All Activity
- Past hour
-
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
கிளங்கன் வைத்தியசாலை விவகாரம் – திகாம்பரம் MP கருத்து! கிளங்கன் வைத்தியசாலையில் பிண அறையில் ஒரு பெண்ணின் சடலம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் தன்னுடைய கவலையினையும் கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருப்பின் மிகவும் அருவருக்கதக்க விடயமாகும். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வைத்தியசாலை நிர்வாகம் சுயாதீனமான, நீதியான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும். கிளங்கன் வைத்தியசாலை நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பிரதான ஆதார வைத்தியசாலையாகும். இவ்வைத்தியசாலையினை நம்பியே மலையக பெருந்தோட்ட மக்கள் உள்ளனர். இந்த சம்பவம் வைத்தியசாலையினை நம்பியிருக்கின்ற மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்துவதோடு நம்பகத்தன்மையினையும் இல்லாமல் செய்கின்ற விடயமாகும். இதுத்தொடர்பில் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுடன் பேசி உரிய நடவடிக்கைகளை பக்கசார்பின்றி முன்னெடுக்குமாறு கூறியுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னுடைய அனுதாபத்தினையும், கவலையினையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1467178
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சிறியர் இந்த விடையயம் சங்கீதாவுக்கு முன்பே எனக்கு தெரியும்.சும்மா சோதிச்சுப் பார்த்தனான்.🤣
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அவர் தெரிவித்தபடி விஜையின் கொள்கை தலைவராக பெரியாரை வைத்திருப்பது தான் காரணம் சீமான் விஜய் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் உள்ள மிகபெரும்பான்மையினர் தீவிர பெரியாரிஸ்ட்டுகள். 👇 விஜையின் கொள்கைத்தலைவராக பெரியாரை வைத்திருப்பது சரியாகத்தான் இருக்கிறது. பெரியாரிஸ்ட்டுகள் திருமணம் கடந்த உறவு என்று அதற்கு நல்ல பெயரும் வைத்திருக்கிறார்கள்.
-
ஆப்பிளின் iPhone 17e மொடல் இன்று அறிமுகம்!
ஆப்பிளின் iPhone 17e மொடல் இன்று அறிமுகம்! லண்டன், நியூயார்க் மற்றும் ஷாங்காய் ஆகிய நகரங்களில் ஆப்பிள் நிறுவனம் இன்று பிரம்மாண்டமான சிறப்பு நிகழ்வை நடத்துகிறது. இதில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மலிவு விலை ஐபோன் மாடலான iPhone 17e அறிமுகம் செய்யப்படவுள்ளது. சுமார் $599 (இந்திய மதிப்பில் ₹50,000) விலையில் வரவுள்ள இந்த போனுடன், மாணவர்களைக் கவரும் வகையில் அதே விலையில் புதிய 12-இன்ச் மேக்புக் (MacBook) மாடலும் இன்று வெளியாகும் எனத் தெரிகிறது. https://athavannews.com/2026/1467166
-
ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!
ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு! இஸ்ரேல் – அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் உயிரிழந்த ஈரானின் உயர் தலைவர் கொமெய்னியின் உடல், ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் ஈரானின் புதிய உயர்த் தலைவரராக அவரது 56 வயதான மூத்த மகனான மொஜ்தபா கொமெய்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொமெய்னியின் தந்தையை அடக்கம் செய்த நினைவிடத்துக்கு அருகிலேயே அவரை புதைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாகவும் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன. கொமெய்னியின் உடல் அவரது பிறந்த ஊரான மஷாத்தில் உள்ள புகழ்பெற்ற ஷியா புனிதத் தலமான இமாம் ரெசா நினைவிடத்தில் (Imam Reza shrine) அவரது தந்தையின் கல்லறைக்கு அருகிலேயே நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. மஷாத்துக்கு கொண்டு செல்வதற்கு முன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கிராண்ட் இமாம் கொமெய்னி தொழுகை கூடத்தில் (Grand Imam Khomeini Prayer Hall) ஒரு பிரமாண்ட பொது விடைபெறும் நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதிச் சடங்குகள் இடம்பெறும் திகதிகள் மற்றும் நேரம் தொடர்பில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் இரகசியமாகவே அவற்றை அரசு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தலைநகர் தெஹ்ரானின் நடுப்பகுதிகளில் ஏற்கனவே பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து பெப்ரவரி 28ஆம் திகதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய தாக்குதலில் கொமெய்னி கொல்லப்பட்டார். அவரது மறைவையொட்டி, ஏற்கனவே ஈரானில் 40 நாட்கள் தேசிய துக்க தினமும் 07 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1467150
-
4 நாடுகளுக்கு மாணவர் விசா வழங்கலை நிறுத்திய இங்கிலாந்து!
