Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 9 ஆயிரம் முறை... நிலவினை, சுற்றி வந்த சந்திரயான் -2 விண்கலம்! சந்திரயான் -2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றி வந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலம் இரு ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. இதனையொட்டி இஸ்ரோவின் பயிலரங்கம் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இரு ஆண்டுகளில் சந்திரயான் விண்கலம் 2 செயற்கைக்கோள் நிலவின் சுற்றுவட்டப் பாதையை 9 ஆயிரம் முறைக்கு மேல் சுற்றிவந்துள்ளது. இதில் எட்டு வித ஆய்வுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் நன்கு இயங்கி…

  2. ஆளில்லா விமானம் மூலம் முதல் டெலிவரியை செய்தது அமேசான் ஐக்கிய ராஜ்ஜியத்தில், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம், சில்லரை வணிகத்தில் மிகப்பெரிய நிறுவனமான அமேசான், பொருள் ஒன்றை முதன் முதலாக வழங்கியுள்ளது. ஆளில்லா விமானம் மூலம் முதல் டெலிவரியை செய்தது அமேசான் அமேசான் தளத்தில் பொருளை ஆர்டர் செய்து 13 நிமிடங்களில் கேம்பிரிட்ஜில் உள்ள முகவரிக்கு அந்த பொருள் வாடிக்கையாளரிடம் பத்திரமாக ட்ரோன் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. சுமார் 400 அடி உயரம் வரை மின் ஆற்றலில் பறக்கக்கூடிய ட்ரோன் ஒன்று எவ்வாறு இந்த பொருளை உரியவரிடம் கொண்டு சேர்த்தது என்பதை ஒரு வீடியோ காட்டுகிறது. அமேசான் வி…

  3. ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை குறித்த முதல் பரிசோதனை வெற்றி! குழந்தை பிறப்பதை தடுக்கும் ஆண்களுக்கான மாத்திரை ஒன்று மனித பாதுகாப்பு தொடர்பான முதல் கட்ட பரிசோதனைகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆணுறை மற்றும் விந்தணுக்குழாய் நீக்க அறுவை சிகிச்சை (வஸக்டமி) போன்ற தற்போது ஆண்களுக்கு இருக்கின்ற குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டு முறைகளோடு இந்த மாத்திரையும் சேரவுள்ளது. ஆனால், இந்த மாத்திரை சந்தைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என கூறப்படுகின்றது. பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பிரித்தானியாவில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. ஆனால், அதேபோல ஆண்களுக்கு இத்தகைய ஒரு மாத்திரை கொண்டு வருவது ஏன் மிகவும் கடினமாக உள்ளது? ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கொண்டு வருவதற்கு …

  4. இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை திறப்பு இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் பொலன்னறுவையில் திறந்து வைக்கப்படவுள்ளது. பொலன்னறுவை புதிய நகரத்தில் இந்த நூதனசாலை மற்றும் நூலகம் இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைவாக கட்டப்பட்ட முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை மற்றும் நூலகம் இதுவாகும். இதற்கு 90 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலங்கையின்-முதலாவது-தொழி/

  5. விண்கலத்தில் ஓட்டை.. ஆகாயத்தில் 6 மணி நேரம் மிதந்தபடி பஞ்சர் போடும் நாசா வீரர்கள்.. திக் நிமிடம்! சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட துளையை அடைப்பதற்காக நாசா மற்றும் ரஷ்யா விஞ்ஞானிகள் நாளை விண்வெளியில் 6 மணி நேரம் நடக்க இருக்கிறார்கள். நாசாவின் சோயுஸ் விண்கலம் ஒன்று தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் ஆகாயத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏற்பட்டு இருக்கும் சிறிய துளை காரணமாக இதை கடந்த 4 மாதங்களாக பயன்படுத்தாமல் வைத்து இருக்கிறார்கள். சோயுஸ் எம்எஸ்-09 என்று இந்த விண்கலத்தை சரி செய்ய ரஷ்ய விஞ்ஞானிகள் களமிறங்கி உள்ளனர். இந்த விண்கலனின் துளை இருப்பது கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறிய பென்சில் அளவில் இதில் துளை உள்ளது. சர்வதேச விண்வெள…

