செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
சீனாவில் பரவியுள்ள புதியவகை நோய் -உடன் அமுல்படுத்தப்பட்ட அவசரநிலை சீனாவின் யுனான் பிராந்தியத்தில் புபோனிக் பிளேக் நோய் என்ற புதியவகை நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நான்காம் நிலை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் பாதிப்பிலிருந்தே உலக நாடுகள் மீளாத சூழலில் சீனாவில் புதிய புதிய நோய்கள் பரவுவதாக வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சீனாவின் யுனான் பிராந்தியத்தில் மெங்காய் பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனுக்கு புபோனிக் பிளேக் நோய் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதேவேளை சீனாவின் அண்டை நாடான மங்கோலியாவில் உள்ள 21 மாகாணங்களில் 17 மாகாணங்கள் புபோனிக் பிளேக் அபாயத்தில் இருப்பதாக அறிவித்…
-
- 0 replies
- 384 views
-
-
இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம் தமிழகத்தில் இளைஞர் ஒருவரை தனிமையில் அழைத்து சென்ற பெண்கள் அவரை, தூக்கிப் போட்டு மிதித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும் சிப்காட்டில் ஜே.ஜே மில்ஸ் மற்றும் கார்மெண்ட்ஸ் என்ற பனியன் நிறுவனம் இயங்கி வருகிறது. இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனமான இங்கு அவினாசி அடுத்த சூளையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தில், வெளியூரை சேர்ந்த ஏராளமான பெண் ஊழியர்கள்தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ தினத்தன்று, மேலாளர் சிவக்குமார், கார்மெண்ட்ஸின் கணனி ஊழி…
-
- 0 replies
- 369 views
-
-
ஜப்பான் தூதர் மட்டு விஜயம் சீயோன் தேவாலய குண்டு தாக்குதலில் உயிரிழந்தவருக் அனுதாபம் தெரிவிப்பு கனகராசா சரவணன் மட்டக்களப்பு மாநகரசப மற்றும் சீயோன் தேவாலயத்துக்கு ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி விஜயம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு பார்வையிட்டதுடன் மாநகரசபை திண்மக்கழிவு சமூக அபிவிருத்திக்கு உதவுவதாகவும் சீயோன் தேவாலயத்தில் குண்டுதாக்குதலுக்கு உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்தார் . மட்டக்களப்புக்கு விஜயம் மேற் கொண்ட ஜப்பான் தூதுவர் அத்திரா சுகி முதலில் மட்டு மாநகர மேஜர் ரி. சரவணபவனுடனான சந்திப்பு இடம்பெற்றது இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் அபிவிருத்தி எவ்வாறு நடைபெறுகின்றது மற்றும் சவாலக இருக்கின்ற விடயங்கள் வளபற்றாக்குறை தேவையான விடயங்கள் தொடர…
-
- 1 reply
- 430 views
-
-
எரிக் சொல்கேமை கேள்விக் கணைகளால் துழைக்கும் நாடுகடந்த அரசின் பிரதமர்.
