செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயரை மகனுக்கு சூட்டிய பிரதமர் பொரிஸ்! கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, தன் உயிரை காப்பற்றிய மருத்துவர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், வித்தியாசமான முறையில் நன்றி செலுத்தியுள்ளார். ஆம்! கடந்த 29ஆம் திகதி பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் கேரி சிமொன்ட்ஸ் தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இந்த குழந்தைக்கு தங்களது தாத்தாக்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு (பொரிஸ் ஜோன்சனுக்கு) மரியாதை செலுத்தும் விதமாக ‘வில்ஃப்ரெட் லோவ்ரி நிக்கோலஸ் ஜொன்சன்’ (Wilfred Lawrie Nicholas Johnson) என்று பெயரிட்டுள்ளதாக கேரி சிமொன்ட்ஸ் தனது …
-
- 0 replies
- 248 views
-
-
2016 குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற கட்டுப்பாடுகள் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமெரிக்காவை காட்டிலும் இன்னும் சில நாடுகள் தங்கள் நாட்டில் வசிக்கும் பிற நாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்க மிகவும் கடினமான விதிமுறைகளை பட்டியலிடுகிறது. அந்த வரிசையில் சுவிட்சர்லாந்து, சீனா மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் குடியுரிமை பெறுவதற்கான நீண்ட மற்றும் சில சந்தர்ப்பங்களில் மக்கள் சாத்தியமில்லாத பாதையை எதிர்கொள்ள நேரிடுகிறது.பிற நாட்டவர்களுக்கு குடியுரிமை அளிக்க மிகவும் அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்கும் 8 நாடுகளின் பட்டியலை நாம் இங்கு தொகுத்துள்ளோம். 1. வத்திக்கான் நகரம் சுமார் 800 குடியிருப்பாளர்கள் மற்றும் 450 குடிமக…
-
- 0 replies
- 480 views
-
-
-
- 0 replies
- 715 views
-
-
சிக்காகோ ஓ ஹரோ விமான நிலையம் At Charles de Gaulle Airport in Paris: This photo taken in March of last year shows planes from various airlines in storage at a “Boneyard” facility beside the Southern California Logistics Airport in Victorville, Calif. Some of the planes will be returned to service while others will be dismantled and scrapped at the facility. California with its dry desert climate is a perfect place to store surplus aircraft. (Mark Ralston AFP/Getty Images) ஏற்கனவே போயுங்கின் மாக்ஸ் 737 பல கோளாறுகள் காரணமாக விற்க முடியாமல் இருந்தது
-
- 1 reply
- 432 views
-
-
பென்சில்வேனியா: கொரோனா பாதித்தவர்களை கண்டுபிடிக்க அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக வாஷிங்டன்போஸ்ட் நாளிதழில் வெளியான செய்தி: கொரோனா வைரஸ் தொடர்புடைய வாசனையை வைத்து, கொரோனாவை நாயால் கண்டுபிடிக்க முடியுமா என்பது குறித்து லேப்ரடர் இன நாய்களுக்கு பென்சில்வேனியா பல்கலையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்ற பயிற்சி, லண்டனில் உள்ள பல்கலை ஒன்றிலும் நடந்து வருகிறது. இதற்கு முன்னர், மனிதர்களுக்கு மலேரியா தொற்று குறித்து அறிய பயிற்சி நடந்தது. இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் நாய்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். விமான நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு வருபவர்களை கண்காணிக்கும். கொரோனாவை கண்…
-
- 0 replies
- 309 views
-
-
