Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பிரிட்டனில் உள்ள சீன ஹோட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவுகளை மீதம் வைத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பிரிட்டனில் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியில் சீன ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவு பொருட்களை மீதம் வைத்தால், அவர்களுக்கு 20 பவுண்டு வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஹோட்டல் சர்வர்கள், சாப்பிட வருபவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது, சாப்பாட்டை மிச்சம் வைத்தால் அபராதம் வசூலிக்கப்படும், என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி சாப்பிட்ட தட்டில் உணவை வீணாக்குபவர்களுக்கு, உணவு கட்டணத்துடன் அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. சாப்பாடு பிடிக்காமல் ம…

  2. ஊடகச் செய்தி, அனைத்துலக மக்களவைகள். மே 16ம் நாள் 2012. இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப விரைந்து செயற்படுவோம். மே-18 எமது இனத்தின் விடுதலையை நசுக்கி, போர்த் தர்மங்களை மீறி எம்மக்களைக் கொடூரமாகக் கொன்று புதைத்தது மட்டுமல்ல தொடர்ந்து எமது தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கு சிங்கள அரசும் அதனை அண்டிய நாடுகளும் கங்கணம் கட்டி நிற்கின்ற வேளையில், தமிழர்களாகிய நாம் விடுதலையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுவோம். முள்ளிவாய்க்காலில் எமக்கு நடந்த கொடுமை, பேரவலம் சொல்லில் எழுதப்பட முடியாததென்பதும் வார்த்தைகளால் வடிக்கப்பட முடியாததென்பதும் விடுதலை வேண்டிப் போராடிய ஒவ்வொரு தமிழனும் நன்கறிந்த விடயம். இவ்வளவு காலமும் எமது விடுதலைக்காக எம்மக்களும் அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகளு…

  3. அடக்குமுறைக்கு எதிரான நாளாக விளங்கும் உலகத் தொழிலாளர் தினத்தன்று சிங்கள ஆக்கிரமிப்புச் சின்னமான வாளேந்திய சிங்கக் கொடியை பேருவகையோடு கையிலேந்தி அசைத்ததன் மூலம் தனது அடித்தொண்டு அரசியல் ‘சாணக்கியத்தை’ மீண்டுமொரு தடவை ‘பழுத்த அரசியல்வாதியான’ இராஜவரோதயம் சம்பந்தன் வெளிப்படுத்தியுள்ளார். சம்பந்தரின் அரசியல் வாழ்க்கையைப் பொறுத்த வரையில் இதுவொரு புதுமையான விடயம் அல்லவே. காலத்திற்கு ஏற்ப சிங்கக் கொடியையும், புலிக்கொடியையும் மாறி மாறி ஏந்துவது என்பது சம்பந்தரின் அரசியல் வாழ்க்கையில் இயல்பானதொரு பண்பாகவே விளங்கி வருகின்றது. ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வை தேடும் பொழுது வாளேந்திய சிங்கக் கொடியை தூக்கிப் பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று இன்று வாதிடும் சம்பந்தரும் அவரது பர…

  4. பாஸ்ட் புட் வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் சாண்ட்விச் உணவு 250,வது பர்த்டே கொண்டாடி இருக்கிறது. லண்டனில் இது கோலாகல விழாவாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலமான உணவு சாண்ட்விச். அவசரத்துக்கு கைகொடுப்பது மட்டுமின்றி எளிதில் தயார் செய்யலாம். கோதுமையில் தயாரிக்கப்படும் பிரெட் வகை உணவான இதை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் 250,வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் சாண்ட்விச் அசோசியேஷன், பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதுபற்றி அமைப்பின் அதிகாரி மான்டி வில்கின்ஸ் கூறியதாவது: சாண்ட்விச் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிக கொழுப்பு சத்து இல்லாதது, எளிதில் தயாரிக்க கூடியது, பக்கவிளை…

  5. போலியான டொலர் தாள்களைத் தடுக்கும் வகையில் புதிய பல்படிவச் (polymer) சேர்மானமுள்ள $20தாள்களை கனடா வங்கி (Bank of Canada)அறிமுகப்படுத்தியுள்ளது. கனடிய பணத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை பாதுகாக்கவே புதிய $20 தாள்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கனடிய வங்கியின் ஆளுநர் மார்க் கார்னே கூறியுள்ளார். இ குருவி இந்த வருடம் வைர விழாவினைக் கொண்டாடும் எலிசபெத் மகாராணியின் பணம் புதிதாக வெளியாகியுள்ள $20 தாளின் முகப்பில் அச்சிடப்பட்டுள்ளது. தாளின் பின்புறத்தில் கனடிய ராணுவ சேவையினை பாராட்டும் வகையிலான படங்களும் பிரான்சில் உள்ள கனடிய தேசிய விமி நினைவகத்தின் படமும் இடம் பெற்றுள்ளது. எமது இணையத்தள முகவரியான ekuruvi.comகுறிப்பிடுமாறு நட்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம் முதல் உலகப்போரி…

