Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கொழும்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்ற கொவிட்-19 தொற்றாளர் கொழும்பு டி சொய்சா மகப்பேற்று மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை இன்று(17) பிரசவித்துள்ளார். மருதானையைச் சேர்ந்த 29 வயது பெண்ணுக்கே இரு பெண் குழந்தைகளும் இரு ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக அறிய வருகிறது. கொழும்பில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்ற கொவிட்-19 தொற்றாளர் – Thinakkural

  2. நிறைமாத பசுமாடு ஒன்றினை இனம் தெரியாத நபர்கள் கடத்தி கொலை செய்து இறைச்சி ஆக்கியுள்ளனர். வேலணை 7ஆம் வட்டார பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்று வளர்த்து வந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான கறவை பசு மாட்டினை இனம் தெரியாதவர்கள் கடத்தி சென்று இறைச்சியாக்கியுள்ளனர். குறித்த பசுமாடு 20 நாள்களுக்குள் கன்று ஈனுவதற்கு இருந்தாக அதனை வளர்த்தவர்கள் தெரிவித்தனர். அத்துடன் அது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தீவக பகுதிகளில் இனம் தெரியாதவர்கள் வளர்ப்பு மாடுகளை கடத்தி இறைச்சியாக்கி யாழ்ப்பாணத்திற்கு கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். அதனை கட்டுப்படுத்…

  3. தமிழர்களின் பூர்வீக காணியை சிங்கள பேரினவாதிகளுக்கு தாரைவார்க்கும் தமிழன் ii December 16, 20205:20 pm இலங்கை கிழக்கு மாகாண ஆளுனருடன் சேர்ந்து தனது சுய வருமானத்துக்காக தமிழர்களின் காணிகளை சிங்கள மயமாக்க அயராது பாடுபடும் ஒருவரில் இந்த ஹரி பிரதாப் செயற்ப்பட்டு வருகின்றார் கிழக்கு மாகாண சுற்றுலா துறை இணைப்பாளர் என்ற போர்வையில் ஆளுனருடன் சேர்ந்து தமிழர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் தனது மதுபான விற்பனை நிலையம் மற்றும் தனது சுயதொழில் காரணமாக இவ்வாறு செயற்படுவது இவரது நடவடிக்கையாக இருக்கின்றது. மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர் விவகாரத்திலும் இவருடைய செயற்பாடு காரணமாக தற்ப்போது அவர்களின் மேய்ச்சல் தரையை சிங்களவர்களுக்கு தாரைவார்கப்ப…

  4. தானாக கடைக்குப் போய் வரும் ஆச்சர்ய நாய்... `நாலு கால் தேவதை' சீனுவும் விவேகானந்தனும் #Video மணிமாறன்.இரா விவேகானந்தனுடன் சீனு விவேகானந்தனின் வளர்ப்பு நாயான சீனு செய்யும் செயல்களைப் பார்த்து ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள் ஊர்க்காரர்கள். புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்ப்பட்டி அருகே சேந்தாக்குடியில் இருக்கிறது விவேகானந்தனின் குடிசை. அதன் ஒரு மூலையில் இருக்கிறது சீனுவின் கூடாரம். தான் வளர்க்கும் பெண் நாய்க்கு சீனு என்று பெயர்வைத்து, பிள்ளைபோல பாராட்டிச் சீராட்டி வளர்க்கிறார் விவேகானந்தன். விவேகானந்தனின் சொல்லை அப்படியே கேட்கும் சீனு, தன் வேலைகள் பலவற்றைத் தானே பார்த்துக்கொள்கிறது. விவேகானந்தன் சொல்லும் வேலைகளையும் தட்டாமல் செய்கிற…

  5. பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர்! November 29, 2020 கஜகஸ்தானைச் சேர்ந்த யூரி டோலோச்ச்கோ (Yuri Tolochko) என்ற நபர் (Body Builder) மார்கோ (Margo) என்ற பொம்மையை 8 மாதங்களாகக் காதலித்து திருமணம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரலாற்றில் இதுபோன்றதொரு வித்தியாசமான காதலை எங்கும் நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இதைப் பற்றி பலவிதமான கற்பனைகளுடன் இணையதளத்தில் பலரும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந் நிலையில் குறித்த நபர் தனது திருமண விழாவின் ஒரு சிறு காணொளிப் பதிவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. https://thinakkural.lk/article/93…

