அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
உலகின் முதல் தானியங்கி பறக்கும் கார்கள் வரும் 2017-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஏரோமொபில் இதற்கான இறுதிகட்ட வடிவமைப்பு பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சாதாரண பெட்ரோலில் ஓடும் வகையில் தயாரிக்கப்படவுள்ள இந்த நவீன பறக்கும் கார்களில் இருவர் அமர்ந்து பயணம் செய்யலாம். மனிதர்களே ஓட்டும் வகையில் ஒரு மாடலும், தானியங்கி (ஆட்டோ பைலட் மோட்) முறையில் இயங்கும் மற்றொரு மாடலும் இதற்காக வடிவமைக்கப்பட்டு வருகின்றது. சில நூறு அடிகள் நீளத்தில் ஒரேயொரு செயற்கை புல்தரை பட்டை மட்டும் இருந்தால் போதும். சாதாரண கார்போல தரையில் வேகமாக ஓடி, பின்னர் குட்டி விமானம் போல் உயரக் கிளம்பி 400 மைல்…
-
- 7 replies
- 1.1k views
-
-
பூமி பாதிக்கு மேல் அழிந்துவிட்டது என்றும் மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும் என சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சுவீடனை சேர்ந்த பேராசிரியர் ஜான் ராக்ஸ்ரோம் தனது ஆய்வின் முடிவுகள் பற்றி கூறும்போது ‘‘பூமியின் சமநிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பூமி மிக விரைவில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும். பூமியின் சம நிலையை பேணுவதற்கு தேவையான 9 காரணிகளில் ஏற்கனவே 4-ஐ நாம் தாண்டி விட்டோம். பூமியின் சம நிலைக்கு காரணமான 9 காரணிகளில் காலநிலை மாற்றம், பல்லூயிர் சம நிலை, நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் பயன்பாடு, காடுகளின் அளவை 75 சதவீதமாக வைத்தியிருப்பது ஆகிய நான்கிலும் நாம் எற்கனவே அதிகபட்ச அளவை தாண்டிவிட…
-
- 0 replies
- 590 views
-
-
LIVE: http://www.bbc.co.uk/news/live/uk-31906556 யாழ்கள மட்டுறுத்தினருக்கு... newsfirst.lkஇலிருந்து இச்செய்தி இணைக்கிறேன். இவ்விணையத்தள செய்திக்கு இங்கு அனுமதி உண்டா எனதேரியாது. newsfirst.lkக்கு அனுமதி இல்லை எனில் தயவு செய்து நீக்கி விடவும். நன்றி. 16 வருடங்களின் பின்னர் தோன்றும் அபூர்வ சூரியகிரகணம்: பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது அபூர்வமானதொரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டிலேயே இறுதியாக நடந்துள்ளது. 16 வருடங்கள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது. வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்க…
-
- 2 replies
- 984 views
-
-
பொதுச் சார்பியல் கோட்பாட்டை ஐன்ஸ்டைன் முன்வைத்த 100-வது ஆண்டும் பிரசுரித்த 99-வது ஆண்டும் இதுதான் ‘பொதுச் சார்பியல் கோட்பாடு’ ஈர்ப்பு விசையைப் பற்றி விளக்குகிறது. அந்தக் கோட்பாட்டை அவர் முன்வைத்துக் கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டு காலத்தில் கணக்கற்ற தடவை இயற்பியலாளர்கள் இந்தக் கோட்பாட்டின் துல்லியத்தைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்கள். ஒரு தடவைகூட இந்தக் கோட்பாடு பொய்த்துப்போனதில்லை. எனினும், கணக்கில்லாத எத்தனையாவதோ தடவையாக இன்னும் அந்தக் கோட்பாட்டின் கணிப்புகளைப் பரிசோதிப்பதில் இயற்பியலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பொதுச் சார்பியல் கோட்பாட்டின் 100-வது ஆண்டான இந்த ஆண்டில், மேலும் துல்லியமான சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. ‘பொது…
