Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஐரோப்பாவில் மிகவும் குறைந்த வயதில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்த முதல் பெண்ணாக பிரான்சைச் சேர்ந்த பதினாறு வயதான Julie (16) அறியப்பட்டிருக்கிறாள். “உடல் ரீதியாக Julie எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் இருந்தாள். முதலில் சாதாரண இருமல்தான் அவளிடம் இருந்தது. கடந்த வார இறுதியில் அவளின் நிலைமை மோசமடைந்ததால் திங்கட்கிழமை (23.03.2020) அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். மருத்துவரின் ஆலோசனையின்படி அவளை பாரிஸுக்கு அருகாமையில் உள்ள Longjumeau நகர மருத்துவமனையில் சேர்த்தோம். அவளது நிலை மோசமாக இருந்ததால் அவளை உடனடியாக Paris நகரத்தில் உள்ள Necker வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு வைத்தியர்கள் மேற்கொண்ட அதீத முயற்சி பலனளிக்காமல் Julie புதன்கிழமை இரவு மரணமடைந்து விட்டாள். …

  2. கொழும்பில்... தனியார் வைத்தியசாலையில், மீட்கப்பட்ட கைக்குண்டு – பொலிஸார் வெளியிட்ட தகவல்! கொழும்பு – நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்குரிய மூவர் மீது கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக நாரஹேன்பிட்டி பொலிஸாரும் கொழும்பு குற்றவியல் பிரிவும் விசேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. அத்கமைய வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினரிடமும் கட்டுமானப் பணிகளுக்காக வைத்தியசாலைக்குச் சென்ற சிலரிடமும் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன், வைத்தியசாலையின் சி.சி.ரி.வி காணொளி காட்சிகளையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி…

  3. தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் குட்டி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார். ஆனால் ஒரு வயதுக்கூட ஆகாத கைக்குழந்தையுடன் இளம்பெண் காட்டுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். கொலம்பியாவில் உள்ள சோகோவின் குயிப்டோ என்ற இடத்திலிருந்து நுகுய் என்ற இடத்திற்கு பசிபிக் கடல் வழியாக ஒரு குட்டி விமானம் சென்றது. இந்த விமானம் அல்டோ பவுடோ என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது கடந்த சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை கர்லோஸ் மரியோ செபல்லோஸ் என்ற விமானி ஓட்டிச் சென்றார். இதில் மரியா நெல்லி முரில்லோ (வயது 18) என்ற இளம்பெண் தன் கைக்குழந்தையுடன் சென்றார். இரண்டு என்ஜின் கொண்ட இந்த விமானம் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இத்தகவல் கிடைத்…

    • 0 replies
    • 301 views
  4. உலகில் புதுமையான பல கண்டுபிடிப்புகள் உலகையே கைக்குள் அடங்கிவிட்டதாக பலர் பாராட்டி வரும் அதே வேளையில் முறை தவறி பயன்படுத்தப்படும் இந்த கண்டுபிடிப்புகள் ஆபத்தாக மாறிவிடும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுதான் வருகின்றது. ஆனால், இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் பெரும்பாலும் விபரீதத்தில் தான் முடிகின்றன. சீனாவில் சார்ஜ் போட்டு செல்போன் பேசியதால் வெடித்து சிதறியதில் சிறுவனின் தாடை எலும்பு நொறுங்கியது. சீனாவை சேர்ந்த சிறுவன் சங் பாங் (12) சார்ஜ் செய்து கொண்டு இருந்த போது அந்த நேரத்தில் அவனுக்கு செல்போனில் அழைப்பு வந்தது. எனவே, சார்ஜர் ஆப் செய்யாமல் அப்படியே தனது காதில் வைத்து பேசிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத …

  5. 13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். நாளை (31ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (29ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 5.7% பேர் ஒரு முறையாவது புகைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாணவர்களில…

  6. மதுரை மாவட்டம் பெருமாள்பட்டியில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிசடங்கின் போது உயிர் பிழைத்துள்ளார். பாண்டித்துரை என்பவர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள்‌ கூறியுள்ளனர். இறுதிசடங்கு நடைபெற்ற போது, உறவினர்கள், பாண்டித்துரையின் மார்பில் பலமாக அடித்து அழுதுள்ளனர். அப்போது, பெரு மூச்சு விட்ட பாண்டித்துரை உயிருடன் எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிச்சைக்கு அனுமதித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=154351&category=IndianNews&language=tamil

  7. Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 10:31 AM ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது. அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது. இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன. ஆன…

