Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கொழும்பில்... 5 இடங்களில் குண்டுத் தாக்குதல், என்ற செய்தியில் உண்மையில்லை – பொலிஸார் கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இருப்பினும் குறித்த செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார். வெள்ளவத்தை, தெஹிவளை, நுகேகொடை, கல்கிசை மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளில் இந்த குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாக போலியான தகவல்கள் பரப்பப்படுகின்றன. எவ்வாறாயினும், அவ்வாறு வெளியான தகவல்களில் உண்மையில்லை என அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக …

  2. 'நல்ல தகப்பனா இருந்தா இத செய்யக்கூடாது' - எச்சரிக்கும் Anand Srinivasan | Micro 'நல்ல தகப்பனா இருந்தா இத செய்யக்கூடாது' - எச்சரிக்கும் Anand Srinivasan | Micro எனது உறவுகளுக்கு மக்களுக்கு வாகனம் சம்பந்தமாக சொல்லும் செய்யும் அறிவுரைகள் இதிலும் இருப்பதால்.................??

  3. இலங்கையில் நடைபெறவிருந்த... திருமதி உலக அழகிப் போட்டி, அமெரிக்காவுக்கு மாற்றம்! இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2021 திருமதி உலக அழகிப் போட்டியை அமெரிக்காவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. 2021 திருமதி அழகிப் போட்டியை இலங்கையில் நடத்துவதென 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தீர்மானிக்கப்பட்டது. எனினும், தற்போது குறித்த போட்டியை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021 திருமதி அழகிப் போட்டி எதிர்வரும் 2022 ஜனவரி 15ஆம் திகதி லாஸ் வேகாஸில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. https://athavannews.com/2021/1232472

  4. குளியாபிட்டி-போஹிங்கமுவ பகுதியிலுள்ள இந்து ஆலயமொன்றின் குருக்கள் ஒருவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆலயத்தின் குருக்கள் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார். மகளின் காதல் தொடர்பை முறிப்பதற்காக போஹிங்கமுவ பகுதியில் வசிக்கும் தாயொருவர், தனது 15 வயதான மகளுடன் கடந்த 26ஆம் திகதி ஆலயத்திற்கு சென்றுள்ளார். இதன்போது, ஆலயத்தின் குருக்களினால் சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேக நபரான குறித்த குருக்கள், பிரதேசத்தை விட்டு தப்பிச…

  5. பெண்ணொருவருக்கு... ஒரே நாளில், இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை குறித்து விசாரணை கண்டியில் வயதான பெண்ணொருவருக்கு ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்தார். பேராதனை – ஒகஸ்டா தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளச் சென்றபோது, தற்செயலாக அவருக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவர் மயக்கமடைந்ததுடன், பல உபாதைகளுக்கும் உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அங்கு அவருக்கு உடனடியாக ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், அதன் பின்னர் அவர் பேரதெனிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

  6. புறா வளர்க்கும் இளைஞர்களிற்கிடையிலான உரசல், பெரியவர்களின் முட்டாள்த்தனமான நடவடிக்கையால் விபரீதத்தில் முடிந்துள்ளது. பெண்கள் என்ற பெயரில் பேயாட்டம் ஆடியவர்களால் ஒரு உயிர் பறிபோயுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் 20 வயதான புவனேந்திரராசா சுகந்தன் என்ற இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பேயாட்டம் ஆடி பெண்கள், அந்த இளைஞனை பிடித்து, முகத்தில் மிளகாய்த்தூள் தூவி, பச்சை மிளகாய் தடவி, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தமையினாலேயே இளைஞன் தற்கொலை செய்ததாக உறவினர்களால் குற்றம்சாட்டப்படுகிறது. பேயாட்டம் ஆடிய பெண்கள் மீது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலை…

  7. யாழில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் நபரொருவர் ஒரு தலைக் காதல் விவகாரத்தால் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு, தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழில் உள்ள அரச திணைக்களத்தில் பணியாற்றி வரும் ஆண் ஊழியரொருவர், அங்கு கடமையாற்றும் சக பெண் ஊழியர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரின் காதலை பெண் ஊழியர் ஏற்க மறுத்து வந்த நிலையில், அவர் அப்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தொந்தரவு தாங்க முடியாத அப்பெண் ஒரு கட்டத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகார…

  8. இராஜாங்க அமைச்சரின்... ஒருங்கிணைப்பு செயலாளர், என கூறி 12 மில்லியன் மோசடி !! இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவின் ஒருங்கிணைப்பு செயலாளர் என ஆள்மாறாட்டம் செய்து 12 மில்லியன் மோசடி செய்த ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். களனியில் வசிக்கும் சந்தேகநபர் பதுளையில் உள்ள ஒருவரிடம் வாகனம் வாங்குவதற்காக பணத்தை மோசடி செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் பாதிக்கப்பட்டவரிடம் இராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறி போலி அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை காட்டி ஏமாற்றியுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 28 வயதுடையவர் என்றும்குறித்த நபர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். https:/…

