செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7155 topics in this forum
-
இங்கிலாந்தின் கிழக்கு லண்டனை சேர்ந்த மேரிகோனி (வயது 21) என்ற பெண் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்தார். அவருடன் நயோனி ஓனி (21) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். இருவரும் நெருங்கிய நண்பிகள். ஆனாலும் நயோனி ஓனி மீது மேரிகோனிக்கு பொறாமை காரணம் அவரை விட தனது தோழி அழகானவள் என்பதால், எனவே நயோனி ஓனி அழகை சிதைக்க மேரிகோனி முடிவு செய்தார். இதற்காக ஆசிட்டை வாங்கி நயோனி ஓனி மீது ஊற்றினார். இதில் முகத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேரிகோனி கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/?q=node/360544
-
- 2 replies
- 969 views
-
-
"சோனியா"ம்மன். இந்துக்களை எப்படி எல்லாம் கேவலப்படுத்திறாங்க வட இந்திய பிராமணிகள்.
-
- 10 replies
- 880 views
-
-
நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் ஒளிந்துகொண்ட நபர் ஒருவர் அரைமணி போராட்டத்தின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று அவுஸ்திரேலியாவின் வடக்கு மெல்போர்னில் நகரில் இடம்பெற்றுள்ளது. காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவே மேற்படி நபர் இவ்வாறு நிர்வாண கோலத்தில் சலவை இயந்திரத்திற்குள் நுழைந்துகொண்டுள்ளார். இதன்போது சலவை இயந்திரத்தினுள் சிக்கிக்கொண்ட இந்நபர் வெளியில் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டுள்ளார். முயற்சி தோல்வியடையவே தீயணைப்பு பிரிவினர், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் குறித்த நபர் மீது ஒலிவ் எண்ணெயை தடவி அரை மணி போராட்டத்தின் பின்னர் மீட்டுள்ளனர். இதேபோல், அண்மையில் அமெர…
-
- 1 reply
- 303 views
-
-
கர்நாடக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தங்களது அலுவலக கணனி மூலம் ஆபாச படங்களை கண்டு ரசிப்பதாக சி.பி.ஐ. ரகசிய பொலிசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. கர்நாடக அரசின் தலைமை செயலகத்தில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணிகளை மறந்து விட்டு, இந்த ஆபாச வலைத்தளங்களே கதியாக கிடக்கின்றனர் என்பதை கண்டுபிடித்த சி.பி.ஐ., இது தொடர்பாக கர்நாடக மாநில தலைமை செயலாளருக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளது. இதனையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அரசின் இணைய இணைப்பின் வாயிலாக மேற்கண்ட வலைத்தளங்களுக்குள் நுழைவதை தடை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. செக்ஸ் படம் பார்ப்போம் இல்லையேல் பேஸ்புக், டுவிட்டர்: ஆனாலும் அலுவலக கணனிகளின் வழ…
-
- 6 replies
- 761 views
-
-
விர்ர்ர்ர்ர்ரென்று 'கிராஸ்' செய்த 'பறக்கும் தட்டு'... தட்டுத் தடுமாறித் தப்பிய ஜெட் விமானம்! லண்டன்: ஒரு பெரிய ரக்பி பந்து போல காணப்பட்ட பறக்கும் தட்டு தனது விமானத்தின் மீது மோதுவது போல வந்ததாகவும், நிமிடத்தில் சுதாரித்து தனது விமானத்தை வேறு பக்கம் திருப்பியதால் பேராபத்திலிருந்து விமானமும், பயணிகளும் தப்பியதாகவும் ஒரு விமானி கூறியுள்ளார். இவரது இந்த கூற்றால் லண்டன், ஹீத்ரு விமா்ன நிலைய அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். உண்மையில் விமானத்தின் மீது மோதுவது போல வந்தது விண்ணிலிருந்து வந்த பறக்கும் தட்டா.. அல்லது வேறு ஏதேனுமா என்ற விசாரணையில் அவர்கள் குதித்துள்ளனர். ஹீத்ரு விமா்ன நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏ320 ஏ…
-
- 4 replies
- 2.2k views
-
-
8cd1ed90ee26d704dac8a3918761717a
-
- 6 replies
- 766 views
-
-