  6. உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ் பேசும் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகிப்போன முள்ளிவாய்க்கால் படுகொலையின் வலியினையும், சதிகளையும், சோதனைகளையும் சுமந்து மூன்று ஆண்டுகள் கடந்து போய்விட்டது. ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஒரே நாளில் கொன்றொழித்த இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை இடம் பெற்ற நாள் மே18. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்கள் மீதும் வீர மறவர்கள் மீதும் தடைசெய்யப்பட்ட அதிபாரக்குண்டுகளையும், இரசாயனக் குண்டுகளையும் வீசி சிங்களம் விதைத்த மனிதப் பேரவலத்தில் தமிழ்மக்களின் குரல்கள் மரணத்திற்குள் அமிழ்தப்பட்ட நாள் மே18. நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்களை…

  7. அவர் மேலும் குறிப்பிடுகையில் முள்ளிவாய்க்காள் நினைவு எமது நெஞ்சகங்களில் தீயாக பற்றிஎரிந்து போர் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி ஈழத்தமிழ் மக்களின் விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடவேண்டும் என்று தொடர்ந்து செல்கின்றது. http://eeladhesam.com

  8. கனடாவின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சஸ்காடூன் அருகே நடுவானில் பறந்த 2 விமானங்கள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 2 விமானங்களும் நொறுங்கி புனித பெர்கிஸ் என்ற இடத்திற்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் தரையில் விழுந்தன. இந்த விமான விபத்தில் ஒரு விமானத்தில் பயணம் செய்த தம்பதி, மற்றொரு விமானத்தில் இருந்த 2 ஆண்கள், ஒரு சிறுவன் ஆகிய 5 பேரும் பலியானார்கள். ஆனால் பலியானவர்கள் விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். http…

  9. (வாசகர்களின் கருத்துக்களும் இணைப்பு)முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பிரித்தானியாவில் எங்கே நடைபெறுகிறது ? என்ற குழப்பங்கள் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. சில ஊடகங்கள் அது கிறீன்பேடில் உள்ள திடல் ஒன்றில் மே 18ம் திகதி(வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக தொடர்ந்து பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது.ஆனால் பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) அமைப்பு இந் நிகழ்வானது லண்டன் நகர மையப்பகுதில் உள்ள ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது. ரவல்கர் சதுக்கத்தில் நடைபெறும் நினைவு தினம் மே 19(சனிக்கிழமை) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த நிகழ்வுக்கு நாம் செல்லவேண்டும் என மக்கள் மத்தில் குழப்பங்கள் பலதை ஏற்கனவே மின்னஞ்சல்களும், ஊடகங்களும், மற்றும் தொலைக்காட்சிகளும் தோற்றுவித்துவிட்டது…

    • 0 replies
    • 509 views
  10. இப்பொழுதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இராணுவத்துடன் ஒட்டுக்குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் புளொட் இயக்கத்தை நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்து கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுகிறார், தமது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து விட்டதாக கூறிவருகிறார். ஆனால் மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தினர் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுவாக இயங்கி வருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக கொண்டுவரப்ப…

    • 0 replies
    • 550 views
  11. ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர். லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையி…

  12. இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு, சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்டு கொடுத்த கிரிக்கெட் பேட் 3400 பவுண்ட்ஸ்சுக்கு ஏலம் போனது.கடந்த 2010ம் ஆண்டில், இங்கிலாந்து பிரதமர் கேமரூன், இந்தியா வந்தபோது, சச்சின் அவருக்கு தான் பயன்படுத்திய கிரிக்கெட் பேட்டை கையெழுத்திட்டு பரிசாக வழங்கினார். இதுவரை அதை பத்திரமாக பாதுகாத்து வந்த கேமரூன், ருவாண்டாவில் கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று கட்டும் பணிக்கு நிதி திரட்டுவதற்காக சச்சின் வழங்கிய பேட்டை நன்கொடையாக வழங்கினார். கேமரூன் தொகுதியின் தலைவராக இருந்த கிறிஸ்டோபர் ஷாலேயின் முதலாமாண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. அதை முன்னிட்டு லார்ட்ஸில் உள்ள லாங் ரூமில் சச்சின் பேட் ஏலம் விடப்பட்டது. அதில், பேட் 3400 பவுண்ட்ஸ்சுக்கு ஏலம் …

  13. சென்னையிலிருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நிர்ணயிக்கும் பொதுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு லட்சம் கையெழுத்துக்களை திரட்டும் போராட்டத்தை தொடங்கப்போவதாக போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஊடகச் சந்திப்பின் பொழுது போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பின் அமைப்பாளர்களான டொக்டர் எழிலன், தோழர் இரா. திருமலை முதலியோர் இந்தத் தகவலை தெரிவித்தனர். ஐக்கிய நாடுகளின் மன்றம் இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து, இலங்கையில் தமிழ் மக்களுக்கான பொ…