-
- 0 replies
- 444 views
-
-
பிரித்தானியாவில் நடந்த ஆராய்ச்சியில் தாவரங்களின் மரபணுக்களை பெற்று மனிதர்கள் பரிணாமம் அடைந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (Cambridge University) கடந்த 2001ம் ஆண்டு முதல் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கிய காரணமான மரபணு குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மனிதர்கள் மரபணுக்களை தனது இனத்திடமிருந்து மட்டும் பரிமாற்றம் செய்துக்கொண்டனரா அல்லது வேறு இனத்திலிருந்தும் மரபணு பரிமாற்றம் நடந்துள்ளதா என தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் மனித இனமானது தாவரங்கள், நுண்ணிய தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளின் மரபணுக்களையும் பரிமாற்றம் செய்துகொண்டு பரிணாமம…
-
- 0 replies
- 3.1k views
-
-
நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை யானைகள் தங்கள் மோப்ப சக்தியை பயன்படுத்தி கண்டுபிடிப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பொதுவாக வெடிப்பொருட்களை கண்டறிவதற்கு போலீஸ் மற்றும் ராணுவத்தில் நாய்கள்தான் பயன்படுத்தப்படும். ஏனெனில் அவற்றை கண்டுபிடிக்கும் திறன் அதற்கு அதிகமாக காணப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா நாடான அங்கோலாவில் நடைபெற்ற போரின்போது அங்கிருந்து வெளியேறிய யானைகள் மீண்டும் தங்கள் காட்டிற்கு திரும்பியபோதுதான் யானைகளாலும் கண்ணி வெடிகளை மோப்பம் பிடிக்க முடியும் என்பதை கண்டறிந்தார்கள். கண்ணி வெடிகளை மறைத்து வைத்து யானைகளை கொண்டு கண்டுபிடிக்கும் சோதனையை தென் ஆப்பிரிக்காவின் வடக்கு தலைநகரான பிரிட்டேரியாவில் விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள். இதில் யானைகள் 96 ச…
-
- 3 replies
- 674 views
-
-
உலக அளவில் மாணவர்கள்.. மாணவிகளை விட கல்வியில் பிந்தங்கக் காரணம் என்ன என்ற ஆய்வில்.. வெளிப்பட்டுள்ள உண்மைகள் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 1. மாணவிகள்.. வகுப்பில் நல்ல பிள்ளைக்கு நடந்து கொள்வதாலும்.. வீட்டுப் பாடங்களை அதிக சிரத்தை எடுத்துச் செய்வதாலும்.. அதே மாணவிகளுக்கு சமதரமுள்ள மாணவர்களைக் காட்டிலும் ஆசிரியர்கள் அதிக புள்ளிகளை வழங்குவதால்.. மாணவிகளின் நல்ல பெறுபேறுகள் மாணவர்களினதை விட அதிகரிக்க காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனை "gender bias"... ''பால் சார்பு நிலை'' என்று அழைக்க விளைகிறார்கள். 2. மேற்கில் மாணவர்கள் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் பிரகாசிக்க.. அதே திறமை உடைய மாணவிகள்.. பொதுத் தேர்வுகளில் அடையும் வெற்றியோடு கணிதம்.. விஞ்ஞானத்துக்கு ரா ரா காட்டி விட…
-
- 3 replies
- 995 views
-
-
574f2dae7c13dab28cf68b32ccd4369a
-
- 2 replies
- 969 views
-
-
