All Activity
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@கிருபன் எனது தெரிவுகளில், வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்கொட்லாந்தை போட்டுவிடுங்கள். அவர்கள் பின்வரும் இரு போட்டிகளில் வெல்வார்கள் என்றே கணித்திருந்தேன். அப்படியே ஆகட்டும். வேறு ஒரு மாற்றமும் இல்லை 7) முதல் சுற்று குழு C:திங்கள் 09 பெப்: 5:30 AM, ஏடென் கார்டன்ஸ், ஸ்கொட்லாந்து எதிர் இத்தாலி SCOT ITA SCOT 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT NEP SCOT
-
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
விமான நிலையங்களை சுற்றி ஐந்து மைல்கள் சுற்று வட்டாரங்களுக்குள் அதன் வான்பரப்பில் கருவிகள்/பலூன்கள்/டிரோன்கள் போன்றவற்றை செலுத்துவதற்கு/பறக்கவிடுவதற்கு வெளிநாடுகளில் முன் அனுமதி பெறவேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இனி அணிகளில் மாற்றம் இருக்காது. பாகிஸ்தானும் அணிகளை அறிவித்துவிட்டது.
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
புலம்பெயர் தமிழர்களை பொறுத்தவரையில் வெளிநாடுகளில் விடுதலை புலிகள் ஆதரவாளர்காக தம்மை இனம் காட்டியோரே அதிகம் அரசியலில் முன்னிலைக்கு வந்துள்ளார்கள். விதிவிலக்குகள் காணப்படலாம். ஆனால் பின்புலம் இல்லாமல் முன்னுக்கு வர முடியாதல்லவா?
-
கோணேஸ்வர ஆலய காண்டாமணி விவாகரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும் - சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை
கோனேஸ்வர ஆலய காண்டாமணி விவாகரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும் - சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை 26 Jan, 2026 | 03:59 PM கோனேஸ்வர ஆலய காண்டாமணி விவாகரத்தை ஜனாதிபதியும் பிரதமரும் தீர்த்து வைக்க வேண்டும் என சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தவும் இந்த காண்டாமணி விவகாரம் தீர்த்து வைக்கப்பட்டால் நிச்சயமாக ஜனாதிபதிக்கு பக்கபலமாக இந்து மக்கள் இருப்பார்கள். இந்து மக்களால் இலங்கை சிவ பூமி என்று போற்றப்படுகின்றது. அதை வேளை பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட பெருமைமிக்க புண்ணியமான சிவபூமி இலங்கை நாடாகும். கிழக்கு மாகாணத்தின் திருகோண மலையில் பஞ்ச ஈஸ்வர தலங்களில் ஒன்றான திரு கோனேஸ்வர ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது. தேவார பதிகம் பாடப்பெற்ற திருத்தலம் ஆகும். சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளிநாடுகளின் பண உதவி மூலம் 1000 கிலோ கிராம் நிறையுடைய காண்டாமணி அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனை ஆலயத்தில் அமைப்பதற்கான தொல்லியல் திணைக்களத்திடம் அனுமதி கேட்கப்பட்டபோது அவர்கள் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனை ஆலய நிர்வாகத்தினர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்க அவர்களுக்கும் இது பற்றி வேண்டுகோள் விடுத்திருந்தனர். எந்தவிதமான தக்க ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் அனைத்து மதங்களும் சமமாக பேணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றனர். இந்த வகையில் தொல்லியல் திணைக்களத்துக்கு இது பற்றி அறிவுறுத்தல் கொடுத்து மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் அந்தக் கோனேஸ்வர மலையில் அமைந்திருக்கும் அந்த கோணேஸ்வர ஆலயத்தின் காண்டாமணி அமைப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நல்ல நடவடிக்கையை எடுத்து இந்து மக்களுக்கு கௌரவம் அளிப்பதாக இச்செயற்பாடு அமையும் என்றார். https://www.virakesari.lk/article/237049
-
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
இலங்கை இளையோர் அணி அசத்தல் வெற்றி Jan 26, 2026 - 08:56 PM 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் சிக்ஸ் சுற்றில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை இளையோர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நமீபியாவின் வின்ட்ஹோக் நகரில் இன்று (26) நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முக்கிய விபரங்கள் வருமாறு: நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணியின் தலைவர் விமத் தின்சர முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒஸ்மான் சதாத் நிதானமாக ஆடி 61 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் ருஹுல்லா அரப் அதிரடியாக 22* ஓட்டங்களைக் குவித்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் விரான் சமுதித மற்றும் குகதாஸ் மதுலன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 194 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பம் சற்று சவாலாக அமைந்தது. எனினும், திமந்த மஹவிதான மற்றும் செனுஜ வெக்குனகொட ஆகியோரின் நிதானமான ஆட்டம் அணியை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றது. இறுதியில் 46.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. https://adaderanatamil.lk/news/cmkvbl53604g0o29nxumcvfly
-
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
தற்காலத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை முதியவர்கள் என அழைக்கலாம். நாட்டை ஆள்பவர்கள் பெரும்பாலும் 40 தொடக்கம் 65 வயதுக்கு உட்பட்டோரே.
