அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான பிச்சை சுந்தர்ராஜன் (எ) சுந்தர் பிச்சை (42), காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் படித்தவர். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலை.,யில் எம்.எஸ்., படிப்பும், பென்சில்வேனியாவின் வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ.,வும் படித்தார். கடந்த 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த சுந்தர் தற்போது மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். இதன்படி, கூகுள் மேப், கூகுள் பிளஸ், ஆய்வு, விளம்பரம் மற்றும் கட்டமைப்பு ஆகிய பிரிவுகளை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி பேஜ், சுந்தர் பிச்சை வசம் ஒப்படைத்துள்ளார். சாதனையாளர்: இணைய சாம்ராஜ்யத்தின் தமிழ்ப் புயல் http:/…
-
- 25 replies
- 4.5k views
-
-
தங்களது லூமியா மொபைல் ஃபோன்களில் இருக்கும் நோக்கியா என்ற பெயரை நீக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நோக்கியா பிரான்ஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. மேற்கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, 7.2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஃபின்லாண்டு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்கியது. ஆனால் நோக்கியா என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யப்படவில்லை. நோக்கியா தொழில்நுட்ப நிறுவனமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நோக்கியா என்ற பெயரையும் அந்நிறுவன உரிமையாளர்களே தக்கவைத்துள்ளனர். அந்தப் பெயரை பயன்படுத்துவதற்கான உரிமம் மைக்ரோசாப்டிடம் உள்ளது. பு…
-
- 0 replies
- 478 views
-
-
கிராமம், நகரம் என எங்கு கண்டாலும் விரவி, பரவியுள்ளது பார்த்தீனிய செடி. வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை தனது தாயகமாக கொண்ட இந்த விஷ களை செடி, ஈரப்பதம் கொண்ட எந்த மண்ணிலும் வேகமாக வளர்ந்து, தன் இனத்தை வளர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது. மற்ற தாவரங்களைப் போல் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமல்லாமல், ஆண்டின் எல்லா மாதமும் செழித்து வளரும் தன்மை கொண்டது பார்த்தீனியம் செடி. இதன் இலைகள் வெளிர் பச்சை நிறத்துடன் இருக்கும். இதன் விதைகள் எந்த மண்ணிலும் எந்தச் சூழலிலும் முளைக்கக் கூடிய வகையில் அதிக முளைப்புத் திறன் உடையதாக இருப்பதால் இந்த விஷ களைச் செடியை அழித்து ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது. மனிதர்களுக்கு ஆஸ்துமாவை உருவாக்கும் இந்த களைச் செடிகளை பிடுங்கி அழிப்பதை விட அதனை அப்…
-
- 0 replies
- 706 views
-
-
இலை வால் பல்லி உயிரினங்களில் பலவற்றுக்குப் ‘உருமறைப்பு’ (camouflage) என்ற தகவமைப்பை இயற்கை வழங்கியிருக்கிறது. சில உயிரினங்களுக்கு இடத்துக்கு ஏற்றாற் போல தோலின் நிறம் அமைந்திருக்கும். சில உயிரினங்களுக்கு இடத்துக்கு ஏற்றாற் போல நிறம் மாறும். சில உயிரினங்களின் உடலில் உள்ள கோடுகளும் புள்ளிகளும் எதிரிகளைக் குழப்பமடையச் செய்யும். அதாவது, எளிதில் எதிரியின் கண்களில் படாமல் தப்பிக்கவும், தன்னுடைய இரையை எளிதில் பிடிக்கவும் இந்தத் தகவமைப்பு உதவுகிறது. வித்தியாசமான தகவமைப்பை பெற்றுள்ள சில உயிரினங்களைப் பார்ப்போமா? இலை வால் பல்லி காய்ந்த இலைகளைப் போன்ற தோற்றமுடைய இலை வால் பல்லி (leaf tailed gecko) ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் தீவில் காணப்படுகிறது. மரப்பட்டை, காய்ந்த இலைகளுடன் இர…
