Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இதை ஒரு பாயிண்டா வைத்து சனம் என்மீது பாயப்போகுது ....அய்யனே இது விளையாட்டுத்திரி...நினவில் கொள்க இ ங்கு உள்ள நிலைமையில் எப்படா பாதை திறக்கும் என்று சனம் திரியுது..
  3. அட சொன்னா நம்புங்கப்பா…. ஐலண்ட் முஸ்லிம் இல்லை….. ஆனால்…..: புளொட்……😂 ஸ்டார்ட் மியூசிக்😂😂😂 சிலவேளை முஸ்லிம் புளொட்டாகவும் இருக்கலாம் 😂😂😂.
  4. நன்றி அண்ணா. விசமில்லாதா பாம்புதானா கொம்பேறி மூக்கன்? என்னமா கிலி ஏத்தி இருக்கிறார்கள். எங்கள் ஊர் ஜேம்ஸ் கமரனுகள் “போலியாக ஒரு பாடை கட்டி ஒப்பாரி வைத்து அழுதபடி அதை சுடலை நோக்கி எடுத்து போனால்தான் கொம்பேறி மூக்கன் இறங்கும்” என்பார்கள்😂. அப்படியே இந்த ஒண்டை கொண்டால் அதன் சோடி தேடி வந்து கொத்தும் எண்ட கதையும் பொய் என்பதை உறுதிபடுத்தி விடுங்கள்.
  5. உவ‌ன் வும்ரா இந்த‌ உல‌க‌ கோப்பையில் அதிக‌ விக்கேட் எடுப்பான் என‌ தெரிவு செய்தேன் முத‌ல் விளையாட்டில் விளையாட‌ வில்லை அடுத்த‌ மைச்சில் விளையாடுவார் என‌ ந‌ம்புகிறேன்..............சின்ன‌ அணி என‌ நினைத்து வும்ராவுக்கு நேற்று ஓய்வு கொடுத்து இருக்க‌ கூடும்..............இனி வ‌ரும் போட்டிக‌ள் அனைத்திலும் விளையாடினால் ம‌கிழ்ச்சி..........................
  6. யாழ் களத்தின் சக உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து தான் கண்டிக்கிறார்கள். உங்களுக்குச் சரியாகத் தெரியும் ஒரு கருத்து இன்னொருவருக்கு கடைந்தெடுத்த இனக் குரோதக் கருத்தாகத் தெரிந்தால் அவர் நிச்சயம் சுட்டிக் காட்ட வேண்டும். அதைத் தான் செய்திருக்கிறார்கள், "எங்கள் அங்கீகாரம் பெற்றுக் கொண்டு எழுதுங்கள்" என்று யாரும் சொல்ல வரவில்லை!
  7. ஜெய்ப்பூர் அறிவிடமிருந்து ஒரு சாம்பிளுக்கு... Several Sri Lankan-born researchers and professionals hold fellowship or senior academic positions in Australia, spanning fields from the arts to health and data science. Notable examples include Dr. Amaara Raheem (2026 Forrest Creative Fellow, Edith Cowan University), Dr. Nirukshi Perera (Research Fellow at Curtin University), and Rashmika Nawaratne (Adjunct Research Fellow at La Trobe University). Key Individuals and Roles Dr. Amaara Raheem: A Sri Lankan-born artist-in-residence/researcher awarded the 2026 Forrest Research Foundation Creative Fellowship to develop a digital archive for performance art at Edith Cowan University. Dr. Niru Perera: A sociolinguist at Curtin University (PRECRU) specializing in health communication, multilingualism, and language policy, with research focusing on Sri Lankan languages in the diaspora. Rashmika Nawaratne: An AI and Data Science researcher at La Trobe University, specializing in machine learning and IoT. Chinthani Rathnayake: Postdoctoral Research Fellow at the University of Melbourne. Ranjith Pathirana: Research Fellow at Plant & Food Australia Pty Ltd. Ranjith Pathirana: Research Fellow at Plant & Food Australia Pty Ltd முகநூல் செய்தி ஊடகத்தின் படி "Fellow" என்றால் "ஆள்கிறார்" என்று அர்த்தம்😇!