4 நாடுகளுக்கு மாணவர் விசா வழங்கலை நிறுத்திய இங்கிலாந்து! இந்த மாதம் முதல் ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கான விசா வழங்குவம் நடவடிக்கையை இங்கிலாந்து அரசு நிறுத்தும் என்று உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆப்கானியர்களுக்கு திறமையான வேலை விசாக்களையும் நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசா துஷ்பிரயோகம் பரவலாக இருப்பதாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, நான்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் முதலில் இங்கிலாந்துக்கு கல்வி பயில்வதற்காக வந்த பின்னர் புகலிடம் கோருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அரசாங்கம் தனது வெளியீட்டில், 2021 மற்றும் 2025 க்கு இடையில் சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்குச் சென்றவர்களிடமிருந்து – கல்வி போன்ற ஏதாவது ஒன்றைச் செய்வதற்காக – புகலிடம் கோருபவர்கள் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறியது. https://athavannews.com/2026/1467147
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
- Today
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
அறுபதை அறுபது வெல்லுமா முடிவிலே?😊
-
வசந்தம் வருகிறது
suvy , ஊசி போட்டுக் கொள்வது பற்றி நீங்கள் குறிப்பிடுவது சரிதான். எனது குடும்ப வைத்தியரிடம் இதைப்பற்றி கதைத்திருக்கின்றேன். எனக்குள்ளது பருவகால மாற்றத்தினால் ஏற்படும் ஒவ்வாமை. ஒன்றில் இருந்து இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சரியாகிவிடும். ஊசி போட்டுக் கொள்வதால் ( மிகச் சிறிய அளவில் அந்த மகரந்தப் புரதம் (allergen) உடலுக்குள் ஊசி மூலம் செலுத்துதல்) உடல் மெதுவாக அதற்கு பழகி விடும். காலப்போக்கில் ஒவ்வாமைத் தாக்கம் குறையும். ஆனால் ஒரு தடவை ஊசி போடுவது போதும் என்றில்லை, 3-5 ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் போட வேண்டும் என்று வைத்தியர் சொன்னார். ஆரம்பத்தில் போட்டுக் கொண்டேன். வேலை நிமித்தம் தொடர்ந்து ஊசி வைத்தியத்தை செய்யவில்லை. தற்காலிக நிவாரணமாக குளிசை போட்டுக் கொண்டேன். மூக்கடைப்பு ஏற்படும் போது Nasal Steroid Spray யும் பாவித்துக் கொள்வேன். அதுவும் பழகிவிட்டது. வீட்டில் ஒருதடவை தும்மினால், “ மனுசனுக்கு ஒவ்வாமை வந்து விட்டது. குளிசையைப் போட்டுட்டு படுக்கப் போய்விடுவான்” என்று எண்ணம் வர வீட்டு வேலைகள் குறைய வாய்ப்பிருக்கின்றது. 😉
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அப்ப சீமான் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தது என்ன கணக்கு. முப்பாட்டன் முருகன் இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தாதால் அதை பின்பற்றி செபஸ்டியன் சீமானும் வைத்திருந்தார் என்று கூறிவீர்களா புலவரே!
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல் 04 Mar, 2026 | 03:21 PM சவூதி அரேபியா, குவைத்தைத் தொடர்ந்து துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீதும் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தூதரகக் கட்டடம் தீப்பிடித்து, அதிலிருந்து கருப்பு புகை வெளிக்கிளம்பிய நிலையில், உடனடியாக தீயணைப்பு படையினர் அத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதையடுத்து, அனைத்து தூதரக ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது ட்ரோன் தாக்குதல்
-
உடல் எடையை குறைக்க பழங்களை மட்டுமே உண்ணும் 'ஃப்ருடேரியன் டயட்' சிறந்ததா?
உடல் எடையை குறைக்க பழங்களை மட்டுமே உண்ணும் 'ஃப்ருடேரியன் டயட்' சிறந்ததா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஷண்முகப்ரியா செல்வராஜ் பிபிசி தமிழுக்காக 4 மார்ச் 2026, 02:36 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் உலகளாவிய மக்கள் தொகையில் எட்டு பேரில் ஒருவர் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கைப்படி, 1990ஆம் ஆண்டு முதல் உலகளவில் பெரியவர்களிடையே உடல் பருமன் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அதுவே இளம் பருவத்தினர் மத்தியில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டில், 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 890 மில்லியன் பேர் உடல் பருமனுடன் வாழ்கின்றனர். அதோடு, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 43% பேர் அதிக எடை கொண்டவர்களாகவும், 16% பேர் உடல் பருமனுடனும் வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அளவுக்கு மீறிய எடையுடன் இருப்பது அல்லது உடல் பருமனுடன் இருப்பது என்பது உணவுமுறை, உடல் செயல்பாடு ஆகியவற்றின் சமநிலையின்மையால் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடல் பருமன் என்பது சுற்றுச்சூழல், உளவியல்-சமூக காரணிகள், மரபணு மாறுபாடுகள் ஆகியவற்றின் காரணமாக ஏற்படக்கூடிய ஒரு பன்முக நோய் என்கிறது உலக சுகாதார அமைப்பு. இதன்படி பார்க்கும்போது, கடந்த முப்பது ஆண்டுகளில் உடல் பருமன் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மக்கள் அதற்கான