Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 14 SEP, 2023 | 09:52 AM மெக்சிக்கோ வேற்றுகிரகவாசிகளினது உடல்கள்என தெரிவிக்கப்படும் உடல்மாதிரிகளை காட்சிப்படுத்தியுள்ளது. வேற்றுகிரகவாசிகளினது ஆயிரம்வருடத்தைய உடல்மாதிரிகளை காட்சிப்படுத்தியுள்ளதாக மெக்சிக்கோதெரிவித்துள்ளது. மெக்சிக்கோ காங்கிரஸின் யுஎவ்ஓக்கள் குறித்த விசாரணையிலேயே வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வேற்றுகிரகவாசிகளினது உடல்கள் என தெரிவிக்கப்படும் இந்த உடல்கள் குஸ்கோ பெரு ஆகிய சுரங்கங்களில் கண்டுபிடிக்கப்பட்டன என தெரிவித்துள்ள மெக்சிக்கோ அவற்றை மெக்சிக்கோவின் தேசிய தன்னாட்சி பல்கலைகழகம் கார்பன் பகுப்பாய்விற்கு உட்படுத்தியது எனவும் குறிப்பிட்டுள்ளது. மனிதர்களை விட உருவ…

  2. Published By: RAJEEBAN 12 SEP, 2023 | 03:28 PM துருக்கியின் மிகவும் ஆழமான குகைக்குள் ஒரு வாரகாலமாக சிக்குண்டிருந்த அமெரிக்க பிரஜை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். செப்டம்பர் இரண்டாம் திகதி குகைக்குள் சிக்குண்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட மார்க் டிக்கேயை மீட்பதற்கான நடவடிக்கைகளில் 150 பேர் ஈடுபட்டனர். குறிப்பிட்ட குகையில் ஒரு புதிய பாதையை உருவாக்குவதற்காக குழுவொன்றை வழிநடத்திச்சென்றவேளை இரப்பை குடல் இரத்தப்போக்கால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய கடினமான நிலத்தடி மீட்பு நடவடிக்கை இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தென்பகுதியில்உள்ள மோர்கா சிறையிலேயே இந்த மீட…

  3. ஒரு பெரிய கொள்ளை ஒன்றை மிக எளிதாக நடத்த முடியுமா? யேர்மனி போட்ஸ்டாம் நகரில் அப்படி ஒரு கொள்ளைச் சம்பவம் 02.09.2023 அன்று நடந்திருக்கிறது. ஒரு கொள்ளை நடந்தது என்றால், அங்கே துப்பாக்கிச் சூடுகள், குண்டு வெடிப்புகள், கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பித்தல் என்று பல தீரச் செயல்கள் இருக்கும். இப்படியான சம்பவங்களை எத்தனை சினிமாவில் பார்த்திருப்போம்.ஆனால் நடைமுறையில் வேறுவிதமாக நடந்திருக்கிறது. போட்ஸ்டாமில் உள்ள பணப் போக்குவரத்து நிறுவனமான Prosegur இன் பணியாளர் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்த நிறுவனத்தில் இருந்து மிக எளிதாக ஆறு மில்லியன் யூரோக்களை கொள்ளை அடித்துச் சென்றிருக்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளை நடந்தது 2ந்…

    • 1 reply
    • 356 views
  4. அண்மையில் நிகழ்ந்த ஜி 20 மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு வைக்கப்பட்ட நாடுகளை குறிப்பிடும் பலகையில்.. மோடிக்கு பாரத் (BHARAT) என்று குறிப்பிட்டு நாட்டுப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அப்ப மோடி ஹிந்தியாவின் சார்ப்பாக ஜி20 இல் கலந்து கொள்ளவில்லையா..??! அல்லது ஹிந்தியாவை மோடி பெயரளவில் ஒழித்துக்கட்டி விட்டாரா..??! https://www.bbc.co.uk/news/world-asia-india-66763836

  5. ஒரே ஆண்டில் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை படைத்த சினிமா ஆர்வலர் சமீபகாலமாக பல்வேறு துறைகளிலும் கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே வருகிறது. அந்த வகையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். 32 வயதான இவர் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 100 முதல் 150 படங்கள் வரை தியேட்டரில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக அங்குள்ள ரீகல் சினிமாஸ் தியேட்டரில் கடந்த ஆண்டு ‘…

