Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விபத்தில் சிக்கியது கூகுளின் தானியங்கி கார்... முதல்முறையாக 3 பேருக்கு காயம்! நியூ யார்க்: ஆளில்லாமல் ஓடும் கூகுளின் தானியங்கி கார் அமெரிக்காவில் விபத்தில் சிக்கியதில் மூன்று பேர் காயமடைந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கார் ஆட்டோ மொபைல்தான் என்றாலும், அதனை இயக்க ஓட்டுநர் தேவை. ஆனால், கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காரை இயக்க ஓட்டுநர் தேவையில்லை. மின் சக்தியில் இயங்கும் இந்தக் கார் கூகுள் மேப் வழிகாட்டுதலின் படி பயணம் செய்கிறது. செல்லும் வழியில் எதன் மீதும் மோதி விபத்து ஏற்படாமல் தடுக்க நவீன ரேடாரும், லேசர் சென்சாரும் இந்த காரில் உள்ளன. மணிக்கு சுமார் 40 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். சோதனை அடிப்படையில் 25 கார்கள் மட்டுமே தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன…

  2. 276 நாட்களுக்குப் பிறகு சீன விண்கலம் பூமியில் தரையிறங்கியது 276 நாட்கள் விண்வெளியில் தங்கிய சீனாவின் சோதனை ஆய்வு விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது. இந்த ஆளில்லா விமானம் சீனாவில் உள்ள ஜியுகுவான் விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த ஆய்வு மூலம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் அல்லது வேறு எந்த தகவலையும் சீனா இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் மறுபயன்பாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களை சோதிக்கும் ஒரு முக்கிய பணியை முடித்துள்ளதாக சீனாவின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2023/1331561

  3. விமானப் பயணமும் புவி வெப்பமடைதலும் உலகளாவிய ரீதியில் புவி வெப்பமடைதலால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். அந்தவகையில், கடந்த சில தசாப்தங்களில் புவி வெப்பமடைவதால் விமானப்பயணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிகவும் வெப்பான காலப்பகுதிகளில், முழுமையான எரிபொருள் நிரப்பப்பட்ட விமானங்களில் 10வீதம் தொடக்கம் 30 வீதமான விமானங்கள், எரிபொருள், பொருட்கள் குறித்த எண்ணிக்கையான பயணிகளை அப்புறப்படுத்திவிட்டே பயணத்தை ஆரம்பிக்க வேண்டியிருக்கின்றது. இல்லாவிடின் அந்த வெப்பமான காலநிலை தணியும் வரை விமானங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆகவே, இந்த ஆய்வின் மூலம் இவ்வாறு விமானங்களில் நிரப்பப்படவேண்டிய எரிபொருளின் அளவு, சரக்குக…

  4. நியூராலிங்க்: மனித மூளையில் சிப் வைக்கும் எலான் மஸ்க்கின் திட்டத்தில் முன்னேற்றம் Getty Images மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தனது தொழில்நுட்ப திட்டத்தை நிரூபிக்கும் வகையில், மூளையில் ஒரு நாணய அளவில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பன்றியை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தப் பன்றியின் பெயர் 'கெர்ட்ரூட்'. "இது கைகளில் அணியும் ஃபிட்பிட், மூளைக்குள் சிறு வயர்களுடன் இருப்பதை போன்றது" என்று இணையம் வழியே நடந்த அறிமுக நிகழ்ச்சியில் எலான் மஸ்க் கூறினார். உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் இவர். நியூராலிங்க் என்னும் இவரது புதிய நிறுவனம் மனித மூளையை இயந்திரத்…

  5. ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் இருக்கும் துளை எதற்கு? ஆப்பிள் ஐபோன் நிறைய பேர் வாங்க நினைக்கும் உயர் ரக ஸ்மார்ட் போன் மாடல்களில் ஒன்று. முதல் நாள் க்யூவில் நின்று வாங்கி செம ஸ்டைலாக பயன்படுத்தி கொண்டிருக்கும் உங்களுக்கு ஐபோனில் இருக்கும் இந்த விஷயம் தெரியுமா? ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் ஒருதுளை இருக்கும் அதனை பார்த்திருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா? ஐபோனில் கேமரா மற்றும் ப்ளாஷ்க்கு நடுவிலும், முன்புற கேமராக்கு அருகிலும், கீழ் புறத்திலும் மூன்று துளைகள் இருக்கும். இது மூன்றும் இரைச்சலை குறைக்கும் மைக்ரோபோன்கள் தான் இவை. 1. பின்பக்கத்தில் இருக்கும் மைக்ரோஃபோன் ஹச்.டி வீடிக்களை பதிவு செய்யும் போது ஏற்பட…