  8. இந்த கருத்தை முழுமையாக வாசிக்கவில்லை. மேலோட்டமாக வாசித்து நன்றி இட்டதற்காக மன்னிப்பு கோருகிறேன். தனிப்பட எனக்கு இசுலாமிய தமிழர்கள் மீது அவநம்பிக்கைகளும் தும்பகரமான நிகழ்வுகளும் இருந்தபோதிலும் தமிழர்களை மத ரீதியாக பிரிந்து அல்லது இஸ்லாமியர்களை ஒதுக்கி எமக்கான விடுதலை சாத்தியமே இல்லை. இது எனது நிலைப்பாடு. நன்றி.
  9. Today
  10. திமிங்கலம் எப்படி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறது? நிலத்தில் வாழும் பாலூட்டிகளைப் போலல்லாமல், திமிங்கலக் குட்டிகளுக்குத் தங்கள் தாய்மார்களைப் பற்றிக்கொள்ள வழி இல்லை. அவற்றுக்குக் கால்கள், கைகள் அல்லது கூடு இல்லை.......!
  11. சிங்களவன் எங்கேயோ போயிட்டான் என்று ஊளையிடும் அடிமைகளுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது .
  12. வாழ‌ வைச்ச‌ நாட்டுக்கு ந‌ன்றி விஸ்வாச‌ம் இல்லாத‌ மனித‌ர் ஜ‌யா நீங்க‌ள் லொள்😁😛.......................
  13. நான் முதலில் உங்கள் கருத்தினை சரியாக பார்க்கவில்லை, நீங்கள் குறிப்பிட்ட கோடாரிக்காம்பு என்பதன் மூலம் தமது இனத்தினை தாமே கருவறுப்பவர்களுக்கெதிராக பயன்படுத்தப்படுவதனை ஜஸ்ரின் தவறாக புரிந்து கொண்டாரோ என நினைத்தேன் பின்னர் உங்கள் கருத்தினை பார்த்த போது நிங்கள்தான் கோடாரி காம்பினை தவறாக பயன்படுத்தியதை உணர்ந்து கொண்டேன். நான் உங்கள் கருத்துக்களை எப்போதும் மதிப்பவன் அதனால் அந்த கருத்தில் கொஞ்சம் உடன்பாடில்லாமல் போய்விட்டது, அது ஒரு ஏமாற்றத்தின் விளைவாக எனது கருத்தினை பதிந்துவிட்டேன். நீங்கள் கோவத்தினால் அவ்வாறு கூறியிருந்தாலும் அது உண்மையான நீங்கள் இல்லை என கருதுகிறேன். உங்களின் நிலையில் நானிருந்தால் உங்களை விட மோசமாக வினையாற்றியிருக்ககூடும், எல்லோரும் இதே போல நிலைகளை எப்போதும் எதிர்கொள்கிறோம், கடைசியில் இவைகள் வெறும் கருத்துகள் மட்டுமே.
  14. @ரசோதரன் நீங்க‌ள் தெரிவு செய்த‌ நேபால் அணி க‌ட‌சி க‌ட்ட‌த்தில் எப்ப‌டி அடிச்சு ஆடினார்க‌ள் என்று பாருங்கோ...............என‌க்கு இங்லாந் அணியையும் அதிக‌ம் பிடிக்கும் அதே போல் நேபால் அணியையும் பிடிக்கும்.....................நேபால் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு ம‌ற்றும் ம‌ட்டைய‌டி இர‌ண்டும் அருமை..................என்ன‌ இங்லாந்தை போல் 50க்கு மேல் ப‌ட்ட‌ கிரிக்கேட் மைதான‌ம் நேபாள‌த்தில் இல்லை இருக்கிற‌ ஒன்று இர‌ண்டு மைதான‌த்தில் விளையாடி சர்வ‌தேச‌ப் போட்டியில் சாதிக்கின‌ம்...........................
  15. எனக்குப் புள்ளீ வரும் ..எந்தெரிவு சவுத் அப்ரிக்க..