  9. இப்படியும் மனிதர்கள் அலீஷா, ஃப்ரான்சிஸ்கா, ரஹீம், டாக்டர் சுப்பிரமணிய ஐயர் வலையில் பிடித்தது | சிவதாசன் இன்று முகநூலில் கிடைத்த ஒரு விடயம் பற்றி மேலும் அகழ்வாய்வு செய்தபோது கிடைத்த விடயங்கள் இவை. கடவுள் மனிதரைத் தன்னுருவத்தில் படைத்தார் எனப் பல மதங்களும் நம்புகின்றன. இருந்துமென்ன அதை நிரூபிக்க வேண்டாமா? இன்று முகநூலில் கிடைத்த படம் இது. இதில் தன் கரங்களை மகிழ்ச்சியுடன் தூக்கிக் காட்டிக்கொண்டு நிற்பவர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர், மேஜர் அப்துல் ராஹிம். அவருக்கு முன்னால் கரங்களைக்கூப்பி நிற்பவர்கள் கேரளாவைச் சேர்ந்த கால…

    • 0 replies
    • 383 views
  10. ஆணமடுவ பிரதேசத்தில், பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட தாதியை பௌத்த பிக்கு ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது கடுமையான வலி ஏற்பட்டதாகத் தெரிவித்து, ஆத்திரமுற்ற பௌத்த பிக்கு குறித்த தாதியை கண்ணாடி தட்டினால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் தாதியின் தலையில் பலத்த காயமம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆணமடுவ ஆதார வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி வரும் தாதியொருவர் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். ஆணமடுவ குமாரகம விஹாரையைச் சேர்ந்த பௌத்த பிக்குவே இவ்வாறு தாதியை தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான தாதியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக வைத…

  11. கழிவறையில்... மாத்திரைகளை, வீசிய ரிஷாத் பதியுதீன் - கண்டுபிடித்த சிஐடி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது, சிறுமி இறந்த மறுநாள் உடல் நலக்குறைவு காரணமாக ரிஷாத் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஒரு தனி கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ள நிலையில், அவர் ஒவ்வொரு நாளும் அதைப் பயன்படுத்தச் சென்ற போது, சிஐடி அதிகாரிகள் அவதானத்துடன் இருந்துள்ளனர். அதன்படி, அவர் இன்று கழிப்பறைக்குச் சென்று போது ரகசியமாக ஒரு துண்டு காகிதத்தை தனது உள்ளங்கையில் வைத்திருந்ததை சிஐடி அதிகாரிகள் அவதானித்துள்ளனர். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கழிப்பறைக்குள் சென்று கையில் இருந்த காகி…

    • 5 replies
    • 641 views
  12. துப்பாக்கியுடன் செல்ஃபி: குண்டு பாய்ந்து பலியான சோகம்! மின்னம்பலம்2021-07-25 துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளம்பெண், குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவர் மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷுக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் கொண்ட ராதிகாவுக்குத் துப்பாக்கியை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்க ஆசை இருந்திருக்கிறது. இந்த நிலையில் குண்டு நிரப்பப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கியைத் தன் நெஞ்சில் நிறுத்தியபடி, டிரிக்கரில் கையை வைத்துக்க…

  13. தேரர்கள்... சிலருக்கும், கொரோனா! ஹபராதுவ – லியனகொட பகுதியிலுள விகாரை ஒன்றிலுள்ள 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. https://athavannews.com/2021/1230220

    • 1 reply
    • 375 views
  14. பிறந்து 5 நாளேயான சிசுவை விற்ற தாய் – யாழில் சம்பவம்! பிறந்து ஐந்து நாட்களான சிசுவை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸார் இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நெல்லியடி – மந்திகை மருத்துவமனையில் அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய இந்த விசாரணை நடத்தப்படுகிறது எவ்வாறாயினும் குறித்த சிசுவின் தாயார் திருமணமாகாதவர் என்றும் அவர் சிசுவை விற்பனை செய்துவிட்டார் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. https://newuthayan.com/பிறந்து-5-நாளேயான-சிசுவை-வ/

  15. ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது! திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் இன்று (திங்கட்கிழமை) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை-மட்கோ,மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கதக்க துலாஸ் மதுசங்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 14 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், குறித்த நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் …

  16. ஈரானில் நீர் பற்றாக்குறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கொலை தென்மேற்கு ஈரானில் நிலவும் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்த்து இரண்டாவது நாளாக இடம்பெற்ற போராட்டத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்செயலாக வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களால் குறித்த நபர் தாக்கப்பட்டதாக குஜெஸ்தான் மாகாணத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு ஐ.ஆர்.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் ஈராக்கின் எல்லையில் அமைந்துள்ள குஜெஸ்தானில் உள்ள அரபு சிறுபான்மையினத்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த மரணத்திற்கு பாதுகாப்பு படையினர்தான் காரணம் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன. ஈரானில் நிலவும் கடுமையான வறட்சி…

  17. மத்திய பிரதேசத்தில்... கிணற்றுக்குள் விழுந்த, 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்! மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குழந்தையொன்று கிணற்றுக்குள் விழுந்துள்ளது. குறித்த குழந்தையை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை சுற்றி இருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர். அவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதம் இரு…

