Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் வனவிலங்கு உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் வருடாந்தம் நடைபெறும் CN Tower ஏறும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் இன்று பங்கெடுத்தார்கள்.உலக வனவிலங்கு நிதியத்தின் ஏற்பாட்டில் 25வது வருடமாக நடைபெற்ற நிகழ்வில், இன்று சுமார் 6000 பேர் கலந்துகொண்டார்கள். காலை ஆறு மணிக்கு சி.என்.டவரை படிகள் மூலம் ஏறும் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமாகியது . சி.என்.டவரின் 1776 படிகளை இவர்கள் ஏறினார்கள்.இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் சேகரித்த நிதி, வனவிலங்குகளைப் பேணும் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும், சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்பும் ஒரு செயற்பாட்டிற்காக, இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பங்களிப்பதாக, வனவிலங்கியல் நிதியத்தின் தலைவரும் டொரன்டோ நகரின் முன்னாள் ம…

    • 0 replies
    • 330 views
  2. யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புத் தாக்குதல் நடவடிக்கை உச்சமடைந்திருந்த காலத்தில் விடுதலைப் புலிகள் தங்களது முதலாவது உயிராயுதத்தைப் பயன்படுத்தினார்கள். கப்டன் மில்லர் எனப்படும் வல்லிபுரம் வசந்தன் என்ற வேங்கை கரும்புலியாக மாறி சிங்கள இராணுவத்தின் இதயத்தின்மீது வெடித்துச் சிதறினான். 05 ஜுலை 1987 அன்று நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த சிங்கள இராணுவத்தின்மீது மில்லர் நடாத்திய தற்கொடைத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான சிங்களப் படையினர் பலியானார்கள். இந்த முதலாவது கரும்புலித் தாக்குதலில் அதிர்ந்தது சிங்கள தேசம் மட்டுமல்ல, இந்திய ஆட்சியாளரும் கூடத்தான். தனது கட்டுக்குள் அடங்க மறுக்கும் சிங்கள ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டுவருவதற்காகப் பயன்படுத்…

    • 1 reply
    • 330 views
  3. ஐந்து பெண்களை திருமணம் செய்த நபரொருவர், 49 பெண்களுடன் தொடர்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்யஜித் சமால். 34 வயதான இவர், தான் ஒரு பொலிஸ் அதிகாரி என ஏமாற்றி 5 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். சமாலால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள், காவல் நிலையத்தில் தனித்தனி புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி சமாலை கைதுசெய்தனர். குறிப்பாக, சமாலை கைது…

      • Haha
    • 2 replies
    • 330 views
  4. நிலவு படங்களில் 47 இடங்களில் மனித உருவ வடிவங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டி காட்டி உள்ளனர்.ஒரு பாதையில் உருவாக்குவது போல் ஒரு உருவத்தை அடுத்து மற்றோரு உருவத்துக்கும் இடையே அதே அளவு இடைவெளியில் அந்த உருவங்கள் தெரிகின்றன. - See more at: http://www.canadamirror.com/canada/46114.html#sthash.W4Fe8jyr.dpuf

    • 0 replies
    • 330 views
  5. துருக்கியில் உலகின் மிகவும் பழமையான ரொட்டியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு துருக்கி நாட்டில் உள்ள கொன்யா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு தொல்பொருள் தளமான கேடல்ஹோயுக் என்ற பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சேதமடைந்த அடுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அடுப்பின் அருகில், உலகின் பழமையான ரொட்டியை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஏசு கிறிஸ்துவுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்தாவது: பழங்கால மண் வீடுகள் நிறைந்த “மேகன் 66″ என்ற பகுதியில் பாதி சேதமடைந்த நிலையில் இருந்த ரொட்டி எச்சம் கண்டுபிடிக்கப்பட்…