-
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல் 26 Jan, 2026 | 03:31 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டங்களை வானத்தில் பறக்க விடுவதை தவிர்த்து கொள்ளுமாறு விமான நிலைய ஆணையகம் கேட்டுக்கொண்டுள்ளது. வானத்தில் பட்டங்களை பறக்க விடுவதனால் , விமானங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுவதனால் விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் பட்டம் விடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அறிவுறுத்தல் தொடர்பான சுவரொட்டிகள் விமான நிலையத்தை சூழவுள்ள , காங்கேசன்துறை , மாவிட்டபுரம் , வறுத்தலை விளான் , பலாலி , மயிலிட்டி உள்ளிட்ட பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதுடன் , அது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் அப்பகுதியில் ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சென்னையில் யாழ்ப்பாணம் வருகை தந்த விமானம் தரையிறங்க முற்பட்ட வேளை பட்டத்தினால் , சிரமங்களை எதிர்கொண்டதாகவும் , அதனால் பாரிய விபத்து ஏற்பட விருந்த நிலையில் தெய்வாதீனமாக விமானம் பாதுகாப்பாக தரையிறங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237047
-
உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்று தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை
இரண்டு உலக சம்பியன் பட்டங்களுடன் தாயகத்திற்கு பெருமை சேர்த்த டாவி சமரவீர நாடு திரும்பினார் 26 Jan, 2026 | 04:27 PM (நெவில் அன்தனி) உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரி சிறுவன் டாவி சமரவீர இந்த வருடத்தை இரண்டு உலக சம்பியன் பட்டங்களுடன் ஆரம்பித்து இலங்கைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்துள்ளார். பாஹ்ரெய்ன், மனாமாவிலும் கத்தார், தோஹாவிலும் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப்களிலேயே அவர் உலக சம்பியன் பட்டங்களை சுவீகரித்தார். மனாமா இசா பின் ராஷித் விளையாட்டுத் தொகுதி அரங்கில் ஜனவரி 14 முதல் 18 வரை நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பாஹ்ரெய்ன் தேசத்தைச் செர்ந்த யூசுப் அல்பன்னாவை 11 - 6, 9 - 11, 11 - 7, 11 - 2 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் டாவி சமரவீர வெற்றிகொண்டு இந்த வருடத்திற்கான தனது முதலாவது உலக சம்பியன் படத்தை சுவீகரித்தார். இதனைத் தொடர்ந்து தோஹா, லுசெய்ல் விளையாட்டுத் தொகுதி அரங்கில் ஜனவரி 19 முதல் 25 வரை நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் டேபிள் டென்னிஸ் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சவூதி அரேபிய வீரர் ரெயான் அல்மஞ்சூமியை எதிர்த்தாடிய டாவி சமரவீசர 11 - 9, 11 - 7, 11 - 9 என்ற புள்ளிகளைக் கொண்ட 3 நேர் செட்களில் வெற்றிபெற்று இரண்டாவது உலக சம்பியன் படத்தை வென்றெடுத்தார். பத்து வயதான டாவி சமரவீர, கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரியின் 6ஆம் வகுப்பு மாணவராவார். டாவியும் அவரது தந்தையும் பயிற்றுநருமான ஹசித்த சமரவீரவும் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தனர். அவர்களை கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள், டாவி சமரவீரவின் தாயார், சகோதரர், இலங்கை மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் தயா சமரவீர ஆகியோர் உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர். https://www.virakesari.lk/article/237060
-
'டித்வா' புயல் அனர்த்தம்: 173 பேர் மாயம்; 649 பேர் பலி!