மாற்றைத் தேடி சில உணவு முறைகளை முயல்வது வழக்கமாகியுள்ளது. அதில் ஃப்ருடேரியன் (fruitarian) என்றழைக்கப்படும் ஓர் உணவுமுறையும் அடங்கும். அதாவது, பச்சைப் பழங்கள், நட்ஸ், விதைகள் ஆகியவற்றை மட்டுமே உணவாக உட்கொள்ளும் உணவுமுறை. பழங்களை மட்டும் உண்ணும் உணவு முறை உடலுக்கு நல்லதா? இந்த உணவுமுறை உடல் எடையைக் குறைப்பதில் பங்கு வகிப்பதாகப் பலரால் கருதப்பட்டாலும், அது உண்மையில் ஆரோக்கியமானதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதால் உடல் எடை குறையும் என்பது உண்மைதான் என்றாலும் அது ஆரோக்கியமற்றது என்கிறார் மருத்துவர் அருண்குமார். பட மூலாதாரம்,Getty Images அதுகுறித்து விரிவாகப் பேசிய அவர், "பழங்களை மட்டுமே உண்ணும் ஃப்ருடேரியன் டயட்டை பின்பற்றுவோருக்கு ஒரு நாளைக்கு 80 முதல் 90 சதவிகித கலோரி பழங்களில் இருந்தே கிடைத்துவிடுகிறது. பொதுவாகவே பழங்களில் கலோரி அளவு குறைவு என்பதால் ஒரு நாளைக்கு மொத்தமாகவே 1500 கலோரிகளை தான் உட்கொள்ள முடியும். இதன் விளைவாக கலோரி தட்டுப்பாடு ஏற்பட்டு எடை குறைய வாய்ப்புள்ளது. ஆனால் பழங்களை மட்டுமே உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும் வாய்ப்பு தடைபடுகிறது. இதனால், தசை இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது," என்று எச்சரித்தார். மேற்கொண்டு பேசிய மருத்துவர் அருண்குமார், "உடலுக்குத் தேவையான முக்கிய சத்துகளான இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா 3 போன்ற சத்துகள் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகளும் இந்த உணவுமுறையைப் பின்பற்றுவதால் அதிகரிக்கிறது. அதேபோல, பழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலில் ஃபிரக்டோஸ் சர்க்கரை அளவு அதிகமாகி டிரை கிளிசரைடு கொழுப்பையும் கல்லீரல் கொழுப்பையும் அதிகரிக்கச் செய்து, உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கும்" என்று விளக்கினார். உடல் எடையைக் குறைக்க இது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்று எச்சரிக்கும் அவர், பழங்களை எடை குறைப்புக்குத் தேவையான அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றாலும் அவற்றை மட்டுமே முழுமையான உணவாகப் பின்பற்றுவது அபாயகரமானது என்கிறார் . பட மூலாதாரம்,Getty Images பச்சைப் பழங்கள், நட்ஸ், விதைகள் ஆகியவற்றையே பெரும்பான்மையாகக் கொண்ட இந்த உணவுமுறையை முழுமையாக பின்பற்றினால் குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்று பல்வேறு ஆய்வுகளும் சுட்டிக் காட்டுகின்றன. அமெரிக்காவை சேர்ந்த லாப நோக்கமற்ற மருத்துவ அமைப்பான மாயோ கிளினிக்கின் கூற்றுப்படி, பிரத்யேக பழ உணவுகளில் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள், கால்சியம், இரும்பு, வைட்டமின் பி12 ஆகியவை குறைவாக இருப்பதால், தசை இழப்பும், நோய் எதிர்ப்பாற்றல் பலவீனமாதல் மற்றும் ரத்த சோகை ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். விளையாட்டு ஊட்டச்சத்துக்கான சர்வதேச சங்கத்தின் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், குறைந்த புரதம் உட்கொள்ளுதல் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை பாதிக்கும் எனக் கூறுகிறது. இந்தக் காரணிகள் நீண்டகால ஆரோக்கியத்திற்கு சமச்சீர் ஊட்டச்சத்து மூலங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன. சிக்கன், மட்டன் சாப்பிட்டால் தொப்பை வருமா? முற்றிலும் பழங்களே அடங்கிய உணவுமுறை மீதான ஆர்வத்தைப் போலவே இன்று பலரிடமும் இருக்கும் மற்றுமொரு நம்பிக்கை சிக்கன், மட்டன் சாப்பிடுவதால் தொப்பை வருகிறது என்பதாகும். அதுகுறித்துப் பேசிய மருத்துவர் அருண்குமார், "சிக்கன், மட்டனை சரியான அளவில் எடுத்துக்கொண்டால், அவை உடல் எடையைக் குறைக்க உதவும்" என்றார். "அதிகப்படியான கலோரிகள், மாவுச்சத்து ஆகியவை இன்சுலின் சுரப்பை அதிகமாகத் தூண்டுவதால், உடலில் அவை கொழுப்பாகச் சேர்கின்றன. அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை அளவுக்கு மீறி உட்கொள்ளும்போது அவை வயிற்றைச் சுற்றி கொழுப்பாக சேர்கின்றன. ஆகவே, தொப்பைக்குக் காரணம் அதிக மாவுச்சத்து, அதிக கலோரி அளவு மற்றும் இன்சுலினை தூண்டும் வகையிலான உணவுகளை உட்கொள்ளுதல்தான்" என்று தொப்பை வருவதன் அறிவியல் பின்னணியை விளக்கினார். அதோடு, தேவையான அளவில் சரியான விகிதத்தில் மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி உணவுகளை எடுத்துக்கொண்டால், அது உடல் எடையைக் குறைப்பதற்கான சரியான உணவாக இருக்கும் என்று கூறிய அவர், "அவற்றுடன் சேர்த்து நாம் எந்த உணவை எடுத்துக்கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்" என்றும் எச்சரித்தார். இறைச்சி உணவுகளுடன் கலோரிகள் அதிகமில்லாத ஆரோக்கியமான உணவைத் தேவையான அளவில் எடுத்துக் கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும் எனவும் அவர் பரிந்துரைத்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு உடல் எடையை குறைக்க பழங்களை மட்டுமே உண்ணும் 'ஃப்ருடேரியன் டயட்' சிறந்ததா?