  6. மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி சுற்றுலாப் பயணம்: ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு! மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விண்வெளி வீரர்கள் அல்லாத மனிதர்கள் பங்கேற்கும் விண்வெளி சுற்றுலாத் திட்டம் தொடர்பான அறிவிப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ்-ன் டிராகன் குறுங்கலத்தில், அனுபவம் வாய்ந்த பைலட் ஜாரெட் ஐசக்மேன் தலைமையில் 4 நபர்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் பூமியை சுற்றி வருவார்கள். இன்ஸ்பிரேஷன் 4 என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் வாயிலாக கிடைக்கும் பணவசூல், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு வழங்கப்படும் என ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்துள்ளது.…

  7. UFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள் .! விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ. உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில் தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி இன்னும் எளிமையாக இப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், உங்களுடைய சிறுவயதுகளில் கோடை கால சமயத்தில் வீட்டின் முற்றத்தில் பாட்டியோடு அல்லது தாத்தாவோடு கதைகள் கேட்டு நீங்கள் தூங்கி இருந்தால், இந்தக் கதையையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது, விண்வெளியிலிருந்து …

  8. குரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விளை நிலங்களில் புலி பொம்மை: விவசாயிகள் நூதன முயற்சி ஊட்டி,டிச.10– நீலகிரி மாவட்டத்தில் விவசாய தொழில் பிரதான தொழிலாக உள்ளது. தேயிலை எஸ்டேட், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தோட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் குரங்குகள் தோட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கேரட், பீன்ஸ் உள்பட பயிர்களையும், பழ வகைகளையும்…

  9. வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது. ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம் கிரகித்துக்கொள்கிறோம். ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என என அன்செஸ் வாதிடுகிறத…

  10. சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்': புதிய வகைக் குரங்கு கொங்கோவில் கண்டுபிடிப்பு By Kavinthan Shanmugarajah 2012-09-14 11:58:45 கொங்கோ நாட்டில் புதியவகைக் குரங்கினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் 'லெசூலா' என அழைக்கப்படும் இக்குரங்கினத்தின் விஞ்ஞான ரீதியான பெயர் 'சேர்கோபிதகஸ் லொமாமியன்சிஸ்' (cercopithecus lomamiensis) என்பதாகும். இவ் இனத்தைச் சேர்ந்த குரங்கொன்று கடந்த 2007 ஆம் ஆண்டு ஆய்வாளர்களின் கண்ணில் பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொங்கோவின் காட்டுப்பகுதிகளில் கடந்த 5 வருடங்களாகத் தேடி, மரபணுவியல் மற்றும் உயிரியல் ஆராய்ச்சிகளை நடத்தி இக்குரங்கினமானது , விஞ்ஞான உலகுக்கு புதியது என்பதனை…

  11. 🚀 அதிசயம் ஆனால் உண்மை – விண்வெளியில் ஒரு வரலாற்று சாதனை: பூமியிலிருந்து ‘ஒரு ஒளி நாள்’ தொலைவில் வொயேஜர் 1! adminJanuary 25, 2026 சுமார் 48 ஆண்டுகால நெடிய பயணம்… மனிதகுலத்தின் அறிவியலுக்குச் சான்றாக விண்வெளியின் எல்லையில் பயணித்துக் கொண்டிருக்கும் வொயேஜர் 1 (Voyager 1), தற்போது ஒரு புதிய மைல்கல்லை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 🌌 பூமியிலிருந்து சுமார் 16 பில்லியன் மைல்கள் (25.4 பில்லியன் கிலோமீட்டர்) தொலைவைக் கடந்துள்ள இந்த விண்கலம், விரைவில் “ஒரு ஒளி நாள்” (One Light-Day) தொலைவை எட்டவுள்ளது. நாம் அனுப்பும் ஒரு ரேடியோ சிக்னல் (ஒளியின் வேகத்தில் பயணிப்பது) வொயேஜர் 1-ஐ அடைய முழுதாக 24 மணிநேரம் ஆகும். அங்கிருந்து பதில் வர மீண்டும் ஒரு நாள் ஆகும். அதாவது, ஒரு தகவலைப் பரிமாறிக்கொ…

  12. ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என்பதை அறிய புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப்போகிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence – AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதைக் கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவ…

  13. பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY கட்டுரை தகவல் எழுதியவர்,பிபிசி முண்டோ பதவி,பிபிசி 4 ஜூலை 2023, 03:31 GMT புதுப்பிக்கப்பட்டது 41 நிமிடங்களுக்கு முன்னர் பூமிச் சுழற்சியின் அச்சு, 1993 ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 80 செ.மீ. கிழக்கு நோக்கிச் சாய்திருக்கிறது. இதற்கு ஒருவகையில் இந்தியர்களும் காரணமா? இதுபற்றிய விவரங்கள் அமெரிக்கப் புவி இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கடலின் மட்டத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக அந்த ஆய்வு கூறியிருக்கிறது. இது எப்படி நிகழ்…