  6. நாம் நிகழ்காலத்தில் வாழ்கின்றோம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இப்படி நிகழ்காலத்தில் வாழும் நாம் நமது கண்களாலும் நிகழ்காலத்தைத் தானா பார்க்கின்றோம்? இல்லவே இல்லை! நிகழ்காலத்தில் வாழும் நாங்கள் நமது கண்களால் இறந்தகாலத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம்! என்ன குழப்பமாக இருக்கிறதா? இதோ வருகிறது எனது விளக்கம்… நமது கண்களால் ஒரு பொருளைப் பார்ப்பது என்றால் என்ன? உதாரணத்திற்கு சூரியனில் இருந்து அனுப்பப்பட்ட ஒளி, பூமியில் நமது சுற்றுப்புறத்தில் உள்ள பொருள் ஒன்றில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடையும்போது, அந்தப் பொருள் நமக்கு தெரிகின்றது என்கிறோம். ஆனால் இதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், ஒளி ஒரு பொருளில் பட்டுத் தெறித்து நமது கண்களை அடைவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம…

  7. செவ்வாய் கிரகத்தை ஆராயும் முயற்சியில் நீண்ட காலமாக தீவிரமாகவே ஈடுபட்டு வரும் நாசா, தனது ஆய்வின் அடுத்த கட்டமாக விண்வெளி வீரர்களுக்காக செவ்வாய் கிரகத்தில் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தங்குமிடம் ஒன்றை அமைக்கவுள்ளது. மனிதனின் மண்டை ஓடு முதல் பீட்சா தயாரிப்பது வரை பல்வேறு சாதனைகளை 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் நிகழ்த்தி வரும் நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விண்வெளி வீரர்களுக்காக தங்குமிடம் ஒன்றை நாசா அமைக்கவுள்ளது. கூடு போன்று தோற்றம் கொண்ட இந்த தங்குமிடத்தில் மொத்தம் 3 தளங்கள் இருக்கும். 3 ஆவது தளம் வெறும் 3 சதுர மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்டது. 2 ஆவது தளம் 29 சதுர மீட்டர் பரப்பளவில் இருக்கும் இதில் பணியிடமும் கழிவறைகளும் இருக்கும், தரைத்தளம் 40 சதுர மீட்டர் அள…

  8. மனிதனின் மூளையில் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஒருவர் முதுமை அடைவதைக் கடுப்படுத்தும் பகுதியை தாம் கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எலிகளில் செய்யப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ''நேச்சர்'' என்னும் சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர். வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது. ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் …

  9. மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி சுற்றுலாப் பயணம்: ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு! மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டம் தொடர்பான அறிவிப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் குறுங்கலத்தில், அனுபவம் வாய்ந்த பைலட் ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 நபர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பூமியை சுற்றி வருவார்கள். இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் பணவசூல், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு வழங்கப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.…

  10. உலகம் மயங்கும் Bitcoin 2017

  11. ஆஸ்திராலோபிதெசஸ்’கள் எனப்படும் மனிதா்களின் முன்னோடி இனத்தவா்களைவிட, நவீன காலத்திய மனிதக் குரங்குகளின் மூளை புத்திசாலித்தனமாக சிந்திப்பதாக அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து, அந்த ஆய்வை மேற்கொண்ட அடிலெய்ட் பல்கலைக்கழக ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளதாவது: 32 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த, மனிதா்களின் முன்னோடிகளான ‘ஆஸ்திராலோபிதெசஸ்’களுக்கும், நவீன மனிதக் குரங்குகளுக்கும் இடையிலான புத்திசாலித்தனத்தை மதிப்பீடு செய்யும் ஆய்வை மேற்கொண்டோம். மூளையின் புத்திசாலித்தனத்தை நிா்ணக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டம் பாய்ச்சும் துளைகள் மண்டையோட்டில் எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …

