் க்கு பிறகு முதன்முதலாக உலக கோப்பையில் முத்தமிட வைத்தவன் அவன் அதன்பின் ரோகித் சர்மாவும் இறுதிவரை சென்று கடைசி கட்டத்தில் தவறவிட்டார் ஆனாலும் அதற்கு இணையான சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 என்ற இரண்டு கோப்பைகளை வென்று கொடுத்த அவர் இந்தியாவின் தோனிக்கு பிறகு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் இப்படி இரண்டு சாம்ராஜ்யத்தின் கீழ் உருவான இந்த இந்திய அணி இப்போது இன்னொரு கோப்பையை வெல்ல தயாராகிக் கொண்டிருக்கிறது தோனி இருந்தால் கண்டிப்பாக அந்த போட்டி ஜெயிக்கும் அதற்கு அவர் களத்தில் இருக்க வேண்டும் என்றுதான் அர்த்தம் கிடையாது. மைதானத்தில் இருந்தாலே போதும் தோனி என்பது வெறும் பெயரல்ல அது ஒரு மந்திரம் ஆனால் தோனி மற்றும் ரோகித் என்ற இரண்டு ஜாம்பவான்களுக்கும் மிகப் பெரிய ஜாம்பவான் என்றால் அது ஹரியானாவின் சூறாவளி கப்பில் தேவ் அவர் விளையாடிய காலத்தில் நாம் கிரிக்கெட் பார்க்கவில்லை நான் பிறக்கவில்லை என்பதால் அவரின் புகழ் எனக்கு அந்த அளவுக்கு தெரியாமல் போய்விட்டது மூன்று ஜாம்பவான்களுக்கும் வெற்றி வணக்கத்தை இந்திய அணி இந்த கோப்பையை வென்று கொடுக்கும் MS Dhoni.....!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியை திறம்பட நடத்திய @கிருபன் க்கு நன்றியும் வாழ்த்துகளும். பங்குபற்றிய உறவுகளுக்கும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த நியூபலன்ஸ், கந்தப்பு, நியாயம் மூவருக்கும் வாழ்த்துகள். மற்றும் திரியை கலகலப்பாக வைத்திருந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.