Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. விண்வெளி பயணத்தில் ஒளியை மிஞ்ச முடியுமா? – லட்சுமி கணபதி பயணம் மனிதனுக்கு பயணம் அவசியமானது. ஆதி மனிதன் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்ரிக்காவில் தொடங்கி உலகம் முழுவதும் நடை பயணம் மூலமாகவே சென்று சேர்ந்தான். பயணப்பட பல காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய ஆதாரத் தேவைகளில் ஒன்று “உறைவிடம்”. இந்த உறைவிடத் தேடல் நமக்கு பூமியில் மட்டுமில்லாது நமது பிரபஞ்சம் நோக்கியும் திரும்பியது என்னவோ சென்ற நூற்றாண்டில் தான். நமது பிரபஞ்சத்தின் பல நட்சத்திரத் திரள்களையும், விண்மீன்களையும் அவற்றைச் சுற்றி வரும் கோள்களையும் நோக்கிப் பயணம் செய்ய அறிவியல் உலகம் பல முயற்சிகளை எடுத்தது. நிலவில் மனிதனை இறக்கிய பின் மனித குலம் இந்த தேடுதலை உற்சாகத்துடன் தொடர்ந்தது. நமது சூரிய குடும்பத்தில் …

    • 2 replies
    • 800 views
  2. பெரும்பாலோனர் மத்தியில் அனலிடிக்ஸ் குறித்து ஒரு பிரம்மாண்டமான எண்ணம் இருக்கின்றது. அனலிடிக்ஸ் ஒரு மேஜிக்கான விஷயம் - கிட்டத்தட்ட அலாவுதீனின் அற்புத விளக்கைப்போன்ற ஒரு விஷயம். அதை உபயோகித்தால் நினைத்த காரியம் அனைத்திலும் ஜெயமே! எனவே, எப்பாடுபட்டாவது அனலிடிக்ஸ்தனை நம்முடைய கம்பெனிக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்துவிடும் பட்சத்தில் பணம் கொட்டோகொட்டு என்று கொட்டிவிடும் என்று நினைக்கிறார்கள். இது ஒரு தவறான நினைப்பே! முதலில் ஒரு பிசினஸ் அனலிடிக்ஸை உபயோகித்து என்னென்ன விஷயங்களை அறிந்துகொள்ள முடியும் என்பதை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிசினஸின் ரிஸ்க்குகள், பிசினஸில் இருக்கும் வாய்ப்புகள், பிசினஸ் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் ஏமாற்று வேலைகள் மற்றும் நம்முடைய பிசினஸ் தரும் பொர…

  3. நாம் எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் எஸ்பிரஸ், பறக்கும் ரயில் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் நிஜமாகவே ஒலியை விட வேகமாக ஓடும் ஒரு ரயிலை எலான் மஸ்க் (Elon Musk) வடிவமைத்து இருக்கிறார். இந்த ரயில் நீர், நிலம், ஆகாயம் என இப்போது இருக்கும் போக்குவரத்து வசதிகளின் இன்னொரு பரிமாணத்தைப் பிடிக்கும் என எதிர்பார்கிறார் மஸ்க். ஒரு மணி நேரத்துக்கு 750 கிலோ மீட்டர் வேகம் என்பது வேகமோ வேகம். இது அதி வேகத்துக்குப் பெயர் பெற்ற புல்லட் ரயிலைவிட, மூன்று மடங்கு வேகம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஹைப்பர் லூப் ரயிலில் பயணிப்பவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ வரையிலான 360 கிலோமீட்டர் தூரத்தை ஜஸ்ட் 30 நிமிடங்களில் அடைந்து விடலாம் என்றால் ரயிலின் வேகத்தை …

  4. இருபதாம் நூற்றாண்டின் பத்து இணையற்ற பிசினஸ்மேன்களைப் பற்றிய பட்டியல் போட்டால், அவற்றில் நிச்சயமாக இடம் பிடிப்பவர் ஸ்டீவ் ஜாப்ஸ். கம்ப்யூட்டர் பயன்படுத்தல் ராக்கெட் சயின்ஸ் அல்ல, சாதாரண மனிதனுக்கும் கைவரும் கலை என்று பயன்படுத்தலை எளிமைப்படுத்தியவர். ஐ பாட் (iPod), ஐ போன், ஐ பேட் (iPad) என வகை வகையான அழகு கொஞ்சும் தயாரிப்புகளை உருவாக்கி, மக்களுக்கு ஆனந்த அதிர்ச்சி கொடுத்து, எல்லாத் தயாரிப்புகளையும் மாபெரும் விற்பனை அடைய வைத்தவர். கண்டுபிடிப்புத் திறமை, தொலை நோக்கு, அழகுணர்வு, வடிவமைப்பு நுணுக்கம், தான் விரும்பியது கிடைக்கும்வரை சமரசமே செய்யாத கச்சிதப் போக்கு என ஸ்டீவ் ஜாப்ஸின் புகழ் பல பரிமாணங்களில் ஜொலிக்கிறது. இது மட்டுமா? டீல்கள் முடிப்பதில் அவர் மன்னன். 2000 கால கட்டம்…