  8. ஒட்டாவா: கனடாவில் மின்னல் தாக்கியும் உயிருடன் தப்பியவருக்கு லாட்டரியில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் பரிசு விழுந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தைச் சேர்ந்த பீட்டர் மெக்கேத்தி அதிர்ஷ்டக்கார மனிதர் என அறியப்படுகிறார். பீட்டர் மெக்கேத்தி நோவா ஸ்காட்டியாவில் கடை ஒன்றினை பல காலமாக நடத்தி வருகிறார்.சமீபத்தில் பீட்டர் தன்னுடைய கடையில் பணிபுரிபவருடன் சேர்ந்து மூன்று டாலருக்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் அவருக்கு சுமார் நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது.இது மட்டுமின்றி தன்னுடைய கடையிலேயே லாட்டரி டிக்கெட் வாங்கியதால் அதற்கு தனியாக பத்தாயிரம் டாலர்கள் பரிசு கிடைத்துள்ளது.மேற்படி பீட்டரை 14 வயதில் மின்னல் தாக்கி…

    • 0 replies
    • 301 views
  9. கலகொட அத்தே ஞானசார உனக்கு நான் சொல்கின்றேன், உன்னிடம் எந்த தேச பற்றும் இல்லை. உனக்கு விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. முஸ்லிம்கள் மட்டுமா இந்த நாட்டில் பிரச்சினை? பலம் இருந்தால் பேசு என ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். ஜனாதிபதி,பிரதமர் உட்பட இந்த நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய கொள்கலன்களில் போதைபொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டில் இளைஞர்களுக்கு கொடுக்கின்றார்கள். நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் போதை பொருள். இன்று ஒரு காடு இல்லை, அனைத்து காடுகளையும் வெட்டி அழிக்கின்றார்கள். இந்த சிங்கள, பௌத்த அரசாங்கத்தில் மதுபானசாலைகள், சார…

  10. சுடு நீரை சிறுவனின் முகத்தில் ஊற்றிய சித்தி 7 வயது சிறுவன் ஒருவன் சிறிய தாயினால் சுடுநீர் முகத்தில் ஊற்றப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செரண்டிப் (அந்தோணிமலை) தோட்டத்தில் சிறிய தாயொருவர் தனது 7 வயதான மகனின் முகத்திலும் கைகளிலும் சுடுநீரை ஊற்றியுள்ளார். இவ்வாறு பாதிப்புக்குள்ளான சிறுவன் எஸ்.சிவராஜ் (7 வயது ) எரிகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சிறுவனின் தாய் இறந்துவிட்ட பின்னர் சிறுவனின் தந்தை மறுமணம் முடித்துள்ளார். இவர்களின் இருவரிடையே வாழ்ந்து வருகின்ற குறி…

  11. 27 JUN, 2023 | 10:35 AM உத்தர பிரதேசத்தின் காஜிபுர் மாவட்டம், சைத்பூர் நகர் அருகே நசீர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் அவதார். இவரது மகன் சிவசங்கருக்கும் (27), பசந்த் பட்டி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனா என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி மணமகன் குடும்பத்தினர் ரஞ்சனா வீட்டுக்கு சென்றனர். திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்தன. அப்போது மணமகள் குடும்பத்தினர் மணமகன் சிவசங்கரிடம் இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர். திடீரென மணமகள் ரஞ்சனாவின் தங்கை, மணமகனிடம் நமது நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டார், பதில் தெரியாமல் மணமகன் சிவசங்கர் விழித்தார். பிரதமர் மோடியின் பெயர் பட்டி த…

  12. தாம்பத்ய உறவில் ஈடுபட கைதிக்கு அனுமதி தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த நந்தலால் கொலை குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்க…

    • 0 replies
    • 300 views
  13. வட இந்தியாவில் மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் நோய் குணமாகும் என வதந்திச் செய்திகள் வைரலாகி வரும் நிலையில், சீனாவில் புலியின் சிறுநீரைப் பருகினால், முடக்குவாதம், தசைவலி போகும் எனச் சொல்லி அவை விற்பனை செய்யப்படுவது பேசுபொருளாகி உள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Yaan Bifengxia என்ற வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சைபீரிய புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வகை புலியின் சிறுநீரை ஒயினுடன் கலந்து குடித்தால் முடக்குவாதம், தசை வலி, சுளுக்கு போன்ற நோய்கள் குணமாகும் என அந்தப் பூங்காவிற்குள் பாட்டிலில்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதன்மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், சைபீரியன் புலியின் 250 கிர…