-
- 4 replies
- 2k views
-
-
குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் இன்று தலைமுடிதான் ‘தலை’யாய பிரச்சினை. தலைமுடிப் பராமரிப்புக்காகக் காலம்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழ ஆரம்பித்துவிடுகிறது. முடியின் வளர்ச்சி முடி என்பது ஒரு புரத இழை. கரோட்டின் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ (Follicle) எனும் முடிக்குழியில் இருந்து வளரக்கூடியது. நமது தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடி வளர்கிறது என்று சொன்னால், ஒரு செடி தொடர்ச்சியாக வளர்வதைப் போல் முடி வளர்கிறது என்று …
-
- 0 replies
- 642 views
-
-
‘‘ஒரு ஏக்கர் நிலம்... ஒன்பது மாதத்தில் லட்சாதிபதி!’’ கைகொடுக்கும் கண்வலி கிழங்கு ‘‘ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி, ஒன்பதே மாதத்தில் லட்சாதிபதி ஆக முடியுமா?'' என்று கேட்டால், ‘‘அட! சொர்க்கத்தில் இடம் கிடைத்து சாகுபடி செய்தால்கூட அது நடக்காதுங்க!’’ - பெரும்பாலான விவசாயிகளின் பதில் இப்படித்தான் இருக்கும். ஆனால், வேதாரண்யம் பக்கம் வந்து கேட்டுப்பாருங்கள்... கண்முன்னே அந்த லட்சாதிபதிகளே அணி வகுத்து நிற்பார்கள்! அந்த அளவுக்கு பணம் கொட்டும் பயிராக கைகொடுத்துக் கொண்டிருக்கிறது ‘கண்வலி கிழங்கு’! நம் இலக்கியங்களில் ‘செங்காந்தள்’ என்று சிறப்பித்துக் கூறப்படும் மலருக்கு 'கார்த்திகைப்பூ' என்றொரு பெயரும் உண்டு (தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசிய மலர்). இந்தப் பூவைக் கொடுக்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
இராட்சத வால் நட்சத்திரம் செவ்வாய் கிரகத்தை ஞாயிற்றுக்கிழமை(19) மாலை 2.27 மணியளவில் கடந்து சென்றதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. சி-2013 ஏ என்ற ஒரு சிறிய மலை அளவிலான இந்த வால் நட்சத்திரத்துக்கு சைடிங் ஸ்பிரிங் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வால் நட்சத்திரமானது மணிக்கு 2 இலட்சத்து 3 ஆயிரம் கி.மீட்டர் அதிவேகத்தில் கடந்து சென்றதாகவும் செவ்வாய் கிரகத்தில் இருந்து 1 இலட்சத்து 39 ஆயிரத்து 500 கி.மீட்டர் தூரத்தில் சென்றதாகவும் அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பூமி மற்றும் சந்திரனுக்கு இடையிலான தூரத்தின் 3 மடங்கு தூரமாகும். செவ்வாய் கிரகத்தை கடந்து சென்ற போது இந்த வால் நட்சத்திரம் புகையையும், துகள்களையும் வெளியேற்றியுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மார்ஸ் ஒடிசி, மாவ…
-
- 0 replies
- 511 views
-
-
என் பள்ளித் தோழன் கணக்குல புலி. கணக்குப் பாடத்தில் எப்போதுமே சதம்தான். ட்ரிக்னாமெட்ரி, அல்ஜீப்ரா, பித்தகாரஸ் அனைத்தும் அவனுக்குத் தலைகீழ் பாடம். வடக்கே போகும் ரயில் ஒரு நாளிதழில் ஒரு கணக்கு விளையாட்டை இருவரும் கண்டோம். ‘ஒரு மணி நேரத்திற்கு 150 கிமீ’ வேகத்தில் மின் ரயில் வேகமாக வட திசையில் செல்கிறது. காற்று தென் திசையில் வீசிக்கொண்டிருக்கிறது. அப்படியானால் ரயிலில் இருந்து வரும் புகை எந்தத் திசையில் செல்லும்’ என அதில் கேட்கப் பட்டிருந்தது. உடனே “தெற்கு” என்றேன் நான். “150 கிமீ வேகம் என்பதால் வடக்குதான்” என்றான் அவன். இருவருக்கும் இடையில் வாதம் வலுத்தது. ஒரு கட்டத்தில் சரியான விடையை எடுத்துப் பார்த்தோம். வடை போச்சே! அதில் உள்ள பதிலில் ‘மின் ரயிலுக்கு ஏது புகை?’ என்றிருந…