வைரஸ் ஹண்டர் என அழைக்கப்படும், டஸ்ஸாக் என்ற அமெரிக்க வைரஸ் விஞ்ஞானி, கடந்த 10 ஆண்டுகளில் உலகில் வெளவால்கள் வாழும் குகைகளுக்கும் மலைகளுக்கும் சென்று ஆராய்ச்சி செய்து வருகிறார். மாலை 6 மணிக்கு மேல் வெளவால்கள் கூட்டம் கூட்டமாக உணவு தேட வெளியே செல்லும். அப்போது முகக்கவசம், பாதுகாப்பு உடை அணிந்து டஸ்ஸாக்கின் குழு குகைகளை நோக்கிச் செல்லும். வெளவால்களின் சிறுநீர், கழிவுகள் என எது மேலே பட்டாலும் நூற்றுக்கணக்கான வைரஸ் நமது உடலில் தொற்றிக்கொள்ளும். இதனால் பாதுகாப்பு உடை அணிந்து விஞ்ஞானிகள் குழு வெளவால்கள் குகைக்குள் செல்லும். வெளவால்களில் கழிவுகள் உட்பட பலவற்றை இந்த விஞ்ஞானிகள் குழு சேமிப்பர். வெளவால் ஒன்றைப் பிடித்து அதன் இறகில் உள்ள ரத்தநாளத்தில் இருந்து ரத்தம் எடுக்கப்படும்…
-
- 1 reply
- 462 views
-
-
டிரக்கில வெங்காயம் வைத்திருந்தால் போதும்; 1300 கி.மீ. பயணம் சாத்தியம்: லாக் டவுனை வென்ற மும்பை நபரின் வினோத முயற்சி டிரக்கில் வெங்காயம் வைத்திருந்தால் போதும். தனது சொந்த கிராமத்திற்குச் செல்ல 1300 கி.மீ. பயணம் சாத்தியம் என்று மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் நிரூபித்துள்ளார். இந்தியாவில் முதல் கட்ட லாக் டவுனை அமல்படுத்தியபோதே நகரங்களிலிருந்து வாகனங்களிலும் நடைபயணமாகவும் சொந்த ஊர்போய்ச் சேர்ந்தவர்கள் ஏராளம். சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் சிக்கிக்கொண்டவர்களும் உள்ளனர். மும்பை விமான நிலையத்தில் பணிபுரியும் பிரேம் மூர்த்தி பாண்டே, அலகாபாத்தின் புறநகரில் உள்ள தனது சொந்த கிராமத்தை அடைய ஒரு வினோத முயற்சியை மேற்கொண்டார். தனது 1,300 கி.மீ. டிரக் பயணம்…
-
- 0 replies
- 336 views
-
-
மாட்ரிட்: ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். உலகில் கொரோனாவால் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. அங்கு சாலைகளில் நடமாட பலத்த கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. வளர்ப்பு பிராணிகள் இருந்தால் மட்டுமே அவற்றை காலையும் மாலையும் வாக்கிங் கூட்டிச் செல்ல வெளியே செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த உத்தரவை சாமர்த்தியமாக மீறவே பலர் முயற்சி செய்து வருகின்றனர். நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளோடு வெளியே வந்தால் பரவாயில்லை. ஆனால் வெளியே வருவதற்காக மீன் பவுலில் ஒருவர் மீனை வாக்கிங் கூட்டிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது. இதேபோல மற்றொருவர் பொம்மை நாயை எடுத்துச் சென்று காவ…
-
- 2 replies
- 799 views
-
-
ஊரடங்கில் தனித்திருத்தல் - கழுகு நமக்கு கற்றுத்தரும் பாடம் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், கழுகு தனித்திருத்தல் பற்றி நமக்கு கற்றுத்தரும் பாடம் என்னவென்பதை பார்ப்போம். கழுகு என்பது அக்சிபிட்ரிடே என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய கொன்றுண்ணிப் பறவை ஆகும். பறவைகளின் அரசன் என்ற சிறப்பு பெறுகிறது கழுகு. அதிகாரம், சுதந்திரம், மேன்மை ஆகியவற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பறவை 40 வயதை அடையும்போது ஒரு சவாலைச் சந்திக்கும். அதில் வென்றால், அதற்கு மறுபிறவி கிடைக்கும். கழுகுக்கு 40 வயதானவுடன் இரையைக் கொத்தித் தின்னும் அதன் அலகு மழுங்கி வளைந்து விடும். இரையைப் பற்றிக் கொள்ளும் நகங்கள் கூா்மை…
-
- 0 replies
- 640 views
-
-
திருடப்பட்ட பொருட்களுடன் அயலவர் சிக்கினார் – யாழில் சம்பவம் யாழ். சுண்டுக்குளி பகுதியில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவர்களின் குடும்பங்களின் இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக அப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குறித்த வீடுகளில் திருடப்பட்ட 9 லட்சத்து 45 ஆயிரம் பெறுமதியான பொருள்களும் சந்தேக நபரின் வீட்டிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள வீதியில் இரண்டு வீடுகள் கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு சொந்தமானது. அவர்கள் ஆண்டு தோறும் வருகை தந்த அந்த வீடுகளில் தங்கியிருந்துவிட்டு குடியு…