-எஸ்.குகன் யாழ்.அளவெட்டிப் மலைவேம்படியைச்சேர்ந்த கிராம அலுவலரான எஸ்.துவாரகன் என்பவரது வீட்டில் வளர்த்த ஆடொன்று வித்தியாசமான முக அமைப்பை கொண்ட குட்டியொன்றை கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈன்றுள்ளது. மேற்படி ஆட்டுக்குட்டியின் இரு கண்களும் மிக அருகில் நெருக்கமாக இருக்கிறது. இதனை அப்பகுதியினைச் சேர்ந்த பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2012-05-03-10-09-42/95694-2014-01-05-06-24-31.html
-
- 6 replies
- 876 views
-
-
வட கொரியா அதிபர் கிம் ஜாங் யுன்னின் மாமாவான ஜாங் சாங் தேக் (67), அந்நாட்டு அரசில் அதிபருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் அதிகாரம் மிக்கவராக செயல்பட்டார். இந்த நிலையில் இவர் ராணுவ புரட்சி மூலம் அதிபர் கிம் ஜாங் யுன்னிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற சதி திட்டம் தீட்டினார். இதை அறிந்த அதிபர் அவரையும், அவரது உதவியாளர்கள் 5 பேரையும் கைது செய்தார். அவர்கள் மீது ராணுவ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது. அதில் ஜாங் மற்றும் அவரது உதவியாளர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாங் சாங் தேக் மற்றும் உதவியாளர்கள் 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் துரோகி, வெறுக்கத்தக்க அழுக்கான நபர், நாயை விட கேவலமானவர் என்று கொரிய செய்தி நிறுவனங்கள் வர…
-
- 1 reply
- 502 views
-
-
பிரான்ஸ் நாட்டில், புத்தாண்டு உற்சாகத்தில் பங்கேற்றவர்கள், ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை எரித்துள்ளனர்.பிரான்ஸ் நாட்டில், ஒவ்வொரு புத்தாண்டின் போதும், முதல் நாள் இரவு, புத்தாண்டை வரவேற்க காத்திருக்கும் இளைஞர்கள், உற்சாக மிகுதியில், சாலை ஓரங்களில் உள்ள கார்களை, தீ வைத்து கொளுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். பிரான்ஸ் அரசு இதை வன்மையாக கண்டித்து வருகிறது. இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காக, புத்தாண்டு அன்று, 53 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், இதையும் மீறி, 1,067 கார்கள் எரிக்கப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மானுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,''எதிரிகளை பழிவாங்கும் நோக்கில், அவர்கள் புத்தாண்டு உற…
-
- 5 replies
- 704 views
-
-
Published:Thursday, 02 January 2014, 09:33 GMT இந்தோனேஷியாவில் இறந்தவர்களை உயிருடன் எழுப்பப்படும் சடங்குகள் நடைபெறுகிறது. இச்சடங்கு இறந்தவருக்கான சடங்குகளை முறைப்படி செய்ய வேண்டும் என்பதால் இவ்வாறு உயிருடன் எழுப்பப்படுகின்றனர். இவர்களின் சடங்கினால் உயிரோடு எழும்பும் மனிதர்கள் சுயமாக நடந்து தனது பிறந்து ஊருக்கு நடந்து செல்ல மட்டும் முடியும். ஆனால் தொடர்ந்து இவர்களால் உயிர்வாழ முடியாது. இறந்தவரை உயிருடன் எழுப்ப மந்திரம் பிரயோகிக்கப்பட்டு ஒரு விசித்திரமான சடங்கினை அங்குள்ள மந்திர வைத்தியர் ஒருவர் செய்து வைக்கிறார். ரொரஜா என்ற இன மக்களிடம் தற்போதும் இந்த நடைமுறைகள் நடைபெற்று வருகிறது. இறந்த மனிதர் அவர் பிறந்த ஊரிலே அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான ஏற்பாட…
-
- 13 replies
- 7.9k views
-
-
தனது கணவர் முள்ளுக்கரண்டியை பாவித்து பட்டாணி உண்பதில்லை என்று கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். குவைத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். திருமணம் முடித்து ஒரு கிழமையிலே இவ்வாறு மேற்படி பெண் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 'தனது கணவர் பட்டாணி உண்ணும்போது முள்ளுக்கரண்டியை பயன்படுத்துவதில்லை. அதேபோல், பாண் உண்ணும்போது முள்ளுக்கரண்டிக்கு பதிலாக வேறு உபகரணங்களை பயன்படுத்துகிறார்' என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தது. இதேபோல் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. பற்பசையை எடுக்கும்போது அதனை முடிவிலிருந்து எடுக்காமல் நடுவிலிருந்து எடுக்குமாறு கூறி தன்னை தனது கணவர் வலிய…