-
- 0 replies
- 619 views
-
-
-
மேற்படி படம்.. பிரித்தானியாவில்.. பரிசில் பெற்ற.. முக்கிய அறிவியல் சஞ்சிகை ஒன்றில் பிரசுரிக்கப்பட தெரிவாகியுள்ளது. காரணம்.. இந்தப் படத்தில் இருப்பது.. வெறும் பூவும்.. தேனீயும் அல்ல. தேனீயைப் போல.. உருவ இசைவாக்கம் பெற்ற ஒரு வகை ஈ... என்பதாகும். உலக அளவில்.. தேனீக்களின் குடித்தொகை பல்வேறு காரணங்களால்..பெருமளவில் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில்.. பூக்களில் உள்ள மகரந்தத்தை ஒட்டி உணவு தேடி வாழும் இந்த ஈக்கள் தேனீக்கள் போல வேடமிட்டு.. எதிரிகளிடம் இருந்து தப்பும் தந்திரோபாயத்தை உபயோகிக்கின்றன. இந்தத் தோற்றம் அவற்றின் ஜீன்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டு அது டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு ஏற்ப தெரிவு செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளது ஆகும். இதன்…
-
- 32 replies
- 2.8k views
-
-
வால் காக்கை கட்டுரை ஆசிரியர் பார்த்த அண்டங் காக்கை ஜூலை மாதம். ஒரு மழைக்கால மதிய வேளை. மேற்குத் தொடர்ச்சி மலையின் உயரமான மலைப் பகுதி. லேசான தூறல். நான் நின்று கொண்டிருந்த பாறை மழையில் நனைந்து, அடர்ந்த மேகத்தைக் கிழித்துக்கொண்டு கீழிறங்கிய லேசான சூரிய ஒளி பட்டுப் பளபளத்தது. அந்தப் பாறை செங்குத்தாகக் கீழிறங்கியது. பள்ளத்தாக்கில் பச்சை நிறத்தின் பல்வேறு அடர்த்திகளில் மழைக்காட்டின் கூரை வியாபித்திருந்தது. மெல்ல வீசிய குளிர் காற்று மழை சாரலைத் தள்ளிக்கொண்டே சென்றது. திடீரென மேகங்கள் விலகி, வானம் முற்றிலுமாக வெளுத்தது. மறைந்திருந்த சூரியன் தலையை வெளியே நீட்டி, தோலை ஊடுருவிச் சுள்ளெனச் சுட்டது. தூரத்தில் மலை முகடுகளுக்கிடையே வெள்ளைவெளேரென்ற அருவி கொட்டிக் கொண்டிருப்பத…
-
- 0 replies
- 678 views
-
-
செந்நிற கிரகம் என வர்ணிக்கப்படும் செவ்வாய் கிரகம் பூமியில் இருந்து சுமார் மூன்றரை கோடி மைல் தூரத்தில் உள்ளது. அதிவேகமாக செல்லும் ராக்கெட்டில் பயணித்தால்கூட, நாம் செவ்வாய் கிரகத்தை சென்றடைய சுமார் 7 மாத காலம் ஆகிவிடும். செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை ஆய்வு மேற்கொண்டுவரும் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம், எண்டேவர் உள்பட சில ஆளில்லா விண்கலங்களை அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை போன்றவை குறித்து ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இந்தியாவின் ‘மங்கல்யான்’ விண்கலமும் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? என்று ஆய்வு செய்து வருகின்றது.இந்த நிலையில், வருகிற 2030–ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு ஆட்களை அனுப்பி அங்கு தங்க…
-
- 0 replies
- 758 views
-
-