பெருந்துளை இந்த கருந்துளை.. 1200 கோடி சூரியன்களின் நிறையைக் கொண்டஆகப் பெரிய ராட்சசக் கருந்துளை ஒன்றைக் கண்டு பிடித்தஆச்சரியத்தில் விஞ்ஞானிகள் மூக்கில் விரல் வைத்து உள்ளனர். . சமீபத்தில் பீகிங் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் ஷு பிங் வு (Xue-Bing Wu) இனம் கண்ட கருந்துளை . இதுவரை நாம் பார்த்ததில் மிக மிக அதிக நிறை கொண்ட கருந்துளை. நம் சூரியனைப் போல 1200 சூரியன்களை உள்ளே வைக்கலாம்.அந்த அளவு பெருந்துளை.இந்த கருந்துளை. க[பெ]ருந்துளையைப் பற்றி பீகிங் பல்கலைக்கழகம் உருவாக்கிய வரை படம். நாம் வாழும் பூமியில் புவிஈர்ப்பு விசை உள்ளது. அதனைச் சார்ந்து நாம் பொருள்களை எடைபோடுகிறோம். எடை வேறு. நிறை வேறு. நிறை (Mass) என்றால் ஒரு பொருளில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய கடல் இருந்ததற்கான புதிய ஆதாரம் ஆறு ஆண்டுகள் தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு கிடைத்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாயில் நீர் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதே பல ஆண்டுகளாக விவாதத்திற்குள்ளானதாக இருக்கும் நிலையில் அங்கு கடல் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா இந்நிலையில் செவ்வாயில் கடல் இருப்பதற்கான போதிய ஆதாரம் கிடைத்திருப்பதாக அறிவித்துள்ளது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது. அங்கு பூமியில் உள்ள ஆர்டிக் பெருங்கடலைவிட பெரிதான அளவில் கடல் இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளாகவே இக்கடலானது அக்கிரகத்தின் வடதுருவத்தில் இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் மேலும் கூறியுள்ளனர்.அங்கு இரண்டு…
-
- 3 replies
- 1.9k views
-
-
சூரிய ஒளியில் இயங்கும் விமானம் சர்வதேச அளவில் பறக்க தயார் நிலையில் உள்ளது. ஐக்கிய அரபு நாடுகள் சூரிய ஒளியில் பறக்கும் விமானத்தை தயாரித்துள்ளது. பெட்ரோலுக்கு மாற்றாக இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் சோதனை ஓட்டம் 2 தடவை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் சர்வதேச அளவில் பறக்க விடுவதற்காக சமீபத்தில் 3வது முறையாக சோதனை ஓட்டம் நடந்தது. இது ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் உள்ள எல்படீன் விமான நிலையத்தில் நடந்தது. இந்த முறையும் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. மேக மூட்டம் இன்றி வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் திட்டமிட்டபடி அது தனது பயணத்தை தொடங்கும் என விமானத்தை உருவாக்கிய விஞ்ஞானி பெர்ட்ரான்ட் பிக்கார்டு தெரிவித்துள்ளார். http://seith…
-
- 1 reply
- 529 views
-
-
பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீம் பச்சை குத்தியதை அழிக்க முடியாததையும், அழிக்க முயன்றால் வலியால் துடிப்பதையும் நாம் பார்த்து இருக்கிறோம். இதற்கு எளிய தீர்வாக, பச்சை குத்தியதை வலியின்றி அழிக்கும் கிரீமை கனடா நாட்டின் டல்ஹவுஸ் பல்கலைக்கழகத்தின் பிஎச்.டி. மாணவர் அலெக் பாகனகம் கண்டுபிடித்துள்ளார். பச்சை குத்தியவுடன், அந்த மையில் உள்ள வண்ணப்பொருள், நமது தோலுக்குள் சென்று சேர்ந்து விடும். பிறகு அது, ‘மேக்ரோபேஜஸ்’ என்ற வெள்ளை ரத்த அணுக்களால் ஈர்த்துக் கொள்ளப்படும். அந்த மாணவர் கண்டுபிடித்துள்ள கிரீம், வண்ணப்பொருளை ஈர்த்து வைத்துள்ள மேக்ரோபேஜசுக்கு எதிராக செயல்புரியும் ஆற்றல் கொண்டது. இதனால், பச்சை வலியின்றி அழிந்து விடுவதாக தெரியவந்துள்ளது. http://www.dailyth…