  12. காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும் நான் எடுக்கும் சில புகைப்படங்களுக்கு பின்னூட்டமாக ‘அழகான புகைப்படம், என்ன கேமரா வைத்துள்ளாய்?’ என்று அடிக்கடி வரும் கேள்வியானது, சில வருடங்களாகவே என்னை ஆயாசப்படுத்தினாலும், இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதே சரி என்று ஒதுங்கியும் விடுகிறேன். தற்காலத்தைய ஃபேஸ்புக் யுகத்தில் அத்தகைய கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்தாலும், கேள்வி கேட்பவர்கள் அந்த பதில்களை கிரகிப்பவர்களாக எனக்குத் தோன்றவில்லை — என் நண்பர்களில் பலர் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது? நன்றாகத் தோன்றும் புகைப்படங்களைப் பார்த்து உடனடியாக ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவோர் பலர் அது வெறும் அபிப்பிராயமன்றி ஒரு ரச…

  13. குரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விளை நிலங்களில் புலி பொம்மை: விவசாயிகள் நூதன முயற்சி ஊட்டி,டிச.10– நீலகிரி மாவட்டத்தில் விவசாய தொழில் பிரதான தொழிலாக உள்ளது. தேயிலை எஸ்டேட், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தோட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் குரங்குகள் தோட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கேரட், பீன்ஸ் உள்பட பயிர்களையும், பழ வகைகளையும்…

  14. மதுரை: மதுரை அருகே உள்ள கீழடியில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழங்கால நகரத்தின் பகுதிகளை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நகரம் சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டதாகும். மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க... இது குறித்து தொல்லியல் துணை அகழ்வாராய்ச்சியாளர் வீரராகவன் கூறுகையில், “தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை நதி, மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வெள்ளிமலை அருகிலிருந்து உற்பத்தியாகி தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் வழியே பாய்கிறது. தொல்லியல் வளமிக்க பகுதியாக விளங்கினாலும் கூட இதுகாறும் வைகை நதி பள்ளத்தாக்கு பகுதியில் அகழாய்வு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 2013-14ல் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சுமார் 293 பல்வகை தொல்லியல…

  15. ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என்பதை அறிய புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப்போகிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence – AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதைக் கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவ…

  16. இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை திறப்பு இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் பொலன்னறுவையில் திறந்து வைக்கப்படவுள்ளது. பொலன்னறுவை புதிய நகரத்தில் இந்த நூதனசாலை மற்றும் நூலகம் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைவாக கட்டப்பட்ட முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் இதுவாகும். இதற்கு 90 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையின்-முதலாவது-தொழி/

  17. வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது. ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம் கிரகித்துக்கொள்கிறோம். ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என என அன்செஸ் வாதிடுகிறத…

  18. 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது ரொட்டி: ஆதாரங்கள் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே ரொட்டி செய்துள்ளதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பழமையான தளம் ஒன்றை தோண்டிய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தீயில் சுடப்பட்ட அவை, தட்டையான ரொட்டி போன்றும், இன்றைய பல தானிய வகைகள் ப…

  19. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் "கடல் உங்கள் ஆணவத்தைக் கொன்றுவிடும்." தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மூத்த விஞ்ஞானி சுப்பிரமணியன் அண்ணாமலையைச் சந்தித்தபோது அவர் கூறிய வார்த்தைகள் இன்னமும் எதிரொலிக்கிறது. முனைவர் சுப்பிரமணியன், இந்தியாவின் சமுத்ரயான் திட்டத்தின்கீழ் உருவாகி வரும் மத்ஸயா 6000 நீர்மூழ்கியின் ஆற்றல் பிரிவின் தலைவராக இருக்கிறார். "இந்த உலகில் எதைப் பற்றியும் யாருக்கும் முழுதாகத் தெரிந்துவிடாது. பெருங்கடல் அதை மிகச் சரியாக உணர்த்திக் கொண்டே இருக்கிறது. அத்தகைய பெருங்கடலுக்குள் நேரில் மனிதர்களை அனுப்பிப் பார்ப்பது கடல் ஆய்வில் எவ்வளவு உதவிகரமாக இருக்கும். அதைத்தான் மத்ஸயா 600…