  6. ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நடைபெற்ற ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பில், இலங்கையர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் (சுமார் 176 கோடி) பரிசுத்தொகையை வென்றுள்ளார். ‘Big Ticket’ அதிர்ஷ்டலாப லொத்தர் சீட்டிழுப்பு அண்மையில் நடத்தப்பட்டதுடன் இதில் இலங்கையை சேர்ந்த துரைலிங்கம் பிரபாகர் பரிசுக்குரியவரானார். 16 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள அவர், டுபாயிலுள்ள நிறுவனமொன்றில் பணியாற்றுகின்றார். கடந்த 5 வருடங்களாக வெற்றியை எதிர்பார்த்து லொத்தர் சீட்டுகளை வாங்கிவந்த துரைலிங்கம் பிரபாகர், இந்த வெற்றிக்குரிய லொத்தர் சீட்டை கடந்த ஒகஸ்ட் மாதம் ஒன்லைன் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார். இந்த வெற்றி தொடர்பில் பிரபாகரின் நண்பரிடம் வ…

  7. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள தனியார் தொடக்க பள்ளி ஒன்று, மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகு தூங்குவதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்தது. இதுகுறித்து பெற்றோர்களுக்கு பள்ளி சார்பில் தகவல் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அதில் குழந்தைகள் பள்ளி மேசையில் (டெஸ்க்) தலை வைத்து தூங்குவதற்கு இந்திய பண மதிப்பல் 2,275 ரூபாய் செலுத்த வேண்டும். அதேவேளையில் வகுப்பறை தரையில் தூங்குதவற்கு 4,049 ரூபாய் செலுத்த வேண்டும். மிகவும் வசதியாக பெட்டில் (மெத்தை) தூங்க வேண்டுமென்றால் 7,856 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த தகவலை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் தூங்க வ…

  8. வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்தில் யாழ்.பல்கலை மாணவர்கள் இருவர் கைது adminSeptember 7, 2023 வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் எனும் குற்றச்சாட்டில் , யாழ்ப்பாண பல்கலைக்கழக பெரும்பான்மையின மாணவர்கள் இருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் எனவும் , போதைப்பொருள் கொள்வனவுக்காகவே வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சூழல் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்று இருவர் வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த காவல்துறையினர் கொள்ள…

    • 1 reply
    • 311 views
  9. நடிகை திவ்வியாவுக்கு நடந்தது என்ன? அதிர்ச்சியில் ரசிகர்கள் வெங்கடேஷ் இயக்கத்தில் குத்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் திவ்யா ஸ்பந்தனா. இவர் அதனைத் தொடர்ந்து கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாது ஏராளமான கன்னட படங்களில் நடித்துவரும் திவ்வியா, தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டுவருகின்றார். இந்நிலையில் அண்மையில் அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்துவிட்டார் என இணையத்தில் போலி செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ” தான் உயிரி…

  10. திடீர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த மாணவிக்கு தற்போது வெளியாகிய உயர்தர பரீட்சை பெறுபேற்றில் மூன்று பாடங்களிலும் 3 ஏ பெறுபேறுகள் கிடைத்துள்ளன. உயிரிழந்த மாணவிக்கு அதிவிசேட பெறுபேறு கிடைத்தமை அப்பகுதியில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் உயர்தரப் பாடசாலை மாணவியான 19 வயதுடைய விஹகன ஆரியசிங்க என்ற மாணவிக்கே இந்தப்பெறுபேறு கிடைத்துள்ளது. அவர் வணிகப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் மூன்று A சித்திகளைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதேவேளை இவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், கல்லீரல், கண், சிறுநீரகம் மற்றும் நுரையீரல் என்பன ஏழு நோயாளிகளுக்கு வெற்றிகரமா…

  11. இல‌ங்கை அர‌சே பிச்சை எடுத்து நாட்டை கொண்டு ந‌ட‌த்துது இதில் க‌ள்ள‌ நோட்டு அடிச்சால் பாதிப்பு இல‌ங்கை அர‌சுக்கு தான்............இந்தியாவை போல் இல‌ங்கையிலும் க‌ள்ள‌ நோட்டு காசு அச்சிட‌ தொட‌ங்கிட்டின‌ம்

  12. பட மூலாதாரம்,SCOTT KNUDSON படக்குறிப்பு, தலையில் இடி தாக்கிய போதிலும் அதில் உயிர் பிழைத்து, மிகவும் கடினமான பாதையில் வாழ்க்கையை நடத்தி வந்ததாக ஸ்காட் கூறுகிறார். 6 செப்டெம்பர் 2023, 14:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இடி தாக்கும் ஆபத்து பத்து லட்சம் பேரில் ஒருவருக்கே உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். சரி, 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸில் ஸ்காட் நுட்சென் என்ற மாடு மேய்ப்பவருக்கு அதுதான் நடந்தது. இதுபோன்ற எல்லா சம்பவங்களையும் விட இந்த சம்பவத்தில் மிகவும் சாத்தியமில்லாத, அதிசயமான விஷயம் எதுவென்றால், தலையில் இடி விழுந்த கதையைச் சொல்ல அவர் மீண்டும் உயிர் பிழைத்து வாழ்ந்…