  16. இலங்கையைப் பொறுத்த வரை 5 முக்கியமான விசப் பாம்புகள் இருக்கின்றன. 1. நாக பாம்பு -Cobra- பல பெயர்களால் அழைக்கப் பட்டாலும், இது ஒரே வகையான இந்திய நாக பாம்பு தான். உதாரணமாக, கருநாகம் என்பது நன்கு வயது முதிரும் போது கருமையாக மாறி விட்ட நாக பாம்பு. பற நாகம் என்பது கற்பனைப் பெயர். "பறக்கும் நாகம்" என்ற மிகைப் படுத்தலினால் உருவான கற்பனையாக இருக்கலாம். இலங்கையில் ராஜநாகம் -King Cobra என்ற இன்னொரு வகையான பாம்பும் இருக்கக் கூடும், ஆனால் நான் அங்கிருந்த காலத்தில் அறியவில்லை. ராஜநாகம், பெயரில் நாகம் இருந்தாலும் , நாக பாம்பு அல்ல! நாக பாம்பையே உணவாக உட்கொள்ளக் கூடிய 20 அடிகள் வரை வளரக் கூடிய வேறொரு இனப் பாம்பு. 2. கண்ணாடி விரியன்-Russel's viper: இது முக்கியமான புடையன் வகைப் பாம்பு. நாகத்தை விட மூர்க்கமான பாம்பு. 3. சுருட்டை விரியன்-Saw-scaled viper: இதுவும் ஒரு புடையன் பாம்பு. கண்ணாடி விரியனை விடச் சிறிதென்றாலும் விசம் கண்ணாடி விரியன் போன்றது. வன்னியில் "முத்திரைப் புடையன்" என்று பெயர் கேள்விப் பட்டிருக்கிறேன். இது கண்ணாடி விரியனைக் குறிப்பதா அல்லது சுருட்டை விரியனைக் குறிப்பதா என இன்றும் எனக்குக் குழப்பம். இந்த இரு புடையன்கள் கடித்தாலும் சிறு நீரில் இரத்தம் வெளியேறும் என்பதால், "மூத்திரப் புடையன்" என்று இரண்டுமே அழைக்கப் படுகின்றனவோ தெரியவில்லை. 4. கண்டங்கருவளை-common krait - மூர்க்கம் குறைந்த ஆனால், நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் விசம் கொண்ட பாம்பு. 5. Hump-nosed viper - இதுவும் சிறிய ஒரு புடையன் பாம்பு. உள்ளூர்ப் பெயர் கோடாலிப் பாம்பு, கோடாலிப் புடையன் என்பதாக இருக்கலாம். இதன் மூக்குப் பகுதி தெளிவாக மேல் நோக்கி வளைந்திருப்பதால் இந்தப் பெயர்.
  17. நான் காலையில் எழுந்து விளையாட்டை பார்த்தேன் அப்கானிஸ்தான் அடிச்ச‌ 182ர‌ன்ஸ் ந‌ல்ல‌ ர‌ன்ஸ் என‌ நினைத்தேன் எப்ப‌டியும் நியுசிலாந்தை அப்கானிஸ்தான் ம‌ட‌க்கி போடுவின‌ம் என‌ நினைத்தேன்..............சென்னை மைதான‌த்துக்கு 182பெரிய‌ ஸ்கோர்............நியுசிலாந் வீர‌ர்க‌ளின் அதிர‌டி ஆட்ட‌த்தால் 17ஓவ‌ரோட‌ விளையாட்டை முடித்து விட்டின‌ம்.............................