  14. கொரோனா பாஸ்போர்ட் ஏன் வழங்கப்படுகின்றது? 22 Views கடந்த ஓராண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று சூழல் உலகெங்கும் கோடிக்கணக்கான மக்களின் பயணத்திட்டங்களை முற்றிலுமாக சீர்குலைத்திருக்கிறது. இந்த சூழலில், கொரோனா பாஸ்போர்ட் என்ற சொல்லாடல் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றது. கொரோனா பாஸ்போர்ட் என்றால் என்ன? கொரோனா பாஸ்போர்ட் என்பது கொரோனா பெருந்தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்தியிருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா பாஸ்போர்ட் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. இது டிஜிட்டல் முறையில் வழங்கப்படும் எனவும் அல்லது நடைமுறையில் உள்ள பாஸ்போர்டுடன் ஒரு சான்றிதழாக வழங்கப்படும் எனவும் சொல்லப்படும் நிலை…

  15. தடுப்பூசி பெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போர்த்துகீசிய சுகாதார பணியாளர் உயிரிழப்பு! ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு போர்த்துகீசிய சுகாதார பணியாளர் இறந்துள்ளார். 41 வயதான சோனியா அசெவெடோ, புத்தாண்டு தினத்தன்று வீட்டில் ‘திடீர் மரணம்’ அடைந்தார். பிரேத பரிசோதனை இன்று அல்லது நாளை பிற்பகுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போர்டோவில் உள்ள போர்த்துகீசிய ஆன்காலஜி இன்ஸ்டிடியூட்டில் குழந்தை மருத்துவ துறையில் பணிபுரிந்த இருவரின் தாய், தடுப்பூசி போட்ட பிறகு எந்தவிதமான பாதகமான பக்க விளைவுகளையும் சந்தித்ததாகக் கூறப்படவில்லை. அசெவெடோவின் தந்தை அபிலியோ அசெவெடோ கூறுகையில், ‘அவள் நன்றாக இருந்தாள். அவளுக்கு எந்த உடல்நலப…

  16. திருமணத்தில் பங்கேற்ற 100 க்கும் மேற்பட்டோர் பலி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நைஜீரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குவாரா பகுதியில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றுவிட்டு நேற்றைய தினம் அதிகாலை படகில் வீடு திரும்பியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். https://athavannews.com/2023/1334784

  17. மனிதர்கள் அவ்வப்போது முகத்தைத் தொடுவது ஒரு பொதுப் பழக்கம். முகத்தைத் தொடுதல் என்பது தாடியைத் தடவிக்கொடுப்பது, நெற்றியில் கைவைப்பது, வியப்பிலோ அதிர்ச்சியிலோ வாயில் கைவைப்பது, மூக்கை நோண்டுதல், விரல் நகத்தைக் கடித்தல், கண்ணைக் கசக்குதல் என்று பல்வேறு செயல்களை உள்ளடக்கியது. தற்போது கரோனா கொள்ளைநோயின் பரவலையொட்டி முகத்தில் கை வைக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொள்ளும்படி வலியுறுத்துகிறார்கள். கரோனா தொற்று உள்ள ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் அவரைச் சுற்றியுள்ள பரப்பில் போய் அந்தக் கிருமி படியும். அதில் கை வைக்கும் இன்னொருவர் தன்னிச்சையாகத் தனது வாய், மூக்கு, கண்ணுக்குக் கையைக் கொண்டுபோவதால் கரோனா வைரஸ் அவருக்கும் தொற்றிக்கொள்ளும். இதனால்தான், முகத்தைத் தொடக் கூடாது என்பது கரோன…

  18. கோகுலம் விருந்தினர் மாளிகையில் நன்கொடையைச் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கு அவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படும். திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், எல்லோரும் 40 அடி தள்ளி நின்றுதான் சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆனால், இப்போது 10,000 ரூபாய் பணம் கட்டினால் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை அருகில் நின்று தரிசிக்கலாம். தீபாவளி இனிப்பாக இனிக்கும் இந்தச் செய்தியை விரிவாகப் பார்ப்போம். Tirupati திருமலை திருப்பதி வேங்கடசப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு, சர்வ தரிசனம், நேர ஒதுக்கீட…

    • 0 replies
    • 300 views
  19. 30 ஜனவரி 2024 வடக்கு இலங்கையில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றில் யானை கூட்டம் நீந்திச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த பெரிய விலங்குகள் உண்மையிலேயே சிறப்பாக நீந்தக் கூடியவை. மனிதன் தவிர்த்து, பெரும்பாலான பாலூட்டிகளைப் போலவே, யானைகளும் இயற்கையிலேயே நீச்சல் திறன் கொண்டவை... அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் நீரில் மிதப்பதற்கு போதுமான சக்தி யானைகளிடம் உண்டு. கால்களை துடுப்பாகவும் துதிக்கையை சுவாசிப்பதற்காகவும் யானைகள் பயன்படுத்துகின்றன. வலிமையான கால்கள் மற்றும் துதிக்கையை கொண்டிருப்பதால் யானைகளால் வெகு தூரம் வரை நீந்திச் செல்ல முடியும். 2017-ல் கடலில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு யானைகள் நீந்திச் செல்வதை இலங்கை கப்பற்படை கண்டறிந்தது. அடித்துச…