  18. கணவரின் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், ஆவணங்கள், செய்திகள் அல்லது வேறேதும் தகவல்களை, கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு சேகரிப்பதற்கு, அவரின் மனைவிக்கு தடையுத்தரவு பிறப்பித்து கல்கிஸை மாவட்ட நீமன்றம் கட்டளையிட்டுள்ளது. தான் வீ்ட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் தனது தனிப்பட்ட கணினியிலுள்ள தகவல்களை தன்னுடைய மனைவி ஆராய்கிறார் என குற்றஞ்சுமத்தி கணவரொருவரால் கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது மனைவிக்கும் தனக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு இதே நீதிமன்றத்தில் நிலுவவையில் உள்ள நிலையில், தனது பல்வேறுபட்ட தகவல்களையும் தொலைபேசி உரையாடல்ளையும் தனது அறையில் ஒலி கண்காணிப்பு சாதனத்தைப் பொருத்தி, தன்னுடைய மனைவி தரவிறக்கம் செய்து…

  19. திருமணம் செய்யவுள்ள மணமக்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதி! திருமண பந்தத்தில் இணையும் மணமகன், மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களில் வசிப்பவர்களாயின் அவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகளின் போது, திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1228385

  20. யாழ்.சுழிபுரம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் இடத்தை முற்றுகையிட சென்றிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, சுழிபரம் – வறுத்தோலை பகுதியில் கசிப்பு காய்ச்சப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அடையாளம் காணப்பட்ட வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன்போது வீட்டிலிருந்து வெளியேவந்த பெண்கள் பொலிஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதன்போது அயல் வீட்டு இளைஞன் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், அந்த இளைஞனே பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக பொலிஸார் முன்னிலையில் இளைஞன் மீது பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது வீட்டுக்குள்ளிருந்து வந்த ஆண் ஒருவரும் இளைஞன் மீது தா…

  21. யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டிப் பகுதியில் மனைவி மீது கணவன் கத்தியால் வெட்டிப்படுகாயப்படுத்திய சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. நெல்லியடி பொலிஸ் பிரிவில் தனது மனைவியை நடுவீதியில்விரட்டி விரட்டி வெட்டிய கொடூர கணவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மனைவியை நடுவீதியில் விழுத்தி சரமாரியாக வெட்ட ஆரம்பிக்க, வீதியில் சென்ற பொதுமக்கள் துரிதமாக செயற்பட்டதால் குடும்பப் பெண் மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ளார். இன்று (12) மதியம் இந்த கொடூர சம்பவம் நடந்தது. நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மத்தொனி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. படுகாயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடூரன் தலைமறைவாகி விட்டான். 38 வயதான பாதிக்க…

    • 0 replies
    • 588 views
  22. கடன் காசை... திருப்பி கேட்டவர் மீது, கத்திக்குத்து- யாழ்ப்பாணத்தில் சம்பவம் கடன் காசை திருப்பி கேட்க சென்றவர் மீது தந்தையும் மகனும் சேர்ந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மோகனராஜா ரஜீவன் (வயது 37) என்பவரே காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகளான தந்தையையும் மகனையும் கோப்பாய் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2021/1226888

  23. லண்டன் - கொழும்பு விமானம் பெற்றோல் இல்லாமல் திருவனந்தபுரத்தில் இறக்கம் லண்டனில் இருந்து, கொழும்பு வந்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானம் போதியளவு எரிபொருள் இல்லாமல் போனதால், அவசரமாக திருவனந்தபுரத்தில் தரை இறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டு கொழும்பு பறந்தது. இது குறித்து பயணிகள் விசனம் தெரிவித்த போது, குவைத் விமான நிலையத்தின் ரேடார் பழுதாகிய காரணத்தினால், அந்த நாட்டின் வான் பரப்பில் பறக்க அனுமதி கிடைக்காமல் நீண்ட தூரம் சுத்தி பறக்க வேண்டி இருந்ததால், எரிபொருள் முடிந்து விட்டதால், அவசரமாக திருவனந்தபுரத்தில் இறக்க வேண்டி இருந்ததாக சொல்லி உள்ளார்கள். நல்லா விடுறீங்கப்பு ரீலு என்கிறார்கள் பலர்.... குவைத் மீது பறக்க முடியாவிடில், அமெரிக்கா பக்கமாக சுத்தியா பறந்…

    • 17 replies
    • 933 views
  24. பிள்ளையானுக்கு இராஜாங்க அமைச்சுப்பதவி? ஸ்ரீலங்காவில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர், அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்போது, ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கின்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் சில முஸ்லிம் எதிரணி உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்காவில் ஒவ்வொரு வருடத்திற்குமான வரவு செலவுத் திட்டத்தின் முன்னரும் அல்லது பின்னரும் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்படுகின்றது. அந்த வகையில் எதிர்வரும் சில வாரங்களில் ஸ்ரீலங்கா அமைச்சரவையில் மாற்றமொன்று இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை இடம்பெறுகின்ற …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.