Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஈழத்தமிழரின் உரிமைப்போருக்கான திறவுகோல்களாய் இருந்த வராலற்று மாந்தர்களை நினைவு கொண்டாடும் இடத்தில், கூட்டமைப்பு மீண்டும் ஒரு முறை தங்கள் அழுக்கு முகத்தைக் காண்பித்திருக்கின்றது. தமிழீழ கோட்பாட்டை நிலைநிறுதியதற்காகவும், அரசியல் ரீதியாகக் கூறிய தீர்க்க தரிசனங்களுக்காகவும் இன்றளவும் தமிழர்கள் தந்தை செல்வநாயகத்தைப் போற்றுகின்றனர். இந்த இடத்தில், அவருக்கு நிகராக சில துரோகிகளின் பெயர்களையும் நினைவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பினுள் நுழைந்திருக்கின்ற துரோகிகள் கும்பல் ஒன்று செயற்படுகின்றமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பட்டமாகியிருக்கின்றது. தந்தை செல்வநாயகத்தில் 114வது பிறந்த தின நிகழ்வுகள் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தலைமை தாங்கியிருந்…

  2. தம்முடைய எள்ளு பாட்டி தமிழ்நாட்டில் உள்ள கடலூரை சேர்ந்தவர் என்று, பிரிட்டனை சேர்ந்த பன்னாட்டு தொழில் குழுமமான விர்ஜின் நிறுவனர் ரிச்சர்டு பிரான்சன் (Richard Branson) தெரிவித்துள்ளார். தமது முன்னோர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி 4 தலைமுறைகள் கடலூரில் வாழ்ந்ததாகவும், தமது எள்ளு தாத்தா கடலூரை சேர்ந்த Aria என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டதாகவும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். தமது ரத்தத்தில் இந்திய கலப்பு இருப்பதை மரபணு சோதனைகள் மூலம் உறுதி செய்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக தமது எள்ளு பாட்டியை குறிக்கும் உருவம் இடம்பெறும் என்றும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார். https://www.polim…

    • 0 replies
    • 375 views
  3.  இலங்கையா, வடகொரியாவா? : குழம்பிப் போன அமெரிக்கர்கள் வடகொரியாவால் அண்மைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஏவுகணைச் சோதனைகள், இராணுவ நடவடிக்கைகள், அச்சுறுத்தல்கள் ஆகியன காரணமாக, வடகொரியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்குமிடையில், முறுகல் நிலை தோன்றியுள்ளது. அணுசக்திப் பலத்தைக் கொண்ட வடகொரியா மீது, இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சில அமெரிக்கர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில், ஐ.அமெரிக்காவிலுள்ள 1,746 பேரிடம், உலக வரைபடத்தில், வடகொரியாவைக் காட்டுமாறு கோரப்பட்டது. அவ்வாறு கோரப்பட்டபோது, 4 அமெரிக்கர்கள், இலங்கையை, வடகொரியா என்று கூறியுள்ளனர். இலங்கை தவிர, இந…

  4. ஈபிள் டவரில் பயங்கரவாதி? பாரீஸ்: பிரான்சில் புகழ்பெற்ற ஈபிள் டவரில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவர் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நபர் பயங்கரவாதி என சந்தேகம் அடைந்துள்ள போலீசார், ஈபிள் டவரை மூடியுள்ளனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1346344

  5. சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முன்வைக்கவுள்ள அமெரிக்கா, அந்தத் தீர்மானத்தை வலுப்படுத்துவதற்காக இராஜாங்கத் திணைக்களத்தின் மிகமூத்த அதிகாரியான மரியா ஒரேரோவை ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளது. சிறிலங்கா மற்றும் சிரிய விவகாரங்கள் குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் மரியா ஒரேரோ சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச்செயலராகப் பணியாற்றிவரும் மரியா ஒரேரோ, மார்ச் 1ம் நாள் ஜெனிவா கூட்டத்தொடரில் உரை நிகழ்த்த வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவர் சில வாரங்களுக்கு முன்னர், இந்தத் தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா …

  6. கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அபராத தொகை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு [ புதன்கிழமை, 03 யூன் 2015, 11:26.41 மு.ப GMT ] புகையிலை நிறுவனங்கள், புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 12.4 பில்லியன் டொலர்களை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கனடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கியூபெக் மாகாணத்தில் 1998-ம் ஆண்டு, புகைப்பிடிப்பதால் வரும் உடல்நலக் கேடுகள் பற்றி விளம்பர வாசகம் மூலம் தனது தயாரிப்புகளில் சொல்லாத நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கியூபெக் பகுதியில் சிகரெட் பிடிப்பதால் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோய், தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோயால், பாதிக்கப்பட்டுள்ளனர் என புகார் கூறப்பட்டிருந்தது. பல ஆண்டுகளுக்கு …

    • 1 reply
    • 375 views
  7. இரா­ணு­வத்தில் 12 வரு­ட­ காலம் சேவை­யாற்­றி­விட்டு தப்பி ஓடிய நபர் ஒருவர், சாந்தி பூஜை செய்து நோய்­களைப் போக்­கு­ வ­தாக தெரி­வித்து பல பெண்­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யமை தொடர்பில் ஹத்­த­பா­ன­ட­கொட பிர­தே­சத்தில் வைத்து கைது செய்யப்பட்டாரென இங்­கி­ரிய பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். 46 வய­தான இந்த நபர் திரு­ம­ண­மாகி இரண்டு பிள்­ளை­களின் தந்தை எனவும் ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வ­ரெ­னவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். ஹத்­த­பா­னட கொட, குரண் பிர­தே­சத்­தி­லுள்ள உற­வினர் வீடொன்றில் தங்­கி­யி­ருந்து பெண்­க­ளுக்கு மாத்­திரம் சாந்தி பூஜை­செய்­வ­தாக கூறிய இந்த நபர் சாந்தி பூஜை­செய்யும் போர்­வையில் குடும்­பத்­தி­னரை வெளி­யேற்­றி­வி…

  8. 21 OCT, 2023 | 05:39 PM வெலிகந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மைத்திரிகம பிரதேசத்தில் யானை ஒன்று இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தாய் யானையை குட்டியானை அருகில் இருந்து காவல் காத்து வருகின்றது. சம்பவதினமான நேற்று இரவு யானை மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி கூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அந்த பகுதியில் நிலத்தில் வீழ்ந்து உயிருக்கு போராடிவருகின்றது. வனவிலங்கு உத்தியோகத்தர் செல்ல முற்பட்டபோது குட்டி யானை அங்கு எவரையும் செல்லவிடாது காவல் காத்துவருகின்றது. …

  9. புகையிரத நிலைய நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த குழந்தைகள் கைவண்டி, குழந்தையுடன் புகையிரத தண்டவாளத்தில் விழுந்த சம்பவம் அடங்கிய காணொளியொன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிரிட்டனில் உள்ள அதிவேக புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற இச்சம்பம் அடங்கிய காணொளியை, பிரிட்டன் போக்குவரத்து பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குழந்தையை கைவண்டியுடன் கொண்டு வந்து புகையிரத நடைபாதையில் நிறுத்தியுள்ள அக்குழந்தையின் தந்தை, புகையிரத நிலையத்தில் நின்றிருந்த வேறொரு குடும்பமொன்று, புகையிரத நடைப்பாதைக்கு வருவதற்கான உதவிகளைச் செய்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வீசிய கடுமையான காற்று காரணமாக குழந்தையின் கைவண்டியானது தானாகவே கட்டுப்பாட்டை மீறி புகையிரத தண்டவாளத்தில் போய் விழுந்துள்ளது. புகைய…