  13. ஸ்பாக்களில் பணிபுரிபவர்களுக்கு அவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டியதன் அவசியத்தை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வலியுறுத்தியுள்ளார். “சில சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக மசாஜ் செய்வதற்காக இலங்கைக்கு வருவதால் ஸ்பாக்கள் மிகவும் அவசியம். ஸ்பாக்களின் விரிவாக்கத்தை எங்களால் தடுக்க முடியாது” என டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் மூலம் இலங்கையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தான் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார், ஆனால் நான் தான் பிரசாரத்தை முன்னெடுத்தேன். கஞ்சா செய்கையை மட்டும் அபிவிருத்தி செய்வதே பொர…

  14. படக்குறிப்பு, குறிப்பிட்ட இரண்டு மாணவிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு காதல் தொடர்பு உள்ளதா என்று பள்ளியின் முதல்வர் கேட்டுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 3 செப்டெம்பர் 2023 இலங்கை - அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உயர்தரம் (13ஆம் வகுப்பு) கற்கும் மாணவிகளின் மாதவிடாய் நாட்களைக் கேட்டுக் குறிப்பெடுத்து, தனக்கு வழங்குமாறு சிரேஷ்ட மாணவத் தலைவி ஒருவரிடம் கேட்ட பள்ளி முதல்வர் ஒருவருக்கு எதிராக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது. குறித்த சிரேஷ்ட …

  15. இலங்கை மத்திய வங்கி கடந்த ஆண்டு சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் நாணயத்தாள்களை அழித்துள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2022 இல் அழிக்கப்பட்ட நோட்டுகளின் பெறுமதி ரூ. 207.3 பில்லியன். நாட்டில் சுத்தமான மற்றும் தரமான நோட்டுகளின் புழக்கத்தை உறுதி செய்வதற்காக மத்திய வங்கி அவ்வப்போது சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களை அழித்து வருகிறது. மத்திய வங்கி 2021 இல் 108.2 மில்லியன் ரூபா மதிப்புள்ள நாணயத்தாள்களை அழித்ததுடன் அதன் பெறுமதி 44.3 பில்லியன் ரூபாவாகும், 2020 ஆம் ஆண்டில் 127.3 மில்லியன் மதிப்பிழந்த நாணயத் தாள்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி 62.2 பில்லியன் ரூபாவாகும். மேலும், 2019 ஆம் ஆண்டில், 139.8 பில்லியன் ரூபா பெறுமதியான 235 மில்லியன் நா…

  16. இரண்டு தமிழ் பெண்கள். றோட்டிலை திரிஞ்சு, இரண்டு நிமிடம் இருக்குமா என்று கேட்டு, சிக்கினால் போதும்.... கர்த்தர் வருகிறார்.... என்று தொடங்கி, கையில் எதையாவது திணித்து விட்டு தான் நகர்வார்கள். விசயம் தெரிந்தவர்கள், அல்லாட காவல் என்றால், போதும்.... தலைதெறிக்க நகர்வார்கள். இந்த வேதாள வெங்காயங்கள், சவுத்ஹால் பக்கம் தமிழர்களை தேடி போயிருக்கிறார்கள். போனதுகளுக்கு, சீக்கிய குருத்துவாரா என்று தெரியாமல், நல்ல சனம் உள்ள போகுதே என்று, தாம் கொண்டு வந்த கர்த்தர் அலைக்கும் காட்டுகளை வாசலில் வைத்துவிட்டு கிளம்ப, சீக்கியர்கள் இருவர், தேடி, பிடித்து, வாருங்கோ என்று அழைத்து வர... அட நம்ம பிரசங்கத்தினை கேட்க என்று திரும்பி வர, லெப்ட் அண்ட் ரைட் வாங்கி, விட்டார்கள். வீடியோ எடுத்…

  17. 01 SEP, 2023 | 04:54 PM மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூரில் திருடன் ஒருவன் அவனது பக்கத்து வீட்டில் திருட முற்பட்ட வேளை மரத்தில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். வியாழக்கிழமை (31) மாலை திருடன் வீட்டின் கூரையை உடைத்து திருடமுற்பட்ட வேளை, திருடனை கண்டு வீட்டில் உள்ளவர்கள் சத்தமிட்டுள்ளனர். இந்நிலையில், திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக கூரையில் இருந்து அருகிலுள்ள மரத்தில் பாய்ந்து ஏறி ஒழித்துக் கொண்டான். திருடனை பிடிப்பதற்காக அயலவர்கள் ஒன்றிணைந்ததையடுத்து திருடன் அங்கிருந்து தப்பி ஓடுவதற்காக முயற்சித்தபோது கீழே வீழ்ந்து கால் இரண்டாக உடைந்துள்ளது. …

