Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு இருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்! ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சிகளில் வெல்லக்கூடியவர் யார் என்பதை நிலைநிறுத்துவதற்கா…

  2. 47 ஆவது மாடியிலிருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்; அமெரிக்காவில் சம்பவம் அமெரிக்காவில் 47 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்தவர் உயிர் பிழைத்துள்ளார். நியூயோர்க்கைச் சேர்ந்த அல்சிடிஸ் மொரினோ (வயது 37) அடுக்குமாடிக் குடியிருப்பில் ஜன்னல்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆறுமாதங்களுக்கு முன் நியூயோர்க்கிலுள்ள அடுக்குமாடிக் கட்டிடத்தில் தனது சகோதரருடன் சேர்ந்து ஜன்னல்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். உயரமான கட்டிடங்களை சுத்தம் செய்யும்போது "லிப்ட்' போன்ற கருவியை இவர்கள் பயன்படுத்துவது வழக்கம். அன்றும் அதேபோல் அந்தக் கருவியில் நின்றவாறு கட்டிடத்தின் 47 ஆவது மாடியிலுள்ள ஜன்னல்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்கள் ந…

    • 0 replies
    • 903 views
  3. நித்தியானந்தாவைப் பதவி விலக்கத் தயார் நித்யானந்தரை விட சிறந்தவரை காண்பித்தால் அவரை இளைய ஆதினம் பதவியில் இருந்து நீக்கத் தயார் என்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தெரிவித்தார். கொடைக்கானல் அட்டுவம்பட்டி ஸ்டெர்லிங் ரிசார்ட்டில் 21 நாள் யோகா தியான பயிற்சி முகாம் நித்யானந்தாவின் தியான பீடம் சார்பில் நடத்தப்படுகிறது. முகாமினை மதுரை ஆதினம் அருணகிரிநாதர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நித்யானந்தா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொடைக்கானலில் நடைபெறும் இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் திட உணவு உட்கொள்ளாமல் 21 நாட்கள் யோகா பிராயணம் உள்ளிட்டவரை செய்வர். 434 பேர் வெவ்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொள்கின்றனர். மதுரை…

  4. 13 Nov, 2025 | 05:08 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்கள் பிரச்சினையால் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர், 'திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார். தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அத…

  5. பிரான்சில் அரசியற் தஞ்சம் கோரி அது நிராகரிக்கப்பட்ட நிலையிலுள்ள இளைஞர்களின் நிலைமையைத் தமக்கு சாதகமாக்கப் பயன்படுத்தி சிலர் அரசியல் மற்றும் பண இலாபங்களை அடைவதற்கு எத்தனிப்பதாக தெரியவருகின்றது. இவ்வாறு அவர்களிடம் செல்கின்றவர்களின் சுயவிபரங்கள், முகவரிகள் என்பவை பெறப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. வதிவிட உரிமையற்று நிற்கும் இளைஞர்களின் நிர்க்கத்தியான நிலைமையைப் பயன்படுத்தித் தமது கட்சி ஆட்சேர்ப்பில் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். அது மட்டுமல்லாது அலுவலக வாடகை, வழக்கறிஞர் கட்டணம் எனக் கூறிப் பெருந்தொகையான கட்டணங்கள் அறவிடுவதற்கும் முயற்சி எடுக்கின்றனர். பிரான்ஸ் நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு அமைய ஒருவரிடம் தனிப்பட்ட விபரங்களைச் சேகரிப்பது சட்டப்படி குற்றமாகும். இளைஞர்களே! அ…

  6. வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானை பிஸி என்ற நாய் காப்பாற்றியுள்ளது.சேலம் வாழப்பாடி அருகே அக்ரஹாரம் வைத்தி படையாச்சித் தெரு, ஆடு அடிக்கும் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50). கூலித் தொழிலாளியான இவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்று வளர்த்து வந்தார். இதற்கு பிஸி என்று பெயர் வைத்திருந்தார்.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டு விட்டு வெளியே சென்று விட்டார். வெகு நேரமாகியும் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வராததால் பிஸி தேடிச் சென்றுள்ளது. அப்போது, அந்த பகுதியில் உள்ள தனியார் கயிறு திரிக்கும் கம்பெனி அருகே ரவிச்சந்திரன் அமர்ந்திருப்பதை பிஸி கண்டுபிடித்து அவர் அருகில் சென்றது. ஆனால் ரவிச்ச…