  14. விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைBERNARD MERIC/AFP/GETTY IMAGES 700 ஆண்டுகளின் மிகப்பெரிய அளவிலான எரிமலை வெடிப்பாக இருந்தாலும், அதற்கு காரணமான எரிமலையை விஞ்ஞானிகளால் இன்னமும் கண்டறியமுடியவில்லை. 1465 அக்டோபர் பத்தாம் தேதி, நேப்பள்சின் அரசர் இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம், மிலானைச் சேர்ந்த புகழ்பெ…

  15. பட மூலாதாரம்,JULIUS CSOTONYI கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் 18 ஜூன் 2025, 03:12 GMT மங்கோலிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பில், ஒரு புதிய வகை டைனோசர்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை டைரனோசர்களின் (Tyrannosaurs) பரிணாம வரலாற்றை 'மாற்றி எழுதக்கூடியவை' என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள், 86 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டு எலும்புக்கூடுகளை பகுப்பாய்வு செய்தனர். அவை, டைரனோசர்களின் நெருங்கிய மூதாதையராகக் கருதப்படும் ஒரு உயிரினத்திலிருந்து வந்தவை என்ற தீர்மானத்துக்கு அவர்கள் வந்தனர். இது டி ரெக்ஸ் (T rex) எனும் பிரபல விலங்கையும் உள்ளடக்கிய ஒரு குழுவாகும். ஆராய்ச்சியாளர்கள் இந்த இனத்துக்கு கான்கூலூ மங்கோலியென…

  16. பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நட்சத்திரங்களின் இறுதிக்கட்ட நிலை அவற்றின் நிறையைப் பொறுத்தே அமையும் கட்டுரை தகவல் பெர்னாண்டோ டூர்டே பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் எதுவும் நிலையானது அல்ல... நமது பிரபஞ்சம் கூட. கடந்த இருபது ஆண்டுகளாக, விண்வெளி ஆய்வாளர்கள் இந்தப் பிரபஞ்சம் தனது முக்கிய காலகட்டத்தை கடந்துவிட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வருகின்றனர். புதிய நட்சத்திரங்கள் பிறப்பது படிப்படியாகக் குறைந்து வருவது அதில் ஒரு முக்கியமான அடையாளம். இதன் பொருள் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் தீர்ந்துவிட்டன என்பதல்ல. இதில் ஒரு செப்டில்லியன் - அதாவது ஒன்றுக்குப் பின் 24 பூஜ்ஜியங்களை கொண்ட எண்ண…

  17. பூமியில் எங்கே விழுமெனத் தெரியாமலிருந்து ஐரோப்பாவுக்குச் சொந்தமான விண்வெளியின் பெராரி என அழைக்கப்படும் செய்மதி நேற்று அந்திலாந்திக் சமுத்திரதில் வீழ்ந்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. இச்­செய்­ம­தி­யா­னது புவி­யீர்ப்பு தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக உயர் தொழில்­நுட்­பத்தில் தயா­ரிக்­கப்­பட்டு 2010ஆம் ஆண்டு விண்­ணுக்கு செலுத்­தப்­பட்­டது. அதன் எரி­பொருள் முடி­வ­டைந்ததுடன் ஐரோப்பிய விண்வெளி முகவரகத்துடனான தொடர்பையும் இழந்திருந்தது. இதனையடுத்து எங்கு? எப்போது? விழுமென விஞ்ஞானிகளால் ஊகிக்கமுடியாதிருந்த நிலையிலேயே நேற்று ஜி.ஓ.சி.ஈ எனப்படும் விண்வெளியின் பெராரி பூமியில் வீழ்ந்துள்ளது. 1,100 கிலோ கிராம் நிறையுடைய இந்த செய்மதியின் சுமார் 275 கிலோ கிராம் நிறைய…

  18. பூமிக்கு அருகே வருவதால் வியாழன் கிரகம் இன்று வானில் மிகவும் பிரகாசமாகத் தெரியும் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கிரகமான வியாழன், திங்கள்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்துக்குப் பின், வானில் கிழக்குப் பகுதியில் பிரகாசமாகத் தெரியும். இதை வெறும் கண்களால் பார்க்கலாம். நள்ளிரவுக்குப் பின் தெற்குப் பகுதியில் வியாழன் காணப்படும். பூமியில் இருந்து பார்க்கும்போது, சூரியனுக்கு நேராக ஒரு கிரகம் வரும்போது மிகவும் பிரகாசமாகத் தெரியும். வியாழனைப் பொறுத்தவரை 13 மாதங்களுக்கு ஒருமுறை இதுபோன்று பிரகாசமாகத் தெரியும். முன்னதாக 2011ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி வியாழன் கிரகம் பிரகாசமாகத் தெரிந்தது. அடுத்ததாக 2014ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பிரகாசம…

