செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
'யானைக் கறி' விருந்துடன், 91வது பிறந்த நாளை... அமர்க்களமாக கொண்டாடிய ஜிம்பாப்வே அதிபர்! ஹராரே: ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தமது பிறந்த நாளை யானைக்கறி விருந்துடன் அமர்க்களமாக கொண்டாடியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டின் அதிபராக ராபர்ட் முகாபே 1980 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். உலகின் மிக வயதான தலைவர்களில் முகாபேயும் ஒருவர். அண்மையில் முகாபே தமது 91-வது பிறந்த நாளை விக்டோரியா பால்ஸ் என்ற ரிசார்ட்டில் விமரிசையாக கொண்டாடினார். இதற்காக ரூ.6 கோடி வரை செலவிடப்பட்டது. அந்த விழாவில் அவரது குடும்பத்தினருடன் ஏராளமான முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இதில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அவர் தனது மனைவி கி…
-
- 1 reply
- 628 views
-
-
http://www.liveleak.com/view?i=049_1425261519 வீடற்ற மனிதன், பொலிஸாரால் சுட்டுக்கொலை: வீடியோ அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இடம்பெற்ற வாய்தர்க்கம் ஒன்றின்போது, வீடற்ற நபரொருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லொஸ் ஏஞ்சல்ஸின் ஸ்கிட் றோ பகுதியில், வன்முறையை அடுத்து நபரொருவர், சில பொலிஸ் அதிகாரிகளால் சுட்டு கொல்லப்படும் காட்சிகள் அந்த வீடியோவில் காணப்படுகின்றன. நபரொருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பிடிக்க முயன்றதையடுத்து, மூன்று அதிகாரிகள் குறித்த நபர் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் கூறியுள்ளனர். கொல்லப்பட்ட நபர், ஆபிரிக்காவை சேர்ந்தவர் எனவும் மனநோய் சிகிச…
-
- 0 replies
- 398 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் தாக்குதலுக்குள்ளான இந்து கோவில்: மக்கள் பதற்றம் [ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2015, 07:09.31 AM GMT +05:30 ] அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓஹியோ மாநிலத்தில் உள்ள கெண்ட் நகரில் இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவில் தாக்கப்பட்டுள்ளதை நேற்றிரவு பார்த்த கோவில் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் அளித்தனர். அந்த இந்து கோவிலின் பல ஜன்னல்கள் மர்ம நபர்களால் அடித்து உடைக்கப்பட்டுள்ளதோடு, கோவில் சுவற்றில் ’பயம்’ என்று ஸ்ப்ரே பெயிண்டிங்கால் வார்த்தைகள் எழுதிவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க உளவுத்துறை, மற்றும் கெண்ட் நகர் பொலிசார் விசாரணை …
-
- 11 replies
- 707 views
-
-
கேரளாவை ராட்சத எரிகல் தாக்கியதா? மர்மத்தால் பீதியில் உறைந்த மக்கள் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 28 பெப்ரவரி 2015, 11:35.40 AM GMT +05:30 ] கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ராட்சத எரிகற்கள் தாக்கியதாக மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். கேரள மாநில வான்வெளியில் நேற்றிரவு மிகப்பெரிய எரிகோளத்தை கண்டதாக மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் இன்று எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ராட்சத வெடிகளை கொளுத்தியதுபோல் தோன்றிய அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றது என்றும் அப்போது அங்குள்ள வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்கள் அதிர்ந்தது எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எர்ணாக…
-
- 4 replies
- 629 views
-
-
புலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்.! ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம் இருந்து பெரும் தொகைக்கு வாங்கியிருந்தது. சிலர் இதை ஏற்க மறுக்கலாம்.! ஒரு விடுதலை அமைப்பின் தொழில் நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று ?? (இது பற்றிய செய்திகள் அந்த நேரத்தில் வெளியாகி இருந்தன) அனால் அது தான் உண்மை.! உலக வல்லரசுகள் தமது கடல் படையில் சிறிய படகுகளில் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களது கட்டுமானம் எல்லாம் பெரியளவிலேயே இருந்தது. தங்கள் நாடுகளின் பொலிஸ் கடல் ரோந்துக்காகவும், வேறு சில தேவைகளுக்காகவுமே சிறிய ஆ…
-
- 1 reply
- 382 views
-
-
உலகக் கோப்பை 2015: இந்திய அணிக்காக மீண்டும் ஆடை அவிழ்க்கப் போகிறாராம் பூனம் பாண்டே! அடிக்கடி 'பிறந்த மேனியா' தாக்கி ஆடைகளை அவிழ்த்துக் கொண்டு போட்டோ வெளியிடுவதும் பேட்டி தருவதும் பூனம் பாண்டேவின் வழக்கம். எதற்காக அல்லது எப்போதெல்லாம் அவருக்குப் 'பிறந்த மேனியா' வரும் என்று யாரும் கணித்துக் கூற முடியாது. பொதுவாக பப்ளிசிட்டி குறைவது போலத் தோன்றினால், இப்படி குண்டக்க மண்டக்க அறிவிப்பது அவர் வழக்கம். உலகக் கோப்பை கடந்த உலகக் கோப்பைப் போட்டிகளின்போது, இந்தியா கோப்பையை வென்றால் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக போஸ் கொடுக்கப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டு பெரும் பரபரப்பைக் கிளப்பினார். முக்கால் நிர்வாணம் ஆனால் அதற்கு எழுந்த கண்டனக் கணைகள் அவரை அமைதியாக்கிவிட்டன. இந…
-
- 9 replies
- 4.6k views
-
-
திருமண உறவுக்கு அப்பால், ஆணோ, பெண்ணோ மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று தென் கொரிய அரசியல் சாசன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 60 ஆண்டு சட்டம் தென்கொரியாவில் 1953-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வந்தது. அந்த சட்டத்தின்படி, ஒரு ஆண் தன் மனைவியைத்தவிர இன்னொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் தன் கணவரைத்தவிர இன்னொரு ஆணுடனோ செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் அது கிரிமினல் குற்றம் ஆகும். இந்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. பெருகிய குற்றம் தென் கொரியாவில் இப்படி முறைகேடான பாலுறவில் ஈடுபடுவது அதிகரித்து வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 500 பேர் மீது இத்தகைய குற்றச…
-
- 14 replies
- 793 views
-
-
U.S.- ஒவ்வொரு குழந்தைகளும் விசேடமானவை. ஆனால் சிலாஸ் பிலிப்பிஸ் கர்ப்பத்தில் இருந்து ஒரு அரிதான சாதனையை படைத்து வெளியே வந்துள்ளான். சிலாஸ் முற்றாக தனது பனிக்குடப்பைக்குள் உறையிடப்பட்டிருந்தான் என லாஸ் ஏஞ்சல்ஸ் சீடாஸ்-சினாய் மருத்துவ நிலைய அறிக்கை தெரிவித்துள்ளது. இது மிகவும் அரிதானது. குழந்தை பிறந்த போது ஒரு பெரிய நீர்க்குமிழிக்குள் சிக்குண்டு இருந்தது போல் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பிரசவம் பார்க்கும் வைத்தியர்களிற்கே இது அரிதான ஒரு சம்பவமாகும். இதனால் வைத்தியர் தனது கைத்தொலைபேசியில் படம் எடுத்தார். சிலாஸ் பிறக்க வேண்டிய திகதிக்கு 3-மாதங்கள் முன்னதாக மகப்பேறு அறுவைச்சிகிச்கை மூலம் பிறந்து விட்டான். காரணம் இவன் பிறந்தது ஒரு’en caul.’ என கூறப்பட்டுள்ளது ‘en c…
-
- 0 replies
- 1.9k views
-
-
