செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7090 topics in this forum
-
சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையத்தின் தகவலின்படி புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து…
-
- 2 replies
- 797 views
-
-
இங்கிலாந்தில் திருடப்பட்ட அரிய புத்தகங்கள் ருமேனியாவில் கண்டெடுப்பு! மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தில் திருடப்பட்ட 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான அரிய புத்தகத் தொகுப்புகளை ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக, பல நாடுகளில், 45இற்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் நடத்திய பொலிஸார் இறுதியாக ருமேனியாவில் கிராமப்புறத்தில் ஒரு வீட்டின் பாதாள அறையில் புத்தகங்களை கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 200 புத்தகங்களில் வானியலாளர் கலிலியோ, ஐசக் நியூட்டன் மற்றும் 18ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் ஓவியர் பிரான்சிஸ்கோ கோயா ஆகியோரின் படைப்புகளும் உள்ளடங்குகின்றன. இந்தப் புத்தகங்கள் கடந்த 2017ஆம் ஆண்டில் மேற்கு லண்டனின் …
-
- 5 replies
- 998 views
-
-
-
- 1 reply
- 295 views
-
-
சென்னை பாடியில் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கேஸ்பலூன் வெடித்து சிதறியது
-
- 6 replies
- 565 views
-
-
இலத்திரனியல் குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது இலங்கையில் முதல் முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று (18) காலை கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக ஓர் குடும்பத்தின் சகல விபரங்களையும் இலத்திரனியல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமகன் ஒருவர், பிரதேச செயலகத்தின் கீழ் ஓர் விடயத…
-
- 0 replies
- 286 views
-
-
தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்த அமைச்சர் ! தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, தேங்காய் பறிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தி தங்கொட்டுவையிலுள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (18) தேங்காய்களை பறித்துள்ளார். இவ்வாறு தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்த இராஜாங்க அமைச்சர், தென்னை மரத்தில் இருந்தபடியே ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார். இலங்கையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் நுகர்வோருக்கு தேங்காயின் தேவை அதிகமாக காணப்படுவதே நாட்டில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கான காரணமாகும். வரு…
-
- 11 replies
- 1.5k views
-
-
`கொதிக்கும் வெண்கலக் குழம்பு தொண்டை வழியே நம் உடலுக்குச் சென்றால்...?' - நினைத்துப் பார்க்கவே பயங்கரமான அந்த நிகழ்வுதான் மகாலிங்கத்துக்கு நிஜத்தில் நடந்துள்ளது. மகாலிங்கத்தின் கதையை அறிந்தால், கல் மனமும் கண்ணீர் சிந்தும். அந்த விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால், இன்று தன்னாலான வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றியிருப்பார். ஆனால், துள்ளி ஓடும் வளரிளம் பருவத்தில் எதிர்பாராத அந்த விபத்து மகாலிங்கத்தை முழுவதுமாக முடக்கிவிட்டது. இவரால் பேச முடியாது, இயல்பாக சுவாசிக்கவோ, சாப்பிடவோ முடியாது. இவர் சாப்பிடும் காட்சியை நேரில் பார்த்தால், நம்மால் அடுத்த சில நாள்களுக்கு இயல்பாகச் சாப்பிட முடியாது. அவ்வளவு வேதனை அது. என்னதான் நடந்தது மகாலிங்கத்துக்கு? …
-
- 3 replies
- 508 views
-
-