  5. ‘இது கூடத் தெரியாதா உனக்கு? போய் கூகுள் பண்ணுப்பா’ என்று அறிவுறுத்துகிற புதிய வழக்கு உருவாகிவிட்டது. தேடுதல் என்ற வார்த்தைக்குச் சமமாக இன்று கூகுள் என்ற இணையத் தேடுபொறி மாறிவிட்டது. 2006 -ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு டிக் ஷனரியிலும் அந்தச் சொல் சேர்ந்து விட்டது. கூகுள் சாம்ராஜ்யம் எந்த ஒரு விசயத்தைப் பற்றி நாம் கேட்டாலும் அதனை கோடிக்கணக்கான இணையதளங்கள் செயல்படுகிற கணினிகளில் இருந்து தேடி எடுக்கிறது கூகுள். நல்லது,கெட்டது,சரி,தவறு எல்லாவற்றையும் நம்முன் படைக்கிறது. அதிலிருந்து அன்னப்பறவை போல உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய இணைய உலகில் கூகுள் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் பத்து லட்சத்துக்கும் அதிகமான ஆதார தகவல் மையங்களை அது வைத…

  6. சின்ன மீனை போட்டால் பெரிய மீனை பிடிக்கலாம் கீழே கிடந்தால் செங்கற்கள்; எடுத்து அழகாக அடுக்கினால் சுவர். சின்ன சின்ன வேலைகளை சேர்த்து செய்தால் அருமையான கட்டிடம். மேலே சொன்ன வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. சிறிய செயல்களை சரி வர செய்தால் பெரிய செயல்கள் தானே நேரும் என்ற கொள்கையின் அடிப்படையில் டான் காபோர் எழுதிய புத்தகம் இது. சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி கொள்வதற்கு முதலில் மனதளவில் விருப்பம் இருக்க வேண்டும். ஒரு நிகழ்வை நீங்களே நினைத்து பாருங்கள். ஒரு கூட்டத்தில் அல்லது ஒரு வகுப்பில் நீங்கள் சென்று அமர்ந்த பிறகு உங்களை யாராவது வேறு இடத்துக்கு மாறி உட்காரும்படி சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?. இதே நிகழ்வை நான் ஒரு வகுப்பில் கூறிய பொழுது பாதிக்கு மே…

  7. 1. வாசிப்பு மொழி வளத்தை அதிகரிப்பதால் சரளமாக பேசுவதற்கு உதவும். என்னுடைய வகுப்பில் பல மாணவர்கள் தமிழில் கூட நினைத்ததை சொல்ல முடியாது திணறுவதை பார்க்கிறேன். ஆனால் வாசிப்பு பழக்கம் உள்ள மாணவர்கள் சரளமாக தன்னம்பிக்கையாக பேசுகிறார்கள். 2. மொழியின் இயக்கம் ஒரு தர்க்கத்தை சார்ந்து இருக்கிறது. நன்றாக வாசிக்கிறவர்கள் எந்த துறை பற்றியும் புத்திசாலித்தனமாக எதையாவது பேசுவார்கள். இது வாசிப்பு தரும் தர்க்க அறிவினால் வருவது. 3. உரைநடை வாசிப்பை நான் ஒரு உரையாடலாக பார்க்கிறேன். உதாரணமாக நல்ல கட்டுரைகளை அதிலுள்ள கருத்துக்களுடன் மனதளவில் வாதிட்டபடியே தான் படிக்க முடியும். இது வாதத் திறனையும் அதிகப்படுத்தும். இன்னொரு பக்கம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். 4. புனைவு வாசிப்பு நம்…

