செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
செக் குடியரசு நாட்டின் டெலிவிசன் ஷோ நடத்துபவர் கமில் பார்ட்டோஷெக். இவர் கஸ்மா என அழைக்கப்படுகிறார். டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின், “Onemanshow: The Movie” படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்தார். இதில் வெற்றிபெறும் நபருக்கு சுமார் ஒரு மில்லியன் டொலர் அமெரிக்க டொலர் பரிசுத் தொகை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த கஷ்டமான புதிருக்கு விடையளிக்க கடினம் என்பதால், போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்த அனைவருக்கும், பணத்தை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார். இதனால் ஒரு இடத்தை இலக்கு செய்து, அந்த இடத்தில் பணத்தை கொடுக்கப் போவதாக அறிவித்தார். அவர் சொன்னதுபோன்று, சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து…
-
- 0 replies
- 672 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,WEIBO கட்டுரை தகவல் எழுதியவர், பேன் வாங் பதவி, பிபிசி நியூஸ் 23 அக்டோபர் 2023 சீனாவில் சிங்தாவோ பீர் தயாரிப்பு நிறுவனத்தின் தொழிலாளி ஒருவர் தொட்டிக்குள் சிறுநீர் கழிப்பதைக் காட்டும் வைரலான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட்டுள்ளது. வீடியோ தனது கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக நிறுவனம் கூறியது. மேலும், தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை வைத்துள்ள பகுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியது. சிங்தாவோ நிறுவனம் சீனாவின் சி…
-
- 4 replies
- 573 views
- 1 follower
-
-
மயிரிழையில் உயிர் பிழைத்த 1000 பூனைகள். சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறியொன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1000 பூனைகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். தமக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே இச்சம்வம் அம்பலமாகியுள்ளது. ஜியாங்சுவில் உள்ள இறைச்சிக் கடையொன்றுக்குக் கொண்டு செல்லப் பட்ட பூனைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டடுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1355628
-
- 0 replies
- 228 views
-
-
நவராத்திரி விழாவுக்கு பாடசாலை மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ. 64 ஆயிரம் ரூபாவை அப்படியே ஆட்டையை போட்ட பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், பூசாரியிடம் முட்டையொன்றை மந்திரித்து பாடசாலை மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரிடமும் சத்தியம் வாங்கிய சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது. நவராத்திரி விழாவினை முன்னிட்டு ஒரு மாணவரிடம் 150 ரூபாய் அடிப்படையில் 64,000ம் ரூபாய் பணம் குறித்த பாடசாலையின் அதிபரினால் வசூல்செய்யப்பட்டது. இவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்டு இரண்டு தினங்களில் பாடசாலையின் அதிபரினால் களவாடப்பட்டதாக மாணவர்களும் ஆசிரியர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். அதனை மூடி மறைப்பதற்கே முட்டையை வைத்து நாடகமாடுகின்றார் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டைம…
-
- 0 replies
- 204 views
-
-
23 OCT, 2023 | 04:59 PM இலங்கையில் தவளைகளை கடிக்கும் ஒரு வகை புதிய நுளம்பு இனத்தை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில் பூச்சியல் நிபுணர் கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவிக்கையில், இலங்கையில் மீரிகமை மற்றும் ஹந்துருமுல்லை போன்ற பிரதேசங்களில் நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை எமது நாட்டில் இனங்காணப்பட்டுள்ள நுளம்பு இனங்களின் மொத்த எண்ணிக்கை 156 ஆகும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/167593
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு பல்கேரியா. இதன் தலைநகர் சோஃபியா. இந்நாட்டில் எண்ணிக்கையில் சுமார் 18 ஆயிரம் பேரை கொண்ட கலாய்ழி ரோமா (Kalaidzhi Roma) எனும் இனத்தவர் வசிக்கின்றனர். இவர்களிடையே ஒரு விசித்திரமான பழக்கம் நிலவுகிறது. இந்த இனத்தவர்கள் தங்கள் இன இள வயது திருமணமாகாத பெண்கள், பிற ஆண்களுடன் ‘டேட்டிங்’ அல்லது காதல் போன்ற அந்த பருவத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஆதரிப்பதில்லை. மேலும் இவர்கள் இனத்தை சேர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் பலர் தங்களுடன் இணைத்து கொள்ள தயங்குகின்றனர். அதனால் இவர்கள் சமுதாயத்தில் அன்னியப்படுத்தப்பட்டு விட்டதாகவும் உணர்கிறார்கள். எனவே, இவர்கள் திருமண சம்பந்தத்தையும் பிற இனத்தவர்களுடன் செய்து கொள்வதில்லை. தங்கள…
