அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
இனி பார்வையற்றவர்களாலும் காட்சிகளைக் காண முடியும் ! விசேஷ கருவி கண்டுபிடிப்பு.! பார்வையற்றோர் காட்சிகளைக் காண வழி செய்யும் ஒருவித விசேஷக் கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல வருடங்களாக கண்கள், பார்வை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் காட்சிப் பதிவுகளிலிருந்து வரும் ஒளி அலைகள் (Light waves) பார்வையற்றோரின் காதுகளில் பொருத்தப்படும் இந்தக் கருவியில் ஒலி அலைகளாகப் (Sound waves) பதிவு செய்யப்படுகிறது. பின்பு மீண்டும் ஒலி அலைகளை ஒளி அலைகளாக மாற்றி (காட்சி) அதனை மூளைக்கு அனுப்புகிறது. எனவே மனித மூளையில் உள்ள ஒளி உணரும் பகுதி, காட்சிகளை அப்படியே ப…
-
- 4 replies
- 528 views
-
-
கண்ணை விற்று சித்திரமா? நியூட்ரினோ ஆராய்ச்சி X சுற்றுச்சூழல் இத்தாலியின் நியூட்ரினோ கண்டறியும் கருவி காலையில் எழுந்து செய்தி பார்க்கிறீர்கள். உங்கள் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. உங்களது எதிர்வினை எப்படி இருக்கும்? அட போங்க நீங்க வேற ஒரு குடும்ப அட்டை வாங்குவதற்கே ஆறு மாசம் அலையணும். இதில் பேருந்து நிலையம் எல்லாம் வேண்டும் என்றால் ஒரு தலைமுறைக்காவது போராடனும். அரசாவது நமக்கு தேவையான திட்டத்தை தானாக முன்வந்து தருவதாவது என்று உங்களில் பலர் நினைக்கலாம். அவ்வாறு நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. நீண்ட காலமாகவே நம் நாட்டில் நிலைமை அவ்வாறு தான் இருந்து வருகிறது. இந்நிலையில் நடுவண் அரசு 900 கோடி ரூபாய் மதிப்பிலான நியூட்ரினோ ஆராய…
-
- 0 replies
- 528 views
-
-
இதுவரை பூமியில் இருந்து காண முடியாத நிலவின் மறுபக்கத்திற்கு எந்த நாடும் செயற்கைக்கோள்களை அனுப்பியதில்லை. முதல்முயற்சியாக பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 527 views
-
-
கார்களின் எடையை குறைக்குமா மரக்கூழ் தொழில்நுட்பம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எதிர்காலத்தில் ஆச்சரியமளிக்கும் பொருட்களால் கார்களின் பாகங்கள் தயாரிக்கப்படலாம். அதில் ஒன்று மரக்கூழ். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமரத்தால் செய்யப்பட்ட காரின் மாதிரி எஃகினால் செய்யப்படும் காரின் உதிரிபாகங்களுக்கு பதிலாக மரக்கூழைக் கொண்டு வலுவான பாகங்களை தயாரி…
-
- 1 reply
- 526 views
-
-
கிபிர் என்பது ஒருவகைப் போர் வானூர்தியாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்வானூர்தியின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, ஸ்ரீலங்கா,பல்கேரியா ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இவ்வானூர்தியைப் பயன்படுத்துகின்றன. கிபிர் (kfir is Hebrew for lion cub) நிலத்தில் உள்ள இலக்குகளை தாக்குதல் தான் இதன் முக்கிய பணியாகும். மிராஜ் போன்றே (delta wing) முக்கோண இறக்கையை கொண்டுள்ளது. மிராஜ் 5 வானூர்தியின் புதிய பதிப்பு தான் இந்த கிபிர். மிராஜ் III மற்றும் மிராஜ் 5 ஒப்பிடும் போது இது மிகவும் சக்தி வாய்ந்த இயந்திரம், பெரிய engine air intakes, நீண்ட மூக்கு, திருத்தப்பட்ட நவீன cockpit, இஸ்ரேலிய நவீன மின்னியல் மற்றும் அமைப்புகள்…