  18. ஆப்கானிஸ்தான் விளையாடியதனை நான் பார்க்கவில்லை, குலாப்டினின் பேட்டியினை பார்த்தேன், ஆடுகளம் இரட்டைத்தன்மையாக உள்ளதாக கூறினார். வழமையாக சென்னை ஆடுகளம் (பிட்ச்) சிகப்பு மண்ணில் இருப்பதாக நினைவுள்ளது, இந்த போட்டிக்கு பயன்படுத்திய ஆடுகளம் கறுப்பு/சிகப்பு கலவை கொண்டதாக இருந்தது, ஆடுகளம் 170 - 175 ஓட்டங்கள் வெற்றிக்கான ஓட்டமாக இருக்கும் என கணித்திருந்தேன், ஆனால் ஆப்கானிஸ்தான் 182 ஓட்டங்களை பெற்றிருந்தது, அவர்களது பந்து வீச்சிற்கு இது ஒரு நிச்சயமான வெற்றி மாதிரியாகவே தோன்றியது. கறுப்பு மண் களிமண் ஈரலிப்பினை தன்னுள்ளே தக்கவைக்கும் சூரிய வெளிச்சத்திற்கு வேகமாக காயாது அதனால் வேகமாக ஆடுகளம் மாற்றம் ஏற்படாது, கறுப்பு மண்ணில் பந்து படும்போது பந்து வழுக்கிகொண்டு வரும் சிகப்பு மண் வேகமாக காயும் பந்து உயர்ந்து வரும் அதே போல திரும்பும். சூரிய வெளிச்சத்திற்கு மேல் மண் காயும் போது வேகப்பந்து வீச்சாளருக்கு பந்து சிப்பாகும் ஆனால் சீம் மூமென்ட் குறையும் அதோடு பந்தின் லெதர் சூரிய வெளிச்சத்தின் தாக்கத்தினால் வேகமாக பழசாகும் ரிவேர்ஸ் சுயிங் ஏற்படும். சுழல் பந்து வீச்சாளருக்கு மேலதிக கிறிப் கிடைப்பதால் பந்து திரும்பும் அதனால் முதலில் துடுப்பாடுவது என்ற ஆப்கானிஸ்தானின் முடிவு சரியானதாக இருக்கும் என கருதுகிறேன், அத்துடன் அவர்களது பந்து வீச்சு சிறப்பாக இருக்கும். இதனை ஒரு சர்ச்சையாகவே பார்க்கிறார்கள்.
  19. க‌ன‌டாவுக்கு நாளைக்கு தென் ஆபிரிக்கா சாத்த‌ப் போகுது😁😛.................
  20. நாளை இத்தாலி எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டு விறுவிறுப்பாக‌ இருக்கும்................என‌து தெரிவு ஸ்கொட்லாந்😁😛......................
  21. தாயகத்தில் நாம் சிறுவர்களாக இருக்கையில் நம்பிய பாம்புக் கதைகளை நினைத்தால் இப்போது சிரிப்புத் தான் வருகிறது. கொம்பேறி மூக்கன் விசமில்லாத பாம்பு. கூகிள் தேடலில் இந்தப் பாம்பின் ஆங்கிலப் பெயர் Bronzeback tree snake என்று வருகிறது. எல்லா வகைப் பாம்புகளும் லாவகமாக மரங்களில் ஏறுவதில்லை. கொம்பேறி மூக்கன் மரங்களில் ஏறி மரங்களிலேயே வாழக் கூடிய ஒரு பாம்பு வகை. இதையொட்டி இட்டுக் கட்டிய கற்பனைக் கதை தான், "ஆளைக் கடித்து விட்டு மரத்தில் போய் ஏறிக் கொள்ளும் கொம்பேறி மூக்கன், கடித்த ஆள் இறந்து எரிக்கப் படும் புகை தெரியும் வரை மரத்தை விட்டு இறங்காது" என்ற கதை. (இதனால், "சும்மா எதையாவது எரித்து புகை கிளப்பினால், கொம்பேறி மூக்கன் இறங்கி வரும்" என்று சில ஊர்ப் பெரிசுகள் கதையை கௌதம் மேனன் பாணியில் நீட்டித்துச் சொல்லவும் கேட்டிருக்கிறேன்). கொம்பேறி மூக்கன் பற்றிய இன்னொரு அபாண்டமான பழி, இது "ஆண் சாரைப் பாம்பு" என்ற கதை. சாரைப் பாம்பும் கொம்பேறி மூக்கனும் வெவ்வேறு இனப் பாம்புகள். சாரை (Indian rat snake) மரங்களில் வேகமாக ஏற முடியாமல் தரையில் மாட்டிக் கொள்ளும் இன்னொரு விசமில்லாத பாம்பு. ஆனால், இரண்டுமே மிகவும் அச்சுறுத்தப் பட்டால் ஒரு சீறல் (hissing) ஒலியை எழுப்பக் கூடியவை, கடிக்கவும் செய்யும். ஆனால், விசப் பல் இல்லாமையால் சாதாரண காயம் ஏற்படும். உயிருக்கு ஆபத்துக்கள் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.