-
- 0 replies
- 481 views
-
-
செக்கோஸ்லோவேக்கியா நாட்டிற்கான பாலஸ்தீன தூதராக ஜமீல் அல் ஜமால் என்பவர் பணியாற்றி வந்தார். இவர், தூதரக அலுவலகத்தில், கடந்த 20 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த பெட்டகத்தை திறந்து பார்த்தார். அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில், பலத்த காயம் அடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=100487&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 426 views
-
-
ரொம் மியொக் எனும் சிற்பக் கலைஞர் தத்ரூபமான மனித சிற்பங்களை செய்வதில் வல்லவராகத் திகழ்கிறார். உண்மையான மனிதர்களோ என எண்ண வைக்கும் அளவுக்கு இவரின் சிற்பங்கள் உள்ளன. உலகின் பல நாடுகளில் இவரின் சிற்பகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறார்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் தயாரித்துக்கொண்டிருந்த ரொ மியொக், 1996 ஆம் ஆண்டு முதல் மனிதச் சிற்பங்களை தயாரித்து வருகிறார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் ஜேர்மன் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தவர் ரொன் மியொக். பின்னர் லண்டனுக்குச் சென்று சிற்பங்களை உருவாக்க ஆரம்பித்த அவர் சொந்த நிறுவனமொன்றையும் ஸ்தாபித்தார். இவரின் மனிதச் சிற்பங்கள் அசல் மனிதர்களைப் போலவே தோற்றமளிப்பதால் பலரையும் கவரத்…
-
- 0 replies
- 430 views
-
-
நபரொருவர் மூகமூடி அணிந்துகொண்டு தனது மனைவியையே அச்சுறுத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவமொன்று அண்மையில் சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவின் குஆன்ஷொஉ நகரைச் சேர்ந்த ஷியாஓ யென் என்ற 36 வயதான பெண்ணொருவர் சமயலறையில் வேலைசெய்துகொண்டிருந்த போது மூகமூடி அணிந்த திருடன் ஒருவர் வீட்டினுள் நுழைந்துள்ளான். அத்திருடன் பணம் கேட்டு அச்சுறுத்த 35 ரென்மின்பியை (சுமார் 600 ரூபா) கொடுத்துள்ளார் யென். பின்னர் மூகமூடியுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளாது யென்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து யென் நடந்தவற்றை கணவனிடம் கூறியுள்ளார். பின்னர் இருவரும் இணைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரின் விசாரணையின் போது யென்னின் கணவனில…
-
- 1 reply
- 544 views
-
-
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மனாட்டி என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் ஷாவோனா ரம்ப் என்ற பெண், தனது காதலனுடன் வசித்து வருகிறார். இருவரும் தங்கள் குடியிருக்கும் வீட்டிலேயே அடிக்கடி மது அருந்துவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் இருவரும் தூங்குவதற்கு முன் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் போதையுடன் இருவரும் தூங்க சென்றனர். அப்போது, காதல் மயக்கத்தில் இருந்த ஷவோனா தன்னை கட்டித் தழுவும்படி காதலனிடம் கூறியுள்ளார். காதலன் மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். ஷவோனா தனது காதலனின் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்துள்ளார். இதனால் காதலன் வீட்டை விட்டு வெளியேற முயன்றார். ஒரு கட்ட…
-
- 10 replies
- 1.3k views
-
-
-
- 14 replies
- 823 views
-
-