  8. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் குரியன்ஜோசப், 50. பி.ஏ., பட்டதாரியான இவர், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் 35 ஏக்கர் செம்மண் தரிசு நிலத்தை வாங்கினார். மெயின் ரோட்டில் இருந்து இங்கு செல்லவே 5 கி.மீ., நடக்க வேண்டும். மலையடிவாரத்தின் முதல் நிலம் இதுதான். ரசாயன கலப்பு இல்லாமல், இயற்கை முறையில் பழங்கள் சாகுபடி செய்து உலக மார்க்கெட்டில் விற்பனை செய்வதே இவரது லட்சியம். இதற்காகவே இவர், ரசாயனம் எந்த வகையிலும் எட்டிப்பார்க்காத நிலத்தை தேர்வு செய்தார். அந்த நிலம் கடினமான கற்கள் நிறைந்த செம்மண் பூமியாக இருந்தது. அதனை பற்றி கவலைப்படவில்லை. எளிதாக கிடைத்த சான்று: அங்கு ""ஹார்வஸ்ட் பிரஷ்'' என பெயரிட்டு பழப்பண்ணை அமைத்தார். முதலி…

  9. வணக்கம் தொழில் நுட்ப அறிவு சார்ந்த நண்பர்களே . எனது கம்போர்சிங் ,இசை அமைப்பு ஆகியவற்றிற்கு CUBASE 5 என்னும் மென்பொருளை பாவித்து வருகிறேன் .தற்போது ஓடியோ ஒலிப்பதிவிற்கு மட்டுமல்ல வீடியோ ஒளிபபதிவிற்கு கூட அதை பயன்படுத்தும் வழி கண்டு ஆனந்தமடைந்தேன் .மிக இலகுவாக வீடியோ காட்சிக்கான இசையினை வழங்க கூடியதாய் உள்ளது .........நானாகேவே இந்த விடயத்தை கண்டு பிடித்தேன் ..ஆனால் வீடியோ இசை முடிந்தபின் அதை வீடியோ காட்சியுடன் சேர்த்து மிக்ஸ் டௌன் [mixdown ] செய்ய முயற்சித்துப்பார்த்தேன் ..முடியவில்லை .ஓடியோ மட்டுமே மிக்ஸ்டவுன் ஆகுது .இது சம்பந்தமாக யாருக்காவது தெரிந்திருந்தால் அறியத்தாருங்கள் நன்றி .

  10. மீத்தேன் எரிவாயுத் திட்டமும் அதன் எதிர்கால வினைகளும் தென்னை மரத்தில தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு சொல்லாடல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அது இப்போது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை விடயத்தில் உண்மையாகி போய் இருக்கிறது. தேவையில்லாத பாதுகாப்பு துறை செலவீனங்கள் , இமயம் அளவு ஊழல்கள், இந்தியாவுக்குப் பொருந்தாத சந்தைப் பொருளாதாரம் என சூறையாடப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம் இப்போது அதல பாதாளத்திற்குப் போய் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதில் இருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா தனது மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து விட்டது. “என்னடா சிக்கும்” என அது தேடும் போது அதற்கு சிக்கி இருப்பது தான் தஞ்சை திருவாரூர் மாவ…

  11. மனிதர்கள் தூங்கும்போதும் மூளை விழித்திருக்கிறது மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்று தெரிவித்திருக்கும் விஞ்ஞானிகள், வார்த்தைகளின் பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை, மனிதர்கள் தூங்கும்போதும் விழிப்புடன் செயல்படுகிறது என்று நிரூபித்திருக்கிறார்கள். கேம்பிரிட்ஜ் மற்றும் பாரிஸைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது ஒரு வார்த்தைக்கட்டளையை பிறப்பித்து, அந்த கட்டளையை ஏற்று அந்த பங்கேற்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படி பணிக்கப்பட்டார்கள். இந்த சோதனையின்போது இந்த பங்கேற்பாளர்கள் விழித்திருக்கும்போது செய்யப்பழகிய செயல்களை தூங்கும்போதும் அதே மா…

  12. இந்த கணக்கை யாராவது கணக்குப்புலிகள் சரிசெய்து தர முடியுமா?