-
- 6 replies
- 17.2k views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் ‘சிந்திக்கும் தொப்பி’ ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். பெயர் சிந்திக்கும் தொப்பி என்றாலும் இது தானாக சிந்திக்காது. இந்தத் தொப்பியை அணிந்துகொண்டால் வேகமாக எதையும் கற்றுக்கொள்ளவும் விரைவாக முடிவெடுக்கவும் முடியும் என்கிறார்கள். ஒரு விஷயத்தில் முடிவெடுக்கத் திணறுகிறவர்களுக்கும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் திணறுகிறவர்களுக்கும் தொப்பியை அணிவித்து, குறைந்த அளவு மின்சாரம் மூளைக்குள் செலுத்தினார்கள். அப்பொழுது மிகச் சரியாக முடிவெடுத்துவிடுகின்றனர் ,வேகமாகக் கற்றுக்கொள்கின்றனர் . இதுவரை 60 மனிதர்களிடம் இந்தச் சோதனையை நடத்தி, 75 சதவிகிதம் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்னும் பல சோதனைகளுக்குப் பிறகுதான் இந்தத் தொப்பி வெளிவரும் என்…
-
- 0 replies
- 803 views
-
-
என் நண்பரும் ஊடகவியலாளருமான எஸ். சரவணன் தன் முகநூலில் இணைத்து இருந்த இக் காணொளி ஒரு நல்ல திட்டம் ஒன்றை பற்றி சுருக்கமாக சொல்லிச் செல்கின்றது. இத் திட்டம் எம் தாயகத்துக்கு ஒத்துவரக் கூடிய ஒரு அருமையான திட்டம். முதலீடும் பல இலட்சங்களில் தேவைப்படாது. 5dddcc2f699408c8a21967d0492ceb1c இது தொடர்பாக உங்களின் ஆரோக்கியமான கருத்துகளையும் தாருங்கள்.
-
- 4 replies
- 1k views
-
-
தொலைபேசி வலையமைப்பில் தற்போது அதிவேகம் கொண்ட வலையமைப்பு வகையாக 4G தொழில்நுட்பம் காணப்படுகின்றது. இதன் வேகத்தையும் மிஞ்சும் வகையில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யும் முகமாக ஆராய்ச்சிகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் Surrey பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5G ஆராய்ச்சி மையத்தில் Tbps வேகத்தில் தரவுகளை அனுப்பி புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். இது தற்போது உள்ள தரவுப்பரிமாற்றத்தை விடவும் 1000 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை 5G தொழில்நுட்பம் 2018ம் ஆண்டளவில் பொதுமக்களின் பாவனைக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamilseithy.net/21091
-
- 0 replies
- 737 views
-
-
அபூர்வமானதொரு சூரிய கிரகணம் வரும் மார்ச் மாதத்தில் நடக்கவுள்ளதாக விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர். இதுபோன்ற சூரிய கிரகணம் ஒன்று 1999 ஆம் ஆண்டிலேயே இறுதியாக நடந்துள்ளது. 16 வருடங்கள் கழித்து அது தற்போது நிகழவுள்ளது. வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி பகல் வேளையை இரவு ஆக்கிரமிக்கவுள்ளது. இது சிலவேளை 90 நிமிடங்கள் நீடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை சுமார் 84 சதவீதமான சூரிய ஒளி மறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் வடக்கு நோர்வே மற்றும் பரோயே தீவுகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. மீண்டும் இதுபோன்ற ஒரு சூரிய கிரகணம் 2026 ஆம் ஆண்டில் தான் வரும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். http://newsfirst.lk/tamil/2015/02/16-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF…
