செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
இலங்கையின் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆனந்த ஜெயவர்தன, லிபோசக்ஷன் சத்திரசிகிச்சை மூலம் பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளார். கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாணந்துறையைச் சேர்ந்த 61 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் எவ்வித சிக்கல்களும் இன்றி நலமாக இருப்பதாகவும் வைத்தியர் தெரிவித்துள்ளார். “அபாயங்கள் இருந்தபோதிலும், நாங்கள் 13.5 லிட்டர் கொழுப்பை வெற்றிகரமாக அகற்றினோம், இது மிகப் பெரிய அளவு. சராசரியாக, 4 முதல் 5 லிட்டர்கள் இதேபோன்ற அறுவை சிகிச்சைகள் மூலம் உலகில் வேறு இடங்களில் அகற்றப்பட்டுள்ளன. இவ்வளவு கொழுப்பைக் கொண்ட அரிதான நிகழ…
-
- 0 replies
- 254 views
- 1 follower
-
-
காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – பின்னணியில் புலிக்குட்டி? adminJanuary 12, 2024 யாழ்ப்பாணம் – மண்டைதீவு காவலரண் மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் கைதான இருவர், பிணையில் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் நால்வரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள ஊர்காவற்துறை காவற்துறையினரின் காவலரண் மீது நேற்று முன்தினம் புதன்கிழமை (10.01.24) இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இருவரை காவற்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11.01.24) முற்படுத்தினர். அதன் போது, போதைப்பொருளுடன் நபர்…
-
- 1 reply
- 307 views
-
-
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிகாயவின் பௌத்த தேரர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட “இமயமலை பிரகடனத்திற்கு”க்கு சுவிட்ஸ்ர்லாந்து அரசாங்கம் நிதியளித்தமை தெரியவந்துள்ளது. இலங்கையில் வெளியாகும் பிரதான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய பத்தியில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும், சட்டத்தரணி ஒருவர், இந்த முயற்சி ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பதிலாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலையீட்டுனான இந்த முயற்சிக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தியுள்ளது." …
-
-
- 26 replies
- 2k views
- 1 follower
-
-
கோவா: ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓ பெண் ஒருவர் கோவாவாவில் தனது நான்கு வயது மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுசனா சேத். 39 வயதாகும் இவர் பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைண்ட்ஃபுல் AI ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). இவர் கடந்த சனிக்கிழமை (ஜன.6) அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். திங்கள்கிழமை சுசனா சேத், பெங்களூரு செல்ல டாக்ஸியை ஒன்றை முன்பதிவு செய்யுமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். ஹோட்டல…
-
- 1 reply
- 643 views
- 1 follower
-
-
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டுபாய்க்கு புறப்பட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்துள்ளார். பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வாலிபரின் பெயர், ஏனைய விவரங்களை வெளியிடாத பொலிஸார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்க…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
2024இல் பல நாடுகளில் பெரிய அளவில் சுனாமி, நிலநடுக்கம் ஏற்பட போகிறது என்று பாபா வங்கா கணித்து இருக்கிறாராம்! அவரின் கணிப்பில் அடுத்தடுத்து 2 முக்கியமான சம்பவங்கள் நடந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2024இல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024இல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து தாக்கும் என்றும் இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய போகிறார்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டுக்காரரின் கையால் ஒரு பெரிய ரஷிய தலைவர், கொலை செய்யப்படுவார்.…
-
-
- 1 reply
- 645 views
- 1 follower
-
-
தாதியின் அலட்சியத்தால் 10 பேர் உயிரிழப்பு! தாதியின் அலட்சியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் வைத்திய சாலையிலேயே இச்சம்பவம் இடமபெற்றுள்ளது. குறித்த வைத்திய சாலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் திடீரென ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த வைத்திய சாலையில் பணியாற்றும் தாதியொருவர் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய வலி நிவாரிணியான ஃபெண்டானில் (fentanyl) மருந்தைத் திருடி, அ…
-
- 0 replies
- 172 views
-
-
காத்தான்குடியில் இருந்து ஒரு Satellite 🛰️ தயாரித்து விண்ணுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்? நெனச்சு பாக்ககுரதுக்கே ரொம்ப திரிலிங்கா இருக்கு இல்ல ? என்ன சொல்றீங்க? இது சாத்தியமா? (வெங்காயம், பச்ச கொச்சிக்கா பிரச்சினை வேற போயிகிட்டு இருக்கு எண்டு நீங்க நினைக்கிறத கொஞ்சம் கட்டுப்படுத்தி போட்டு தொடர்ந்து வாசிங்க ) ஆம், இது சாத்தியமே! வாங்க செல்றன். சாட்டிலைட் 🛰️, ராக்கெட் 🚀 என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அமேரிக்காவின் NASA நிறுவனம்தான். ஆனால் அண்மையில் ஈலோன் மாஸ்க்கின் SpaceX நிறுவனம், Russia, China மற்றும் இந்தியாவின் ISRO நிறுவனமும் தனது புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நான் இங்கே பேச முன…