-
- 0 replies
- 236 views
-
-
கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில், வாசகர்கள் பத்திரிகை படிக்கும் நேரம் அதிகரித்து உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. இதனால் மக்கள் வீடுகளிலேயே இருக்கிறார்கள். இந்த சூழ்நிலை மக்களிடம் உள்ள வாசிப்பு பழக்கத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக, ‘அவான்ஸ் பீல்டு அண்டு பிராண்டு சொலூசன்ஸ்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட…
-
- 0 replies
- 399 views
-
-
கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் கண்டுபிடிக்க மோப்ப நாய்கள்! கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் பலமடங்கு அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில், கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் கண்டுபிடிக்க இங்கிலாந்து மோப்ப நாய்களை பயன்படுத்தவுள்ளது. ஏற்கனவே மோப்ப நாய்கள் மூலம் மலேரியா தாக்கியவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதில் வெற்றி கண்ட இங்கிலாந்தின் ‘மெடிக்கல் டிடெக்சன் டாக்ஸ் சாரிட்டி’ என்ற தொண்டு நிறுவனம் இதற்கு முன்வந்துள்ளது. இதுகுறித்து இந்த நிறுவனத்தின் தலைவர் கிளாரியா கூறுகையில், ‘கொரோனா நோய் பாதித்தவர்களை சில வினாடிகளில் மோப்ப நாய்கள் கண்டுபிடித்துவிடும் வகையில் தகுந்த பயிற்சி அளிக்க முடியு…
-
- 0 replies
- 262 views
-
-
4 புலிகள்- 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று! நியூயோர்க்கில் உள்ள பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி நியூயோர்க் விலங்கு சரணாலயம் ஒன்றில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சிங்கங்கள் மற்றும் புலிகள் இயல்பாக இருப்பதாகவும், உணவு நன்றாக உண்பதாகவும் பிராங்க்ஸ் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மனிதர்கள் மூலம் விலங்குகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com…
-
- 0 replies
- 246 views
-
-
ஜப்பானில் உள்ள பாலியல் தொழிலாளிகளுக்கு அந்நாட்டு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. நிதியுதவி போதுமானதாக இல்லை என பெண்கள் கவலைகொள்வதாக கூறப்படுகிறது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம் இல்லாததால் ஏழை எளிய மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் பாலியல் தொழிலில் உள்ள தொழிலாளர்கள் கொரோனாவினால் தங்களை யாரும் தேடி வராததால் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். சேமிப்புகளும் இல்லாமல் வேறு வழிகளில் வருமானமும் இல்லாமல் வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்…
-
- 1 reply
- 392 views
-
-
மன்னார் மாவட்த்தின் ஒரு கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் ரோந்து பணியில் சில ப டை வீரர்கள் ஈடுபட்டிருந்தார்கள் . இரண்டு படை வீரர்கள் ஒரு கத்தோலிக்க தேவாலயத்தின் அருகாமையில் சென்று கொண்டு இருக்கும் போது வெயில் களைப்பினால் அருகில் இருந்த கோவில் வாயிலின் அருகே உட்கார்ந்து அசதியில் தூங்கி விட டார்கள் . மதியம் இரண்டு மணி இருக்கும். திடீரென ஒருவன் திடுக்கிடடெழுந்து அலறி அடித்து வெளியே ஓடி மயக்கமுற்று விழுந்து விடடானாம் . மற்றையவன் பின்னால் சென்று ஊரவர்கள் உதவியுடன் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிந்தான்.