  20. துண்டான தலையில் இருந்து இதயம்,உடலை வளர்க்கும் கடல் அட்டை: விஞ்ஞானிகள் வியப்பு ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாயகா மிட்டோ மற்றும் யோயிச்சி யூசா ஆகியோர் சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர்.அப்போது ஒரு நாள், தங்கள் ஆய்வுகூடத்தில் இருந்த கண்ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டையின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. ஆனால், தலை இறந்து விடாமல், மெல்ல மெல்ல தனது உடலை வளர்த்துக்கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட்டைக்கு, இதயம் உள்பட உடலின் அனைத்து உள் அங்கங்களும் கொண்ட புதிய உடல் முளைத்துவிட்டது. …

  21. பூமிக்கு அருகே வருவதால் வியாழன் கிரகம் இன்று வானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கிரகமான வியாழன், திங்கள்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பின், வானில் கிழக்குப் பகுதியில் பிரகாசமாகத் தெரியும். இதை வெறும் கண்களால் பார்க்கலாம். நள்ளிரவுக்குப் பின் தெற்குப் பகுதியில் வியாழன் காணப்படும். பூமியில் இருந்து பார்க்கும்போது, சூரியனுக்கு நேராக ஒரு கிரகம் வரும்போது மிகவும் பிரகாசமாகத் தெரியும். வியாழனைப் பொறுத்தவரை 13 மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்று பிரகாசமாகத் தெரியும். முன்னதாக 2011ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி வியாழன் கிரகம் பிரகாசமாகத் தெரிந்தது. அடுத்ததாக 2014ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பிரகாசம…

  22. படத்தின் காப்புரிமை AO SUN சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களுடையவை என்று தெரியவந்துள்ளது. அதிலும் முக்கியமாக, புதைபடிவமான பல உயிரிகளின் தோல், கண்கள், உள் உறுப்புகள் உள்ளிட்டவை மிகவும் 'நேர்த்தியாக' புதைபடிவமாகி பதனமாகியுள்ளது தெரியவந்துள்ளது. …

  23. ஃபேஸ்புக்கில் இனி ஆஃப் லைனிலும் தொடர்பு கொள்ளலாம்! - புதிய வசதி அறிமுகம் ஃபேஸ்புக் பயனாளிகள் ஆஃப் லைனில் இருக்கும்போதும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் செயல்பாட்டாளர்கள், எப்போதும் முக நூலில் வலம்வர பல்வேறு புதிய அப் டேட்டுகளை அந்நிறுவனம் அவ்வப்பொழுது செய்து வருகிறது. இந்நிலையில், புதிய வசதியாக ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களின் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட போதும் நண்பர்களின் கருத்துக்கு பதில் போடவும், பகிரவும் முடியும். அத்தகையதொரு வசதியை ஃபேஸ்புக் தற்போது அறிமுகம் செய்துள்ளது. 2ஜி இணைப்பு மொபைல்களிலும், இணைய இணைப்பு ஸ்லோவாக உள்ள நேரங்களிலும் ஃ பேஸ்புக் செயல்படாமல் இருக்கும்…

  24. சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்': புதிய வகைக் குரங்கு கொங்கோவில் கண்டுபிடிப்பு By Kavinthan Shanmugarajah 2012-09-14 11:58:45 கொங்கோ நாட்டில் புதியவகைக் குரங்கினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 'லெசூலா' என அழைக்கப்படும் இக்குரங்கினத்தின் விஞ்ஞான ரீதியான பெயர் 'சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்' (cercopithecus lomamiensis) என்பதாகும். இவ் இனத்தைச் சேர்ந்த குரங்கொன்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஆய்வாளர்களின் கண்ணில் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரபணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கினமானது , விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை…

  25. 9 ஆயிரம் முறை... நிலவினை, சுற்றி வந்த சந்திரயான் -2 விண்கலம்! சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் இரு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதனையொட்டி இஸ்ரோவின் பயிலரங்கம் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இரு ஆண்டுகளில் சந்திரயான் விண்கலம் 2 செயற்கைக்கோள் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றிவந்துள்ளது. இதில் எட்டு வித ஆய்வுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் நன்கு இயங்கி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.