-
-
ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
ஐரோப்பாவை அவமதிக்கும் போது நேட்டோவை பலவீனபடுத்த முயற்சித்த போது இவர் நினைத்து பார்த்திருக்க வேண்டும்
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அமைதி மார்க்கத்தினர் ஈரான் வெற்றி பாடல் என்று நோன்பு நாளில் வேட்ட ஆட வந்தாயா இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று ஒரு பாட்டு காணொளி போட்டு அழுகின்றனராம் 🤣
-
போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சீனா எச்சரிக்கை
போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சீனா எச்சரிக்கை Mar 4, 2026 - 02:45 PM பலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய நீண்டகால விளைவுகளையும் மாத்திரமே ஏற்படுத்தும் எனவும் சீனா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது. எனவே, மோதல்கள் மேலும் தீவிரமடைவதையும் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதையும் தடுப்பதற்காக இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சீனா கோரியுள்ளது. இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிதியோன் சார் உடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சர்வதேச உறவுகளில் உலக நாடுகள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது அத்தகைய அச்சுறுத்தல்களை விடுக்கக்கூடாது என சீன வெளிவிவகார அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார். இஸ்ரேல் உட்பட அனைத்துத் தரப்பினரின் அடிப்படைத் தேவைகளுக்கும் இது பொருந்தும் என அவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியான சிக்கலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்ப்பதற்கு சீனா எப்போதும் முன்னுரிமை அளிப்பதாகவும், அனைத்துத் தரப்பினரும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான அண்மைய பேச்சுவார்த்தைகள், இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் உள்ளடக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ள போதிலும், துரதிர்ஷ்டவசமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள ஆயுத மோதல்களால் அந்த முயற்சிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சர் கவலை தெரிவித்தார். மத்திய கிழக்கு பிரச்சினை தொடர்பில் எப்போதும் நடுநிலையான மற்றும் நியாயமான நிலையில் இருக்கும் சீனா, மோதல்களைக் குறைப்பதில் தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் எனவும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு சீனா எச்சரிக்கை
-
இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 200 முழுமையான புலமைப்பரிசில்கள்: விண்ணப்பங்கள் கோரல்
இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 200 முழுமையான புலமைப்பரிசில்கள்: விண்ணப்பங்கள் கோரல் Published By: Digital Desk 3 04 Mar, 2026 | 12:59 PM இலங்கை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், இந்திய அரசாங்கம் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்காக 200 முழுமையான நிதியுதவியுடனான (Fully-funded) புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. மருத்துவம், துணை மருத்துவம் மற்றும் சட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பாடத்துறைகளிலும் இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் திட்டங்கள் அனைத்து மட்டங்களிலுமான கற்கைகளுக்காக பின்வரும் நான்கு பிரதான திட்டங்களின் கீழ் மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டம் (Nehru Memorial Scholarship): பொறியியல், அறிவியல், வணிகம், பொருளாதாரம், கலை மற்றும் மானுடவியல் ஆகிய துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி (PhD) பட்டப்படிப்புகளுக்கு இது பொருந்தும். மௌலானா அசாத் புலமைப்பரிசில் திட்டம் (Maulana Azad Scholarship): பொறியியல், அறிவியல் மற்றும் விவசாயத் துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் முதுகலைப் பட்டப்படிப்புகள் (Masters). ராஜீவ் காந்தி புலமைப்பரிசில் திட்டம் (Rajiv Gandhi Scholarship): தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) இளங்கலை பொறியியல் (B.E) மற்றும் தொழில்நுட்ப (B.Tech) பட்டப்படிப்புகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் காமன்வெல்த் திட்டம்: பொறியியல், அறிவியல், வணிகம் உட்பட பல்வேறு துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் கலாநிதி பட்டப்படிப்புகளுக்குப் பொருந்தும். மாணவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள்: தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு முழுமையான கல்விக்கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதுடன் பின்வரும் மேலதிக வசதிகளும் வழங்கப்படும்: மாதாந்த வாழ்வாதாரக் கொடுப்பனவு புத்தகங்கள் மற்றும் எழுதுகருவிகளுக்கான வருடாந்த கொடுப்பனவு. இந்தியாவுக்கான விமானப் பயணச் சீட்டு. கல்விச் சுற்றுலாக்களுக்கான விசேட நிதி உதவி. பல்கலைக்கழக வளாகத்தினுள்ளேயே தங்குமிட வசதி (Hostel facility). விண்ணப்பிக்கும் முறை தகுதியான விண்ணப்பதாரிகள் இலங்கை கல்வி அமைச்சின் ஆலோசனையுடன் மெரிட் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். இது தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் தகுதி அளவுகோல்களை www.