-
- 1 reply
- 3.3k views
-
-
வாஷிங்டன் செவ்வாய் கிரகம், நமது பூமி கிரகத்தைப் போன்று நுண்ணுயிரிகள் வாழ ஏற்ற கிரகமாக பார்க்கப்படுகிறது. இந்த செவ்வாய் கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியை பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் படங்களையும், தகவல்களையும் ‘நாசா’வுக்கு அனுப்பி வருகிறது.அவற்றை இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானி அஸ்வின் வாசவதா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ‘மவுண்ட் ஷார்ப்’ பள்ளத்தில் மோஜோவி பகுதியில், இருந்து விண்கலம் செவ்வாய்கிரகத்துடன் சேர்த்து தனது செல்பி படத்தை எடுத்து அனுப்பி உள்ளது.இந்த பகுதியில் கியூரியா…
-
- 0 replies
- 529 views
-
-
பரிசோதனை நிலையத்தில் உருவாக்கப்படும் ஸ்மார்ட் பேண்டேஜ்உடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களுக்கு போடப்படும் பேண்டேஜ்கள், அந்த காயங்கள் மோசமானால் தாமாகவே மருத்துவருக்குத் தெரியப்படுத்தி உடனடியாக அவரை எச்சரித்து சிகிச்சையளிக்கச் செய்யவல்லனவாக உருவாகிவருகின்றன. இன்றைய நிலையில் காயம் மற்றும் புண்களை ஆராய்ந்து, கண்காணித்து, குணப்படுத்தவேண்டுமானால் நீங்கள் முதலில் மருத்துவமனைக்கு நேரில் செல்லவேண்டும். அங்கே காத்திருந்து, முதலில் மருத்துவ தாதியரைப் பார்க்கவேண்டும். அவருக்கு அடுத்து மருத்துவர் பார்த்து மருந்துகளை பரிந்துரைப்பார். ஆனால் இதற்கு பதிலாக காயம் மற்றும் புண்களின் தன்மையை தானே ஆராயவல்ல, தொடர்ந்து கண்காணித்து குணப்படுத்தவல்ல ஸ்மார்ட் பேண்டேஜ்கள், அதாவது புத்திசாலி பேண்டே…
-
- 2 replies
- 681 views
-
-
அமெரிக்க ராணுவத்தின் வெப்பக்கதிர் http://www.cnn.com/videos/tech/2015/02/20/us-military-heat-ray-nws-orig.cnn?sr=fb022415heatray3pVODVideo
-
- 0 replies
- 807 views
-
-
அமேஸான் - புத்தக விற்பனையிலிருந்து பூதாகர வளர்ச்சி! எஸ்.எல்.வி. மூர்த்தி இ-காமர்ஸ், ஆன்லைன் மார்க்கெட்டிங் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இணையதள வியா பாரம் இந்தியாவில் சுமார் 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. பிளிப்கார்ட், ஜபாங், ஜங்லீ, மைந்த்ரா, ஸ்நாப்டீல் போன்ற இ காமர்ஸ் கம்பெனிகள் புத்தகங்கள், சமையல் சாதனங்கள், எலெக்ட்ரானிக் கருவிகள், செல்போன்கள், உடைகள், வாட்ச்கள், நகை கள் என நமக்குத் தேவைப்படும் அத்தனை பொருட்களையும், ஏகப்பட்ட பிராண்ட்களில் தருகிறார்கள். பெரும்பாலான இ-காமர்ஸ் கம்பெனிகளின் ஆண்டு விற்பனை பல்லாயிரம் கோடிகளுக்கும் அதிகம். பல லட்சம் பேருக்கு இந்தக் கம்பெனிகள் வேலை வாய்ப்புத் தருகின்றன. இது மட்டுமல்ல, குற…
-
- 0 replies
- 604 views
-
-