-
- 50 replies
- 5.3k views
- 1 follower
-
-
345,000 பயன்படுத்திய ஆணுறைகள் மீட்பு : வியட்நாமில் பரபரப்பு வியட்நாம் பொலிஸார் சுமார் 345,000 பயன்படுத்திய ஆணுறைகளை பறிமுதல் செய்துள்ளனர். அவை சுத்தம் செய்யப்பட்டு புதியவையென மறுவிற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தவாரம் வியாட்நாம் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவையொன்று ஒளிபரப்பிய காணொளிக் காட்சிகளில் இவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆணுறைகள் தெற்கு மாகாணமான பின் துவாங் நகரில் ஒரு குழியொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பைகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்டுள்ள பைகள் 360 கிலோகிராம் (794 பவுண்ட் ) எடையுள்ளதாகவும் அவற்றுள் 345,000 அணுறைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணொளிக் காட்சிகளி…
-
- 0 replies
- 327 views
-
-
மதுரவாயலில் மகள், மகனைக் கொன்று தலைமறைவான வழக்கறிஞர்: 5 ஆண்டுகள் தேடலுக்குப் பின் பெரியமேட்டில் கைது சென்னை மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதுரவாயலில் மகன், மகளுடன் தனித்து வசித்த வழக்கறிஞர், கடந்த 2015-ம் ஆண்டு தனது மகன், மகளைக் கொன்று தலைமறைவான நிலையில், 5 ஆண்டுகள் போலீஸாரின் கடும் தேடலுக்குப் பின் சென்னையில் சிக்கினார். சென்னை மதுரவாயல் காவல் எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவி (56). இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி. இவரும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரியதர்ஷினி (13) என்ற மகளும், ஜெயகிருஷ்ணன் பிரபு (…
-
- 0 replies
- 345 views
-
-
தேசிய லொத்தர் சபை வரலாற்றில் சாதனை: 23 கோடியை தனதாக்கிய நபர் இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார்.நேற்றைய தினம்(23) அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு அதிபதியாகி உள்ளார். மேற்படி லொத்தர் டிக்கெட் கண்டி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த நபர் வென்ற முழுத்தொகை 236,220,278.35 ரூபாவாகும் https://newuthayan.com/தேசிய-லொத்தர்-சபை-வரலாற்/
-
- 0 replies
- 329 views
-
-
லுணுகலை பொலிஸ் லுணுகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொப்டன் தோட்ட பழைய ஸ்டோர் பிரிவில் 13 அடி நீளமும் 36 கிலோகிராம் நிறையுமுடைய மலைப்பாம்பொன்றை இன்று (23.09.2020) பிடித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரிவில் உள்ள தேயிலை மலையொன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளி அருகே வித்தியாசமான சத்தம் கேட்பதை உணர்ந்த அவர், அருகில் அவதானித்த போது மலைப்பாம்பு இருப்பதை கண்டு உடனடியாக சக தொழிலாளர்களுக்கும் அறிவித்துள்ளார். விரைந்து செயற்பட்ட தொழிலாளர்கள் மலைப்பாம்பை பிடித்தது லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். லுணுகலை பொலிஸார் குறித்த பாம்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். …
-
- 2 replies
- 664 views
- 1 follower
-
-
வன்னியில் உள்ள சின்னங்கள் தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களம் கருத்து வன்னி பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள மாவட்டங்களான வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தொல்பொருளியல் திணைக்களத்தின் வசம் தற்போது 121 சின்னங்கள் உள்ளபோதிலும் 43 சின்னங்களிற்கு மட்டுமே அரச இதழ் உள்ளதாக குறித்த திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. தொல்பொருளியல் திணைக்களத்திற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ், விண்ணப்பித்த விண்ணப்பத்திற்கு அளித்த பதிலிலேயே மேற்படி தகவல் உறுதி செய்யப்பட்டபோதும், தமிழ் அல்லது ஆங்கில மொழியில் கோரிய விண்ணப்பத்திற்கும் சிங்கள மொழியில் மட்டும் பதிலளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட பதிலின் அடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் 43 இடங்களும் மன்னா…
-
- 0 replies
- 321 views
-
-
ஒரே நாம் தமிழர் செய்தியா கிடக்குதே... என்று புலம்பியவர்களுக்காக.... ஒரு திமுக செய்தி ஒன்று. உனக்கு 28 எனக்கு 67... பேத்தி வயது பெண்ணை காதல் திருமணம் செய்த திமுக நிர்வாகியால் பரபரப்பு பேச்சாளராக அறிமுகமான பேத்தி வயது பெண்ணை காதலித்து திருமணம் கொண்டிருக்கிறார் 67 வயதான திமுக நிர்வாகி. திருவண்ணாமலையில் இந்த திருமணம் பற்றிதான் பரபரப்பாக பேசி வருகிறார்கள். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். இந்த காதலுக்கு வயதும் இல்லை என்று கூறி எதிர்கட்சியினர் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். வயசானாலும் அழகும் இளமையும் மாறலையை என்று சிலரை சொல்வார்கள். சிலருக்கு 60 வயதிலும் ஆசை வரும் அப்படித்தான் சாவல் பூண்டி ஊரைச்சேர்ந்த மா.சுந்தரேசன் என்பவருக்கு 67 வயதில் …