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் விரைவில் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கல்விப் பிரிவை (eduwing.colombo@mea.gov.in) அல்லது இலங்கை கல்வி அமைச்சைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/240123
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஆனைக்குட்டியின் சிரிப்பில் அள்ளுண்டு போகுது நெஞ்சம்.........! 😂
-
ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
பிரித்தானியா மற்றும் ஸ்பெயினை கடுமையாகச் சாடினார் ட்ரம்ப்! Mar 4, 2026 - 02:18 PM மத்திய கிழக்கு போரின் போது பிரித்தானியா மற்றும் ஸ்பெயின் செயற்பட்ட விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு வருகை தந்திருந்த ஜேர்மனிய ஜனாதிபதி பிரெடெரிக் மெர்ஸ் உடனான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார். “ஸ்பெயின் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை. பிரித்தானியாவும் அவ்வாறே செயற்படுகிறது. பிரித்தானியாவின் நிலைமை அதைவிட மோசமானது. இது சர்ச்சிலின் காலம் அல்ல. பிரித்தானியா எந்த உதவியும் செய்யவில்லை.” தாம் ஈரானைத் தாக்குவதைத் தாமதப்படுத்தியிருந்தால், அவர்கள் அமெரிக்காவைத் தாக்கத் தயாராக இருந்திருப்பார்கள் என ட்ரம்ப் மேலும் வலியுறுத்தினார். இதேவேளை, ஈரான் தற்போது பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும், இப்போது அதற்கு மிகவும் காலம் கடந்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். நாம் முதலில் தாக்க வேண்டும் என்பதே எனது கருத்தாக இருந்தது. அவர்கள் எம்மைத் தாக்கவிருந்தார்கள். நாம் அவ்வாறு தாக்காதிருந்தால், அவர்கள் முன்கூட்டியே எம்மைத் தாக்கியிருப்பார்கள். அதை நான் நன்றாக உணர்ந்தேன். எம்மிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் படி, அவர்கள் முதலில் தாக்குதலுக்குத் தயாராவதாகவே எனக்குத் தோன்றியது. அதற்கு என்னால் இடமளிக்க முடியாது. புதிதாக பதவியேற்கும் தலைவர் முன்னையவரை விட மோசமானவராக இருந்தால் என்ன செய்வது? அவ்வாறு நடப்பதை நான் விரும்பவில்லை. ஈரான் மக்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இப்போதைக்கு வெளியே சென்று போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அவர்களுக்குக் கூறியுள்ளோம். ஏனெனில் தற்போதைய சூழல் மிகவும் அபாயகரமானது," என ட்ரம்ப் விரிவாக விளக்கமளித்தார். பிரித்தானியா மற்றும் ஸ்பெயினை கடுமையாகச் சாடினார் ட்ரம்ப்!
-
குட்டிக் கதைகள்.
eotrnSposd1a75f67 414ég5a72067,ev2igl37tru2g7hr 4ic0g2tt:30h · 1962 ஆம் ஆண்டு கலாச்சார தூதுவராக சிவாஜி அமெரிக்காவுக்கு சென்றபோது அவரின் நடிப்பு த்திறமையை கேள்விப்பட்டிருந்த ஹாலிவுட் முன்னணி நடிகர்களான ... (பென்ஹர், டென் கமாண்மெண்ட்ஸ் ஹீரோ) கார்ல்ட்ட்ன் ஹெஸ்டன், ஜேம்ஸ் கார்னர், ஜேக் லெம்மான் போன்றோரெல்லாம் தேடி ஓடி வந்தார்கள். சிவாஜியிடம் மனம்விட்டுபேசி குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டு போனார்கள். இதற்கு முன்பு இன்னொரு வெளிநாட்டு சமாச்சாரம்.. 1960… எகிப்தின் கெய்ரோ ஆப்ரோ-ஆசியா படவிழாவில் வென்ற முதல் இந்திய திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்தான். சிறந்த படம், சிறந்த நடிப்பு, சிறந்த இசை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதை அள்ளியது. விருது வாங்க சிவாஜி எகிப்து சென்றபோது அந்நாட்டின் அதிபர் நாசர் வெளிநாடு போயிருந்தார். இதனால் நாசர்-சிவாஜி சந்திப்பு நடக்காமல் போனது. பின்னர் இந்தியா வந்தபோது நாசர் இதுபற்றி பிரதமர் நேருவிடம் நினைவூட்ட தனிப்பட்ட ரீதியில் நாசருக்கு விருந்து வைக்க சிவாஜிக்கு பிரதமர் நேரு அனுமதி தந்தார் என்பது இன்னொரு வரலாறு. உலக சினிமா வட்டாரத்தில் நடிப்புமேதை என போற்றப்பட்ட மார்லன் பிராண்டோவே, சிவாஜியை நேரில் சந்தித்து பேசிய பின்னர், சொன்ன வார்தைகள் இவை.. ‘’சிவாஜியால் என் அளவுக்கு சர்வசாதாரணமாக நடித்துவிடமுடியும்.. ஆனால் அவர் அளவுக்கு என்னால் நடிக்கவேமுடியாது’’.......!
