Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அறிவியல் ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களை விட, ஒருவரோடு ஒருவர் இருப்பதற்கு தொடர்ந்து விரும்பினால், அவர்கள் நண்பர்கள் என்று கருதப்படுகிறார்கள். 27 ஆகஸ்ட் 2023 நீங்கள் நட்பைப் பற்றி யோசிக்கும் போது, உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? இரவெல்லாம் நண்பருடன் தொலைபேசியில் பேசியதா? பாப்கார்ன் பகிர்ந்துகொண்டே படம் பார்ப்பதா? பீர் குடித்து குதூகலமாக இருப்பதா? மனித அனுபவத்தின் முக்கிய அங்கமாக நட்பு உள்ளது. நமது கதைகள், பாடல்கள், உரையாடல்கள் எல்லாமே நட்பு என்ற சரடைச் சுற்றியே நெய்யப்பட்டுள்ளன. அறிவியல்ரீதியாக, இரண்டு நபர்கள், மற்றவர்களைவிட, ஒருவரோடு …

  2. ஆந்திர மாநிலத்தில் புகழ்மிக்க பல கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சிம்மாசலம் எனப்படும் மலையில் அமைந்திருக்கும் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோயில். இந்த ஆலயத்தில் இரு தினங்களுக்கு முன்பு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியலில் பணத்துக்கு நடுவே ஒரு காசோலை கிடைத்தது. அதை எடுத்துப் பார்த்த அதிகாரிகளுக்கு மயக்கம் வராத குறை. காரணம் அந்தக் காசோலையில் நூறு கோடி ரூபா (இந்திய ரூபா மதிப்பில்) என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படிப் பக்தர் ஒருவர் கோயிலுக்கு 100 கோடி ரூபாவுக்குக் காசோலை செலுத்திய சம்பவம் இணையத்தில் வைரலானது. திருமலை திருப்பதியிலேயே ஒரே காசோலையாக நூறு கோடி ரூபா கிடைத்திருக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும் உடனடியாக உண்டியல் எண்ணும் பணியில் ஈட…

  3. இலங்கையின் சமீபகால அரசியல் நிலைமைகளை கூர்ந்து அவதானித்தால், அங்கே நடக்கும் இலங்கை என்னும் பெண்ணை, யாழ்ப்பாண தமிழில் சொல்வதானால், சுழட்டி (தமிழகத்தில் சைட் அடித்து கரெக்ட் பண்ண) கவர மூவர் சுழன்று கொண்டு இருக்கின்றனர். இந்தியாவினை இதுவரை காலமும் எதிர்த்து வந்த விமல் வீரவன்ஸ, சில வாரங்களாக ஆதரித்து பேசுகிறார். இந்தியா, இனக்கலவரம் வரும் என்று எச்சரித்த நிலையில், அதன் மூல காரணம் என்று சொல்லக்கூடிய பௌத்த விகாரைகளையும், அதனூடாக, சரத் வீரசேகர, கமன்பிள்ள போடும் இனவாத கூச்சல் என்பது மிகையாகாது. அதேவேளை, இதன் பின்னால் இந்தியாவே உள்ளதோ என்ற சந்தேகமும் எழுகின்றது. தமிழர்கள் இந்தியாவினை நம்ப தாயரில்லை. இதனால், பௌத்த விகாரைகள், இனவாதிகள் என்ற பிள்ளையினை கிள்ளி, தமிழருக்கு ஆதரவ…

    • 0 replies
    • 253 views
  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டி சாலையில் வாங்கிய சாக்லேட்டினுள் மனித கை விரல் இருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், யூ.எல். மப்றூக் பதவி, பிபிசி தமிழுக்காக 9 ஆகஸ்ட் 2023, 05:43 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் (எச்சரிக்கை - இந்தச் செய்தியில் தரப்படும் தகவல்கள் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இலங்கையில் பெண் ஒருவர் சாப்பிட்ட சாக்கலேட்டினுள் மனித கைவிரல் ஒன்று இருந்தமை தொடர்பான செய்தி பெரும் அதிர்ச்சியினையும் பரபரப்பினையும் ஏற்படுத்தியுள்ளது. …