    • 3 replies
    • 690 views
  6. பிரபல ஆபாசப்பட வலைதளமான பார்ன்ஹப், பயனர்களால் பதிவேற்றப்பட்ட பல காணொளிகளை, தன் வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வண்புணர்வு தொடர்பான காணொளி பதிவுகள் பார்ன்ஹப்பில் கூடுதலாக இருப்பதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் செய்தி வெளியானதற்கு, பார்ன்ஹப் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. பார்ன்ஹப் ஒரு பிரபலமான ஆபாசப்பட வலைதளம். இந்த வலைதளத்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது & பாலியல் வண்புணர்வு போன்ற காணொளிகள் பதிவேற்றப்பட்டு இருந்தன. நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு செய்தி, குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட காணொளிகள், பார்ன் ஹப்பில் அதிகமாக இருந்ததைக் சு…

  7. ``ஸ்கூபிக்கு பார்வை கிடையாது!' - நெட்டிசன்களை நெகிழவைத்த ரமேஷ் சென்னிதாலாவின் `குட்டி ஸ்டோரி' சிந்து ஆர் வளர்ப்பு நாய் ஸ்கூபியுடன் ரமேஷ் சென்னிதாலா ``ஸ்கூபி எனச் சத்தமாக அழைத்தால், அது வேகமாக வந்து என் மனைவி அனிதாவின் காலில் இடித்து நிற்பதைக் கவனித்தோம். கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான், ஸ்கூபிக்கு பார்வை இல்லை என்ற விஷயம் தெரியவந்தது" கேரள மாநிலம் கொச்சியை அடுத்த நெடும்பாசேரி பகுதியில், யூஸப் என்பவர் தனது வீட்டில் வளர்த்த நாயை காரின் பின்புறம் கயிற்றால் கட்டி ரோட்டில் இழுத்துக்கொண்டு சென்ற சம்பவம் சில நாள்களுக்கு முன்பு நடந்தது. பைக்கில் சென்ற அகில் என்ற இளைஞர் தனது மொபைல்போனில் இந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்த…

    • 1 reply
    • 382 views
  8. தாயின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட இரு மகன்கள் உயிரிழப்பு மீரிகம– கீனதெனிய பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஸ்பிரித் அடங்கிய ஒருவகை மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளதாவது, “நேற்று (திங்கட்கிழமை) இரவு, நால்வர் கொண்ட குழுவொன்று மதுசாரம் அருந்தியமை தொடர்பாக எமக்கு தகவல் கிடைத்தது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 54 மற்றும் …

  9. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் தாயும் மகளும் தங்கள் வாழ்க்கை இணையுடன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்துள்ளது என பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. அங்கு அரசாங்க உதவியுடன் நடைபெற்ற 63 திருமணங்கள் ஒன்றாக ஒரே நாளில் நடத்தி வைக்கப்பட்டது. அதில் கணவரை இழந்த தாய் ஒருவரும், அவரது இளைய மகளும் தத்தமது துணையைத் திருமணம் செய்து கொண்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கோரக்பூரின் பிப்ரலி கிராமத்தில்தான், டிசம்பர் 10ஆம் தேதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது. 53 வயதான பெலி தேவியின் கணவர் ஹரிஹர் 25 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். அவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். தற்போது பெலி தேவி ஹரிஹரின் சகோதரர் ஜகதீஷை திருமணம் செய்து கொண்டுள்…

  10. தனிமைப்படுத்தல் நிலையத்தில் கொள்ளை: நால்வர் கைது வாழைச்சேனை- புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த நான்கு நோயாளிகள், கொள்ளை சம்பவமொன்று தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த இலத்திரனியல் பொருட்கள் சிலவற்றை களவாடியுள்ளதாக வைத்தியர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸாரினால் இவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த குறித்த சந்தேகநபர்களின் தனிமைப்படுத்தல் செயற்பாடு கடந்த 12ஆம் திகதி நிறைவடைந்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெ…