'டித்வா' புயல் அனர்த்தம்: 173 பேர் மாயம்; 649 பேர் பலி! Jan 26, 2026 - 06:01 PM 'டித்வா' (Ditwa) புயலினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாகத் தொடர்ந்தும் 173 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 69 பேரும், கேகாலை மாவட்டத்தில் 38 பேரும் காணாமல் போயுள்ளனர். ஜனவரி 25 ஆம் திகதிக்கான அறிக்கையை வெளியிட்டுள்ள அந்த நிலையம், நுவரெலியா மாவட்டத்தில் 32 பேர் காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த அனர்த்த நிலைமை காரணமாக 649 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் அதிகளவானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அந்த எண்ணிக்கை 243 எனவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், பதுளை மாவட்டத்தில் 89 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 81 பேரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், தொடர்ந்தும் 85 பாதுகாப்பு நிலையங்களில் 6,680 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmkv5bx6t04fro29nusocak56
-
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல் Jan 26, 2026 - 03:32 PM இலங்கையின் முதியோர் மக்கள்தொகையில் சுமார் 30 வீதமானோர் மனநலப் பிரச்சினைகளைக் கொண்டுள்ளதாக முதியோர் உளவியல் நிபுணர் வைத்தியர் மதுஷானி டயஸ் தெரிவிக்கின்றார். இன்று (26) கொழும்பில் நடைபெற்ற 'மன அபிவிருத்தி ஊடாக வாழ்க்கை மாற்றம்' எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவர்களில் 60 அல்லது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையில் முதியோர் மக்கள்தொகை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும், அதற்கமைய முதியவர்கள் எதிர்நோக்கும் இந்த மனநலப் பிரச்சினைகள் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதனால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் மதுஷானி டயஸ் மேலும் தெரிவித்தார். சில வேளைகளில் வயது முதிர்வின் போது ஏற்படும் சில மனநோய் அறிகுறிகள் குறித்து மூடநம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்க சமூகம் தூண்டப்பட்டுள்ளதாகவும், அதனை ஒரு சாதாரண நிலைமையாகக் காண்பித்து வருவதாகவும் குறிப்பிட்ட வைத்திய நிபுணர் மதுஷானி டயஸ், மறதி மற்றும் மனச்சோர்வு போன்ற நோய் அறிகுறிகளைப் புறக்கணிக்க முதியவர்கள் பழகியுள்ளதாகவும் தெரிவித்தார். இவ்வாறாக முதியோர் மத்தியில் மனநலப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுவதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக உடல் ரீதியான சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் மேலும் குறிப்பிட்டார். தேசிய மனநல காப்பகத்தில் 1999 ஆம் ஆண்டு முதியவர்களுக்கென விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இரண்டு தங்கியிருந்து சிகிச்சை பெறும் விடுதிகள் உள்ளதாகவும், அண்மையில் 'தீகாயு' எனும் பெயரில் பகல்நேர சிகிச்சை நிலையம் ஒன்று உளச்சிகிச்சை மற்றும் நடத்தை முறைகள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkv00oqv04f6o29n7kk417qm
-
வரலாற்றில் முதல்முறையாக 5,000 டொலரை தாண்டியது தங்கத்தின் விலை!