  5. ஒரே இரவில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கிராமம் ஒன்றில் 37 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் மரணம் அடைந்த சம்பவம் இப்போதும் பீதியை ஏற்படுத்துகிறது. 1986ஆம் ஆண்டு ஒகஸ்ட் 21ஆம் திகதி கேமரூன் நாட்டில் உள்ள சிறிய கிராமமான நியோஸ் பகுதியில் இரவு 9 மணிக்கு தொலைவில் இடி விழுந்தது போன்ற சத்தம் கேட்டது. அடுத்த நாள் காலை அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் இறந்து போனார்கள். ஒரே இரவில் சுடுகாடான கிராமம்… மனிதர்கள் முதல் பூச்சிகள் வரை எங்கும் மரணம்! ஒருவர் மயக்கமான நிலையில் இருந்தார். அவர் என்ன நடந்தது என்று பார்க்க சென்ற போது, பெண் ஒருவர் சடலங்களுக்கு நடுவே அழுதவாறு கிடந்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் 30 பேர் இறந்த…

  6. யேர்மனியில் உள்ள Spalt நகரத்தில், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் முதியவர் ஒருவர் குப்பைத் தொட்டிக்குள் காகிதக் கைக்குட்டையைப் போட்டதால் அவருக்கு 78 யூரோக்கள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 10.06.2023 அன்று Klaus-Dieter Heidmann (65) க்கும் Marlies (66)க்கும் 40வது திருமணநாள். மதியம் ரெஸ்ரோரண்டில் சாப்பிட்டுவிட்டு Brombachsee அருகே கொஞ்சம் காற்று வாங்கிக் கொண்டு நடந்து வரலாம் என்று அவர்கள் தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மதியச் சாப்பாடு சுவையாக இருந்தது. அடுத்தது நடைப்பயணம். நடந்து போகும் போது Enderndorf என்ற இடத்தில் Klaus-Dieter மூக்கைச் சீறி, காகிதக் கைக்குட்டையால் துடைத்து அங்கிருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டார். அங்கேதான் பிரச்சனை உருவானது. …

  7. இந்த ஆண்டு கோடையில், இத்தாலி-அட்ரியா கடற்கரை நீல நிற நண்டுகளால் திண்டாடுகிறது. நீல நிற நண்டுகள், சிறு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் கரையோர மீனவர்களின் வலைகளை அறுத்து, வலையில் சிக்கிய மீன்களைச் சிதைத்து மீனவர்களை அதிக எரிச்சல் அடைய வைக்கின்றன. அத்தோடு உல்லாசப் பயணிகள் விரும்பி உட்காரும் கடற்கரைகளில், அவர்களுக்குப் பயத்தையும் ஏற்படுத்துகின்றன. கடல் நீர் சூடாகி வருவதால்தான் நீல நிற நண்டுகள் இத்தாலிக்கு இடம் பெயர்ந்து வந்திருக்கின்றன என்று சொல்கிறார்கள். ஏறக்குறைய 20 செ.மீ. அகலமும் 10செ.மீ. நீளமும் உள்ள ஒரு கிலோ அளவிலான நீல நண்டுகள் கடல்வாழ் மட்டிகளையும் அழித்து வருகின்றன. இதனால் ‘கடலின் கொலையாளி’ என்று இத்தாலியில் இவற்றை விழிக்கிறார்கள். நீல நண்டுகளால் மனிதருக…

  8. ஒரு நாள் மட்டும் கணவன், மனைவி! சீனாவில் ட்ரெண்டாகும் புது கலாசாரம்! உணவு விடயங்களில் மட்டுமல்லாமல் பல விநோத நடைமுறைகளுக்கு முன்னோடியாக சீனா இருந்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் திருமணம் எனும் புது வகையான கலாசார முறை தற்போது சீனாவில் ட்ரெண்டாகி வருகிறது. சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் கிராமங்களில் ஒருநாள் திருமணங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் அங்கு கடைபிடிக்கப்படும் நடைமுறை தான். அதாவது, ஏழ்மை காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஆண்கள், திடீரென உயிரிழந்தால் அவர்களின் குடும்ப கல்லறையில் அவர்களின் சடலங்களைப் புதைக்க மாட்டார்கள். இதனால் அவர்களால் மூதாதையருடன் சொர்க்கத்தில் சேர முடியாது என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது. இந்த…