  7. விஷம் அருந்திய ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல் தலைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி! ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை 44 வயதான அலெக்ஸி நவல்னி, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் பயணித்தார். இதன்போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நவல்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘விஷம் அருந்தியதால் மயக்கமடைந்த நவல்னி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித…

  8. பாதுகாப்பாக 10 லட்சம் மைல் . Thursday, 28 May, 2009 01:42 PM . லண்டன், மே 28: பிரிட்டனைச் சேர்ந்த பஸ் டிரைவர் ஒருவர் பாதுகாப்பான டிரைவர் விருதை வென்றிருக்கிறாராம். . பீட்டர் நீடின் என்னும் அந்த டிரைவருக்கு 63 வயதாகிறதாம். கடந்த 40 ஆண்டுகளாக அவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்தகாலத்தில் அவர் 10 லட்சம் மைல்களுக்கு மேல் பஸ் ஓட்டி சென்றுள்ளார். இதுவரை ஒருமுறை கூட விபத்துக்குள்ளான தில்லையாம். அவருடைய பஸ்சில் ஒரு சிறுகீறல் கூட விழுந்ததில்லையாம். அந்த அளவுக்கு மிகவும் கவனத்தோடு பஸ் ஓட்டி வந்திருக்கிறார். இதனையடுத்து அவருக்கு பாதுகாப்பான டிரைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. நன்றி மாலைசுடர்

    • 0 replies
    • 708 views
  9. வைத்தியசாலைக்கு வரும் பெண்களை நிர்வாணப்படம் பிடித்த பெண் கைது வைத்தியசாலைக்கு வரும் பெண்களை நிர்வாணப் புகைப்படமெடுத்த நீர்கொழும்பு, தலாதூவ, கடோல்கலே பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் மூன்றாம் இலக்க விடுதியில் ஈ.சி.ஜி. பரிசோதனைக்கு செல்வதற்காக தயாராகும் பெண்கள் தமது ஆடைகளை களையும் போது, சந்தேகநபரான குறித்த பெண் தனது கையடக்க தொலைபேசியால் படம்பிடித்துள்ளார். இதனை கண்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வைத்தியசாலை பொலிஸார் குறித்த பெண்ணை பரிசோதித்த போது அவரின் செல்லிடத் தொலைபேசியில் சில பெண்கள் மேலாடையின்றி இருக்கும் படங்கள் இருந்துள்ளன. இதனை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப…

  10. Published By: RAJEEBAN 18 APR, 2023 | 09:03 AM அமெரிக்காவில் வசிக்கும் சீன அதிருப்தியாளர்களை மௌனமாக்கும் துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு சீன முகவர்களை கைதுசெய்துள்ளதாக அமெரிக்காவின் எவ்பிஐ தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் சீன அரச எதிர்ப்பாளர்களை துன்புறுத்திய சீன முகவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அறிவிக்கப்படாத பொலிஸ் நிலையங்களை நடத்தி வந்தனர் என நியுயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். லுஜியான்வாங் மற்றும் சென்ஜின்பிங் இருவரும் நியுயோர்க் நகரின் சைனாடவுனில் பொலிஸ்நிலையமொன்றை நடத்திவந்தனர். அமெரிக்க பிரஜைகளான இருவரும் சீன அரசாங்கத்தின் முகவர்களாக செயற்பட்டனர் நீதிக்கு இட…

  11. சண்டிகர் வியாபாரி தாராளம்:மனைவிக்கு காதல் தின பரிசு; காரின் விலை 1. 5 கோடி நம்பரின் விலை 9 லட்சம்