  6. வாஷிங்டன்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் சாவ்லா. இவர் அமெரிக்காவின் கிளைவ்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அதிபர் டிரம்ப் நடத்தி வரும் 4 ஓட்டல்களில் இவர் வர்த்தக கூட்டாளியாக இருந்தார். இந்த ஓட்டலின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தினேஷ் சாவ்லா இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கொடுத்த நெருக்கடியின் காரணமாக, இவருடன் இருந்த வர்த்தக உறவை டிரம்ப் முறித்து கொண்டார். கடந்த 18ம் தேதி அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் செல்வதற்காக தினேஷ் சாவ்லா சென்றார். அப்போது, அங்கு சோதனையிடப்பட்ட வேறு நபரின் சூட்கேசை எடுத்த அவர், அதை தான் வந்திருந்த காரில் வைத்துவிட்டு மீண்டும் வந்து விமானத்தில் பயணம் செய்தார். பயணத்தை …

    • 1 reply
    • 330 views
  7. கிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை மடக்கிப்பிடிப்பு! மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் (வியாழக்கிழமை) கிராமத்திற்குப் புகுந்த இராட்சத முதலை ஒன்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மடக்கிப்பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர். மட்டக்களப்பு வாவியிலும், அதனை அண்டிய சிறு குளங்களிலும் முதலலைகளின் அட்டகாசங்களும், தாக்குதல்களும், மீனவர்களையும், குளத்தில் மேச்சலுக்குச் செல்லும் கால்நடைகளையும் தாக்கிவரும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள குளத்திலிருந்து கிராமத்திற்கு முதலை ஒன்று புகுந்துள்ளது…

  8. சேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண் (காணொளி) பெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் இருந்து போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ். சேற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட அவர் மரத் துண்டுகள், கிளைகளைப் பற்றி போராடி கரை சேர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெருவில் கன மழை பெய்து வருகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, சிகிச்சை பெற்று வருவதாக பெரு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. http://www.bbc.com/tamil/global-39306793

  9. காஷ்மீரில் வசிக்கும், பிரோஜ்-உன்-திர்-மீர், உலகிலேயே மிகவும் வயதான நபராக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், விரைவில் இடம் பெறவுள்ளார். கடந்த, 1872 மார்ச், 10ம் தேதி பிறந்த, இவரின் தற்போதைய வயது, 141. மிகவும் குறைந்த பார்வைத் திறன் கொண்ட மீர், தன் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன், தன் வேலைகளை செய்கிறார். தன்னுடைய வாழ்க்கை குறித்து, காஷ்மீர் லைப் பத்திரிகையில், அவர் கூறியிருப்பதாவது: நாடு சுதந்திரம் அடையும் முன், கராச்சியில், என் தந்தையுடன் இணைந்து, பழங்கள் மற்றும் அக்ரூட் கொட்டைகள் விற்பனை செய்தேன். 1890ல், முதல் திருமணம் நடைபெற்றது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதல் மனைவி இறந்துவிட்டார். அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிக்கப்படவில்லை. முஷாபராபாத்தில…

    • 2 replies
    • 329 views
  10. கொரோனா அச்சம் காரணமாக... மரத்தில், தங்களை தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்கள்! சென்னையில் வேலைபார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய மேற்கு வங்க மாநில இளைஞர்களை தனியாக வசிக்கும்படி வைத்தியர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். அவர்களது, வீட்டில் தனி அறை இல்லாததால், அவர்கள் மரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் வங்கிடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 7 இளைஞர்கள், சென்னையில் வேலைபார்த்துள்ளனர். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர்கள், வைத்தியர்களை சந்தித்துள்ளனர். அப்போது வைத்தியர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இளைஞர்களை, தனிமைபடுத்தி கொள்ளும்படி அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால், அவர்கள் ஏழ்மையில் உள்ளதால், வீட்டின் அருகில் உள்ள…

    • 1 reply
    • 329 views
  11. முகநூல் காதல் ; காதலியின் புதிய காதலனை கொலைசெய்ய திட்டம் ; காதலன் கைது By T. SARANYA 29 SEP, 2022 | 04:14 PM (எம்.எப்.எம்.பஸீர்) தனது முக நூல் காதலியின் புதிய காதலனை குண்டினை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்யும் திட்டத்துடன் காத்திருந்த காதலரான இளைஞர் ஒருவர் கைக் குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை இறக்காமம் பகுதியில் பதிவாகியுள்ளது. கல்கமுவ - மஹகல்கடவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, 28 வயதான குறித்த இளைஞன் காலி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை முகப்புத்தகத்தின் ஊடா…

