Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மது கொடுத்து சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது! இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, பலவந்தமான முறையில் மது அருந்த வைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர், சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதன் பின்னர், அவரது இரண்டு நண்பர்களும் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவ…

  2. 2022இல் இந்தியாவில் ட்ரெண்டிங் ஆன சில விநோத நிகழ்வுகள் பட மூலாதாரம்,TWIN_THROTTLERS_FAMILY_FP 55 நிமிடங்களுக்கு முன்னர் '2022' இப்போதுதான் பிறந்ததை போல உள்ளது அதற்குள் இந்த வருடம் முடியப் போகிறது. வருடம் முடியப் போகிறது என்றாலே இந்த வருடம் முழுவதும் நடைபெற்ற வைரல் சம்பவங்களை நினைவுகூர்வது வழக்கமான ஒன்றுதானே. பொதுவாக ஒரு செய்தியோ, நபரோ அல்லது வீடியோவோ வைரல் ஆவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில் வைரலான நிகழ்வுகள் நாம் புருவத்தை உயர்த்தி இப்படி ஒரு செய்தியா என்று நம்மை ஆச்சரியப்படுத்தவும் வைக்கும். அப்படி கடந்த வருடத்தில் வித்தியாசமான காரணங்களுக்காக வைரலான சில நிகழ்வுகளை இங்கே …

  3. 'அரசு மணமகளை ஏற்பாடு செய்துதரவேண்டும்' ; இந்தியாவில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் பேரணி By T. SARANYA 22 DEC, 2022 | 03:38 PM இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் பேரணி நடத்தியுள்ளனர். இந்தியாவில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. சில மாநிலங்களில் பெண்களைத் திருமணம் செய்ய வரதட்சணை கொடுக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அது போல் திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் இணைந்து இந்தியாவில் மகாராஷ்டிராவில…

  4. பம்பலப்பிட்டியில் சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருட்டு! பம்பலப்பிட்டியில் உள்ள சொகுசு வீடொன்றில் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் மற்றும் பணத்தை நபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கியையும் சந்தேக நபர் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் இரகசியமாக நுழைந்த நபர் ஒருவர் சுமார் 25 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை திருடியுள்ளார். சந்தேகநபர் 5000 ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு நாணயம், தங்கம் மற்றும் வர…

  5. மூன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் சிறுவன் இரவு 7 மணிக்கு நித்திரைக்கு செல்லாத காரணத்தால் சிறுவனின் தாய் 119 பொலிஸ் அவசர பிரிவிற்கு புகார் தெரிவித்த சம்பவம் ஒன்று தம்புள்ளையில் இடம் பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது- தம்புள்ள பொலிஸாருக்கு இரவு நேரம் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி தமது பிள்ளை குழப்பம் செய்வதாகவும் குடும்ப அங்கத்தவர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தம்புள்ள பொலிஸார் இருவர் குறிப்பிட்ட இடத்துக்கு மோட்டார் சைக்கிள் மூலம் சென்றுள்ளனர். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வீட்டைத் தேடிப்பிடித்துள்ளனர். வீடு மூடப்பட்டு அமைதியாகக் காணப்பட்டுள்ளது. பொலிஸார் அவர்களை எழ…

  6. 4 கால்களுடன் பிறந்த பெண் குழந்தை : அதிர்ச்சியில் உறவினர்கள்..! 16 DEC, 2022 | 10:01 PM இந்தியாவின் மத்திய பிரதேசத்தில், நிறைமாத கர்ப்பிணிக்கு 4 கால்களுடன் பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் உறவினர்கள் மற்றும் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின், மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் சிக்கந்தர் கம்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை, குவாலியரில் உள்ள கமலா ராஜா மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். அங்கு, கடந்த புதன்கிழமை ஆர்த்திக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தக் குழந்தைக்கு நா…

  7. அல்வாயில் மோதல் – காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்! இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டி மீதும் வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் , அதில் இருந்த உயிர்காப்பு பணியாளர்களையும் அச்சுறுத்தி உள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை அல்வாய் வடக்கு பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதல் சம்பவத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டிக்கு , வன்முறை கும்பல் இடையூறுகளை ஏற்படுத்தி , உயிர்க்காப்பு பணியாளர்க…

