Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. குரங்குகளின் நடவடிக்கையால்... கிளிநொச்சியில், குளவி கொட்டுக்கு இலக்காகிய... 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி! கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) குளவி கொட்டுக்கு இலக்காகிய 25 மாணவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பகல் 1.30 மணியளவில் குரங்குகளின் நடவடிக்கையால் குளவி கூடு கலைந்துள்ளது. இதன் காரணமாக பாடசாலையை விட்டு வெளியேறுகின்ற நேரத்தில் பல மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து, அவர்கள் சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளரின் வாகனத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்…

  2. மரணம் அல்லாத... கழுத்தை நெரிக்கும், குற்றவாளிகளுக்கு... ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை! மரணம் அல்லாத கழுத்தை நெரிக்கும் குற்றவாளிகள், குடும்ப துஷ்பிரயோகச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். ஒரு புதிய குற்றம் நடைமுறைக்கு வந்த பிறகு பயத்தை கட்டுப்படுத்த அல்லது தூண்டும் முயற்சியில் தங்கள் நண்பர்களை கழுத்தை நெரிக்கும் துஷ்பிரயோகம் செய்பவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்கின்றனர். மரணம் அல்லாத கழுத்தை நெரித்தல் என்பது பொதுவாக யாரோ ஒருவர் கழுத்தை நெரிப்பது அல்லது வேண்டுமென்றே பாதிக்கப்பட்டவரின் மூச்சுத்திணறல் திறனைக் கட்டுப்படுத்த அல்லது பயமுறுத்துவதை உள்ளடக்குகிறது மேலும், இது அரசாங்கத்தின்…

  3. மிருசுவில் பெண் மீது... வாள் வெட்டு – 2 வருடங்களின் பின், ஒருவர் கைது! மிருசுவிலில் பெண் ஒருவரை வாளினால் வெட்டிக் காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 2 ஆண்டுகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டிலிருந்து வழங்கப்பட்ட பணத்துக்காக அந்தப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரியைச் சேர்ந்த 26 வயதுடையவரே கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார் . 2020ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் மீது வாள்வெட…

  4. இலங்கையின் இரண்டு விமான நிலையங்கள் மூடப்படுகிறதா? June 1, 2022 நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு விமான நிலையங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய, மத்தள மற்றும் ரத்மலான விமான நிலையங்களே மூடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விமான நிலையங்களுடான வருமானங்கள் குறைந்துள்ள நிலையில், அரசாங்கத்தின் செலவை குறைக்கு நோக்கிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. https://globaltamilnews.net/2022/177243

  5. மன்னாரில்... இரு குடும்பஸ்தர்களின், மரணத்திற்கான.... காரணம் வெளியானது! மன்னாரில் கடந்த திங்கட்கிழமை இரவு காரினுல் மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களும் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி காரில் பயணித்த இரண்டு இளம் குடும்பஸ்தர்களின் பிரேதப் பரிசோதனை யாழ் வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது. இதன் போதே மதுபானம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய மையினால் ஏற்பட்ட ஒவ்வாமை உயிரிழந்தமைக்கான காரணம் என தெரிய வந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 30 ஆம் திகதி இரவு மன்னாரிலிரு…

  6. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய... மாணவியை, துன்புறுத்திய சம்பவம் – முழுமையான விசாரணைக்கு உத்தரவு! க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அநுராதபுரம் ஹிடோகம பாடசாலை பரீட்சை நிலையத்தில் கடந்த 25ஆம் திகதி பரீட்சைக்குத் தோற்றிய மாணவியொருவர் பரீட்சை பார்வையாளரால் துன்புறுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவி தனது தாயுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். இதன்படி கண்காணிப்பாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறிய…

  7. இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.. இலங்கையின் யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த விமான நிலையத்தின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், யாழ்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிமர் செய்தி

  8. சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட கல்லடி மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்பு KalmunaiMay 28, 2022 (பாறுக் ஷிஹான்) சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தேடப்பட்ட மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த வியாழக்கிழமை(26) வழமை போன்று மட்டக்களப்பு மாவட்டம் கல்லடி இலங்கை மின்சார சபை காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கடமை நிமிர்த்தம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு சென்று மின்மானியை பரீட்சித்துள்ளார். பின்னர் அந்த வீட்டில் தாயுடன் நின்ற 9 வயது மதிக்கத்தக்க…