  12. மஹிந்தவின் வெற்றிக்கு இந்திய றோ தீவிரம்…? July 16, 201510:43 am முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக இந்திய புலனாய்வு சேவையான றோ செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதனடிப்படையில், பல்வேறு காரணங்களை கூறி இலங்கை வந்துள்ள இந்திய புலனாய்வு சேவையின் உறுப்பினர்கள் பல மாவட்டங்களில் நிலை கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது இந்தியாவின் தேவை என்பதுடன் தேர்தல் பிரசாரங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் தலையீடுகளால், மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசாரங்களில் தொய்வுகள் ஏற்பட்டால், அது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு அறிவித்து அடுத்த கட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு றோ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக…

  13. வெள்ளவத்தையில் கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கினர் (எம்.எப்.எம்.பஸீர்) இராணுவ புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இருவர், வெள்ளவத்தை - ஹார்மர்ஸ் அவனியூ பகுதியில் கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டின் கீழ் தளத்தை நாள் வாடகை அடிப்படையில் பெற்று, வாடகையை கேட்ட போது வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை சிறை பிடித்து , தடுத்து வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. http://cdn.virakesari.lk/uploads/medium/file/133202/thumb_large_arrest2.jpg இதன்போது இரு சந்தேக நபர்கள் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்…

    • 1 reply
    • 329 views
  14. விலைமாதர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு! Vhg ஜூன் 29, 2022 இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தகாத முறையின் தொழிலாளர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பால்வினை தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவத்துறை நிபுணர்களின் சங்க முக்கியஸ்தரான மருத்துவ நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் டொலர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படத் தொடங்கியது முதல் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் பால்வினை தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மருத்துவ உபகரணங…

  15. மனிதர்களின் கண்ணீரில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பல வகையான உப்புகள் லண்டனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களிடம் ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீரின் வகைகளினால் இந்த உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஹொக்டன் தெரு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். துக்கத்தினால் ஏற்படும் கண்ணீர், தும்மும் போது ஏற்படும் கண்ணீர், வெங்காயம் வெட்டும்போது ஏற்படும் கண்ணீர், சிரிப்பின் போது ஏற்படும் கண்ணீர், கோபத்தின் போது ஏற்படும் கண்ணீர் என ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீர் மூலம் சுமார் 7 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு உப்புகளும் மாறுபட்ட சுவை கொண்டவை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…

  16. கழிவுநீர் கால்வாய்க்குள் பாய்ந்த மட்டக்குளி கதிரானவத்தை குடு ராணி கைது! 04 MAR, 2024 | 11:58 AM மட்டக்குளியில் கதிரானவத்தை குடு ராணி என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்துள்ளனர். யுக்திய நடவடிக்கையின்போது முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 5 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸார் குறித்த பெண்னை கைது செய்ய முற்பட்டபோது அவர் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் குதித்துள்ளார். பின்னர் மேலதிக பொலிஸ் அதி…

  17. தேசிய லொத்தர் சபை வரலாற்றில் சாதனை: 23 கோடியை தனதாக்கிய நபர் இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.நேற்றைய தினம்(23) அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு அதிபதியாகி உள்ளார். மேற்படி லொத்தர் டிக்கெட் கண்டி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த நபர் வென்ற முழுத்தொகை 236,220,278.35 ரூபாவாகும் https://newuthayan.com/தேசிய-லொத்தர்-சபை-வரலாற்/

  18. அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் புறநகரான ரிச்மாண்ட் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டின் நான்காவது மாடியில் இருந்து பிறந்து மூன்று வாரங்களே ஆன ஆண் குழந்தையை கீழே தூக்கியெறிந்துக் கொன்ற பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சமீபத்தில் அந்த குழந்தையை பிரசவித்த ரஷிதா சவுத்ரி என்ற பெண்னே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட் பெண், பேய், பிசாசு சேட்டைகளில் இருந்து பாதுகாக்கவே அந்த குழந்தையை கீழே தூக்கி வீசியதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்தக் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/47383.html#sthash.yhgW6g5D.dpuf