  13. முட்டையில் இருந்து எப்படி குஞ்சு வரும்? https://www.facebook.com/video/video.php?v=723512921001098

  14. பாப்லோ பிக்காஸோ (’நவீன ஓவியங்களின் பிரம்மா' ) - வரலாற்று நாயகர்! கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களை பொதுவாக 'கலைவல்லுநர்கள்' என்றழைக்கிறோம். அதற்கும் ஒருபடி மேலே சென்று ஒரு தலைமுறை மாற்றத்தையோ, அல்லது ஒரு பிரெளயத்தையோ ஏற்படுத்தும் ஒரு சிலரைத்தான் 'கலையுலக பிரம்மாக்கள்' என்றழைக்கிறோம். ஓவியத்துறையை பொருத்தமட்டிலும் ஆரம்பத்தில் இரண்டு பரிணாம (Two Dimension) ஓவியங்கள்தான் வரையப்பட்டன. பதினைந்தாம் நூற்றாண்டில் உதித்த மைக்கலாஞ்சலோவும், லியொனார்டோ டாவின்சியும் அந்த இரண்டு பரிணாம வரையறையைத் தகர்த்து முப்பரிணாம ஓவியங்களை வரைந்து உலகை அசத்தினர், ஓவியத்துறைக்கு இன்னொரு முகத்தை கொடுத்தனர். அவர்கள் மறைந்த பிறகு பல நூற்றாண்டுகள் வரை ஓவியத்துறைக்கு எவராலும் வேறு ஒரு புதிய …

  15. Started by nunavilan,

    SONY உருவான கதை - அக்யோ மொரிட்டா (வரலாற்று நாயகர்) இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான். அந்த அதியசத்துக்கு…

  16. நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளது ரொசெட்டா ஆளில்லா விண்கலமான ரொசெட்டா, தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றில், எங்கு இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் என்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தேர்தெடுத்துள்ளனர். எதிர்வரும் நவம்பர் மாதம் அந்த விண்கலம் தரையிறங்க, ஒப்பீட்டளவில் சமமாகவுள்ள ஒரு இடத்தையே தாங்கள் தேர்தெடுதுள்ளதாக, விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.'67P' என்று பெயரிடப்பட்டுள்ள, நான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட அந்த வால் நட்சத்திரத்தின் நூற்றுக்கணக்கானப் படங்களை ஆராய்ந்த பிறகே, ரொசெட்டா இறங்கும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறைந்த ஈர்ப்புச் சக்தி ஃபிலே என்று அழைக்கப்படும் அந்தச் சோதனைக் கருவி , பனிப்பாறைகளைக் கொண்ட தளமொன்றில், திருகாணிகள் மற்றும் ஈட்டிகளைக் கொண்டு நிலை நிறுத்திக் கொ…

  17. மீள் உருவாக்கம் என்று தமிழ்ச் சொல்லாக்கம் செய்யப்பட்டிருக்கும் குளோனிங் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு புதைந்துபோன வரலாற்றைக் கூட உயிரியல் விஞ்ஞானிகள் தோண்டிக் கொண்டுவந்துவிடுவார்கள் போலிருக்கிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து உலகையே கலக்கிய ஜூராசிக் பார்க் படத்தைப் பார்க்காதவர்கள் இருக்க முடியுமா? அதில் விஞ்ஞானிகள் டைனோசரை சாகசமாக உருவாக்குவார்கள். கடைசியில் அது விபரீதத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால் அதுபோல நிஜ வாழ்க்கையில் நடக்காது என நினைத்திருப்போம். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குளோனிங் முறையில் ஒரு டைனோசர் குட்டியை உருவாக்கியிருக்கிறார்கள். இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்தான் இ…

  18. பிரியா நடராஜன் தேனீக்கள் ஒரு பக்கம் பிறந்து வளர்ந்து கொண்டும் இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கான மலர்களில் இருந்து தேனைக் கொண்டுவந்து சேகரித்து வைத்து இருக்கும் தேனடையைப் பார்த்து இருக்கிறீர்களா? அதேபோல பிரபஞ்சத்தில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிறந்து வளர்ந்து இறக்கும் நிகழ்வு நடைபெறுகிற காலக்ஸிக்கு விண்மீன் பேரடை என பெயர் வைத்துள்ளார்கள். தமிழ் தேன்தான். கருந்துளை நமது சூரியக்குடும்பம் பிறந்து வளர்ந்த தொட்டில் பால்வெளி மண்டலம் எனும் விண்மீன் பேரடை. சூரியனைச் சுற்றி கோள்கள் சுழல்கின்றன. சூரியன் தன் கோள்களையும் இழுத்துக்கொண்டுப் பால்வெளி மண்டலத்தைச் சுற்றுகிறது. சூரியனைப் போன்ற எண்ணற்ற விண்மீன்களைக் கொண்ட பால்வெளி மண்டலம் தனது மையத்தில் உள்ளக் கருந் துளைய…