''சிலாபம் திண்ணனூரான்'' எச்.ஐ.வி. தொற்று நோயாளிகளின் சரிதம் எழுதப்படுவது விழிப்புணர்வுக்காகவும், சிந்திப்போம், சிந்திக்க வைப்போம் என்ற உணர்வுடனேயேயாகும். இன்று நாம் காணப்போவது அப்பாவியான ஒரு கிராமத்து பெண்ணின் சோகக் கதையாகும். எனது பெயர் பொடி மெனிக்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் மீரிகம பிரதேசத்தைச் சேர்ந்த வெற்றிலைக்கு பெயர் கொண்ட கிராமத்தைச் சேர்ந்தவள். எனக்கு வயது இப்போது இருபத்தெட்டு. இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவனுக்கு வயது ஐந்து வருடம் ஒன்பது மாதம். இளையவனுக்கு வயது பதினெட்டு மாதங்களே. எனது கணவர் வெற்றிலை தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகின்றார். பொடி மெனிக்கா வறுமையோடு வாழ்கிறார் என்பதை அவளின் முகமும் உடையும் அடையாளப்படுத்தியது. முகம் முழுவதிலும் சோகம் து…
-
- 1 reply
- 494 views
-
-
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தாதியர் மலசலக்கூடத்தில் கமெராவை பொருத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள வைத்தியரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுர நீதவான் நீதிமன்ற நீதவான் ருவந்திகா மாரப்பன உத்தரவிட்டுள்ளார். கமெராவை பொருத்தியதாக கூறப்படும் வைத்தியரான தினுஷ சேரங்கவே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலையின் தாதியரின் மலசலக்கூடத்தில் கமெரா பொருத்திய வைத்தியரை கைது செய்யுமாறு கோரி அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு கமெராவில் பதியப்ப…
-
- 3 replies
- 531 views
-
-
இங்கிலாந்து அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'விபசாரியாக வேலை செய்ய பெண்கள் தேவை' என்ற விளம்பரம் ஒன்றை வெளியிட்டு தனியார் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டில் சுற்றுலா அல்லது வேலை நிமித்தமாக தனியாக வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பாகவும், அவர்களை அவர்கள் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும் நபர்களாக செயல்படும் 'எஸ்காட்' சேவை செய்து கொடுக்கும் நிறுவனமான இங்கிலாந்தில் இயங்கிவரும் 'ஹார்னி எஸ்கார்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று அரசின் வேலைவாய்ப்பு துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது. மேற்கண்ட நிறுவனத்தில், 'தங்களுக்கு வசதியான வேலை நேரங்களில் பணியாற்ற பெண்கள் தேவைப்படுகிறார்கள். அடிப்படை தகுதியாக உடலுறவு வைத்துக் …
-
- 7 replies
- 6.5k views
-
-
-எம்.எஸ்.முஸப்பிர் புத்தளம் - கொழும்பு வீதியில் தினமும் சில கோவேறு கழுதைகள் நின்றுகொண்டு வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துகின்றன. எவ்வளவு சத்தமிட்டாலும் இந்தக் கோவேறு கழுதைகள் அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லாமல் நிற்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
-
- 1 reply
- 485 views
-
-
52 வயது கணவரின் சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் தனதாக்கிக்கொள்ள முயன்ற 27 வயதுடைய இளம் விதவையொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கணவரின் இறுதி விருப்பம் என்ற பெயரில் பல கோடி ரூபா பெறுமதியான வீடு, காணி மற்றும் பணம் போன்றவற்றை தன் பெயருக்கு மாற்றும் நோக்கில் இந்த போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மோசடி நடவடிக்கைக்கு கொழும்பிலுள்ள பிரபல விகாரையொன்றின் விகாராதிபதியான தேரர் ஒருவரும் குறித்த பெண்ணின் தாயாருமே உதவி புரிந்துள்ளனர். இதனால், அவ்விருவரையும் போலி ஆவணங்களைத் தயாரித்த வழக்கறிஞர் ஒருவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தனது 57 வயதுடைய சகோதரர் உயிரிழந்ததன் பின்னர் சொத்துக்களை 27 வயதுடைய அவரது இரண்டாவது மன…