-
நாட்டை வந்தடைந்தது மாலைதீவு கடற்படை கப்பல்
நாட்டை வந்தடைந்தது மாலைதீவு கடற்படை கப்பல் 04 Mar, 2026 | 10:00 AM மாலைதீவு கடற்படை கப்பலான 'HURAVEE' 02 ஆம் திகதி நாட்டுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை மேற்கொள்வதற்காக வந்தடைந்ததுடன், மேலும் கொழும்பு துறைமுகத்தில் பாரம்பரிய முறைப்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றனர். அதன்படி, கொழும்பு துறைமுகத்திற்கு வந்த Offshore patrol vessel வகை 'HURAVEE' என்ற கப்பலானது 48.9 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் குறித்த கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கேணல் அஹமட் நபியு மொஹமட் செயல்படுகின்றார். மேலும், இந்த கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் போது, அதன் குழுவினர் கொழும்பு பகுதியில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டை வந்தடைந்தது மாலைதீவு கடற்படை கப்பல்
-
2019ல் இரத்து செய்யப்பட்ட இஸ்லாமிய தொண்டு நிறுவனப் பதிவுகளை மீண்டும் செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
சரியான வழிமொழிவு
-
இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்
குமார் சங்கக்காரவின் தந்தை சிரேஷ்ட வழக்கறிஞர் காலமானார் Published By: Vishnu 03 Mar, 2026 | 05:57 PM கண்டி மாவட்டத்தில் புகழ்பெற்ற சிரேஷ்ட வழக்கறிஞர் எஸ். கே. சங்கக்கார காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய மாகாணத்தில் பிரபல வழக்கறிஞரும் மரியாதைக்குரிய சட்ட நிபுணருமான சங்கக்கார சட்ட வட்டாரங்களிலும் சமூகத்திலும் பரவலாக அறியப்பட்டவர். அவர் புகழ்பெற்ற முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் குமார் சங்கக்காரவின் பாசமிகு தந்தை ஆவார். அன்னாரது பூதவுடல் கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த துக்க சமயத்தில் குடும்பத்தினர் கட்டுப்பாட்டை பேணுமாறு கோரியுள்ளனர். அன்னாரது பூதவுடல் நாளை புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு அன்னாரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு கண்டி மஹியாவை மயானதில் மாலை 6.00 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும். குமார் சங்கக்காரவின் தந்தை சிரேஷ்ட வழக்கறிஞர் காலமானார்
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
அலி காமேனியின் உடல் மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்படும் - ஈரான் அரசு ஊடகம் தகவல் 04 Mar, 2026 | 02:47 PM ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் நடைபெறும் என அடக்கம் செய்யப்படவுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (28) தெஹ்ரான் நகரில் அமெரிக்கவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் காமேனி கொல்லப்பட்டதையடுத்து, பல நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1939 ஏப்ரல் 19ஆம் திகதி பிறந்த காமேனியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவும் அஞ்சலி செலுத்தவும் ஈரான் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மஷாத் நகருக்குச் செல்கின்றனர். ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதுர்கள் முன்னிலையில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் இன்று (4) நடைபெற்றன. மேலும், தெஹ்ரானில் காமேனிக்கு ஒரு பிரியாவிடை நிகழ்வும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், காமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் திகதி இதுவரை வெளியிடப்படவில்லை. அலி காமேனியின் உடல் மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்படும் - ஈரான் அரசு ஊடகம் தகவல்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
eSrpdsonot4a988s56a6h24i154215,60g2041 90:mga5rm2hc4 7lfc3la · எத்தனை முறை ஒதுக்கி இருப்பார்கள், எவ்வளவு இழிவான பேச்சுக்கள், ஆனால் அத்தனையும் ஓரம் கட்டி விட்டு, சோர்ந்து போகாமல் விசுவாசத்தோடு இன்று ஜெயித்துக் காட்டியிருக்கிறார், அதோடு மட்டுமல்லாமல் போட்டி முடிந்ததும் தேவன் தந்த வெற்றிக்காக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றியும் சேர்த்து சொல்லி இருக்கிறார்,.. 