  19. இனி பார்வையற்றவர்களாலும் காட்சிகளைக் காண முடியும் ! விசேஷ கருவி கண்டுபிடிப்பு.! பார்வையற்றோர் காட்சிகளைக் காண வழி செய்யும் ஒருவித விசேஷக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல வருடங்களாக கண்கள், பார்வை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் காட்சிப் பதிவுகளிலிருந்து வரும் ஒளி அலைகள் (Light waves) பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்தக் கருவியில் ஒலி அலைகளாகப் (Sound waves) பதிவு செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒலி அலைகளை ஒளி அலைகளாக மாற்றி (காட்சி) அதனை மூளைக்கு அனுப்புகிறது. எனவே மனித மூளையில் உள்ள ஒளி உணரும் பகுதி, காட்சிகளை அப்படியே ப…

    • 4 replies
    • 527 views
  20. தங்கத்தின் ‘நேனோ’ நிறங்கள் பெரியாழ்வார் வையமளந்தானை வாமன உருவில் “ஆனிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்” இட்டு திருத்தாலாட்டுப் பாடுகிறார். ஆனிப்பொன் மஞ்சள் நிறத்தது. சிலப்பதிகாரத்தில் “கடல் ஆடு காதையில்” மாதவி அணிந்திருந்த நகைகளில் இருந்து இன்றைய உஸ்மான் ரோட்டு நகைக்கடை தங்கம்வரை மஞ்சள் நிறத்தில்தான் நம் கண்களுக்குத் தெரியும். காரணம் சற்று தீவிரமானது. விவரிப்போம். ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியல் கோட்பாட்டை (special relativity theory) நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் ஒரு கருத்தாக்கத்தின்படி பிரபஞ்சத்தில் எப்பருப்பொருளுக்கும் பயணம் செய்யமுடிந்த உச்சகட்ட வேகம் என்பது ஒளியின் வேகம்தான். ஒளி விநாடிக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் செல்லும். இவ்வாறு உச்ச…

  21. Started by nunavilan,

    Jaw Dropping Science https://www.facebook.com/video/video.php?v=10204606640270542

  22. உலகிலேயே அதிக விலை கொண்ட வீடியோ கேமாக உருவாகியிருக்கும் டெஸ்டினி, கடந்த 9-ம் தேதி உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்தது. இது வீடியோ கேம்ஸ் துறையையே புரட்டிப் போடும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். மாணவர்கள் நெருக்கடியாக சேர்ந்து வாழும் சிகாகோ குடியிருப்பு அறையில்தான் இந்த வீடியோ கேமுக்கான ஐடியா தோன்றியுள்ளது. ஜேசன் ஜோன்ஸ், அலெக்ஸ் செரோபியன் என்ற இரண்டு இளைஞர்கள் சேர்ந்து கம்ப்யூட்டர் கேம்ஸ்களை உருவாக்கத் தொடங்கினார்கள். இரண்டு பேராகத் தொடங்கிய ‘பங்கி’ நிறுவனம் தற்போது ஐநூறு ஊழியர்களைக் கொண்ட பிரம்மாண்ட நிறுவனமாக உருவாகியுள்ளது. பங்கி தயாரித்துள்ள ‘டெஸ்டினி’ தான் அதிகபட்ச பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. இதன் தயாரிப்புச் செலவு ரூ.375 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஹா…

  23. 'வல்லபட்டை இன வகையைச் சேர்ந்த அகர்வுட் செய்கையை இலங்கையில் வணிக ரீதியில் முன்னெடுப்பது என்பது CAKit (Cultivated Agarwood Kits) முறையினூடாக மட்டுமே முடியும். இதற்கான காப்புரிமையை சதாஹரித பிளான்டேஷன்ஸ் நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது' என நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எச்.கே.ரோஹண அண்மையில் தெரிவித்திருந்தார். 'இந்த தொழில்நுட்பத்தில் சதாஹரித பிளான்டேஷன்ஸ் என்பது அதிகளவு முதலீடு செய்துள்ளதுடன் அகர்வுட் செய்கைக்காக பிரத்தியேக அங்கீகாரத்தை பெற்ற நிறுவனமாகவும் திகழ்கிறது' என அவர் மேலும் குறிப்பிட்டார். வணிக நோக்கிலான மற்றும் பொருளாதார ரீதியில் பெருமளவு பயன் தரக்கூடிய வகையில் அமெரிக்காவின் மின்னேசொடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபர்ட் பிளான்செட்டே பல்வேறு ஆய்வுகள்…

  24. கொழும்பு: இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா- அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை. அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவுகளை க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.