துபாயில் லிஃப்டுக்குள் ஜோர்டான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்திய வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளார். கடந்த டிசம்பர் 17ஆம் தேதி புர்ஜ் துபாய் பகுதியில் உள்ள ஒரு அலுவலக வளாக லிஃப்ட்டினுள் ஏறியுள்ளார். அப்போது உள்ளே இருந்த அந்த பெண், நலம் விசாரிப்பதுபோல் நைசாக பேச்சுக் கொடுத்துள்ளார். பிறகு திடீரென்று அந்த வாலிபரை நெருங்கி வந்து கட்டிப்பிடித்துள்ளார். லிஃப்ட் நான்காவது மாடியை அடைந்ததும், வாலிபரின் சட்டையை பிடித்து உள்ளே இழுத்து லிஃப்டுக்குள்ளேயே போட்டுள்ளார். பிறகு, ஏழாவது மாடிக்கு செல்லும்படி லிப்ட்டின் பொத்தானை அழுத்தியுள்ளார். அபோது அந்த வாலிபரை பலவந்தமாக கட்டியணைத்து வாலிபரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளா…
-
- 14 replies
- 976 views
-
-
நெதர்லாந்த் நாட்டின் அசென் நகரிலுள்ள டெரெண்ட்ஸ்(Drents) அருங்காட்சியகத்தில் புத்தர் சிலை ஒன்றை CT Scan எனப்படும் அதிநுட்பமான பரிசோதனைக்கு உட்படுத்தினர். இந்த பரிசோதனையில், புத்தர் சிலைக்கு உள்ளே அமர்ந்தவாறு எலும்புக்கூடு ஒன்று இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதை மேலும் பரிசோதனை செய்ததில், பதினோறாம் நூற்றாண்டை சேர்ந்த சீனத்துறவி ஒருவரின் உடலை அமர்ந்த நிலையில் பதப்படுத்தி, அதன் மேல் புத்தர் சிலையை வடிவமைக்கப்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இந்த எலும்புக்கூடுகளை ஆய்வு செய்கையில், இவர் சீனாவில் புகழ்பெற்ற சோகுஷின்புட்சு(Sokushinbutsu) என்ற கலையை பயில்வித்த மாஸ்டர் லியுகுவான்(Master Liuquan) என்ற…
-
- 0 replies
- 457 views
-
-
சென்னை பி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். கட்டிட காண்டிராக்டர். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில், கோவையை சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் காயத்ரி என்ற பெண்ணை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு பிறகு அவள் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அவள் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து நகை-பணத்தை அபகரித்து கொண்டு ஏமாற்றி விட்டு என்னை மணந்துள்ளது தெரியவந்தது. தற்போது 5-வதாக இன்னொரு வாலிபரை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். அவள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்…
-
- 10 replies
- 670 views
-
-
பார்த்து பார்த்து வளர்த்த பெண் ஒருவனை காதலிக்கிறாள் என்றால் பெற்றோர்கள் சும்மா இருப்பார்களா பெண்ணை கவுரவ கொலை செய்து விடுகிறார்கள். இது நமது நாட்டில் பரவலாக நடக்கிறது. இதற்கு பிற நாடுகளும் விதி விலக்கல்ல குறிப்பாக சீனா. சீனாவின் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர் சாங் குய் என்ற கடந்த 2009 ஆம் ஆண்டு 24 வயது பெண் காதலித்து உள்ளார் இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.ஒரு கட்டத்தில் மகள் தங்கள் சொல்லை கேட்காமல் எங்கும் ஓடி விடுவாளோ என் பயந்த பெற்றோர் சாங்கை விலங்குகளை அடைப்பது போல பாழடைந்த கட்டைடத்தின் கொட்டகை ஒன்றில் அடைத்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். ஏறத்தாழ 6 வருட காலமாக அப்பெண் வீட்டு சிறையில் இருந்து உள்ளார் இவ்விவகாரம் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ள…
-
- 1 reply
- 395 views
-
-
சென்னை, சென்னை அண்ணாசாலை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பங்காரு தெருவில், நேற்று பகலில் கட்டு, கட்டாக பணம் கிடந்தது. அவற்றை நரேஷ்(வயது 24) என்ற வாலிபர் கண்டெடுத்தார். அண்ணாசாலை போலீசில் ஒப்படைத்தார். அந்த பணம் அண்ணாசாலை போலீசில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பணக்கட்டுகளை தவற விட்ட வியாபாரி ஒருவர், அண்ணாசாலை போலீசுக்கு போனில் தகவல் கொடுத்தார். அவரை நேரில் வரவழைத்து பணக்கட்டுகளை ஒப்படைப்போம் என்று போலீசார் தெரிவித்தனர். பணக்கட்டுகளை போலீசில் ஒப்படைத்த வாலிபர் நரேசை போலீசார் பாராட்டினார்கள். http://www.dailythanthi.com/News/State/2015/02/25015206/On-the-streetCashFasten.vpf