-
- 1 reply
- 526 views
-
-
உதவி தேவை நான் உருவாக்கிக் கொண்டிருக்கும் சிறிய சிறிய இசைக் கோர்ப்புக்களை உங்கள் கருத்துக்காக யாழில் இணைக்க ஆசைப்படுகிறேன், ஆனால் MP3 files ஆக இருக்கும் எனது இசைக் கோர்ப்புக்களை யாழில் எப்படி இணைப்பது என்று தெரியவில்லை. யாராவது தெளிவான விளக்கம் தரமுடியுமா...? நன்றி
-
- 0 replies
- 526 views
-
-
36 வயதான சுவீடன் நாட்டுப் பெண்மணி.. அவருக்கு வேறோரு.. குடும்ப நண்பரான 60 வயதுடைய பெண்மணியில் இருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்ட கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். உலகிலேயே.. கருப்பை மாற்று சிகிச்சை மூலம் பெறப்பட்ட முதலாவது குழந்தையாக இக்குழந்தை நோக்கப்படுகிறது. குழந்தை சரியான கால அளவுக்கு முன்னர் பிறந்திருந்தாலும்.. 1.8 கிலோகிராம் எடையுடன் ஆரோக்கியமாக உள்ளதாக தந்தையும் வைத்தியர்களும் தெரிவித்துள்ளனர். மருத்துவ உலகில் இது ஒரு மகத்தான சாதனையாக மட்டுமன்றி.. இன்னொரு புதிய அத்தியாயமாகவும் நோக்கப்படுகிறது. பொதுவாக பெண்களுக்கு பிறப்பின் போதான பிறழ்வுகளாலும்.. புற்றுநோய்க்கு அளிக்கும் சிகிச்சையின் தீவிரத்தாலும்.. கருப்பை இழப்பு அதிகம் ஏற்படுகிறது. …
-
- 1 reply
- 526 views
-
-
ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லும்போது சிரிச்சோம், இப்போது மிரண்டு போயுள்ளோம்.! பேஸ்புக் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வக (FAIR) ஆராய்ச்சியாளர்கள், ஸ்கிரிப்ட்டில் இருந்து வெளியேறிய சாட்பாக்ஸ்கள், எந்த விதமான மனித உள்ளீடும் இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழியில் தொடர்பு கொண்டதை கண்டறிந்து அதிர்ந்து போயுள்ளனர். பேஸ்புக் நிறுவனத்தின் ஏஐ (AI) அதாவது ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) ஆனது, மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத, அதன் சொந்த தனித்துவமான மொழியை உருவாக்கியுள்ளது என்பதை ஆய்வகத்தின் டெவலப்பர்கள் கண்டறிந்த உடனேயே பேஸ்புக் செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மூடப்பட்டுள்ளது. இது எவ்வளவுக்கு எவ்வளவு ஆச்சரியமளிக்கும் ஒரு விடயமாக இருக்…
-
- 1 reply
- 526 views
-
-
‘வால் நட்சத்திரம்’ என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் ஆகும். ஒரு வால் நட்சத்திரமானது சூரிய குடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின் வெப்பத்தால் அதில் உள்ள பனி ஆவியாகி, வால் நட்சத்திரத்தின் கருவைச் சுற்றி ஒருவித ஒளிரும் தன்மைகொண்ட வாயு மற்றும் தூசியால் ஆன வால் போன்ற அமைப்பு உருவாகிறது. இந்த வால் நட்சத்திரங்கள் காண்பதற்கு அரிதான நிகழ்வாகவும், வானியல் அற்புதங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது. சுமார் 30 கி.மீ. நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட…
-
- 0 replies