  10. தற்கால மனிதனின் தோற்றத்தின் தடயங்களை வடக்கு பொட்ஸ்வானா பிராந்தியத்தின் சம்பசி நதியின் தெற்காக கண்டுபிடித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது உப்பு நிலையாக இருக்கும் இந்தப் பகுதி 200,00 ஆண்டுகளுக்கு முன் தற்கால மனிதர்களான ஹோமோ சேப்பியன்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. இந்த தற்கால மனிதர்கள் சுமார் 70,000 ஆண்டுகள் இந்தப் பகுதியில் வசித்திருப்பதாக சயன்டிபிக் ஜெர்னல் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகிய ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 130,000 ஆண்டுகளுக்கு முன்னர் பிராந்தியத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் அந்தக் குழுவை முதலில் வட கிழக்காகவும் பின்னர் தென்மேற்காகவும் புலம்பெயரச் செய்தது. “சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கால மனித…

    • 0 replies
    • 375 views
  11. தெற்காசியாவிலேயே இராணுவச் செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடாக சிறிலங்கா திகழ்வதாக ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் இராணுவச் செலவினங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன்படி, இராணுவச் செலவினங்களுக்கு அதிகம் நிதி ஒதுக்கும் தெற்காசிய நாடுகளில், சிறிலங்கா முதலிடத்தை பெற்றுள்ளது. சிறிலங்காவின் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 வீதத்தை இராணுவச் செலவினங்களுக்கு பயன்படுத்தி வருகிறது. 2001ம் ஆண்டு சிறிலங்கா இராணுவச் செலவினம் 11 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது. 2010ம் ஆண்டில், 1403 மில்லியன் டொலரை இராணுவச் செலவுக்கு ஒதுக்கியது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 வீதமாக இ…

  12. தேரர்கள்... சிலருக்கும், கொரோனா! ஹபராதுவ – லியனகொட பகுதியிலுள விகாரை ஒன்றிலுள்ள 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1230220

    • 1 reply
    • 375 views
  13. அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் அபரிதமான வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சராசரி வாழ்நாளும் அதிகரித்து வருகிறது. வரும் 2030-ம் ஆண்டிற்குள் மனித இனத்தின் சராசரி ஆயட்காலம் 90-ஐ நெருங்கிவிடும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக உள்ளது. தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றால் இந்த சராசரி ஆயுட்காலம் சாத்தியமாகி வருவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உயிரினங்கள் சராசரியாக எவ்வளவு ஆண்டுகள் வாழ்கின்றன என்பது டிஎன்ஏ எனப்படும் மரபணுவில் எழுதப்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல்வேறு உயிரினங்களின் மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து இதனை கண்டறிந்துள்ளனர். மரபணு ஆய்வின்படி பார்த்தால் மனிதர்களின் இயல்பான ஆயுட்காலம் 38 ஆண்டுகள் மட்டுமே எ…

    • 0 replies
    • 375 views
  14. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் கெல்லி கீக்ஸ். அவர் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ராலேவில் இருந்து விமானத்தில் பயண்ம் செய்து உள்ளார். பயணத்தின் போது அவருக்கு அருகே இருந்த இருக்கையில் ஒரு இளம் காதல் ஜோடி இருந்துள்ளது. அந்த பயண நேரத்திலேயே அந்த காதல் ஜோடி விமானத்தில் சண்டை போட்டு கொண்டனர். இதை பார்த்த கெல்லி அதை தனது டுவிட்டரில் லைவ்வாக டுவீட் செய்துள்ளார். ஆண்: இது உண்மையில் ஆச்சரியம் அளிக்கும் ஒன்றா? இந்த தகவலால் நீ அதிக ஆச்சரியம் அடைகிறாயா? ஆண்: எனக்கு கவலை இல்லை. பெண்: உனக்கு கவலை இல்லை எனில் எனக்கு மகிழ்ச்சி. பெண்: இதற்கு நான் தகுதியானவளா? இந்த விசயத்தை ஏன் கொண்டு வந்துள்ளாய்?அந்த பெண் போல் இருக்க நான் விரும்பவில்லை. அவளாக இருக்க எனக்கு விருப்பமில்லை. உன…