வகையான விண்ணோடங்களுக்கு ஓய்வளித்த அமெரிக்கா.. ஆளில்லாத மினி விண்ணோடம் (Orbital Test Vehicle or X-37B) ஒன்றை ரகசியமாக இராணுவத் தேவைகளுக்காக விண்வெளிக்கு அனுப்பி சுமார் 674 நாட்கள் அதனை விண்வெளியில் பராமரித்துள்ள விடயம் அந்த மினி விண்ணோடம் அண்மையில் பூமிக்கு திரும்பிய பின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மினி விண்ணோடம்.. விண்வெளியில் சீனாவின் நடவடிக்கைகளை கண்காணிக்க அனுப்பட்டிருக்கலாம் என்றும்.. செய்மதிகளை உளவு பார்க்க அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும் பலவகையான ஊகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த விண்வெளிப் பயணம் தொடர்பில் அமெரிக்கா இதுவரை எந்தத் தகவலையும் உலகிற்கு வழங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற ரகசிய விண்வெளிப்பயணங்களில் இது 4 காவது ஆகுமாம…
-
- 3 replies
- 1.5k views
-
-
புவியைப் போன்ற ஒரு கோளுக்கு பயணம் செயய முடிந்தால் / லட்சுமி கணபதி மங்கள்யான் செவ்வாய்க்கு அனுப்பியதால் நமக்கு என்ன லாபம்? இதனால் நமது வாழ்வில் என்ன முன்னேற்றம் நிகழ்ந்து விடப்போகிறது. 30 கோடி பேர் இரவு வேளை உணவின்றித் தூங்கும் இந்த நாட்டில் மங்கள்யானுக்கு 450 கோடி செலவில் அவசியம் ஒரு விண்கலன் தேவையா என ஒரு சாரார் கேட்பதை பார்க்கிறோம். இதே நாட்டில் தான் கோடிக்கணக்கில் மக்கள் பணம் ஊழல் செய்யப்படுகிறது கொள்ளை அடிக்கப்படுகிறது அவற்றை தடுக்க தவறிய நமக்கு மங்கள்யாண் மட்டும் செலவாகத் தெரிகிறது விண்வெளி ஆய்வுக்கு இவ்வளவு பிரயத்தனம் அவசியமானதுதான? என்றால் ஆமாம்! நமது பூமி தாக்கப்படத்தக்க ஒரு வெளியில் தான் உள்ளது. இதுவரை ஐந்து முறை பேரழிவுகள் ஏற்பட்டு கிட்டத்தட்ட அனைத…
-
- 0 replies
- 585 views
-
-
சூரியனுக்கு அருகேயுள்ள கிரகம் புதன். இதனால் இங்கு எப்போதும் கடும் வெப்பம் நிலவுகிறது. அதாவது இதன் மேற்பரப்பில் 430 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை உள்ளது. இது பூமியில் நிலவும் 58 நாள் வெப்பத்துக்கு ஈடாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்த நிலையில் உள்ளது. இதை அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. ரேடியோ டெலஸ்கோப் எடுத்து அனுப்பிய போட்டோகளில் இது தெரியவந்துள்ளது. இது ரேடார் கருவி அனுப்பியுள்ள சிக்னல் மூலமும் தெரியவந்துள்ளது. புதன் கிரகத்தின் வடக்கு முனையில் உள்ள எரிமலையில் ‘நாசா’ பல ஆய்வுகளை நடத்தியது. அங்கு தண்ணீர் ஐஸ் ஆக உறைந்து கிடப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. http://www.seithy.com/breifNews.php?newsID=118932&category=…
-
- 1 reply
- 509 views
-
-
கால்கள் ஒருவரின் மனதை காட்டிக் கொடுத்து விடும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், அது உண்மை தான், நமது உடல் பாகங்களில் முகத்திற்கு அடுத்தபடியாக இருப்பது கைகள். கைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியும், ஆனால் கால்கள் என்ன செய்கிறது என்பதை உணர மறந்து விடுகிறோம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அதற்காக சோகமான நேரங்களில் கூட, வேண்டா வெறுப்புடன் மகிழ்ச்சியாக இருப்பதைப் போல முகத்தை மாற்றி வைப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களின் கால்கள் அதைக் காட்டிக் கொடுத்துவிடும். நடக்கும் விதம் இளமையாக ஆரோக்கியமாக இருப்பவர்கள் வேகமாக நடக்கிறார்கள். இதனால் அவர்களது கைகள் முன்னும், பின்னும் அசைகின்றன. தாங்கள் இளமையானவர்கள், துடிப்பானவர்கள் என்…
-
- 2 replies
- 759 views
-
-