  8. நித்யானந்தாவை விருந்துக்கு அழைத்த பிரித்தானிய எம்.பி.க்கள் : ஊடக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் By DIGITAL DESK 2 12 DEC, 2022 | 11:11 AM பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை பிரித்தானியாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தீபாவளி விருந்துக்கு அழைத்ததாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு - மைசூர் வீதியில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில் நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா தியான பீடம் என்றபெயரில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இவர் மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன்பின், பாலியல் வழக்கில் சி…

  9. பிக்கு மாணவர்களின் ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை : ஹோமாகம பௌத்த பல்கலையில் சம்பவம்! By Vishnu 13 Dec, 2022 | 11:25 AM ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் சித்திரவதைக்குள்ளான மூன்று மாணவ பிக்குகள் ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அபய என்ற சித்திரவதை அறையில் வைத்து கொடூரமான தாக்குதல் நடத்தி ஆடைகளை களைந்து பாலியல் வன்கொடுமை செய்தமை மற்றும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகள் குறித்தும் முறைப்பாடு செய்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். இலங்கையில் இரண்டு இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய சிரேஷ்ட மாணவர்கள் குழுவொன்று தொடர்ந்து குழப்பங்களை ஏற்படுத்தி வரு…

  10. 'கோவில்' படத்தில் புல்லட் பாண்டியை ஞாபகம் வைத்து விலங்குகள் பழிவாங்குவது போல் உண்மையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் பெண் புலியைக் கொன்ற வேட்டைக்காரனைத் தேடிவந்து ஆண் புலி கொன்றதாகச் செய்திகள் வெளியாகின. பழிதீர்க்கவே இதை அந்தப் புலி செய்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். ஆனால், விலங்கு ஆர்வலர்கள் அப்படித் திட்டம் போட்டுக் கொல்லும் திறன் புலிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்றனர். பழிவாங்கும் குரங்குகள்! இதே போன்று இமாச்சல் பிரதேசத்திலிருந்து உத்தரப்பிரதேசம் வரை பயணம் செய்த ஒரு பெண் சிறுத்தை பிடிபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையின் இந்த நீண்ட பயணத்தி…

  11. தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவத்தில் கேக் : செல்ஃபி எடுத்து சிலாகிக்கும் மக்கள்..! 10 DEC, 2022 | 07:26 PM நத்தார் பண்டிகையை முன்னிட்டு, திருச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவத்தில் 92 கிலோ எடையில் கேக் தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சியில் உள்ள பல்வேறு பேக்கரி நிறுவனங்கள், டிசம்பர் 25ஆம் திகதி கொண்டாடப்படும் நத்தார் பண்டிகைக்காக பல வகையான கேக்குகள் தயாரித்து மக்களின் பார்வைக்கு வைப்பது வழக்கம். அந்த வகையில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீ ராஜேஸ்வரி பேக்கரியில் தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் வலது கையை உயர்த்தியவாறு நிற்கும், சுமார் 6 அடி உயரம் க…

  12. யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் BIGGBOSS அப்பக்கடை! யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் “BIGGBOSS அப்பக்கடை” எனும் பெயரில் சிறிய தள்ளுவண்டி கடை ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையின் பெயரானது இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் பெயராக இருப்பதால் திறந்த இன்றையதினமே கடையானது பிரபல்யம் அடைந்துள்ளது. இதனால் குறித்த கடையில் மக்கள் பலர் வந்து அப்பம் சாப்பிடுவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. https://athavannews.com/2022/1314182

  13. உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் மற்றும் ஃபெராரி அணியின் நிறுவனர் என்சோ ஃபெராரி 18 நவம்பர் 2022 ஆக்னஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவரை அணுகிய ஓர் ஆண் ஆக்னஸிற்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார். அந்த நபர் நினைக்கும் நபர் நாம் இல்லை என்று உணர ஆக்னஸிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை. அதை அவர் தெளிவுபடுத்தியதும், ஆக்னஸை போன்று இருக்கும் ஒருவரை தனக்கு தெரியுமென அந்த நபர் கூறினார். தன்னைப் போன்று இருக்கும் எஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த நபரை முதலில் ஃபேஸ்புக் வழியாக ஆக்…

  14. யானைகளும் மனிதர்களைப் போல குறும்புத்தனம் செய்யக்கூடியவை என்பது, இந்த வீடியோவைப் பார்த்தால் புரியும்.