    • 0 replies
    • 375 views
  15. மனம் மட்டுமல்ல... உடலாலும் பொருத்தமானவர்கள் சுதாவும், குமரனும்! இருவரும் மாற்றுத்திறனாளிகள்; காதலித்து மணம் முடித்தவர்கள். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தங்கள் இல்லத்தில், அழகான வாழ்க்கையை சமீபத்தில்தான் ஆரம்பித்திருப்பவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னோம்! போலியோவால் பாதிக்கப்பட்டு கால்களின் செயல் இழந்த சுதா, மெல்லப் பேசினார். ‘‘என் சொந்த ஊர் வாலாஜா. காலுக்கு பதிலா, கடவுள் எனக்கு தைரியம் நிறையக் கொடுத்துட்டார். வாலாஜா, ராணிப்பேட்டை, சென்னைனு என் பள்ளி, கல்லூரிப் படிப்புகளை முடிச்சேன். இப்போ காட்பாடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிக்கான பள்ளியில ஆசிரியரா வேலை பார்க்கிறேன். அதுக்காக காட்பாடியில ரூம் வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தப்போ, தினமும் பள்ளி முடிந்ததும் சமையலுக்க…

  16. சீனாவில் பரவியுள்ள புதியவகை நோய் -உடன் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலை சீனாவின் யுனான் பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் நோய் என்ற புதியவகை நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பாதிப்பிலிருந்தே உலக நாடுகள் மீளாத சூழலில் சீனாவில் புதிய புதிய நோய்கள் பரவுவதாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சீனாவின் யுனான் பிராந்தியத்தில் மெங்காய் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு புபோனிக் பிளேக் நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதேவேளை சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் உள்ள 21 மாகாணங்களில் 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்…

  17. செப் 19, 2012 கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கெதிராக கடந்த பல வருடங்களாகவே எதிர்ப்புணர்வுகள் இருந்து வரும் சூழலில், அணுமின் நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவருவதைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாகவே இடிந்தகரையில் தன்னெழுச்சியாக உருவான அறவழிப் போராட்டங்கள் தற்பொழுது உச்சநிலையை அடைந்துள்ளன. அணு மின்நிலையத்திற்கெதிரான எதிர்ப்புணர்வு இடிந்தகரையையும் அதனையண்டிய பிரதேசங்களையும் கடந்து பெரும்பாலான தமிழகத் மக்களிடமிருப்பதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. தமது வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் அணுஉலை சிதைத்துவிடுமென்ற நியாயமான அச்சம், தன்னெழுச்சியிலான போராட்டமாக தினம்தினம் தீவிரம் பெற்றுவரும…

  18. வட மாகாண சபைத் தேர்தலின் பின்னர் இராணுவத்தினரைச் சீண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் எமது நாட்டைப் பிளவுபடுத்தும் நிலை ஏற்பட்டால், இராணுவம் அதனைத் தடுக்க - பதிலடி கொடுக்க - எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் - இவ்வாறு இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் தயாரத்நாயக்க தெரிவித்தார். இராணுவத் தளபதியாகப் பொறுப்பெடுத்த பின்னர் வட பகுதிக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினருடனான சந்திப்புக்களை முடித்துக் கொண்டு வவுனியா மாவட்டத்துக்குச் சென்றிருந்தார். வன்னிப்பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது; சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதுங்கு குழிகளில் இருக்கும…

  19. அண்ணாம‌லைய‌ ஏன் மாவீர‌ர் நாளில் போது அழைத்த‌துக்கு ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா சொல்லும் உருட்டு பிர‌ட்டை பாருங்கோ😁..............