💜 ஒரு மனுஷனுக்கு என்ன மாதிரி பிரச்சனை எல்லாம் வரக்கூடாதோ அத்தனை பிரச்சினைகளும் பல உருவங்களாக பல வடிவங்களில் போட்டு வாட்டி வதைத்தது ஏன் நாமே பலமுறை இந்த சஞ்சு சாம்சன் அணிக்கு தேவையில்லை என்று எழுதியதும் உண்டு அப்படிப்பட்ட ஒரு மோசமான நிலையில் இருந்து இன்று இந்தியாவை அரையிறுதி போட்டிக்கு அழைத்து சென்று இருக்கிறான் தனி ஒருவனாக இந்த உலகக் கோப்பை போட்டியை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பு போட்டிகளில் சரியான ஆட்டம் ஆடாததால் போட்டியின் பாதியிலேயே அவனிடமிருந்து விக்கெட் கீப்பிங் கிளவுஸ் கழட்டப்பட்டு அது இஷான் கிஷான் கையில் கொடுக்கப்பட்ட போது அவன் முகம் எவ்வளவு வாடியது அவன் மனம் எவ்வளவு பதறியது என்று அன்றைய நாள் நாம் லைவாக பார்க்கும்போது உணர்ந்தோம் அன்றைய நேரத்தில் சஞ்சு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோல ஒரு மோசமான நாளை இனிமேல் கண்டுவிடக்கூடாது என்று எடுத்த வைராகியம் தான் என்று இந்தியாவிற்கு உலக அரங்கில் உச்சபட்சமான வெற்றியை எடுத்துக் கொடுத்திருக்கிறது பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மிகப்பெரிய ஸ்கோர் ஆன கிட்டத்தட்ட 200 ரன்களை டார்கெட் ஆக வைத்தார்கள் இந்த ரன்னை அடிக்க வேண்டும் என்றால் ஆரம்பத்தில் இருந்தே அதிரடி தேவைப்படும் இதற்கு முன்பு உலக கோப்பை வரலாற்றில் எவ்வளவு பெரிய ரன்னை அடித்து துரத்தி வெற்றி பெற்றது என்று வரலாறே இந்திய அணிக்கு கிடையாது அப்படிப்பட்ட வரலாறை இன்று மாற்றி எழுதியிருக்கிறான் சாம்சன் அவர் 50 ரன்கள் அடித்த போதே நான் முடிவு செய்து விட்டேன் இன்று இவன்தான் போட்டியை முடித்துக் கொடுக்க போகிறான் என்று எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் முக்கியமான தருவாயில் கைவிட்டாலும் தான் கைவிடமாட்டேன் என்று இமயமலை போல ஒற்றை நம்பிக்கையாக இந்தியாவிற்கு கடைசி வரை ஜொலித்து நின்றான் சாம்சன் இறுதியாக நான் வணங்கும் கடவுள் என்னை கைவிடவில்லை என்பதை உணர்த்தும் வகையில் மைதானத்தில் முட்டி போட்டு தன்னுடைய மரியாதையை கொடுத்தபோது எவ்வளவு ஆனந்தம் இருந்திருக்கும் உண்மையில் இந்த சஞ்சுவுக்கு இது வரலாற்று சிறப்புமிக்க போட்டி இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இது போல ஒரு வெற்றியை தன் வாழ்நாளில் இதற்கு முன்பு இவர் பெற்றிருக்க மாட்டார் இதன் பின் பெறுவாரா என்பது சந்தேகம்தான் இதைவிட பல போட்டிகள் இவர் இன்னும் ஆட வேண்டியது இருந்தாலும் இந்த போட்டியில் இவர் அடித்த அடிகள் அனைத்தும் இவர் அடித்த ரன்கள் அனைத்தும் இந்திய அணியின் வரலாற்றில் மறையாத சுவடுகளாக அப்படியே நிலைத்து நிற்கும் சஞ்சு சாம்சன் என்ற மாவீரனுக்கு 10000000 பயர் விடலாம் 🔥" #SanjuSamson #INDvsWI #cricketlovers #ICC #tilakvarma #ICCWorldCup #T20WorldCup2026 #icct20worldcup2026 #icccricket #TeamIndia #INDvsWI பதிவு உரிமையாளருக்கு நன்றிகள்.
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
'இந்தியாவை விட சிறந்த சுழலை கொண்டுள்ள இங்கிலாந்து அரையிறுதியில் வெல்லும்' பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மேத்யூ ஹென்றி பிபிசி விளையாட்டுப் பிரிவு பத்திரிகையாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் இங்கிலாந்து அணி இந்தியாவை விட சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளதாகவும், மும்பையில் வியாழக்கிழமை (மார்ச் 5) நடக்கும் டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தமக்கு ஒரு 'விசித்திரமான உணர்வு' இருப்பதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகிறார். கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக இந்தியா இந்தத் தொடருக்குள் நுழைந்தது.ஆனால் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவால் தோற்கடிக்கப்பட்டது மற்றும் குரூப் போட்டிகளில் தடுமாறியது. இங்கிலாந்து இன்னும் ஒரு முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, ஆனால் தொடர்ச்சியான நெருக்கமான முடிவுகளைக் கடந்து ஐந்து தொடர் வெற்றிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. "அவர்கள் வெற்றிக்கான ஒரு வழியைக் கண்டுபிடித்ததாகத் தெரிகிறது," என்று வாகன் 'டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷல்' பாட்காஸ்ட்டில் பேசுகையில் கூறினார். "நியூசிலாந்துக்கு எதிரான வெற்றி, அது அதிக முக்கியத்துவம் இல்லாத ஒரு போட்டியாக இருந்தபோதிலும், அதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது ஒரு சிறந்த முயற்சியாகும்." இந்தத் தொடர் முழுவதும் இங்கிலாந்தின் பேட்டிங் சிறப்பாக அமையவில்லை. கேப்டன் ஹாரி புரூக் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அற்புதமான சதத்தை அடித்தார். ஆனால் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு உதவும் பங்களிப்புகள் என்று பார்த்தால் குறைவாகவே இருந்தன. குறிப்பாக அடில் ரஷித், லியாம் டாவ்சன் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோரின் சுழல், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரின் வேகப்பந்துவீச்சை ஒரு பலமாக மைக்கேல் வாகன் குறிப்பிட்டார். 