  14. தாயிற்சிறந்த கோயிலுமில்லை.... என்ற வைரவரிகள் தமிழ் கூறும் நல்லுலகில் பவனி வரும் இரத்தினச் சுருக்கமான வார்த்தை. ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக. இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது. இப்படிப்பட்ட அன்னையைக் கௌரவிக்கும் இந்நாளில் "அன்னையர் தினம் ' அகிலமெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்தவர் பற்றி நாம் சுற்றுத் தெரிந்து கொள்வோமா? 16ஆம் நூற்றாண்டில் கிறிஸ் நாட்டில்தான் ‘’MOTHERING SUNDAY’’ என்ற நாள் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டிருக்கிறது. ஈஸ்ட்டர் வரும் மாதத்தின் நான்காம் ஞாய…

  15. மட்டக்களப்பு வாழைச்சேனை துறைமுகப்பகுதியில் காட்டுக் குரங்கு ஒன்றின் தாக்குதலால் பலர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாகவுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பலர்; அச்சமடைந்து காணப்படுகின்றனர். இக்குரங்கானது வாழைச்சேனை ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள கண்ணாக்காட்டில் வசித்து வருகின்றது. அவ்வழியால் நாசிவன்தீவு கிராமத்திற்கு செல்லும் பொது மக்கள், அருகிலுள்ள கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், மீனவர்கள், பாதசாரிகள், ஆசிரியர்கள், மற்றும் கிராமத்தவர்கள் என பலரையும் பாராபட்சம் காட்டாது கடித்தும், பிறாண்டியும், கன்னத்தில் அறைந்தும் துன்பம் விளைவித்து வருகின்றது. இதனால் பொது மக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர். இது தொடர்பாக வாழைச்சேனை பொலி…

  16. தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற உள்ளது. 25ஆம் திகதி மாலை மத்திய செயற்குழுவின் கூட்டம் நடைபெறும். 26ஆம் திகதி காலை மகாநாடு ஆரம்பமாக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தலைவர், பொதுச்செயலாளர், மூத்ததுணைத்தலைவர், இணைச்செயலாளர்கள், இணைப்பொருளாளர்கள், மற்றும் மத்தியகுழுவும் தெரிவு செய்யப்படும். தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர்கள், மூத்ததுணைத்தலைவ…

  17. டெல்லி: அமெரிக்கத் தயாரிப்பான இலகு ரக பீரங்கிகளைக் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்கத் தயாரிப்பான ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புடைய 145 இலகு ரக எம்777 பீரங்கிகள், ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புடைய 65 எல்-70 ஏர் கன் ரேடார்கள், ரூ.480 கோடி மதிப்புடைய பயிற்சி கப்பல், ரூ.350 கோடி மதிப்புடைய கூட்டு விமானப்படை மற்றும் ராணுவ சாதனங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்ய பாதுகாப்பு தளவடாங்கள் கொள்முதலுக்கான கவுன்சில் அனுமதித்துள்ளது. பிஏஇ சிஸ்டம் நிறுவனத் தயாரிப்பான இத்தகைய பீரங்கிகளை சீன எல்லைப் பகுதிகளான காஷ்மீரின் லடாக், வடகிழக்கில் அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மலைப்பாங்கான களங்களில் பயன்படுத்த முடியும். இதன் எடை குறைவு என்பதால் ஹெலிக…

  18. நோமொபோபியா என்னும் பீதியால், 66 சதவீதம் பேரால் செல்போனை ஒரு வினாடிகூட பிரிந்திருக்க முடியாது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. முன்பெல்லாம், வீட்டிலிருந்து ஒருவர் வெளியே புறப்படும் போது, கண்ணாடி, பணம், பேனா என எப்போதும் தேவைப்படக் கூடிய பொருட்களை எடுத்து செல்வார்கள். எதுவும் மறந்து விடக் கூடாது என்பதற்காக பல முறை யோசித்து பார்த்து விட்டு படியிறங்குவார்கள். ஆனால், இன்றைய நவீன உலகில் இந்த பட்டியலில் செல்போன் முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தில் செக்யூர் என்வாய் அமைப்பு, செல்போன் பயன்படுத்துவோர் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதில் வெளியான தகவல்: செல்போன் இல்லாமல் ஒரு வினாடி கூட இருக்க முடியாது. செல்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று …