  20. சீனாவில் பெரும் டிராஃபிக் நடுவே 12 வழிச்சாலையை கடக்க முயன்ற முதியவர் - பிறகு நடந்தது என்ன? சிசிடிவி காட்சிகள்

  21. 80 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய விபச்சார கப்பல் சிதிலமடைந்த நிலையில், தற்போது தண்ணீருக்கு வெளியே தலைகாட்டியிருக்கிறது. இந்த கப்பலில் பொற்காகாசு குவியல் இருப்பதாக கருதப்படுவதால், இந்த கப்பலை காண மக்கள் கூட்டம் வருவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையோரும் புதைந்து கிடக்கும் அந்த கப்பல் அலையின் சீற்றத்தால், தற்போது மெல்ல வெளியில் தெரியத் துவங்கியிருக்கிறது. இந்த கப்பல் தற்போது பல அமெரிக்க ஊடகங்களின் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. அமெரிக்க ஊடகங்கள் வழியாக இந்த கப்பல் பற்றி தெரிவிக்கப்படும் சுவாரஸ்யத் தகவல்களை வழங்கியிருக்கிறோம். ‘சரக்கு’ கப்பல் 1921ம் ஆண்டு எஸ்எஸ் மான்டி கார்லோ என்ற பெயரில் கச்சா எண்ணெய் …

  22. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் உயிரணுக் கறை படிந்ததாக கூறப்படும் மொனிக்கா லுவின்ஸ்கியின் ஆடையொன்றுக்கு 10 லட்சம் அமெரிக்க டொலர்களை வழங்க நூதனசாலையொன்று முன்வந்துள்ளது. பில் கிளின்டன் ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, ஜனாதிபதியின் வாசஸ்தலமான வெள்ளை மாளிகையில் ஊழியராக பணியாற்றியவர் மொனிக்கா லுவின்ஸி. வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பில் கிளின்டனும் தானும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பகிரங்கமாக தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கான ஆதாரமாக, பில் கிளின்டனின் உயிரணு படிந்த தனது கவுண் ஒன்றையும் அவர் காட்டினார். கிளின்டனின் உயிரணு படிந்த அந்த நீல நிற ஆடையானது, மொனிக்காவுடன் தான் பாலியல் நடவடிக்கைளில் ஈடுபட்டதை பில் கிளின்டன் ஒப்புக்கொள்ளச் செய்வதற்…

    • 0 replies
    • 374 views
  23. ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து தலைவி ஒருவர் கழிவறைகளை சுத்தம் செய்தும், பிச்சை எடுத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் பச்சாமா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவி ரஜினி பன்சால்(38). அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். அவர் இருக்கும் வீடு கன மழை பெய்தால் தாங்காது. பஞ்சாயத்து தலைவியாகிய அவர் பிழைப்பு நடத்த உள்ளூரில் உள்ள பெண்கள் பள்ளியில் கழிவறைகளை சுத்தம் செய்கிறார். மேலும் கிராமத்தில் பிச்சையும் எடுக்கிறார். அவருக்கு வர வேண்டிய சம்பளம் பல மாதங்களாக வரவில்லையாம். அவரது மூத்த மகன் அனில் எழுதப்படிக்கத் தெரியாத ரஜினிக்கு அவரது பெயரை எழுத கற்றுக்கொடுத்துள்ளார். இதையடுத்து அ…

  24. யேர்மனி மத்திய மாநிலத்தில் அமைந்திருக்கும் சீகன் எனும் நகரத்தில் நடைபெற்ற யேர்மன் மற்றும் பல்லின மக்களிக்கிடையே நட்புறவை பேணும் வகையில் நடைபெற்ற நல்லிணக்க விழாவில் அவ் நகர ஈழத்தமிழ் மக்களும் கலந்துகொண்டு தமது இன அடையாளத்தை நிலைநிறுத்தி சிங்கள இனவெறி அரசின் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை எடுத்துரைத்தனர் . இவ் நிகழ்வில் சிறப்பாக "146.679 தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது?. மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசெப் "எனும் தலைப்புடன் தமிழின படுகொலையை விளக்கும் வகையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் அங்கு நிகழ்வில் கலந்துகொண்ட பல்லின சமூக மக்களுக்கு வழங்கும் வகையில் காட்சியகப் படுத்தப்பட்டது . யேர்மன் மற்றும் பல்லின மக்கள் மிகவும் ஆர்வத்துடன் தமிழர்…

    • 2 replies
    • 374 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.