  20. இளைஞன் ஒரு­வ­ருடன் ஏற்­பட்ட காதல் தொடர்பைப் பயன்­ப­டுத்தி யுவதி ஒருவர் 25 பவுண் தங்க நகை­களை அப­க­ரித்­துள்ளார். இச்­சம்­பவம் தாவடி பத்­தி­ர­காளி கோவி­ல­டி­யி­லுள்ள வீடொன்றில் கடந்த 15ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. யாழ்.ஆசாட் வீதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐந்து நாட்கள் தாவ­டி­யி­லுள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்­துள்ளார். இவர் இளைஞன் ஒரு­வரை தொலை­பேசி மற்றும் இணையம் மூல­மாகக் காத­லித்­துள்ளார். இத்­தொ­டர்பைப் பயன்­ப­டுத்தி தாவ­டியில் வீடொன்றில் தங்­கி­யி­ருந்த குறித்த பெண் கடந்த 15ஆம் திகதி மாலை மயக்க மருந்தைத் தெளித்து வீட்­டி­லுள்­ள­வர்­களை தூக்­கத்தில் ஆழ்த்­திய பின்னர் அலு­மா­ரி­யி­லி­ருந்த தாலிக்­கொடி, நெக்லஸ், சிமிக்கி தோடு, பதக்கச் சங்­கிலி ஆகிய தங்க நகை­களை அ…

  21. உலகிலேயே மிகவும் குள்ளமான பசு ; ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண கூடும் மக்கள் வங்காள தேசத்தில், 51 செ.மீ., உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் ஊரடங்கை பொருட்படுத்தாமல் காண வருகின்றனர். பதிவு: ஜூலை 08, 2021 12:19 PM டாக்கா: வங்காள தேச தலைநகர் டாக்காவுக்கு அருகே 30 கிலோமீட்டர் தொலைவில் சாரிகிராமில் உள்ள ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணையில் ஒரு பசு உள்ளது. அதனை பார்க்க சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் திரண்டு வருகின்றனர். ராணி என பெயரிடப்பட்டு உள்ள அந்த பசு 51 சென்டிமீட்டர்நீளம் மற்றும் 26 கிலோகிராம் (57 பவுண்டுகள்) மட்டுமே எடையுள்ளது. இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என, கூறப்படுகிறது.கின்னஸ் உலக சாதனைகளில் மிகச்சிறிய பசுவை விட இது 10 சென்…

  22. திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர். திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளிக்க முன்வந்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க தொழில் அதிபர் ஒருவர் முன்வந்து இருப்பதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது ”தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார். இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 140 கோடியாகும். புதிதாக தொடங்கிய நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதால் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்து இருக்கிறார். தனது நிறுவனத…

  23. பங்களாதேசில் கடந்த ஆண்டு, இந்து மதத்தைச் சேர்ந்தவரைக் கொலை செய்த வழக்கில், எட்டு பேருக்கு மரண தண்டனையும், 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது.பங்களாதேசில், கடந்த ஆண்டு, டிச., 9ம் தேதி நடந்த, நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் போது, ஆளும், "அவாமி லீக்' கட்சியைச் சேர்ந்தவர்கள், தாகா நகரில், பகதூர் ஷா பூங்காவில், விஸ்வஜித் என்பவரை கொலை செய்தனர். இந்த சம்பவம், பங்களாதேசில் "டிவி'க்களில், நேரடியாக ஒளிபரப்பானதையடுத்து, கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம், இந்த வழக்கை, தாகா நகர நீதிபதி, நிஜாமுல் ஹக், 10 நிமிடங்களில் விசாரித்து முடித்து, தண்டனை வழங்கினார். பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், விஸ்வஜித்தை கொலை செய்த, ஆளும் கட்சியி…

  24. காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த யுவதி; காதலனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உடதியலும பிரதேசத்தில் காட்டு யானைத் தாக்கியதில் யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (05) பண்டாவரளை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தி உள்ளார். அத்தோடு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரவில் தங்கிய இளம் ஜோடி கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மாலை கொஸ்லாந்த, தியலும நீர்வீழ்ச்சியின் உடதியலும பகுதிக்கு பிரவேசித்த குறித்த இளம் ஜோடி இரவில் தங்க முற்பட்டுள்ளனர். இதன்போது இளம் யுவதி காட்டு யானை தாக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.