- 526 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 27 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது 28 ஆகஸ்ட் 2023 இரு தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக அவரின் கையைத் தொட நேர்ந்தது. அப்போது உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. ஒருமுறை அலுவலக உணவகத்தின் கதவைத் திறக்கும்போதும் இதேபோன்று சில விநாடிகளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது நினைவில் வந்து சென்றது. உங்களில் பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஒருவரைத் தொடுவதன் மூலமோ, கதவைத் திறப்பதன் மூலமோ வேறு சில செயல்பாடுகள் …
-
- 0 replies
- 525 views
- 1 follower
-
-
பல லட்சம் தலைமுறை காலத்துக்கு ஆபத்து இல்லை பூமி இன்னும் 175 கோடி ஆண்டு வாழும். மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் ‘உயிர் வாழும்’ காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது. இது தொடர்பாக ஆன்ட்ரூ ரஷ்பி கூறியதாவது: பூமி இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும் என்பது பற்றி நாங்…
-
- 1 reply
- 525 views
-
-
காரல் மார்க்சு (1818 மே 5 - 1883 மார்ச்சு 14) சில குறிப்புகள் - இளம் தோழர்களுக்கு [size=3][size=3][size=3]க.முகிலன் [/size][/size][/size] [size=3]காரல் மார்க்சு [size=4]1818ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத் தில் பிறந்தார்.[/size][/size] [size=3][size=4]காரல் மார்க்சு தன் பள்ளிப் படிப் பின் இறுதித் தேர்வில், “எதிர்காலப் பணி யைத் தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள்” எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில், “மனித குலத்தின் பெருமைக்காகப் பாடுபடக் கூடிய ஒரு வேலையைத் தீர்மானித்துக் கொண்டால், எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. ஏனெனில் அவை யெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ…
-
- 0 replies
- 525 views
-
-
நட்சத்திரங்களை இழக்கும் கடல் June 11, 2021 நாராயணி சுப்ரமணியன் குளிர்ப் பிரதேசக் கடற்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற கெல்ப் காடுகளைப் பற்றி, வெப்ப மண்டலத்தவர்களான நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கெல்ப் பாசிகள் அதிகம் வளரும் இடங்கள் கெல்ப் காடுகள் (Kelp forests)எனவும், குறைந்த அடர்த்தியில் பாசிகள் இருக்கும் இடங்கள் கெல்ப் படுகைகள் (Kelp beds) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை கடலுக்கடியில் இருக்கும் மழைக்காடுகள். காடு என்பது இங்கே உருவகம் அல்ல. நிஜமாகவே கடலுக்கடியில் ஒரு பிரம்மாண்ட மரகதக் காடு இருப்பதான தோற்றத்தைத் தரக்கூடியவை கெல்ப் காடுகள். பழுப்பு பாசி வகையைச் கெல்ப் பாசிகள்ஆறு முதல் பதினான்கு டிகிரி செல்சியஸ் வரை உள்ள குளிர் வெப்பநிலையில் செ…
-
- 0 replies
- 525 views
-
-
அறிவியல் அறிவோம்: கொட்டாவி விட்டால் மூளைக்காரர்! ஆசிரியர் தீவிரமாகப் பாடம் நடத்தும்போதோ, அலுவலகக் கூட்டத்தில் அதிகாரி பேசும்போதோ கொட்டாவி வந்தால் சங்கடத்துக்கு உள்ளாவோம். காரணம், ஒருவருக்குக் கொட்டாவி வந்தால், அவருக்குத் தூக்கம் வருகிறது, பேச்சில் ஆர்வமில்லை என்று எதிரில் இருப்பவர் புரிந்துகொள்வார். புதிதாக வெளிவந்துள்ள ஆய்வு முடிவைக் கேட்டால், கொட்டாவி வருவது கௌரவமான விஷயம்தான் என்று எண்ணத்தோன்றும். நியூயார்க் மாகாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரூ காலப் உள்ளிட்டோர் நடத்திவரும் ‘பயாலஜி லெட்டர்’ எனும் ஆய்விதழில் சமீபத்தில் இதுபற்றி ஒரு ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது. யூடியூபில் பதிவுசெய்யப்பட்டுள்ள வீடியோவில்…