வரலாற்றில் முதல்முறையாக 5,000 டொலரை தாண்டியது தங்கத்தின் விலை! 26 Jan, 2026 | 02:57 PM வரலாற்றில் முதல்முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலர்களை எட்டியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் விலை 60 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்திருந்த நிலையில், இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவிற்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால் கனடா மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/237041
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
WTCC (உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக்குழு) முன்னர் சுவிசில் ஆவணமோசடி, கடன் பெற்றுக்கொடுத்தது போன்ற வழக்கின் பின்னர் திவாலாகியது. கடந்த வருடத்திலிருந்து மீண்டும் அதே பெயருடன் புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. அந்த நிர்வாகத்தில் அண்ணனும் ஒருவர். இண்டையத்தளத்தில் வெளிப்படையாகவே உள்ள பதிவு தான். WTCCஇன் வளர்ப்பே போலி துவாரகா என்பது அனைவரும் அறிந்ததே. இந்த அரசியல் என்னவென்று எனக்கு புரியவில்லை. இவரை எப்படி சுவிஸ் அரசாங்கமும், பத்திரிகைகளும் இது பற்றி கேள்வி எழுப்பாமல் இந்த பதவியில் அமர்த்தியிருக்கின்றன என்பதும் எனக்கு புரியவில்லை.
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
சுத்துமாத்து சுமந்திரன் தனது இருப்பை தக்க வைத்து கொள்ள, தனது வெற்றியை உறுதிப்படுத்த, தனது சொந்த வாக்கு வங்கியை அதிகப்படுத்த, தமிழரசு கட்சியை அதன் யாப்பை காட்டி எப்படி எல்லாம் சிதைத்தார். தமிழ் தேசிய ஆதரவாளர்களை நீக்கி, தமிழ் தேசிய உணர்வாளர்களை நீக்கி, தமிழ் தேசிய நீக்கம் செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள். A. மாவை சேணாதிராசாவை செயற்படவிடாமல் செய்தார் B. அருந்தவபாலனை ஓரம் கட்டினார் C. அரியநேத்திரனை வெளியேற்றினார் D. சிவகரனை தள்ளி வைத்தார் E. சிவமோகனை கலைத்தார் F. விக்னேஸ்வரனை முடக்கினார் G. அனந்தியை வெளியேற்றினார் H. தவராசாவை ஓரம்கட்டினார் I. சரணவபவனை கலைத்தார் J. அன்பில் செவ்வேஸ்ஸை முடக்கி வைத்திருக்கிறார் K. சசிகலா ரவிராஜ் மௌனியாக்கப்பட்டார் L. குகதாசனை ஓரம் கட்டுகிறார் M. கோடீஸ்வரனை ஓரம் கட்டுகிறார் N. சிறீநேசனை முடக்க நினைக்கிறார் O. சத்தியலிங்கம் தமிழ் தேசியம் பற்றி கதைத்தால் தேசிய பட்டியலை பறிப்பேன் என்று கூறி அடிமையாக்விட்டார் P. ரவிகரனின் தேசியபற்றை முடக்குகிறார் Q. சிவஞானத்தை ஊமையாக்கி தனது புகழ் பாடும் அடிமையாக்கி வைத்திருக்கிறார் R. சுரேஸ் பிரேமசந்திரனை ஓட வைத்தார் S. சித்தாத்தன் பிரிந்து போனார் T. அடைக்கலநாதன் வெளியேறினார் U. டக்கிளசுடன் கொஞ்சி குலாவுகிறார் V. சந்திரகுமாருடன், கபிலனுடன், சந்திரசேகருடன், இளங்குமரனுடன் பின்கதவால் உறவு வைத்திருக்கிறார் W. இப்போது தனது வடமாகாண முதலமைச்சர் கனவு வெற்றி பெற சுரேசுடனும் சித்தார்த்தனுடனும் செல்வத்துடனும் சந்திரகுமாருடனும் சேர்ந்து வடமாகாண சபையில் போட்டியிட பார்க்கிறார் X. வடமாகாண சபையில் போதிய ஆசனம் கிடைக்காவிட்டால் டக்கிளசுடனோ Nppஉடனோ கூட்டணி வைத்து முதலமைச்சர் ஆக திட்டமிடுகிறார் Y. தற்போது சிறீதரனை வெளியேற்ற சதி பண்ணுகிறார் Z. தற்போது சுமந்திரன் மத்திய குழு செயற் குழு என்ற பெயரில் தன்னை எதிர்த்து கேள்வி கேட்க வக்கற்ற தனது அடிமைச் செம்புகளையும் தனக்கு வாளி வைப்பவர்களை மட்டுமே வைத்துள்ளார் வாழ்க சுமந்திரனின் தமிழரசுக் கட்சி. Roy Roy