-
- 0 replies
- 371 views
- 1 follower
-
-
மாரடைப்பு ஏற்பட்டதாக நடித்து, பல உணவகங்களில் பில் கட்டாமல் ஏமாற்றியுள்ளார் 50 வயது நபர் ஒருவர். ஸ்பெயின் நாட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெயர் குறிப்பிடப்படாத அந்த நபர், பெரிய உணவகங்களை குறிவைத்து, அங்கு சென்று சாப்பிடுவார். உணவருந்திவிட்டு பில் கட்டவேண்டிய சமயம் வரும் போது மாரடைப்பு ஏற்பட்டது போல நெஞ்சில் கைவைத்து கொண்டு சரிந்து விடுவார், அல்லது மயங்கி கீழே விழுந்துவிடுவார். இவரது நிலையை பார்த்து பயந்து, உணவகத்து ஊழியர்கள் ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்து இவரை அனுப்பி வைப்பார்கள். இந்த கதை சுமார் 20 உணவகங்களில் நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு உணவகத்தில் இருந்து அவர் தப்பி ஓட நினைத்த போது இந்த நாடகம், அம்பலமாகியுள்ளது. அவர் சாப்பிட்ட உணவி…
-
- 0 replies
- 476 views
- 1 follower
-
-
21 OCT, 2023 | 05:39 PM வெலிகந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மைத்திரிகம பிரதேசத்தில் யானை ஒன்று இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் தாய் யானையை குட்டியானை அருகில் இருந்து காவல் காத்து வருகின்றது. சம்பவதினமான நேற்று இரவு யானை மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி கூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அந்த பகுதியில் நிலத்தில் வீழ்ந்து உயிருக்கு போராடிவருகின்றது. வனவிலங்கு உத்தியோகத்தர் செல்ல முற்பட்டபோது குட்டி யானை அங்கு எவரையும் செல்லவிடாது காவல் காத்துவருகின்றது. …
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 21 அக்டோபர் 2023, 03:53 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்து பாலித்தீனிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்திப் பலரைக் கொன்றனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோரைப் பணயக் கைதிகளாகக் கொண்டு சென்றனர். அப்போது தனது வீட்டுக்குள் நுழைந்த ஆயுதக்குழுவினரை டீயும் பிஸ்கட்டும் கொடுத்து ஒரு வயதான பெண் சமாளித்து, தன் உயிரையும் தனது கணவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார். தற்போது அவர் இஸ்ரேலில் ஒரு தேசியக் கதாநாயகியாகப் பார்க்கப்படுகிறார். அவர் அந்த நாளில் நடந்தவற்றை நினைவுகூர்கிறார். 'நீங்கள் என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள்' "…
-
- 0 replies
- 283 views
- 1 follower
-
-
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
மகிந்தவின் அலுவலகத்திற்குள் அமானுஷ சக்திகள்: ராஜபக்ஷர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபக்சவின் நெலும் மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் கடந்த சில வாரங்களாக கண் திருஸ்ட்டி, தோசங்கள் ஏற்பட்டுள்ளதாக கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்பட்டுள்ள தோசங்களை கழிக்கும் பூஜைகள், பிரித் பரிகாரங்கள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதற்கமைய, அடுத்த மாதம் 3ஆம் திகதி இரவு பூஜை வழிப்பாடுகளை மேற்கொண்டு மறுநாள் காலை தானத்துடன் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு இது நடத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டாலும், கட்சி அலுவலகத்தில் தற்போது எழுந்துள்ள தேவைய…
-
- 0 replies
- 177 views
-
-
சாப்பிட்ட வாழைப்பழத்தின் சிறு துண்டு நுரையீரலில் சிக்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் யிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையின் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தரான லக்ஷ்மன் ஹெட்டி பத்திரன (64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபர் பல வருடங்களாக நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில் இவரை மனைவி கவனித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 18ம் தேதி மதியம் சாப்பிட்ட பின் வாழைப்பழம் சாப்பிட்டு கொண்டிருந்த போது திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அதன்படி, ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சிந்த…
-
- 0 replies