-
- 1 reply
- 525 views
-
-
'வல்லபட்டை இன வகையைச் சேர்ந்த அகர்வுட் செய்கையை இலங்கையில் வணிக ரீதியில் முன்னெடுப்பது என்பது CAKit (Cultivated Agarwood Kits) முறையினூடாக மட்டுமே முடியும். இதற்கான காப்புரிமையை சதாஹரித பிளான்டேஷன்ஸ் நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது' என நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் எச்.கே.ரோஹண அண்மையில் தெரிவித்திருந்தார். 'இந்த தொழில்நுட்பத்தில் சதாஹரித பிளான்டேஷன்ஸ் என்பது அதிகளவு முதலீடு செய்துள்ளதுடன் அகர்வுட் செய்கைக்காக பிரத்தியேக அங்கீகாரத்தை பெற்ற நிறுவனமாகவும் திகழ்கிறது' என அவர் மேலும் குறிப்பிட்டார். வணிக நோக்கிலான மற்றும் பொருளாதார ரீதியில் பெருமளவு பயன் தரக்கூடிய வகையில் அமெரிக்காவின் மின்னேசொடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபர்ட் பிளான்செட்டே பல்வேறு ஆய்வுகள்…
-
- 0 replies
- 524 views
-
-
எயிட்ஸுடன் பிறந்து பூரண குணம் பெற்ற குழந்தை: வைத்தியர்கள் சாதனை March 4, 2013 10:01 pm அமெரிக்காவில் எயிட்ஸ் நோயிலிருந்து இரண்டு வயது குழந்தை ஒன்று பூரண குணமடைந்துள்ளது. அக்குழந்தைக்கு எயிட்ஸ் நோய் (எச்.ஐ.வி.) தாக்கி இருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அக்குழந்தையை ஜாக்சனில் உள்ள மிஸ்சிசிப்பி பல்கலைக்கழக மெடிக்கல் சென்டருக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அக்குழந்தைக்கு எயிட்ஸ் நிபுணர் டாக்டர்கள் ஹன்னா கே பிறந்த 30 மணி நேரத்தில் இருந்தே மருந்து மூலம் சிகிச்சை அளித்தார். தொடர்ந்து அக்குழந்தைக்கு பல மருந்துகளை கலந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அக்குழந்தை எயிட்ஸ் நோய் தாக்குதலில் இருந்து பூரண குணமடைந்தது. அதை தொடர்ந்து இதே…
-
- 0 replies
- 524 views
-
-
5ஜி போர் உலகம் முழுவதும் தகவல் தொடர்பு துறையில் பாரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற- தகவல் தொடர்பின் 5ஆவது தலைமுறை (5G) அடுத்த வருட நடுப்பகுதியில், பல நாடுகளிலும் ஒரே முறையில் நடைமுறைக்கு வரும் வகையில், அதற்கான தொழில்நுட்ப உட்கட்டமைப்பை ஏற்படுத்தும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழர் பிரதேசத்திலும் கூட இதற்கான ஏற்பாடுகளால் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டு வருவதை காணக் கூடியதாக இருக்கிறது. 5ஆவது தலைமுறை காந்த அலைகள், மானிட வாழ்வுக்கும் ஏனைய விலங்குகள், பறவைகள் வாழ்விற்கும் உகந்தது தானா? இதனால் புற்று நோய் வருவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என பல்வேறு கேள்விகளும் உள்ளன. இது பலரையும் பெரும் சிந்தனைக்கு உள்ளாக்கி இருக்…
-
- 1 reply
- 524 views
-
-