  9. தென்னாப்பிரிக்காவின் தொலைதூர மாகாணத்தில் சுமார் 50 பபூன் குரங்குகள் கொண்ட குழு சிறுத்தையை துரத்தியடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சிறுத்தை, பபூன் குழுவில் உள்ள பபூன் ஒன்றை வேட்டையாட முயல்கிறது, மற்ற பபூன்கள் வந்து சிறுத்தையை தாக்கி அந்த பபூனை காப்பாற்றுகின்றன. தாக்கப்படும் சிறுத்தை இறுதியாக பபூன்களுக்கு பயந்து காட்டுக்குள் ஓடுகிறது. இச்சம்பவம் காரணமாக வீதியில் பயணித்த வாகனங்கள் நிறுத்தப்பட்டதுடன், அந்த வாகனங்களில் பயணித்தவர்களும் சம்பவத்தை பதிவு செய்துள்ளனர். இந்தச் வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு இதுவரை மூன்று இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். https://thinakkural.lk/article/268873

  10. பாடசாலைக்கு மது போதையுடன் சென்ற மாணவி கெகிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று (17) மதுவருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற நிலையில் மாணவியை கைது செய்த பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொலிஸார் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது பாடசாலையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த மாணவியிடம் பொலிஸார் விசார…

  11. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்திற்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். "இங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில் மசாஜ் நிலையங்கள் நடத்தப்படுகின்றன. ஒருவரிடம் 5,000 ரூபாய் வசூலிக்கும் இடங்களும் உண்டு. சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மதுபான சாலைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. அப்படியென்றால் பொதுமக்கள் குடிப்பதை எப்படி நிறுத்துவது? என்னைப் போல் ஒரு துண்டு மீனையோ இறைச்சியையோ சாப்பிடாத 06 பேர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார். Tamilmirror Online || ஒன்றரைக் கிலோமீட்டருக்குள் 42 மசாஜ் நிலையங்கள்

  12. மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் 56 வயதான விமான கேப்டன் இவான் ஆண்டூர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக அவர் அந்த நேரத்தில் விமானத்தை இயக்கவில்லை. அவருக்கு மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் பனாமாவில் அந்த விமானத்தை தரையிறக்கியுள்ளார் துணை விமானி. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் பயணிகளில் யாரேனும் மருத்துவர் உள்ளார்களா என விமான குழு கேட்டு…

  13. - பாறுக் ஷிஹான் - கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம். ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது. இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம் .வருகின்ற கதாபாத்திரங்கள…

  14. இலங்கையில் அமைக்கப்படவுள்ள சீன கடற்படைத்தளம் அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவகமான எய்ட் டேட்டா நிறுவகத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா ஒரு கடற்படை தளத்தை நிறுவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு இலங்கையில் சீனாவின் இருப்பு தொடர்பான இந்தியாவின் அவதானத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளில் சீனாவின் கடற்படை தளங்களை நிறுவக்கூடிய 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எய்ட் டேட்டா நிறுவகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இலங்கையின் ஹ…

  15. 08 AUG, 2023 | 09:27 AM யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த ஜெகதாஸ் (வயது 54) என்பவர் தனது 19 வயது காதலியுடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது ஊரை விட்டு வெளியேறி இருந்தார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக உறவினர்கள் உறுதி அளித்ததால், இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். அவ்வேளை ஊரவர்கள் குடும்பஸ்தர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதனால் அவர் மயக்கமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனும…

  16. வ‌ட‌க்கு கிழ‌க்கு த‌மிழ் ம‌க்க‌ளுக்கெதிராக‌ முன்னாள் அமைச்ச‌ர் மேர்வின் சில்வா இன‌வாத‌மாக‌ பேசும் நிலையை ஏற்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரே என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, வ‌ட‌மாகாண‌த்தில் பௌத்த‌ ம‌த‌ஸ்த‌ல‌ங்க‌ளுக்கு சேத‌ம் ஏற்ப‌டுத்தினால் அங்குள்ளோரின் த‌லைக‌ளை க‌ள‌னிக்கு கொண்டு வ‌ருவேன் என‌ மேர்வின் கூறிய‌து மிக‌ க‌டுமையான‌ த‌விர்க்க‌ வேண்டிய‌ வார்த்தையாக‌ இருப்பினும் அவ‌ர‌து ச‌மூக‌ அக்க‌றை என்று பார்க்கும் போது இந்நிலைக்கு அவ‌ரை ஆக்கிய‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளே பொறுப்பேற்க‌ வேண்டும். கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ நாச‌மாக்கிய‌ நாட்டை ஜ‌னாதி…