    • 0 replies
    • 328 views
  19. 26 மாதங்களில் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த யுவதி அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த 6 குழந்தைகளும் 26 மாத கால இடைவெளியில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. கான்சாஸ் நகரைச் சேர்ந்த 20 வயதான டனேஷா கோச் எனும் யுவதியே இவ்வாறு தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார். இவர் தனது காதலரான ஜெப்ரி பிரெஸ்லருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். இத் தம்பதியினர் 26 மாதங்களுக்கு முன் முதல் தடவையாக பெற்றோ ராகினர். அப்போது இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் அவற்றில் ஒரு குழந்தை இறந்துவிட்டது. 14 மாதங்களில் இ…

  20. ஒரே செடியில் பூத்த 1,500 பூக்கள் 1,500 பூக்களைக் கொண்ட பூச்செடியொன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. செவ்வந்தி (கிரிஷாந்திமம்) இனத்தைச் சேர்ந்த இந்த பூச்செடி, சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது. நான்கு வருட கால முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த மலர்ச்செடி 3.8 மீற்றர் விட்டத்தைக் கொண்டுள்ளது. இதில் 641 வகையான 1500 மலர்கள் பூத்துள்ளன. உலகில் ஒரே தடவையில் மிக அதிக மலர்களைக் கொண்டிருந்த பூச்செடியாக கடந்த கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் இச்செடி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இதற்கான சான்றிதழ் கையளிக்கப்பட்டது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=12857#sthash.KweES7ap.dpuf

  21. காங்கேசன்துறையில்... சடலம் மீட்பு- கழுத்து நெரித்துக் கொலை செய்தமை உறுதி! காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கியத் தகவலை அடுத்து, இன்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் நடராசா என்னும் 63 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலையில் வசித்து வருகின்றார். நேற்று அவர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் கா…

  22. கனடா- ஒன்ராறியோ நிதிபதி கார்கள் அனைத்திலும் மது-கண்காணிப்பு கருவிகள் அவசியம் என விரும்புகின்றார். குடித்து விட்டு வாகனம் செலத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இம்முறை சிறந்ததென்பதால் இந்த ஆலோசனையை வெளியிட்டுள்ளார். சாரதி ஊதும் போது டாஷ் போர்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி செயல்படும். இரத்தத்தில் காணப்படும் மதுபானத்தின் அளவு அதி உயர்வாக கண்டுபிடிக்கப்படும் போது கார் இயங்க மாட்டாது. அத்துடன் வேறு யாராவது பயணத்தின் ஆரம்பத்தில் மூச்சு மாதிரியை ஊதுவதை தடுக்கும் பொருட்டு இக்கருவிக்கு பயணம் பூராகவும் மூச்சு மாதிரி தேவைப்படும். போதையில் வாகனமோட்டி 2013ல் மாகாணத்தில் 57மரணங்கள் இடம்பெற்றுள்ளன.78மக்கள் கவனத்திசை திருப்பி வாகனம் ஓட்டியதால் கொல்லப்பட்டுள்ளனர். வேகம் சம்பந்…

    • 0 replies
    • 328 views
  23. எதி­யோப்­பி­யாவைச் சேர்ந்த விவ­சா­யி­யொ­ருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வய­தா­னவர் எனவும் உரிமை கோரி­யுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதி­யோப்­பி­யாவில் இத்­தாலி தலை­யீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாப­கத்தில் உள்­ள­தாக ஓய்வுபெற்ற விவ­சா­யி­யான எட­கபோ எப்பா தெரி­வித்தார். எனினும் அவ­ரிடம் தனது வயதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு எந்­த­வொரு ஆவ­ணமும் இருக்­க­வில்லை. அவர் ஒரோ­மியா தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டியின் போது, 19 ஆம் நூற்­றாண்டில் இடம்பெற்ற சம்­ப­வங்­களை விப­ரித்­துள்ளார். இத்­தா­லியால் எதி­யோப்­பியா ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­ட­போது, தான் இரு மனை­விகள் மற்றும் மக­னுடன் வாழ்ந்து கொண்­டி­ருந்­தாக அவர் கூறினார். அவர் கூறு­வது உண்­மை­யானால் உலக வர­லாற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.