  12. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹவ்ஸ்டன் நகரைச் சேர்ந்தவர் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட். 20 வயது வாலிபரான இவருக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் மீது தான் வைத்திருக்கும் மட்டில்லாத பாசத்தை உலகத்துக்கு உணர்த்தும் விதமாக, கடுமையான வலியையும் பொருட்படுத்தாமல் மகனின் முகத்தை இவர் தனது இடது தாடையில் பச்சையாக குத்திக் கொண்டுள்ளார். தனது இந்த புதிய தோற்றத்தை சமீபத்தில் ‘பேஸ்புக்’ பக்கத்தில் கிரிஸ்டியன் ஸெக்ரிஸ்ட் வெளியிட்டுள்ளார். இதற்கு நண்பர்கள் தரப்பில் இருந்து பெருத்த வரவேற்பும் ஒருசிலரிடம் இருந்து அதிருப்தியும் கிடைத்துள்ளது. இப்படி, உன் முக அழகையும், அமைப்பையும் கெடுத்துக் கொண்டால் வேலைவாய்ப்பு, பாஸ்போர்ட், விசா போன்றவற்றில் எதிர்காலத்தில் உனக்…

    • 0 replies
    • 454 views
  13. ஏமாற்றிய மனைவிக்கு கணவன் வழங்கிய பரிசுதன்னை ஏமாற்றிய மனைவிக்கு கணவனொருவர் அதிர்ச்சி வைத்தியம் வழங்கியுள்ளார். குறித்த பெண்ணின் பிறந்தநாள் அன்றே அவரது கணவன் இதனைச் செய்துள்ளார். பரிசு வழங்குவதாக தன் மனைவியை அழைத்து வந்து, அவரது உடமைகளை பொதி செய்து வைத்திருப்பதை இக்காணொளியில் காணக்கிடைக்கின்றது. இணையத்தில் தீயாக பரவிவரும் இக்காணொளியை நீங்களும் பாருங்களேன். - See more at: http://www.canadamirror.com/canada/46542.html#sthash.6JtiI4rn.dpuf

    • 0 replies
    • 231 views
  14. ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் பரபரப்பு [17 - March - 2008] ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு 3200 பெண் வெள்ளைச் சுண்டெலிகள் தேவையென்ற விளம்பரத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கு இவ்வாறு சுண்டெலிகள் தேவை என்றும் அவை ஒவ்வொன்றும் 18 கிராமிற்கு கூடுதலாக இருக்கக்கூடாதென்றும் விலைமனுக் கோரப்பட்டிருந்தது. இவ்வாறு ஜனாதிபதி மாளிகையின் அறிவித்தலால் ஜனாதிபதி மாளிகைக்கு எதற்கு சுண்டெலிகள், எதற்கு பயன்படுத்தப் போகின்றார்கள் என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இவ் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகையின் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்; எமது இவ் அறிவிப்புபற்றி ஒவ்வொருவரும் வியப்பாகக் கேட்கின்ற…

    • 0 replies
    • 881 views
  15. மெதமுலன ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் நவலோகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக் காலமாக திருட்டு தேங்காய்களை உடைத்தமையின் பிரதிபலனே இதற்கு காரணம் என வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். வேறு சிலர் இது கிருலப்பனை மைதானத்தின் பிரதிபலன் என குறிப்பிட்டுள்ளனர். திருட்டு தேங்காய் உடைத்தமை, தினேஷ் குணவர்தனவின் பணம் திருடப்பட்டமையில் இருந்து நாமல் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளமை வரை “திருடர்களுக்காக திருடர்கள்” குழுவினருக்கு பாரிய தோஷம் ஏற்பட்டுள்ளமையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நாமலுக்கு ஏற்பட்…

    • 0 replies
    • 379 views
  16. 25 ஆயிரம் சிகரட்டுக்களுடன் சீன பெண்கள் கைது சட்டவிரோதமான வெளிநாட்டு சிகரட்டுகளை தம்வசம் வைத்திருந்த இரண்டு சீன பெண்கள் கொழும்பு – கல்கிஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 25 ஆயிரத்து 600 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டது. https://newuthayan.com/25-ஆயிரம்-சிகரட்டுக்களுட/