-
- 5 replies
- 639 views
-
-
ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை: அதிர்ச்சியில் தீவிரவாதிகள் [ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 11:08.16 மு.ப GMT ] ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் மொசூல்(Mosul) நகரில் ஐ.எஸ் அமைப்பை ஆளும் அபூ டஜனா(Abu Dajana) என்பவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் உட்பட இரண்டு மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர். இச்செய்தியை வெளியிட்ட குர்திஷ் இன ஊடகங்கள் தற்போது இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த ஜனவரி மாதம் ஐ.எஸ் அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் தலைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து இவ்வாறு நடந்து வரும் சம்பவங்கள் தீவிரவாதிகளிடையே சற்று பதற்…
-
- 3 replies
- 750 views
-
-
துபாய்: துபாய் சாலையில் பறந்து வந்த ரூபாய் நோட்டுக்களை மக்கள் ஓடியோடி எடுத்தனர். துபாயின் ஜுமைரா பகுதியில் இருக்கும் முக்கிய சாலையில் கடந்த 11ம் தேதி சூறாவளிக் காற்று வீசியது. அப்போது திடீர் என 500 திர்ஹம் மதிப்புள்ள ஆயிரக்கணக்கான நோட்டுகள் சாலையில் பறந்து வந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடியோடி பணத்தை அள்ளினர். வாகன ஓட்டிகள் அனைவரும் கை நிறைய பணத்தை எடுத்துச் சென்றனர். அந்த பணம் எங்கிருந்து பறந்து வந்தது, யாருடையது என்றே தெரியவில்லை. சுமார் 2 முதல் 3 மில்லியன் திர்ஹம் வரை காற்றில் பறந்து வந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை விரட்டினர். திடீர…
-
- 9 replies
- 745 views
-
-
யு.எஸ்.- 26-மணித்தியால நீண்டநேர கடினமான சத்திரசிகிச்சையின் பின்னர் 10-மாதங்களே ஆன பெண் குழந்தைகள் நற்றலி ஹோப் மற்றும் அடெலின் வெயித் மாற்றா ஆகிய இருவரும் பின்னர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர். ரெக்சஸ் சிறுவர் வைத்தியசாலையை சேர்ந்த மருத்துவ குழு குழந்தைகளை மார்பிலிருந்து நுரையீரல், இதய அகவுறை, உதரவிதானம், கல்லீரல், குடல், பெருங்குடல் மற்றும் இடுப்பு கூட்டணி வரை பிரிக்க வேண்டியதாக இருந்தது. இச்சத்திர சிகிச்சைக்கு 30-பேர்கள் அடங்கிய குழுவினருக்கு மிகவும் கவனமாக திட்டமிட மாதங்கள் சென்றன. பெண்கள் இருவரும் பல உறுப்பு அமைப்புக்களை பகிர்ந்து கொண்டபடியால் சத்திர சிகிச்சை சுலபமானதாக இருக்கவில்லை என குழந்தை மருத்துவ அறுவைச் சிகிச்சையாளரும் Texas Children’s Fetal Center இணை இயக்க…
-
- 3 replies
- 420 views
-
-
எண்ணெய் வளத்திலும், செல்வச் செழுமையிலும் உலகின் கவனத்தை ஈர்த்து வரும் துபாய், சத்தமில்லாமல் இன்னொரு மகத்தான சாதனையையும் தற்போது நிகழ்த்தியுள்ளது. அதிநவீன கட்டிடக் கலைவண்ணம், பசுமையான சுற்றுப்புறம், சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான வளாகம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் கடந்த (2014) ஆண்டில் சுமார் 7 கோடியே 4 லட்சம் பயணிகள் வந்து சென்றதன் மூலம் உலகின் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்பை இதுவரை தக்கவைத்திருந்த லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளி, தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. இதே காலகட்டத்தில், லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தின் வழியாக சுமார் 6 கோடியே 81 லட்சம் பயணிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இதை வைத்து பார்…