  11. அண்மையில் தனது முகப்புத்தகக் கணக்கில் முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பாக பதிவேற்றம் செய்த பதிவொன்றின் விளைவாக தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறிய நியூஸ் பர்ஸ்ட் செய்தி வாசிப்பாளர் பஸ்லுல்லாஹ் முபாரக்கின் தெலிவூட்டல் பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது. "விபச்சாரம் என்று ஏன் நான் குறிப்பிட்டேன்? முதலில் அந்தப் பதிவு முற்றிலும் இஸ்லாமியப் பெண்கள் குறித்தானது. #Hashtag பார்த்தால் அது நன்கு தெரியும். வேறு இனப் பெண்களை இதில் ஒவ்வொருத்தரும் சம்பந்தப்படுத்திக் கொண்டது, அது அவரவர் சிந்தனை மட்டம். இஸ்லாத்தின் பார்வையில் எப்படி என்பதை தவிர அடுத்த மதங்களை இங்கு எங்கும் குறிப்பிடவில்லை “மறைக்க வேண்டியதை” என்று குறிப்ப…

    • 8 replies
    • 1.2k views
  12. தர்மபுரி கோரவிபத்து நெஞ்சை பதற வைக்கும் CCTV காட்சிகள்

  13. தெற்காசியாவின் மிகப்பெரிய இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ஒன்று இன்று (12) கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் (IPZ) திறக்கப்பட்டது. இந்த இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை ரூ. 1.5 பில்லியன் முதலீட்டில் உள்ளூர் தொழிலதிபர் ஒருவரினால் 3 ஏக்கர் நிலப்பரப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இறைச்சி தொடர்பான தயாரிப்புகளுக்கான சர்வதேச சந்தை தேவைகளில் 10% பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. $ads={2} இந்த தொழிற்சாலை 300 வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன் உள்ளூர் பாரம்பரிய உணவு வகைகள் பிரீமியம் தரம் மற்றும் அதன் தயாரிப்புகளை மாலைதீவு, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான இலக…

    • 0 replies
    • 461 views
  14. மனித தவறால் உயிரிழந்த பரிதாபம்: ‘நாங்களே குற்றவாளிகள், எங்களை மன்னித்துவிடு’ - உருவ பொம்மையை வைத்து காட்டெருமைக்கு அஞ்சலி புனே, புனே கோத்ரூட் பகுதியில் உள்ள மகாத்மா குடியிருப்புக்குள் கடந்த புதன்கிழமை காலை காட்டெருமை ஒன்று புகுந்தது. சுமார் 6 மணி நேரம் போராடி வனத்துறையினர் அந்த காட்டெருமையை பிடித்தனர். எனினும் காட்டெருமையை பிடித்தபோது, அதுக்கு வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அது பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் காட்டெருமையை பிடிக்க கையாண்ட தவறான அணுகுமுறையே அதன் சாவுக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தது. பொதுமக்கள் கூட்டமாக திரண்டு காட்டெருமையை ப…

  15. கொரோனாத் தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் சமல் ராஜபக்‌ஷ 1 Views ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் சகோதரரான அமைச்சர் சமல் ராஜபக்ஷ தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய விவசாய திணைக் களப் பணிப்பாளருடன் இவர் நெருக்கமாக இருந்துள்ளார் என்று கூறப்படுகின்றது. இதன் காரணமாக அமைச்சர் சமல் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே அவர் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது https://www.ilakku.org/கொரோனாத்-தொற்று-சந்தேகத்/

  16. ATM மையத்துக்குள் ஆயுதத்துடன் புகுந்தவனை போராடி விரட்டிய காவலாளி

  17. சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று.! உலகளாவிய ரீதியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. 1950 டிசம்பர் 4ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் 317வது கூட்டத் தொடரில் சர்வதேச மனித உரிமை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் யோசனை திட்டத்தின் 423 (ஏ) பிரிவுக்கு அமைய ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் டிசம்பர் 10ஆம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொண்டன. அனைத்து இனத்தவர்களுக்கும் மனித உரிமைகளை உறுதிசெய்தல், உலகளாவிய ரீதியில் எழும் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணல் மற்றும் மனித உரிமைகளை பலப்படுத்தல் ஆகியவை சர்வதேச மனித உரிமை தினத்தின் நோக்கமாகும். ஐக்கிய ந…

  18. யாழ்ப்பாணம், தென்மராட்சி நுணாவில் A - 9 வீதியில் கார் ஒன்றின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் டயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவநேரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காரில் பயணித்துள்ளனர். அவர்களில் நான்கு வயதுடைய சிறுவன், 35 வயதுடைய பெண் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் மூவரும் படு…