  19. இம்மாதம் மே 18 Albert Campbell (Scarborough Town Centre) சதுக்கத்தில் தமிழின அழிப்பு மாதத்தின் போர்க்குற்ற நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது. நான்காவது வருடமாக கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் போர்க்குற்ற நாள் நிகழ்வு வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு,மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் போர்க்குற்ற நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. சிறிலங்கா அரசு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஒற்றுமையை சீர்குழைக்கும் முகமாக மாவீரர் தினம், போர்க்குற்ற நாள், கறுப்பு ஜுலை, மற்றும் தமிழ்த் தேசியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும…

    • 1 reply
    • 579 views
  20. ஆஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் அருங்காட்சியகத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவு பகுதியில் மீனவர் வலையில் ‘கிளாட்’ வகையை சேர்ந்த ராட்சத நண்டு கடந்த மாதம் சிக்கியது. ஆஸ்திரேலியாவில் எந்த வகை நண்டு கிடைத்தாலும் உடனே சட்டிக்குதான் போகும். ஓட்டல்கள், விடுதிகளில் அமோக விளம்பரத்துடன் நண்டுக் கறிகள் விற்பனையாகும். ஆனால், பிடித்த மீனவர் அதை கறிக்கு விற்காமல் பத்திரமாக வைத்திருந்தார். கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் ‘ஸீ லைஃப்’ என்ற அமைப்பு இதை ரூ.2.58 லட்சம் கொடுத்து அவரிடம் இருந்து வாங்கியிருக்கிறது. இது இங்கிலாந்தின் டார்செட் கவுன்டியில் உள்ள வேமோத் ஸீ லைஃப் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. இதற்…

  21. இலங்கையின் வட கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் போதைப்பொருள் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பாடசாலை இளைஞர்கள் மத்தியில் திட்டமிட்டு இப்போதை பொருள் விற்பனை திட்டமிட்டு நடைபெறுகின்றது. பல ஆற்றல் மிக்க இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிவருகின்றனர். வட கிழக்கு மக்களில் நலன்களில் அக்கறை கொள்வதாகக் கூறும் அரசியல் கட்சிகளோ அமைப்புகளோ இது குறித்து மௌனம் சாதிக்கின்றனர். புலிகள் இயக்கத்தின் முன்னை நாள் போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு “மறுவாழ்வு வழங்கப்பட்டதாக” விடுதலை செய்யப்பட்ட ஆண்கள் பெண்கள் ஆகிய இருபகுதியினர் மத்தியிலும் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. முன்னை நாள் போராளிகள் என சந்தேகிக்கப்பட்…

  22. யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் உடனடியாக செயற்படும் வண்ணம் தடலாடியாக இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றஞ்செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சிலிருந்து அனுப்பப்பட்ட பக்ஸ் மூலம் அவரிற்கு தகவல் இன்று வழங்கப்பட்டுள்ளது.இதனிடையே அவரது இடத்திற்கு தற்போதைய மட்டக்களப்பு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இடமாற்றம் பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்ததாக கூறும் யாழ்.அரச அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் அதனை தாம் எதிர்பார்த்திருந்ததேயென மேலும் தெரிவித்தார்.யாழ்,குடாநாட்டிற்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகளை சந்திப்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அவர் சர்ச்சைகளி…

  23. இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான மன்ஜெஸ்ரரில் 13 வயதுச் சிறுமி மீது பாலியல் வெறியாட்டம் போட்ட 9 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே இடத்தில்.. குறித்த நபர்களின் உதவியுடன்.. இன்னொரு சிறுமியும்... 20 வரையான ஆண்களால்.. ஒரே நாளில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கொடுமையும் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்தின் வரலாற்றில்.. உள்ளக ஆட்கடத்தல் மூலம்.. இந்தச் சிறுமிகள் ஏமாற்றப்பட்டு.. வீடுகளுக்கு அழைக்கப்பட்டு.. இலவசமாக.. மதுவும்.. புகையும் வழங்கி.. பலாத்காரம் மூலம்.. பாலியல் வன்முறைக்கு இலக்காக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அனைவரும் பாகிஸ்தான்.. முஸ்லீம்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகள் 25 வயதில் இருந்து 59 வயது வரை பரந்துள்ளனர். பாத…

  24. இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் குறித்து ஆராய்ந்து முக்கியமானதொரு தீர்மானத்தை எடுக்கும் நோக்கில் வட்டமேசை மாநாடொன்றை இன்று புதுடில்லியில் அவசரமாக கூட்டுகின்றது இலங்கை வந்து சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு. ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் அடுத்த கட்ட நகர்வுகள் அணுகு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்கும் முனைப்பில் நடைபெறும் இந்த வட்டமேசை மாநாட்டில் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் பங்குபற்றும் எனத் தெரியவருகின்றது. கொழும்பு வந்து சென்ற குழுவில் இடம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இலங்கை விஜயத்தில் அங்கம் வகிக்காத இதரக்கட்சிகளின் முக்கிய உறுப்பினர்களும் இந்த முக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு தமதுக்கருத்துக்களை முன்வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.