  17. களுத்துறை பாடசாலை ஒன்றில் இரு சுவர்களுக்கு இடையில் சிக்கியிருந்த 7 வயது சிறுமியை சுமார் 30 நிமிட பிரயத்தனத்திற்கு பின்னர் மீட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்னர். களுத்துறை கட்டுகுருந்த றோமன் கத்தோலிக்க பாடசாலையில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார். பாடசாலையின் கழிவறை அமைப்புக்கும் சுவருக்கும் இடையே சிறுமி சிக்கிக் கொண்டதாகவும், களுத்துறை மாநகர தீயணைப்புத் துறையின் அவசர ஆம்புலன்ஸ் வந்து ஸ்பேடர் என்ற அதிநவீன கருவியின் உதவியுடன் சிறுமியை காப்பாற்றியதாகவும் தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/268308

  18. Published By: DIGITAL DESK 3 07 AUG, 2023 | 03:17 PM அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 20 நிமிடங்களில் 2 லீற்றர் நீர் அருந்தியதால் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிப்பால் வீடுகள் இல்லாத மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடி…

  19. கரீபியன் கடலில் தங்களது பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டும் என ஒரு பிரித்தானியத் தம்பதி 6500 கிலோ மீற்றர் தூரம் பறந்து வந்து இப்பொழுது சிக்கலில் மாட்டியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள தேம்சைட்( Tameside )என்ற நகரத்தைச் சேர்ந்தவர்கள் Iuliia (38) வும் அவள் கணவன் Clive (51)ம். வயிற்றில் உள்ள குழந்தையை கரிபியன் கடலில் இயற்கையான முறையில் பிரசவிக்க வேண்டும் என்ற எண்ணம் யூலியாவுக்கு வந்தது. தனது எண்ணத்தை யூலியா, கிளைவிற்கு தெரியப்படுத்த, எட்டு வயதான தங்கள் முதல் பெண் குழந்தையை யூலியாவின் சகோதரியிடம் ஒப்படைத்து விட்டு இருவரும் கரீபியன் வந்து சேர்ந்தார்கள். கரீபியனில் உள்ள சிறிய தீவான Martiniqueஇல் வாழ்வதற்கு வசதியான ஒரு படகை வாடகைக்கு எடுத்து, அந்தப் படகில் தங்கள் …

    • 1 reply
    • 531 views
  20. 30 JUL, 2023 | 10:17 AM புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். அப்போது, ஹரியாணா மாநிலம் சோனிபட் மதினா கிராம பெண் விவசாயிகளை சந்தித்தார். அப்போது, ‘‘நாங்கள் டெல்லியை இதுவரை பார்த்ததே இல்லை’’ என்று ராகுல் காந்தியிடம் அந்த பெண்கள் கூறினர். அப்போது, ‘‘நான் உங்களை டெல்லிக்கு வரவழைக்கிறேன்’’ என்று உறுதி அளித்தார். அதன்படி, மதினா கிராமத்து பெண் விவசாயிகளுக்கு டெல்லியின் எண் 10 ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி வீட்டில் ராகுல் காந்தி விருந்தளித்தார். அப்போது சோனியா, பிரியங்கா காந்தி மற்றும் பெண்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக கலந்துரையாடினர். அந்தப் பெ…

  21. யேர்மனிய நீதிமன்றத்திற்கு அன்று விசாரணைக்கு வந்த வழக்கு அந்த இளம் நீதிபதிக்குப் புதிதாக இருந்தது. தனது மச்சாள் அவா(16) தன்னை திருமணம் செய்ய மறுக்கிறாள் என்பதற்காக அட்ணன்(26) என்ற இளைஞன் அவளை அடித்து, துன்புறுத்தி கொலைப் பயமுறுத்தலையும் செய்திருக்கிறான் என்பதுதான் வழக்கு. இருவருமே ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள். 2020இல் அட்ணன் 13 வயதாக இருந்த அவாவை த் திருமணம் செய்வதற்காக, இஸ்லாமிய முறைப்படி 6500 யூரோக்களை மணப்பெண்ணுக்கான பணமாகக் கொடுத்திருக்கிறான். அந்த நிகழ்வை ஒரு கொண்டாட்டமாகத் தான் தங்கியிருந்த அகதிகள் முகாமில் கொண்டாடியும் இருக்கிறான். ஆப்கானிஸ்தானில் விவசாயம் செய்து கொண்டிருந்த அட்ணனுக்கு படிப்பறிவு கிடையாது. 2015இல் யேர்மனிக்கு அகதியாக வந்…