  9. யாழ். மதுபானசாலையில்... இரு குழுக்களுக்கு, இடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு! (காணொளி) மதுபானசாலையில் எழுந்த வாய்த்தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை வெளி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் நேற்று (திங்கட்கிழமை) மது அருந்திய இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்த்தர்க்கம் முற்றி இரு குழுவினரும் கைக்கலப்பில் ஈடுபட்டனர். அதன்போது ஒருவர் மதுபான போத்தல் ஒன்றினை உடைத்து இளைஞன் ஒருவரை குத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து அக்குழு அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் அங்கிருந்தவர்கள் போத்தல் குத்துக்கு இலக்கான இளைஞனை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்த…

  10. பெண்ணாக... சமூக ஊடகத்தில் உரையாடி, பணம் பறித்த ஆண் – வட்டுகோட்டையில் கைது! கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை கிழக்கைச் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இன்று(புதன்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வந்த கைபேசி அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார். அதன்பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அவர்கள் அந்தரங்கப் படங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். அதன்பின்னர் கைபேசியில் பேசிய பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபாய் பறித்துள்ளார். அதன்பின்…

  11. ஆசிரியர் அறைந்ததால்... செவிப்பறை பாதிப்பு – யாழ் வைத்தியசாலையில், மாணவன்! ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள பிரபல கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொலிஸ் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283212

  12. கோப்பாயில், அதிகாலையில்... தொடரும் வழிப்பறி கொள்ளைகள்! கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அதிகாலை வேளைகளில் வழிப்பறியில் ஈடுபடும் கும்பலின் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து செல்வதாகவும், அதனால் பலரும் பாதிக்கப்பட்டு வருதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அக்கறையின்றி காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோப்பாய் வீதியில் அதிகாலை 4 மணியளவில் முகம் முகத்தினை மறைத்தவாறு தொப்பி அணிந்துகொண்டு கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வருகிறது…

  13. யாழில்.... தென்னை மரம் விழுந்ததில், முதியவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80 ) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். அவர் தனது வீட்டில் மதியம் சாப்பிட்டுவிட்டு அலைபேசி கதைத்துகொண்டு வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்தபோது அவர் மீது பட்ட தென்னை மரம் காற்றுக்கு அடியோடு சரிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2022/12…

  14. யாழில் புறா வளர்ப்பில் போட்டி- பெற்றோல் ஊற்றி கூட்டோடு கொழுத்தப்பட்ட 50 புறாக்கள் யாழ். கொட்டடி பகுதியில் புறா வளர்ப்பில் ஏற்பட்ட போட்டியினால் சுமார் 50 புறாக்களுடன் இருந்த புறா கூட்டுக்கு விசமிகள் பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ளன.யாழ் நகரில் பூட்டு திருத்தும் கடை ஒன்றினை நடத்திவரும் நபர் ஒருவருடைய வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்தவர்கள் வெளியில் சென்றிருந்த நிலையில் புறா கூட்டுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்த விசமிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.இதனையடுத்து அயலவர்கள் கூடி தீணை கட்டுப்படுத்தினர் எனினும் 40 வரையான புறாக்கள் தீயில் எரிந்து இறந்த சில் எரிந்த காயங்களுடன் சில புறாக்கள் தப்பியுள்ளன. https://www.thaarakam.com/news/…

    • 5 replies
    • 631 views
  15. தென் இலங்கையில் இதுவரை கண்டிராத அபூர்வ விலங்கு! அச்சத்தில் மக்கள் மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் இனந்தெரியாத மிருகம் ஒன்று நேற்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மிதிகமவில் பல கிராமங்களில் சுற்றித்திரிந்த விலங்கினால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் இளைஞர்கள் குழுவொன்று நேற்று முன்தினம் முதல் இந்த விலங்கை தேடி வந்தனர். அதற்கமைய, நேற்று மிதிகம ஜெயவிஜய கிராமத்தில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த மிருகம் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன், மிருகம் ஆக்ரோஷமாக செயற்பட ஆரம்பித்தமையினால் கிராம மக்கள் அதனை கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர். நான்கு கால் மற்றும் நீண்ட வால் கொண்ட இந்த உயிரினத்தை இதுவரை பார்த்ததில்லை என கிராம மக்கள் …

  16. யாழ். பல்கலை மாணவிகள், தங்கியிருந்த வீட்டின் மீது... தாக்குதல்! யாழ்ப்பாணம் கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த தாக்குதக் சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 மோட்டார் சைக்களில் வந்த குழு வீட்டுக்குள் புகுந்து ஐன்னல்கள், கதவுகளை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த வீட்டில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவிகள் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2022/1282208

  17. Started by valavan,

    புரூஸ்லீ எனும் ஒப்பற்ற கலைஞனின் இறுதி பயண காணொலி பதிவு இது காப்புரிமை காரணமாக எப்போது வேண்டுமானாலும் இந்த இணைப்பு நீக்க படும் என்கிறார்கள்.. உண்மை பொய் தெரியாது அதுக்கு முதல்...பாக்காதவர்கள் மட்டும் பாத்துவிடலாமே... 6:54 ல் அவர் முகம் தெரிகிறது .