  17. உறவுகளே! உண்மையைக் காக்க – உரிமையை வென்றெடுக்க ஒன்றாகி உடன் செயற்படுவோம் வாரீர்! உறவுகளே– உண்மையைக் காக்க – உரிமையைப் வென்றெடுக்க – ஒன்றுபட்டு செயற்படுவோம் -சிறிலங்கா அரசுகளின் – ஈழத் தமிழினத்துக்கு எதிரான உண்மை நிலை தெரியாதவர்கள் -அரசியல் வரலாறு புரியாதவர்கள் - தமிழ் இனத்திற்குக் – களங்கத்தை – பங்கத்தை –மக்கள் மத்தியில் குளப்பத்தை – ஏற்படுத்துகின்ற கருத்துக்கள் வெளியிடுவதை உடன் நிறுத்துமாறு வேண்டுகின்றோம் - தலைவர்களே! தமிழ் மக்களின் உரிமைக்காக உழைப்பவர்கள்தானே நீங்கள்? நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் – எந்த அமைப்பிலிருந்தாலும் – தமிழினத்தின் உரிமைகளை வென்றெடுக்க – எமது விட்டுக் கொடுப்புக்களின் ஊடாக ஒன்றுபடுவோம் - எமது உரிமைபெற்ற – பாதுகாப்பான – வாழ்வுக்காக- அ…

  18. உலகின் அதிக எடையுள்ள பெண் காலமானார்! உலகில் அதிக எடை உள்ள பெண், இமான் அஹமது அப்துல்லாடி. எகிப்து நாட்டைச் சேர்ந்த 37 வயதான இமான் இன்று அதிகாலை உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்தினார். எகிப்தில் இருந்து கிட்டத்தட்ட 500 கிலோ எடையோடு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா வந்தார் இமான். அவருக்கு 'பேரியாட்ரிக் சர்ஜரி' (Bariatric Surgery) எனப்படும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், கிட்டத்தட்ட 250 கிலோ வரை எடை குறைந்தார் இமான். ஆனால், எடை குறைப்புக்குப் பிறகு அவர் மிகவும் மோசமடைந்துவிட்டதாக தகவல் வெளியானது. பல்வேறு உடல்நலக் கோளாறு காரணமாக அபுதாபியில் இருக்கும் புர்ஜீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இமான் கால…

  19. விபசார நடவடிக்கைகளுக்காக தயாராக இருந்த பிரபல சிங்கள நடிகை ஒருவர் உட்பட 6 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பஹா பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பஹா, கிடகம்முல்ல பகுதியில் ஏற்பட்ட இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்களிடம் இருந்து ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள் மற்றும் மதுபான போத்தல்கள் பல மீட்கப்பட்டுள்ளன. குறித்த நடிகை சிங்கள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர். இ…

  20. Published By: SETHU 24 MAY, 2023 | 10:59 AM வெள்ளை மாளிகையின் பாதுகாப்புத் தடைகள் மீது மோதிய லொறியின் சாரதி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வொஷிங்டன் டிசி நகரிலுள்ள வெள்ளை மாளிகையின் பாதுகாப்புத் தடைகள் மீது உள்ளூர் நேரப்படி திங்கள் இரவு ட்ரக் வண்டியொன்று மோதியது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாகனத்தை பொலிஸார் ஆராய்ந்தபோது, ஹிட்லர் தலைமையிலான நாஸிகளின் சுவஸ்திகா பதாகையொன்று அதில் காணப்பட்டது, இம்மோதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இவ்வாகனத்தின…

  21. கனடா, அமெரிக்கா இரண்டையும் இணைக்கும் அம்பாஸ்டர் பாலத்தை பழுது பார்க்கும் வேலையை அவர் செய்து கொண்டிருந்தார். சடுதியாக நிலை தவறி 50 மீற்றர் கீழே இருந்த Detroit ஆற்றில் விழ ஆரம்பித்தார். கனடா ஒன்ராரியோவைச் சேர்ந்த ஸ்பென்சர் கடந்த வாரம் (12.07.2023) பாலத்தைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது தனது பிடி தவறியதால் ஆற்றில் விழுந்து விட்டார். இதைக் கவனித்த அஞ்சல் ஊழியர்கள் உடனடியாகத் தங்களது படகை எடுத்துக் கொண்டு விபத்து நடந்த இடத்துக்குப் பயணித்தார்கள். பூங்காவில் இருந்த சுமார் 20 பேர் ஸ்பென்சர் விழுந்த இடத்தை கரையில் இருந்தே சுட்டிக் காட்டியதால், அஞ்சல் ஊழியர்கள் அவர் ஆற்றில் விழுந்த இடத்தை சுலபமாக அடையாளம் கண்டு அவரைக் காப்பாற்றித் தங்கள் படகில் ஏற்றிக் கொண்டார்கள். …