என்ன நடந்தது என்று விசாரித்த போது ஒரு போர்வீரன் குதிரையில்,சாடடையை சுற்றியவாறே என்னை நோக்கி வருவது போல இருந்தது. அதனால் நான் திடுக்குற்று ஓடினேன் என்றான். இவன் ஒரு…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் மிக தீவிர பாதிப்புக்கு உள்ளாகி உள்ள பகுதிகளில் ஒன்றான கனெக்டிகட்டில் உள்ள தெற்கு வின்ட்ஸர் மருத்துவமனையில் பணியாற்றி வருபவர் டாக்டர் உமா மதுசூதனன். இவர் கர்நாடகா மாநிலம் மைசூருவை சேர்ந்தவர்.இவர் தன் பணியை முடித்து விட்டு வீடு திரும்பிய போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் கார்களில் ஊர்வலமாக வந்தபடி டாக்டர் உமாவின் தன்னலமற்ற பணிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2526328
-
- 0 replies
- 381 views
-
-
திரிபுாராவில் ராஜஸ்தானை சேர்ந்த தம்பதிகள் தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஊரடங்கு என பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு மே.3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் தங்கியுள்ள ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் சஞ்சய், மஞ்சு தேவி. மஞ்சு தேவி நிறைமாக கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவர்கள் திரிபுராவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வந்தனர். ஊரடங்கால் சொந்த மாநிலம் செல்ல முடியாமல் அங்கு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மஞ்சு தேவிக்கு கடந்த 13-ம் தேதி அருகே உள்ள அரசு மருத்துவனைமயில் ஆண் குழந்தை ப…
-
- 0 replies
- 277 views
-
-
-
- 4 replies
- 860 views
-
-
டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்தின் இயக்குநர் ஜீன் டெய்ச் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. உலகம் முழுவதும் டாம் அன்ட் ஜெர்ரி கார்ட்டூன் படத்திற்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. பெரியவர் முதல் குழந்தை வரை அனைவரையும் சிரிக்க வைக்கும் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பர்பெரா ஆகியோரால் 1940ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாம் அன்ட் ஜெர்ரி கதைகளை 1958-ம் ஆண்டுவரை அவர்கள் இருவரும் இந்த கார்ட்டூன் தொடரை எழுதி, இயக்கி வந்தனர். அவர்களைத் தொடர்ந்து இந்த தொடரை ஜீன் டெய்ச் இயக்கினார். இவரது திரைப்படம் மன்ரோ 1960 இல் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான அகாடமி விருதை வென்றது. இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் செக் குடியரசில் உள்ள ப்ரேக் ந…
-
- 3 replies
- 537 views
-
-
திருமணத்துக்காக 850 கி.மீ. சைக்கிளில் பயணித்த மணமகன் பஞ்சாபில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு தனது திருமணத்துக்காக சைக்கிளில் 850 கி.மீ. தொலைவுக்கு நண்பர்களுடன் பயணித்து வந்த மணமகன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் நேபாள எல்லை அருகே அமைந்துள்ள மகராஜ்கஞ்ச் மாவட்டம், பிப்ரா ரசூல்பூரை சேர்ந்தவர், சோனு குமார் சவுகான் (வயது 24). இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஏப்ரல் 15ஆம் திகதி, சொந்த ஊரில் திருமணம் நடத்த பெரியவர்கள் நிச்சயம் செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தன. இந்தநிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எல்லா …
-
- 0 replies
- 206 views
-
-
திருமணமே செய்யாமல், தெரு நாய்களை பிள்ளைகளை போல் பராமரிக்கும் மதுரை மனிதர்!