  15. மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு! By DIGITAL DESK 2 17 NOV, 2022 | 02:35 PM படபொல கொபெய்குடுவ பிரதேசத்தில் மடிக்கணினி வெடித்துச் சிதறியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொபெய்குடுவ பென்வல வீதி, இட்டிகெட்டிய பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ.செனத் இதுருவ என்ற மாணவனே கணனியை மடியில் வைத்துக்கொண்டு கணினியில் பணிபுரியும் போது அது வெடித்ததால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பலத்த காயமடைந்தவர் பலப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த மாணவன் அம்பலாங்கொட பகுதி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இ…

  16. Earbuds ஆபத்து: செவித்திறன் குறைந்தவரின் காதுக்குள் ஐந்து ஆண்டுகளாக இருந்த 'இயர் பட்ஸ்' - என்ன நடந்தது? 5 மணி நேரங்களுக்கு முன்னர் தனது செவித்திறன் குறைந்து வருவதாக நினைத்துக்கொண்டிருந்த ஒருவரின் காதுக்குள் 5 ஆண்டுகளாக இயர்பட்ஸ் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அது அகற்றப்பட்டுள்ளது. பிரிட்டனின் டோர்செட் பகுதியின் வேமெளத்தைச் சேர்ந்தவர் வாலஸ் லீ. இதுநாள்வரை இரைச்சல் மிக்க விமானத் துறையில் பணியாற்றியது அல்லது ரக்பி போட்டியின் போது ஏற்பட்ட பழைய காயம் தன்னுடைய செவித்திறன் குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம் என்று இவர் நினைத்துக் கொண்டிருந்தார். அண்மையில் அவர், உடலின் உட்பகுதியை …

  17. யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்த இளைஞன் கைது! 15 வயது சிறுமியுடன் குடும்பமாக வாழ்ந்து வந்த 22 வயதான இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் , சிறுமியொருவரை அழைத்து வந்து குடும்பமாக வாழ்கின்றார் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமியை மீட்டு , மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவ மனையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர். https://athavannews.com/2022/1310766

  18. யாழில் சரிந்து விழுந்த 200 வருட பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 01:05 PM யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று திங்கட்கிழமை (நவ. 14) இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்துள்ளது. குறித்த மரம் வீதியின் குறுக்காக சரிந்து விழுந்ததில் முன்னால் இருந்த வீட்டு மதில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வீதியில் பயணிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாண மாநகர சபையினரால் கச்சேரி நல்லூர் பிரதான வீதியானது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதோடு விழுந்த மரத்தினை அகற்றும் நடவடிக்கைகளை உரிய சம்பந்தப்பட்ட தரப்பினர் …

  19. அணிவகுத்து செல்லும் நண்டுகள்.. வழிவிட்டுச்செல்லும் மக்கள்- என்ன காரணம் தெரியுமா...? ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிவப்பு நண்டுகள், தங்களது வருடாந்திர வலசை பயணத்தை தொடங்கியுள்ளன. தினத்தந்தி கிறிஸ்துமஸ் தீவு, ஆஸ்திரேலிய நாட்டில் உள்ளது கிறிஸ்துமஸ் தீவு. இங்கு பார்க்கும் இடங்கள் எல்லாம் சிவப்பு நிறத்தில் நண்டுகளாக காணப்படுகின்றது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில், ஏராளமான சிவப்பு நண்டுகள் காணப்படுகின்றன. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் தான், நண்டுகளுக்கான இனப்பெருக்க காலகட்டம். இந்த மாதங்களில் சிவப்பு நிற நண்டுகள் காட்டு பகுதியிலிருந்து கடலை நோக்கி கூட்டமாக இடம்பெயர்கிறது. ஆண் நண்டுகள், தங்களின் இடங்களை விட்டு வெளியேறி, வழிப்பாதையில் அவர்க…