  18. வெசாக் தினத்தினை முன்னிட்டு... வவுனியா சிறையில் இருந்து மூவர் விடுதலை. அவர்களில் இருவர், மீண்டும்... சிறையில் அடைக்கப்பட்டனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் இன்று ( ஞாயிற்கிழமை ) விடுதலை செய்யப்பட்டனர். இன்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 244 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மூன்று பேர் இன்று இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் . எனினும் https://athavannews.com/2022/1281931

  19. வாசிப்பவர்களுக்கு தலை சுற்றினால் சங்கம் பொறுப்பேற்காது. அதிர்ச்சி தகவல் 1000லட்சம் கோடி ரூபாய்கள் இலங்கை கடனை அடைத்து மிகுதி இருக்கும் போல #Anonymoushelpsrilanka - இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் மறைக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் அம்பலம்! இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்துவைக்கப்பட்ட சொத்துக்களை வெளிப்படுத்தும் உலகப் புகழ்பெற்ற #anonymoushackers குழு இணையத்தில் சிறப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. முன்னதாக #AnonymousSaveSriLanka குழு இலங்கையில் ஆட்சியில் இருந்து ராஜபக்சேக்கள் விலக 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும், 14 நாட்களுக்குள் அவர்கள் வெளியேறாவிட்டால், மறைத்து வைக்கப்பட்ட சொத்துகள் அனைத்தும் வெளிவரும் என்றும…

  20. தனது சேமிப்பு பணத்தை... இலங்கை மக்களுக்கு, வழங்கிய சிறுமி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை இலங்கை மக்களுக்காக கையளித்துள்ளார். இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை நேற்று (சனிக்கிழமை ) அவர் கையளித்துள்ளார் . இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதோடு,பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1280638 Category: இலங்கை கொழும்பு

  21. ஒரே பிரசவத்தில் பிறந்த 9 குழந்தைகளின் நிலை இப்போது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SALOUM ARBY படக்குறிப்பு, வரலாற்றிலேயே இவர்களை தவிர இன்னும் இரண்டு முறைதான் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தன. ஆனால், அவர்கள் உயிர் பிழைக்கவில்லை. 2021-ஆம் ஆண்டு மே -4ஆம் தேதியன்று, மொராக்கோவின் காசாப்ளாங்காவில் உள்ள ஐன் போர்ஜா மருத்துவமனையில் மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸேவுக்கு ஒன்பது குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தன. உலகளவில் உயிரோடு ஒரே பிரசவத்தில் அதிகபட்சமான குழந்தைகள் பிறந்துள்ளது இதுவே முதல்முறை. உலகில் ஒரே பிரசவத்தில் அப்போது பிறந்த ஒன்பது குழந்தைகளுக்கும் இந்த ஆண்டு மே 4-ஆம்…

  22. கேரளாவில், பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவின் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா, அதே பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றார். வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு பொலிஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கும் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (R) Tamilmirror Online || பரோட்டா பார்சலில் பாம்புத் தோல்

  23. பழிவாங்கும் நோக்கில்... பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு... தீ வைத்த மாணவர்கள்..! பாணந்துறை கெசல்வத்தையில் உள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை கண்டித்த அதிபரை பழிவாங்கும் நோக்கில் பாடசாலை அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பாணந்துறை கெசல்வத்த ஸ்ரீ ஜினா தர்மதான வித்தியாலயத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து பாணந்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இந்த தீ விபத்தில் பாடசாலை அதிபர் அலுவலகம் மற்றும் கணினி அறை ஆகியவை சேதமடைந்தன. குற்றச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி நடத்திய விசாரணையில், அதே பாடசாலையில் ப…

  24. வடமராட்சியில்... வீதியில் மயங்கி விழுந்த சிறுவன், உயிரிழப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் சிறுவன் ஒருவன் வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். துன்னாலை பகுதியை சேர்ந்த மகிந்தன் நிரோஜன் (வயது 08) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றின் அருகில் வீதியில் மயங்கி விழுந்துள்ளான். அதனை அவதானித்தவர்கள் சிறுவனை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.