-
- 4 replies
- 763 views
-
-
மாப்பிள்ள நான்தான்.. அந்த சட்டை என்னோடதில்லை.. இந்திய கிரிக்கெட் சீருடை சர்ச்சை பற்றி பெடரர்! துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது என்னவோ உண்மைதான் என்றாலும், இந்திய கிரிக்கெட் அணிக்கு சப்போர்ட் செய்யவில்லை என்று கூறி பாகிஸ்தான் ரசிகர்களை கூல் செய்துள்ளார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையுடன் இருப்பது போன்ற போட்டோ சமூக வலைத்தளங்களிலும், மீடியாக்களிலும் வைரலாக பரவிவருகிறது. இந்திய யூனிபார்முடன் பெடரர் இந்த போட்டோ கடந்த 15ம்தேதி, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடந்த தினத்தில்தான், நைக் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. பெடரரும் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்…
-
- 0 replies
- 1.2k views
-
-
செவ்வாய்கிரகத்தில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப்போகிறார் என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த ‘Mars One’ என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு ‘The Mars 100’ என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தின் மூலம் பூமியிலிருந்து சுமார் 100 நபர்களை தெரிவு செய்து, 2024 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு சென்று அங்கேயே நிரந்தரமாக குடியிறுக்க முடிவெடுத்தது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசம் நிறைந்த பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் சுமார் 2 லட்சம் நபர்கள், தங்களின் பெயர்களை பதிவு செய்தனர். இவர்களில் ரஷ்யா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், டென்மார்க், பொலிவியா, வியட்நாம், ஜப்பான், ஈராக், உக்ரெய்ன் மற்றும் சீனா…
-
- 6 replies
- 1.3k views
-
-
உலக முடிவில் தவறி விழுந்த மனிதர், பயணத்தை தொடர்ந்தார் நுவரெலியா, ஹோட்டன் சமவெளியில் அமைந்துள்ள உலக முடிவு பகுதியில் இருந்து தவறி விழுந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நபரொருவர் சுமார் 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (21) நடைபெற்றது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மனிதா என்ற 35 வயதுடைய நபரும் அதே நாட்டைச் சேர்ந்த லின்டா என்ற 31 வயதுடைய பெண்ணும் கடந்த 10.02.2015 அன்று நெதர்லாந்தில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திருமணத்தின் பின்னர் அவர்கள் இருவரும் கடந்த 14.02.2015 அன்று சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்துள்ளனர். இதன் பின்பு வெள்ளிக்கிழமை (20) மாலை நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளனர…
-
- 9 replies
- 609 views
-
-
பிரித்தானியாவில் தாய் ஒருவர், இறந்த மகளின் கருவை தனது வயிற்றில் சுமக்க கடந்த 4 வருடமாக போராடி வருகிறார். 59 வயதாகும் அந்த பெண்ணின் மகள், கடந்த 45 வருடங்களுக்கு முன் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இந்த நோயினால், தன்னால் கருவுற முடியாது என்ற பயத்தில் அந்த பெண்மணி, 2008ம் ஆண்டு லண்டனில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையத்தில் தனது கருமுட்டையை சேமித்து வைத்தார். இந்நிலையில் நோயின் தாக்கம் தீவிரமடைந்ததால், அந்தப்பெண்மணி உயிரிழந்தார். இவர் இறப்பதற்கு முன்னால் தனது தாயிடம், என் கருமுட்டையை கொண்டு நீ ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். நான் பிறந்த உன்னுடைய கருப்பையிலேயே என்னுடைய குழந்தையும் வளர வேண்டும் என தனது இறுதி ஆசையை கூறியுள்ளார். ஆனால் இங்கிலாந்தில் உள்ள சட்டங்கள் …