  19. அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது

  20. விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி: விண்வெளியில் ஓராண்டு தாக்குபிடிப்பது எப்படி? பால் ரின்சென் அறிவியல் பிரிவு ஆசிரியர், பிபிசி நியூஸ் வலைத்தளம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஓராண்டு காலம் எப்படி தாக்குபிடித்தார் என்பதை விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி பிபிசியிடம் விளக்கினார். நாசாவில் இருந்து ஓய்வுபெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், யாராவது கேட்டுக் கொண்டால் மீண்டும் செல்வேன் என அறிவித்திருப்பது ஏன் என்றும் விளக்குகிறார். 2015 ஜூலை 16 ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த 3 பேரும், ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்திற்குள் சென்றனர். …

  21. வாட்ஸ்ஆப்: ஒரே நேரத்தில் 4 பேருடன் வீடியோ, ஆடியோ கால் செய்யலாம்! பகிர்க படத்தின் காப்புரிமைWHATSAPP உலக அளவில் கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது பிபிசி தமிழின் இந்த பிரத்யேக வாராந்திர தொழில்நுட்ப தொடர். ஒரே நேரத்தில் நான்கு பேருடன் வீடியோ/ ஆடியோ கால் செய்யும் வசதியை பிரபல குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது. உலகளவில் குறுஞ்செய்தி செயலிகளில் முதன்மையான இடத்தை பெற்ற வாட்ஸ்ஆப்பை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதைத்தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை அந்நிறுவனம் F8 என்னும் வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டில் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வக…

  22. படத்தின் காப்புரிமை AO SUN சீனாவின் ஆற்றங்கரை ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு வகைகளைச் சேர்ந்த இந்த புதை படிவங்கள் சுமார் 51.8 கோடி ஆண்டுகள் முன்பு வாழ்ந்த உயிரினங்களுடையவை என்று தெரியவந்துள்ளது. அதிலும் முக்கியமாக, புதைபடிவமான பல உயிரிகளின் தோல், கண்கள், உள் உறுப்புகள் உள்ளிட்டவை மிகவும் 'நேர்த்தியாக' புதைபடிவமாகி பதனமாகியுள்ளது தெரியவந்துள்ளது. …

  23. ஃபேஸ்புக்கில் இனி ஆஃப் லைனிலும் தொடர்பு கொள்ளலாம்! - புதிய வசதி அறிமுகம் ஃபேஸ்புக் பயனாளிகள் ஆஃப் லைனில் இருக்கும்போதும் நண்பர்களுடன் தொடர்பு கொள்ளும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் செயல்பாட்டாளர்கள், எப்போதும் முக நூலில் வலம்வர பல்வேறு புதிய அப் டேட்டுகளை அந்நிறுவனம் அவ்வப்பொழுது செய்து வருகிறது. இந்நிலையில், புதிய வசதியாக ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களின் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட போதும் நண்பர்களின் கருத்துக்கு பதில் போடவும், பகிரவும் முடியும். அத்தகையதொரு வசதியை ஃபேஸ்புக் தற்போது அறிமுகம் செய்துள்ளது. 2ஜி இணைப்பு மொபைல்களிலும், இணைய இணைப்பு ஸ்லோவாக உள்ள நேரங்களிலும் ஃ பேஸ்புக் செயல்படாமல் இருக்கும்…

  24. சோபியா எனும் றோபோ

    • 0 replies
    • 414 views
  25. நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனிலுள்ள கீல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த கிரகத்தைக் கண்டறிந்துள்ளனர். நாஸாவின் கெப்ளர் தொலைநோக்கி மூலம் இந்த கிரகம் கண்டறியப்பட்டுள்ளது. இது பூமியிலிருந்து 470 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு வாஸ்ப்-104பி என்று பெயர் வைத்துள்ளனர். இதுகுறித்து கீல் பல்கலைக் கழகத்தின் அஸ்ட்ரோபிஸிக்ஸ் குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி டியோ மோக்னிக் கூறும்போது, “இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களிலேயே இதுதான் மிகவும் இருண்ட கிரகமாக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.