  19. உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட்டின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட உயரம் அறிவிப்பு! உலகின் மிக உயரமான மலை எவரெஸ்ட் முன்பு அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்பட்டதை விட 0.86 மீ உயரத்தில் உள்ளது என்று நேபாளமும் சீனாவும் கூட்டாக அறிவித்துள்ளன. மறுமதிப்பீடு செய்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848.86 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1954ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை இந்திய நில அளவைத் துறை அளவிட்டது. அப்போது அந்த சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என அறிவிக்கப்பட்டது. உலகின் மிக உயர்ந்த மலையான எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றம் ஏ…

  20. ஹாலி ஹாண்டெரிச் பிபிசி செய்தியாளர், வாசிங்டன் 8 டிசம்பர் 2020 பட மூலாதாரம்,ARIEL PANOWICZ / WWW.ARIELPANOWICZ.COM அமெரிக்காவில், நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த 61 வயது பெண்மணி, தன் மகன் மற்றும் அவரது கணவரின் குழந்தையை தானே பெற்றெடுத்து இருக்கிறார்.'என்ன மகன் மற்றும் கணவரின் குழந்தையா?' என்று குழப்பமாக இருக்கிறதா? சிசில் எலெட்ஜ் என்பவர் தான் அந்த 61 வயது பெண் மணி. இவரின் மகன் பெயர் மேத்திவ் எலெட்ஜ். மேத்திவ் எலெட்ஜின் கணவர் பெயர் எலியட் டக்ஹர்டி. (மேத்திவ் எலெட்ஜ் மற்றும் எலியட் டக்ஹர்டி ஒரே பாலின திருமணம் செய்து கொண்ட ஆண்கள்). தன் மகன் மற்றும் அவரது கணவரின் அழகிய பெண் குழந்தையா…

  21. ராஜஸ்தானில் மணமகளுக்கு கொரோனா தொற்று; பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி பரா, ராஜஸ்தானில் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. அதற்கு முன், மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில், மணமகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. எனினும், திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். பின்பு இருவரும் சடங்குகளை முறையாக பின்பற்றி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டா…

  22. திருட சென்ற இடத்தில் திருடனின் மனிதாபிமானம்..! திருடனால் காப்பாற்றப்பட்ட வயதான பெண்மணி, யாழ்.சாவகச்சோில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்.. யாழ்.சாவகச்சோியில் வீடு புகுந்து திருடுவதற்காக சென்றிருந்தபோது வீட்டின் உரிமையாளருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் உடனடியாக சுடு தண்ணீர் வைத்து கொடுத்த திருடன் அவரை ஆறுதல் படுத்தியதன் பின் திருடி சென்ற சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. சாவகச்சோி - கல்வயல் பெருங்குளம் வேதன பிள்ளையார் கோவில் மற்றும் நுணாவில் கந்தசுவாமி கோவில் பகுதிகளில் சுமார் 6 வீடுகளில் நேற்று இரவு தொடர் கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதில் நுணாவில் வேலங்கேணி கந்தசுவாமி கோவிலடியில் உள்ள வீடொன்றின் கதவுகளை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்நுழைந்துள்ளனர். …

  23. சேற்றில் சிக்கி மாணவன் உயிரிழப்பு December 5, 2020 நுணாவில் குளக்கட்டுக் கோவில் குளத்தில் காணப்பட்ட கழிவுகளை அகற்றிய மாணவன், சேற்றில் சிக்கி உயிாிழந்துள்ளாா். நேற்றையதினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கடுக்காய் – கட்டைவேலி, கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதான தேவராசா லக்சன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயர்தரம் கற்கும் குறித்த மாணவன், சக நண்பர்களுடன் இணைந்து குளம் ஒன்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முற்பட்டபோதே சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. நிலைதடுமாறி குளத்தின் உள்ளே விழுந்த அவரை அருகில் நின்ற நண்பர்கள் முயற்சித்த போதும் அவர்களும் உள்ளே விழக்கூடிய அபாயம் காணப்பட்டததனால் அவர்கள் கை வி…

  24. யாழ்ப்பாணத்தில் நீத்துப் பூசணிக்காயில் சறுக்கி விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யோகநாதன் ஜெகதீஸ்வரன் (43) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார். கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த இவர் கடந்த தீபாவளி நாளில் (14) வடமராட்சி பகுதிக்குச் சென்று திரும்பி வரும்போது, வல்லைச் சந்தியில், சமயச்சடங்கிற்காக யாரோ உடைத்த நீத்துப் பூசணிக்காயில் மோட்டார் சைக்கிள் சறுக்கிய வேளை, எதிரே வந்த காரில் மோதி விபத்துக்குள்ளானார். உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மரணித்தார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.