உலகின் முதலாவது பறக்கும் கார் விற்பனைக்கு வரவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 29ஆம் திகதி இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளதாக உற்பத்தி பணியில் ஈடுபட்ட பிரதம பொறியியலாளர் ஸ்டெபன் க்ளீன் குறிப்பிட்டுள்ளார். AeroMobil 3.0 என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வீதியில் பயணிக்கும் அதேவேளை ஆகாயத்தில் பறக்கவும் செய்கிறது. 1990 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட முயற்சி தற்போது கைகூடியுள்ளதாக குறித்த காரின் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 29ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள The Pioneers Festival இல் இந்த கார் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=118773&am…
-
- 6 replies
- 646 views
-
-
தொழில்நுட்பம் வளர வளர வசதிகள் எப்படி அதிகரிக்கிறதோ அதை விடப் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பங்களால் பிரச்சனை என்றால், அதை பயன்படுத்தத் தெரியாமல் அரைகுறையாக செய்து அனைவர் முன்பும் அசிங்கப்பட்டு நிற்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். தாங்கள் செய்யும் தவறு தங்களை எவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உணராமல் தவறை செய்து வருகிறார்கள். நம்முடைய அந்தரங்கம் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க நேரிடும் சில வாய்ப்புகளைப் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.Image Credit - themodernnetwork.com பலரின் அந்தரங்கம் இணையத்தில் பல லட்சம் மக்கள் பார்க்கும் நிலை வர முக்கியக் காரணமே மொபைல் தான். கேமரா மொபைல் வந்த பிறகு இது போன்ற குற்றங்கள் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டது. இதன் துவக்க…
-
- 7 replies
- 1.3k views
-
-
Source : http://vimarisanam.wordpress.com/ கீழே இருப்பது என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? முதல் படத்தை உற்றுப் பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம் - இவை என்ன -கேமிரா பொருத்தப்பட்ட பென்களா ? இன்னும் யோசனைகளா – எதாவது தோன்றுகிறதா ? இதையும் பாருங்களேன் - எதிர்காலத்தில் நமது கணிணியை (பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ) இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய புதிய ஜப்பானிய தொழில் நுட்பம் தான் நீங்கள் பார்ப்பது ! சட்டை பாக்கெட்டில் எடுத்துச் செல்லக்கூடிய அளவிற்கு ஒரு கம்ப்யூட்டர் கிடைத்தால் சௌகரியம் தானே ! பார்ப்பதற்கு பேனா வைப் போல் தோற்றமளிக்கும் இந்த கருவி ஒரு சாதாரண தட்டையான இடத்தின் மேல் மானிட்டர், கீ போர்டு இரண்டையும் உருவாக்குகிறது. ஒரு ட…
-
- 0 replies
- 643 views
-
-
பக்கத்துத் தெருவில் இருக்கும் காய்கறி கடைக்குப் போக வேண்டும் என்று நினைத்ததுமே, நம் கால்கள் அந்தக் கடையை நோக்கி நடைபோடுகிறதே. இது கால்களுக்கு எப்படித் தெரியும்? வண்டி மாடுகள் சந்தையில் இருந்து அவை வளர்க்கப்படும் வீட்டுக்குச் செல்கின்றனவே, அது எப்படி? ‘பழக்கப்பட்ட இடம்’ என்று சொல்வோம். ஆனால் அந்த ‘பழக்கப்பட்ட’ என்பது உண்மையில் எப்படிச் சாத்தியமாகிறது? நினைவாற்றல் மூலம்தான் என்போம். அந்த நினைவாற்றலை, நம் மூளை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைத்தான் விஞ்ஞானிகள் ஜான் ஓ கீஃப், மே பிரிட் மோசர், எட்வர்ட் மோசர் ஆகிய மூவரும் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் கண்டுபிடிப்புக்காக, 2014-ம் ஆண்டுக்கான மருத்துவம்/உடலியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. புதிய…