'இந்தியாவை விட சிறந்த சுழற்பந்துவீச்சு' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அடில் ரஷித் "இங்கிலாந்து இந்தியாவை விட சிறந்த சுழல் தாக்குதலை கொண்டுள்ளது," என்று வாகன் கூறினார். "வருண் சக்ரவர்த்தி அதிக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். சுழலை பொறுத்தவரை டாவ்சன், ரஷித் மற்றும் வில் ஜாக்ஸ் ஆகியோர் இந்தத் தொடரின் சிறந்த மூவர் கூட்டணியாக இருந்துள்ளனர்." வருண் சக்ரவர்த்தி இந்தத் தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் எடுத்த வீரராக உள்ளார், ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முக்கியமான போட்டிகளில் அவர் முறையே 40 மற்றும் 47 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை இந்தியா அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது. கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்திற்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் அவர் இந்தத் தொடரில் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். "இங்கிலாந்தின் ஃபீல்டிங் முற்றிலும் தனித்துவமாக உள்ளது," என்றும் வாகன் கூறினார். "அவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள். விக்கெட்டுகளுக்கு இடையே ரன் எடுப்பதற்கான இங்கிலாந்து வீரர்களின் ஓட்டம் சிறப்பாக உள்ளது. மும்பையில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதியில் இங்கிலாந்து அணி வேலையை கச்சிதமாக முடிக்கும் என்று எனக்கு ஒரு விசித்திரமான உணர்வு இருக்கிறது" என்கிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வருண் சக்ரவர்த்தி 'உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு' இந்தத் தொடரில் தொடர்ந்து ஐந்து முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த, ஃபார்மில் இல்லாத தொடக்க வீரர் ஜோஸ் பட்லரை இங்கிலாந்து மீண்டும் களமிறக்கத் தயாராக உள்ளது. பட்லர் தனது மோசமான நிலையிலிருந்து மீண்டு வர முயற்சிக்கும்போது தனது பேட்டிங் நுட்பத்தில் (Technique) அதீத கவனம் செலுத்துவதாக வாகன் கூறினார். "நீங்கள் முன்பு ஆடியது போல ஒரு சிறப்பான ஆட்டத்தை உணராத போது, உங்கள் நுட்பத்தில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள்," என்று அவர் கூறினார். "பட்லரின் கண் - கை ஒருங்கிணைப்பு சிறப்பானது. பந்தை மையப் பகுதியில் பார்த்து பந்துவீச்சுக்கு ஏற்றாற் போல் அவர் ஆடினாலே போதுமானது" "அவர் இதுவரையிலும் ரேம்ப் ஷாட்களை (Ramp shots) ஆடவில்லை. இந்த பிட்ச் அந்த ஷாட்டிற்குப் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். அந்த ஷாட்டை விளையாட நீங்கள் பந்தை நேராக பேட்டில் படுமாறு பார்க்க வேண்டும்." "அவர் நன்றாக விளையாடும்போது அந்த ஷாட்களை ஆரம்பத்திலேயே ஆடுவார்" என்கிறார் வாகன். புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் வியாழக்கிழமை நடக்கும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும், குறிப்பாக உள்ளூர் ரசிகர்கள் தங்கள் அணியை பெரும் ஆரவாரத்தோடு ஆதரிக்கும் போது. டி20 உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே தொடர்ச்சியாக நடக்கும் மூன்றாவது அரையிறுதிப் போட்டி இதுவாகும். 2022-இல் அடிலெய்டில் நடந்த மோதலில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2024-இல் கயானாவில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டு அணிகளுமே தாங்கள் வென்ற அந்தந்த தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்றன. முந்தைய இரண்டு மோதல்களிலும் விளையாடிய ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன், '2022 வெற்றி என்பது இங்கிலாந்து உற்றுநோக்க வேண்டிய ஒரு முன்மாதிரி' என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சாம் கர்ரன் "வெற்றிக்கான வழியை தேடுகிறோம் என்றால், அதுபோன்ற செயல்திறனை முன்மாதிரியாகக் கொண்டு நமது ஆட்டத்திற்கான திட்டத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும்" என்று அவர் பிபிசி ஸ்போர்ட்டிடம் கூறினார். "ரசிகர்கள் கூட்டம் அட்டகாசமாக இருக்கப் போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது, இங்கு வந்து விளையாடுவது எங்களுக்குக் கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு." "நாங்கள் இந்தியாவிலும் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளோம், எனவே அவர்களிடம் இருந்து எதை எதிர்பார்ப்பது என்பது எங்களுக்குத் தெரியும், அவர்கள் ஒரு சிறந்த அணி. சுற்றிலும் அழுத்தம் இருக்கும்" என்றார் சாம் கர்ரன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு 'இந்தியாவை விட சிறந்த சுழலை கொண்டுள்ள இங்கிலாந்து அரையிறுதியில் வெல்லும்'