- 253 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 17 OCT, 2023 | 11:04 AM கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் ராகம பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவருக்கு ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன. குறித்த ஆறு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா உறுதிப்படுத்தியுள்ளளார். இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை ஆகும். வைத்தியசாலை மற்றும் பெற்றோருக்கு முக்கிய தருணமாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி முதன்முறையாக ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள் பிறந்தன. அதில் மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 5 replies
- 463 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியாவில் 18வது பிறந்தநாள் கொண்டாட்டம். https://m.facebook.com/people/Royal-R-event-management/100069237794187/
-
- 1 reply
- 512 views
-
-
பாலஸ்தீன ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்லாமியர்கள் படுகொலைக்கு எதிராக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக்குழு கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்தத் தாக்குதலை அடுத்து இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பின் மீதும், பாலஸ்தீனத்தின் மீதும் அதிரடித் தாக்குதலில் இறங்கியிருக்கிறது. இதன் விளைவால் 1600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், சுமார் 1,20,000 மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். மேலும், பாலஸ்தீன காசா எல்லையைச் சுற்றிவளைத்திருக்கும் 1,00,000 இஸ்ரேலிய ராணுவத்தினர் அந்தப் பகுதி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர். மியா காலிஃபா இதைத்தொடர்ந்து பல்வேறு நாட்டின் தலைவர்களும், பிரபலங்…
-
- 22 replies
- 1.3k views
-
-
-
- 41 replies
- 4.2k views
-
-
நாம் உண்ணும் மீனில் ‘ஒமேகா 3’ சத்து நிறைந்திருக்கிறது. எனவே மீன் உணவை சைவ உணவில் சேர்ப்பதன் மூலம் அதனை அதிகமான மக்கள் சாப்பிட முடியும் என்று தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா காரைக்கால் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் டொக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “மீனவ சகோதரர்களுக்கு என்னென்ன உதவிகளை செய்ய முடியுமா அதனை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக செய்து கொண்டு வருகின்றன. நாம் உண்ணும் மீனில் ‘ஒமேகா 3’ சத்து நிறைந்திருக்கிறது. எனவே, மீன் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வராது. மீன் உணவ…
-
- 17 replies
- 1.4k views
- 1 follower
-
-
இந்தியக் காவல்துறை ஊழல் நிறைந்தது மட்டுமல்ல, பயனற்ற ஒன்று என்றும் யேர்மனியத் தொலைக்காட்சி ஊடகம் NTV செய்தி வெளியிட்டிருக்கிறது. வீதி விபத்தில் பலியான ஒரு முதியவரின் உடலின் ஒரு பகுதியை மூன்று இந்தியக் காவல்துறையினர், கால்வாயில் எறியும் ஒரு வீடியோவை அது இணையத்தில் இருந்து எடுத்து பதிவிட்டிருக்கிறது. முசாபர்பூர் (Muzaffarpur) மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ராகேஷ் குமார் இந்தச் சம்பவம் பற்றிக் கூறுகையில், மூன்று காவலர்களும் பாரிய தவறொன்றைச் செய்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் மூவரையும் சேவையில் இருந்து இடைநிறுத்தி இருக்கிறோம் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். வேகமாக வந்த ஒரு பார ஊர்தி மோதி முதியவர் உடல் நசுங்கி உயிர் இழந்திருக்கிறார்.அவர் இன்ன…
-
- 0 replies
- 316 views
-
-
விநாயகர் சதுஸ்டி அன்று மும்பை கடலில் பிள்ளையார் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். கூட்டத்தில் இரு சிறுவர்களும் இருந்தார்கள். தாம் கொண்டு வந்த பிள்ளையாரை தள்ளிக்கொண்டு சென்ற கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்து சென்று விட்டார்கள். பிள்ளையாரை பிடித்துக் கொண்டே சென்றதால், கால்கள் நிலத்தில் படாத நிலையில், கடலிலினுள் ஆழம் கூடிய பகுதி வரை சென்றதை கவனிக்கவில்லை. பெரியவர்கள் திருப்ப, மறுபக்கம் பிடித்துக்கொண்டு நின்ற சிறுவர்கள் இருவரையும் கவனிக்கவில்லை. கரையில் எங்கே சிறுவர்கள் என்றும் அவர்களுடன் வந்தவர்கள் தேடத்தொடங்கிய போது, இருவரும் கரை வரவில்லை என்று புரிய, தேட தொடங்கினர். சிறிது நேரத்தில், அலையுடன், மயங்கிய நிலையில் ஒரு சிறுவன் கரை ஒதுங்கினான். அடுத்த ச…
-
- 45 replies
- 3.4k views
- 1 follower
-
-