  18. Published By: DIGITAL DESK 3 31 AUG, 2023 | 12:38 PM தனது மனைவியை வாள் முனையில் கடத்தி சென்ற கணவனுக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், குடத்தனை பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனைவி கணவனை விட்டு, பிரிந்து குடத்தனையில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில், மனைவி தங்கி இருந்த குடத்தனை வீட்டுக்கு வாளுடன் சென்ற கணவன் மனைவியை வாள் முனையில் கடத்தி சென்றுள்ளார். இது தொடர்பில் கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முற…

  19. முத்தம் கொடுத்ததால் காது கேட்காமல் போன காதலன் சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருவரும் ‘லிப்லாக்’ எனப்படும் உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர். இருவரும் சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது. இத…

  20. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பொதலக்கூர் கிராமத்தில் ஒரு வனப்பகுதி உள்ளது. பொதலக்கூர் வனப்பகுதியில் அங்கம்மா கோவிலும் உள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவில் முறையாக பராமரிக்கப்படாமல் பாதி இடிந்த நிலையில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அந்த கோவிலின் இடிபாடுகளுக்கு இடையே தேன் கேசரிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு ஒரு பழமையான குடம் புதையலாக கிடைத்துள்ளது. அந்த குடத்தில் தங்க காசுகள், தங்க சங்கிலிகள் என ஏராளமான தங்க ஆபரணங்கள் இருந்துள்ளன. தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக தேன் சேகரித்து விற்பனை செய்து வறுமையில் இருந்துள்ளனர் இந்த குடும்பத்தினர். இந்நிலையில் மூன்று இளைஞர்களும் திடீரென்று வசதி வாய்ப்புகளுடன் சுற்ற தொடங்கினர். இதனால் கிராம மக்க…

  21. மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது வழக்கு; வெடித்தது போராட்டம்! பிரான்சில் மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸில் அண்மையில் வருடாந்திர தெரு நாடக விழாநடைபெற்றுள்ளது. இவ்விழாவில் யுவதியொருவர் மேலாடையின்றிக் கலந்துகொண்டுள்ளார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்து அவரிடம் மேலாடையை அணியுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். எனினும் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதாகக் கூறி குறித்த யுவதி மேலாடையை அணிய மறுத்துள்ளார். அத்துடன் ஆண்களை போல பெண்களும் மேலாடை இன்றி செல்ல உரிமை …

  22. பிறந்து ஐந்து வாரங்களேயான சிங்கக்குட்டியை தற்போது தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பொதுமக்கள் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிங்கக்குட்டிக்கு தெஹிவளை மிருகக்காட்சிசாலை கால்நடை பணிப்பாளர்களால் “சிம்பா” என பெயரிடப்பட்டு மிகவும் அன்பாக வளர்க்கப்படுகின்றது. இது தொடர்பாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்கள பணிப்பாளர் கலாநிதி திலக் ப்ரேமகாந்த தெரிவித்துள்ளதாவது, ஹம்பாந்தோட்டை சபாரி பூங்காவில் சண்டி மற்றும் மீராவுக்கு பிறந்த சிம்பா, தற்போது ஐந்து வாரங்கள் நிறைவடைந்துள்ளது. பிரசவத்தின் பின் தாயால் சிம்பா நிராகரிக்கப்பட்டதையடுத்து பராமரிப்புக்காக சிம்பா தெஹிவளை பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பாளர்க…

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அறிவியல் ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களை விட, ஒருவரோடு ஒருவர் இருப்பதற்கு தொடர்ந்து விரும்பினால், அவர்கள் நண்பர்கள் என்று கருதப்படுகிறார்கள். 27 ஆகஸ்ட் 2023 நீங்கள் நட்பைப் பற்றி யோசிக்கும் போது, உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? இரவெல்லாம் நண்பருடன் தொலைபேசியில் பேசியதா? பாப்கார்ன் பகிர்ந்துகொண்டே படம் பார்ப்பதா? பீர் குடித்து குதூகலமாக இருப்பதா? மனித அனுபவத்தின் முக்கிய அங்கமாக நட்பு உள்ளது. நமது கதைகள், பாடல்கள், உரையாடல்கள் எல்லாமே நட்பு என்ற சரடைச் சுற்றியே நெய்யப்பட்டுள்ளன. அறிவியல்ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களைவிட, ஒருவரோடு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.