மருத்துவராக செயற்படவல்ல புத்திசாலி பேண்டேஜ்கள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பரிசோதனை நிலையத்தில் உருவாக்கப்படும் ஸ்மார்ட் பேண்டேஜ்உடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களுக்கு போடப்படும் பேண்டேஜ்கள், அந்த காயங்கள் மோசமானால் தாமாகவே மருத்துவருக்குத் தெரியப்படுத்தி உடனடியாக அவரை எச்சரித்து சிகிச்சையளிக்கச் செய்யவல்லனவாக உருவாகிவருகின்றன. இன்றைய நிலையில் காயம் மற்றும் புண்களை ஆராய்ந்து, கண்காணித்து, குணப்படுத்தவேண்டுமானால் நீங்கள் முதலில் மருத்துவமனைக்கு நேரில் செல்லவேண்டும். அங்கே காத்திருந்து, முதலில் மருத்துவ தாதியரைப் பார்க்கவேண்டும். அவருக்கு அடுத்து மருத்துவர் பார்த்து மருந்துகளை பரிந்துரைப்பார். ஆனால் இதற்கு பதிலாக காயம் மற்றும் புண்களின் தன்மையை தானே ஆராயவல்ல, தொடர்ந…
-
- 0 replies
- 737 views
-
-
வேற்றுக்கிரக நாகரீகங்கள் – பகுதி 1 எழுதியது: சிறி சரவணா டாக்டர் மிச்சியோ காகுவின் கட்டுரை, “The Physics of Extraterrestrial Civilizations” இன் தமிழாக்கம். சில புதிய விடயங்களையும் சேர்த்து எனது பாணியில் இங்கு தருகிறேன். கட்டுரை சற்று நீளமாக இருப்பதால், பகுதிகளாக எழுதுகிறேன். காலம்சென்ற பிரபல வானியலாளர், கார்ல் சேகன் ஒரு மிக முக்கியமான கேள்வியை முன்வைத்தார். “மில்லியன் வருடங்கள் வாழ்ந்துவிட்ட நாகரீகங்கள் எப்படி இருக்கும்? எம்மிடம் இப்பொது ரேடியோ தொலைகாட்டிகள், விண்வெளி ஓடங்கள் என்பன சில தசாப்தங்களாக மட்டுமே உண்டு; எமது தொழில்நுட்ப நாகரீகம் வெறும் சில நூற்றாண்டுகள் மட்டுமே கண்டது. இப்படி இருக்கும் போது, சில பல மில்லியன் வருடங்களாக இருக்கும் தொழில்நுட்ப நாகரீகங்கள் எப்…
-
- 11 replies
- 3.5k views
-
-
கஞ்சா: நினைவாற்றலை கெடுக்குமா அல்லது கொடுக்குமா? 22 பிப்ரவரி 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:31 ஜிஎம்டி கஞ்சா ஒரு போதைப்பொருள் மட்டுமே அது உடலுக்கு கூடவே கூடாது என்கின்றனர் சிலர். இன்னும் சிலரோ, இல்லை..கஞ்சா என்பது ஓர் அருமருந்து என்கின்றனர். இதில் எது சரியானது? உண்மையில் கஞ்சாவுக்கு இரண்டு குணங்களும் உள்ளதாக விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்திருக்கிறார்கள். tetrahydrocannabinol மற்றும் Cannabidiol அல்லது THC (டிஎச்சி) மற்றும் CBD (சிபிடி) என்கின்ற எழுத்துக்களில் அழைக்கப்படும் இரண்டு பதார்த்தங்கள் கஞ்சா செடியில் இருக்கின்றன. THC என்ற பதார்த்தம் தான் போதையை கொடுக்கிறது. அதேநேரம் மூளையில் தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி ஞாபகசக்தியையும் கடுமையாக கெடுக்கின்றத…
-
- 1 reply
- 703 views
-
-
-
- 2 replies
- 873 views
-
-
குவாண்டம் கொம்பியூட்டிங் "I think there is a world market for maybe five computers." 1943ம் ஆண்டு ஐ.பி.எம் நிறுவனத்தின் தலைவர் தோமஸ் வாட்சன் அருளிய வார்த்தைகள் இது. எவ்வளவு அபத்தம். பின்னாளில் புகழ்பெற்ற வாட்சன் ஆய்வுகூடம் அவர் பெயரிலேயே நிறுவப்பட்டது. ஐபிம் அப்போது ஒரு பெரும்மாதா. பின்னாளில் எழுபதுகளில் அப்பிளும், மைக்ரோசொப்டும் பெர்சனல் கொம்பியூட்டர் என்ற இராட்சசனை உலகம் முழுதையும் ஆள வைக்கப்போகிறார்கள் என்பதை நாற்பதுகளிலேயே வாட்சன் அறிந்திருக்க ஞாயம் இல்லை. "மூரேயின் விதி (Moore's law)", கணனித்துறையில் இருப்பவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். இரண்டு வருடங்களுக்கொருமுறை ட்ரான்சிஸ்டர்களின் வளர்ச்சி இரட்டிப்பாகும் என்றார் மூரே. வளர்ச்சி என்றால் இங்கே …
-
- 2 replies
- 2.2k views
-