ஹெலிகொப்டர் சத்தம் கேட்டு ஓரே நேரத்தில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்ட 3000 முதலைகள்! அவுஸ்திரேலியாவில் உள்ள முதலைப் பண்ணையில், ஹெலிகொப்டரின் சத்தத்தைக் கேட்டு சுமார் 3000 முதலைகள் ஒரே நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் அமைந்துள்ள ‘கூரானா’ முதலை பண்ணையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப் பண்ணையில் ஏறத்தாழ 3,000 முதலைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் இப்பண்ணைக்கு மேலே கொஞ்சம் தாழ்வாக ஹெலிகொப்டர் ஒன்று பறந்து சென்றுள்ளது. இச்சத்தத்தைக் கேட்ட சிலநொடிகளுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான முதலைகள் இனச்சேர்க்கையில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. இதனைப் ப…
-
- 0 replies
- 572 views
-
-
06 OCT, 2023 | 12:01 PM நீர்கொழும்பு, துங்கல்பிட்டி பகுதியில் தனது வீட்டின் முன் வீதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்துக்கொண்டு நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது மகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளார். குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்ற போது, பெண்ணின் மகன் அவரை பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளார். இதனை அவதானித்த திருடன் உடனே கத்தியை காட்டி மகனை பயமுறுத்தி மகனின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையையும் பறித்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரிக்ரொக் அழகியொருவர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ் மாவட்டத்தை சேர்ந்த யுவதியொருவருக்கும், ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞருக்கும் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட அறிமுகத்தை தொடர்ந்து கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. ரிக்ரொக்கில் ஆடல், பாடல் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்த யுவதியின், தீவிர ரசிகரான இளைஞரே யுவதியை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகின்றது. திருமணம் நடந்த இரண்டு வாரங்களில், பிறிதொரு ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர், யுவதியின் வீட்டிற்க…
-
- 2 replies
- 599 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 05:03 PM தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாய் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இரண்டு வயது ஜேர்மன் ஷெப்பர்ட் “கமாண்டர்” என்ற நாயை என்ன செய்வது என்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனின் தகவல் தொடர்பு பணிப்பாளர் எலிசபெத் அலெக்சாண்டர், வெள்ளை மாளிகை பணியாளர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பு அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்து ஜனாதி…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 OCT, 2023 | 02:50 PM நல்லின (பொமேரியன்) வளர்ப்பு நாய்க்கு இரு தரப்பினர்கள் உரிமை கோருவதனால், அதன் பரம்பரையின் மரபணுவை பரிசோதனை செய்து அறிக்கையிடுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்று கட்டளையிட்டுள்ளது. நாயை கடத்தி வைத்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அமைய இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியது. கிளிநொச்சியில் உள்ள குடியிருப்பாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் வளர்ப்பு நாயை கடத்தி கட்டிவைத்து பராமரித்ததாக அயலவர் மீது கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குத் தொடர்ந்தனர். குற்றஞ்சாட்டவர் சார்பில் அவரது சட்டத்தரணியினால் பின்வர…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
கொழும்பு புளூமெண்டால் பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த சுகவீனமுற்ற நபர் ஒருவர் வைத்தியரின் 400,000 ரூபா பெறுமதியான ஆப்பிள் கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக புளூமெண்டால் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து 68 வயதான மருத்துவர் புளூமெண்டால் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இந்தக் கைத்தொலைபேசியை திருடியவர் இதுவரை சிக்காத நிலையில், குறித்த நபர் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவரைக் கைது செய்ய புளூமெண்டல் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். லங்காதீப https://thinakkural.lk/article/275642
-
- 0 replies
- 198 views
- 1 follower
-