யாழில் இருந்து வந்த கடிதம்! இன்று காலை அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் பிரதமர் மஹிந்த நாட்டில் ஏற்பட்டுள்ள உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அவசர உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உளுந்துக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால், அதன் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து யாழ்ப்பாண வர்த்தக சேம்பர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தது. தமிழ் மக்களின் உணவில் உளுந்து முக்கியமானதாக இருப்பதாகவும் யாழ். வர்த்தக சேம்பர் தமது கடிதத்தில சுட்…
-
- 0 replies
- 368 views
-
-
22,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி யுக கரடியின் உடல் மற்றும் பிற பிபிசி செய்திகள் ரஷ்யாவின் ஆர்டிக் பிரதேசத்தில் பனி யுகத்தில் வாழ்ந்த கரடி ஒன்றின் உடல் எந்த விதமான சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு ரஷ்யாவில் உள்ள லியாக்கோவ்ஸ்கி தீவுகளில் உறைபனிக்கு அடியில், கலைமான்கள் மேய்ப்பர்களால் இந்த கரடியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 22,000 ஆண்டுகளில் இருந்து 39,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த செங்கரடி இனத்தைச் சேர்ந்ததாக இந்தக் கரடி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதன் பற்கள் மற்றும் மூக்கு ஆகியவை துளிகூட சேதமில்லாமல் நல்ல நிலையில் இருக்கின்றன. …
-
- 1 reply
- 356 views
-
-
யாழ். பல்கலைக்கழக பகிடிவதை குறித்து புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு: அமைச்சர் ரம்புக்வெல பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர் தமது கேள்வியின் போது, அரசாங்கம் தேர்தல் காலங்களில் நாட்டின் பல்கலைக் கழகங்களில் பகிடிவதையை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு த…
-
- 2 replies
- 377 views
-
-
-
திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசாங்கம் உறுதி வழங்கியது போன்று தமக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16) மேற்கொண்டனர். அரசாங்கம் நாட்டிலுள்ள ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் புறகணிக்கப்பட்ட மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இணைத்துக்கொள்வதாக கூறியும் இதுவரை தமக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் துரித கதியில் வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரியே திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதில் ஐம்பதிற்கு…
-
- 0 replies
- 235 views
-
-
ஜப்பான் பிரதமரானார் விவசாயின் மகன் யோஷிஹைட் சுகா! ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தெரிவாகியுள்ளார். சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து சின்ஷோ அபே அண்மையில் விலகியிருந்தார். இதனையடுத்து ஜப்பான் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்ற யோஷிஹைட் சுகா, தற்போது அடுத்த பிரதமராக தெரிவாகியிருக்கின்றார். 77 வயதுடைய இவர், முன்னாள் பிரதமர் அபேயின் நெருக்கமானவருமாவார். ஜப்பானின் அக்கிடா மாநிலத்தைச் சேர்ந்த இவர், விவசாயின் மகனாவார். பாடசாலை கல்வியை முடித்தவுடனேயே தொழில்வாய்ப்பைத் தேடி ஜப்பானின் தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டுவந்தவர். பல்வேறு கடைகளில் தொழில் செய்து வந்த காலத்திலேயே தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினைய…
-
- 1 reply
- 579 views
-
-
-
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டிற்கு சென்ற ரௌடிக்குழுவொன்று பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்த சம்பவம் நடந்தது. தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியில் வாள்வெட்டிற்கு சென்ற குழுவே மடக்கிப் பிடிக்கப்பட்டது. இரண்டு ரௌடிகள் பிடிக்கப்பட்டனர். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர். எட்டுப் பேர் கொண்ட ரௌடிக்குழு வாள்களுடன் தாக்குதல் நடத்த சென்றனர். இதையடுத்து ஒன்றுகூடிய மக்கள் ரௌடிகளை வளைத்து பிடிக்க முயன்றனர். இரண்டு ரெடிளகள் சிக்கினர். ஏனைய ரௌடிகள் தப்பியோடி விட்டனர். மடக்கிப் பிடிக்கப்படும் போது இரண்டு ரௌடிகளும் வாள்களுடனேயே சிக்கினர். புத்தூரை சேர்ந்த மகாதேவன் கோகுலன் (30), ஆவரங்கால் மேற்கு புத்தூர் பகுதியை சேர்ந்த…