-
- 6 replies
- 861 views
-
-
ஐந்தடி நீள பெண் சிறுத்தை புலியொன்று உயிருடன் மீட்பு April 18, 2020 (க.கிஷாந்தன்) மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டத்தில், ஐந்து அடி நீளமான பெண் சிறுத்தை புலியொன்று (ஸ்ரீலங்கன் டைகர்) 15 அடி உயரமான மரமொன்றில் ஏறி கிளைகளுக்கிடையில் சிக்கி, இறங்க முடியாமல் சுமார் 8 மணிநேரம் தவித்தது. இதனையடுத்து மயக்க ஊசி செலுத்தப்பட்டு அது உயிருடன் மீட்கப்பட்டது. மேற்படி தோட்டத்தில் சிறுத்தை சிக்கியிருப்பதை அறிந்த தோட்ட முகாமையாளர் அது தொடர்பில் இன்று (18.04.2020) காலை மஸ்கெலியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தினார். அதன்பின்னர் பொலிஸார் ஊடாக நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து இராணுவம், காவல்துறையினர், வனவிலங்கு அதிகாரி…
-
- 8 replies
- 1.3k views
-
-
`மனிதர்களுக்குத்தான் லாக் டெளன்... சாலையில் உறங்கும் சிங்கங்கள்’ -மிரளவைக்கும் புகைப்படங்கள்! கொரோனா ஊரடங்கால் மனித நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலையில் உறங்கும் காட்சி வைரலாகிவருகிறது. கொரோனா வைரஸால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லாததால், விலங்கினங்களும் பறவைகளும் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காக்களில் ஒன்றான, க்ரூகர் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலைகளில் கூட்டமாகப் படுத்துறங்கும் காட்சி இணையத்தில் பரவ, செம வைரல். …
-
- 0 replies
- 403 views
-
-
குடும்பத்துடன் நாள்களைக் களிக்கும் ஏழு நாள்கள் சவாலின் மூன்றாவது நாளான இன்று, தன் தந்தையுடன் (பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ) மகிழ்வாகப் பொழுதைக் கழித்ததாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார். “ஒவ்வொரு நாளும் என் தந்தையுடன் கவலையற்ற நேரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொன்னான சந்தர்ப்பம் எனக்கு இல்லை. ஆனால், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், அந்த தருணங்கள் ஆழமாக பொக்கிஷமாக இருக்கின்றன. இன்று இதுபோன்ற ஒரு நாள், நாங்கள் இருவரும் வழக்கமாக பரபரப்பான கால அட்டவணையிலும், ஓய்வு நேரத்தை மகிழ்வாகக் களிக்க சிறிது நேரம் ஒதுக்கியிருந்தோம். சமூக இடைவௌியைப் பேணி, பொன்னான சந்தர்ப்பந்தைப் பேணிய தருணமிது” என, நாமல் ராஜபக்ஷ அக்குறிப்பில் மேலும்…
-
- 4 replies
- 672 views
-
-
கொரோனா கிருமிப் பரவலை தடுக்க ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகளும் அரசாங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன. கிருமி நாசினியை பல நாடுகள் லாரிகளில் வைத்து பெருமளவில் தெளித்து வருகின்றன. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் கிருமி நாசினிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜப்பானிலும் தற்போது கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒவ்வொரு கிருமி நாசினியிலும் 40 முதல் 80% வரை ‘ஆல்கஹால்’ எனப்படும் மதுபானம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கிருமி நாசினிக்கு பதிலாக மதுபானத்தையே நேரடியாகப் பயன்படுத்த ஜப்பான் சுகாதார அமைச்சகம் முடி…
-
- 6 replies
- 555 views
-