-
- 0 replies
- 372 views
-
-
பியூனோஸ்: தாயின் கள்ளக்காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க அர்ஜென்டினா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அர்ஜெண்டினா தலைநகர் பியுனோஸ் ஐரெஸ்-சில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சால்டோ என்ற நகரில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவரை விவாக ரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தர். முதல் கணவர் மூலம் பிறந்த தனது 14 வயது மகளையும் தன்னுடன் வைத்து அவர் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் வெளியே சென்றிருந்தபோது குடிபோதையில் இருந்த அவரது கள்ளக்காதலன் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டார். தற்போது 9 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் தன் மகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக …
-
- 31 replies
- 1.8k views
-
-
லக்னோ: உத்தர பிரதேசத்தில், பெற்றோர் அனுமதியில்லாமல், திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிக்கு, போலீசாரே திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால், பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் ஆண், மணப்பெண்ணின் வங்கிக் கணக்கில், 50 ஆயிரம் ரூபாய், 'டெபாசிட்' செய்ய வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதிக்கின்றனர். உத்தரபிரதேசத்தில் காதல் திருமணங்கள், சமீப காலமாக அதிகரித்துள்ளன. ஜாதி மாறி, மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர்களுக்கு, போலீசாரும் ஆதரவாக உள்ளனர். மாநில, டி.ஜி.பி., தேவ்ராஜ் நாகர், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், சில நாட்களுக்கு முன், அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளும், காதல் ஜோடிகளை தடுக்க வேண்டாம். மாறாக, அந்தப் பெண்ணின், வங்கிக்கணக்கில், 50 ஆயி…
-
- 0 replies
- 403 views
-
-
பெங்களூரூ: பரபரப்பாக பேசப்பட்ட நடிகை ரஞ்சிதா முறைப்படி தீட்சை ( சன்னியாசம் ) பெற்று நித்யானந்தாவின் சீடரானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நித்யானந்தாவுடன் படுக்கையறையில் இருந்ததாக வீடியோ ஒளிபரப்பானது. இது ஜோடிக்கப்பட்டது என்று நித்தியானந்தா தரப்பில் கூறப்பட்டது. இது தொடர்பாக பல சர்ச்சையான விமர்சனங்கள் எழுந்தது. தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டது. பல இடங்களில் இவருக்கு எதிரான போராட்டம் நடத்தப்பட்டது. இன்று நித்யானந்தாவுக்கு 37வது பிறந்தநாள் ஆகும். இந்நிலையில் ரஞ்சிதாவுக்கு நித்தியானந்தா இன்று தீட்சை வழங்கினார். பிடதி ஆசிரமத்தில் உள்ள புனித குளத்தில் குளித்து, காவி உடை அணிந்த ரஞ்சிதா, நித்யானந்தாவிடம் சென்று தீட்சை பெற்றார். தொடர்ந்து ரஞ்சிதாவுக்கு மா ஆனந…
-
- 18 replies
- 1.5k views
-
-
ஆர்ஜெண்டினாவில் உள்ள பரானா என்ற ஆற்றில் மாமிசம் உண்ணும் மீனினமான பிரானா மீன் கடித்து 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். 7 வயதுடைய சிறுமி தனது கை விரலின் ஒரு பகுதியை இழந்ததோடு ஏனையோர் தமது கணுக்கால், விரல்கள் மற்றும் கைகளில் ஆழமான வெட்டு காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டு கடல்சார் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் பெட்ரிகோ கார்னியர் கருத்து தெரிவிக்கையில், இங்கு நிலவிய 100 டிகிரி வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கூர்மையான பற்களை உடைய பிரானா வகை மீன் கடித்ததில் அவர்களின் கை மற்றும் கால்களில் காயங்கள் ஏ…
-
- 1 reply
- 644 views
-