-
- 0 replies
- 423 views
-
-
பழைய கார் டயரில் புதுமைகள்... அசத்தும் மதுரை இளைஞன்! "நண்பர்கள் சப்போர்ட்ல கிடைச்ச டயர், பாட்டில்ஸ் பயன்படுத்தி வீட்டு உபயோகப் பொருள்களான சோஃபா, ஊஞ்சல், வாட்ச் ஸ்டாண்ட், டீ ஸ்டாண்ட், பூந்தொட்டி, மயில், வாத்து, கிளி, சேவல், முயல் என்று 50-க்கும் மேற்பட்ட பொருட்களை செஞ்சிருக்கேன்." ''மேலூர்ல இருந்து சிவேங்கை (சிவகங்கை) போற பாதையில இருக்கு மலம்பட்டி பாலம். அதுக்கு அடுத்தாப்புள்ள வலதுபக்கம் மண் பாதை வரும். உள்ள போனா நீங்க கேக்கிற இடம் வந்துரும் தம்பி'' என்று மதுரை மேலூர் பாசக்கார அண்ணன் ஒருவர் வழி சொல்ல அங்கே சென்றோம். nuf கிராஃப்ட் 'NUF கி…
-
- 2 replies
- 607 views
-
-
சுவாச செல்களை தாக்கும் கொரோனா வைரஸ்: படங்களை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள் அகில உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸ், எவ்வித தடையுமின்றி எல்லைகளை கடந்து பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மனிதர்களின் நுரையீரலில் தாக்கத்தை ஏற்படுத்தி சுவாச பிரச்சினையை உருவாக்குகிறது. இந்த நிலையில், ஆய்வகத்தால் வளர்க்கப்பட்ட சுவாசக் குழாய் செல்களைப் பாதிக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படங்கள் எந்த அளவிற்கு கொரோனா சுவாச குழாய்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை காட்டுகிறது. நுரையீரலுக்குள் உற்பத்தி செய்யப்பட்டு வெளியிடப்படும் கொரோனா வைரஸ் துகள்களின் எண்ணிக்கையை விளக்கும் படங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அந…
-
- 0 replies
- 299 views
-
-
-
கொழும்பில் நாளொன்றுக்கு அதிக வருமானம் பெறும் யாசகர்கள்.! இலங்கையில் யாசகம் பெறுதல் தற்போது ஒரு தொழிலாக மாறி வருவதை காண முடிகிறது. திட்டமிட்ட வகையில் யாசகம் பெறும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதை சாதாரணமாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக கொழும்பு நகரில் யாசகம் பெறுவதை பலரும் தொழிலாக கொண்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற தனியார் ஊடகம் கொழும்பின் பிரதான வர்த்தக பகுதிகளான செட்டியார் தெரு மற்றும் மெயின் வீதி ஆகிய பகுதிகளை ஆராய்ந்தது. ஆண்கள், பெண்கள் மாத்திரமன்றி, சிறார்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதை அங்கு காண முடிகின்றது. செட்டியார் தெரு பகுதியில் சுமார் 1500ற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் காணப்பட…
-
- 2 replies
- 584 views
-
-
14 வயதுக்குட்பட்ட சிறுமிகளிடம் பாலியல் துஸ்பிரயோகம் – அவுஸ்ரேலியாவில் இலங்கையர் கைது சிறுமிகளை பாலியல் செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் ஆபாச ஒளிப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும் அவர்களை அதற்காக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகமான டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வாளர்களுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் அவரை பின்தொடர்ந்ததாகவும், மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான பர்வூட்டில் சந்தேகநபர் தொடர்பாக கிடைத்…
-
- 0 replies
- 313 views
-
-