-
- 0 replies
- 338 views
-
-
மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் அமெரிக்க பெண் கைதி ஒருவர் மிகப்பெரிய உணவு பட்டியலை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து சாப்பிடத் தாருங்கள் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெல்லி ரெனி கிசென்டானெர். தற்போது 46 வயதாகும் இந்த பெண்மணி மரண தண்டனை கைதி ஆவார். 1997–ம் ஆண்டு கணவர் டக்ளஸ் கிசென்டானெரை கள்ளக்காதலன் கிரிகோரி ஓவனின் உதவியுடன் கத்தி முனையில் கடத்திச்சென்று கொடூரமான முறையில் கெல்லி ரெனி கொன்றார். பின்னர், கணவரின் காரை தீ வைத்து கொளுத்தியதுடன், உடலை எரித்து காட்டு மிருகங்கள் தின்பதற்காக அடர்ந்த காட்டுக்குள்ளும் வீசினார். எனினும் போலீசின் பிடியில் கெல்லி ரெனி சிக்கினார். கணவரின் பெயரில் உள்ள காப்பீட்டுத் தொகை மூலம் தனது வீட்டி…
-
- 0 replies
- 517 views
-
-
மோடியின் கோட் சூட் 4.31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது 20 பிப்ரவரி 2015 தங்க ஜரிகையில் பெயர் கொண்ட மோடியின் சூட் வீண் செலவு என்று விமர்சனங்கள் வெளியாகியிருந்தன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தடவை மட்டுமே அணிந்திருந்த, சர்ச்சையை கிளப்பியிருந்த கோட் சூட் ஒன்று அவரது சொந்த மாநிலமான குஜராத்தில் 4 கோடியே 31 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய இந்த ஏலத்தில் இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரியான ஹித்தேஷ் பட்டேல் தனது தந்தைக்காக இந்த ஆடையை வாங்கியுள்ளார். கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது மோடி அணிந்திருந்த இந்த கோட், வர்த்தகர் ஒருவரால் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆடையில் மோடியின் பெய…
-
- 1 reply
- 442 views
-
-
பிரிட்டனைச் சேர்ந்த தந்தை யொருவரும் மகளும் வர்த்தக விமானமொன்றில் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றி புதிய வரலாறு படைத்துள்ளனர். கெப்டன் பீட்டர் எலியட்டும் அவரின் மகளான லாரா எலியட்டும் அண்மையில் பேர்மிங்ஹாம் நகரிலிருந்து டெனேரிவ் நகருக்கு முதல் தடவையாக விமானத்தை செலுத்திச் சென்றனர். பிரிட்டனில் வர்த்தக விமானமொன்றில் தந்தையும் மகளும் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றியது வரலாற்றிலேயே இது தான் முதன் முறையாம். தாமஸ் குக் நிறுவனத்தின் விமானமொன்றை இவ்விருவரும் செலுத்திச்சென்றமை குறிப்பிடத்தக்கது. தாம் எதிர்காலத்திலும் அடிக்கடி இவ்வாறு இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர். தற்போது 30 வயதான லாரா …
-
- 2 replies
- 441 views
-
-
நியூயார்க்: அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் ஆஷ்டான் கார்டர், மனைவி ஸ்டீபனி கார்டரின் தலைமுடியை அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் முகர்ந்து பார்த்தது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு துறை செயலாளராக ஆஷ்டான் கார்டர் கடந்த 17ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டு துணை அதிபர் ஜோ பிடேன் கலந்து கொண்டார். பதவியேற்ற பின்னர் ஆஷ்டான் கார்டர் உரையாற்றினார். அப்போது, அவரது மனைவி ஸ்டீபனி கார்டர் மற்றும் துணை அதிபர் ஜோ பிடேன் ஆகியோர் நின்றனர். ஆஷ்டான் கார்டர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது மனைவியின் தோள்பட்டையின் மீது கையை வைத்த ஜோ ப…
-
- 4 replies
- 680 views
-