-
- 0 replies
- 663 views
-
-
-
சில இணையத்தளங்கள் குறிப்பிட்ட நாடுகளில் பார்வையிடுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கும். இவ்வாறான இணையத்தளங்களை பார்வையிடுவதற்கு TunnelBear எனும் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கின்றது. இம்மென்பொருளானது iOS, Android இயங்குதளங்களைக் கொண்ட மொபைல் சாதனங்கள் உட்பட PC மற்றும் Mac ஆகிய சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறொரு நாட்டிலிருந்து (United State, United Kingdom, Japan, Canada, Germany, France ) இணையத்தளத்தினை பார்வையிடுவது போன்ற மாயையை ஏற்படுத்த முடியும். இதன் இலவச பதிப்பினை பயன்படுத்தும் போது ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 500MB வரையான தரவுகளையே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தரவிறக்கச் சுட்டி Windows Mac OS iOS …
-
- 0 replies
- 462 views
-
-
சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நோர்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவியைக் கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெறவுள்ளது. நோர்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1907ஆம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழில்நகரம் உருவானது. குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உ…
-
- 0 replies
- 516 views
-
-
மூளையில் இருக்கும் நியூரான்களில், உடலில் சுரக்கும் ஆக்ஸிடோக்ஸின் என்ற ஹார்மோனுக்கு ஏற்ப மாறுகின்ற ஒரு சில நியூரான்கள்தான் ஒருவரது பாலுணர்வைக் கட்டுப்படுத்துகின்றன என்பதை எலிகளில் ஆய்வு நடத்தி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘காதல் ஹார்மோன்’ என்றே சொல்லப்படுகின்ற ஆக்ஸிடோஸின்கள்தான் பாலுணர்வு வழிந்தோடும் வேளைகளில் ஒருவரது நடவடிக்கைகளை செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது என்பது நமக்கு ஏற்கனவே ஓரளவுக்கு தெரிந்த விஷயம்தான். அப்படியிருக்க ஆக்ஸிடோஸினால் ஆட்கொள்ளப்படுகின்ற மூளையின் உயிரணுத் தொகுதியை எலிகளில் செயலிழக்கச் செய்து விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, ஒரு ஆண் எலிக்கு ஒரு கட்டையைப் பார்ப்பதும் கூடத் தயாராகவுள்ள ஒரு பெண் எலியைப் பார்ப்பதும் ஒன்றாக இருந்திருக்கிறது. அதாவது இவ்விர…
-
- 2 replies
- 803 views
-
-
புராணக் கதைகளில் ஒருவர் ஓர் அம்பை எய்ய அதை இடைமறித்துத் தாக்கி அழிக்கும் அம்பை மற்றவர் எய்வதாக அறிந்திருந்தோம். இதை முதலில் ஈராக் போரின் போது சதாம் ஹுசேய்ன் ஸ்கட் மிஸைல்ஸை ஏவ அதை இடைமறித்துத் தாக்கி அழிக்க அமெரிக்கா ஏவிய பேட்ரியோட்ரிக் மிஸைஸ்களை ஏவியதையும் அறிந்து கொண்டோம். இந்தத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலையை இப்போது இப்போது இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பிற்க்கும் இடையில் நடக்கும் போரில் இரும்புக் கூரை என்னும் எறிகணை எதிர்ப்பு முறைமை செயற்படுவதைப் பார்க்கின்றோம். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து உருவாக்கிய ஏவுகணை எதிர்ப்பு முறைமை இரும்புக்கூரை என அழைக்கப்படுகின்றது. இவற்றால் குறுகிய தூரம் மற்றும் மத்திம தூரம் பாயும் எறிகணைகளை (artillery shells and mortars) அழிக்க முடியு…
-
- 4 replies
- 4k views
-