  22. “நான் 12 வருடங்களாக ஒருவனால் சிறை பிடிக்கப்பட்டிருக்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள்” என்று ஞாயிற்றுக் கிழமை யேர்மனி வீஸ்பாடன் நகரப் பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு ஒரு தொலைபேசி வந்தது.தொலைபேசியில் பேசியது ஒரு பெண். நீண்ட காலமாக ஒரு வீட்டில் அடைக்கப்பட்டிருந்ததாக அவர் தந்த இடத்தின் முகவரி பிரான்ஸ் போர்பாக் (Forbach) என்ற நகரத்தில் இருந்தது. வீஸ்பாடன் பொலிஸாரின் தகவலைப் பெற்று, மறுநாள் திங்கட்கிழமை குறிப்பிட்ட வீட்டுக்கு பிரான்ஸ் பொலிஸார் சென்ற போது அவர்களை வீட்டுக்கு உள்ளே அனுமதிக்க அங்கிருந்த ஆண்(55) கடுமையாக மறுத்தான். ஆனாலும் பொலிஸார் வலுக்கட்டாயமாக வீட்டினுள் சென்று பார்த்த போது, கம்பிகளால் கட்டப் பட்டிருந்த தடுப்பு யன்னலையும், ஒரு வாங்கிலையும் கண்டார்கள். அங்கே ச…

  23. டேட்டிங் செல்வதற்கும் வயது வித்தியாசம் இல்லை என கூறும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் நியூயோர்க்கை சேர்ந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், ஆண் காதலன் தேவை என இணையதளத்தில் செய்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இணையதளமானது அமெரிக்காவை சேர்ந்த ரியல் எஸ்டேட் பக்கம் ஆகும். அந்த பெண் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் ஹூஸ்டனின் புறநகர் பகுதியில் எனக்கு 5 படுக்கை அறைகள் கொண்ட பெரிய அழகான வீடு இருக்கிறது. என்னுடன் வாழ்வதற்கு ஆண் காதலன் அல்லது ரூம் மேட் வேண்டும். அந்த ஆண் காதலன் மீது குற்றப்பின்னணி இருக்க கூடாது. பூனைகளை நேசிப்பவராக இருக்க வேண்டும். முதல் 60 நாட்கள் இலவசம். நான் ஒரு தடகள வீராங்கனை. அதற்காக நான் மோசமான தோற்றத்தில் இருக்க மாட்டேன். எனது எடையில் சில ஏற…

  24. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, மாநகராட்சியின் கீழ் உள்ள ஹரித கர்மா சேனா பணியாளர்களான ராதாவுடன் பணிபுரியும் பெண்களிடம் ஒரு டிக்கெட்டின் விலையான 250 ரூபாய் கூட இல்லை கட்டுரை தகவல் எழுதியவர், பி. சுதாகர் பதவி, பிபிசி தமிழ் 31 ஜூலை 2023, 15:28 GMT புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் கேரளாவில் மழைக்கால லாட்டரியில் 11 பெண் துப்புரவு பணியாளர்கள் இணைந்து ரூ.10 கோடி பரிசு வென்றுள்ளனர். பரப்பனங்காடி மாநகராட்சிக்குட்பட்ட ஹரித கர்ம சேனா அமைப்பை சேர்ந்த, 11 பெண்கள், தங்களுக்குள் பணம் சேர்த்து ரூ.250க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளனர். …

  25. ஒரு டேபிளை முன்பதிவு செய்ய உங்களுக்கு பிடித்த உணவகத்திற்கு அழைப்பு விடுக்கும் போது நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி உணருவீர்கள்? இந்த பிரிட்டிஷ் உணவகத்தில் 4 வருடங்களுக்கு டேபிளை புக் செய்துவைத்துள்ளனர். நியூயார்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, இங்கிலாந்து பிரிஸ்டலில் அமைந்துள்ள பேங்க் டேவர்ன் உணவகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் புக் செய்து வைத்துள்ளனர். காத்திருப்புப் பட்டியல் நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ளதால், புதிய முன்பதிவுகளை நிறுத்த வங்கி டேவர்ன் முடிவு செய்துள்ளது. மாட்டிறைச்சியின் மேல்புறம், பன்றி இறைச்சி, வறுத்த ஆட்டுக்குட்டி கால் மற்றும் காய்கறி பருப்பு ரொட்டி ஆகியவை இங்கு பிரபலம். அதுவும் வார இறுதியில் இந்த உணவகத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.