ஆண்களின் மீசை பெண்களுக்கு ஆசை ஆண்மையின் அடையாளமாக மீசை கருதப்படுகிறது. கலாசார ரீதியாக மீசைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் பல இடங்களில் ஞானம் மற்றும் ஆற்றலின் அடையாளமாக மீசை திகழ்ந்து கொண்டிருக்கிறது. பலர் மீசையை தகுதிக்குரியதாகவும் கருதுகிறார்கள். சில நாடுகளில் நீதிபதிகளும், ராணுவதளபதிகளும்தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்ற நடைமுறையும் முன்பு இருந்தது. மெசபட்டோமியா கலாசாரத்தில் மீசை வைத்தவர்கள் உயர் தகுதி கொண்டவர்களாகவும், மீசை இல்லாதவர்கள் அடிமைகளாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். எகிப்து போன்ற சில நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந் தவர்கள் பிரமாண்டமான செயற்கை மீசையோடு வலம் வந்தார்கள் என்று சரித்திரம் சான்றுரைக்கிறது. அ…
-
- 8 replies
- 1.8k views
-
-
மட்டு பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 17 வயது சிறுவன் கடலில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு BharatiSeptember 11, 2020 கனகராசா சரவணன் மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலிர் நீரில் முழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிசார் வாழைச்சேனை செம்மன் ஓடை 4 பிரிவு ஹிஸ்புல்லா வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய யாவாத் முகமட் றிஸ்வி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை அவரது நண்பர்கள் இருவருடன் பாசிக்குடா கல்மலை கடல் பகுதியில் கடலில் நீராடச் சென்று நீர…
-
- 0 replies
- 225 views
-
-
இலங்கையில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத, பரீட்சைகள் திணைக்களத்திடம் சந்தர்ப்பம் கோரியுள்ளார். பொலநறுவை, அரலங்வில செனுலி லேஹன்ஸா என்ற 9 வயதுடைய சிறுமியே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் திம்புலாகல அரலங்வில, விலயாய ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார். தான் 6ஆம் வகுப்பு கற்ற போதிலும், தன்னால் சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்தி பெற கூடிய திறன் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்களம், ஆங்கிலம் மற்றும் கணிதம் மட்டுமல்லாமல் விலங்கியல் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற லேஹன்ஸா ஆவர்த்தன அட்டவணையை சில நொடிகளில் படித்து பாடசாலை அதிபர் உட்பட அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். செனுலி தனது முதல் ஆண்டில் இருந்தபோதும் ஆங்கிலத்தி…
-
- 1 reply
- 984 views
-
-
வவுனியாவில் ஒலிவாங்கியை எடுத்துவர மறுத்த மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல் வவுனியாவிலுள்ள பிரபல்யமான தேசிய பாடசாலை ஒன்றில் இன்று(வியாழக்கிழமை) காலைப் பிரார்த்தனையின்போது ஆசிரியர் ஒருவர் ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் மீது தாக்குதல் நடாத்தியதில் மாணவனுக்கு பல் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர் இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று காலை பாடசாலையின் காலைப் பிரார்த்தனையின் போது ( மைக் ) ஒலிவாங்கி பழுதடைந்துவிட்டது. இதையடுத்து காலைப்பிரார்த்தனை ஏற்பாடு செய்த ஆசிரியர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மற்றைய ஒலிவாங்கியை எடுத்துவருமாறு ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இதையடு…
-
- 3 replies
- 1.1k views
-
-
இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டதென கூறப்படும் மது மரம் அல்லது ஆங்கிலத்தில் சைக்காடேல்ஸ் (Cycadales) என்று சொல்லப்படும் மரத்தின் பழச் சீசன் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த மது மரம் அல்லது சைக்காடேல்ஸ் என்பது விதை தாவர வரிசையாகும். இது குறிப்பாக உயரமாகவும், சிறிய மரமாகவும் வளரக்கூடியது. இதனுடைய பழத்தினை வெய்லில் காய வைத்து மாவாக்கி பிட்டு, முறுக்கு உள்ளிட்ட உணவு வகைகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மாத்தளை – லக்கல கிராம மக்களிடையே ஒரு சத்தான உணவாக பிரபலமாக உள்ளது. https://newuthayan.com/மது-மரப்-பழ-சீசன்-ஆரம்பித/
-
- 3 replies
- 519 views
-