-
- 34 replies
- 4.8k views
-
-
-
தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு! அல்பர்டாவில் தூங்கிக் கொண்டே மணிக்கு 150 கி.மீ வேகத்தில் கார் ஓட்டிய இளைஞர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பகுதியளவு தானாக இயங்கக்கூடிய டெஸ்லா கார் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்க, அதில் இருந்த ஓட்டுநரும் சக பயணியும் தூங்கியதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் முன் இருக்கைகள் இரண்டும், முழுவதுமாக சரிந்திருந்து, அதில் ஓட்டுநரும், சக பயணியும், நல்ல உறக்கத்தில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். டெல்ஸா மாடல் எஸ் ரக காரை பொலிஸார் கண்டறிந்தபோது, அந்த கார் மணிக்கு 140-150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்க…
-
- 0 replies
- 341 views
-
-
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த கடிதம், வெள்ளை மாளிகைக்கு சென்றடைவதற்கு முன்பாகவே, உளவுத்துறை அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக உளவுத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம் அனுப்பப்பட்டதா? என்ற கோணத்தில் உளவுத்துறை விசாரணையை முன்னெடுத்து…
-
- 0 replies
- 288 views
-
-
சீனாவில் பரவும் புதிய வைரஸ் தொற்று- ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது அந்த வைரஸ் சீனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சீனா முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் சீனாவில் புதிய பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே உருவான கொரோனா வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கப்படாத நிலையில் தற்போது மற்றொரு வைரஸ் பரவி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கன்சு மாகாணத்தின் தலைநகரான லான்ஷோ சுகாதார ஆணையத்தின் தகவலின்படி புதிய வைரஸ் தொற்றால் சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து…
-
- 2 replies
- 826 views
-
-
இங்கிலாந்தில் திருடப்பட்ட அரிய புத்தகங்கள் ருமேனியாவில் கண்டெடுப்பு! மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்தில் திருடப்பட்ட 2.5 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்பிலான அரிய புத்தகத் தொகுப்புகளை ஐரோப்பிய நாடான ருமேனியாவில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக, பல நாடுகளில், 45இற்கும் மேற்பட்ட இடங்களில் தேடுதல் நடத்திய பொலிஸார் இறுதியாக ருமேனியாவில் கிராமப்புறத்தில் ஒரு வீட்டின் பாதாள அறையில் புத்தகங்களை கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட 200 புத்தகங்களில் வானியலாளர் கலிலியோ, ஐசக் நியூட்டன் மற்றும் 18ஆம் நூற்றாண்டின் ஸ்பானிஷ் ஓவியர் பிரான்சிஸ்கோ கோயா ஆகியோரின் படைப்புகளும் உள்ளடங்குகின்றன. இந்தப் புத்தகங்கள் கடந்த 2017ஆம் ஆண்டில் மேற்கு லண்டனின் …
-
- 5 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 301 views
-
-
சென்னை பாடியில் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கேஸ்பலூன் வெடித்து சிதறியது
-
- 6 replies
- 574 views
-
-
இலத்திரனியல் குடும்ப அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது இலங்கையில் முதல் முதலாக இலத்திரனியல் வடிவ குடும்ப விபர அட்டை கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று (18) காலை கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்றது. கண்டாவளை பிரதேச செயலாளரின் முயற்சியில் அப்பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம சேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில், குறித்த இலத்திரனியல் குடும்ப அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு அமைவாக ஓர் குடும்பத்தின் சகல விபரங்களையும் இலத்திரனியல் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பொதுமகன் ஒருவர், பிரதேச செயலகத்தின் கீழ் ஓர் விடயத…
-
- 0 replies
- 292 views
-
-
தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்த அமைச்சர் ! தெங்கு, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை ஊக்குவிப்பு மற்றும் அது சார்ந்த கைத்தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, தேங்காய் பறிக்கும் உபகரணத்தைப் பயன்படுத்தி தங்கொட்டுவையிலுள்ள தனது வீட்டுத் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை (18) தேங்காய்களை பறித்துள்ளார். இவ்வாறு தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறித்த இராஜாங்க அமைச்சர், தென்னை மரத்தில் இருந்தபடியே ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தார். இலங்கையில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் நுகர்வோருக்கு தேங்காயின் தேவை அதிகமாக காணப்படுவதே நாட்டில் தேங்காய்க்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமைக்கான காரணமாகும். வரு…
-
- 11 replies
- 1.5k views
-
-
`கொதிக்கும் வெண்கலக் குழம்பு தொண்டை வழியே நம் உடலுக்குச் சென்றால்...?' - நினைத்துப் பார்க்கவே பயங்கரமான அந்த நிகழ்வுதான் மகாலிங்கத்துக்கு நிஜத்தில் நடந்துள்ளது. மகாலிங்கத்தின் கதையை அறிந்தால், கல் மனமும் கண்ணீர் சிந்தும். அந்த விபத்து ஏற்படாமல் இருந்திருந்தால், இன்று தன்னாலான வேலையைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றியிருப்பார். ஆனால், துள்ளி ஓடும் வளரிளம் பருவத்தில் எதிர்பாராத அந்த விபத்து மகாலிங்கத்தை முழுவதுமாக முடக்கிவிட்டது. இவரால் பேச முடியாது, இயல்பாக சுவாசிக்கவோ, சாப்பிடவோ முடியாது. இவர் சாப்பிடும் காட்சியை நேரில் பார்த்தால், நம்மால் அடுத்த சில நாள்களுக்கு இயல்பாகச் சாப்பிட முடியாது. அவ்வளவு வேதனை அது. என்னதான் நடந்தது மகாலிங்கத்துக்கு? …
-
- 3 replies
- 513 views
-
-
யாழில் இருந்து வந்த கடிதம்! இன்று காலை அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் பிரதமர் மஹிந்த நாட்டில் ஏற்பட்டுள்ள உளுந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த அவசர உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உளுந்துக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால், அதன் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது. இதனால், சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து யாழ்ப்பாண வர்த்தக சேம்பர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தது. தமிழ் மக்களின் உணவில் உளுந்து முக்கியமானதாக இருப்பதாகவும் யாழ். வர்த்தக சேம்பர் தமது கடிதத்தில சுட்…
-
- 0 replies
- 379 views
-
-
22,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி யுக கரடியின் உடல் மற்றும் பிற பிபிசி செய்திகள் ரஷ்யாவின் ஆர்டிக் பிரதேசத்தில் பனி யுகத்தில் வாழ்ந்த கரடி ஒன்றின் உடல் எந்த விதமான சேதமும் இல்லாமல் நல்ல நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு ரஷ்யாவில் உள்ள லியாக்கோவ்ஸ்கி தீவுகளில் உறைபனிக்கு அடியில், கலைமான்கள் மேய்ப்பர்களால் இந்த கரடியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 22,000 ஆண்டுகளில் இருந்து 39,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த செங்கரடி இனத்தைச் சேர்ந்ததாக இந்தக் கரடி இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதன் பற்கள் மற்றும் மூக்கு ஆகியவை துளிகூட சேதமில்லாமல் நல்ல நிலையில் இருக்கின்றன. …
-
- 1 reply
- 370 views
-
-
யாழ். பல்கலைக்கழக பகிடிவதை குறித்து புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு: அமைச்சர் ரம்புக்வெல பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதைகளை தடுப்பது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர் தமது கேள்வியின் போது, அரசாங்கம் தேர்தல் காலங்களில் நாட்டின் பல்கலைக் கழகங்களில் பகிடிவதையை முற்றாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களுக்கு த…
-
- 2 replies
- 384 views
-
-
-
திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசாங்கம் உறுதி வழங்கியது போன்று தமக்கு வேலைவாய்ப்பினை பெற்றுத்தருமாறு கோரி திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்றைய தினம்(16) மேற்கொண்டனர். அரசாங்கம் நாட்டிலுள்ள ஐம்பதாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிலையில் புறகணிக்கப்பட்ட மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இணைத்துக்கொள்வதாக கூறியும் இதுவரை தமக்கான நியமனங்கள் வழங்கப்படவில்லையெனவும் துரித கதியில் வேலைவாய்ப்பினை வழங்குமாறு கோரியே திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதில் ஐம்பதிற்கு…
-
- 0 replies
- 246 views
-