நிலவில் அதிகளவு தண்ணீர் உள்ளது உறுதிபடுத்திய நாசா.! நிலவில் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இந்தியாவின் சந்திராயன் – 1 விண்கலம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பில் மேற்பரப்பில் முதன்முதலில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது. ஆனாலும், சந்திராயன் விண்கலம் கண்டுபிடித்தது நீர் மூலக்கூறுகளா? அல்லது ஹைட்ராகிசில் மூலக்கூறுகளா? என விஞ்ஞானிகளால் கணிக்க முடியமல் இருந்தது. இந்த நிலையில் நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தில் இருந்து சோபியா தொலைநோக்கி மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறை கண்டறிவது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சோபியா தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விஞ்ஞானிகள் ஆய்வு…
-
- 0 replies
- 523 views
-
-
வானியல் அற்புதம்: சந்திரன், செவ்வாய், வெள்ளி நெருங்கும் காட்சியை பார்ப்பது எப்படி? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களும் சந்திரனும் நெருக்கமாகத் தோன்றும் அரிதான நிகழ்வு இன்று நடக்கிறது. இன்றும் நாளையும் இந்தக் காட்சியை வெறும் கண்களால் பார்க்க முடியும். உண்மையில் இந்த நிகழ்வின்போது கோள்கள் நெருங்கி வருவதில்லை. வெள்ளி, செவ்வாய் ஆகிய கோள்களுக்கு இடையேயான கோணம் வெறும் 0.5 டிகிரி மட்டுமே இருக்கும். அதனால் அவை ஒன்றிணைந்து இருப்பது போல காட்சியளிக்கும். அதே நேரத்தில் பிறைச் சந்திரனானது இவற்றுக்கு 4 டி…
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
எதிர்வரும் 8ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று பூரண சந்திரக்கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவு காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக் கிடைக்காது என்றும் சந்திரக் கிரகணத்தின் இறுதிக் கட்டத்தை மாத்திரம் மாலை நேரத்தில் இலங்கையில் காணலாம் என்றும் வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இந்த சந்திரக்கிரகணத்தை முழுமையாக காணலாம் என்று வானவியல் நிபுணர் அநுர சீ.பெரேரா தெரிவித்தார். இந்த சந்திரக்கிரணகம் காரணமாக பௌர்ணமி தினத்தன்று இரவு சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு 'ரெட் ம…
-
- 1 reply
- 523 views
-
-
விவசாயிகளின் நண்பன் என்று எல்லோரும் மண்புழுவைத்தான் சொல்வார்கள். அந்த வரிசையில் ஆந்தையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் துரதிர்ஷ்டவசத்தின் குறியீடாக பார்க்கப்படுவதாலோ என்னவோ ஆந்தை பகலில் வெளியில் வருவதில்லை. சூரியன் மறைந்தவுடன் கூட்டைவிட்டு வெளியே வரும். பொதுவாக மரப்பொந்துகள், பாறை இடுக்குகள், கல் இடுக்குகள், பாழடைந்த வீடுகள், கட்டடங்கள் என பகலிலும் இருட்டு எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கே தங்கிக் கொள்ளும். அந்தி மறைந்து இரவு தொடங்கும் நேரத்தில் ஆந்தை ‘கெர்ர்.... என்ற ஓசையுடன் வெளியே வரும். இதை மக்கள் கெட்ட சகுனத்தின் முன்னறிவிப்பாக பார்க்கிறார்கள். ஆந்தை அலறினாலே, "யாரோ இறக்க போறாங்க..!" என்று கிராமங்களில் பேசிக்கொள்வது வழக்கம். வேதத்திலும் மாய உலகங்களின் கதைகளிலும் ஆந்…
-
- 0 replies
- 523 views
-
-