  20. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி நகர் முழுவதும் எறிந்த நபர் கைது By DIGITAL DESK 3 14 NOV, 2022 | 12:06 PM தனது காதலியின் கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் பல பகுதிகளிலும் எறிந்த குற்றச்சாட்டில் ஒரு நபரை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர். அப்தாப் அமீன் பூனாவாலா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 26 வயதான ஷ்ராதா எனும் யுவதியே கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான செய்திகளின்படி, மும்பையிலுள்ள பல்தேசிய நிறுவனமொன்றில் பணியாற்றிய ஷ்ராதா அங்கு, அப்தாப் அமீன் பூனாவாலாவை சந்தித்துள்ளார். இவர்கள் காதலித்துவந்த நிலைலயில், அவர்களின் திருமணம் செய…

  21. பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கி 18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்தவர் மரணம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெஹ்ரான் கரிமி நாசேரி 51 நிமிடங்களுக்கு முன்னர் 18 ஆண்டுகள் பாரிஸ் விமானநிலையத்தில் வசித்த இரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி மரணமடைந்தார். பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கிய நிலையில், கடந்த 1988ஆம் ஆண்டு ரோஸி சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் ஒரு சிறிய பகுதியை மெஹ்ரான் கரிமி நாசேரி தனது இல்லமாக்கினார். 2004 ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘தி டெர்மினல்’ திரைப்படம் இவருடைய அனுபவத்தை மையமாக வைத்து உருவானது. மெஹ்ரா…

  22. சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ குடும்பம் Play video, "சொத்துகளை விற்று 200 பூனைகளை வளர்க்க விரும்பும் 'சந்தோஷ் குடும்பம்'", கால அளவு 1,41 01:41 காணொளிக் குறிப்பு, பூனைகளை வளர்க்க வீடு, சொத்துகளை விற்று சந்தோஷம் அடையும் குடும்பம் 12 நவம்பர் 2022, 03:05 GMT பிரிட்டனின் நார்த் யார்க்ஷயர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம் கடந்த ஆண்டில் 200க்கும் மேற்பட்ட பூனைகளை தங்கள் வீட்டிற்குள் வரவேற்றுள்ளது. டினா லூயிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் முதல் கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு பூனைகளைத் தத்தெடுக்கத் தொடங்கினர். …

  23. பந்தயத்தின்போது தீப்பற்றிய கார் : ஜப்பானில் சம்பவம் By DIGITAL DESK 3 11 NOV, 2022 | 01:46 PM ஜப்பானில் நடைபெற்ற காரோட்டப் பந்தயத்தின் போது காரொன்று தீப்பற்றி அழிந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ஹையுண்டாய் (Hyundai) அணியின் கார் ஒன்றே இவ்வாறு தீப்பற்றியது. அக்காரின் சாரதிகளான ஸ்பெய்னைச் சேர்ந்த டெனி சோர்டோ மற்றும் கென்டிடோ கரேரா ஆகியோர் போட்டியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. மரங்கள் அடர்ந்த வீதியொன்றின் ஊடாக இக்கார் சென்றுகொண்டிருந்தபோது அது திடீரென தீப்பற்றியது. காரின் சாரதி டெனி சோர்டோ இதுதொடர்பாக கூறுகையில், காரின் ஆசனங்களுக்கு இடையிலிருந்து பெற்றோல் வாசனையும் தீயும் வருவதை த…

  24. மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணறொன்றில் இருந்து சடலமாக கண்டெடுப்பு! யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ…

  25. கோப்பாயில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவர் குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞனை அயலவர்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சிறுமி ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வேளை , இளைஞர் ஒருவரை தன்னை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். அதனை அவதானித்த சிறுமி கூக்குரல் இடவே அயலவர்கள் ஒன்று கூடி வீடியோ எடுத்த இளைஞனை மடக்கி பிடித்து நயப்புடைத்து கோப்பாய் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். https://athavannews.com/2022/1309618

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.