-
நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம்
26 Jan, 2026 | 06:11 PM நுவரெலியாவில் Pick Me செயலிக்கு எதிராக சாரதி சங்கத்தினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் கையெழுத்துக்களை சேகரித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது, இன்று திங்கட்கிழமை (26) நுவரெலியா மாநகர சபை மைதானத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நுவரெலியா - பதுளை பிரதான வீதியூடாக வாகனங்களில் கருப்புக் கொடி பறக்கவிட்டு வாகனத்தில் பேரணியாக பிரதான நகரை சுற்றி வந்து அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இறுதியில் தங்களுடைய கையெழுத்துக்களுடனான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும், நுவரெலியா மாநகர சபை முதல்வருக்கும் நுவரெலியா தலைமை பொலிஸ் பரிசோதகருக்கும் கையளிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட சாரதிகள் கருத்து தெரிவிக்கையில், “Pick Me” நிறுவனத்தின் முச்சக்கரவண்டிகள் உள்ளிட்ட வாகன சவாரிகளில் ஈடுபடுவோர் நுவரெலியாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்து இறக்கிவிட்ட பின்னர் மீண்டும் நுவரெலியாலிருந்து செல்லும் போதும் Pick Me செயலி மூலம் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். நுவரெலியாவில் ஆரம்பத்தில் Pick Me செயலி பாவனை குறைவாக காணப்பட்டது. ஆனால் இப்போது அனைவரும் நிரந்தர பயன்பாட்டில் உள்ளன. குறிப்பாக சுற்றுலாப்பயணிகளும் பொது மக்களும் அதனை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதன் காரணமாக நீண்ட காலமாக முச்சக்கரவண்டி மற்றும் ஏனைய வாகனங்களில் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் நாங்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்குகின்றோம். மேலும், நுவரெலியா சுற்றுலாவிற்கு ஒரு பிரதான தளமாகும். இங்கே ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணமுள்ளனர். இவர்களிடம் Pick Me செயலி மூலம் இரகசியமான முறையில் பணம் பரிமாற்றம் செய்து ஏற்றிச் செல்கின்றனர். அத்துடன் கூடிய தூரத்திற்கு, குறைந்தளவு பணத்தை வாங்கிக்கொண்டு பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். இது போன்று செய்தால் காலை முதல் இரவு வரை இந்த தொழிலை நம்பியிருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர். சாரதிகள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டும் கோஷம் எழுப்பியும் சாரதிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டும் வரையில் தொடர்ச்சியான எதிர்வரும் நாட்களில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக நுவரெலியாவில் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நுவரெலியாவில் மீண்டும் pick meக்கு எதிராக போராட்டம் | Virakesari.lk
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
சீன வாகனங்களும் ஐரோப்பிய சந்தையைப் பிடித்து விட்டதாக சொல்கிறார்களே? கனடாவுக்கும் வந்து இறங்கப் போகுது. எல்லை தாண்ட ரம் விடுவாரா தெரியவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொழும்பில் நடக்கும் போட்டிக்கு ரிக்கட் விற்று முடிந்துவிட்டது.😂
-
அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு
Deadly cold settles in: At least 11 people have died in the coldest temperatures of the winter. Over 250 million people are under cold alerts for frigid temps that will linger for days, raising fears for those without shelter or power. • Crippling blow: More than 800,000 customers are still without power after damaging ice knocked it out. Here’s what to do if you’re without power. • No travel, no school: Sunday was the worst day for flight cancellations since the pandemic. Over 19,000 flights have been canceled during this storm. Schools in major cities have canceled classes or moved to remote learning for Monday. • Over a foot of snow: A staggering 31 inches of snow fell during the storm and 17 states have seen snow pile up a foot or higher. See all our maps and charts of the storm here. https://www.cnn.com/weather/live-news/winter-storm-forecast-snow-ice-01-25-26-climate
-
யாழ்ப்பாணத்தில் பொங்கிய அனுர: தேசிய மக்கள் சக்தியின் வியூகம் என்ன? - நிலாந்தன்
தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தினை இழந்தால், அது தமிழர்களிற்கு மேலும் நெருக்கடியாகிவிடும், ஆனால் தமிழ்க்கட்சிகள் சிறு சிறு கட்சியாக சிதறுண்டிருந்தால் பலமான ஒரு பிரதிநிதித்துவத்தினை எட்ட முடியாது, சிங்கள ஆட்சியாளர்கள் என்றும் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளாகக்கூடாது, அது மிகவும் ஆபத்தானது, தமிழர்களும், முஸ்லீம்களும் தமது உரிமைகளை பெறுவதற்கு தமக்குள் ஒருமித்த பெரும் சக்தியாக இருத்தல் வேண்டும் (தமிழர்களுக்கு தமிழ்தேசிய கூட்டணி, முஸ்லீம்களுக்கு முஸ்லீம் காங்கிரஸ் போல). புலிகள் இருந்த காலத்தில் தமிழ் தேசியம் ஒரு சாத்தியமான விடயமாக இருந்தது, ஆனால் தற்போது வட கிழக்கு இணைப்பினையே ஒரு பிரிவினை வாதமாக பார்க்கிறார்கள், 13 இனை இந்திய தலையீட்டின் பகுதியாக பார்க்கிறார்கள். தற்போதய ஒற்றை ஆட்சி இலங்கைக்குள் அரசு விரும்பியதை செய்யும் நிலையில் உள்ளது. இவற்றை மீறி ஒரு அதிகார பரவலாக்கமே சாத்தியமா என தெரியவில்லை. தற்போதுள்ள இலங்கை அரசியல் சட்டத்தில் 1காணி, சட்டம், நிதி போன்ற அதிகாரமற்ற நிலையே காணப்படுகிறது. இந்த விடயங்களை அடைவதே எட்டாக்கொம்பாக உள்ளது, கூட்டாட்சி, சுயநிர்ணய உரிமை என்பது நினைத்தே பார்க்க முடியவில்லை.
-
ஐரோப்பிய ஆணைய ஆவணம் 2027 ஆம் ஆண்டுக்குள் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஓர்பன் கூறுகிறார்.
பெரிய மீனுள்ள சமுத்திரத்தில் சின்ன மீனும் இருக்கின்றது அது போலத்தான்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
நிபந்தனையின்றி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட தயார் - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு
உந்தக்கருத்தை டக்கிளஸ் ஏற்கெனவே சொல்லிவிட்டார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தற்போதைய தரவரிசையில் உகண்டா 21 ஆம் இடத்தில் இருக்கிறது. முதல் 20 இடங்களில் 19 அணிகள் இம்முறை உலக கிண்ண போட்டி விளையாடவுள்ளது. மற்றைய அணி வங்காளதேசம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் விளையாடவிட்டால் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான கொழும்பில் நடைபெறவுள்ள ஆரம்ப சுற்று போட்டியில் பாகிஸ்தானுக்கு பதிலாக விளையாடும் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெறுமா அல்லது (இந்தியாவுக்கு சார்பான?) ஐசிசி போட்டியை இந்தியாவில் நடாத்துமா?
-
கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.