வைஃபை வேகமாக இருக்க என்ன செய்யணும் பாஸ்? வரும் தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவது, யார் ஜெயிப்பார்கள் போன்ற கவலைகள் எல்லாம் சீசனல். வைஃபை சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசுகளின் எவர்க்ரீன் பிரச்னை. அந்தக் கவலையை போக்குவது சக யூத்துகளான எங்கள் கடமை என்பதால் இந்த டிப்ஸ். இந்த ட்ரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணா, உங்க வைஃபை ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும். * அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள். * ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வ…
-
- 1 reply
- 523 views
- 1 follower
-
-
[size=4]சுமார் மூன்றரை ஆண்டுக்காலம் வானை சல்லடை போட்டுத் தேடிப் பார்த்தாச்சு. பூமி போன்ற கிரகத்தைக் காணோம். ஒரு வேளை இனிமேல் கண்டுபிடிக்கப்படலாம்>’ விஞ்ஞானிகள் கூறுவது இது தான் பூமி மாதிரியில் எங்கேனும் கிரகம் உள்ளதா என்று கண்டுபிடிப்பதற்காகத் தான் கெப்ளர் என்ற் விண்கலம் 2009 ஆம் ஆண்டில் வானில் செலுத்தப்பட்டது. இதைப் பறக்கும் டெலஸ்கோப் என்றும் கூறலாம். சூரியனைச் சுற்றி வருகின்ற அந்த விண்கலம் வானை ஆராய்ந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் பூமி மாதிரியிலான கிரகம் அதன் ‘கண்ணில்’ இன்னும் தட்டுப்ப்டவில்லை. குறிப்பாகப் பூமி மாதிரியிலான கிரகத்தைத் தேடுவானேன்? பூமி மாதிரியிலான கிரகத்தில் தான் மனிதர் மாதிரியில் வேற்றுக் கிரகவாசிகள் …
-
- 0 replies
- 523 views
-
-
இதயத்துடிப்பை அறியும் ஸ்டெதாஸ்கோப்பை கண்டு பிடித்த பிரான்சு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியாளர் ரீனே லீனெக் (René Laennec) கின் 237 ஆவது பிறந்த நாள் இன்று. அவர் பிறந்த ஆண்டு பிப்ரவரி 17, 1781. மதுத்துவரான ரீனே தனது மருத்துவமனையில் இருக்கும் போது பெண் ஒருவர் இதயம் தொடர்பான பிரச்னைக்கு மருத்துவம் பார்க்க வந்திருந்தார். இதயத்துடிப்பை அறிய, நோயாளியின் மார்பகத்தில் காதை வைத்து தான் உணர முடியும். ஆனால் கூச்ச சுபாவம் கொண்ட ரீனே அந்த பெண்ணின் இதயத்துடிப்பை அறிய, மார்பில் காதை வைத்து கேட்க சங்கோஜப்பட்டார். அதன் விளைவாக அவர் கண்டுபிடித்த கருவிதான் ஸ்டெதாஸ்கோப். ஆரம்பத்தில் ஒரு தாளை சுருட்டி, உருளையாக்கி, அதன் மூலம், ஒருபுறத்தை நோயாளியின் இதயத்திலும், மறுமுனையை தனது …
-
- 6 replies
- 523 views
-
-
ஒரு ரூபாயில் செல்போன் சார்ஜ்: அறிவியல் கண்காட்சியில் அசத்திய அரசுப் பள்ளி மாணவர் விஜயராஜ்.! பொள்ளாச்சியை அடுத்துள்ள பொங்காளியூர் பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் விஜயராஜ், ஒரு ரூபாய் நாணயம் செலுத்தி செல்போன் சார்ஜ் செய்யும் நவீன இயந்திரத்தை வடிவமைத்திருந்தார். ‘ஏற்கெனவே தான் தயாரித்த நீர் உந்து இயந்திரம் வேறொரு அறிவியல் கண்காட்சியில் ரொக்கப் பரிசு பெற்றதாகவும், அந்த பரிசுப் பணத்தைக் கொண்டு, செல்போன் சார்ஜ் செய்யும் இயந்திரத்தை வடிவமைத்ததாகவும், விரைவில் பெரிய அளவில் இந்த இயந்திரத்தை வடிவமைக்க உள்ளதாகவும் கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். மாணவனின் திறமையை மனதார வாழ்த்துங்கள்.
-
- 2 replies
- 522 views
-