-
-
- 3 replies
- 461 views
-
-
இது விஜயகாந்த் பற்றி வடிவேல் பேசும் காணொளி நான் இதை முழுமையாக பார்த்தபோது வடிவேல் ஓரு காமெடியன். ஆனால் இதை பார்த்து கேட்டு ரசித்து சிரித்து மகிழ்பவர்கள்??? ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் திருநாவுக்கரசு உட்பட...😭 https://www.facebook.com/purush.piramu/videos/392695573178390/
-
-
- 15 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 446 views
- 1 follower
-
-
ஒரேமாதிரியான சூழ்நிலைகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இடம்பெற்ற மரணங்கள் குறித்த விசாரணைகளைசிஐடியினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர்தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்னர் நஞ்சூட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆணினதும் பெண்ணினதும் உடல்களை பொலிஸார் மீட்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒருமதப்பிரிவை சேர்ந்த போதகர் ஒருவரை பின்பற்றியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது - இந்த போதகர் ஹோமகமவில் தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 21 வயது யுவதியின் உடல் யக்கலவில் உள்ள அவரது வீட்டில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அதேவேளை அம்பலாங்கொடையை சேர்ந்த 34 வயது நபர் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த மஹரமக விடுதியில் உயிரிழந்த நிலைய…
-
- 1 reply
- 361 views
- 1 follower
-
-
யாழ் வைத்தியசாலையில் எனது அம்மாவை அவமதித்து விரட்டிய ஊழியர் 😡😡 | Jaffna Hospital Security Problem மக்களது அவலத்தைப் பேசுகின்ற காணொளியாக உள்ளது. தன்னிலை சார்ந்த பதிவாக இருந்தபோதும் அனைத்துலகிலும் இருந்து யாழ் களத்தை பார்ப்பதாலும் பயன்படுத்துவதாலும் இணைத்துள்ளேன். தமிழருக்குத் தமிழரே அவலத்தை கொடுத்தல் சரியானதா? நன்றி - யூரூப்
-
- 0 replies
- 254 views
-
-
கணவரின்(39) ஆணுறுப்பைத் துண்டித்த மனைவி(34) கைது. பிரேசிலின் சாவ் பாலோ அருகே உள்ள அதிபாயாவைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் தனது 39 வயது கணவரின் பிறப்புறுப்பை துண்டித்ததை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கும் அப்பெண்ணின் 15 வயது மருமகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆபத்தான நிலையில் 39வயதுடைய நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
-
-
- 6 replies
- 468 views
- 1 follower
-
-
ஒரு நகரத்தின் அனைத்துமக்களும் ஒரே கட்டிடத்திற்குள் இருந்தால் எப்படி இருக்கும்?அந்தக்கட்டத்திற்குள் ரெஸ்ரோரன்ற்,ஜிம்,பார்க்,ஹாஸ்பிட்டல் என அனைத்துமே இருந்தால் எப்படி இருக்கும்? வேலைக்கு செல்லும்போது ட்ராபிக்கில் அகப்பட்டு நீண்ட நேரம் காத்திருக்கதேவையில்லை ,தியேட்டருக்கு போவது என்றாலும் உடனே சென்றுவிடலாம்,நினைக்கவே மலைப்பாக இருக்கின்றதல்லவா?இதெல்லாம் சாத்தியமா ஏதோ ஹாலிவூட் படமா என எண்ணத்தோன்றுகிறதா? ஆம் இதெல்லாம் பொய் அல்ல உண்மைதான் உலகின் ஒரே பில்டிங்கில் வசிக்கும்மக்களைப்பற்றித்தான் பார்க்கப்போகின்றோம் இந்தவிடயமெல்லாம் வெளி உலகத்திற்கு நீண்ட நாட்களுக்குத்தெரியவே இல்லை ஆனால் அங்குவாழும் ஒரு பெண் தனது டிக்டாக் வீடியோவில் இந்தவிடயங்களைத்தெரியப்படுத்தியிருந…
-
-
- 3 replies
- 624 views
-
-
Published By: DIGITAL DESK 3 14 DEC, 2023 | 03:31 PM யாழ்ப்பாணத்தில், நேற்று புதன்கிழமை (13) இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு , கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த இரட்ணம் அருளானந்தம் (வயது 69) என்பவரே உயிரிழந்துள்ளார். அதேவேளை பலாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு, த…
-
-
- 4 replies
- 656 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 27 DEC, 2023 | 05:08 PM வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் இன்று புதன்கிழமை (27) கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இது மியன்மார் நாட்டில் திருவிழா நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை. https://www.virakesari.lk/article/172575
-
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழில். விபத்தினை ஏற்படுத்தியவர் தற்கொலை! விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. கட்டுவான் மேற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் நேற்று முன்தினம் இரவு குறித்த நபர் பயணித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் விபத்து இடம்பெற்ற இடத்தில் தனது முச்சக்கர வண்டியை கைவிட்டு விட்டு தப்பி சென்ற அந்நபர் மறுநாள் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்…
-
-
- 4 replies
- 708 views
-
-
இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்தமை குறித்து ஆழ்ந்த கவலையை கொண்டுள்ள பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, நத்தார் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப் பயன்படுத்தி ஒரு புதிய கலைப்படைப்பை வெளியிட்டுள்ளார். ராணாவின் கலைப்படைப்பு குழந்தை இயேசுவை இன்குபேட்டரில் காட்டுகிறது. இன்குபேட்டரில் குழந்தை இயேசு வைக்கப்பட்டுள்ளதை காட்டும் இந்த கலைப்படைப்பை பெத்லஹேம் தேவாலயத்தின் முன் காணலாம். குழந்தை இயேசு பெத்லகேமில் பிறந்தார். பெத்லகேம் இன்று பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரைக்கு சொந்தமானது. அத்துடன், பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் வசிக்கின்றனர். காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே போர் நடந்து …
-
- 1 reply
- 246 views
- 1 follower
-
-
மனைவி மீது கொண்ட ஆத்திரத்தில் வீட்டைக் கொளுத்திய கணவன்! மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் ஆத்திரமடைந்த கணவன் வீட்டை தீயிட்டுக் கொழுத்திய சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. கடந்த 23 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன்போது வீடு முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாகவும், எனினும் இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1364023
-
- 2 replies
- 396 views
- 1 follower
-
-
தனியார் உணவகமொன்றில் காசாளராக இருக்கும் உணவக உரிமையாளரின் மனைவியிடம் பரிகாரம் பூஜை செய்வதாக கூறி மிகவும் நூதனமான முறையில் சுமார் 8 பவுணுக்கும் அதிகமான நகைகளை அபகரித்து தலைமறைவாகியுள்ள இரு இந்தியர்கள் குறித்து கல்முனை தலைமையக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் (20) இந்த திருட்டு இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தத் திருட்டு தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பூஜை தொடர்பாக "சம்பவ தினத்தன்று இரண்டு இந்தியர்கள் பரிகார பூஜை தொடர்பாக இருவேறு சந்தர்ப்பங்களில் உணவக உரிமையாளரது மனைவியான பெண்ணிடம் உரையாடியுள்ளனர். இதற்கமைய கு…
-
- 1 reply
- 752 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 19 DEC, 2023 | 04:27 PM யாழ்ப்பாணத்தில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில், நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது. அவ்வாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/172089
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
19 DEC, 2023 | 01:40 PM பாடசாலை மாணவியுடன் காதல் தொடர்பை ஏற்படுத்தி அவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அதனை காணொளிகளாக எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்ட இரு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர் கண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவியாவார். இவர் தனது காதலனுடன் கண்டி பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதுடன் காதலன் இதனை காணொளியாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். பின்னர் காணொளிகளை மாணவியின் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பி வைத்து அச்சுறுத்தி மீண்டும் விடுதிக்கு வரவழைத்து பாலியல் து…
-
- 4 replies
- 730 views
- 1 follower
-
-
தாய்வானில் யுவதி ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட கற்களை வைத்தியர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். சியோ யு என்ற 20 வயது யுவதியின் சிறுநீரகத்தில் இருந்தே 300க்கும் மேற்பட்ட கற்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி நீர் அருந்துவதற்கு பதிலாக வேறு பானங்களை அதிகமாக அருந்தியதன் காரணத்தினாலே அவரது சிறுநீரகத்தில் அதிகமாக கற்கள் உருவாகியுள்ளதாக மருத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/285102
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் வசூலித்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், “இதுபோன்ற ஒன்றைச் சம்பவமே நமக்குத் தெரியும். வெந்நீரோ, குளிர்ந்த நீரோ, இப்படி ஒரு கிளாஸ் தண்ணீருக்குக் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது மிகப் பெரிய அநீதி.. இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் உரிய தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கவலை கொள்கிறோம், அத்துடன், நுகர்வோர் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீருக்கு பணம் வசூலிக்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை.” என அவர…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பந்துல என்ற விவசாயி அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபாய்களை வருமானமாகப் பெற்று மிளகாய் பயிர்ச்செய்கையில் சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது. பந்துல 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய சந்தை மிளகாயின் விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார் இதற்கு முன்னர், மிளகாய் பயிர்ச்செய்கையில் அதிக வருமானம் பெற்ற இரு விவசாயிகளும் திரப்பனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் 50 இலட்சமும் …
-
- 0 replies
- 157 views
- 1 follower
-