  22. அமெரிக்க வாழ் இந்தியர் சங்கீதா பாட்டியா. இவர் ஒரு விஞ்ஞானி ஆவார். இவர் செயற்கையாக மனித கல்லீரல் உருவாக்கியுள்ளார். நோய்களை குணமாக்க எந்த வகையான மருந்து பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்த செயற்கை கல்லீரல் மூலம் சோதனை நடத்த முடியும். இதற்காக அவருக்கு 2015–ம் ஆண்டுக்கான ‘ஹெனீஷ் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.1 கோடியே 50 லட்சம் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மசாசூசெட்வ் தொழில் நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இவர் செயற்கை கல்லீரலுக்கு மலேரியா நோய் சிகிச்சைக்கான மருந்தை வழங்கி முற்றிலும் குணமடைய செய்துள்ளார். - See more at: http://www.canadamirror.com/canada/41803.html#sthash.LrDA60q0.dpuf

    • 0 replies
    • 291 views
  23. 13 வருடங்களுக்கு பிறகு கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த திருமண மோதிரம்! கனடாவில் சுமார் 13 வருடங்களுக்கு முன்னால் காணாமல் போன திருமண மோதிரம் ஒன்று கரட்டில் இருந்து மீண்டும் கிடைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் அல்பெர்ட்டா பகுதியில் நார்மன் மற்றும் மேரி க்ராம்ஸ் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 1951ல் திருமணம் இடம்பெற்றது. நார்மன் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர் என்பதால் தனது வீட்டுக்கு பின்புறம் பெரிய காய்கறி தோட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். மேரியும் அவரோடு சேர்ந்து பணிபுரிவது வழக்கம். 2006 ஆம் ஆண்டளவில் மேரி தோட்டப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது தான் அணிந்திருந்த மோதிரம் காணாமல் போனமை பற்றி அறிந்தார். தோட்ட…

  24. ஐரோப்பிய அரச குடும்பத்தினர் பயன்படுத்திய பொக்கிஷங்கள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகத்தில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள பொருட்கள் 1550ம் ஆண்டில் இருந்து 1750ம் ஆண்டுவரை அரச குடும்பத்தினர் பயன்படுத்தியவை. இதில், உலகின் மிக பிரபலமான பச்சை வைரம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓவியம் வரையப்பட்ட 15 அடி நீள பெஞ்ச், அச்சு இயந்திரம், அலகுசாதனப் பொருட்கள் பொன்ற 170-க்கும் மேற்பட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை, நாளை முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.polimernews.com/dnews/89982/ஐரோப்பிய-அரசகுடும்பத்தினர்பயன்படுத்தியபொக்க…

    • 0 replies
    • 245 views
  25. நிலாவில் நீண்ட தூரம் நடந்த சாதனையாளர் எட்கரின் மரணம்... வாஷிங்டன்: நிலாவில் கால் பதித்து நடந்த 6வது வீரர் என்ற பெருமைக்குரிய அமெரிக்க விண்வெளி வீரர் எட்கர் மிட்செல் புளோரிடாவில் காலமானார். கடந்த 1971ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி அப்பல்லோ 14 விண்கலம் மூலம் எட்கர் மிட்செல் (85) நிலாவிற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவருடன் ஆலன் ஷெப்பேர்டு என்ற வீரரும் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் நிலாவில் கால் பதித்தனர். அத்துடன் நிலாவில் மிக நீண்ட தூரம் நடந்து சாதனை படைத்தவர்கள் என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு. இதன்மூலம் நிலாவில் கால் பதித்து நடந்த 6-வது விண்வெளி வீரர் என்ற பெருமை எட்கருக்குக் கிடைத்தது. இது மட்டுமின்றி 94 பவுண்ட் எடைகொண்ட சந்திர மண்டல பாறைகள்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.